Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ஜார்க்கண்ட்டில் பாதுகாப்பு படையுடன் மோதல்: 8 நக்சல்கள் சாவு

Posted: 27 Jun 2013 01:05 PM PDT

ஜார்க்கண்ட் மாநிலம் லத்தேகர் பகுதியில் பாதுகாப்பு படையுடன் நடைபெற்ற மோதலில் 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காங்கிரஸ் புதிய நிர்வாகிகளை நாளை சந்திக்கிறார் ராகுல்

Posted: 27 Jun 2013 01:05 PM PDT

காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளை முதன் முறையாக சனிக்கிழமை சந்தித்துப் பேசுகிறார். இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.

வங்கியில் கடன் வழங்க ஓய்வூதியர்கள் கோரிக்கை

Posted: 27 Jun 2013 01:03 PM PDT

ஓய்வூதியர்களின் குடும்பத் தேவைகளைக் கருத்தில் கொண்டு பாரத ஸ்டேட் வங்கியில் கடன் வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

வங்கி தொடங்க அஞ்சல் துறை விண்ணப்பம்

Posted: 27 Jun 2013 01:03 PM PDT

வங்கிச் சேவைகளை தொடங்குவதற்கான உரிமம் வழங்கக் கோரி அஞ்சல் துறை ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்துள்ளது.

தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ. 2.30 கோடி மானியம்

Posted: 27 Jun 2013 01:02 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்துக்கென ரூ. 2.30 கோடி மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் செ. மனோகரன் தெரிவித்தார்.

நெறிஞ்சிக்குடியில் மக்கள் தொடர்பு முகாம்

Posted: 27 Jun 2013 01:02 PM PDT

பொன்னமராவதி வட்டம், நெறிஞ்சிக்குடி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிலஅளவை பயிற்சி நிலையம் புதுக்கோட்டையில் தொடக்கம்

Posted: 27 Jun 2013 01:02 PM PDT

  தமிழகத்தின் லேண்ட் சர்வே படிப்புக்கென தனி பயிற்சி நிலையம் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

நகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்:புதுகையில் ஆர்ப்பாட்டம்

Posted: 27 Jun 2013 01:01 PM PDT

கும்பகோணம் நகராட்சியில் ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்து  தாக்கிய வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் நகராட்சி அனைத்துப்பணியாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலுப்பூரில் இன்று ஓட்டுநர் நல வாரிய புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

Posted: 27 Jun 2013 01:01 PM PDT

புதுக்கோட்டை மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியத்துக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் இலுப்பூரில் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) நடைபெறுகிறது.இது குறித்து தொழிலாளர் அலுவலர்(சமூகப்பாதுகாப்புத் திட்டம்) எஸ். சேகர் வெளியிட்ட தகவல்:தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியத்தில் தொழிலாளர்களைப் பதிவு செய்யும் முகாம் இலுப்பூர் பேரூராட்சி அலுவலகத்தில்

வருமான வரி விவரம் தாக்கல் செய்யாத 12 லட்சம் பேருக்கு நினைவூட்டல் கடிதம்

Posted: 27 Jun 2013 01:00 PM PDT

நாடு முழுவதும் வருமான வரி விவரம் தாக்கல் செய்யாத 12 லட்சம் பேருக்கு வருமானவரித் துறை சார்பில் நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Posted: 27 Jun 2013 01:00 PM PDT

பட்டுக்கோட்டை ஒன்றியம், பொன்னவராயன்கோட்டை ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

காங்கிரஸ் காரிய கமிட்டி நிரந்தர அழைப்பாளராக ஷிண்டே நியமனம்

Posted: 27 Jun 2013 01:00 PM PDT

மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேவை காங்கிரஸ் காரிய கமிட்டி நிரந்தர அழைப்பாளராக அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

Posted: 27 Jun 2013 12:59 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், கள்ளப்பெரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது.

புகையிலை பொருள்கள் தடை குறித்த விழிப்புணர்வு

Posted: 27 Jun 2013 12:59 PM PDT

தஞ்சாவூரில் பான் மசாலா, குட்கா, புகையிலை பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்த விழிப்பணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பேச்சுவார்த்தையால் சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது

Posted: 27 Jun 2013 12:59 PM PDT

பேராவூரணி அருகேயுள்ள ஆவணம் பெரியநாயகிபுரத்தில் ஜூலை 1 -ம் தேதி  நடைபெறுவதாக அறிவித்திருந்த சாலை மறியல், அமைதி பேச்சுவார்த்தையால் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இன்டர்நெட் நிறுவனங்களுக்கு எதிரான மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Posted: 27 Jun 2013 12:59 PM PDT

அமெரிக்க உளவு அமைப்புக்கு தகவல்களை அளித்த விவகாரத்தில் இன்டர்நெட் நிறுவனங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்துவிட்டது.

800 சி.டி.கள் பறிமுதல்:13 பேர் கைது

Posted: 27 Jun 2013 12:59 PM PDT

: தஞ்சாவூரில் புதன்கிழமை இரவு போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ஏறத்தாழ 800 புதுப்பட சிடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கொன்றைக்காடு அரசுப் பள்ளியில் போதை பொருள் எதிர்ப்பு கருத்தரங்கம்

Posted: 27 Jun 2013 12:58 PM PDT

பேராவூரணி அருகேயுள்ள கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, போதை பொருள்  ஒழிப்பு மற்றும் போதை மருந்து கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்  புதன்கிழமை நடைபெற்றது.

"பேராவூரணி அரசுக் கல்லூரியில் சேர ஜூலை 1 முதல் விண்ணப்பம் விநியோகம்'

Posted: 27 Jun 2013 12:58 PM PDT

: பேராவூரணியில் அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜூலை 1 முதல் விநியோகிக்கப்பட்டு ஜூலை 25-ல் வகுப்புகள் தொடங்கும் என்றார் திருச்சி மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குநர் கே. வீரமணி.

சத்தீஸ்கர் தாக்குதல்: மாவோயிஸ்டுகளிடம் என்ஐஏ விசாரணை

Posted: 27 Jun 2013 12:58 PM PDT

சத்தீஸ்கரில் காங்கிரஸ் தலைவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மாவோயிஸ்டுகளிடம் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

நகராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 27 Jun 2013 12:57 PM PDT

கும்பகோணத்தில் நகராட்சிப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியோரைக் கைது செய்ய வலியுறுத்தி, மயிலாடுதுறையில் அனைத்து நகராட்சிப் பணியாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளியில் பெற்றோர் சந்திப்பு இயக்கம்

Posted: 27 Jun 2013 12:57 PM PDT

நாகை கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெற்றோர் சந்திப்பு இயக்கம் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

வாக்குச் சாவடி இடமாற்றத்துக்கு ஒப்புதல்

Posted: 27 Jun 2013 12:57 PM PDT

காரைக்காலில் தனியார் இடங்களில் இருந்த வாக்குச் சாவடிகளை அரசு இடத்துக்கு மாற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.

கொலை வழக்கில் இருவர் கைது

Posted: 27 Jun 2013 12:56 PM PDT

திருநள்ளாறு அருகே சாராயக் கடை காசாளர் கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதி அத்திப்படுகை சாராயக்கடையில் காசாளராகப் பணியாற்றி

பள்ளிகளில் இன்றுமுதல் புத்தகங்கள் விநியோகம்

Posted: 27 Jun 2013 12:56 PM PDT

காரைக்காலில் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) முதல் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படுமென கல்வித் துறை அதிகாரி தெரிவித்தார். கடந்த 1-ம் தேதி பள்ளிகள் திறந்த நிலையில் மாணவர்களின் கைக்கு பா

விநோதினி கொலை: அரசு தரப்பு சாட்சி விசாரணை முடிவு 

Posted: 27 Jun 2013 12:56 PM PDT

அமில வீச்சால் உயிரிழந்த விநோதினி கொலை வழக்கு தொடர்பாக அரசு தரப்பு சாட்சி விசாரணை வியாழக்கிழமை முடிந்தது.

ஜூலை 5-ல் எரிவாயு  குறைதீர் கூட்டம்

Posted: 27 Jun 2013 12:55 PM PDT

நாகை மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், ஆட்சியரகத்தில் ஜூலை 5-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்.

நாகர்கோவில்

Posted: 27 Jun 2013 12:54 PM PDT

திருச்செந்தூர்

Posted: 27 Jun 2013 12:54 PM PDT

மணிப்பாலில் பலாத்காரம்: இருவர் கைது

Posted: 27 Jun 2013 12:54 PM PDT

கர்நாடக மாநிலம், மணிப்பால் பல்கலைக்கழக நகரில் மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சிக்கிமில் நிலச்சரிவு: 250 சுற்றுலா பயணிகளை மீட்டது ராணுவம்

Posted: 27 Jun 2013 12:53 PM PDT

சிக்கிம் மாநிலத்தில் சீனாவின் எல்லையை ஒட்டியுள்ள நாதுலா பகுதியில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 250 சுற்றுலா பயணிகளை ராணுவம் பத்திரமாக மீட்டது.

உத்தரகண்ட்: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோருக்கு அரசு மரியாதை

Posted: 27 Jun 2013 12:52 PM PDT

உத்தரகண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 20 பேருக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸை ஆட்சியிலிருந்து அகற்ற எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்

Posted: 27 Jun 2013 12:50 PM PDT

மத்தியில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டாக இணைந்து பாடுபட வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தி உள்ளார்.

தொற்று நோய் பரவும் அபாயம்: உத்தரகண்டில் சடலங்களை எரிக்கும் பணி தொடக்கம்

Posted: 27 Jun 2013 12:48 PM PDT

உத்தரகண்டில் கடும் மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் உயிரிழந்தோரின் சடலங்கள் மூலம் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதால் அவற்றை எரிக்கும் பணி தொடங்கியுள்ளது.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம்

Posted: 27 Jun 2013 12:48 PM PDT

உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் அளிக்கப்படும் என்று மத்தியப் பிரதேச அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது அமர்நாத் யாத்திரை

Posted: 27 Jun 2013 12:47 PM PDT

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பனிலிங்கத்தை தரிசிக்க அமர்நாத் யாத்திரை பலத்த பாதுகாப்புடன் வியாழக்கிழமை தொடங்கியது.

ரூபாயின் மதிப்பு அதிகரித்தது

Posted: 27 Jun 2013 12:45 PM PDT

செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு 32 காசுகள் அதிகரித்து வியாழக்கிழமை மாலையில் 60.20 என்ற அளவில் இருந்தது.

டகாஹாமா அணு உலையை செயல்படுத்த எதிர்ப்பு

Posted: 27 Jun 2013 12:40 PM PDT

ஜப்பானின் டகாஹாமா பகுதியில் உள்ள அணு உலையை செயல்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு அமைப்பினர் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர்.

சீனா, ரஷியா மீது அமெரிக்கா அதிருப்தி

Posted: 27 Jun 2013 12:39 PM PDT

தாங்கள் தேடி வரும் எட்வர்ட் ஸ்னோடென்னை தங்களிடம் ஒப்படைக்காத சீனா, ரஷியா ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா அதிருப்தியில் உள்ளது.

அரசியல் தஞ்சம்: ஸ்னோடென் கோரிக்கை பரிசீலிக்கப்படும்: ஈக்வடார்

Posted: 27 Jun 2013 12:39 PM PDT

ஈக்வடாரில் அரசியல் தஞ்சம் கேட்டுள்ள அமெரிக்க உளவு அமைப்பின் முன்னாள் பணியாளர் எட்வர்ட் ஸ்னோடெனின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மீண்டும் மங்கோலியா அதிபரானார் எல்பெக்டோர்ஜ்

Posted: 27 Jun 2013 12:38 PM PDT

மங்கோலியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வென்று இரண்டாவது முறையாக அதிபரானார் டசாகியா எல்பெக்டோர்ஜ்.

மண்டேலா இறந்ததாக கூறிய அமைச்சர் மன்னிப்பு கோரினார்

Posted: 27 Jun 2013 12:37 PM PDT

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா இறந்து விட்டதாக தவறான தகவல் அளித்த ஆஸ்திரேலிய அமைச்சர் கேரி கிரே வியாழக்கிழமை மன்னிப்பு கோரியுள்ளார்.

உளவுத் துறை கேட்ட தகவல்களை வெளியிட அனுமதி கோரி மைக்ரோசாஃப்ட் மனு

Posted: 27 Jun 2013 12:34 PM PDT

அமெரிக்க உளவு அமைப்பு கேட்ட விவரங்களை வெளியிட அனுமதி கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.

எல்லைப் பிரச்னை: இந்தியா - சீனா இன்று பேச்சு வார்த்தை

Posted: 27 Jun 2013 12:32 PM PDT

இந்தியா - சீனா எல்லைப் பிரச்னை தொடர்பாக பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை 16-வது சுற்றுப் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

2ஆவது முறையாக ஆஸ்திரேலிய பிரதமரானார் கெவின் ரூட்

Posted: 27 Jun 2013 12:32 PM PDT

ஆஸ்திரேலியாவின் பிரதமராக கெவின் ரூட் 2ஆவது முறையாக வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

போதைப்பொருள் கடத்தல் வழக்கு:தில்லி மாணவருக்கு 35 ஆண்டு சிறை

Posted: 27 Jun 2013 12:31 PM PDT

மும்பையில் இருந்து நெதர்லாந்துக்கு 2 கிலோ ஹெராயின் பார்சலை அனுப்ப முயன்ற போது பிடிபட்ட தில்லியைச் சேர்ந்த மாணவருக்கு 35 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, போதைப்பொருள் குற்றங்களை விசாரிக்கும் மும்பை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நான்கு புதிய மாடல் கார்: ஹோண்டா திட்டம்

Posted: 27 Jun 2013 12:31 PM PDT

நான்கு புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்த ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஜப்பான் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் நொய்டாவில் 150 ஏக்கரில் ஆலை அமைத்து பிரியோ, அமேஸ், ஹோண்டா செடான் சிட்டி, செடான் அக்கார்ட் உள்ளிட்ட கார்களைத் தயாரிக்கிறது.

பாலியல் வழக்கு: இளைஞர் விடுதலை

Posted: 27 Jun 2013 12:31 PM PDT

பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தில்லியைச் சேர்ந்த இளைஞர் அமீத் வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.

15 வயது சிறுமி பலாத்காரம்: இரு இளைஞர்கள் கைது

Posted: 27 Jun 2013 12:30 PM PDT

15 வயது சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பலமுறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக ஹரியாணாவைச் சேர்ந்த இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். இது குறித்து, தில்லி போலீஸார் வியாழக்கிழமை கூறியதாவது:  

பங்குச் சந்தையில் 324 புள்ளிகள் ஏற்றம்

Posted: 27 Jun 2013 12:30 PM PDT

ரூபாய் மதிப்பு வியாழக்கிழமை சற்றே உயர்ந்ததை தொடர்ந்து மும்பை பங்குச் சந்தையில் 324 புள்ளிகள் அதிகரித்து சென்செக்ஸ் குறியீட்டெண் 18,875 என்ற அளவில் நிலைத்தது.

பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க வேண்டும்

Posted: 27 Jun 2013 12:30 PM PDT

நாட்டின் பாரம்பரிய சின்னங்கள் மற்றும் கட்டடக்கலைக்கு உதாரணமாக உள்ள சொத்துகளைப் பாதுகாக்க அனைத்து முயற்சியும் மேற்கொள்ள வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தி உள்ளார்.

தெற்கு தில்லி மாநகராட்சியில் "பருவமழை அவசரகாலத் திட்டம்'

Posted: 27 Jun 2013 12:30 PM PDT

தெற்கு தில்லி மாநகராட்சியில் பருவமழையால் ஏற்படும் வெள்ளபாதிப்பு தொடர்பான புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் அவசரகாலத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை விகிதம் கடும் உயர்வு

Posted: 27 Jun 2013 12:29 PM PDT

சென்ற நிதி ஆண்டில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை விகிதம் கடுமையாக உயர்ந்து 4.8 சதவீதத்தை தொட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கோஷ்டிப் பூசல் வேண்டாம்

Posted: 27 Jun 2013 12:29 PM PDT

கோஷ்டிப் பூசலின்றி தில்லி சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகும்படி காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு கட்சியின் மேலிடப்  பொறுப்பாளர் ஷகீல் அகமது அறிவுரை வழங்கினார்.

நெல் ஆதரவு விலையை உயர்த்தியது மத்திய அரசு

Posted: 27 Jun 2013 12:29 PM PDT

நெல் ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.60 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரூ.1310 வழங்கப்படும்.

"கட்டமைப்பு பணிகளை முடுக்கிவிட்டால் மட்டுமே வளர்ச்சி சாத்தியமாகும்'

Posted: 27 Jun 2013 12:29 PM PDT

கட்டமைப்புத் திட்டப் பணிகளை முழு வீச்சில் முடுக்கிவிட்டால்தான் தொழில்துறையில் வளர்ச்சி சாத்தியமாகும் என்று இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் என். ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.

ஏழை குழந்தைகளுக்கு இசாபூரில் உறைவிடப் பள்ளிநமது நிருபர்

Posted: 27 Jun 2013 12:28 PM PDT

ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு கீழ் உள்ளவர்களின் குழந்தைகள் படிக்க உறைவிடப் பள்ளி இசாபூரில் தொடங்கப்படும் என்று முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்தார்.

ஆட்டோவில் "லிஃப்ட்' கொடுப்பதாக கூறுகிறார்களா? ஜாக்கிரதை!

Posted: 27 Jun 2013 12:28 PM PDT

தில்லியில் பேருந்து, ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு ஆட்டோவில் லிஃப்ட் கொடுப்பதாகக் கூறுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது.

வன விலங்கு விற்பனை தடுப்பு: தில்லியில் தெற்காசிய நாடுகளின் கூட்டம்

Posted: 27 Jun 2013 12:28 PM PDT

வன விலங்கு விற்பனைக் குற்றங்களைத் தடுப்பதற்கான ஒருங்கிணைந்த திறன்களை வளர்க்கவும், செயல் திட்டங்களை வகுக்கவும் எட்டு தெற்காசிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் தில்லியில் ஜூலை 1 முதல் 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

உத்தரகண்ட்: புதுச்சேரி யாத்ரிகர்கள் 46 பேர் ஊர் திரும்பினர்

Posted: 27 Jun 2013 12:28 PM PDT

உத்தரகண்ட் மாநிலத்தில் சில நாள்களுக்கு முன்பு பெய்த கன மழை, வெள்ளத்தில் சிக்கித் தவித்த புதுச்சேரி யாத்ரிகர்கள் 46 பேர் டேராடூனில் இருந்து தில்லி வழியாக வியாழக்கிழமை நள்ளிரவு ஊர் திரும்பினர். அவர்களை உத்தரகண்டில் இருந்து அந்த மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் பன்னீர்செல்வம்

தில்லி கல்லூரிகளில் சேர்வதற்கு கடும் போட்டி!

Posted: 27 Jun 2013 12:27 PM PDT

தில்லி பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ள நான்காண்டு பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு பல்வேறு கல்லூரிகள் அறிவித்துள்ள கட் ஆஃப் மதிப்பெண் 100 சதவீதத்தை நெருங்கியுள்ளது. இதனால், விரும்பிய பாடங்களை எளிதில் மாணவர்கள் தேர்வு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது

மெட்ரோ ரயில் நிலையப் பராமரிப்பு பணி:சாலையில் விழுந்த கழிவுப்பொருள்

Posted: 27 Jun 2013 12:27 PM PDT

தாகூர் கார்டன் மெட்ரோ ரயில் நிலையப் பகுதி தூண் மீதான கழிவுநீர்க் கால்வாய் பராமரிப்புப் பணியின் போது அகற்றப்பட்ட கழிவுப்பொருளின் தளர்வான பகுதி (களிமண்) சாலையின் நடுவில் வியாழக்கிழமை பிற்பகலில் விழுந்தது.

மாற்றுத் திறனாளிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி: 6 இடங்களில் நாளை தொடக்கம்

Posted: 27 Jun 2013 12:27 PM PDT

மெட்ரோ ரயில்களில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகள் குறித்து சனி, ஞாயிறு தினங்களில் அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தில்லி மெட்ரோ திட்டமிட்டுள்ளது. இதன் தொடக்கமாக ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் தில்லியில் உள்ள 6 ரயில் நிலையங்களில் நடத்தப்பட

கிடைத்தது போதும்'!

Posted: 27 Jun 2013 12:26 PM PDT

அதிக கட் ஆஃப் மதிப்பெண்களுடன் முதல் பட்டியல் வெளியிடப்பட்டதால், கிடைத்த பாடத்தைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பல மாணவர்கள் தெரிவித்தனர்.

கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு: சாலையோரம் சுகாதாரச் சீர்கேடு

Posted: 27 Jun 2013 12:25 PM PDT

விழுப்புரம் பஸ் நிலையம் அருகே, சென்னை தேசிய நெடுஞ்சாலையோர வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் தேங்கி அப் பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.  விழுப்புரத்தில், சென்னை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள பஸ் நிலையத்தில் இருந்து

மக்கள் தொடர்பு முகாம் ஒத்திவைப்பு

Posted: 27 Jun 2013 12:25 PM PDT

சங்கராபுரம் வட்டம், புதுப்பாலப்பட்டு கிராமத்தில் ஜூன் 28-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற இருந்தது.

கிராம நிர்வாக அலுவலரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி

Posted: 27 Jun 2013 12:25 PM PDT

திருவக்கரை அருகே, பார் மண் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலரை லாரி ஏற்ற கொல்ல முயன்றதாக இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காரில் ரூ.46 லட்சம் திருட்டு

Posted: 27 Jun 2013 12:25 PM PDT

விழுப்புரத்தில், காரில் வைத்திருந்த ரூ.41 லட்சத்துக்கான காசோலை மற்றும் ரூ.5.78 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர் புதன்கிழமை திருடிச் சென்றார்.

உண்டு உறைவிடப் பள்ளி மாணவி திடீர் சாவு

Posted: 27 Jun 2013 12:24 PM PDT

: பொட்டியம் அரசு உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவி உடல்நிலை சரியில்லாமல் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை

Posted: 27 Jun 2013 12:24 PM PDT

விழுப்புரம் பகுதியில் மணல் கடத்தலை தடுக்க சுழற்சி முறையில் பணியாளர்களை நியமித்து கண்காணிப்பை தீவிரப்படுத்துவது என்று ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அரிமா நிர்வாகிகள் பதவியேற்பு

Posted: 27 Jun 2013 12:24 PM PDT

திண்டிவனம் நண்பர்கள் அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

தெரு விளக்குகள் உடைப்பு: 3 பேர் மீது வழக்கு

Posted: 27 Jun 2013 12:23 PM PDT

திண்டிவனம் அருகே, 30 தெரு விளக்குகளை உடைத்ததாக 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

3 ஊராட்சிகளின் குடிநீர் வசதிக்கு ரு.6 லட்சம்

Posted: 27 Jun 2013 12:23 PM PDT

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் 3 ஊராட்சிகளின் குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.6 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மரத்தில் வேன் மோதி டிரைவர் சாவு

Posted: 27 Jun 2013 12:23 PM PDT

திருக்கோவிலூர் அருகே, மீன் ஏற்றிச் சென்ற வேன், புளிய மரத்தில் மோதியதில் டிரைவர் புதன்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார்.

ரயில்வே பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனைக் குழு உறுப்பினர் தேர்வு

Posted: 27 Jun 2013 12:22 PM PDT

அகில இந்திய ரயில்வே பாதுகாப்பு கவுன்சில் தென்பிராந்திய ஆலோசனைக் குழு உறுப்பினராக கோ.

நகரில் தீடீர் மழை

Posted: 27 Jun 2013 12:22 PM PDT

கடலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை பரவலாக பெய்த மழையால் பூமி குளிர்ச்சியடைந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

காங்கிரஸ் பிரமுகர் மனைவி கழுத்தை நெரித்துக் கொலை

Posted: 27 Jun 2013 12:22 PM PDT

பண்ருட்டி அருகே வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சச் சென்ற காங்கிரஸ் பிரமுகர் மனைவி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது குறித்துப் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தேர்வில் தோல்வி அடைந்த மாணவிகளுக்கு கட்டாய டி.சி. கொடுக்க முயன்ற பள்ளி நிர்வாகம்

Posted: 27 Jun 2013 12:21 PM PDT

9-ஆம் வகுப்பில் தேர்வில் தோல்வி அடைந்த மாணவிகளுக்குக் கட்டயமாக டி.சி. கொடுக்க பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட முயற்சி, கல்வி அதிகாரிகளின் தலையீட்டால் தடுக்கப்பட்டது.

ஜூலை 3 முதல் தொழில்நுட்பக் கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வு

Posted: 27 Jun 2013 12:21 PM PDT

சிதம்பரம் அண்ணாமலைநகர் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டயப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3, 4 மற்றும் 5 தேதிகளில் நடைபெற உள்ளது என கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஏ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அரசு கலைக்கல்லூரியில் கலந்தாய்வு தொடக்கம்

Posted: 27 Jun 2013 12:20 PM PDT

திருத்தணி அரசு கலைக்கல்லூரியில் நடப்பு ஆண்டுக்கான (2013-14) முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.

மானியத்துடன் கூடிய சொட்டு நீர் பாசனம்:விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

Posted: 27 Jun 2013 12:20 PM PDT

: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் மானியத்துடன் கூடிய சொட்டு நீர் பாசனம் அமைக்க முன் வர வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூறினார். தோட்டக்கலைத் துறையின் சார்பில் தேசிய நுண்ணீர்ப் பாசன இயக்கக் கருத்தரங்கம் புதன்கி

கும்மிடிப்பூண்டியில் போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய வலியுறுத்தல்

Posted: 27 Jun 2013 12:20 PM PDT

கும்மிடிப்பூண்டியில் போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

புழல் சிறைக் கைதி சாவு

Posted: 27 Jun 2013 12:20 PM PDT

வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புழல் சிறை விசாரணைக் கைதி புதன்கிழமை உயிரிழந்தார்.

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு:முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு

Posted: 27 Jun 2013 12:19 PM PDT

: திருத்தணியில் பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் நாகராஜ் முருகன் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுச்சேரி யாத்ரிகர்கள் 46 பேர் சொந்த ஊர் திரும்பினர்

Posted: 27 Jun 2013 12:19 PM PDT

உத்தரகண்ட் மாநிலத்தில் சில நாள்களுக்கு முன்பு பெய்த கன மழை, வெள்ளத்தில் சிக்கித் தவித்த புதுச்சேரி யாத்ரிகர்கள் 46 பேர் டேராடூனில் இருந்து தில்லி வழியாக வியாழக்கிழமை நள்ளிரவு ஊர் திரும்பினர். அவர்களை உத்தரகண்டில் இருந்து அந்த மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் புதுச்சேரிக்கு அழைத்துச் சென்றார்.

நாளை சுயதொழில் வாய்ப்பு பயிலரங்கம்

Posted: 27 Jun 2013 12:18 PM PDT

புதுச்சேரியில் சுயதொழில் வாய்ப்பு பயிலரங்கம் வரும் சனிக்கிழமை (ஜூன் 29) தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.

மத்திய அரசு மீது தா.பாண்டியன் குற்றச்சாட்டு

Posted: 27 Jun 2013 12:18 PM PDT

இலங்கை தமிழர் விவகாரத்தில், அந்நாட்டு அரசு 13-வது சட்டத்திருத்தம் செய்து, அதனை உயிரற்ற தீர்மானமாக மாற்றியிருப்பதை தடுக்க, மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் குற்றம் சாட்டினார்.

வேலைவாங்கித் தருவதாக பெண்ணை வரவழைத்து நகை பறிப்பு

Posted: 27 Jun 2013 12:18 PM PDT

திருப்பூரில் வேலை வாங்கித்தருவதாக கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பெண்ணை, கோவைக்கு வரவழைத்து நகையை பறித்து சித்ரவதை செய்ததாக 3 பேர், வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

உதவித்தொகை உத்தரவு பெற ரூ.5 ஆயிரம் வசூல்

Posted: 27 Jun 2013 12:17 PM PDT

முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவை பெற்றுத்தர இடைத்தரகர்கள் ரூ.5 ஆயிரம் வரை வசூல் செய்வதாக, எ.மழவராயனூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் சார்ஆட்சியர் சுபோத்குமாரிடம் மக்கள் புகார் தெரிவித்தனர்.

"தானே' வீடுகள் பயனாளிகள் பட்டியலை அளிக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

Posted: 27 Jun 2013 12:17 PM PDT

தானே வீடுகள் திட்ட பயனாளிகள் எண்ணிக்கை குறித்த விவரங்களை அளிக்கவேண்டும் என ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டி: மதுரை மாவட்டம் முதலிடம்

Posted: 27 Jun 2013 12:16 PM PDT

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு கலை விளையாட்டு கல்வி அறக்கட்டளை மற்றும் ஒருங்கிணைந்த கல்வி மேம்பாட்டுக் குழு இணைந்து அண்மையில் நடத்திய மாநில அளவிலான

ஆதிதிராவிட நலத்துறை விடுதிகளில் ஜூலை 1-ல் மாணவர் சேர்க்கை தொடக்கம்

Posted: 27 Jun 2013 12:16 PM PDT

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 60 விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது.

என்.எல்.சி. பங்கு விற்பனையால் தொழில் அமைதிக்கு பாதிப்பு ஏற்படும்'

Posted: 27 Jun 2013 12:16 PM PDT

: என்எல்சி பங்குகளை விற்பனை செய்தால் தொழில் அமைதி பாதிக்கப்படும் என மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் தெரிவித்துள்ளது.

ஊராட்சித் தலைவர் மீது வழக்கு

Posted: 27 Jun 2013 12:16 PM PDT

நிலத்தில் விவசாயப் பணி செய்தவர்களை வேலை செய்யக் கூடாது என தடுத்ததாக பணிக்கன்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆரோக்கியதாஸ் மீது காடாம்புலியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி. இவருக்குச் சொந்தமான பண்ருட்டி ஒன்றியம்,

கபடி போட்டிக்கு வீரர்கள் தேர்வு: 150 பேர் பங்கேற்பு

Posted: 27 Jun 2013 12:15 PM PDT

தமிழ்நாடு மாநில கபடி கழகம் சார்பில் நடத்தப்படும் மாநில அளவிலான சப் ஜூனியர் போட்டியில் கடலூர் மாவட்டத்தின் சார்பில் விளையாடுவதற்கான வீரர்கள் தேர்வில் 150 பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு மாநில கபடி கழகத்தின் சார்பில் 16 வயதுக்குட்பட்டவருக்கான சப் ஜூனியர் ஆ

கல்வி அறக்கட்டளை பரிசளிப்பு விழா

Posted: 27 Jun 2013 12:15 PM PDT

சிதம்பரம் மாரியப்பா நகர் குறளகத்தில் பேராசிரியர் ரா.சாரங்கபாணி-தனலட்சுமி கல்வி அறக்கட்டளை 13-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

Posted: 27 Jun 2013 12:15 PM PDT

என்எல்சி ஊழியர் கொலை தொடர்பாக இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

போர்வெல் குழியில் விழுந்த மாடு மீட்பு

Posted: 27 Jun 2013 12:14 PM PDT

சிதம்பரம் நகரில் போர்வெல்லுக்குத் தோண்டப்பட்ட குழியில் விழுந்து சேற்றில் சிக்கித் தவித்த மாட்டை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். சிதம்பரம் சபாநாயகர் தெருவில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அரு

போதை எதிர்ப்பு நாள்: மாணவர்கள் பேரணி

Posted: 27 Jun 2013 12:14 PM PDT

உலக போதை தடுப்பு நாளை முன்னிட்டு, கடலூரில் மதுபோதை பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடந்தது.

100 நாள் வேலை திட்டத்தில் வங்கிகள் மூலம் பணம் பட்டுவாடா

Posted: 27 Jun 2013 12:13 PM PDT

: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் (100 நாள் வேலைத் திட்டம்) பயனாளிகள் அனைவருக்கும் வங்கிகள் மூலம் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்று விஸ்வநாதன் எம்.பி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™