Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பீகார் அரசில் இருந்து பா.ஜனதா விலகல்: 17 ஆண்டு கூட்டணி உடைந்தது

Posted: 15 Jun 2013 11:16 PM PDT

பாரதீய ஜனதா கட்சி நரேந்திர மோடியை பாராளுமன்ற தேர்தலில் முன்னிலைப்படுத்த முடிவு செய்து இருப்பதால் பாரதீய ஜனதாவுக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் கருத்து வேறுபாடு உருவானது. ஐக்கிய ஜனதா தளத்தின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் நரேந்திர மோடியை பாரதீய ஜனதா தேர்தல் பிரசார குழு தலைவராக நியமித்தது. இதனால் பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து விலக ஐக்கிய ஜனதா தளம் முடிவு செய்தது. அந்த கட்சி தலைவர்கள் சரத் யாதவ், பீகார் முதல்- மந்திரி நிதிஷ்குமார் ஆகியோருடன் அத்வானி உள்ளிட்ட பாரதீய ஜனதா தலைவர்கள் பேசி சமாதானப்படுத்த முயன்றனர். பாரதீய ஜனதாவின் நிலையை எடுத்துக் கூறினார்கள். சமரச முயற்சியை சரத்யாதவும்,

பஞ்சாப்: இ.கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சத்யபால் டாங் மரணம்

Posted: 15 Jun 2013 11:13 PM PDT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சத்யபால் டாங், பஞ்சாபில் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 93. 1920ம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூர் மாவட்டத்தில் பிறந்த டாங், காஷ்மீர் பண்டித் விமலா என்பவரை மணந்து இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் குடியேறினார்.

மே. வங்காளத்தில் மருமகன்கள் தினத்துக்காக, அரசு ஊழியர்களுக்கு 1/2 நாள் விடுமுறை: மம்தா பானர்ஜி

Posted: 15 Jun 2013 11:03 PM PDT

மே. வங்காளத்தில் மருமகன்களை கவுரவிக்கும் வகையில் ஜமாஸ்சஷ்டி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அன்று ஒவ்வொரு மாமனாரும் தங்களது மகள் மற்றும் மருமகனை வீட்டுக்கு அழைத்து விருந்து அழைப்பார்கள். அன்று சிறப்பு பூஜைகள் நடத்தி மருமகனுக்கு விருந்துடன், பரிசு பொருட்களும் கொடுத்து கவுரவிப்பார்கள். இந்த விழா கடந்த 7-ந்தேதி மே.வங்காள மாநிலத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அரசு விடுமுறை இல்லை. எனவே, அரசு ஊழியர்கள் அனைவரும்

உத்திர பிரதேசம்: 3 கடத்தல்காரர்கள் கைது - 20 சிறுமிகள் மீட்பு

Posted: 15 Jun 2013 10:54 PM PDT

உத்திர பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் நேற்று போலீசார் ரயிலில் நடத்திய சோதனை நடத்தினர். இதில் 3 கடத்தல்காரர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் கடத்திய 20 சிறுமிகளையும் மீட்டனர்.

பாராளுமன்றம்- சட்டசபை தேர்தல்: காங். மூத்த மந்திரிகள் கட்சிப்பணிக்கு மாற்றம்

Posted: 15 Jun 2013 10:43 PM PDT

தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக் காலம் 2014-ம் ஆண்டு மே மாதம் முடிவடைகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருப்பதால் தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக இந்த ஆண்டு இறுதியில் டெல்லி உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலும் வருகிறது. சட்டசபை தேர் தலுடன் சேர்த்து முன்கூட்டியே பாராளுமன்ற தேர்தலையும் நடத்தலாமா என்பது பற்றி காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் கூறும்போது மத்திய அரசு 2014 வரை தனது முழு பதவிகாலமும் ஆட்சியில் நீடிக்கும் என்று தெரிவித்தனர்.

திருப்பதியில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: வி.ஐ.பி. தரிசனம் நிரந்தரமாக ரத்து

Posted: 15 Jun 2013 10:35 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது. இந்த நிலையில் சனிக்கிழமையான நேற்று திருப்பதியில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தர்ம தரிசன கவுண்டரில் அனைத்து கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பிய நிலையில் கோவிலுக்கு வெளியே 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் வரிசையில் காத்து நின்றனர். பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் 3 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் நின்றனர். தரிசனத்துக்கு 32 மணி நேரம் ஆகிறது என்பதால் வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு மறுநாள்தான் தரிசனம் கிடைக்கும் என கோவில்

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

Posted: 15 Jun 2013 09:41 PM PDT

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

மத்திய மந்திரி அஜய் மக்கான் ராஜினாமா

Posted: 15 Jun 2013 10:28 AM PDT

காங்கிரஸ் கட்சி பதவி மற்றும் மத்திய மந்திரி பதவிகளில் மாற்றம் செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, கட்சி பதவி வகிக்கும் சிலரை மந்திரி சபையிலும், மந்திரி பதவியில் இருக்கும் சிலரை கட்சி பணிகளுக்கும்

சூரிய மின்சக்தி மோசடி: கேரள முதல்வர் உம்மன்சாண்டி பதவி விலக பா.ஜனதா வலியுறுத்தல்

Posted: 15 Jun 2013 09:28 AM PDT

கேரளாவில் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவிகளை அமைத்து தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்ததாக ஒரு தனியார் நிறுவனம் மீது புகார்கள் கிளம்பியது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.பி.

ராஜஸ்தானில் தாறுமாறாக ஓடிய ராணுவ வாகனம் மோதி 2 பேர் பலி

Posted: 15 Jun 2013 09:02 AM PDT

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் பவோட்டா சப்ஜி மண்டி பகுதியில் இன்று சாலையில் சென்றுகொண்டிருந்த ராணுவ வாகனம், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. ஒரு

புதைந்துபோன மகேந்திரபர்வத நகரம் கம்போடியக் காடுகளில் கண்டுபிடிப்பு

Posted: 15 Jun 2013 08:49 AM PDT

1,200 ஆண்டுகளுக்கு முன்னால் பெருமையுடன் திகழ்ந்த நகரம் ஒன்று, அடர்ந்த கம்போடியக் காடுகளிடையே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள தொல்பொருள் மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இயக்குனர் ஜீன் பாப்டிஸ்ட் செவான்ஸ் தனது குழுவினருடன் இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாரா?: நிதிஷூக்கு பா.ஜ.க. சவால்

Posted: 15 Jun 2013 08:07 AM PDT

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் - பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல் மந்திரியாகவும், பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுஷில் குமார் மோடி துணை முதல் மந்திரியாகவும் இருந்து வருகின்றனர்.

சட்டவிரோத சுரங்க வழக்கு: குஜராத் அமைச்சருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை

Posted: 15 Jun 2013 07:17 AM PDT

குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியின் மந்திரிசபையில் மூத்த அமைச்சரான பாபு பொக்காரியா, சட்டவிரோதமாக சுரங்கத் தொழிலில் ஈடுபட்டதற்காக 3 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.

அமர்நாத் யாத்திரையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம்

Posted: 15 Jun 2013 06:34 AM PDT

இந்துக்களின் புனித ஸ்தலமாக விளங்கும் காஷ்மீர் அமர்நாத் குகைக்கோயிலை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இந்துக்கள் வருகை புரிகிறார்கள். இந்த யாத்திரையில் பனி லிங்கத்தை தரிசிக்க வரும் இந்து யாத்ரீகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தான்

காங்கிரஸ்-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி குறித்து தலைவர்கள் தீர்மானிப்பார்கள்: ராகுல் காந்தி

Posted: 15 Jun 2013 04:54 AM PDT

நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் நடவடிக்கைகளில் பாரதீய ஜனதா கட்சி இறங்கியுள்ளது. மோடியை முன்னிலைப்படுத்தும் முயற்சிக்கு ஆரம்பத்தில் இருந்தே விமர்சனம் செயது வந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய அங்கமான ஐக்கிய ஜனதா தளம்,

காஷ்மீரின் பதர்வா பள்ளத்தாக்கில் மீண்டும் நிலநடுக்கம்

Posted: 15 Jun 2013 04:53 AM PDT

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டம் பதர்வா நகரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 7.42 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 2.5 ரிக்டர் ஆக பதிவாகி உள்ளது என்று புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 5 வினாடிகள் வரை நீடித்த இந்த நிலநடுக்கத்தினால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக

பீகாரில் வெடிகுண்டு வைத்து அரசு பள்ளி தகர்ப்பு: மாவோயிஸ்டுகள் மீண்டும் அட்டகாசம்

Posted: 15 Jun 2013 04:03 AM PDT

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்களின் பிரச்சார யாத்திரையின்போது தாக்குதல் நடத்தி 28 பேரை பலிவாங்கிய மாவோயிஸ்டுகள், பீகாரில் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை பயணிகள் ரெயிலில் வந்த ரெயில்வே பாதுகாப்பு படையினரை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 பேர் பலியாகினர்.

நாளை தந்தையர் தினம்: இந்தியாவில் புகழ்பெற்ற தந்தையாக ஷாருக்கான் தேர்வு

Posted: 15 Jun 2013 03:57 AM PDT

தந்தையர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சாதி.காம் என்ற திருமண இணையதளம் இந்தியாவின் புகழ் பெற்ற தந்தைக்கான வாக்கெடுப்பை நடத்தியது. அதில் பாலிவுட்டின் பிரபல திரைப்பட நடிகர் ஷாருக்கான் மிகவும் பிரபலமான தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுமார், 11,000 பெண்கள் கலந்துகொண்ட இந்த வாக்கெடுப்பில் 34.83 சதவீகித வாக்குகளை பெற்று ஷாருக்கான் முதலிடம் பெற்றுள்ளார்.

பெண்ணுடன் தொடர்பு: உம்மன்சாண்டியின் தனி உதவியாளர்-பாதுகாவலர் நீக்கம்

Posted: 15 Jun 2013 03:39 AM PDT

கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனம் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவிகளை அமைத்து தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்ததாக புகார்கள் கிளம்பியது. இது தொடர்பாக நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.பி. நாயர் என்ற பிஜு ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சரிதா எஸ். நாயர் மீது பலரும் போலீசில்

இஷ்ரத் ஜகான் போலி என்கவுன்டர் வழக்கு விசாரணை தாமதம்: சி.பி.ஐ.க்கு கோர்ட் கடும் கண்டனம்

Posted: 15 Jun 2013 03:31 AM PDT

குஜராத் மாநிலத்தில் கடந்த 2004-ம் ஜூன் மாதம் ஆண்டு நடந்த போலி என்கவுன்டரில் 19 வயதான இஷ்ரத் ஜகான், ஜாவேத் செய்க் (எ) பிரனேஷ் பிள்ளை, அம்ஜத் அலி ரானா மற்றும் ஜீசன் ஜோகர் ஆகிய நான்கு பேர் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்டரை அம்மாநில குற்றப்பிரிவு போலீசார் நடத்தினர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™