Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


விண்டோஸ் 1 முதல் விண்டோஸ் 8 வரை(முகதிரை)

Posted: 05 Jun 2013 12:25 PM PDT





இனி திருந்துமா இந்தியா?

Posted: 05 Jun 2013 12:19 PM PDT

ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் வசிக்கும் நண்பர் ஒருவர், சமீபத்தில் சென்னை வந்து இருந்தார். பெங்களூரு அவரது சொந்த ஊர். ஜெர்மனியில் குடியேறி 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அங்கு, "பென்ஸ்' மோட்டார் தொழிற்சாலையில், "பிட்டர்' ஆக வேலை செய்கிறார். உடைந்த தமிழில் பேசுவார். பிட்டராக இருந்தாலும் விபவரமானவர்; பல சப்ஜெக்ட்களிலும் ஞானம் உள்ளவர். அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, பல அரிய தகவல்கள் கிடைத்தன. அது: தம்பி... இப்போது இந்தியாவுலே பென்ஸ் கார் 45 லட்ச ரூபாய்க்கு கூட கிடைக்குது... ஆஹா ஜெர்மன் ...

முத்துக்கள் பத்து ! -- உபயோகமான தகவல்கள்...

Posted: 05 Jun 2013 12:16 PM PDT

உடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்

Posted: 05 Jun 2013 12:13 PM PDT

உடற்பயிற்சி வாழ்வில் முக்கியமான ஒன்று சமீபகலாமாக எனது உடல் கொஞ்சம் வெயிட் அதிகமாகிவிட்டதால் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் சாப்பாட்டைக்குறை உடற்பயிற்சி செய், மட்டன் சாப்பிடுவதை விட என ஏகப்பட்ட அறிவுரை. சரி உடற்பயிற்சி ஒரு 2 வருடங்களுக்கு முன்னால் செய்தது திருமணத்திற்கு அப்புறம் விட்டு விட்டேன் உடற்பயிற்சி செய்ய கொஞ்சம் அறிவுரை தேவை என நண்பர்களிடம் விசாரித்தபோது டாக்டர் முரளி அவர்கள் எழுதிய அற்புதமான இக்கட்டுரையை என் நண்பன் தனபால் எனக்கு பரிந்துறை செய்தார். எனக்கு மிகவும் உபயோகமான இத்தகவலை உங்களுக்கும் ...

இந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்!

Posted: 05 Jun 2013 12:05 PM PDT

ஊடகங்களில் இப்போது பேசப்படும் செய்தியாக இருப்பது, ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி தனக்கு முலைப்புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 70 சதவீதம் இருப்பதை மருத்துவச் சோதனைகளில் அறியவந்ததால் தனது இரு மார்பகங்களிலும் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார் என்பதுதான். (முலைப்புற்றுநோய் என்றால் ப்ரெஸ்ட் கேன்சர். மார்பகப் புற்றுநோய் என்றால் தொராசிக் கேன்சர்.) "மார்க்கெட் சரிவை' விரும்பாத எந்த ஒரு பிரபல நடிகையும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயங்கும் இந்த அறுவைச் சிகிச்சையை ஏஞ்சலினா ஜூலி உலகம் முழுவதற்கும் கொண்டு செல்லக் ...

பிறந்த ஒரு நாளுக்குள் இறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் ஓராண்டுக்கு 3,09,000

Posted: 05 Jun 2013 12:04 PM PDT

பிறந்த ஒரு நாளுக்குள் இறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் ஓராண்டுக்கு 3,09,000 ஆக உள்ளது என்கின்றது அன்னையர் தினத்தையொட்டி வெளியான ஓர் ஆய்வு அறிக்கை. உலக அளவில் பார்க்கும்போது, பிறந்த 24 மணி நேரத்தில் இறக்கும் குழந்தைகளில் 29% இந்தியாவில்தான் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஒரு தாய்க்கு, கருவுற்ற மூன்றாவது மாதம் முதலாகவே முறையான ஆலோசனை அளித்து, வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கருவளர்ச்சிக்குத் தேவையான சத்துணவு வழங்கும் திட்டம் எல்லா மாநிலங்களிலும் பல வகையாக, பல பெயர்களில் அறிமுகம் ...

உலகின் மிகப்பெரிய டெக்னாலஜி ஹோட்டல்கள்!!!

Posted: 05 Jun 2013 11:50 AM PDT



தி டார்ச், தோஹா இதை பூலோக சொர்க்கம் எனலாம், இங்கு ஐ போடின் பட்டனை அழுத்தினால் போதும் படுக்கை உங்களை தேடி வரும்


கத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்!

Posted: 05 Jun 2013 11:49 AM PDT

சென்னை: கோயம்பேடு - பரங்கிமலை இடையே, 12 கி.மீ., தூரம் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணியில், 11 கி.மீ., தூரம் பாதை அமைக்கப்பட்டுவிட்டது. கத்திப்பாரா அருகே, ஜி.எஸ்.டி., சாலை, 100 அடி சாலை இடையே, தூண்களின்றி, 75 மீ., நீளத்திற்கு, மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல் கட்டமாக, கோயம்பேடு - பரங்கிமலை இடையே, வரும், 2014, ஜனவரியில், ரயில் போக்குவரத்து துவங்கப்பட உள்ளது. இதற்காக, இப்பகுதிகளுக்கு இடையே, மெட்ரோ ரயில் பாதை பணி விரைவாக நடந்து வருகிறது. இந்த திட்டத்தில், ...

ரூ.1000 கோடி மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீஸ் கைது செய்தது

Posted: 05 Jun 2013 11:48 AM PDT

பலபேரிடம் பணத்தை சுருட்டிய பவர் பணச்சுருட்டல் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீசார் கைது செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடன் வாங்கி தருவதாக கூறி சென்னை மட்டுமின்றி பக்கத்து மாநில தொழில் அதிபர்களிடமும் கோடிக் கணக்கான ரூபாயை இவர் சுருட்டியிருப்பது அம்பலமானது. ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ.20 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் வாங்கி மோசடி செய்த வழக்கில் சீனிவாசன் கைது செய்யப்பட்ட பின்னர் ஏராளமான புகார்கள் அவர் மீது குவிந்தன. கடந்த 1 1/2 மாதங்களாக சீனிவாசன் வேலூர் ...

நிரந்தர ரணத்தை உருவாக்கும் ஹை ஹீல்ஸ் எதற்கு?

Posted: 05 Jun 2013 11:47 AM PDT

உயரம் குறைவாக இருப்பவர்கள் மட்டுமல்ல சராசரி உயரம் இருப்பவர்கள் கூட இந்த ஹை ஹீல்ஸ் செருப்புகளை அணிகிறார்கள். இங்கு பெண்களைத்தான் குறிப்பிடுகிறோம். ஏன்? அவர்கள்தான் ஹை ஹீல்ஸ் பிரியைகளாக இருக்கிறார்கள். ஒரு மணி நேரம் தொடர்ந்து அணிந்தால் நிரந்தரமான வலியை பெண்கள் உணரத் தொடங்கிவிடுகிறார்கள். சற்றும் பொருத்தமில்லாத வெறும் ஃபேஷனுக்காக அணியும் இத்தகைய ஹை ஹீல்ஸ் செருப்புகளால் மூட்டு அழற்சி, ஸ்ட்ரெஸ் எலும்பு முறிவுகள், இறுக்கமடையும் நரம்புகள் என்று பிரச்சனைகள் அதிகரிப்பதாக மைக் ஓ'நீல் என்ற மருத்துவர் ...

இட்லி வகைகள்

Posted: 05 Jun 2013 11:46 AM PDT

தோசைக்கு அடுத்த படி நான் விரும்பும் உணவு இட்லி. மேலும் இது பெரும்பாலான தமிழர்களின் காலை உணவு. இது இல்லாமல் நாம்மால் இருக்க முடியாது இல்லயா? எல்லோருக்கும் தெரியும் என்றாலும் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். மேலும் பல வகை இட்லி களையும் பார்க்கலாம் நண்பர்களே ! இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மையாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான் இருக்கிறது. அதற்கான அளவு: புழுங்கலரிசி - 2 கப், முழு உளுத்தம் பருப்பு - அரை கப், உப்பு - ருசிக்கேற்ப. அரிசியையும் பருப்பையும் தனித்தனியே ...

ஏஞ்சலீனா ஜீலி பிறந்தநாள்! கூகுள் தரும் பரிசுகள்!

Posted: 05 Jun 2013 11:41 AM PDT

இன்று ஹாலிவுட்டின் கனவுக்கன்னி ஏஞ்சலீனா ஜோலிக்கு பிறந்தநாள் பாஸ் உங்களுக்கு தெரியுமா இதை முன்னிட்டு கூகுள் தனது ப்ளே ஸ்டோரில் பல அப்ளிகேஷனை வழங்கியுள்ளது. அவையனைத்துமே ஏஞ்சலீனா ஜோலி வால் பேப்பர்ஸ் ஆகும் இவையனைத்தும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீங்கள் தரவிறக்கிக்கொள்ளலாம்.


புது கணணி வைரஸ் ஜாக்கரதை!!

Posted: 05 Jun 2013 11:39 AM PDT

வங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று, இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது முன்பு வந்த 'Win32/Ramnit' என்ற வைரஸின் புதிய அவதாரமாக உள்ளது என, இந்திய இணையவெளியில் மேற்கொள்ளப்படும் திருட்டுகளைக் கண்காணிக்கும் வல்லுநர்கள் குழு (Computer Emergency Response TeamIndia (CERTIn)) எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வைரஸ் தான் நுழைந்த கம்ப்யூட்டர்களில் உள்ள EXE, dll அல்லது html ஆகிய பைல்களைக் ...

உலக சுற்றுச்சூழல் தின ஸ்பெஷல்: அதிர்ச்சியடைய வைக்கும் வீடியோ!!!

Posted: 05 Jun 2013 11:21 AM PDT

இந்தியாவில் வடக்கே அமைந்துள்ள பெரிய எழில் மிகுந்த மலை தான் இமயமலை. அத்தகைய இமயமலை தான் கங்கை நதியின் பிறப்பிடம். மேலும் பெரிய பெரிய மகான்கள் இன்றும் உயிரோடு இமயமலையில் இருப்பதாக நம்புகின்றோம். எனவே தான் அந்த இமயமலையை "கடவுள்களின் மலை" என்று சொல்கிறோம். ஜூன் 5, உலக சுற்றுச்சூழல் தினம். இன்றைய தினத்தில் அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு கெட்ட செய்தி சொல்லப் போகிறோம். அது என்னவென்றால், கடவுள்களின் மலையாக விளங்கும் இமயமலையிலும் சுற்றுச்சூழலானது மிகவும் மோசமானதாக உள்ளது. ஆகவே அதனை அனைவருக்கும் ...

கேள்வியை நீ கேட்கிறாயா?...

Posted: 05 Jun 2013 11:18 AM PDT



நன்றி
டைம் பாஸ்

மொக்க ஜோக்ஸ்

Posted: 05 Jun 2013 11:17 AM PDT

நண்பர்கள் எல்லாம் தண்ணி அடிச்சிட்டு மொக்க ஜோக் அடிக்கரங்க மச்சான் இன்ன மேலுக்கும் நாம்ப எல்லாரு குடிக்க கூடாது மச்சா சத்தியம் பன்னு மச்சா ஓக்கே மச்சா இன்னுமேலுக்கும் நாம எல்லாம் பச்ச தண்ணி கூட குடிக்க கூடாது மச்சா/ (ராமு) வேர்வை சிந்த உழைக்கிறோம் ஆனா ரத்தம் சிந்த தூங்க வேண்டி இருக்கு ஏன? ஒரே கொசுக்கடியா இருக்குப்பா/ (அரவப்பா) தூங்கும் போது ஏன் தலகாணிக்கு கீழே ஸ்கேல் வச்சிருக்க? ஏனா அளவோடு தூங்கிடத்தான் (மஞ்சுரி) சார் 12 B பஸ் எப்பவரும் 10 /12 க்கு வரும் ...

சந்தேகம்

Posted: 05 Jun 2013 11:12 AM PDT

அப்ப நம்ம முத்து ( நான் இல்லீங்கோ )எழாவதுதான் படிச்சிட்டு இருந்தான். ஆனா அவனோட அப்பா அவனுக்கு இப்ப இருந்தே செக்ஸ் பத்தி சொல்லி குடுக்கனும்னு யோசனை பண்ணராம். ஏன்னா காலம் போற போக்குல தன் பையன் கேட்டு போய்ட கூடாதுன்னு நெனச்சார். ஒரு நாள் ஆபீஸ்ல இருந்து வந்ததுக்கு அப்புறம் நம்ம முத்து கூப்டு பேச ஆரம்பிச்சார் அப்பா: அதாவது மகனே நான் இப்ப பேச போறது கொஞ்சம் பெரிய விஷயம், இந்த விஷயத்தி பத்தி உன்கிட்ட பேசறதுல எனக்கு மொதல்ல எனக்கு கொஞ்சம் தயக்கமா தான் இருந்துச்சி ஆனா வேற வழி இல்ல நான் பேசித்தான் ...

ஆங்கிலத்தில் எழுத ஆட்கள் தேவை...!

Posted: 05 Jun 2013 10:49 AM PDT

அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் வணக்கம், இதுவரை நான் உங்களுக்கு மற்ற நிறுவனங்கள் அளிக்கும் வேலைவாய்ப்புகள் பற்றிதான் எழுதிவந்துளேன். இன்று முதன் முதலாக நானே நேரடியாக உங்களுக்கு அளிக்கும் வேலைவாய்ப்பினைப் பற்றி இங்கு எழுதவுள்ளேன். எனக்கு கட்டுரைகள் எழுதிக்கொடுப்பதே அந்த பணி ஆகும். கட்டுகரைகளுக்கான தலைப்புகளை நானே உங்களுக்கு கொடுத்துவிடுவேன். ஒவ்வொரு கட்டுரையிலும் குறைந்தபட்சம் ஐநூறு வார்த்தைகள் இருக்கவேண்டும். நாங்கள் தரும் தலைபுகளைப்பற்றி நீங்கள் சொந்தமாக சிந்தித்துத்தான் எழுத ...

சொல் பத்தப்பு (Welding) - வெண்பா பற்றியது

Posted: 05 Jun 2013 10:22 AM PDT

ஒரு நாள் காலை 'யாப்பருங்கலக் காரிகை'யைப் புரட்டிக்கொண்டிருந்தேன். திடீரென்று ஏதோ ஒரு பக்கத்தில் 'இரண்டு உலோகங்களை இணைத்துப் பற்றவைக்கும்போது…' என்று ஒரு வாக்கியத்தைப் பார்த்தேன். இதென்ன இலக்கணப் புத்தகமா, அல்லது பொறியியல் புத்தகமா? மரபுக் கவிதை எழுதச் சொல்லித்தரும் நூலில் பத்தப்பு(வெல்டிங்) மேட்டரெல்லாம் எப்படி நுழைந்தது. குறுகுறுப்பில் அந்தப் பக்கத்தை முழுமையாகப் படித்தேன். அந்த பத்தப்பு சமாசாரம் எத்துணை பொருத்தமாக இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று வியந்துபோனேன்.அதைச் சொல்வதற்குமுன்னால், ...

அன்பு !

Posted: 05 Jun 2013 09:13 AM PDT

வாசலில் கோழிக்கு இறையிடுகிறான் விவசாயி கோழிக் குஞ்சுகளைக் குறிவைத்து வானத்தில் வட்டமிடுகிறது வெள்ளைக் கழுகு குஞ்சுகளைக் கொத்திச் செல்ல கழுகு நெருங்கும் நேரத்தில்... தனது கொக்கரிப்பில் குஞ்சுகளை ஒளிந்துகொள்ளச் சொல்லும் கோழி.. கத்திக்கொண்டே கம்பெடுத்து கழுகை விரட்டும் விவசாயி.. இரைக்காக நெருங்கும் வெள்ளைக் கழுகு... எல்லோர் எண்ணத்திலும் இருப்பது ஒன்றுதான் அன்பு ! கோழிக் குஞ்சுகள்மேல் தாயிக்கு உள்ள அன்பு ! தாய்க் கழுகுக்கு தனது குஞ்சுகள்மேல் உள்ள அன்பு ! தன்வீட்டுப் பறவைகள் ...

உலகத்திலேயே சிறந்தது எது ?

Posted: 05 Jun 2013 07:31 AM PDT

உலகத்திலேயே சிறந்தது எது ? இந்த கேள்விக்கான பதில் ஒவ்வொருவரிடமும் வித்தியாசம் இருக்கும்
உங்கள் பதிலை சொல்லுங்கள் பார்க்கலாம் .
அது ஏன் சிறந்தது என்ற காரணத்தையும் சொல்லுங்கள்


விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது?

Posted: 05 Jun 2013 07:22 AM PDT

இருநாள்களுக்கு முன்பு தஞ்சாவூரில் புதை சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்காக உள்ளே இறங்கிய இரண்டு துப்புரவுத் தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தனர். தமிழ்நாட்டில் இத்தகைய மரணங்கள் அடிக்கடி நடந்துகொண்டே இருக்கின்றன. இந்த மரணங்கள், "விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' என்பதாகத்தான் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அதாவது இவை தொழிற்சாலை விபத்து போன்ற உணர்வை ஏற்படுத்திவிடுகின்றது. இவர்கள் தொழிலாளர்கள் என்றாலும்கூட, ஒரு தொழிற்கூடத்தில் ரசாயனத் தொட்டியைக் கழுவும்போது ஏற்படும் விபத்தையும் சாக்கடையைத் ...

தள்ளு, இழு (Push Pull)

Posted: 05 Jun 2013 06:40 AM PDT

பொதுவாக எல்லாக் கதவுகளிலும் ஒருபக்கம் 'Push' என்றும், இன்னொருபக்கம் 'Pull' என்றும் எழுதியிருப்பார்கள். இதைத் தமிழில் தள்ளு, இழு என்று மொழிபெயர்ப்பார்கள், அரசாங்க அலுவலகக் கதவுகளில் 'தள்ளு' என்றுமட்டும்தான் எழுதியிருக்கும் என்கிற ஜோக்கூட இருக்கிறது. ரயில் எஞ்சின்களிலும் Push, Pull வித்தியாசம் உண்டு. ஒரு வகை எஞ்சின், ரயிலின் முன்பகுதியில் இருந்து மற்ற பெட்டிகளை இழுத்துச் செல்லும். இன்னொரு வகை எஞ்சின், ரயிலின் பின்பகுதியில் இருந்து மற்ற பெட்டிகளத் தள்ளிச் செல்லும். இவை இரண்டுமே கொண்டிருக்கும் ...

விடை தாளில் விளையாடிய மாணவன்

Posted: 05 Jun 2013 06:38 AM PDT


மீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம்

Posted: 05 Jun 2013 06:34 AM PDT

முன்குறிப்பு: பத்து வருடங்களுக்குமுன்னால் 2003ல் எழுதியது.ஆனால் நிகழ் காலத்திற்கும் ஏற்றது. மீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம் என்பதை ஒரு வெள்ளிக்கிழமை ராத்திரி என் வீட்டு டிவியின் முன்னால் உட்கார்ந்தபடி உணர்ந்தேன். பத்து வருடம் முன்வரையில், டிவியில் கிரிக்கெட் மேட்ச் என்றால், அது ஒருநாள் போட்டிதான், அதுவும் பெரும்பாலான போட்டிகள் நேரடி ஒளிபரப்பாக வராது, ஹைலைட்ஸ் என்ற பெயரில் முக்கியமான அசத்தல்களையும் சொதப்பல்களையும் துண்டுதுண்டாக வெட்டிப்போடுவார்கள். ...

என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்...

Posted: 05 Jun 2013 06:24 AM PDT

1.நாய சுடுற மாதிரி நடு ரோட்டுல சுடனும்ன்னு சொல்லுறாங்களே...எந்த நாய நடு ரோட்டுல சுட்டுருக்காங்க...?? 2.காமசூத்ரா தமிழ் பிட்டுப்படமா இல்ல மலையாள பிட்டுப்படமா ..? 3.மலையாளிகளின் ஓணத்துக்கு தமிழ் நாட்டில் விடுமுறை. கேரளாவில்பொங்கலுக்கு விடுமுறை விட்டார்களா..? 4.தெலுங்கு வருட பிறப்புக்கு தமிழ் நாட்டில் விடுமுறை. ஆந்திரத்தில் தமிழ் புத்தாண்டுக்குவிடுமுறை விட்டார்களா..? 5.புல் டைமா இருந்த Facebook இப்ப பார்ட் டைமா ஆயிடுச்சி உருப்புட்ருவனோ....? 6.பெண்களின் அலைபேசியில் Missed Callகள் இருக்குமா ...

மனதைத் தொட்ட வரிகள் ...

Posted: 05 Jun 2013 05:59 AM PDT

பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம். Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது. Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான். Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும். Ø ...

3000 மதப்பீடுகள் பெற்று அசத்தும் நமது ஈகரை பாயச புகழ் உமா அக்காவை வாழ்த்தலாம் வாருங்கள்

Posted: 05 Jun 2013 05:49 AM PDT

3000 மதப்பீடுகள் பெற்று அசத்தும் நமது ஈகரை பாயச புகழ் உமா அக்காவை வாழ்த்தலாம் வாருங்கள் வாழ்த்துக்கள் உமா அக்கா மேலும் பல மதிப்பீடுகள் பெற்று உங்களை நீங்களே சிறப்பாக்குங்கள் பாயச புகழே

தென்றல் வந்து என்னை தொடும் - இனிய மோகன் பாடல் கேளுங்க

Posted: 05 Jun 2013 05:26 AM PDT

நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி

Posted: 05 Jun 2013 05:21 AM PDT

நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி நம் வாழ்க்கையில் நாம் இந்த நிலையில் இருப்பதற்கு காரணமான நண்பர்கள், தோழிகள், உறவினர்கள், அக்கம்-பக்கத்தினர், முன்பின் தெரியாதவர்கள் அனைவருக்கும் நீங்கள் நன்றி சொல்ல இந்த திரியை பயன்படுத்தலாம். முதலில் நான் நன்றிக்கடன் பட்டவர்களுக்கு நன்றி கூறும் நேரம் இது. 1 . என்னை பெற்றெடுத்த பெற்றோருக்கு நன்றிகள். 2 . நான் ஒன்றாம் வகுப்பு படித்த "தேசிய நடுத்தரப் பள்ளி, சிந்தாதிரிப்பேட்டை தலைமை ஆசிரியருக்கு நன்றிகள். 3 . நான் ஹிந்தி கற்றுக்கொள்ளத் தூண்டிய "சாந்தி அக்கா" ...

இதை பாருங்களேன் - மதுமிதா

Posted: 05 Jun 2013 04:49 AM PDT

காதல் !

Posted: 05 Jun 2013 04:16 AM PDT

ஆலங்கட்டியை அள்ளியிறைக்கும் புயல்மழை காதல் கார்மேகம் கூடியதும் முகத்தைமுத்தமிடும் ஒற்றை மழைத்துளி காதல் விரல்களை ஒடித்துவிட்டு வீணைமீட்டும் விபரீத விளையாட்டு காதல் தவறாக உச்சரிக்கும் பிஞ்சு மழலையின் கொஞ்சல்மொழி காதல் மாமரக்கிளை நிழலில் தொட்டிலில் உறங்கும் குழந்தையை கடித்து அழவைக்கும் கட்டெறும்பு காதல் அழும் குழந்தைக்கு இரண்டு வயல் தாண்டி காற்றில் கரைந்துவரும் தாயின் தாலாட்டு காதல் முட்களுக்கிடையே மூச்சுத் திணறும் மூங்கில்தண்டு காதல் அதைத் துளையிட்டு இசைமீட்டும் புல்லாங்குழல் ...

1001 பதிவுகளை கடந்த ஹைதராபாத் அற்புத விளக்கு அகலுக்கு வாழ்த்துகள்

Posted: 05 Jun 2013 04:12 AM PDT

1001 பதிவுகளை பர பரவென பத்திக்கிட்டு பரந்த காக்கை சிறகு ஹய்தராபாத் பிரியாணி அலாவுதீன் ஆலம்பனா விளக்கு அகலுக்கு வாழ்த்துகள்

கலப்பை எழுதும் கவிதை

Posted: 05 Jun 2013 04:11 AM PDT

உலகத்தின் உயிர்நாடி உழவென்றால் மிகையில்லை! உழவனைப்போல் உழைக்கும் வர்கம் உலகினிலே வேறில்லை! வேட்டையாடும் வேலை தவிர வேறென்ன அறிந்திருந்தோம்? வேளாண்மையின் மேலாண்மையால் விதைத்துண்ணும் வித்தை கற்றோம்! உழவென்ற தொழிலொன்றே உயர்த்தும் இந்த உலகை! அது பூமி எனும் புத்தகத்தில் கலப்பை எழுதும் கவிதை! தோட்டமெல்லாம் அழித்துவிட்டு தொழிற்சாலை தொடங்கினோம்! - நாளை ஆலைக் கழிவால் ஆயுள் குறைந்து ஆறடிக்குள் அடங்குவோம்! உறுதி எடுத்து உயர்த்திடுவோம் உலகைக் காக்கும் உழவை! உழவனுக்கே ...

நான் பார்த்து வியந்த புகைப்படம் -நீங்களும் பதிவிடலாம்

Posted: 05 Jun 2013 04:09 AM PDT

நான் சில நாட்களுக்கு முன்னால் இணையத்தில் பார்த்து வியந்த புகைப்படம் இது இதைபோல் நீங்களும் பார்த்து வியந்த புகைப்படங்களை பதிவிடுங்கள்

ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 3

Posted: 05 Jun 2013 03:33 AM PDT

1) உயிர், தானாகவே உடலை இயக்கிக் கொள்கிறது என்று சொல்லி கடவுளின் இருப்பை ஒப்புக் கொள்ளாத மதம் (சமயம்) எது? 2) ஐந்து ராத்திரிகளில் நிறுவப்பட்ட மதம் (சமயம்) எது? 3) ஏராளமான இறைத் தூதர்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டனர். அவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர்தான் எங்கள் இறைத்தூதர் என்ற நம்பிக்கையை உடைய மதம் (சமயம்) எது? 4) உலகம், உயிர் ஆகிய இரண்டும் உண்மையில் இல்லை. இருப்பதாகத் தோன்றுவது ஒரு மாயத்தோற்றம். இப்படிச் சொல்வது எந்த மதம் (சமயம்)? 5) மறுபிறவி என்பது கிடையாது என்று சொல்லும் மதம் ...

ஒரு பெரியவரிடம்

Posted: 05 Jun 2013 03:29 AM PDT

ஒரு பெரியவரிடம் அய்யா! நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்" என்றான் ஒருவன். " என்ன காரணம்?" என்று கேட்டார் ஒரு பெரியவர். "மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்" என்றான் "உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம்தான்" என்றார் பெரிவர் "அப்படியா சொல்கிறீர்கள்?" "ஆமாம்!" "அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?" "மனதைப் புரிந்து கொள்... அது போதும்." "எப்படிப் புரிந்து கொள்வது?" என்றான் அவன். "இந்தக் கதையைக் கேள்" என்று அவர் சொன்னார் - "ஆசையாக ...

சிதம்பர இரகசியம் என்றால் என்ன?

Posted: 05 Jun 2013 03:24 AM PDT

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்." சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள். முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், ...

அவங்க மட்டும்தான் அம்மாவா?

Posted: 05 Jun 2013 02:05 AM PDT

'போராட்டங்கள் நிறைந்த எனது வாழ்க்கையில், எத்தனையோ பட்டங்களையும் விருதுகளையும் பெற்றிருக்கிறேன். ஆனால், கிடைத்ததற்கரிய பெரிய பேறாக நான் கருதுவது எல்லோரும் வாய் நிறைய என்னை 'அம்மா' என்று அழைப்பது தான். வயது என்னவாக இருந்தாலும், பெரியவர்கள், இளையவர்கள், குழந்தைகள் அனைவருமே என்னை 'அம்மா' என்று அழைப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்'' - அ.தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டுகள் முடிந்ததையட்டி, சட்டசபையில் பேசிய ஜெயலலிதா சிலிர்த்துச் சொன்னது இது. இருந்தாலும், இப்படி அழைப்பதில் பெரும்பாலான ஜெ. விசுவாசிகளுக்கு ...

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -18)

Posted: 05 Jun 2013 01:58 AM PDT

வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ...

மகளிர் அணியினர் இதுக்கெல்லாம் சண்டைக்கு வரக்கூடாது?

Posted: 05 Jun 2013 01:24 AM PDT

ஆங்கில எழுத்துக்களிலேயே மிகப்பயங்கரமான எழுத்து எதுன்னு தெரியுமா? " W " தாங்க, ஏன்னா....இதில் இருந்துதானே எல்லாப்பிரச்சனைகளும் (கேள்விகளும்) தொடங்குகிறது ? WHO? WHY? WHAT? WHEN? WHICH? WHOM? WHERE? WAR! WINE... & WOMEN ================= நன்றி: முக நூல்

பெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை

Posted: 05 Jun 2013 01:14 AM PDT

பெங்களூர், ஜூன்.5- 'ஹை-டெக் சிட்டி', 'சிலிக்கான் நகரம்', 'தகவல் தொழில்நுட்ப நகரம்', 'பூங்கா நகரம்' என்று பல்வேறு சிறப்பு பெயர்களை பெற்றுள்ள பெங்களூர் நகரில் சமீப காலமாக குற்ற செயல்களும் அதிகரித்து வருகின்றன. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, தற்கொலை உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்த நிலையில், இளம்பெண் ஒருவரை 4 ஆண்டுகளாக வீட்டில் சிறை வைத்து சித்ரவதை செய்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. பரிதாபத்துக்கு உரிய அந்த அபலைப் பெண்ணின் பெயர் ஹேமாவதி (வயது 30). பெங்களூர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™