Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கணினி அடிக்கடி RESTART அல்லது HANG ஆனால் என்ன செய்வது?

Posted: 25 Jun 2013 02:13 PM PDT

கணினி அடிக்கடி restart ஆவதற்கும் hang ஆவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் நாம் முக்கிய நான்கு காரணங்களை பாப்போம். 1 .) புதிதாக ஏதேனும் வன்பொருளை உங்கள் கணினியில் நிறுவியுருந்தால் அது நன்றாக பொருத்தப்பட்டு உள்ளதா என்று பரிசோதிக்கவும். நன்றாக நிறுவப்பட்டு இருந்தால் அதன் settings check பண்ணவும். 2 .) ram slot டில் இருந்து RAM ஐ எடுத்து அதன் காப்பர் பாகத்தை மென்மையாக துடைக்கவும். அதை துடைக்க pencil eraser பயன்படுத்துவது சிறந்தது. மீண்டும் மதர் போர்டில் இணைக்கும் போது கவனமாக இரண்டு லாக்கும் ...

உங்கள் கணினியில் ஹார்ட் டிஸ்க் நிரம்பிவிட்டது” என்ற தகவல் உங்கள் கணினி காட்டுகிறதா?

Posted: 25 Jun 2013 02:05 PM PDT

உங்கள் கணினியில் ஹார்ட் டிஸ்க் நிரம்பிவிட்டது" என்ற தகவல் உங்கள் கணினி காட்டுகிறதா? அது ஒன்றும் பெரிய பிரச்னையே அல்ல. இதோ அதற்கான எளிய தீர்வுகளை பார்ப்போம். முதலில், ஹார்ட் டிஸ்க்கில் உள்ள இடம் குறைந்துவிட்டதாக உங்களுக்கு ஒரு தகவல் வரும். உடனே என்னவோ, ஏதோவென்று பதற வேண்டாம். உங்கள் கணினியில் நீங்கள் எப்பொழுதாவது பயன்படுத்தவென பதிந்திருக்கும் மென்பொருள்களை நீக்குங்கள். அடுத்து temp கோப்புகளை நீக்குங்கள். அப்படி நீக்கியும் கூட, உங்களுடைய கணினியில் மீண்டும் 'ஹார்ட் டிஸ்கில் போதுமான இடம் இல்லை. ...

உதவி

Posted: 25 Jun 2013 01:53 PM PDT

விண்டோஸ் 8 இன் கிராக் பைல் தந்துதவுங்கள்

பாம்புக்கடி

Posted: 25 Jun 2013 12:44 PM PDT

பெரும்பாலான பாம்புகள் ஆபத்தற்றவை. ஆபத்தான சில இந்தியப் பாம்புகள். இந்திய கோப்ரா ராஜ நாகம் (King cobra) Banded krait Slender coral snake Russell viper Saw- scaled viper Common krait பாம்புகளிடம் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். சீண்டி விடுவதால் மட்டுமே பெரும்பாலான பாம்புகள் கடிக்கின்றன. பாம்புக் கடி ஏற்பட்டால்: அமைதியாக இருங்கள் பாம்பைப் பிடிக்க முயற்சிக்க வேண்டாம். கடிபட்ட இடத்திலிருந்து விஷம் பரவாமல் இருக்க Loove vplinˆ உபயோகிக்கவும். ரத்த ஓட்டத்தை அது கட்டுப்படுத்தக் ...

விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ்

Posted: 25 Jun 2013 11:46 AM PDT

விண்டோஸ் சிஸ்டத்தில் நாம் இயங்கத் தொடங்கியவுடன், பிற நிறுவனங்கள், இதில் இயங்கும் வகையில் தயாரித்து வெளியிட்டுள்ள பல சிஸ்டம் டூல்ஸ்களை நாம் பதிந்து இயக்கத் தொடங்குகிறோம். ஆண்ட்டி வைரஸ், பயர்வால், சிடி பதிதல், மானிட்டர் நிர்வாகம், பி.டி.எப். வியூவர் என இவை பலவகைப்படும். இவை அனைத்தும் இலவசமாகக் கிடைப்பதாலும், இவை குறித்த தகவல்கள் நமக்கு அதிகம் கிடைப்பதனாலும், இவற்றைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிறோம். ஒரு சிலர், இவை விண்டோஸ் சிஸ்டத்தில் இல்லாததனால், மற்ற நிறுவனங்கள் தயாரித்துத் தரும் இவற்றைப் ...

உத்தரகண்டில் பலி எண்ணிக்கை 5,000 ஆக உயர்வு: 15,000 பேர் கதி என்ன?

Posted: 25 Jun 2013 11:44 AM PDT

டேராடூன்: "உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்த பேய் மழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி, இறந்தவர்கள் எண்ணிக்கை, 5,000த்தை தாண்டியிருக்கும்' என, மாநில அமைச்சர் கூறியுள்ளார். ஆனால், முதல்வர், விஜய் பகுகுணா, "இறந்தவர்கள் எண்ணிக்கை, 1,000த்திற்குள் தான் இருக்கும்' என, தெரிவித்து வருகிறார். பலத்த மழை காரணமாக, நேற்று மீட்பு பணி துவக்கப்படவில்லை. இதனால், வெட்டவெளியில், பலத்த மழையில் தத்தளிக்கும், 15 ஆயிரம் பேர் கதி என்னவாயிற்று என தெரியவில்லை. பக்தர்கள் பாதுகாப்பு: கடந்த 17ம் தேதி, உத்தரகண்ட் மற்றும் ...

ஒருவருக்கு ஆரோக்கியமான உணவு என்றால் எப்படி இருக்க வேண்டும் ?

Posted: 25 Jun 2013 11:42 AM PDT

நம் இந்திய உணவு வகையை, பிறநாட்டவர்கள் ஆரோக்கியமானதாகவே கருதுகின்றனர். ஆனால் நாமோ அதை ஆரோக்கியம் அற்றதாக மாற்றிவிடுகிறோம். எல்லா உணவிலும் எண்ணெயை ஊற்றி, சர்க்கரையை கூட்டி, உப்பையும் அதிகரித்து, சுவைக்காக ஆரோக்கியம் அற்றதாக மாற்றுகிறோம். உதாரணமாக, நமக்கு காலை உணவுக்கு 3 இட்லி அல்லது எண்ணெய் இல்லாத தோசை எடுத்துக் கொள்ளலாம். மதியம் நிறைய காய்கறிகள், சிறிதளவு சாதம் எடுக்கலாம். இரவு 3 எண்ணெய் இல்லாத சப்பாத்தி அல்லது எண்ணெய் இல்லாத தோசை எடுக்கலாம். காலையில் தண்ணீர் சேர்த்த பாலில், சர்க்கரை இல்லாத ...

"மசாஜ்' செய்வதால் என்ன பயன்?

Posted: 25 Jun 2013 11:40 AM PDT

இயற்கை மருத்துவத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது மசாஜ். மசாஜ்க்கு மிக நீண்ட வரலாறு உள்ளது. இந்தியா, சீனா, கிரீஸ், ரோம், எகிப்து உட்பட பல நாடுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மசாஜ், நோய் தீர்க்கும் ஒரு சிகிச்சையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மசாஜ் செய்வது உடல் உறுப்புகள் மற்றும் உடல் அமைப்புக்கு எவ்வாறு நலம் பயக்கிறது என்பதை விரிவாக காண்போம். மசாஜ் செய்வதால், தோலில் ஏற்படும் நன்மைகள் ஏராளம். மசாஜ் செய்வதன் மூலம் தோலில் காணப்படும் துளைகள் விரிவடைந்து, உடலில் காணப்படும் தீய கழிவுகள் வியர்வை ...

தெய்வத்தாய்!

Posted: 25 Jun 2013 11:33 AM PDT

புராணங்களில், வாசவி என்ற பாத்திரம் இரண்டு இடங்களில் வருகிறது. இவளை வியாசரின் தாய், பராசர முனிவரின் துணைவி என்றும், தேவேந்திரனின் மனைவி இந்திராணி என்றும், பழைய நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. மகாபாரதத்தில், சத்தியவதி, மச்சகந்தி என்று அழைக்கப்பட்ட இவள், பிதுர்லோகத்தில் வசித்தவள். யோக சித்தி உடையவள். உலகிலுள்ள அனைத்து பிதுர்களும் (மறைந்த முன்னோர்) அவளை, தங்கள் மகளாக எண்ணி வளர்த்தனர். பிதுர்களுக்கு சேவை செய்வதை தன் கடமை யாகக் கொண்டிருந்தாள். ஒருமுறை, அவளது சேவையில் குறை கண்ட பிதுர்கள், அவளை பூலோகத்தில் ...

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி?

Posted: 25 Jun 2013 11:29 AM PDT

அளவிற்கு அதிகமாக வெளியேறும் வியர்வையால், நம் உடம்பின் நீர்ச் சத்து, சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகள் ஆகியவற்றின் அளவு குறைகிறது. இதனால், மயக்கம் ஏற்படும். உடல் உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயமும் உண்டு கோடை வெயிலின் உச்சமாக கருதப்படும், "கத்திரி' வெயில் முடிவடைந்து, ஒரு மாதம் ஆக உள்ளது. ஆனால், வெயிலின் தாக்கம் இன்னும் குறைந்ததாக தெரியவில்லை. கடந்த ஒரு வாரமாக, தமிழகத்தில் பரவலாக, 35 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. தமிழகத்தில், வெயில் ...

உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்

Posted: 25 Jun 2013 11:09 AM PDT

சுற்றுலா என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் இடம் என்றால் கடற்கரை தான். அதிலும் வெளிநாடுகளுக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதாக இருந்தால், அப்போது தேர்ந்தெடுக்கும் நகரங்களில் நிச்சயம் கடற்கரை இருப்பது போன்ற சுற்றுலா நகரங்களைத் தான் தேர்ந்தெடுப்போம். ஏனெனில் கடற்கரை உள்ள நகரங்களில் நேரம் போவதே தெரியாது. மேலும் அங்கு மிகவிம் பாதுகாப்பாகவும் இருக்க முடியும். அந்த வகையில் உலகில் ஒருசில கடற்கரை நகரங்கள் சிறந்தது என்று பெயர் பெற்றுள்ளது. மேலும் அந்த நகரங்கள் இரவில் பார்க்கும் போது மிகவும் ...

வங்கி வாடிக்கையாளர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய எட்டு கட்டணங்கள்

Posted: 25 Jun 2013 10:12 AM PDT

பல வாடிக்கையாளர்கள், வங்கிகளின் பொதுக் கட்டணங்களான ஆண்டு பராமரிப்புத் தொகை, மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்கள் தவிர, அவ்வங்கிகள், அவ்வப்போது விதிக்கும் பல வகையான இடை நிகழ்வுக் கட்டணங்களைப் பற்றி பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. வங்கிகள், பல வகையான சேவைகளுக்கு விதிக்கும் கட்டணங்களை, வங்கி போர்ட்டல் மற்றும் கணக்கு ஆரம்பிப்பதற்காக நிரப்பப்படும் படிவம் ஆகியவற்றில் காணலாம். இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் படியே, வங்கிகள் தங்கள் கட்டணங்களை நிர்ணயித்து, வெளியிடுகின்றன. சில சமயங்களில், அனைத்து ...

பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி

Posted: 25 Jun 2013 10:09 AM PDT

இப்போது கிடைக்கிற பெருங்காயம் -பெருங்காயமே இல்லை 1. நூற்றுக்கு நூறு வேதி பொருளும் -பெருங்காய வாசனை திரவுமும் -மைதா மாவும் தான் 2. டப்பாக்களில் -பாக்கெட்டுகளில் விற்கப்படும் பெருங்காய வெளி தோற்றத்தில் அதை அவர்கள் தெளிவாக எழுதி உள்ளார்கள் நாம் தான் அதை படிப்பதில்லை .. 3. அறுபத்தைந்து சதவீதம் பசை தான் உள்ளது .. உண்மையான பெருங்காயம் எப்படி இருக்கும் ?அதற்க்கு என்ன பெயர் ? பால்காயம் என்று எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும் இந்த பெருங்காயம் உபயோகித்தால் என்ன ஆகும் ? எல்லா ...

இந்திய விமானப்படை எங்களுக்குக் கற்றுக் கொடுத்த ஒரே மதம் 'இந்தியன்'!

Posted: 25 Jun 2013 10:06 AM PDT

டேராடூன்: உத்தர்காண்ட் பெருவெள்ளத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற களமிறங்கிய இந்திய விமானப் படையின் முதலாவது மீட்பு அணியின் கமாண்டராக பணியாற்றியவர் எஸ்.எம்.யூனூஸ். இமயமலை சுனாமியில் சிக்கியோ இந்து யாத்ரீகர்களை மீட்ட யூனூஸின் மகத்தான சேவை ஒரு இந்தியனாக பெருமை கொள்ள வைக்கும்.. ஜூன் 14-ந் தேதி முதல் உத்தர்காண்ட் மாநிலத்தில் மழை...ஜூன் 16-ந் தேதி சரஸ்வா விமானப்படை முகாமில் இருந்த 152வது ஹெலிகாப்டர் யூனிட்டில் கமாண்டர் அதிகாரியாக இருக்கும் யூனுஸுக்கு முதலில் தகவல் கிடைக்கிறது.. மிகப் பெரும் பேரழிவை ...

கணவருக்கு கோவில் கட்டி கும்பிடும் பெண்

Posted: 25 Jun 2013 10:02 AM PDT

ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழர்களின் பண்பாடு. கணவனே கண் கண்ட தெய்வம், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என பண்டைய தமிழக பெண்கள் வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றோ சமூகத்தில் நிலைமை மாறி விட்டது. குடும்ப உறவுகளின் ஆழமான பாசம் குறைந்து விட்டது. மனம் விட்டு பேசிக் கொள்வதற்கு கூட நேரமின்றி ஆண்களும், பெண்களும் உழைக்க தொடங்கி விட்டனர். பரஸ்பரம் பாசம், அன்பு செலுத்த முடியாத அளவில், அதற்கான நேரம் கூட இல்லாமல் உள்ளனர். ஆனால் இந்த அவசர காலத்திலும் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பணப்பாக்கம் ...

அதிசய குரங்கு பள்ளிக்கு செல்கிறது வீட்டுப்பாடம் எழுதுகிறது

Posted: 25 Jun 2013 09:59 AM PDT

பெங்களூர் : கர்நாடக மாநிலத்தில் ரூபா என்பவருக்கு சொந்தமான குரங்கு தினமும் பிள்ளை களுடன் பள்ளிக்கு செல்கிறது. வீட்டுப்பாடம் உள்பட அனைத்தும் செய்கிறது. மைசூர் மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகா, பிளுகலி கிராமத்திற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் உணவு தேடி குழந்தையுடன் தாய் குரங்கு ஒன்று வந்தது. சில நாட்கள் கிராமத்தில் தங்கி இருந்த தாய் குரங்கு, தனது பெண் குட்டி குரங்கை கிராமத்தில் அனாதையாக விட்டு சென்று விட்டது. தாயின் அரவணைப்பு இல்லாமல் தவித்த குட்டி குரங்கை கிராமத்தில் வசிக்கும் மகாதேவப்பா,ரூபா தம்பதியர் ...

சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில்

Posted: 25 Jun 2013 09:56 AM PDT

http://mmimages.maalaimalar.com/Articles/2013/Jun/d0e06dd9-7e58-4184-ae25-efd780a74fa7_S_secvpf.கிஃப் சவூதியில் மன்னர் ஆட்சிக்கு விடையளித்து தேர்தலின் மூலமாக மக்களாட்சியை கொண்டு வரவேண்டும் என போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு சவுதி நீதிமன்றம் 8 ஆண்டு சிறை தண்டனை அளித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் தனது நண்பர்கள் இருவரை கைது செய்த சவூதி அரசு அவர்கள் மீது தேச துரோக குற்றத்தை சுமத்தி 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதை எதிர்த்து அப்துல் கரீம் அல்-காதர் என்பவர் சவூதியில் மனித உரிமை அமைப்பை தொடங்கினார். இந்த ...

கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்!

Posted: 25 Jun 2013 09:46 AM PDT

சென்னை அருகே வங்கக் கடலுக்கு அடியில் எரிமலை இருக்கிறதா என்பது குறித்து 3 நிறுவனங்கள் ஆய்வு செய்து வருவதாக அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 100 முதல் 110 கிலோ மீட்டர் தொலைவில் கடந்த 1757ஆம் ஆண்டில் எரிமலை ஒன்று வெடித்து லாவாவை கக்கியது.. இதனால் கடல் நீரின் நிறம் மாறியது என்று ஒரு மாலுமி தமது பயணக் குறிப்பில் பதிவு செய்திருந்தார். மேலும் சில விஞ்ஞானிகளும் இணையதள பக்கங்களில் இதைப் பதிவு செய்திருப்பதுடன் வங்கக் கடலின் அடியில் பெயரிடப்படாத 0305=01 என்ற எண்ணால் குறிப்பிடப்படுகிற ...

அன்பே வலிக்கிறதா ...???

Posted: 25 Jun 2013 09:46 AM PDT

உறக்கத்தில்
உன் சத்தம் கேட்டு
எழுந்து விட்டேன்...
ஆனால்,
கனவில்லை
நினைவில்லை
நீயும் இல்லை...

என் இதயத்துக்குள் ...
ஓடி விளையாடியபோது ..
தடக்கி விழுந்த சத்தம் ...
அன்பே வலிக்கிறதா ...???

காதலின் .. அடிப்படைவிதி ...!!!

Posted: 25 Jun 2013 09:45 AM PDT

நான் உன்னை
கண்டவுடன் தான் ..
என்னைக்கண்டேன் ...
அதுதான் காதலின் ..
அடிப்படைவிதி ...!!!

காதல் மட்டும் தான்
தனித்துவமானது

காதலித்து ...
தோற்றவர்களைவிட ..
காதலை சொல்லாமல் ..
தோற்றவர்களே அதிகம் ...!!!
நானும் இதற்குள் அடங்குகிறேன் ...!!!

கஸல் 171

என்மன வானவில்லாகவே நீ ...

Posted: 25 Jun 2013 09:44 AM PDT

என் எண்ணும் எண்ணங்கள் என்றென்றும் உன்  வண்ணங்களே எண்ணி  முடிபதற்க்குள் என்னுள் எத்தனை எத்தனை மாற்றங்கள் எல்லாம்  உன் அழகின் தோற்றங்கள்  .... எட்டி எட்டி பார்த்தும்   எட்டாத இடத்தில்  இருந்து   எட்டி தொட முடியாத மேகங்கள் போலவே எட்டி எட்டி பார்க்கும்  ஜன்னல்  கூட ஏளனமாக சிரித்தது என்னை பார்த்து .... ஏழ்மையில்  என்னுள்ளே ஏற்படாத ஏக்கம் எளிமையில் என்னுள்ளே  இல்லாத ஏக்கம்  ஏனோ   என்றென்றும் உன்னை  கண்டு   ஏங்கியே நிற்கின்றேன்  இதை எண்ணியே திகைக்கின்றேன் ..... ஏடுகளில் ...

Ctrl+Home Not Working

Posted: 25 Jun 2013 09:42 AM PDT

Ctrl+Home Not Working in eegarai website. why?

சேலம் : 3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை

Posted: 25 Jun 2013 09:38 AM PDT

சேலம் அருகில் உள்ளது கொண்டப்பநாய்க்கன்பட்டி. இங்குள்ள அய்யன்கரடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 34). கூலி வேலைக்கு சென்று வந்தார். இவர் திருமணம் ஆகி தனியே வசித்து வந்தார். பின்னர் இவர் சுமதி (வயது 34) என்ற பெண்ணை 2-ம் திருமணம் செய்து கொண்டார். சுமதி ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆனவர். சக்திவேலை அவர் 3-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சுமதியின் நடத்தையில் சக்திவேல் சந்தேகப்பட்டு வந்தார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று ...

இரு உடல் ஒரு இதயம் ..

Posted: 25 Jun 2013 09:37 AM PDT

நீ இல்லாத நேரங்களில்,
என் இதயத்தோடு தான்
பேசிக்கொள்கிறேன்...
எனக்காக,
துடிப்பது அது தானே...
உன்னைப் போல...
காதல் என்பது ..
இரு உடல் ஒரு இதயம் ..
என்பதுதானே உண்மை ...!!!

உத்தரகண்டில் மீட்பு பணிகள் தீவிரம்: மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல்,

Posted: 25 Jun 2013 09:36 AM PDT

டேராடூன்: உத்தரகண்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை ‌தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் இன்றும் நடந்து வருகின்றன. மேலும் 300-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவுகளில் சிக்கியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.(என்.டி.எம்.ஏ.) கடந்த 17ம் தேதி, உத்தரகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பெய்த பேய் மழையால், காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி, கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி போன்ற புனித தலங்களில் வழிபாடு நடத்திக் கொண்டிருந்த பக்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களை சுருட்டியது.வெள்ளத்திலிருந்து ...

ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Posted: 25 Jun 2013 09:30 AM PDT



Cracy Russian motorcyclist....!
மாஸ்கோ சாலையில் இவருடன் பைக்கில் ஒரு திகில் பயணத்தை மேற்கொள்ளுங்கள். காணொளியை முழுத்திரையில் பார்க்கவும். (பி.கு: உங்களின் இதயத் துடிப்பு அதிகமானால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது)

காற்று இல்லையென்றாலும் நான் உயிர் வாழ்வேன்...

Posted: 25 Jun 2013 09:28 AM PDT

உன்னுடன் பேசுகிறேன்... உன்னுடன் நடக்கிறேன்... உன்னுடன் ஓடுகிறேன்... உன்னுடன் பாடுகிறேன்... உன்னுடன் ஆடுகிறேன்... உன்னுடன் சிரிக்கிறேன்... உன்னுடன் அழுகிறேன்... எல்லாமே உன்னுடன்தான்... என்னுடன் இருக்கும் உன்னை வேறு யாருக்கும் தெரிவதில்லை... நீ .... எ ன்னுடன் பேசுகிறாய் எ ன்னுடன் நடக்கிறாய் எ ன்னுடன் ஓடுகிறாய் எ ன்னுடன் பாடுகிறாய் எ ன்னுடன் ஆடுகிறாய் எ ன்னுடன் சிரிக்கிறாய் எ ன்னுடன் அழுகிறாய் எல்லாமே எ ன்னுடன்தான்... என்னை ஏதேதோ பெயர்களில் அழைக்கிறார்கள்... ...

உனக்கு பின் நான் இறக்க கூடாது ...

Posted: 25 Jun 2013 09:27 AM PDT

நினைக்கும் போது
உன் அருகினில் இருப்பவன்..
அல்ல நான்...
நீ அருகினில் இல்லாத போதும்
உன்னையே
நினைத்துக்கொண்டு இருப்பவன்..
இருப்பவன் தான் நான் ...

அழும் போது கண்ணீர்..
துடைப்பதில்லை ...
காதல்...
கண்ணீரை ஏற்படுத்தாமல் ..
இருப்பதுதான் காதல் ...

எனக்கு பின் நீ இறக்ககூடாது ...
உனக்கு பின் நான் இறக்க கூடாது ...

அன்னையையும் காதலியையும் ...

Posted: 25 Jun 2013 09:24 AM PDT

அன்னையை பார்க்கும் போது,
உன்னை மறந்து போகிறேன்...
ஆனால்,
உன்னை பார்க்கும் போது
அன்னையை நினைவுபடுத்துகிறாய்...
அன்னையும் நீயும் என் கண்ணில் வாழும் ...
தெய்வங்கள் ....
அன்னையையும் காதலியையும் ...
மதித்த காதல் தோற்றதே இல்லை ...!!!

உலக அதிசய பிறப்பு ..

Posted: 25 Jun 2013 09:21 AM PDT

காதல் வலியால்..
திட்டுகிறேன்
புலம்புகிறேன் ..
நீ கவிதை என்கிறாய் ...!!!

உலக அதிசய பிறப்பு ..
என் இதயம் உன்னோடு ..
ஒட்டி பிறந்தது ...

இத்தனை அழகோடு ..
பிறந்தாயே உன் வீட்டு
பூக்களுக்கு கோபம்
வரவில்லையா ...???

கஸல் 173

முகநூலில் ரசித்தவை!

Posted: 25 Jun 2013 09:20 AM PDT

முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!!
உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!!

நீ இல்லாத நேரங்களில்...

Posted: 25 Jun 2013 09:18 AM PDT

உன் கோபம்
உன்னை புரிந்தவர்களையும்
யோசிக்க வைக்கும்...
ஆனால்,
உன் அன்பு,
உன்னை புரியாதவர்களையும்
நேசிக்க வைக்கும்...

பிறப்பை
நான் தாயிடம்
உணர்ந்தேன்...
இறப்பை
நான் இறக்காமல்
உணர்ந்தேன்...
நீ இல்லாத நேரங்களில்...

EEGARAI FLASH NEWS

Posted: 25 Jun 2013 09:11 AM PDT

சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி



சீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்...

Posted: 25 Jun 2013 09:05 AM PDT

சீனா நாட்டு சமையல் கலைஞர்கள் முட்டைகளை சிறுநீரில் வேகவைக்கிறார்களாம்... கடந்த 1000 ஆண்டுகளாக இந்த முறையை பின்பற்றுகிறார்களாம். லு மிங் என்ற சமையல் கலைஞர் இதை பற்றி கூறும்போது,சிறுநீரை நாங்கள் பள்ளிகளில் இருந்து எடுத்து வருவோம்.பள்ளியில் மாணவர்கள் சிறு நீரை பக்கெட்களில் கழிப்பார்கள்,குறிப்பாக 10 வயதுக்குள் இருக்கும் பிள்ளைகளின் சிறுநீர்களை மட்டுமே இதற்கு பயன்படுத்துவோம் என்றார். ஒவ்வொரு நாளும் புதிதாக கழித்த சிறுநீர்களை மட்டுமே பயன்படுத்துவோம். சிறுநீரில் முட்டைகளை வேக வைத்தால் சுவையாகவும், ...

காதலர் தான் பாவம் ...!!!

Posted: 25 Jun 2013 09:00 AM PDT

என் ஊர் மாரியம்மனுக்கு
ஆயிரம் கண் பாட்டி ..
சொன்னது ...
உன் இருவிழியும்
அதற்கு சமன் .....

நங்கூரம் உடைந்த
கப்பல் தடுமாருவதுபோல்
நானும் தடுமாறுகிறேன் ...

காதல் எல்லோரிடமும்
வெற்றி பெறுவதும்மில்லை
தோற்பதுமில்லை ...
காதலர் தான் பாவம் ...!!!

மலாக்கா இரவு சந்தையை மூடக்கூடாது – முகமட் நஸ்ரி கோரிக்கை

Posted: 25 Jun 2013 08:41 AM PDT

மலாக்காவில் உள்ள  'ஜோங்கர் வாக்' என்ற இரவு சந்தையை மூட வேண்டாம் என்று சுற்றுல்லாத்துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜீஸ், மலாக்கா முதலமைச்சர் இட்ரிஸ் ஹாரோனை கேட்டுக்கொண்டுள்ளார். இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த நஸ்ரி, "இன்று முதலமைச்சரிடம் இது குறித்து பேசினேன். அங்கு போக்குவரத்து மற்றும் வாகனம் நிறுத்தும் பிரச்சனைகளைத் தீர்க்கும் பொருட்டு சோதனைக்காக இரவு சந்தை 4 வாரங்கள் மூடப்படுவதாகக் கூறினார்" என்று தெரிவித்துள்ளார். மேலும், இரவு சந்தை 4 வாரங்கள் மூடப்படுவதது ...

பென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி??

Posted: 25 Jun 2013 08:29 AM PDT

பென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி?? சில நேரம் பென் டிரைவில் எதாவது கோப்புகளை Copy செய்யும் போது "Cannot copy files and folders, drive is Write protected . Remove write protection or use another disk " என்று பிழைச்செய்தியைக்காட்டும். நாம் என்ன தான் போராடினாலும் காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்க்கு காரணம் வைரஸ்கள் Registry இல் மாற்றம் செய்து விடுவது ...

தமிழின் சில விவரங்கள்...2...இன்றைக்கு இஃது....!!

Posted: 25 Jun 2013 07:22 AM PDT

நண்பர்களே, இன்றும் கொஞ்சம் ...நான் முதலிலேயே சொன்னபடி என் நண்பர் ஒருவரது இவை எல்லாம்...இப்போது இரண்டாவது... "உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால், உன் குரல்வளை நெரிக்கப்படுகிறது என்று பொருள்!!" -பிரான்ஸ் பழமொழி கந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல். இதில் "திதத்தத்தத்" என்பது நான்கு அடிகளிலும் திருப்பித்திருப்பி வருகிறது. இதனை "மடக்கு" அல்லது "யமகம்" என்று சொல்வார்கள்.முதற்பாடலின் கடைச்சொல்லும் அடுத்தபாடலின் முதற்சொல்லும் ஒன்றாக இருக்கும். ஆகவே அக்காப்பிய வகையை "அந்தாதி" என்று சொல்வார்கள். ...

தமிழின் சில விவரங்கள்...1...

Posted: 25 Jun 2013 07:18 AM PDT

அன்பர்களே, தமிழைப் பற்றியும் தமிழர்தம் முறைகள் , மரபுகள் , பண்பாட்டு நலன்கள் பற்றியும் எனது நண்பர் ஒருவர் நிறைய தகவல்களை முயன்று சேகரித்து வருகிறார்... அவை அனைத்தையும் நான் இங்கு பகிர்ந்து கொள்ள நினைத்தாலும் சிலவற்றையாவது இங்கு தர எண்ணுகிறேன்... முதலில் இது... கி பி 1812 இல் முதன் முதலில் அச்சான திருக்குறள் - மூலபாட முகப்பும் கடவுள் வாழ்த்துப் பகுதியும். மர அச்செழுத்துக்களால் பதிக்கப்பட்ட இத்திருக்குறள் நூல் தான் முதன் முதலில் சுவடியிலிருந்து அச்சேறிய பண்டைத்தமிழ் இலக்கியமாகும். இதனுடன் ...

சாதித்த மோடி மீது பொறாமை: நிபந்தனை விதிக்கிறது உத்தரகண்ட்

Posted: 25 Jun 2013 05:35 AM PDT

டேராடூன்: "உத்தரகண்ட் மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் மாநில மக்களை, எந்த மாநில அரசும் தனிப்பட்ட முறையில் மீட்கும் செயல்களில் இறங்க, அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என, உத்தரகண்ட் காங்கிரஸ் அரசு தெரிவித்துள்ளது. ஏராளமான புனிதத்தலங்களை கொண்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்தில், கடந்த, 17ம் தேதி ஏற்பட்ட பேய் மழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி, 5,000த்திற்கும் மேற்பட்டோர் இறந்திருந்துள்ளனர்.உத்தரகண்ட் நிலவரம் பற்றி அறிந்ததும், கடந்த சனிக்கிழமை, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, தன் அதிகாரிகள் குழுவினருடன் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™