மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கேரளாவில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி: மேலும் 14 ஆயிரம் பேர் பாதிப்பு
- ஐ.பி.எல்.-ஐ பயன்படுத்தி 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம்: பாகிஸ்தானின் சதி அம்பலம்
- இமாச்சலபிரதேசத்தில் அமெரிக்க பெண் கற்பழிப்பு:லாரி டிரைவரை போலீஸ் தேடுகிறது
- பயணத்தின் போது டிரைவர் மாரடைப்பால் மரணம்: 19 மாணவர்கள் உயிர் தப்பினர்
- தற்கொலை செய்த நடிகை ஜியாகானின் காதலன் கைதாவாரா?
- கட்சியிலும் நாட்டிலும் செல்வாக்கு மிக்கவர் மோடி: அருண் ஜெட்லி
- முதல் மந்திரிகள் மாநாடு: ஜெயலலிதா, மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை
- அரியவகை புற்றுநோய்க்கட்டி நீக்கம்: கொல்கத்தா மருத்துவர்கள் சாதனை
- பெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை
- எம்மார் நிறுவனம் விதிமுறைகளை மீறியதாக அமலாக்கப் பிரிவு குற்றச்சாட்டு
- அதிக விலை பெற்றதில் இரண்டாவது இடத்தில் இருக்கும் வொர்லி ஃபிளாட்
- உணவு பாதுகாப்பு மசோதாவுக்காக அவசர சட்டம்: 2 நாளில் பிறப்பிக்க மத்திய அரசு முடிவு
- மாற்றுத் திறனாளிகளுக்காக ஓர் கலைக்கழகத்தை உருவாக்க விரும்புகிறேன்: எவரெஸ்ட் மங்கை அருணிமா பேட்டி
- விமானம் தாமதத்தால் வயதான தம்பதியர் அலைக்கழிப்பு: ஏர் இந்தியா நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு
- ஒடிசாவில் குடும்பத்தினர் 4 பேரை கோடாரியால் வெட்டிக்கொன்ற விவசாயியும் தற்கொலை
- பீகாரில் மின்னல் தாக்கி 9 பேர் பலி
- நக்சல் பாதிப்பு மாநிலங்களில் 2199 செல்போன் கோபுரங்கள்: அமைச்சரவை ஒப்புதல்
- அரசியல் கட்சிகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டுவர முடியாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
- என் மருமகனுடன் நான் தொடர்பில் இல்லை: சி.பி.ஐ. கேள்விக்கு பன்சால் பதில்
- மணாலிக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண் பாலியல் பலாத்காரம்
| கேரளாவில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி: மேலும் 14 ஆயிரம் பேர் பாதிப்பு Posted: 04 Jun 2013 11:07 PM PDT கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாகவும், குளிராலும் அங்கு டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. திருவனந்தபுரம், பத்தினம்திட்டை, கொல்லம், நெடும்பாச்சேரி பகுதிகளில் நோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதுவரை 14 ஆயிரம் பேருக்கு மேல் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2 வாரங்களில் மட்டும் 3 பெண்கள் உள்பட 5 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியானார்கள். நேற்று கொட்டாரக்கரை, பாலகுன்னிலைச் சேர்ந்த உஷா குமாரி (வயது 40) என்ற பெண்ணும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். |
| ஐ.பி.எல்.-ஐ பயன்படுத்தி 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம்: பாகிஸ்தானின் சதி அம்பலம் Posted: 04 Jun 2013 10:53 PM PDT ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் தொடர்பாக கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜீத் சண்டிலா உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணை மூலம் சூதாட்ட விவகாரத்தில் தினமும் புதிய தகவல்கள் வெளியானபடி உள்ளன. ஐ.பி.எல். போட்டிகளின்போது ஸ்பாட் பிக்சிங் நடந்ததில் தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் உள்ளிட்ட பல நிழல் உலக தாதாக்கள் பின்னணியில் இருந்து செயல்பட்டுள்ளனர் என்பதை டெல்லி போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிழல் உலக தாதாக்களுக்கும், கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜீத் சண்டிலா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதற்கான வலுவான |
| இமாச்சலபிரதேசத்தில் அமெரிக்க பெண் கற்பழிப்பு:லாரி டிரைவரை போலீஸ் தேடுகிறது Posted: 04 Jun 2013 10:52 PM PDT அமெரிக்காவைச் சேர்ந்த 4 இளம்பெண்கள் இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை அவர்கள் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள குளு குளு சுற்றுலாத்தலமான மனாலிக்கு சென்றனர். மனாலி அருகில் வசிஸ்தா எனும் சுற்றுலா பகுதி இருக்கிறது. அங்கு இயற்கையாகவே வரும் வெந்நீர் ஊற்றுகள் மிகவும் புகழ்பெற்றவை. அமெரிக்க பெண்கள் 4 பேரும் அங்கு குளிக்க சென்றனர். நீண்ட நேரம் அவர்கள் வெந்நீர் குளியலில் இருந்தனர். |
| பயணத்தின் போது டிரைவர் மாரடைப்பால் மரணம்: 19 மாணவர்கள் உயிர் தப்பினர் Posted: 04 Jun 2013 10:47 PM PDT கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சொரனூர் முதலியார் தெரு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 62). அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். வழக்கம் போல் நேற்று காலை பள்ளிக்கு குழந்தைகளை பஸ்சில் ஏற்றிச் சென்றார். பள்ளி முடிந்ததும் மாணவ-மாணவிகளை பஸ்சில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். வரும் வழியில் |
| தற்கொலை செய்த நடிகை ஜியாகானின் காதலன் கைதாவாரா? Posted: 04 Jun 2013 10:28 PM PDT நடிகை ஜியாகான் தற்கொலையில் காதலனான பிரபல நடிகையின் மகன் சிக்குகிறார். நிசப்த் இந்திப் படத்தில் நடிகர் அமிதாப்பச்சனுடன் ஜோடியாக நடித்த இளம் நடிகை ஜியாகான். இவர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு மும்பை ஜூகு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார். தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்த ஜியாகான் இருவரும் வெளியில் சென்று இருந்த போது வீட்டில் மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். |
| கட்சியிலும் நாட்டிலும் செல்வாக்கு மிக்கவர் மோடி: அருண் ஜெட்லி Posted: 04 Jun 2013 10:26 PM PDT பாரதீய ஜனதாவின் தேசிய செயற்குழு கூட்டம் இரண்டு நாட்களில் நடைபெற உள்ள நிலையில், அக்கட்சியில் யாரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது என்ற விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நரேந்திர மோடிக்கு கட்சியில் ஆதரவும் எதிர்ப்பும் உள்ளது. |
| முதல் மந்திரிகள் மாநாடு: ஜெயலலிதா, மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை Posted: 04 Jun 2013 08:55 PM PDT உள்நாட்டு பாதுகாப்பு குறித்த முதல்-மந்திரிகள் மாநாடு டெல்லியில் இன்று நடைபெறுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி இந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்குப் பதிலாக மாநில நிதி மந்திரி அமித் மித்ரா மாநாட்டில் கலந்து கொள்கிறார். மம்தா பானர்ஜி மாநாட்டில் கலந்து கொள்ளாதது ஏன்? என்பது குறித்தும், மந்திரி அமித் மித்ராவுடன் பங்கேற்க இருக்கும் மற்ற பிரதிநிதிகள் குறித்தும் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ந்தேதி நடைபெற்ற முதல்-மந்திரிகள் மாநாட்டிலும் மம்தா கலந்து |
| அரியவகை புற்றுநோய்க்கட்டி நீக்கம்: கொல்கத்தா மருத்துவர்கள் சாதனை Posted: 04 Jun 2013 08:30 PM PDT கொல்கத்தாவைச் சேர்ந்த இஸ்ரத்ஜஹான்(46) என்ற பெண்மணி, மூன்று வருடங்களாக வயிற்று வலி, வாந்தி, குடல் பிரச்சினைகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். சாதாரண வலி நிவாரணிகள் பலனளிக்காத நிலையில், மருத்துவரிடம் சென்றபோது, பரிசோதனையில், அவருக்கு குடல் இரைப்பையில் புற்றுநோய்க் கட்டி வளர்ச்சியடைந்திருப்பது தெரியவந்தது. |
| பெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை Posted: 04 Jun 2013 08:12 PM PDT ஹை-டெக் சிட்டி', 'சிலிக்கான் நகரம்', 'தகவல் தொழில்நுட்ப நகரம்', 'பூங்கா நகரம்' என்று பல்வேறு சிறப்பு பெயர்களை பெற்றுள்ள பெங்களூர் நகரில் சமீப காலமாக குற்ற செயல்களும் அதிகரித்து வருகின்றன. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, தற்கொலை உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்த நிலையில், இளம்பெண் ஒருவரை 4 ஆண்டுகளாக வீட்டில் சிறை வைத்து சித்ரவதை செய்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. பரிதாபத்துக்கு உரிய அந்த அபலைப் பெண்ணின் பெயர் ஹேமாவதி (வயது 30). பெங்களூர் மல்லேசுவரம் 16-வது கிராஸ் பகுதியை சேர்ந்த ரேணுகப்பா, புட்ட கவுரம்மா தம்பதிகளின் மகள். பி.காம். பட்டதாரி. |
| எம்மார் நிறுவனம் விதிமுறைகளை மீறியதாக அமலாக்கப் பிரிவு குற்றச்சாட்டு Posted: 04 Jun 2013 05:39 PM PDT ஐக்கிய அரபு குடியரசின் துபாய் நாட்டைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் எம்மார் நிறுவனம், ஒரு பொது கூட்டுப் பங்கு நிறுவனம் ஆகும். கட்டுமானத்துறையிலும், இடம் விற்பனையிலும் தனி முத்திரை பதித்துள்ள இந்த நிறுவனம், கல்வி, மருத்துவம், சில்லறை விற்பனைகளிலும் கால் பதித்துள்ளது |
| அதிக விலை பெற்றதில் இரண்டாவது இடத்தில் இருக்கும் வொர்லி ஃபிளாட் Posted: 04 Jun 2013 05:29 PM PDT உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை நிலவுகின்றது என்று நிபுனனர்கள் அறிக்கை விடுகின்றனர். அதன்விளைவாக, தொழில்களில் தேக்கநிலையும், கட்டுமானத் துறையில் விலை குறைவும் உள்ளதாக பத்திரிகைகள் தகவல்கள் வெளியிடுகின்றன |
| உணவு பாதுகாப்பு மசோதாவுக்காக அவசர சட்டம்: 2 நாளில் பிறப்பிக்க மத்திய அரசு முடிவு Posted: 04 Jun 2013 02:20 PM PDT உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுவதற்கு பதிலாக அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இன்னும் 2 நாட்களில் இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது |
| மாற்றுத் திறனாளிகளுக்காக ஓர் கலைக்கழகத்தை உருவாக்க விரும்புகிறேன்: எவரெஸ்ட் மங்கை அருணிமா பேட்டி Posted: 04 Jun 2013 01:20 PM PDT கைப்பந்து (வாலிபால்) போட்டிகளில் தேசிய அளவில் பங்கேற்ற இளம்பெண் ஒருவர் கடந்த 2011ம் ஆண்டு ரெயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்தார். அதே ரெயிலில் பயணித்த நகை பறிக்கும் கொள்ளையர்கள் அந்த பெண்ணிடம் இருந்து நகைகளை பறிக்க முயன்றனர். அவர்களை எதிர்த்து போராடியதால் ஓடும் ரெயிலில் |
| விமானம் தாமதத்தால் வயதான தம்பதியர் அலைக்கழிப்பு: ஏர் இந்தியா நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு Posted: 04 Jun 2013 09:48 AM PDT புதுடெல்லியில் வாழ்ந்துவரும் வயதான தம்பதியர் அசோக் பஜாஜ் மற்றும் பிம்லா ராணி. இவர்கள் கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி, லண்டனிலிருந்து டெல்லி வரும் ஏர் இந்தியா விமானத்தில் இந்தியா வருவதற்கு முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், அன்று அவர்கள் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான |
| ஒடிசாவில் குடும்பத்தினர் 4 பேரை கோடாரியால் வெட்டிக்கொன்ற விவசாயியும் தற்கொலை Posted: 04 Jun 2013 09:31 AM PDT ஒடிசா மாநிலம் கோஞ்சர் மாவட்ட கந்த பாரை கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீ கிருஷ்ணா மகந்தா. இவர் இன்று அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது மனைவி, மகள், மகன், தங்கை என நால்வரை கோடாரியால் வெட்டிக்கொன்றார். |
| பீகாரில் மின்னல் தாக்கி 9 பேர் பலி Posted: 04 Jun 2013 09:26 AM PDT பீகார் மாநிலம் அவுரங்காபாத், ரோடாஸ் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனத்த மழை பெய்தது. இதில் அவுரங்காபாத் மாவட்ட ராஜாபைகா கிராமத்தில் மின்னல் தாக்கி இரு சிறுமிகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இங்கு விஷ்ணும்பூர் கிராமத்தில் மின்னல் தாக்கியதில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். |
| நக்சல் பாதிப்பு மாநிலங்களில் 2199 செல்போன் கோபுரங்கள்: அமைச்சரவை ஒப்புதல் Posted: 04 Jun 2013 08:01 AM PDT டெல்லியில் இன்று பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குபடுத்தும் புதிய அமைப்பை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், உணவு பாதுகாப்பு சட்ட மசோதா பற்றி விவாதிக்கவில்லை எனத் தெரிகிறது. இக்கூட்டத்திற்குப் பிறகு நிதி மந்திரி சிதம்பரம் நிருபர்களிடம் |
| அரசியல் கட்சிகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டுவர முடியாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் Posted: 04 Jun 2013 07:25 AM PDT தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளை கொண்டுவரவேண்டும் என்று பொதுநல கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தன. அதனை விசாரித்த மத்திய தகவல் ஆணையம் அரசியல் கட்சிகள் அனைத்தும் தகவல் அறியும் சட்ட வரம்புக்குள் வரும் என்று தீர்ப்பு கூறியது. மேலும் கட்சிகளுக்கு நிதி அளித்தவர்கள், வேட்பாளர் தேர்வுகள் உள்ளிட்ட தகவல்களை மக்கள் பெறலாம் என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டு |
| என் மருமகனுடன் நான் தொடர்பில் இல்லை: சி.பி.ஐ. கேள்விக்கு பன்சால் பதில் Posted: 04 Jun 2013 07:10 AM PDT ரெயில்வே உயர் பதவிகளில் அதிகாரிகளை நியமிப்பதற்காக லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டையடுத்து முன்னாள் ரெயில்வே மந்திரி பவன்குமார் பன்சாலின் மருமகன் விஜய் சிங்லா கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, மந்திரி பதவியில் இருந்து பவன்குமார் பன்சால் விலகினார். மகேஷ் குமார் என்பவருக்கு பதவி உயர்வு வழங்கியது தொடர்பாக வினய் |
| மணாலிக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண் பாலியல் பலாத்காரம் Posted: 04 Jun 2013 05:31 AM PDT அமெரிக்காவைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர், இமாச்சல பிரதேச மாநிலம் மணாலிக்கு சுற்றுலா வந்திருந்தார். இன்று அதிகாலை அந்த பெண், அங்குள்ள நெடுஞ்சாலையின் அருகே பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு டிரக்கில் வந்த மூன்று பேர் அவருக்கு லிப்ட் கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்றனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |