Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கனிமொழி வெற்றிக்காக தி.மு.க.,தீவிரம் : சோனியாவை சந்தித்தார் டி.ஆர்.பாலு: கருணாநிதியை சந்தித்து ம.ம.க., ஆதரவு

Posted:

ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் கனிமொழிக்கு வெற்றிக் கனியை பறித்துக் கொடுக்க வேண்டும் என்பதில், தி.மு.க., தீவிரம் காட்டி வருகிறது. டில்லியில், காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேற்று தி.மு.க., - எம்.பி., டி.ஆர்.பாலு சந்தித்து பேசி, காங்கிரஸ் ஆதரவை நாடினார். சென்னையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியை, மனிதநேய மக்கள் கட்சி(ம.ம.க.,) தலைவர்கள் சந்தித்து, தங்கள் கட்சியின் ஆதரவை தி.மு.க.,வுக்கு தெரிவித்தனர்.சென்னை, மண்ணடியில் உள்ள ம.ம.க., அலுவலகத்திற்கு, நேற்று காலை, 11:00 மணிக்கு, தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, வேலு, மைதீன் கான் ஆகியோர் சென்று, ம.ம.க., தலைவர்களிடம், ...

அமைச்சர் வைகை செல்வன் மீண்டும் மீண்டும் "சொதப்பல்!

Posted:

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநில அளவில், இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற மாணவர்கள், 189 பேருக்கு, பள்ளி கல்வி அமைச்சர் வைகை செல்வன், பரிசுகளையும், முதல்வரின் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கும் நிகழ்ச்சி, சண்டை, சச்சரவு, குழப்பங்களுடன் முடிந்தது.முதல்வர் கையால் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்படும் என, மாநிலம் முழுவதிலும் இருந்து, மாணவர்களை அழைத்து வந்து, கடைசியில், அமைச்சர் வழங்குவார் என, அதிகாரிகள் மாற்றி அறிவித்தனர். அமைச்சருக்காக, மாலை, 4:00 மணி வரை காத்திருந்த பெற்றோர், கோபம் அடைந்து, அதிகாரிகளுடன் சண்டை போட்டதால், பெரும் பரபரப்பு ...

காங்., - புதிய தமிழகம் ஆதரவு: விஜயகாந்த் புது வியூகம்

Posted:

ராஜ்யசபா தேர்தலில், காங்., - புதிய தமிழகம் கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கான, இறுதி கட்ட முயற்சியில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.தே.மு.தி.க., சார்பில், ராஜ்யசபா வேட்பாளராக, அக்கட்சியின் பொருளாளர், இளங்கோவன் நிறுத்தப்பட்டுள்ளார். தே.மு.தி.க.,விற்கு சட்டசபையில், 29 எம்.எல்.ஏ.,க்கள் பலம் இருந்தாலும், அதிருப்தியில், 7 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதனால், 22 எம்.எல்.ஏ.,க்கள் பலம் மட்டுமே உள்ளது. காங்., - மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சிகளின் ஆதரவை பெற்று ராஜ்யசபா எம்.பி., பதவியை கைப்பற்ற, தே.மு.தி.க., வியூகம் வகுத்தது. இதற்காக, அக்கட்சி ...

மத்திய தணிக்கை துறை கட்டுப்பாட்டின் கீழ் திருப்பதி தேவஸ்தானம்?ஆந்திர அரசு அதிரடி

Posted:

திருப்பதி:திருமலை - திருப்பதி தேவஸ்தானம், மத்திய தணிக்கை துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது.தேவஸ்தானத்தின், "ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல்' எனப்படும் எஸ்.வி.பி.சி., "டிவி' சேனலின் நிதி மற்றும் அரிசி, நெய் முதலிய அத்தியாவசியப் பொருட்களின் கொள்முதல் நிதியில், அதிகாரிகள் முறைகேடு செய்வதாக, சர்ச்சைகள் வெளி வந்த வண்ணம் உள்ளன. தேவஸ்தானத்தின் வரவு, செலவுகளை சரி பார்க்க, இதுவரை, எந்த ஒரு விஜிலென்ஸ் அமைப்பும் ஏற்படுத்தப்படவில்லை. தேவஸ்தானத்தின், வருமான ஆலோசகரும், தலைமை கணக்கு அதிகாரியும் சமர்ப்பிக்கும் அனைத்து, "பில்'களிலும், எவ்வளவு பெரிய தொகை ...

வடமாநிலங்களுக்கு ஆன்மிக சுற்றுலாச்சென்ற கோவை பக்தர்கள் 48 பேரின் நிலை என்ன ?

Posted:

கோவை:கோவையிலிருந்து பத்ரிநாத், கேதர்நாத் உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்ற 48 பேர் கொண்ட குழுவினர், உத்ரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட கன மழை மற்றும் வெள்ளத்தில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், உத்தரகண்ட், இமாச்சல், உ.பி., டில்லி உள்ளிட்ட மாநிலங்களில், கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் சகஜவாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாலும், ரோடுகள் துண்டிக்கப்பட்டிருப்பதாலும் போக்குவரத்து பெரும்பாலான ...

காலண்டர் வரை கணக்கு பார்த்த காங்., குழு: சுதர்சன நாச்சியப்பனுக்கு அடித்தது "லக்'

Posted:

காரைக்குடி:சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுதர்சனநாச்சியப்பன் (காங்.,), மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணை அமைச்சராகி உள்ளார். நிதி அமைச்சர் சிதம்பரத்தையும் மீறி, இவர் அமைச்சரானதற்கு, டில்லி குழுவின் ரகசிய அறிக்கையே காரணம்.சிவகங்கை ஏரியூரை சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், சிவகங்கை தொகுதி எம்.பி., -இருமுறை ராஜ்யசபா எம்.பி., என, தொடர்ந்து பதவியில் உள்ளார். தற்போது ராஜ்யசபாவில், கட்சி கொறடா பதவியும் ஒட்டிக்கொண்டது. பெரிதும் எதிர்பார்த்த, மத்திய அமைச்சர் பதவி மட்டும், இதுவரை நழுவி வந்தது. ஏற்கனவே, சிவகங்கை தொகுதியை சேர்ந்த சிதம்பரம், நிதி அமைச்சராக ...

அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க திட்டமா? பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை

Posted:

புதுடில்லி:""அமர்நாத் யாத்திரையை, சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது'' என, மத்திய உள்துறை அமைச்சர், சுசில்குமார் ஷிண்டே தெரிவித்தார்.

@subtitle@குகைக் கோவில்:@@subtitle@@
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திலுள்ள, குகை கோவிலான அமர்நாத்துக்கு, பக்தர்கள் யாத்திரை செல்வது, வரும், 28ம் தேதி துவங்குகிறது. இந்த யாத்திரை இரண்டு மாதங்கள் நடைபெறும். பக்தர்கள் யாத்திரை மேற்கொள்ளும் பகுதி முழுவதும், பயங்கரவாதிகள் அச்சுறுத்தலுள்ள பகுதிகளாக உள்ளன.எனவே தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி, ஜம்மு - காஷ்மீர் மாநில அரசு, கடந்த வாரம் ...

மாநில நெடுஞ்சாலைத்துறை வைத்தது "மாய' மரம்: 2,500 மரக்கன்று வளர்ப்பதாக தகவல்!

Posted:

கோவை:கோவை மாவட்டத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் 86 மரங்களை மட்டுமே வெட்டி, அதற்கு ஈடாக 2,500 மரக்கன்றுகளை நட்டு வைத்திருப்பதாக மாநில நெடுஞ்சாலைத்துறை அதிர்ச்சித் தகவல் தெரிவித்துள்ளது.கோவை மாவட்டத்தில், மாநில நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமாக 271.77 கி.மீ., தூரமுள்ள சாலைகள் உள்ளன. கோவை நகரிலுள்ள அவிநாசி ரோடு, தடாகம் ரோடு, மருதமலை ரோடு, பங்கஜா மில் ரோடு, காமராஜ் ரோடு, பாரதியார் ரோடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய ரோடுகளும் இத்துறையின் பராமரிப்பிலேயே உள்ளன. கடந்த தி.மு.க., ஆட்சியின்போது, கோவை நகருக்குள் அமைந்துள்ள அவிநாசி ரோட்டில் 16 கி.மீ., ஆறு வழிச்சாலையாக ...

பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் பரிதாப பலி: மினி வேன் மீது தனியார் பஸ் மோதி விபத்து

Posted:

புதுக்கோட்டை : பள்ளி மாணவர்கள், "லிப்ட்' கேட்டு ஏறிச் சென்ற, மினி வேன் மீது, தனியார் பஸ் மோதியதில், ஏழு மாணவர்கள், சம்பவ இடத்திலேயே பலியாகினர்.புதுக்கோட்டை டவுன் பகுதியில், பால் வினியோகம் செய்துவிட்டு, காலி பால் கேன்களுடன், "டாடா ஏஸ்' மினி வேன், நேற்று காலை, 8:50 மணிக்கு, சென்று கொண்டிருந்தது. ஆறுமுகம் என்பவர் ஓட்டிச் சென்றார். உடன், அவரது உறவினர் தியாகராஜன், 45, இருந்தார். அந்த வழியாக, வல்லந்திராக்கோட்டை அரசு பள்ளிக்கு, செல்ல வந்த மாணவர்கள் சிலர், வேனை வழிமறித்து, "லிப்ட்' கேட்டு, ஏறிக் கொண்டனர். அப்போது, எதிரே, வந்த தனியார் பஸ், மினி வேன் மீது, மோதியது.இதில், மினி ...

அடைந்தால் தனி மாநிலம்; சிறப்பு சலுகை வேண்டாம் : தெலுங்கானா அமைச்சர்கள் முரண்டு

Posted:

ஐதராபாத்: "தனித் தெலுங்கானாவை தவிர, வேறு எந்த சிறப்பு சலுகைகளையும் ஏற்க மாட்டோம்' என, தெலுங்கானாவைச் சேர்ந்த, ஆந்திர மாநில அமைச்சர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.ஆந்திராவில், தனித்தெலுங்கானா மாநிலம் அமைக்க கோரி, மீண்டும் போராட்டங்கள் தலைதூக்கியுள்ளன. இன்றைய சூழலில், தெலுங்கானா தனி மாநிலம் என்பதற்கு பதிலாக, அப்பகுதிக்கு சிறப்பு பொருளாதாரம் மற்றும் அரசியல் சலுகைகளை வழங்குவதாக, இப்போதைக்கு சொல்லி வைக்கலாம் என, காங்கிரஸ் மேலிடம் கருதுவதாக கூறப்படுகிறது. இதைப்பற்றி கேள்விப்பட்டதும், ஆந்திர அமைச்சரவையில் அங்கம் வகிக்கும், தெலுங்கானாவைச் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™