Tamil News | Online Tamil News |
- பி.இ., சேர்க்கையில் ஆதிதிராவிடர் மாணவர்கள் நிலை கேள்விக்குறி
- தேர்தலில் போட்டியிட தனக்கு தானே கெடு: கர்நாடக முதல்வர் சித்தராமய்யா பகீர் முடிவு
- "குடு குடு' மத்திய அமைச்சரவை
- உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் சென்னை பயணிகள்:சென்னை திரும்புவது எப்போது?
- ராஜ்யசபா தேர்தலில் வெற்றி உறுதி : ஆளாளுக்கு நம்பிக்கையுடன் பேட்டி
- நாட்டின் எதிர்கால தலைவர் மோடி தான்: 2003ல் நிதிஷ்குமார் பேசியது என்ன
- அன்னிய நேரடி முதலீட்டை உயர்த்தஅரசு நியமித்த கமிட்டி சிபாரிசு
- மோசடி பெண்ணால் சர்ச்சை: முதல்வர் உம்மன் சாண்டிக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம்
- உத்தரகண்ட், இமாச்சல் மாநிலங்களில் மழை, நிலச்சரிவில் சிக்கி 131 பேர் பலி
- காங்கிரசின் ஆதரவை பெற தி.மு.க., - தே.மு.தி.க., தூது: எந்த கட்சியும் ஆதரிக்காததால் கருணாநிதி தவிப்பு
| பி.இ., சேர்க்கையில் ஆதிதிராவிடர் மாணவர்கள் நிலை கேள்விக்குறி Posted: "பி.இ., படிப்பில் சேர, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில், 35 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருந்தாலே போதும்' என, தமிழக அரசின் முடிவுக்கு மாறாக, ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவுப்படி, 40 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என, சென்னை, ஐகோர்ட், சமீபத்தில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை, இன்னும் துவங்காததால், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கு, சிக்கல் ஏற்பட்டுள்ளது.பிளஸ் 2 தேர்வில், 35 சதவீத மதிப்பெண்கள் பெறும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்கள், பி.இ., படிப்பில் சேர விண்ணப்பிக்கின்றனர். கடந்த ... |
| தேர்தலில் போட்டியிட தனக்கு தானே கெடு: கர்நாடக முதல்வர் சித்தராமய்யா பகீர் முடிவு Posted: பெங்களூரு : ""இன்னும், ஐந்தாண்டுகளுக்கு பின், எனக்கு, 70 வயதாகி விடும். அப்புறம், தேர்தலில் போட்டியிடுவதை நினைத்து கூட பார்க்க மாட்டேன்,'' என, கர்நாடகா முதல்வர், சித்தராமய்யா கூறினார். |
| Posted: எல்லா கட்சிகளும், இளைஞர் அணி, இளைஞர் பாசறை, புதிய உறுப்பினர் சேர்க்கை என "இள ரத்தத்தை' பாய்ச்சிக்கொண்டு இருக்கும் போது, மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசில், வயதானவர்கள் நிறைய இடம் பெற்று, "தள்ளாடி'க்கொண்டு இருக்கிறது. கேபினட் அமைச்சர்களில் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட வயதானவர்களே அதிகம். இணை அமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்பு இணை அமைச்சர்கள் பட்டியலில் மட்டுமே, சற்று வயது குறைவானவர்கள் தென்படுகின்றனர்.கேபினட்டில் அதிக வயதானவராக தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் சிஷ்ராம் ஓலா இருக்கிறார். இவரது வயது 86. அதிலும் இவர் தான், ... |
| உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் சென்னை பயணிகள்:சென்னை திரும்புவது எப்போது? Posted: சென்னை: தமிழகத்திலிருந்து, பத்ரிநாத்துக்கு ஆன்மிக சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட பயணிகள், 52 பேர், உத்தரகண்டில் ஏற்பட்ட, பயங்கர மழை வெள்ளத்தில் தவித்து வருகின்றனர். இவர்களை உடனடியாக மீட்டு, தமிழகத்திற்கு அழைத்து வர வேண்டும் என, உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தமிழகத்திலிருந்து, 52 பேர் கொண்ட சுற்றுலாப் பயணிகள், ஜூன் 8ல், சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த, சிவப்பிரகாசம் என்பவரின் தலைமையில், பத்ரிநாத்துக்கு சுற்றுலா சென்றனர்.சைதாப்பேட்டை, கூடுவாஞ்சேரி பகுதிகளில் உள்ள, சிவப்பிரகாசத்தின் உறவினர்கள், தமிழ்நாடு அச்சுபொருள் கழகத்தில் பணியாற்றி ஓய்வு ... |
| ராஜ்யசபா தேர்தலில் வெற்றி உறுதி : ஆளாளுக்கு நம்பிக்கையுடன் பேட்டி Posted: சென்னை :போதிய எம்.எல்.ஏ.,க்கள் இல்லாத நிலையில், "ராஜ்யசபா தேர்தலில், நிச்சயம் வெற்றி பெறுவோம்' என, தே.மு.தி.க., மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்தனர்.ராஜ்யசபா தேர்தலில், போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தவர்களின் மனுக்கள், நேற்று பரிசீலனை செய்யப்பட்டன. பரிசீலனை முடிந்து வெளியே வந்த, தி.மு.க., முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், ""எங்களுக்கு வெற்றி நிச்சயம்; பொறுத்திருந்து பாருங்கள்,'' என்றார்.தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,வும், கட்சியின் கொள்கை பரப்பு செயலருமான, சந்திரகுமார் கூறுகையில், ""எங்களுக்கு தேவையான, 34 ஓட்டுகள் உள்ளன. எனவே, எங்கள் வேட்பாளர் வெற்றி ... |
| நாட்டின் எதிர்கால தலைவர் மோடி தான்: 2003ல் நிதிஷ்குமார் பேசியது என்ன Posted: குஜராத் முதல்வர் மோடி மீது ஏகப்பட்ட குறைகளைக் கூறி, பா.ஜ., உடனான 17 ஆண்டு உறவை துண்டித்துக்கொண்டார் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.பா.ஜ., வீடியோ வெளியீடு:பதிலடி கொடுக்கும் வகையில், மோடியை புகழ்ந்து நிதிஷ்குமார் பேசியதன் வீடியோவை பா.ஜ., வெளியிட்டுள்ளது. குஜராத்தில் உள்ள கட்ச் மாவட்டம் அதிப்பூர் என்ற இடத்தில் டிச.,13, 2003ல் நடந்த ஒரு ரயில்வே விழாவில், மோடி முன்னிலையில், நிதிஷ்குமார் பேசியது:எதிர்காலத்தில் குஜராத்திற்கு வெளியே ஒரு தலைவராக உருவாகக் கூடியவர் நரேந்திர மோடி. நீண்ட நாட்களுக்கு அவர், குஜராத்திற்கு உள்ளேயே இருக்க ... |
| அன்னிய நேரடி முதலீட்டை உயர்த்தஅரசு நியமித்த கமிட்டி சிபாரிசு Posted: புதுடில்லி:"தொலை தொடர்பு, பாதுகாப்பு துறை மற்றும் சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க வேண்டும்' என, மத்திய அரசு குழு சிபாரிசு செய்துள்ளது.நடப்பு கணக்கு பற்றாக்குறையை சமாளிக்க, மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக, சில துறைகளில் மேற்கொள்ளப்படும், அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிப்பது தொடர்பாக, அரசுக்கு ஆலோசனை வழங்க, நிதி அமைச்சர் சிதம்பரம், கமிட்டி ஒன்றை நியமித்து இருந்தார். இக்கமிட்டி சமீபத்தில் கூடி, பல்வேறு துறைகளில், தற்போது அமலில் உள்ள, அன்னிய நேரடி முதலீடு குறித்து ஆலோசனை நடத்தியது.இதன்படி, ... |
| மோசடி பெண்ணால் சர்ச்சை: முதல்வர் உம்மன் சாண்டிக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் Posted: திருவனந்தபுரம்:சூரிய சக்தி மின்சார பேனல் மோசடியில், கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் அலுவலகத்திற்கு தொடர்பு உள்ளதாக, குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், அவர் பதவி விலகக்கோரி, மாநில சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும், போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தப் பிரச்னையால், இரண்டாவது நாளாக நேற்றும், சட்டசபை நாள் முழுவதற்கும் ஒத்திவைக்கப்பட்டது. கேரள மாநிலம், கோட்டயம் அருகேயுள்ள, செங்கன்னூரைச் சேர்ந்த, சரிதா நாயர் என்ற பெண்ணும், அவரின் முன்னாள் கணவர், பிஜு ராதாகிருஷ்ணனும், சூரிய சக்தி மின்சார பேனல்கள் அமைத்து தருவதாகவும், காற்றாலைகளில் பங்குதாரராக ... |
| உத்தரகண்ட், இமாச்சல் மாநிலங்களில் மழை, நிலச்சரிவில் சிக்கி 131 பேர் பலி Posted: புதுடில்லி:கடந்த சில நாட்களாக, பெய்து வரும் பேய் மழையால், இமாச்சல், உத்தரகண்ட் மாநிலங்கள், உருக்குலைந்துள்ளன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, இந்த இரு மாநிலங்களிலும், இதுவரை, 131 பேர் உயிரிழந்துள்ளனர். கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட புனித தலங்களுக்கு பயணம் செய்த, 71 ஆயிரம் பேர், மழை, வெள்ளத்தில் சிக்கி, தவிக்கின்றனர். நிலச்சரிவில் சிக்கிய, இமாச்சல் முதல்வர், வீரபத்ர சிங், 60 மணி நேர, கடும் போராட்டத்துக்கு பின், ஹெலிகாப்டர் மூலம், நேற்று மீட்கப்பட்டார்.கடந்த, 1ம் தேதி, கேரளாவில் துவங்கிய, தென் மேற்கு பருவமழை, இப்போது, வட மாநிலங்களில், கோர தாண்டவமாடி ... |
| காங்கிரசின் ஆதரவை பெற தி.மு.க., - தே.மு.தி.க., தூது: எந்த கட்சியும் ஆதரிக்காததால் கருணாநிதி தவிப்பு Posted: ராஜ்யசபா தேர்தலில், காங்கிரஸ், பா.ம.க., - ம.ம.க., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் ஆதரவை பெற, அக்கட்சித் தலைவர்களிடம் தி.மு.க., - தே.மு.தி.க., ஆகிய கட்சிகளின் சார்பில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தூதராக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், எந்த கட்சியும் ஆதரிக்க முன் வராமல் இருப்பதால், தி.மு.க., தலைவர் கருணாநிதி, என்ன முடிவு எடுப்பது என்பது தெரியாமல் தவிக்கிறார் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க., - தே.மு.தி.க.,வுக்கு இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின், ஐந்து எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுக்கள் இரு கட்சிகளின் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 19,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |