Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தேசிய சைக்கிளிங் பயிற்சியாளர் சாலை விபத்தில் மரணம்

Posted: 18 Jun 2013 01:22 PM PDT

முன்னாள் சைக்கிள் பந்தய வீரரும், தேசிய சைக்கிளிங் பயிற்சியாளருமான ரூமா சாட்டர்ஜி, சாலை விபத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 50.

திருமலையில் ஜெயேந்திரர் வழிபாடு

Posted: 18 Jun 2013 01:20 PM PDT

திருமலையில் சுவாமி ஏழுமலையானை ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் மழை: 48.10 அடியாக உயர்ந்தது பெருஞ்சாணி அணை

Posted: 18 Jun 2013 01:18 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் மழையைத் தொடர்ந்து பெருஞ்சாணி அணை 48.10 அடியை எட்டியுள்ளது. இந்த அணைக்கு விநாடிக்கு 1868

சென்னையில் 102 டிகிரி வெயில்: இன்று மழை வாய்ப்பு

Posted: 18 Jun 2013 01:17 PM PDT

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை 102 டிகிரி வெயில் பதிவானது.

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு: தரகர்களின் சொத்துப் பட்டியலை தயாரிக்கும் சி.பி.சி.ஐ.டி.

Posted: 18 Jun 2013 01:15 PM PDT

ஐ.பி.எல். சூதாட்ட வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்ட தரகர்களின் சொத்துப்பட்டியலை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.

இன்று அமைச்சரவைக் கூட்டம்

Posted: 18 Jun 2013 01:14 PM PDT

மிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று புதன்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளதாக தலைமைச் செயலக

இலங்கை ராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சி: வெலிங்டன் ராணுவ மையத்தை முற்றுகையிட முயன்ற 400 பேர் கைது

Posted: 18 Jun 2013 01:14 PM PDT

வெலிங்டன் ராணுவ மையத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முயன்ற பல்வேறு தமிழ் அமைப்புகள், கட்சிகளைச் சேர்ந்த

பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு இன்று தொடக்கம்

Posted: 18 Jun 2013 01:13 PM PDT

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்புத் துணைத்தேர்வு புதன்கிழமை (ஜூன் 19) தொடங்குகிறது.

எஸ்.ஆர்.எம். குழும நிறுவனங்களில் வருமான வரிச் சோதனை

Posted: 18 Jun 2013 01:12 PM PDT

எஸ்.ஆர்.எம். குழும நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை

ராமேசுவரம், செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்களின் எண்கள் மாற்றம்

Posted: 18 Jun 2013 01:05 PM PDT

சென்னையிலிருந்து திருச்செந்தூர் வரை இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் மற்றும் ராமேசுவரம்

தங்கம் பவுனுக்கு ரூ.184 உயர்வு

Posted: 18 Jun 2013 12:59 PM PDT

ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.184 உயர்ந்துள்ளது. சென்னை

ரூபாய் மதிப்பில் கடும் சரிவு

Posted: 18 Jun 2013 12:56 PM PDT

ரூபாயின் மதிப்பு செவ்வாய்க்கிழமை கடும் சரிவை சந்தித்தது. செலாவணிச் சந்தையில் அமெரிக்க

கிராமப்புறங்களில் குறைந்த விலையில் "பிராவியா' டிவிக்களை விற்க சோனி திட்டம்

Posted: 18 Jun 2013 12:54 PM PDT

உயர் தொழில்நுட்பத்தில் உருவான சோனி பிராவியா ரக டி.வி.க்களை கிராமப்புறங்களில் குறைந்த விலையில் விற்க

ஐ.ஓ.பி.யுடன் நேச்சுரல்ஸ் ஒப்பந்தம்

Posted: 18 Jun 2013 12:52 PM PDT

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் (ஐ.ஓ.பி.)

ரிலையன்ஸின் ஓய்வூதியத் திட்டம்

Posted: 18 Jun 2013 12:52 PM PDT

ரிலையன்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஆயுள் காப்பீடுடன் கூடிய புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜமாத் உத்-தவாவுக்கு ரூ.35 கோடி: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு ஒதுக்கீடு

Posted: 18 Jun 2013 12:51 PM PDT

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு ஜமாத் உத்-தவா அமைப்புக்கு ரூ.35 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஈரானுடன் பேச்சு நடத்தத் தயார்: ஒபாமா

Posted: 18 Jun 2013 12:38 PM PDT

ஈரான் நாட்டுடன் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் 4,500 படை வீரர்கள் நீக்கம்

Posted: 18 Jun 2013 12:38 PM PDT

செலவுக் குறைப்பு நடவடிக்கை காரணமாக பிரிட்டனில் 4,500 படை வீரர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

அமெரிக்க நீதிபதியாக ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன் பதவியேற்றார்

Posted: 18 Jun 2013 12:37 PM PDT

இந்தியாவில் பிறந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன், அமெரிக்க நீதிபதியாக செவ்வாய்க்கிழமை பதவியேற்றார்.

ஜிஎம்ஆர் நிறுவனம் மீது தவறில்லை

Posted: 18 Jun 2013 12:35 PM PDT

மாலத்தீவில் விமான நிலையத்தை பராமரிக்கும் பணியை ஜிஎம்ஆர் நிறுவனம் பெற்றதில் எந்த ஊழலும்

சிரியாவில் மோதல்: முடிவுகட்ட அமெரிக்கா - ரஷியா விருப்பம்

Posted: 18 Jun 2013 12:35 PM PDT

சிரியாவில் நிகழ்ந்து வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர அரசும், கிளர்ச்சியாளர்களும்

ஒப்புதல் வாக்குமூலம் தர தில்லி போலீஸார் சித்திரவதை

Posted: 18 Jun 2013 12:34 PM PDT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் தர தில்லி போலீஸார் தங்களை சித்திரவதை செய்தனர் என்று புக்கிகள் மூன்று பேர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இக்குற்றச்சாட்டு குறித்து இம்மாதம் 22-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தில்லி போலீஸாருக்கு

வெளிப்படையான நிர்வாகத்தை அளிக்கிறோம்

Posted: 18 Jun 2013 12:33 PM PDT

"மின் ஆளுமை மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக வெளிப்படையான நிர்வாகத்தை தில்லி அரசு வழங்கி வருகிறது. அதனால், பல அலுவலகங்களில் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டுள்ளனர்'' என்று முதல்வர் ஷீலா தீட்சித் கூறினார்.

மத்திய அமைச்சர்கள் கிரிஜா வியாஸ், சுதர்சன நாச்சியப்பன் பொறுப்பேற்பு

Posted: 18 Jun 2013 12:33 PM PDT

மத்திய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள கிரியா வியாஸ், சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ரூ. 30 லட்சம் ஹெராயின் பறிமுதல்: இருவர் கைது

Posted: 18 Jun 2013 12:33 PM PDT

தில்லி மற்றும் தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் ஹெராயின்  விற்று வந்த கும்பலைச் சேர்ந்ததாக பவானா பகுதியைச் சேர்ந்த அக்தர் அலி (35), சாஸ்திரி பார்க் பகுதி ஷஹபன் (33) என்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

சிலிண்டரால் தாக்கி பெண் கொலை: கணவர் கைது

Posted: 18 Jun 2013 12:33 PM PDT

குடும்ப பிரச்னையில் ஆத்திரமடைந்து சமையல் எரிவாயு சிலிண்டரால் தாக்கி மனைவியைக் கொன்றதாக அவரது கணவரை காஜிபூர் போலீஸார் கைது செய்தனர்.

"தேவைப்பட்டால் ராணுவம் அழைக்கப்படும்'

Posted: 18 Jun 2013 12:32 PM PDT

தில்லியில் யமுனை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ, தேவைப்பட்டால் ராணுவம் அழைக்கப்படும் என்று தில்லி அரசு அறிவித்துள்ளது.

மழை நிவாரண பணிகளில் சுணக்கம்

Posted: 18 Jun 2013 12:32 PM PDT

தில்லியில் மழை நிவாரணப் பணிகளுக்காக மாநகராட்சிகளும், தில்லி அரசும் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தில்லிவாசிகள் மத்தியில் பரவலாக புகார் கூறப்படுகிறது. சாலைகளில் தேங்கிய நீர் முழுமையாக வெளியேற்றப்படாமல் இருப்பதால் காந்த

தென்மேற்கு பருவமழை தீவிரம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 81 ஆக உயர்வு

Posted: 18 Jun 2013 12:32 PM PDT

தென்மேற்கு பருவமழையின் பாதிப்பு எதிரொலியாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. வடமாநிலங்களில் உள்ள புனித தலங்களில் மொத்தம் 73,000 பேர் சிக்கியுள்ளனர்.

பிகார் சட்டமேலவை எதிர்க்கட்சி தலைவர் ராஜிநாமா

Posted: 18 Jun 2013 12:32 PM PDT

பிகார் சட்டமேலவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி உறுப்பினர் குலாம் கெüஸ் விலகி விட்டார்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் தில்லிக்கு மாநில அந்தஸ்து

Posted: 18 Jun 2013 12:31 PM PDT

தில்லிக்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்றும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தில்லி பாஜக செயற்குழு செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது. தில்லி பாஜக தலைவராக விஜய் கோயல் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் செயற்குழுக் கூட்

நான்காண்டு பட்டப் படிப்பு அமல்:கல்லூரிகளில் கட்டணம் உயர்வு

Posted: 18 Jun 2013 12:31 PM PDT

தில்லி பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்றுச் செயல்படும் தனியார் கல்லூரிகளில் கல்விக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

ரயிலில் காயங்களுடன் இளைஞர் சடலம்

Posted: 18 Jun 2013 12:31 PM PDT

தில்லியில் பயணிகள் ரயில் பெட்டியில் காயங்களுடன் இளைஞர் திங்கள்கிழமை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது விவரம் குறித்து ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர். இது குறித்து, போலீஸார் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Posted: 18 Jun 2013 12:30 PM PDT

விழுப்புரத்தில், தனியார் பள்ளி ஒன்றுக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனைக்குப் பிறகு அது, வதந்தி எனத் தெரியவந்தது. எனினும், பதறிய பெற்றோர், குழந்தைகளை அழைத்துச் செல்ல திரண்டதால், பள்ளிக்கு

கடல் கனிமவள உரிமத்தில் முறைகேடு: விசாரணையை முடித்துக் கொண்டது சிபிஐ

Posted: 18 Jun 2013 12:30 PM PDT

கடலுக்கு அடியில் உள்ள கனிம வளங்களை வெட்டி எடுக்க உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்தது

செஞ்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு

Posted: 18 Jun 2013 12:30 PM PDT

செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விழுப்புரம் ஆட்சியர் வா.சம்பத் செவ்வாய்க்கிழமை வருடாந்திர கணக்கு ஆய்வை மேற்கொண்டார்.

நிறைமதி கிராமத்தில்அம்மா திட்ட முகாம்

Posted: 18 Jun 2013 12:29 PM PDT

கள்ளக்குறிச்சி ஒன்றியம் நிறைமதி கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. வட்டாட்சியர் வே.ஜவகர் தலைமை வகித்தார். ஒன்றியக் குழுத் தலைவர் அ.ராஜசேகர், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் சி.ராஜசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் து.சிவலிங்கம் வரவேற்றார். முகாமில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் கோரி 111 மனுக்களும், முதியோர்

வீடு புகுந்து தாக்கிய 3 பேர் கைது

Posted: 18 Jun 2013 12:29 PM PDT

பெரியசிறுவத்தூர் கிராமத்தில், வீடுபுகுந்து தாக்கி கொலைமிரட்டல் விடுத்த மூவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

நிலக்கரி ஊழல்: பிரதமரின் ஆலோசகரிடம் வாக்குமூலம் பெற சிபிஐ முடிவு

Posted: 18 Jun 2013 12:29 PM PDT

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகர் டி.கே.ஏ.நாயரிடம் விரைவில் வாக்குமூலம் பெற சிபிஐ திட்டமிட்டுள்ளது.

மணல் லாரி கவிழ்ந்து ஒருவர் சாவு

Posted: 18 Jun 2013 12:29 PM PDT

விழுப்புரம் அருகே, மணல் லாரி கவிழ்ந்து செவ்வாய்க்கிழமை ஒருவர் இறந்தார். 4 பேர் காயமடைந்தனர்.  விழுப்புரம் அருகே பிடாகம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் பாரம் ஏற்றிய லாரி ஒன்று சென்னை

டிராலி விழுந்து விடுதி காவலர் சாவு

Posted: 18 Jun 2013 12:28 PM PDT

வாசுதேவனூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் டிராலி விழுந்து விடுதி காவலர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

ஜூன் 28-ல் மின் நுகர்வோர் கூட்டம்

Posted: 18 Jun 2013 12:28 PM PDT

மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக கடலூர் வட்டம் சார்பில், ஏப்ரல்-ஜூன் 2013 காலாண்டிற்கான நுகர்வோர் பாதுகாப்புக்குழுக் கூட்டம், வரும் 28-ஆம் தேதி நடைபெறுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி சேகரிக்கும் நிகழ்ச்சி

Posted: 18 Jun 2013 12:28 PM PDT

மாற்றுத்திறனாளிகளுக்காக, திருநங்கை த்ரிரோஸஸ் ரோஸ் பரணி, அக்ஷயா அறக்கட்டளை இணைந்து நடத்திய நிதி சேர்ப்பு நிகழ்ச்சி கள்ளக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை

தெலங்கானா குறித்து உயர்நிலை அளவில் ஆலோசனை

Posted: 18 Jun 2013 12:28 PM PDT

தெலங்கானா தொடர்பாக உயர்நிலை அளவில் ஆலோசனை நடைபெற்று வருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.

நாதமுனிகள் ஜெனன மஹோற்சவம் இன்று தொடக்கம்

Posted: 18 Jun 2013 12:27 PM PDT

நாலாயிர திவ்ய பிரபந்தத்தை அளித்த ஸ்ரீமந்நாதமுனிகள் 1190-வது ஜெனன மஹோற்சவம் நாதமுனிகள் அவதார ஸ்தலமான காட்டுமன்னார்கோவில் சதுர்வேதிமங்கலத்தில் (குப்பங்குழி) ஸ்ரீநாதமுனிகள், ஸ்ரீஆளவந்தார் அவதாரத் திருமாளிகையில் புதன்கிழமை திருக்கல்யாணம் உற்சவத்துடன் தொடங்குகிறது.

நிரந்தர துப்புரவுப் பணியாளர்களை நியமிக்கக் கோரிக்கை

Posted: 18 Jun 2013 12:27 PM PDT

பேரூராட்சிகளில் காலியாக உள்ள துப்புரவுத் தொழிலாளர் பணியிடங்களில் தாற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஊழல் கறை படிந்த அமைச்சர்கள்: ஆந்திர சட்டப் பேரவையில் காங்கிரஸ் - தெலுங்கு தேசம் மோதல்

Posted: 18 Jun 2013 12:27 PM PDT

ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்களை பதவி நீக்க வேண்டுமென்று கோரி ஆந்திரப் பேரவையில்

அம்பேத்கர் படம் திறப்பு

Posted: 18 Jun 2013 12:27 PM PDT

சென்னையில் உள்ள என்.எல்.சி. மண்டல அலுவலகத்தில் அம்பேத்கரின் திருவுருவப் படத்தை என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகன் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

இளங்கலைப் பட்டப்படிப்பு தொடங்கக் கோரிக்கை

Posted: 18 Jun 2013 12:26 PM PDT

ிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு தொடங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து கூட்டமைப்பு மாநில இணைச் செயலர் ரா.காவியச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை

ஆதிதிராவிடர் பள்ளியில் திடீர் ஆய்வு

Posted: 18 Jun 2013 12:26 PM PDT

விருத்தாசலத்தை அடுத்த தீவளூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளியை ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

அரசு இசைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை

Posted: 18 Jun 2013 12:26 PM PDT

கடலூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கு: மத்திய உளவுத்துறை அதிகாரியிடம் சிபிஐ விசாரணை

Posted: 18 Jun 2013 12:25 PM PDT

இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் தொடர்பாக மத்திய உளவுத்துறை (ஐபி) சிறப்பு இயக்குநர் ராஜீந்தர்குமாரிடம் சிபிஐ

40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற பாடுபட வேண்டும்

Posted: 18 Jun 2013 12:25 PM PDT

வரும் பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளையும் கைப்பற்றத் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம் பேசினார்

போலீஸாக நடித்து லாரி டிரைவரிடம் ரூ.30 ஆயிரம் பறிப்பு

Posted: 18 Jun 2013 12:25 PM PDT

பொன்னேரி அருகே போலீஸ் எனக் கூறி லாரி டிரைவர் மற்றும் அவரது உதவியாளரிடம் ரூ.30 ஆயிரத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

50 போலீஸாருக்கு பதவி உயர்வு

Posted: 18 Jun 2013 12:25 PM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் தலைமைக் காவலர்களாகப் பணிபுரிந்து வந்த 50 பேர் சிறப்பு உதவி எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

சோலார் மோசடி: இரண்டாவது நாளாக கேரள சட்டப் பேரவையில் அமளி

Posted: 18 Jun 2013 12:25 PM PDT

சோலார் மோசடி விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி பதவி விலக வேண்டும்

திருத்தணி கோயில் பிரசாத கடை ரூ.1.17 கோடிக்கு ஏலம்

Posted: 18 Jun 2013 12:25 PM PDT

திருத்தணி முருகன் கோயில் பிரசாதக் கடை நடப்பாண்டு ரூ.1.17 கோடிக்கு செவ்வாய்கிழமை ஏலம் விடப்பட்டது.

பைக்குகள் மோதல்: இளைஞர் சாவு

Posted: 18 Jun 2013 12:24 PM PDT

திருவள்ளூர் அருகே இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர் இறந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.

மின்தடை நீடித்தால் அமைச்சர் வீடு முற்றுகை

Posted: 18 Jun 2013 12:24 PM PDT

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் மின்தடை நீடித்தால், மின்துறை அமைச்சர் வீட்டை முற்றுகையிடப் போவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது.

காரைக்கால் அருகே2 வீடுகள் தீக்கிரை

Posted: 18 Jun 2013 12:24 PM PDT

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன் பூவம் பகுதியில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 2 வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

ஓ.என்.ஜி.சி. பள்ளி மாணவர் 3 பேருக்கு  ஜிப்மரில் மருத்துவம் பயில இடம்

Posted: 18 Jun 2013 12:23 PM PDT

ஓ.என்.ஜி.சி. பள்ளி மாணவர் மூவருக்கு ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் படிக்க சீட் கிடைத்துள்ளதாக அப்பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

போலீஸ் அதிகாரி கொலை வழக்கு: உண்மை கண்டறியும் சோதனைக்கு முன்னாள் அமைச்சர் சம்மதம்

Posted: 18 Jun 2013 12:23 PM PDT

உத்தரப் பிரதேசத்தில் போலீஸ் அதிகாரி கொலை வழக்கு தொடர்பாக உண்மை கண்டறியும்

தீ விபத்தில் 4 வீடுகள் சேதம்

Posted: 18 Jun 2013 12:23 PM PDT

புதுச்சேரி பாவாணர் மேடு அருகே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 4 குடிசைகள் எரிந்து சாம்பலாயின.

மாணவர்களுக்கு ரொட்டி- பால் வழங்கிய பா.ஜ. கட்சியினர்

Posted: 18 Jun 2013 12:23 PM PDT

ரொட்டி, பால் திட்டத்தை நிறுத்திய புதுச்சேரி அரசைக் கண்டித்து பா.ஜ.க. சார்பில் மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை ரொட்டி, பால் வழங்கப்பட்டது.

10-ஆம் வகுப்பு தேர்வு:  அதிக மதிப்பெண் எடுத்த தனித்தேர்வர்

Posted: 18 Jun 2013 12:22 PM PDT

புதுச்சேரியில் தனித் தேர்வராகத் தேர்வெழுதி, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 486 மதிப்பெண்கள் எடுத்துள்ளார் மாணவி சரோன் கிரேஸ் .

பிகார் பந்த்: பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் மோதல்

Posted: 18 Jun 2013 12:22 PM PDT

பிகாரில் பாஜக செவ்வாய்க்கிழமை நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தின்போது பல இடங்களில் வன்முறை நிகழ்ந்தது.

கடலோர கிராமங்களில் இயற்கை பேரிடர் எச்சரிக்கை சாதனம் அமைக்கப்படும்'

Posted: 18 Jun 2013 12:22 PM PDT

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் சுனாமி மற்றும் இயற்கை இடர்பாடுகளை முன் கூட்டியே தெரிந்து கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை சாதனம் அமைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தெரிவித்தார்.

21-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 18 Jun 2013 12:22 PM PDT

விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது.  இது குறித்து மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் வெளியிட்ட அறிக்கை:

உளுந்தூர்பேட்டையில் குடிநீர் விநியோகம் சீரானது

Posted: 18 Jun 2013 12:21 PM PDT

உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு மட்டிகை கிராமத்திலிருந்து குடிநீர் வரும் குழாயில் ஏற்பட்டிருந்த உடைப்பு, செவ்வாய்க்கிழமை சீரமைக்கப்பட்டது.

படித்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பு

Posted: 18 Jun 2013 12:21 PM PDT

: விழுப்புரம் மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு தொழில் தொடங்க படித்த இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வீராணம் ஏரியை தூர்வார ரூ.40 கோடி ஒதுக்கீடு

Posted: 18 Jun 2013 12:20 PM PDT

வீராணம் ஏரியை தூர்வார ரூ.40 கோடி நிதியை ஒதுக்கீடு செய்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாவட்ட திட்டக் குழுக் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. 

தேர்ச்சியை உயர்த்த மாணவர் வருகையை ஊர்ஜிதம் செய்ய வேண்டும்

Posted: 18 Jun 2013 12:20 PM PDT

அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகித்தை உயர்த்த மாணவர்களின் வருகையை ஆசிரியர்கள் ஊர்ஜிதம் செய்ய வேண்டும் என மாவட்டக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் கூறினார்.

தொகுப்பூதிய துப்புரவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

Posted: 18 Jun 2013 12:20 PM PDT

கடலூர் நகராட்சியில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிய 144 துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நரிக்குறவர் குடியிருப்புக்கு குடிநீர் வசதி செய்து தர கோரிக்கை

Posted: 18 Jun 2013 12:20 PM PDT

குடிநீர் மற்றும் சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் என நரிக்குறவர் இன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

30-ல் கடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம்

Posted: 18 Jun 2013 12:19 PM PDT

கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றச் சங்கம் சார்பில் 2-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் சுயம்வரம் நிகழ்ச்சி புதுப்பாளையத்தில் வரும் 30-ம் தேதி நடக்கிறது.

செம்மங்குப்பம் ஊராட்சியில் விலையில்லா பொருள்கள் பதுக்கல்

Posted: 18 Jun 2013 12:19 PM PDT

செம்மங்குப்பம் ஊராட்சியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக மேலும் 5 செட் இலவசப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு

Posted: 18 Jun 2013 12:19 PM PDT

கடலூர் மாவட்டத்தில் போலீஸாரை கண்டித்து வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

என்.சி.சி. மாணவர்களுக்கான பயிற்சி முகாம் தொடக்கம்

Posted: 18 Jun 2013 12:18 PM PDT

சிதம்பரம் அண்ணாமலைநகர் 6-வது தமிழ்நாடு பட்டாலியன் சார்பில் என்சிசி மாணவர்களுக்கான ஆண்டு கூட்டுப் பயிற்சி முகாம், ஜூன் 15-ம் தேதி தொடங்கியது. இம்முகாம் வருகிற ஜூன் 24-ம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது.

கல்லூரி ஆசிரியர் நியமன விண்ணப்பம் இன்றுமுதல் விநியோகம்

Posted: 18 Jun 2013 12:18 PM PDT

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் கல்லூரி ஆசிரியர் நியமன விண்ணப்பப் படிவம் விற்பனை புதன்கிழமை (ஜூன் 19) தொடங்குகிறது.

காரைக்கால்-பேரளம் ரயில் பாதை இடையே மேம்பாலம்: அதிகாரிகள் ஆய்வு

Posted: 18 Jun 2013 12:17 PM PDT

காரைக்கால்- பேரளம் இடையே ரயில்வே மேம்பாலம், சுரங்கப் பாதை அமைப்பது குறித்து அதிகாரிகள் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தியது.

மருத்துவ உதவித் தொகை ரூ.2.25 லட்சம் பெற அரசாணை கேட்கும் உயர் கல்வித்துறை

Posted: 18 Jun 2013 12:17 PM PDT

சென்டாக் மூலம் மருத்துவம் பயிலத் தேர்வாகும் மாணவர்களுக்கு முதல்வர் அளித்த வாக்குறுதிப்படி ரூ.2.25 லட்சம் அளிக்க அரசாணை ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்றும்,  அதனால் ரூ.1.75 லட்சம் மட்டுமே அளிக்கப்படும் என்று உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை தெர

சீதளாதேவி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

Posted: 18 Jun 2013 12:17 PM PDT

காரைக்கால் அருகே கீழகாசாக்குடியிலுள்ள ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழ் பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடு

Posted: 18 Jun 2013 12:17 PM PDT

2012-13-ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ்களை பிரத்யேகமாக வேலைவாய்ப்பு அலுவலக இணையதளம் மூலம் பதிவு செய்ய ச

ஓவிய, விநாடி-வினா போட்டி பரிசளிப்பு

Posted: 18 Jun 2013 12:16 PM PDT

புதுச்சேரி ஸ்ரீ கிருஷ்ணா மந்திர் சார்பில், ஓவிய, விநாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

கருணாநிதி பிறந்த நாள்: தி.மு.க.வினர் நல உதவி

Posted: 18 Jun 2013 12:16 PM PDT

தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி, அக்கட்சியின் புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதி நைனார்மண்டபம் மகளிரணி சார்பில் நலஉதவிகள் வழங்கப்பட்டது.

இலவச உடல் பரிசோதனை முகாம்

Posted: 18 Jun 2013 12:16 PM PDT

புதுச்சேரி உதவிக்கரங்கள் சமூக தொடர்கல்வி இயக்கம் சார்பில் இலவச முழு உடற்பரிசோதனை முகாம் நடைபெற்றது.

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிய பஸ் நிலையம்

Posted: 18 Jun 2013 12:15 PM PDT

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிய பஸ் நிலையத்துக்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகராட்சி சீர்கேட்டை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்

Posted: 18 Jun 2013 12:14 PM PDT

காஞ்சிபுரம் நகராட்சி நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்து நகர, ஒன்றிய தி.மு.க. சார்பில் காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆதரவற்றோர் இல்ல மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்

Posted: 18 Jun 2013 12:14 PM PDT

ஆதரவற்றோர் காப்பகத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு மற்றும் நோட்டு புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா செங்கல்பட்டு சமூக பொழுதுபோக்கு சங்கம் (சோஷியல் ரெக்ரியேஷன் கிளப்) சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பணத் தகராறில் ஒருவர் கொலை:முக்கிய குற்றவாளி கைது

Posted: 18 Jun 2013 12:14 PM PDT

பணத் தகராறில் சென்னையைச் சேர்ந்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளியை ஒரகடம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காதலன் தற்கொலை: தீக்காயமடைந்த காதலியும் சாவு

Posted: 18 Jun 2013 12:13 PM PDT

ஸ்ரீபெரும்புதூரில், மகள் கடத்தப்பட்டது தொடர்பாக போலீஸýக்கு புகார் தெரிவிக்க அவரது பெற்றோர் சென்றதால், அஞ்சிய இளைஞர் கடந்த 13-ஆம் தேதி நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது, பெற்றோருடன் சென்ற தனது 13 வயது காதலியை அவர்

ஸ்ரீ ராமானுஜர் கோயில் நிலத்தில் முறைகேடாக பட்டா

Posted: 18 Jun 2013 12:13 PM PDT

: ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ ராமானுஜர் கோயில் நந்தவன நிலத்தில் முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்று ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற இளைஞர்களுக்கு  கட்டடப் பயிற்சி

Posted: 18 Jun 2013 12:13 PM PDT

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் கிராமப்புற இளைஞர்களுக்கு புதுவாழ்வுத் திட்டத்தின் மூலம் கட்டடப் பயிற்சி வழங்கப்பட்டது.

வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆய்வுக் கூட்டம்

Posted: 18 Jun 2013 12:13 PM PDT

உத்தரமேரூரில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தெப்பம்பட்டி அருகே வீணாகும் குடிநீர்

Posted: 18 Jun 2013 12:12 PM PDT

தெப்பம்பட்டி-கண்டமனூர் சாலையில் வீணாகும் குடிநீரைத் தடுத்து நிறுத்திட வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலவச பஸ் பாஸ் விண்ணப்பம் சமர்ப்பிக்காத பள்ளிகளுக்கு நோட்டீஸ்

Posted: 18 Jun 2013 12:12 PM PDT

தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கான விண்ணப்பங்களை, இதுவரை சமர்

மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பரிசோதனை முகாம்

Posted: 18 Jun 2013 12:11 PM PDT

தேனி மாவட்டத்தில் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஜூன் 22 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை, 10 கிராமங்களில் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.    இது குறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஜூன் 22 ஆம் தேதி கி

திறந்திருந்த வீட்டில் திருட்டு: 2 சிறுவர்கள் கைது

Posted: 18 Jun 2013 12:11 PM PDT

திறந்திருந்த வீட்டில் செல்போன் மற்றும் தங்கச் சங்கிலியைத் திருடியதாக திங்கள்கிழமை தெற்கு காவல் நிலைய போலீஸார் 2 சிறுவர்களை கைது செய்துள்ளனர்.

அரசு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கல்

Posted: 18 Jun 2013 12:10 PM PDT

பெரியகுளம் வட்ட அளவில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ  தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முஸ்லீம் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா தென்கரை பள்ளிவாசல் திருமண மஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மணல் திருடியதாக ஒருவர் கைது

Posted: 18 Jun 2013 12:10 PM PDT

சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியில் ஓடையில் இருந்து டிராக்டர் மூலம் மணல் திருடியதாக திங்கள்கிழமை இரவு ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™