Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சரத்யாதவ் விலகியதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பாதல் அமைப்பாளர் ஆகிறார்

Posted: 17 Jun 2013 11:13 PM PDT

பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்த முடிவு செய்து இருப்பதால் பாரதீய ஜனதா- ஐக்கிய ஜனதா தளம் இடையேயான கூட்டணி முறிந்து விட்டது. ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு பீகாரில் மட்டுமே செல்வாக்கு உள்ளது. அங்கு அந்த கட்சி ஆளுங் கட்சியாக இருக்கிறது. பாரதீய ஜனதா கூட்டணியில் சிவசேனா, அகாலி தளம், பி.ஜு. ஜனதா தளம் கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. சிவசேனாவுக்கு மராட்டியத்திலும், அகாலி தளம் கட்சிக்கு பஞ்சாப்பிலும் செல்வாக்கு பெற்று திகழ்கின்றன. பிஜு ஜனதா தளம் கட்சி ஒடிசாவில் ஆட்சி நடத்துகிறது. பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகள் இடம்பெற்ற அணி தேசிய ஜனநாயக கூட்டணியாக அமைக்கப்பட்டு வந்தது. அதன் அமைப்பாளராக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத்யாதவ் இருந்து வந்தார்.

சோலார் பேனல் மோசடி: கேரள தொழில் அதிபருக்கும், எனக்கும் தொடர்பு இல்லை - நடிகை பேட்டி

Posted: 17 Jun 2013 11:09 PM PDT

கேரளாவில் சோலார் பேனல் அமைத்து தருவதாக பல கோடி மோசடி செய்ததாக சரிதா எஸ்.நாயர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் தலைமறைவானார். கோவையில் பதுங்கி இருந்த அவரை நேற்று கேரள சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் பெரும்பாவூர் கொண்டு செல்லப்பட்டார்.

உம்மன்சாண்டி பதவி விலக கோரி கேரள சட்டசபை நோக்கி பேரணி: போலீஸ் தடியடி

Posted: 17 Jun 2013 10:58 PM PDT

கேரள சட்டசபையில் நேற்று சோலார் பேனல் மோசடி விவகாரம் புயலை கிளப்பியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இந்த விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி உம்மன்சாண்டி பதவி விலக வேண்டும் என்றும், நீதி விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனை முதல்-மந்திரி உம்மன்சாண்டி ஏற்க மறுத்தார். இதனால் சபையில் கடும் அமளி நிலவியது. சபாநாயகர் சபையை ஒத்திவைத்தார். இதையடுத்து சட்டசபையில் இருந்து வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன் கூறியதாவது:- சோலார் பேனல் மோசடியில் அற்ப காரணங்களை கூறி மக்களை திசை திருப்பும் முயற்சியில் முதல்-மந்திரி உம்மன்சாண்டி ஈடுபடுகிறார். இந்த விவகாரத்தில் உண்மைகள் மறைக்கப்படுகிறது. அதை கண்டுபிடிக்க நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். நியாயமான விசாரணை நடக்க

உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கி 60 ஆயிரம் பக்தர்கள் தவிப்பு: மீட்க ராணுவம் விரைந்தது

Posted: 17 Jun 2013 10:02 PM PDT

வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம், டெல்லி, அரியானா ஆகிய மாநிலங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக கங்கை, யமுனா நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து

பலத்த மழை எதிரொலி: யமுனை ஆற்றில் அபாய அளவை கடந்து வெள்ளம் பாய்கிறது

Posted: 17 Jun 2013 10:01 PM PDT

வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்துவருகிறது. ஹரியானாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக யமுனை நதியில், அபாய கட்ட அளவையும் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஹரியானா, புதுடெல்லி, உத்தர்காண்ட் என இந்தியாவின் வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள், வாகனங்கள் என வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த நிலையில், ஹரியானாவில் ஹத்னிகுன்ட் நீர்தேக்கத்தில் இருந்து 8 லட்சம் கன அடி நீர் யமுனையில் திறந்துவிடப்பட்டதை அடுத்து யமுனை

திருவனந்தபுரத்தில் கனமழை: 40 வீடுகள் இடிந்தன

Posted: 17 Jun 2013 08:54 PM PDT

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் திருவனந்தபுரம், கொல்லம், கண்ணூர் உள்பட பல மாவட்டங்களில் வெள்ளச்சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்று திருவனந்தபுரத்தில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் அங்கு 40 வீடுகள் ஒரே நாளில் இடிந்து விழுந்தது. திருவனந்தபுரம் அருகே உள்ள வேம்பாயம் பகுதியில் 4 வீடுகளும், தேரூர் கடை பகுதியில் 6 வீடுகளும் இடிந்தன. இதுவரை திருவனந்தபுரத்தில் மட்டும் 118 வீடுகள் மழையால் இடிந்து உள்ளன. சிறையின்கீழ், தேரூர்

மனைவியின் ஆபாச படங்களை இன்டர்நெட்டில் பரப்பிய வாலிபர் கைது

Posted: 17 Jun 2013 05:19 PM PDT

பெங்களூரை சேர்ந்த நந்தகுமார் என்ற வாலிபர், ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த இளம்பெண்ணை இன்டர்நெட் மூலம் 'சாட்' செய்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணம் முடிந்த பிறகு தனது கணவனுக்கு ஏற்கனவே மனைவியும் ஒரு மகனும் இருப்பதை அறிந்த அந்த பெண்

மேற்கு வங்கம்: கள்ளச் சாராயம் குடித்த 8 பேர் பலி - 15 பேர் கவலைக்கிடம்

Posted: 17 Jun 2013 05:00 PM PDT

மேற்கு வங்க மாநிலம், தெற்கு 24வது பர்கானா மாவட்டத்தின் பிஷ்னுபூர் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் பலியாகினர். ரஸ்காலி கிராமத்தை சேர்ந்த சுமார் 20 பேர் இரு தினங்களுக்கு முன்னர் ஓர் மது விருந்தில் கலந்துக்கொண்டு

தேசிய ஜனநாயக கூட்டணியை உடைத்ததுபோல் பா.ஜ.க.வையும் மோடி உடைத்து விடுவார்: திக்விஜய் சிங்

Posted: 17 Jun 2013 04:45 PM PDT

மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கூறியதாவது:- தனக்கு சோறூட்டிய கையையே கடித்து பதம் பார்ப்பதில் நரேந்திர மோடி கை தேர்ந்தவர்

வட மாநிலங்களில் கன மழை : யமுனை நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் - டெல்லி தப்புமா?

Posted: 17 Jun 2013 04:09 PM PDT

வட மாநிலங்களில் சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு வட மாநிலங்களில் இதுவரை 60 பேர் பலியாகியுள்ளனர். அரியானா மாநிலத்திலும் பல மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஹத்னிகுண்ட் ஆற்றில் வெள்ளம்

புனே: தறிகெட்டு ஓடிய போலீஸ் டி.எஸ்.பி.-யின் கார் மோதி 5 பேர் பலி

Posted: 17 Jun 2013 03:21 PM PDT

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்ட போலீஸ் டி.எஸ்.பி.யாக பணியாற்றுபவர் தினகர் மகாஜன். இவர் நேற்று தனது குடும்பத்தாருடன் காரில் புனே நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். மாலை 4.30 மணியளவில் ஷிக்ராபூர் அருகே உள்ள கொந்தாபுரி அருகே வந்தபோது தினகர் மகாஜனின்

சோனியா காந்தி உத்தரவிட்டால் துடைப்பம் பிடித்து பெருக்கவும் தயார் : மத்திய மந்திரியின் சர்ச்சை பேட்டி

Posted: 17 Jun 2013 03:00 PM PDT

சதீஸ்கரில் இயங்கி வரும் மாவோயிஸ்ட்கள் கடந்த மாதம் நடத்திய தாக்குதலில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் நந்த் குமார் பட்டேல் உள்பட 29 பேர் பலியாகினர். படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய மந்திரி வி.சி.சுக்லா கடத்ந வாரம் மரணமடைந்தார்

மும்பை கடலில் இரண்டாக முறிந்த சரக்கு கப்பல் - 26 பேர் உயிருடன் மீட்பு

Posted: 17 Jun 2013 11:30 AM PDT

சிங்கப்பூரை சேர்ந்த 316 மீட்டர் நீள சரக்கு கப்பல் சவுதி அரேபியாவில் இருந்து 4 ஆயிரத்து 500 கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு அரபிக் கடலில் பயணித்துக் கொண்டிருந்தது. மும்பை கடற்பகுதியில் இருந்து 840 கடல் மைல் தூரத்தில் வந்த போது திடீரென்று நடுப்பகுதியில்

அசாம்: அரசு ரத்த வங்கியின் மெத்தனத்தால் எய்ட்ஸ் கிருமித் தொற்று ஏற்பட்ட 4 பேருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

Posted: 17 Jun 2013 11:17 AM PDT

அசாம் மாநிலம், டர்ரங் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உடல்நலக்குறைவுக்கான காரணத்தை அறிந்துக் கொள்வதற்காக ரத்த பரிசோதனை செய்து பார்த்தார். அப்போது தனது ரத்தத்தில் எய்ட்ஸ் நோய்க்கு காரணமான 'எச்.ஐ.வி. பாசிட்டிவ்' நோய்த் தொற்று இருப்பதை அறிந்து திடுக்கிட்டார்

அத்வானிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் பா.ஜனதாவுடன் மீண்டும் கூட்டணி: சரத் யாதவ்

Posted: 17 Jun 2013 08:07 AM PDT

பாராளுமன்ற தேர்தலின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியை முன்னிறுத்த பாரதீய ஜனதா முயற்சி மேற்கொண்டது. இதற்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்த ஐக்கிய ஜனதா தளம், பா.ஜனதாவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது. நரேந்திர மோடியை முன்னிலை படுத்தியதால், 17 வருட கால

பீகாரில் 4 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களுடன் நிதீஷ் குமார் சந்திப்பு: ஆட்சியை தக்கவைக்க தீவிரம்

Posted: 17 Jun 2013 07:32 AM PDT

பாராளுமன்ற தேர்தலில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியை பாரதீய ஜனதா முன்னிறுத்தி வருவதால் அக்கட்சியுடனான உறவை ஐக்கிய ஜனதா தளம் நேற்று முறித்துக்கொண்டது. இதனையடுத்து பாரதீய ஜனதா ஆதரவுடன் பீகாரில் ஆட்சி செலுத்தி வந்த முதல் மந்திரி நிதீஷ் குமார், அக்கட்சியின் 11 அமைச்சர்களை நீக்கினார்.

சோலார் பேனல் மோசடி: முக்கிய குற்றவாளி கோவையில் கைது

Posted: 17 Jun 2013 07:19 AM PDT

கேரளாவில் சோலார் பேனல் அமைத்து தருவதாக பொதுமக்களிடம் பல லட்சம் மோசடி செய்ததாக கொட்டாரக்கரையைச் சேர்ந்த பிஜு ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சரிதா எஸ். நாயர் ஆகியோர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சரிதா எஸ். நாயரை கைது செய்தனர். அவரது கணவர் பிஜு

ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தலைமை ஏற்க ராகுலுக்கு தகுதி உள்ளது: மன்மோகன் சிங்

Posted: 17 Jun 2013 06:55 AM PDT

மத்திய மந்திரிசபை மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- ஐக்கிய முற்போக்கு கூட்டணி 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுப்பார்கள்.

இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி

Posted: 17 Jun 2013 06:27 AM PDT

இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்படுவதால் ஏராளமானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். உத்தரகாண்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் ஏராளமானோர் பலியாகி உள்ளனர்.

மத்திய அமைச்சரவை மாற்றம்: சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட 8 பேர் பதவியேற்றனர்

Posted: 17 Jun 2013 05:47 AM PDT

பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி தீவிரமாக தயாராக தொடங்கி விட்டது. தேர்தல் பணிகளை தொய்வின்றி செய்வதற்காக காங்கிரஸ் நிர்வாகக் குழுவை நேற்று மாற்றி அமைத்தனர். 42 பேர் காங்கிரஸ் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருந்த ஜனார்த்தன் திவேதி நீக்கப்பட்டு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™