மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- இமாச்சல பிரதேச வெள்ளச் சேதத்துக்கு ரூ.1000 கோடி நிதி: மத்திய அரசுக்கு வீர்பத்ரா சிங் கோரிக்கை
- தனித் தெலுங்கானா: காங். மந்திரிகள் கடும் எதிர்ப்பு
- மும்பை ஜெயிலில் அபுசலீம் மீது துப்பாக்கி சூடு: ஜெயில் அதிகாரி உள்பட 4 போலீசார் சஸ்பெண்டு
- தமிழ்நாட்டை சேர்ந்த பி.சதாசிவம், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமனம்
- உத்தரகாண்டில் தொற்று நோய் பரவுகிறது: மருத்துவக் குழுவை மத்திய அரசு அனுப்பியது
- பொது நுழைவுத் தேர்வு மதிப்பீடு தனியாரால் நிர்வகிக்கப்படுவது நிறுத்தப்படும்: ஐஐஎம் அறிவிப்பு
- காங். பொதுச்செயலாளர்களுடன் ராகுல்காந்தி இன்று ஆலோசனை
- எஸ்.எம்.எஸ். மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை: மல்லிகார்ஜுன கார்கே தொடங்கி வைத்தார்
- இளம்பெண் கற்பழித்து கொலை: 2 பேருக்கு தூக்கு தண்டனை-நாக்பூர் கோர்ட்டு தீர்ப்பு
- ஏழாவது சம்பள கமிஷனை அமைக்காவிட்டால் விரைவில் வேலை நிறுத்தம்: ரெயில்வே தொழிலாளர் சம்மேளனம் எச்சரிக்கை
- கணவன் இரண்டாவது திருமணம் செய்ததால் 4 குழந்தைகளைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண் கைது
- இந்திய ராணுவத்தில் முதன் முதலாக உயர் பதவி பெற்ற வீராங்கனை
- ராஜஸ்தான்: பிக்கானர் சிறை கலவரத்தில் 3 கைதிகளை கல்லால் அடித்துக் கொன்ற மன நோயாளி
- தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்க அவசர சட்டம்: மத்திய அரசு பரிசீலனை
- அபு சலீம் எங்களிடமிருந்து தப்பவே முடியாது: சோட்டா ஷகீல் மிரட்டல்
- சூரிய ஒளி மின் உற்பத்தியில் முறைகேடு: கேரள முதல் மந்திரியின் முன்னாள் நேர்முக உதவியாளர் ‘திடீர்’ கைது
- பன்றிக் காய்ச்சலுக்கு 6 மாதங்களில் 600 பேர் பலி: மத்திய அரசு அறிவிப்பு
- கெயில் அதிகாரியின் வங்கி லாக்கரில் இருந்து 18 கிலோ தங்கம் பறிமுதல்: சி.பி.ஐ. நடவடிக்கை
- பெட்ரோல் விலை ரூ.1.82 உயர்வு: சென்னையில் ஒரு லிட்டர் ரூ.71.72
- பிரச்சாரத்திற்கு ரூ.8 கோடி செலவு செய்ததாக சர்ச்சையில் சிக்கிய முண்டே: தேர்தல் ஆணையம் கண்காணிப்பு
| இமாச்சல பிரதேச வெள்ளச் சேதத்துக்கு ரூ.1000 கோடி நிதி: மத்திய அரசுக்கு வீர்பத்ரா சிங் கோரிக்கை Posted: 28 Jun 2013 11:11 PM PDT உத்தரகாண்ட் மாநிலம் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக கடும் பாதிப்புக்குள்ளாகி இருகிறது. பெரும் உயிர் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இது போல் அதன் அண்டை மாநிலமான இமாச்சல பிரதேசத்திலும் பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. |
| தனித் தெலுங்கானா: காங். மந்திரிகள் கடும் எதிர்ப்பு Posted: 28 Jun 2013 10:53 PM PDT ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்க வேண்டும் என்று தெலுங்கான பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் காங்கிரஸ் தலைமைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ராஜசேகரரெட்டி மறைவுக்கு பிறகு ஆந்திராவில் காங்கிரசின் செல்வாக்கு சரிந்து வருகிறது. இதே நிலையில் பாராளுமன்ற தேர்தலை சந்தித்தால் அது கட்சிக்கு பெரும் |
| மும்பை ஜெயிலில் அபுசலீம் மீது துப்பாக்கி சூடு: ஜெயில் அதிகாரி உள்பட 4 போலீசார் சஸ்பெண்டு Posted: 28 Jun 2013 10:36 PM PDT மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக நிழல் உலக தாதா அபுசலீம் கைது செய்யப்பட்டு மும்பை தலோஜா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அதே ஜெயிலில் மற்றொரு வழக்கு தொடர்பாக தேவேந்திர ஜக்தீப் என்பவர் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவு அபுசலீமுக்கும், தேவேந்திர ஜக்தீப்புக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது தேவேந்திர ஜக்தீப் நாட்டு துப்பாக்கியால் |
| தமிழ்நாட்டை சேர்ந்த பி.சதாசிவம், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமனம் Posted: 28 Jun 2013 10:27 PM PDT தற்போது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நீதிபதி அல்டமாஸ் கபீர் இருந்து வருகிறார். வருகிற ஜூலை மாதம் 18-ந் தேதியுடன் அவர் ஓய்வு பெறுகிறார். அவருக்கு பதில் புதிய தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை மத்திய சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி பிராணப் முகர்ஜி நியமனம் செய்துள்ளார். தற்போது இவர் |
| உத்தரகாண்டில் தொற்று நோய் பரவுகிறது: மருத்துவக் குழுவை மத்திய அரசு அனுப்பியது Posted: 28 Jun 2013 09:35 PM PDT உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில தினங்களாக நடந்துவந்த மீட்புப் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. |
| பொது நுழைவுத் தேர்வு மதிப்பீடு தனியாரால் நிர்வகிக்கப்படுவது நிறுத்தப்படும்: ஐஐஎம் அறிவிப்பு Posted: 28 Jun 2013 08:43 PM PDT இந்தியாவின் நிர்வாகவியல் நிறுவனங்கள், ஒவ்வொரு ஆண்டும், பொது நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கின்றன. இந்த மதிப்பெண் பட்டியல் தனியார் நிறுவனம் ஒன்றால் நிர்வகிக்கப்படும். தர வரிசை அடிப்படையில் இந்த நிறுவனங்கள் மாணவர்களைத் தேர்ந்தெடுத்தது போக, மற்ற சில கல்லூரிகளும் இந்த மதிப்பெண்களைத் தங்களின் கல்லூரி சேர்க்கைக்கு உபயோகப்படுத்திக் கொள்ளும். |
| காங். பொதுச்செயலாளர்களுடன் ராகுல்காந்தி இன்று ஆலோசனை Posted: 28 Jun 2013 08:30 PM PDT பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு (2014) நடைபெறுவதை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியில் பொதுச்செயலாளர்கள், செயலாளர்கள் மற்றும் பிரசாரக்குழு நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சிக்கு புதிய ஊட்டம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், துணைத்தலைவர் ராகுல்காந்தி, முதல் முறையாக இன்று (சனிக்கிழமை) பொதுச்செயலாளர்கள் மற்றும் செயலாளர்களை சந்தித்து ஆலோசனை |
| எஸ்.எம்.எஸ். மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை: மல்லிகார்ஜுன கார்கே தொடங்கி வைத்தார் Posted: 28 Jun 2013 08:26 PM PDT முன்பு ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் எனில் கண்டிப்பாக ரெயில் நிலையம் சென்றுதான் ஆக வேண்டும். இதனை அடுத்து இணைய தளம் (ஆன் லைன்) மூலமாக முன்பதிவு செய்யும் முறை வந்தது. அடுத்த கட்டமாக தற்போது செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது. |
| இளம்பெண் கற்பழித்து கொலை: 2 பேருக்கு தூக்கு தண்டனை-நாக்பூர் கோர்ட்டு தீர்ப்பு Posted: 28 Jun 2013 06:03 PM PDT நாக்பூரில் இளம்பெண்ணை கடத்தி கற்பழித்து கொலை செய்த வழக்கில் கைதான 2 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் கல்மேஷ்வர் அருகே உள்ள லோனாரா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் கஞ்சன் மெஷ்ரம் (வயது 19). கடந்த 2005-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அமர்சிங் தாக்கூர், ராஜேஷ் காம்ப்ளே ஆகிய 2 பேர் சேர்ந்து கஞ்சன் |
| ஏழாவது சம்பள கமிஷனை அமைக்காவிட்டால் விரைவில் வேலை நிறுத்தம்: ரெயில்வே தொழிலாளர் சம்மேளனம் எச்சரிக்கை Posted: 28 Jun 2013 05:05 PM PDT ரெயில்வே தொழிலாளர்களின் நலனுக்காக போராடி வரும் தொழிற்சங்கங்களில் 10.26 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் சம்மேளனம் மிகப் பெரிய தொழிற்சங்கமாக கருதப்படுகிறது. நேற்று புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷிவ் கோபால் மிஷ்ரா கூறியதாவது:- |
| கணவன் இரண்டாவது திருமணம் செய்ததால் 4 குழந்தைகளைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண் கைது Posted: 28 Jun 2013 04:44 PM PDT குஜராத் மாநிலம், வடோடரா மாவட்டத்தில் உள்ள ஜெர் கிராமத்தை சேர்ந்தவர் கிஷன். திருமணமாகி 4 குழந்தைகளுக்கு தந்தையான இவர், சில தினங்களுக்கு முன்னர் இன்னொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார். |
| இந்திய ராணுவத்தில் முதன் முதலாக உயர் பதவி பெற்ற வீராங்கனை Posted: 28 Jun 2013 03:21 PM PDT இந்திய ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவிகளை வழங்க வேண்டும் என்று ராணுவ தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் அரிய முயற்சிகளை எடுத்து வருகிறார். இதன் முதல் கட்டமாக, மத்திய ராணுவ கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜன் பக்ஷிக்கு துணையாக (ஏ.டி.சி.) ராணுவ புலனாய்வு பிரிவு |
| ராஜஸ்தான்: பிக்கானர் சிறை கலவரத்தில் 3 கைதிகளை கல்லால் அடித்துக் கொன்ற மன நோயாளி Posted: 28 Jun 2013 02:31 PM PDT ராஜஸ்தான் மாநிலம், பிக்கானர் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 3 சிறை கைதிகள் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிக்கானர் சிறைச்சாலையில் ஆயிரக்கணக்கான விசாரணை கைதிகளும், தண்டனை கைதிகளும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். |
| Posted: 28 Jun 2013 01:38 PM PDT தகவல் பெறும் உரிமை சட்ட வரம்பில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிப்பதற்கான அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளையும் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண், தகவல் |
| அபு சலீம் எங்களிடமிருந்து தப்பவே முடியாது: சோட்டா ஷகீல் மிரட்டல் Posted: 28 Jun 2013 01:17 PM PDT மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவன் அபு சலீம். இவன் நிழல் உலக தாதா தாவூத் இபுராஹிம் கூட்டாளி ஆவான். இந்த குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட அபு சலீம் உலக நாடுகளில் தலைமறைவாக இருந்து வந்தான். கடந்த 2002-ம் ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டிலுள்ள லிஸ்பென் நகரில் நடிகை |
| Posted: 28 Jun 2013 12:54 PM PDT கேரள மாநிலத்தில் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக முதல் மந்திரி உம்மன் சாண்டி மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த முறைகேடு பற்றிய செய்தி வெளியான பின்னர் உம்மன் சாண்டியின் பெயரை பயன்படுத்தி ஆதாயம் அடைய முயன்ற சரிதா நாயர், பிஜு ராதா கிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். |
| பன்றிக் காய்ச்சலுக்கு 6 மாதங்களில் 600 பேர் பலி: மத்திய அரசு அறிவிப்பு Posted: 28 Jun 2013 11:45 AM PDT மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, ஜூன் 25-ம் தேதி வரை 4 ஆயிரத்து 825 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக டெல்லியில் மட்டும் ஆயிரத்து 507 பேர் பாதிக்கப்பட்டனர். |
| கெயில் அதிகாரியின் வங்கி லாக்கரில் இருந்து 18 கிலோ தங்கம் பறிமுதல்: சி.பி.ஐ. நடவடிக்கை Posted: 28 Jun 2013 09:37 AM PDT உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூர் பகுதியில் எரிவாயு குழாய் பதிப்பதற்காக, கெயில் நிறுவனம் சார்பில் விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு கையகப்பபடுத்தப்பட்டுள்ள நிலங்களின் உரிமையாளர்களிடம் கெயில் நிறுவனத்தின் ஒப்பந்த எழுத்தர் |
| பெட்ரோல் விலை ரூ.1.82 உயர்வு: சென்னையில் ஒரு லிட்டர் ரூ.71.72 Posted: 28 Jun 2013 09:05 AM PDT சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் விலையை மாதமிருமுறை மாற்றியமைக்க எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. இந்நிலையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்ததால் கச்சா எண்ணையின் இறக்குமதி செலவு அதிகரித்துள்ளது. |
| பிரச்சாரத்திற்கு ரூ.8 கோடி செலவு செய்ததாக சர்ச்சையில் சிக்கிய முண்டே: தேர்தல் ஆணையம் கண்காணிப்பு Posted: 28 Jun 2013 08:32 AM PDT பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கோபிநாத் முண்டே, கடந்த 2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது 8 கோடி ரூபாய் செலவு செய்ததாக பகிரங்கமாக தெரிவித்தார். வரையறுக்கப்பட்ட தொகையைவிட அதிக செலவு செய்ததாக அவர் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |