Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சிந்தனைத் துளிகள்

Posted: 04 Jun 2013 01:49 PM PDT

ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும். - விவேகானந்தர். மனிதன் முன்னேற ஏழு பாதைகள் பகுத்தறிவு கல்வி சிந்தனையில் உண்மை அன்புடமை நன்னடத்தை கட்டுப்பாடு உள்ள குடும்பம் நல்ல ஆட்சி - சீன அறிஞர் கன்பூசியஸ் "வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க" - தாகூர் ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன். -அண்ணல் காந்தி புதியதோர் ...

கலக்குறார் டோய் கப்டன்!

Posted: 04 Jun 2013 01:48 PM PDT

கொரியப் பாடகரின் வீடியோவைப் பார்த்து விட்டு தமிழ் ஹீரோக்கள் ஆடப் போகிறார்கள் என்று சொன்னோமா? தற்போது நம்ம கப்டனை வைத்து யாரோ சில்மிசம் பண்ணியிருக்கிறார்கள். என்ஜாய்!



நன்றி பூபாளம்

(இது நமது ஈகரையில் இருக்க என்று தேட முடியவில்லை, ஏற்கனவே இருந்தால் அதுனுடன் இதை சேர்த்துவிடலாம்.)

அரசு மருத்துவமனைகளில் 'அம்மா' உணவகம்

Posted: 04 Jun 2013 01:30 PM PDT

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் திறக்கப்பட்டுள்ள மலிவு விலை உணவகத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளதை அடுத்து அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு வேலை தேடி வரும் இளைஞர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், கூலி தொழிலாளர்கள் என வாழ்க்கையில் கஷ்டப்படும் அனைவரும் வயிறார சாப்பிடவேண்டும் என்பதற்காக திறக்கப்பட்டது அம்மா உணவகம். இட்லி, பொங்கல், சாம்பார் சாதம், தயிர்சாதம் போன்ற உணவுகளை சாப்பிட மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.தற்போது இந்த திட்டம் சேலம், கோவை, திருச்சி உள்பட ...

சீனாவை சமாளிக்க 40,000 வீரர்களுடன் உருவாகிறது புதிய இந்தியப் படைப் பிரிவு

Posted: 04 Jun 2013 01:24 PM PDT

டெல்லி: எல்லைப் பகுதியில் சீன ராணுவம் அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வருவதால் இந்த எல்லைப் பகுதி பாதுகாப்புக்கு என புதிதாக ஒரு படையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 40,000 வீரர்களைக் கொண்ட, அதி நவீன ஆயுதங்கள், மலையேற்றத்தில் மிகச் சிறந்த நிபுணத்துவம் கொண்ட mountain strike corps என்ற பெயரில் இந்தப் படை உருவாக்கப்படவுள்ளது. ரூ. 82,000 கோடி செலவாகும்: நவீன ஹெலிகாப்டர்கள், விமானங்கள், போர்க் கருவிகள், இரவு-பகலாக எல்லையைப் பாதுகாக்க உதவும் ரேடார்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ...

சவுதி அரேபியாவை தொடர்ந்து வெளிநாட்டுத் தொழிலாளர்களை வெளியேற்ற ஆரம்பித்துள்ளது குவைத்!

Posted: 04 Jun 2013 01:20 PM PDT

குவைத்: குவைத் நாட்டில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களை அடையாளம் கண்டு வெளியேற்ற ஆரம்பித்துள்ளது. சவுதி அரேபியாவில் நிதாகத் சட்டப்படி ஏராளமான இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் திருப்பி அனுப்பப்பட்டு வரும் நிலையில் குவைத் அரசும் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்களை குவைத் அரசு அடையாளம் கண்டு முகாம்களுக்குக் கொண்டு வந்துள்ளதாகவும் அவர்களை நாட்டுக்குத் திருப்பி அனுப்பி வருவதாகவும் அங்கிருந்து திரும்பி வந்த தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்த ...

தமிழ்நாடு மாணவர் காங்கிரஸை கூண்டோடு கலைத்தார் ராகுல் காந்தி

Posted: 04 Jun 2013 12:59 PM PDT

டெல்லி: தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் அமைப்பை கூண்டோடு கலைத்து விட்டார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. இதற்கான உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார். தமிழக மாணவர் காங்கிரஸ் கட்சிக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில் பெரும் மோசடிகள், குளறுபடிகள் நடந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. தலைவர் தேர்தலில் கலையரசன் வெற்றி பெற்றார். ஆனால் அவர் மாணவரே இல்லை என்றும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் மாணவர் காங்கிரஸ் அமைப்பை கூண்டோடு கலைத்து உத்தரவிட்டுள்ளார் ராகுல் காந்தி. மேலும் கலையரசனை தலைவர் பதவியிலிருந்து ...

குடும்பப் பொன்மொழிகள்

Posted: 04 Jun 2013 12:58 PM PDT

1. குடும்பம் என்பது அன்பும் மனைவியும் சுற்றமும் கலந்தது. - ஜப்பான் 2. குடும்பத்தின் உணவுக்காகவும் உடைக்காகவுமே நாம் இரண்டு கால்களாலும் ஓடித் திரிகிறோம். - சீனா 3. சொர்க்கத்திற்குச் செல்வதற்கான பயிற்சி நிலையமே குடும்பம். - அரேபியா 4. குடும்பத்தில் வாழ்க்கையின் முற்பகுதி இரண்டாம் பகுதியை விரும்புவதிலேயே கழிகின்றது. இரண்டாம் பகுதி முதல் பகுதிக்காக வருந்துவதிலேயே கழிகின்றது. - பிரான்ஸ் 5. மனிதனின் குடும்ப வாழ்க்கை, ஒரு குழந்தையின் கையிலுள்ள முட்டை போன்றது. - ருமேனியா 6. குடும்ப ...

2000 மதிப்பீடுகளை அள்ளிய அசுரன் அய்யாவை வாழ்த்தலாம் வாருங்கள்

Posted: 04 Jun 2013 12:43 PM PDT

2000 மதிப்பீடுகளை அள்ளிய ஈகரையின் கண்டிப்பான வழி நடத்துனர் அசுரன் அய்யாவை வாழ்த்தலாம் வாருங்கள் வாழ்த்துக்கள் அசுரன் அண்ணா மேலும் பல மதிப்பீடுகளை பெற்று அசத்த என் முன் கூட்டிய வாழ்த்துக்கள் தலைவரே

3 நாள் கேளிக்கைக்காக ரூ.110 கோடி செலவிட்ட சவுதி இளவரசர்!!

Posted: 04 Jun 2013 11:23 AM PDT

லண்டன், ஜுன் 4- எண்ணெய் வளம் மிக்க இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவின் மன்னராக நயீப் பின் அப்துல்-அஜீஸ் அல் சவுப் ஆட்சி புரிந்து வருகிறார். இவரது மகனான இளவரசர் ஃபஹ்த் அல்-சவுத், அமெரிக்காவில் உள்ள ஸ்டாண்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதனையடுத்து, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள டிஸ்னி லேண்டில் தனது கல்லூரி தோழர்களுக்கு 'ட்ரீட்' அளிக்க இளவரசர் முடிவு செய்தார். சுமார் 60 நண்பர்கள் புடைசூழ ...

இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?

Posted: 04 Jun 2013 11:18 AM PDT

உணவும், உடையும், இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75% மக்களைவிட அதிக வசதிகளை நீ பெற்றிருக்கிறாய். வங்கியில் உனக்குப் பணமிருந்தால் உலகின் முதல் 8% பணக்காரர்களுள் நீயும் ஒருவன். உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன். நோயின்றி, காலையில் புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இறந்த பலரைவிட நீ பாக்கியவான். போர், சிறைத்தண்டனை, பட்டினி போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உனக்கு உலகிலுள்ள 70 கோடி மக்களுக்குக் கிடைக்காத நல்ல வாழ்க்கை ...

ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Posted: 04 Jun 2013 11:07 AM PDT



Cracy Russian motorcyclist....!
மாஸ்கோ சாலையில் இவருடன் பைக்கில் ஒரு திகில் பயணத்தை மேற்கொள்ளுங்கள். காணொளியை முழுத்திரையில் பார்க்கவும். (பி.கு: உங்களின் இதயத் துடிப்பு அதிகமானால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது)

ஜூன் மாதம் எப்படி?

Posted: 04 Jun 2013 10:40 AM PDT

மேஷம்: புதன், சுக்ரன், குரு ராசிக்கு மூன்றாம் இடத்தில் சேர்ந்துள்ளதால் செயல்களில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டு. கூட்டு வியாபாரத்தில் லாபம் அடைவர். பண வசதிகள் ஏற்படும். புனித ஸ்தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு உண்டாகும். கலைஞர்களுக்கு சக கலைஞர்களின் உதவி கிடைக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்வீர்கள். பரிகாரம்: சனி பகவானுக்கு சனிதோறும் எள் அன்னம் நிவேதனம் செய்து வழிபடவும். சந்திராஷ்டமம்: 20.06.13 இரவு 1.35 - 23.06.2013 அதிகாலை 4.14 ...

பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!

Posted: 04 Jun 2013 10:39 AM PDT

( பசும்பொன் தேவர் - 1959-ல் பொள்ளாச்சி சிறீ குடலுருவி மாரியம்மன் கோவிலில் பேசியது.) நட்ச்சத்திரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பகலிலே பார்க்கிற ஓருவருக்கு நட்ச்சத்திரம் தெரியாது. சூரியன் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், இரவிலே பார்த்தால் சூரியன் தோன்றாது. இரவிலே சூரியனை பார்த்து தவறாக சூரியன் என்பதே இல்லை என சொல்வது எவ்வளவு அவசர புத்தியோ... அவ்வளவு அவசர புத்திதான் தனக்கு நேரில் தெரியாதது அத்தனையும் இல்லை என வாதிக்க முன்வருவது. எல்லாம் எல்லாருக்கும் தெரிகிற ...

எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ

Posted: 04 Jun 2013 09:23 AM PDT

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 16

Posted: 04 Jun 2013 09:18 AM PDT

ஆரம்பம் உன் பாதச்சுவடுகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் பித்த வெடிப்புகளில் இருந்து அழகிற்கான எனது கவிதை ஆரம்பமாகிறது ! கோடைகாலம் மார்ப்ள் தரை மண்பானையில் நீர்... போலி எது ? அசல் எது ? பிரித்துக் காட்டுகிறது கோடைகாலம் ! அம்மா மழலையைப் பெற்றவுடன் ஆரம்பப்பள்ளி ஆசிரியை ஆகிவிடுகிறாள் அம்மா ! மழைத்துளி கருமேகங்களின் ஒன்றுகூடலில் கசிந்து வெளியேறும் ஒற்றை மழைத்துளி நான் ! விழும் இடம் விளைநிலமானால் விளைச்சல் தருவேன் அதுவே பாலைவனமானால் ஆவியாகிப் பின் ...

துளசி ஸ்லோகம்

Posted: 04 Jun 2013 08:46 AM PDT

ஸ்ரீமத் துளசியம்மா திருவே கல்யாணியம்மா வெள்ளிக் கிழமை தன்னில் விளங்குகின்ற மாதாவே செவ்வாய்க் கிழமை செழிக்க வந்த செந்திருவே தாயாரே உந்தன் தாளிணையில் நான் பணிந்தேன் பச்சைப் பசுமை உள்ள துளஸி நமஸ்தே பரிமளிக்கும் மூலக் கொழுந்தே நமஸ்தே அற்பப் பிறப்பைத் தவிர்ப்பாய் நமஸ்தே அஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் நமஸ்தே ஹரியுடைய தேவி அழகீ நமஸ்தே அடைந்தார்க்கு இன்பம் அளிப்பாய் நமஸ்தே வனமாலை என்னும் மருவே நமஸ்தே வைகுண்ட வாசியுடன் மகிழ்வாய் நமஸ்தே அன்புடனே நல்ல அருந்துளசி கொண்டுவந்து மண்ணில் மேல்நட்டு ...

angry bird இன்ஸ்டால்

Posted: 04 Jun 2013 08:17 AM PDT

என்னுடைய lap-ல் angry bird இன்ஸ்டால் பண்ணியது இப்போது ஓபன் பண்ணினால்


என்று kaddukirathu..... புதிதாக google -ல் டவுன்லோட் செய்தேன் அதற்கும் இப்பிடி தான் வருகிறது என்ன பண்ண வேண்டும் ....?

பழந்தமிழ்ப் பண்ணிசை என்பது யாது?

Posted: 04 Jun 2013 08:13 AM PDT

நம் தமிழ்மொழியினைப் போல, தமிழிசையென்பது நம்முடைய மிகப் பழமையான இசைச் செல்வமாகும். சங்கத்தமிழானது (அ) இயற்றமிழ், (ஆ) இசைத்தமிழ், (இ) நாடகத்தமிழென மூன்று வகையினதாய் தழைத்தோங்கி இருந்தமைக்கு எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் இன்று தமிழைத் தாய்மொழியாய் கொண்டவரில் கையளவினரே தமிழிசை என்று ஒன்று இருந்தமையை அதுவும் வெறும் ஏட்டளவிலேயே அறிந்திருக்கின்றனர் என்று சொன்னால் அது மிகையான வழக்கல்ல. இன்றைக்கு கர்நாடக சங்கீதம் என்று வழங்கப்படும் இசைக்கும் தமிழிசைக்கும் பலவிதமான ஒற்றுமைகள் உண்டு. இன்னும் சொல்லப்போனால் ...

தேனு.... தேனு

Posted: 04 Jun 2013 07:40 AM PDT

அன்று வழக்கம் போல காலையில் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தபோது, ஸ்ரீராமின் காதில் "தேனு, தேனு' என்ற குரல் கேட்டது. ஓர் ஆசாமி மொபெட்டின் பின்னால் அலுமினியப் பாத்திரம் வைத்துக்கொண்டு வந்தான். "என்னப்பா இது?' என்று வினவினான் ஸ்ரீராம். "தேனு, சாமி, தேனு, சுத்தமான மலைத்தேனு' "எங்கிருந்து வர்றேப்பா?' "பச்சைமலை சாமி, பெரம்பலூர பக்கம்' அவன் சற்று சந்தேகத்துடன் பார்த்ததும், "சாமி, என்னை நம்புங்க. நான் கும்படற காளி ஆத்தாள் மேல சத்தியமா இது சுத்தமான தேனு தான். நாங்க, காட்டுல தேன் எடுக்க ...

சாதிவெறி

Posted: 04 Jun 2013 07:38 AM PDT

தவம் கிடந்து கிடைத்த வரமாய் தாய் தந்தையின் தவப்புதல்வி நான்.. அர்ப்பணிக்கப்பட்ட ஆசியாய் அன்பை - நானும் அனுபவித்தேன் அவரிடம் அனுதினமும் அமுதசுரபியாய்!!! இமைகள் மறுத்ததில்லை எனக்காக என்றும்.. இன்றோ! இதயம் இடிந்தவராய் ஏனோ, இணையாக்க விரும்பிய இளைஞன்- அவன் இதயம் கவர்ந்தாலும், இனத்தில் இல்லாததால்!!! சாதிவெறி எனும் சாஸ்த்திர சாக்கடையில் சாயம் பூசிய சமூக அவலத்தால் அவமானமே எஞ்சிய நிலையில்- நீவீரோ துக்கம் தாழாமல் தூக்கில் கண்முன்னே!!! காப்பாற்ற முடியாமல் கதறுகிறேன் நான்.. இனவெறி பிடித்த ...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Posted: 04 Jun 2013 07:24 AM PDT

சூப்பருங்க மகிழ்ச்சி

இணையதளங்களை விளம்பர இடையூறின்றி வாசிக்க பயன்படும் பயன்பாடு ..!

Posted: 04 Jun 2013 07:23 AM PDT

நாம் அன்றாடம் பயன்படுத்தும் இணையதளங்களில் தேவையில்லாமல் விளம்பரங்கள் குறுக்கீடு செய்யும். ஒரு முக்கியமான செய்தியைப் படித்துக்கொண்டிருக்கும்போது இடையிடையே விளம்பரங்கள் தோன்றி அந்த செய்தியை படிப்பதிலிருந்து மறைக்கும். இந்த முறையில் விளம்பரங்கள் வைத்து அதன் மூலம் அதிக வருமானத்தை, அதிக கிளிக்குகள் பெற முடியும் என்ற எண்ணத்தில் அந்த இணையத்தளங்கள் அவ்வாறு விளம்பரங்கள் தோன்ற நிரல்களை எழுதியிருப்பர். இதுபோன்ற செயல்களால் தளத்தைப் பார்வையிடுபவர்களுக்கு அதிக சிரமத்தையும், சில நேரங்களில் எரிச்சலடையச் ...

புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போடா வேண்டிய இடத்தில் போடுவார்களா?

Posted: 04 Jun 2013 07:20 AM PDT

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை உடனுக்குடன் விரிவான விளக்கத்துடன், நடுநிலையாக, அழகு தமிழில் தரும் நம்பர் ஒன் செய்தி தொலைக்காட்சி புதிய தலைமுறை . 6 மணி நேரம் ஒரே செய்திகளை திரும்ப திறம்ப பார்த்துகொண்டிருந்த நமக்கு இதன் வரவு நிச்சயம் ஒரு ஆறுதல் தான். உலகத்தரத்துடன்' என்று பறைசாற்றிக்கொண்டு வந்திருக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சில சொதப்பல்கள் நடந்து வருகின்றன. நானும் தொடர்ந்து ஒரு தவறை கண்காணித்து தான் வருகிறேன். தொலைக்காட்சியின் பெயர் 'புதிய தலைமுறை'என்பதற்காக செய்தி ...

கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்!

Posted: 04 Jun 2013 07:10 AM PDT

கிரிஸ்டோபர் கொலம்பஸ் இங்கே வந்து தற்செயலாக நம்மூர் பெண்னை மணந்திருந்தால். அவர் நாடு கான் பயணம் தொடங்குமுன் அவரின் மனைவி எப்படியெல்லாம் கேள்வி கேட்டிருப்பார் என ஒரு மொக்கை கற்பனை. வாங்க கொலம்பஸ் ஐயாவின் நம்மூர் மனைவி எப்படியெல்லாம் வறுத்தெடுக்கிறாண்டு பார்ப்போம்.. பாவம் கொலம்பஸ் சிக்கிட்டாரு சிறுக்கிகிட்ட.. தொடங்கிடுச்சி விசாரனை! # எங்க போக கிளம்பிட்டிங்க? # யாருக்கூட போக போறீங்க? # எதுக்கு போறீங்க? # எப்படி போறீங்க? # எத தேடிக்கிட்டு போக போறீங்க? # அதுக்கு நீங்களேதான் ...

மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை

Posted: 04 Jun 2013 06:46 AM PDT

// மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும் // அழகிய காடு அது. அதில் வசித்துவரும் சிறிய முயல் ஒன்று முதன் முறையாக பெற்றோர் துணையின்றி இரை தேட வந்தது. வெகுநேரம் தேடியதற்குப் பின், மண்ணில் புதைத்திருந்த கிழங்கினைக் கண்டது. இருப்பினும், அது சிறிய முயல் ஆனதாலும், களைப்பினாலும் அந்தக் கிழங்கினை அதனால் தோண்டி எடுக்க இயலவில்லை. என்ன செய்யலாம் என்று அந்த முயல் குட்டி யோசித்துக் கொண்டிருக்கும் போது, அருகில் பசுந்தழைகளை மேய்ந்து கொண்டிருந்த இரண்டு மான்களைக் கண்டது. உடனே, ஓடிச்சென்று, அந்த ...

பலவீனமும் பலம் ஆகும்*

Posted: 04 Jun 2013 06:43 AM PDT

சிறுவன் ஒருவன் ஜூடோ பயில விரும்பினான். அவனுக்கோ ஒரு விபத்தினால் இடது கை போய்விட்டது. எனினும் இந்தக் குறையைப் பொருட்படுத்தாமல், குரு ஒருவர் அவனுக்குப் பயிற்சி அளிக்க ஒப்புக் கொண்டார். தினமும் கடுமையான பயிற்சி அளித்தார் குரு. ஆனால் அந்த சிறுவனுக்கு அந்த குரு ஒரே ஒரு குத்து வித்தை மட்டும் தான் சொல்லிக் கொடுத்தார். நான்கைந்து மாதங்கள் சென்றன. அப்போதும் அதே பயிற்சிதான். சிறுவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டான். ஒரு நாள் சிறுவன் குருவைப்பார்த்து,குருவே இந்த ஜூடோ ...

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -16)

Posted: 04 Jun 2013 06:36 AM PDT

வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ...

சிங்கம்-2வில் என்னை ஓரங்கட்டி விட்டனர்! அனுஷ்கா வேதனை!!

Posted: 04 Jun 2013 06:35 AM PDT

ஹரி இயக்கத்தில், சூர்யா நடித்த படம் சிங்கம். இந்த படத்தில் அனுஷ்காதான் நாயகியாக நடித்திருந்தார். அருந்ததி புகழ் அனுஷ்காவை வெறும மரத்தை சுற்றி மட்டுமே டூயட் பாட வைத்திருந்தனர். என்றாலும், வெற்றி பெற்ற படத்தில் அவரும் இருந்தார். மேலும், அந்த செண்டிமென்ட் காரணமாகவே இப்போது சிங்கம்-2 படத்திலும் அனுஷ்காவை நடிக்க வைத்துள்ளனர். ஆனால், இந்த முறை படத்தை தமிழ்நாட்டில், இந்தியாவில் நடக்கும் கதையாக இல்லாமல் வெளிநாட்டிலும் நடப்பது போல் கதை பண்ணியுள்ளாராம் ஹரி. அதனால், அனுஷ்கா பகுதி ரொம்ப சிறியதாகி ...

ஹிட்லரையே அடிபணிய வைத்த வீரத்தமிழன் - செண்பகராமன்

Posted: 04 Jun 2013 06:11 AM PDT

எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாததொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோரச்செய்தவன் அடி பணியவைத்தவன் ஒருவன் உள்ளான் என்றால் நம்புவீர்களா அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள். ஆம் தோழர்களே அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்? ஒரு வேடிக்கையான விடையம் தமிழக அரசே 2009 ஆம் ஆண்டு தான் ...

தமிழ் இனத்தை அளிப்பதற்காக

Posted: 04 Jun 2013 05:44 AM PDT

"ஒரு இனத்தை அழிக்கவேன்டுமெனில் அந்த இன்ம் சம்மந்தப்பட்ட நூல்களை அழிக்கவேன்டும்" அந்த வகையில் தமிழ் இனத்தை அழிப்பதற்காக நடாத்தப்பட்ட தமிழரின் அறிவுப் புதையலான யாழ்.பொது நூலகம் இனவெறிபிடித்த காடையர்களினால் தீக்கிரையாக்கப்பட்டது அது தீக்கிரையாக்கப்பட்டு இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. ஈழத்தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டிச் சிதைக்கப்பட்டு 32 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. 1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இந்த ...

பிரமீடுகளும் கோவில்களும் - ஒதுக்கப்படும் தமிழர்களின் விஞ்ஞானம்

Posted: 04 Jun 2013 05:15 AM PDT

வணக்கம் தோழர்களே தோழிகளே, நமது தமிழர்களின் பெருமையை தமிழர்களே ஒதுக்குவதுதான் மனதிற்கு வேதனையை அளிக்கிறது. எங்கோ இருக்கும் பிரமிடின் பெருமைகளை பேசுவோம். ஆனால் இங்கு இருக்கும் கோவிகளில் உள்ள விஞ்ஞான உண்மையைப்பற்றி 1% கூட தெரிந்து வைத்திருக்கமாண்டீர்கள். அதற்கு ஒரு சிறிய உதாரணம்தான் இந்த வீடியோ. இதேபோல் இன்னும் பல வீடியோக்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள செய்திகளை சேகரித்து வருகிறேன். தினமும் உங்களுடன் இதைபோன்று இன்னும் பல தமிழர்களின் பெருமைப்படவேண்டிய பல கவனிக்கப்படாத உண்மைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகின்றேன். ...

தோற்காதவர்கள் ஜெய்ப்பதில்லை !

Posted: 04 Jun 2013 04:42 AM PDT

"பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே மாணவ, மாணவியரின் வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை. தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் குறைந்த மதிப்பெண் பெற்ற பிள்ளைகளை, பெற்றோர் கவனமாக கையாளவேண்டும்' என்கின்றனர், மனநல மருத்துவர்கள். மனித வாழ்க்கை, குழந்தை பருவம் (10 வயது வரை), வளர்இளம் பருவம்(22 வயது வரை), இளம்பருவம் (45 வயது வரை), நடுத்தரம் (65 வயது வரை) என, பல்வேறு பிரிவாக உள்ளது. இவற்றில் வளர்இளம் பருவம் என்பது, சோதனைக்காலமாக கருதப்படுகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், உயர்கல்வி உள்ளிட்ட ...

சொந்தக்கதை

Posted: 04 Jun 2013 04:39 AM PDT

ஈகைத் தமிழை நான் அன்புடன் வரவேற்கிறேன் ...முதலில் நான் என்னுடைய குடும்பம் பற்றி சொல்லவேண்டும் ...எங்கள்குடும்பம் பெரியது ...பாசம் உள்ள எங்கள் அப்பா .அன்பின் உருவில் எங்கள் அம்மா ..அன்பின்கொடியில் மலராக பூத்த புன்னகை மலர்கள் நாங்கள் ...நான்கு பெண்கள் நான்கு ஆண்கள் .எங்கள் குடும்பம் ஓர் பல்கலைக்கழகம் போல்தான் கலகலப்பாய் இருந்தது .ஆனாலும் எங்களை வறுமை வாட்டியது ..என்னசெய்வது பட்டம்பூச்சி போல் பறக்க வேண்டும்போல் ஆசை மனதில் ..எங்களால் பறக்கமுடியவில்லை காரணம் வறுமைதான் ..நாங்கள் சாப்பிட்ட நாட்கள் ...

கடவுளும் கிரேக்கரும்

Posted: 04 Jun 2013 04:36 AM PDT



கிரேக்கர்கள் ஒவ்வொரு கிரகங்கத்தையும் கடவுளாகக் கருதி வழிபட்டனர்.

புதன் - தொழிலின் கடவுள்

வெள்ளி - காதல் மற்றும் அழகின் கடவுள்

செவ்வாய் - போரின் கடவுள்

வியாழன் - உயிர்கள் எல்லாவற்றுக்கும் கடவுள்

சனி - உழவின் கடவுள்

யுரேனஸ் - சொர்க்கத்தின் கடவுள்

நெப்டியூன் - கடலின் கடவுள்

புளூட்டோ - பாதாளத்தின் கடவுள்

பட்டின் தாயகம் சீனா!

Posted: 04 Jun 2013 04:34 AM PDT

சீன தேசத்தின் சக்ரவர்த்தி ஹூவாங்-டை என்பவரின் மனைவி மகாராணி ஒருமுறை கையில் தேநீர்க் கோப்பையுடன் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார். சற்றே ஓய்வு எடுக்க அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தார். கையில் சூடான தேநீர்க் கோப்பை. அப்பொழுது அந்தக் கோப்பையில் மேலிருந்து ஏதோ ஒரு பொருள் விழுந்தது. அது என்னவென்று அவர் உற்றுப் பார்க்க, நிலக்கடலை அளவில் ஒரு பொருளின் பகுதிகள் கரைந்து நூல் நூலாகக் கோப்பைக்குள்ள சுழன்று கொண்டிருப்பதைக் கவனித்தார். மேலே பார்த்தார். அங்கிருந்த மல்பெரி மரத்திலிருந்துதான் ...

தமிழகத்தின் 6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் அறிவிப்பு

Posted: 04 Jun 2013 04:13 AM PDT

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய உறுப்பினர்களான, ஏ.இளவரசன், கனிமொழி, திருச்சி சிவா, பி.எஸ்.ஞானதேசிகன், மைத்ரேயன், டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த இடங்களுக்கான தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, வரும் ஜூன் 10ம் தேதி திங்கள் அன்று வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. வேட்பு மனு ...

Side Dishes for Idly, Dosa, Chappati etc.,

Posted: 04 Jun 2013 04:11 AM PDT

இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்ப்மா சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளல்லாம். முதலில் வட கறி செய்வது எப்படி என் பார்ப்போம்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™