Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


உத்தரகாண்ட்: 25 ஆயிரம் பக்தர்கள் பட்டினி - மீண்டும் மழை பெய்வதால் மீட்பதில் சிக்கல்

Posted: 21 Jun 2013 10:46 PM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழையின் சீற்றம் காரணமாக ஏற்பட்ட இமயமலை சுனாமி அந்த மாநிலத்தையே புரட்டிப் போட்டு விட்டது. ருத்ரபிரயாகை, உத்தரகாசி, சமோலி, தெக்ரி ஆகிய மாவட்டங்களில் பெய்த பேய் மழை ஆங்காங்கே நிலச்சரிவுகளையும், காட்டாற்று வெள்ளப் பெருக்கையும் ஏற்படுத்தி மிகப் பெரும்

இதுவரை 556 உடல்கள் மீட்பு: உத்தரகாண்ட் முதல் மந்திரி தகவல்

Posted: 21 Jun 2013 10:33 PM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 14ம் தேதியில் இருந்து 17ம் தேதி வரை சுமார் 60 மணி நேரம் ஓயாத அடைமழை பெய்தது. இதனால், அலக்நந்தா, பகீரதி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட புனித தலங்களை வெள்ள நீர் சூழ்ந்தது.

சோலார் பேனல் மோசடி வழக்கு: சரிதா நாயரின் ஜாமீன் மனு மீது 24-ந்தேதி மீண்டும் விசாரணை

Posted: 21 Jun 2013 10:31 PM PDT

கேரளாவில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பிஜு ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சரிதா எஸ். நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது அம்புலப் புழா, கொட்டாரக்கரா பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஏராளமான புகார்கள் குவிந்தது

சாலை பணியின்போது கலவை எந்திரத்தில் சிக்கி பெண் உடல் சிதைந்து பலி

Posted: 21 Jun 2013 10:13 PM PDT

பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி வண்டலியை சேர்ந்தவர் செருகுட்டி. இவரது மகள் சாந்தா (வயது47). கட்டிடத்தொழிலாளி. நேற்றுமாலை 3 மணியளவில் வடக்கஞ்சேரியில் சாலைபோடும் பணி நடந்து வந்தது. அதில் சாந்தாவும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். சிமெண்டு கலவை எந்திரத்தில் உள்ள கலவையை எடுக்கச்சென்றார். அப்போது

கோவாவில் சுரங்கத்தொழிலுக்கு தடை: மத்திய அரசு ரூ. 3000 கோடி வழங்க கோரிக்கை

Posted: 21 Jun 2013 09:48 PM PDT

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியைச் சார்ந்து வரும் ஆறு மாநிலங்களில் கோவாவும் ஒன்றாகும். இம்மாநிலத்தில் 83.7 சதவிகிதம் பகுதிகள் இயற்கைச் சூழலைச் சார்ந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகவும், உலக பாரம்பரிய தளங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், இங்கு இரும்புத் தாது கனிமங்கள் நிறைந்துள்ளதால் அவற்றை வெட்டியெடுக்கும் பணியில் 139 சுரங்கங்கள் ஈடுபட்டுள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. வனவிலங்கு காப்பகங்களும், தேசீய

மும்பை நடுத்தர குடும்பங்களை கவனிக்க புதிய முறை அறிமுகம்

Posted: 21 Jun 2013 09:42 PM PDT

நீண்ட காலமாக கூட்டுக் குடும்ப நடைமுறைகள் இருந்தன. பின்னர் பணி நிமித்தமாக இளைய தலைமுறை வீட்டை விட்டு வெளியே செல்ல நேரிட்டபோது, கூட்டுக் குடித்தனங்கள் குறைந்து தனிக் குடித்தனங்கள் அதிகரித்தன. நவீன காலத்தில் ஆண், பெண் இருபாலருமே வேலைக்குச் செல்லும்போது, வீட்டு நிர்வாகமும், குழந்தைகள் கவனிப்பும் மிகவும் மன இறுக்கத்தைத் தருபவையாக அமைகின்றன. தனித்தனியே ஒவ்வொன்றுக்கும் பணியாட்களை அமர்த்திக் கொள்வதும் செலவை அதிகரிப்பதாக இருக்கும். இந்தப் பொருளாதாரத் தேக்க நிலையில், மும்பை அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் இதற்கென ஒரு

இந்தியத் தொழில்நுட்பக் கழக நுழைவுத்தேர்வில் முதன்முதலாகப் பெண்கள் முன்னிலை

Posted: 21 Jun 2013 06:34 PM PDT

இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் இந்திய அரசின் சார்பில் நடத்தப்படும் பொறியியல் மற்றும் நிர்வாக, சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கான தன்னாட்சி பெற்ற நிறுவனங்கள் ஆகும். இந்தியாவில் மொத்தம் 16 கல்லூரிகள் இந்த அமைப்பின் கீழ் இயங்குகின்றன.

5 வயது சிறுமி கற்பழித்து கொலை: விசைத்தறி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

Posted: 21 Jun 2013 06:18 PM PDT

தானே மாவட்டம் பிவண்டியில் உள்ள பவர்லூம் டவுன் பகுதியை சேர்ந்தவர் காலிப் அஸ்ரப் முகமது. இவர் அங்குள்ள விசைத்தறி தொழிற்சாலையில் தங்கி வேலை செய்து வந்தார். அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 5

தொழில் அதிபரிடம் ரூ.6 லட்சம் மோசடி: 5 பேர் கைது

Posted: 21 Jun 2013 06:00 PM PDT

தானே ராரோடு பகுதியை சேர்ந்த இந்திய குடியரசு கட்சி பிரமுகர் அசோக் சர்மா. இவர் ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறார்.

கட்டுமான அதிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

Posted: 21 Jun 2013 04:48 PM PDT

தானே பிவண்டி சோனாளேகாவ் பகுதியை சேர்ந்தவர் அனில் சவான் (வயது39). கட்டுமான அதிபர். இடம் வாங்கி விற்றதில் ஏற்பட்ட தகராறில் கடந்த மே மாதம் 26-ந் தேதி அன்று அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்

சர்ச்கேட் ரெயில் நிலையத்தில் தீ விபத்து

Posted: 21 Jun 2013 04:16 PM PDT

மும்பை சர்ச்கேட் ரெயில் நிலைய கழிவறை அருகில் உள்ள மின்சார பியூஸ் பெட்டியில் நேற்றுமுன்தினம் மாலை 6 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

குண்டலுபேட்டை டவுனில் ஓட்டல் ஊழியர்களுக்கு கத்திகுத்து

Posted: 21 Jun 2013 01:02 PM PDT

குண்டலுபேட்டை டவுனில் தனியார் லாட்ஜ் மற்றும் ஓட்டல் உள்ளது. இங்கு கேரளாவை சேர்ந்த ராமகிருஷ்ண நாயர் (வயது 38) என்பவர் சமையல்காரராக பணியாற்றி வருகிறார்.

உத்தரகாண்டில் மீட்கப்பட்ட மக்கள் ரெயிலில் இலவசமாக பயணம் செய்ய அனுமதி

Posted: 21 Jun 2013 10:15 AM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலும் வெளிமாநிலங்களில் இருந்து புனித தலங்களுக்கு யாத்திரை வந்தவர்கள். நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கிய யாத்ரீகர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்கப்படும் யாத்ரீகர்கள் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மக்களுக்கு திகார் சிறைக் கைதிகள் நிதியுதவி

Posted: 21 Jun 2013 10:06 AM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ரூ.1000 கோடி வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருந்தார். இதற்காக, பொதுமக்கள் பிரதமரின் நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி பல்வேறு அமைப்பினரும்,

சத்தீஸ்கரில் பெண் மாவோயிஸ்டு சுட்டுக்கொலை

Posted: 21 Jun 2013 09:58 AM PDT

சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர்களை படுகொலை செய்த சம்பவத்தையடுத்து, மாவோயிஸ்டுகளை ஒடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போபால்பட்டினம் காவல் எல்லைக்குட்பட்ட நீல்மதகு காட்டுப்பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று ரோந்து சென்றனர்.

ராஜீவ்-ஜெயவர்தனே ஒப்பந்தத்தை அமல்படுத்த நடவடிக்கை: பிரதமருக்கு மார்க்சிஸ்ட் கடிதம்

Posted: 21 Jun 2013 09:34 AM PDT

இலங்கையில் உள்ள தமிழர்கள் சம உரிமை பெற்று, கண்ணியத்துடன் வாழ்வதை உறுதி செய்யும் வகையில் ராஜீவ்-ஜெயவர்தனே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த இலங்கையை வலியுறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

காசநோய் மருந்துகள் போதிய அளவு இருப்பு உள்ளன: குலாம் நபி ஆசாத்

Posted: 21 Jun 2013 08:01 AM PDT

புதுடெல்லியில் நடைபெற்ற தனியார் காசநோய் மற்றும் சுவாசநோய் மருத்துவமனையின் புதிய வார்டு திறப்பு விழாவில் பங்கேற்ற மத்திய சுகாதாரத்துறை மந்திரி குலாம் நபி ஆசாத் நிருபர்களிடம் கூறியதாவது:- நாட்டில் காசநோய் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. அது தவறு. தற்போது அத்தகைய மருந்துகள்

உத்தரகாண்ட்: மீட்பு படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது - விமானி படுகாயம்

Posted: 21 Jun 2013 04:58 AM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ள நிவாரணப் பணிகள் மற்றும் மீட்பு பணிகளில் இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையின் 40 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளத்தாக்கில் உணவு மற்றும் மருந்து வசதிகள் இன்றி தவிக்கும் மக்களை அந்த ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்டு வருகின்றனர்.

மணிபாலில் படித்த கேரள எம்.பி.பி.எஸ் மாணவி ஆட்டோவில் கடத்தி கற்பழிப்பு

Posted: 21 Jun 2013 04:46 AM PDT

கேரள மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் சிக்கிம் மாநில தலைநகர் மணிபாலில் உள்ள மருத்துவ கல்லூரியில் 4ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். நேற்றிரவு கல்லூரி நூலகத்தில் இருந்து அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

ஷிண்டே நாளை உத்தரகாண்ட் பயணம்: வெள்ளச்சேத பகுதிகளை நேரில் பார்வையிடுகிறார்

Posted: 21 Jun 2013 04:32 AM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பத்ரிநாத் மற்றும் கேதர்நாத் போன்ற புனித தலங்களுக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கி தவிக்கின்றனர். தேசிய பேரிடர் கால மீட்பு படை, ராணுவம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. கேதர்நாத் பகுதிக்குள் சிக்கித் தவித்த அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™