Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசு தகராறு செய்கிறது : கர்நாடகா முதல்வர்

Posted:

பெங்களூரு: ""காவிரி நதி நீர் பங்கீடு விஷயம் தொடர்பாக, தமிழக அரசு தேவையில்லாமல் தகராறு செய்து வருகிறது,'' என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டினார்.பெல்லாரி மாவட்டம், சிந்தானூர் எம்.எல்.ஏ., ஹம்பன கவுடா மகன் திருமணத்தில் கலந்து கொள்ள வந்த முதல்வர் சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக அரசு, ஜூலை மாதத்தில் தான் நீர் கேட்க வேண்டும். ஆனால், ஜூன் முதல் வாரத்தில் நீர் விட வேண்டும், என்று கேட்கிறது. இது தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கும் உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது.தமிழக அரசு கேட்டுள்ள, பத்து டி.எம்.சி., நீர் விடும் விஷயம் தொடர்பாக, வரும் ...

பீர் பாட்டில்கள் விற்பனையில் அரசுக்கு ரூ.930 கோடி வருவாய்

Posted:

கோடை வெயிலின் தாக்கத்தால், கடந்த, இரு மாதங்களில், 9.30 கோடி பீர் பாட்டில்கள் விற்பனையாகியுள்ளன. இதனால், அரசுக்கு கணிசமான வருவாய் கிடைத்துள்ளது.தமிழகத்தில், 6,500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், 15க்கும் மேற்பட்ட பீர் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. பீர் விலை, ரகத்திற்கு ஏற்றவாறு, அரசு விலை நிர்ணயம் செய்துள்ள, 80 முதல், 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.சென்ற ஏப்ரல், மே மாதங்களில், கோடை வெயில் கொளுத்தியதால், "குடி'மகன்கள், ஐ.எம்.எப்., எனப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மது பானங்களைக் காட்டிலும், பீர் வகைகளுக்கே ...

பருவமழையால் ஓராண்டுக்கு பின் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து

Posted:

தென்மேற்கு பருவமழை, குறிப்பிட்ட காலத்தில் துவங்கி உள்ளதால், மேட்டூர் அணை நிரம்பும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. வறண்டு கிடந்த மேட்டூர் அணைக்கு, காவிரியில் இருந்து, நேற்று செம்மண் கலந்து வெள்ளம் பாய்ந்தது. இது, விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.கேரளாவில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில், பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பத்தின் தீவிரமும் குறைந்துள்ளது.ஆண்டுதோறும், ஜூன் முதல் வாரத்தில், தென்மேற்கு பருவமழை துவங்கி, செப்., மாதம் வரை பெய்யும். இந்த ...

ஒன்பது மாநகராட்சிகளில் "அம்மா உணவகம்' திறப்பு

Posted:

சென்னை:தமிழகத்தில், ஒன்பது மாநகராட்சி பகுதிகளில், "அம்மா' உணவகங்களை, முதல்வர் ஜெயலலிதா நேற்று துவங்கி வைத்தார்.ஏழை, எளியோர், கூலித்தொழிலாளர் பயன்பெறும் வகையில், சென்னையில், வார்டுக்கு ஒன்று என, 200 இடங்களில், அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. 1 ரூபாய்க்கு இட்லி, ஐந்து ரூபாய்க்கு சாம்பார் சாதம், மூன்று ரூபாய்க்கு தயிர் சாதம் என, மலிவு விலையில் உணவு விற்கப்படுகிறது.இந்த உணவகங்களுக்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், தமிழகத்தில் மற்ற ஒன்பது மாநகராட்சிகளிலும் திட்டம் விரிவாக்கப்படும் என, முதல்வர், சட்டசபையில் அறிவித்தார். அதற்கான பணிகளும் ...

கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல தூது:படிவாரா விஜயகாந்த்?

Posted:

கருணாநிதிக்கு, இன்று பிறந்தநாள் வாழ்த்து சொல்ல, அனுப்பி வைக்கப்படும் தூதுக்கு, விஜயகாந்த் படிவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.கடந்த தி.மு.க., ஆட்சியில், சென்னை கோயம்பேட்டில் உள்ள, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு சொந்தமான திருமண மண்டபம், மேம்பால பணிக்காக இடிக்கப்பட்டது. மேலும், விஜயகாந்தின் வீடு மற்றும் தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இதற்கு, தி.மு.க., தான் காரணம் என, கருதியதால், அக்கட்சி தலைவர்களுடன் இருந்த நட்புறவை, விஜயகாந்த் துண்டித்தார். அப்போதைய அரசுக்கு எதிராக, பல்வேறு குற்றச்சாட்டுக்களையும், அவர் ...

ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி

Posted:

சென்னை:""நாம் ஒற்றுமையாக இருந்து, சில சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.கருணாநிதி எழுதிய, "நெஞ்சுக்கு நீதி' ஐந்தாம் பாகம் மற்றும் "சிறுகதை பூங்கா' நூல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. நூல்களின் முதல் பிரதியை, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி மோகன் வெளியிட, மா.நன்னன் பெற்றுக் கொண்டார். மோகன் பேசுகையில், ""இந்தியாவின் தலைவிதியை நிர்ணயித்தவர் கருணாநிதி. குஜ்ரால், வாஜ்பாய், தேவகவுடா போன்றவர்களை பிரதமராக்கிய பெருமை, அவருக்கு உண்டு. கருணாநிதி மீது எனக்கு காதல் உண்டு. அவர் சிறந்த எழுத்தாளர். ...

பொய் கணக்கு காட்டும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய அதிகாரமுண்டு

Posted:

புதுடில்லி :"தேர்தல் செலவு குறித்து, தவறான தகவல் தெரிவிக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம், எங்களுக்கு உள்ளது' என, சுப்ரீம் கோர்ட்டில், தலைமை தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.மீடியாக்களுக்கு பணம் :மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர், அசோக் சவான், தேர்தலில் ஓட்டுகளை பெறுவதற்காக, மீடியாக்களுக்கு பணம் கொடுத்து, செய்திகள் வெளியிட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடக்கிறது.இது தொடர்பாக, மத்திய சட்ட அமைச்சகம், கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில், "தேர்தல் செலவு குறித்து, தவறான தகவல் தெரிவிக்கும் வேட்பாளரை, ...

சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் நீதிபதிகள் நியமனத்தில் வருகிறது மாற்றம்

Posted:

புதுடில்லி:""நீதிபதிகள் அடங்கிய குழு தான், தற்போது, சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளை நியமனம் செய்கிறது. கடந்த, 20 ஆண்டுகளாக பின்பற்றப்படும் இந்த நடைமுறையை கைவிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, அரசுப் பிரதிநிதிகளும் இடம் பெறும் வகையிலான, புதிய நியமன ஆணையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என, மத்திய சட்ட அமைச்சர், கபில் சிபல் கூறினார்.

@subtitle@திருப்தியில்லை:@@subtitle@@
மத்திய சட்ட அமைச்சரும், காங்., மூத்த தலைவர்களில் ஒருவருமான, கபில் சிபல் கூறியதாவது:சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளை நியமனம் செய்ய, தற்போது, சுப்ரீம் கோர்ட ...

சென்னை புழல் கைதிகளிடம் 500 போலீசார் அதிரடி சோதனை!: பெருகும் கொலைகளை தடுக்க சிறைகளில் வேட்டை

Posted:

சிறைகளில் இருந்தே, வெளியில் நடக்கும், கொலைச் சம்பவங்களுக்கான திட்டங்கள் உருவாவதாக, தகவல் கிடைத்ததால், புழல் சிறையில், நேற்று போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.தமிழகத்தில், கூலிப் படையைக் கொண்டு நடத்தப்படும் கொலைச் சம்பவங்களுக்கான திட்டங்கள், சிறைக்குள் உருவாகுவதாகவும், மொபைல் போன்கள் மூலம், திட்டமிடப்படுவதாகவும், சிறைத் துறை ஏ.டி.ஜி.பி., திரிபாதிக்குத் தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, பெருகும் கொலைகளைத் தடுக்க, சிறைகளில் சோதனையிட அவர் உத்தரவிட்டார்.

புழலில் சோதனை :இந்நிலையில், சென்னை புழல் மத்திய சிறையில், வடக்கு மண்டல இணை ...

"டிவி' சேனல்களில் அக்டோபர் முதல் விளம்பர குறுக்கீடுகள் குறைகிறது

Posted:

புதுடில்லி:"டிவி' சேனல்களில், நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்க்க முடியாத வகையில், அடிக்கடி குறுக்கிடும் விளம்பரங்களை பார்த்து, வெறுப்படைத்த நேயர்கள், அக்டோபர் மாதம் முதல் நிம்மதி அடையும் வகையில், அதிரடி மாற்றம் வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு, 12 நிமிடங்கள் மட்டுமே விளம்பரங் களை இடம் பெறச் செய்ய வேண்டும், என்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.கோரிக்கை : "டிவி' மற்றும் ரேடியோவில், நிகழ்ச்சிகளுக்கு இடையே வரும், வர்த்தக விளம்பரங்கள், நிகழ்ச்சி தொடர்பான முன்னோட்ட விளம்பரங்கள் நேயர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இதையடுத்து, விளம்பரங்களை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™