விழியே பேசு... |
- நேரு மொட்டை.... ராமஜெயம் கொலையாளிகள் சிக்குகின்றனர்?
- பிரதமர் மன்மோகன் சிங் நல்ல மனிதர்: அன்னா ஹசாரே
- ஹீரோவும் நானே.. வில்லனும் நானே - 'விஸ்வரூபம்' வெள்ளோட்டத்தில் கமல்!
- பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 2வது முறையாக சானியா-பூபதி ஜோடி வென்றது
- ஆங்கில படங்களுக்கு இணையான 'விஸ்வரூபம்' புதிய ட்ரைலர்
- பத்திரிக்கையாளர்- நித்தியானந்தா ஆதரவாளர்கள் மோதல்
- நான் ஒரு ஓரின சேர்க்கையாளன்! பார்த்திபன் அதிரடி!
- கோவையில் இலங்கை அமைச்சருக்கு தமிழ் அமைப்புகள் 'செம வரவேற்பு"
- இனியாவது நிறுத்திக் கொள்ளட்டும்! தா.பாண்டியன் மீது கலைஞர் பாய்ச்சல்!
- அமீரின் தாடிக்குப் பின்னால்..
- தயாரிப்பாளரை ஏமாற்றினாரா அஜித்?
- மீண்டும் நுழைவுத்தேர்வு முறையை எதிர்த்து 12-ந் தேதி ஆர்ப்பாட்டம்a
- அஜீத்துடன் நடித்தது அதிர்ஷ்டம்: பார்வதி ஓமனகுட்டன்
- எம்.பி.ஏ., எம்.சி.ஏ.படிப்புக்கு விண்ணப்பம் 11-ந் தேதி முதல் வழங்கப்படுகிறது
- காந்திக்குப் பின் மிகச் சிறந்த இந்தியர் 50 பேர் பட்டியலில் ரஜினி!
- பில்லா 2, துப்பாக்கி, வாலு: என்ன சம்பந்தம்?
- தந்தையின் செக்ஸ் தொல்லை, கொலைகள் பற்றிய பார்கவியின் ஆவேச பேட்டி(வீடியோ)
- என்னது ஃபேஸ்புக் காணாமல் போய்விடுமா?
- ராணி எலிசபெத்-ன் வைர விழாவில் சிறைத்தண்டனை பெற்ற இந்தியர் பங்கேற்றதால் சர்ச்சை
- சிரஞ்சீவி மீது சரமாரியாக செருப்பு வீசிய காங்கிரஸார்!
- சிமா சிறந்த நடிகர் விருது அஜீத்துக்கா, தனுஷுக்கா?
- கடற்படை ரகசியம் கசிந்த வழக்கு: தொழில் அதிபருக்கு சொந்தமான 10 இடங்களில் சி.பி.ஐ. சோதனை
- தந்தையின் செக்ஸ் தொல்லை, ஏகப்பட்ட மன உளைச்சலிலும் 1014 மார்க் வாங்கிய பார்கவி!
- சிம்பு, தனுஷ் மீண்டும் மோதல்: வாலு பட வசனத்தால் பரபரப்பு
| நேரு மொட்டை.... ராமஜெயம் கொலையாளிகள் சிக்குகின்றனர்? Posted: 07 Jun 2012 10:48 PM PDT ![]() முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் புதிய துப்பு துலங்கி இருப்பதாகவும் கொலையாளிகளை போலீசார் நெருங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.. ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டு 2 மாதங்கள் ஓடிவிட்டன. ஆனால் கொலைக்கான காரணம், யார் கொலையாளிகள் என்பது இன்னமும் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சாகவே இருந்து வந்தது. தற்போது புதிய ஆணையராக பொறுப்பேற்ற அமல்ராஜூம் இந்த வழக்கு விசாரணையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கெனவே அமைக்கப்பட்ட 7 தனிப்படைகளையும் அதிரடியாகக் கலைத்து புதிய தனிப்படை அமைத்தார். கடந்த 2 வாரங்களாக நடத்தப்பட்ட விசாரணையில் ராமஜெயத்துடன் நெருங்கிய தொடர்புடைய நபர் மீது போலீசாரின் சந்தேகப் பார்வை கிடுக்குப்பிடியாக இறுதியிருக்கிறது. உரிய ஆதாரங்கள் கிடைத்தால் அந்த நபர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம். இதனிடையே ராமஜெயம் கொலையானது முதல் தாடி வளர்த்து வந்த அவரது அண்ணன் நேரு திடீரென மொட்டை அடித்து தாடியை எடுத்த நிலையில் கடந்த சில நாட்களாக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அனேகமாக கொலையாளிகளை போலீசார் நெருங்கிவிட்டிருக்கலாம் என்ற உறுதியான தகவல் கிடைத்திருக்கும் நிலையிலெயே நேரு மொட்டை அடித்திருக்கக் கூடும் என்றும் திமுகவினர் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் ராமஜெயம் கொலையாளிகள் போலீசிடம் சிக்கி விட்ட்டதாகவும் அவர்கள் போலீசார் கஸ்டடியில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராமஜெயம் கொலை வழக்கில் ஓரிரு நாட்களில் திருப்பங்களை எதிர்பார்க்கலாம் என்றே கூறப்படுகிறது. |
| பிரதமர் மன்மோகன் சிங் நல்ல மனிதர்: அன்னா ஹசாரே Posted: 07 Jun 2012 10:42 PM PDT பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 15 அமைச்சர்களுக்கு ஊழலில் தொடர்பிருப்பதாக அன்னா ஹசாரே குழுவினர் கடந்த மாதம் குற்றம் சாட்டியிருந்தனர். குறிப்பாக, நிலக்கரி அமைச்சகம் பிரதமரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது ஊழல் நடந்ததாக, அத்துறையின் செலவு கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆடிட்டர் ஆகியோர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் பிரதமர் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டினர். இது தொடர்பாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேயிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது: மன்மோகன் சிங் நல்ல மனிதர் என தொடக்கம் முதலே கூறி வருகிறேன். அவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் இதுவரை இல்லை. அவருக்கு நேரம் தற்போது சரியில்லாமல் இருக்கிறது. ரிமோட் மூலம் இயக்கப்படுவது போல் அவர் இயங்குகிறார் என கூறியுள்ளார். பிரதமர் மீது சிறப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜூலை 1-ந்தேதி ஹசாரே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. |
| ஹீரோவும் நானே.. வில்லனும் நானே - 'விஸ்வரூபம்' வெள்ளோட்டத்தில் கமல்! Posted: 07 Jun 2012 10:31 PM PDT பெரும் பொருட்செலவில் கமல்ஹாஸன் எடுத்துள்ள விஸ்வரூபம் படத்தின் முதல் வெள்ளோட்டம் இன்று சிங்கப்பூரில் வெளியானது. ஒன்றரை நிமிடம் ஓடும் இந்த ட்ரைலரில், படத்தின் பிரமாண்டமும், செய்நேர்த்தியும் ரசிகர்களைக் கவர்வதாக உள்ளன. அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் இதுவரை பார்த்திராத இடங்களில் காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். கமலின் பரதநாட்டியமும் இதில் இடம்பெற்றுள்ளது. அந்த பரத நாட்டிய தாளக்கட்டுக்கு ஏற்ப பின்னர் துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தத்தை வைத்திருப்பது சுவாரஸ்யம். சிங்கப்பூரில் நடக்கும் ஐஃபா விழாவில் கமல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இந்த ட்ரைலரை இன்று வெளியிட்டார். படத்தின் சில காட்சிகளையும் அங்கே திரையிட்டுக் காட்டினார். ட்ரைலரின் முடிவில் கமல் சொல்கிறார்: 'ஹீரோவும் நானே... வில்லனும் நானே..' (படம் வந்தா தெரிஞ்சிடுமே!!) அவர் பேசுகையில், "13வது ஐஃபா விழாவில், பிராந்திய மொழி படங்களுக்கும் உரிய முக்கியத்துவம் தர முடிவெடுத்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. ஷபனா ஆஸ்மி, லிவ் உல்மான் போன்றோர் உள்ள இந்த மேடையில் நானும் இருப்பதை பெருமையாகக் கருதுகிறேன்," என்றார். |
| பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 2வது முறையாக சானியா-பூபதி ஜோடி வென்றது Posted: 07 Jun 2012 10:15 PM PDT பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியாமிர்ஸா-மகேஸ் பூபதி ஜோடி போலந்தின் கிளாடியா-மெக்ஸிகோவின் சான்டியாகோ ஜோடியை எதிர்கொண்டது. நேற்று நடந்த இந்த இறுதிப்போட்டியில் 7-6 (3), 6-3 என்ற நேர் செட்களில் போலந்து-மெக்சிக்கோ ஜோடியை வீழ்த்தி சேம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றி மூலம் கலப்பு இரட்டையர் பிரிவில் பிரெஞ்ச் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 2வது முறையாக சானியா-பூபதி ஜோடி பட்டம் வென்றுள்ளனர். சானியாவின் கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக் பாராட்டு தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியிலும் இதே வெற்றி தொடர தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த போட்டித்தொடரின் பெண்கள் ஒற்றையர் இறுதி போட்டிக்கு ரஷியாவின் மரியா ஷரபோவா, இத்தாலியின் சரா எர்ரானி ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் மோதும் இறுதிப்போட்டி வரும் சனிக்கிழமை நடைபெறும். |
| ஆங்கில படங்களுக்கு இணையான 'விஸ்வரூபம்' புதிய ட்ரைலர் Posted: 07 Jun 2012 10:06 PM PDT |
| பத்திரிக்கையாளர்- நித்தியானந்தா ஆதரவாளர்கள் மோதல் Posted: 07 Jun 2012 09:41 PM PDT நித்தியானந்தாவுக்கு வழஙகப்பட்ட சம்மனை ஏன் அவர் பெறவில்லை என்று கன்னட தொலைக்காட்சி சானலின் செய்தியாளர் கேள்வி கேட்டதால் அவரை வெளியேற்ற நித்தியானந்தா உத்தரவிட்டார். இதையடுத்து அவருக்கும், நித்தியானந்தா ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. நித்தியானந்தாவும், மதுரை ஆதீனமும் பெங்களூர் வந்து பிடதி ஆசிரமத்தில் தங்கியுள்ளனர். நேற்று இருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அமெரிக்காவச் சேர்ந்த நித்தியானந்தாவின் பெண் சீடர் ஆர்த்தி ராவ், நித்தியானந்தா மீது சுமத்தியுள்ள பாலியல் புகார் குறித்து கன்னட சுவர்ணா டிவியைச் சேர்ந்த நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த நித்தியானந்தா, பாலியல் நோய்க்காக ஆர்த்தி ராவ் என்னிடம் சிகிச்சை பெற வந்தார். அவருடன் எனக்கு குரு சிஷ்யை உறவு மட்டுமே உள்ளது. அவர் மீது அமெரிக்கா, தமிழகம், ராம நகரம், வாரணாசியில் வழக்குகள் உள்ளன. அவற்றில் வழங்கிய சம்மனை பெற்று கொள்ளாமல் தலைமறைவாகி உள்ளார் என்றார். அப்போது சுவர்ணா டிவி நிருபர் குறுக்கிட்டு, ஆர்த்தி ராவ் விவகாரம் தொடர்பாக 2001ல் உங்களுக்கு வந்த சம்மனை ஏன் வாங்கவில்லை? என்று கேட்டார். அதற்கு நித்தியானந்தா, எனக்கு சம்மன் எதுவும் வரவில்லை என்றார். அதையடுத்து அந்த நிருபர், அந்த சம்மன் நகல் என்னிடம் உள்ளது என்றார். மேலும் அதை நித்தியானந்தாவிடம் கொடுக்க எழுந்து சென்றார். இதையடுத்து அவரை அங்கிருந்து வெளியேற்றுமாறு நித்தியானந்தா உத்தரவிட்டார். இதையடுத்து நித்தியானந்தா ஆதரவாளர்கள் அவரைச் சூழ்ந்து தள்ளியபடி வெளியேற்றினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுவர்ணா டிவி நிருபரை வெளியேற்றியதைக் கண்டித்து பிற பத்திரிக்கையாளர்களும் எழுந்ததால் பத்திரிக்கையாளர் சந்திப்பு பாதியில் முடிந்தது. நித்தியானந்தா ஆதரவாளர்கள் சுவர்ணா டிவி நிருபரை சூழ்நது கொண்டு தாக்கியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 50க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன்... அதேசமயம், சுவர்ணா டிவி சேனலின் தலைவர் அஜீத் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து ஆசிரமத்தில் தாக்குதல் நடத்தியதாக நித்தியானந்தா தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதில் ஆசிரம நிர்வாகி ஆத்மபிரபானந்தாவும், இன்னொருவரும் காயமடைந்ததாக அது கூறியுள்ளது. சுவர்ணா டிவிக்குச் சொந்தமான வேனில் 50க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் வந்ததாகவும், தங்களை கர்நாடக நவ நிர்மான சேனாவைச் சேர்ந்த தொண்டர்கள் எனக் கூறிக் கொண்டதாகவும், நித்தியானந்தாவை எதிர்த்து அவர்கள் கோஷமிட்டதாகவும் நித்தியானந்தா தரப்பு கூறுகிறது. அவர்களைத் தடுத்து நிறுத்தி ஆசிரம நிர்வாகிகள் விசாரிக்க முயன்றபோது அந்த குண்டர்கள் தாக்குதலில் இறங்கியதாகவும், மயத்தினாந்தா என்பவரை முதலில் தாக்கியதாகவும், பிறகு ஆசிரமத்தைச் சேர்ந்த ஒரு பிரம்மச்சாரி வைத்திருந்த கேமராவைப் பிடுங்கி சேதப்படுத்தியதாகவும் கூறுகிறார்கள். அதன் பிறகு பெரிய கல்லை எடுத்து ஆத்மபிரபானந்தாவைத் தாக்கியதால் அவரது தலையிலிருந்து ரத்தம் கொட்டியதாகவும் நித்தியானந்தா தரப்பு கூறுகிறது. இந்த வன்முறையை பிடதி போலீஸார் வேடிக்கை மட்டுமே பார்த்ததாகவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் நித்தியானந்தா தரப்பு கூறுகிறது. |
| நான் ஒரு ஓரின சேர்க்கையாளன்! பார்த்திபன் அதிரடி! Posted: 07 Jun 2012 09:17 PM PDT இசைஞானி இளையராஜாவின் இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் பிறந்தநாள் விழா நேற்று (4.6.2012) மியூசிக் அகாடமியில் நடந்தது. விழாவில் 'பால் நிலாப் பாதை' என்ற நூலை நடிகர் கமல்ஹாசன் வெளியிட தமிழ்நாடு அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் வெ.இறையன்பு பெற்றுக்கொண்டர். 'எனக்கு எதுவோ உனக்கும் அதுவே' என்ற நூலை கவிஞர் மு.மேத்தா வெளியிட கவிஞர் முத்துலிங்கம் பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து பிறந்தநாள் கேக்கை இளையராஜா வெட்டி கமல்ஹாசனுக்கு ஊட்டினார். இதில் நடிகர் பார்த்திபனும் கலந்து கொண்டு இளையராஜாவை வாழ்த்தினார். இது குறித்து தனது முகநூலில் பார்த்திபன் ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். நான் ஒரு ஓரின சேர்க்கையாளன்!!! உடல் ரீதியாக அல்ல, மனரீதியாக. ஒரு வார்த்தை ஏற்கனவே நம்முள் பதிவு செய்திருக்கும் அர்த்தத்தை மீறி புதிதாய் ஒன்றை விதைப்பதற்குள், அதிர்ச்சி முட்கள் முளைத்து விடுகின்றன. ஓரின சேர்க்கை பற்றி புதிதாய் நான் ஒன்று சொன்னாலும், அது 'இனத்தோடு இனம் சேரும்', 'கற்றோரை கற்றோரே காமுறுவர்' அடிப்படையிலேயே. ஆற்றல் மிகுந்த ஒரு கலைஞனின் ஆளுமையில், அதை தன்னுள் வாங்கிக்கொள்ள ஏங்கும் கலைஞனின் மனம் கவ்விக்கொள்கிறது. பச்சையாக சொல்வதானால் மனதோடு மனம் கலவிக் கொள்கிறது. ஈர்ப்பால் காதல் கொள்ள எதிர்பால் தேவை படுவதில்லை.இதைத்தான் ஓரின சேர்க்கையாளன் என்றேன். மகா கலைஞன் இளையராஜாவின் இசை மீது நான் கொண்டிருக்கும் காதலை இவ்வாறு மொழி பெயர்த்தேன்... என்று தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார் பார்த்திபன். |
| கோவையில் இலங்கை அமைச்சருக்கு தமிழ் அமைப்புகள் 'செம வரவேற்பு" Posted: 07 Jun 2012 09:05 PM PDT கோயம்புத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த இலங்கை விவசாயத்துறை அமைச்சர் ரெஜினால்டு கூரேக்கு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் அவர் கோயம்புத்தூரை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இலங்கை அமைச்சர் ரெஜினால்டு கோவையில் முகாமிட்டிருப்பது தெரியவந்ததும் மதிமுக, பெரியார் தி.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் அவர் தங்கியிருந்த ஹோட்டல் முன்பாக கறுப்புக் கொடிகளுடன் கூடி போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர் கோயம்புத்தூர் நகரைவிட்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஏற்கெனவே இலங்கை அமைச்சர்கள் தமிழகம் வரும்போது முன்கூட்டியே சொல்லிவிட்டுத்தான் வரவேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. |
| இனியாவது நிறுத்திக் கொள்ளட்டும்! தா.பாண்டியன் மீது கலைஞர் பாய்ச்சல்! Posted: 07 Jun 2012 08:55 PM PDT அதிமுகவை திருப்தி செய்ய வேண்டும் என்பதற்காக திமுக மீது தேவையில்லாமல் குறை சொல்வதை தா.பாண்டியன் இனியாவது நிறுத்திக் கொள்ளட்டும் என்று திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கலைஞர் வெளியிடுட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்துக்குமரனின் மரணத்தின் காரணமாகவே அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. அப்போது தோழமைக் கட்சியாக போட்டியிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட்டுக்குத்தான் அரசியல் நாகரீகப்படி அத்தொகுதியில் போட்டியிட அதிமுக வாய்ப்பளித்திருக்க வேண்டும். ஆனால் அதிமுக தோழமைக் கட்சிகளையெல்லாம் தூசுக்கு கூட மதிப்பதில்லை. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவரை பொது வேட்பாளராக கருதி ஆதரிக்கலாம் என்று மார்க்சிஸ்ட் கட்சி கூறியும் அதை அவர்கள் ஏற்கவில்லை. அந்த அளவிற்கு சுயமரியாதையை பெருந்தன்மையோடு ஆளும் கட்சிக்கு விட்டுக்கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியனும், நல்லக் கண்ணுவும் மரியாதை நிமித்தமாக ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியுள்ளனர். புதுக்கோட்டை தொகுதியில் வெற்றிù பற்று துர்மரணம் அடைந்த முத்துக்குமரனின் மனைவி, குழந்தைகளையும் சந்திக்க வைத்திருக்கின்றனர். இதெல்லாம் அவர்கள் கட்சிப் பிரச்சனை. ஆனால் தா.பாண்டியன் தேவையில்லாமல் ஈழத் தமிழர் சாவோடு என்னைத் தொடர்பு படுத்து ஏன் பேச வேண்டும்? (ஈழத் தமிழருக்கு திமுக செய்துள்ள செயல்களை எல்லாம் பட்டியலிட்டுள்ளார்). இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின் போது, அதைத்தடுத்து நிறுத்த திமுக மேற்கொண்ட முயற்சிகளால் பிரதமர் மன்மோகன் சிங், ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் போன்றவர்கள் ராஜபக்சேவிடம் நேரடியாக தொடர்பு கொண்டு பேசினார்கள். திமுகவின் அழுத்தத்தின் விளைவாக ராஜபக்சே அரசு 48 மணி நேர போர் நிறுத்தம் அறிவித்தது. இதையெல்லாம் மறந்துவிட்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தர அதிமுக ஒப்புக்கொண்டுள்ளதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ள நிலையில் அதிமுகவை திருப்தி செய்ய வேண்டுமென்பதற்காகவே திமுக மீது தேவையில்லாமல் குறை சொல்வதை தா.பாண்டியன் இனியாவது நிறுத்திக் கொள்ளட்டும். இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார். |
| Posted: 07 Jun 2012 08:32 PM PDT 'ஆதிபகவன்' படத்திற்காக ஜெயம்ரவியிடம் நீளமாக தாடி வளர்க்க சொன்னார் அமீர். இப்போது படப்பிடிப்பு முடிந்த தருவாயில் அமீர் தாடியோடு சுற்றி வருகிறார். தமிழ் திரையுலகில் தற்போது நடைபெறும் பெரும்பாலான நிகழ்ச்சியில் அமீர் தாடியுடன் தான் கலந்து கொண்டு வருகிறார். ஆடிக்கு பின்னால் ஆவணி.. தெரியும்.. அமீரின் தாடிக்கு பின்னால்..? அமீர் அடுத்ததாக ஒரு படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார். அந்த வேடத்திற்காக தான் நீளமாக தாடி வளர்த்து இருக்கிறார். படத்திற்கு 'ஜிகாத்' என்று தலைப்பிட்டு இருக்கிறார். தலைப்பு சர்ச்சையை கிளப்புவது போல இருந்தாலும், படத்தின் கதை சாதாரண கதை தானாம். அதுமட்டுமல்லாது கமலுடன் இணையும் படம் குறித்து கமல் இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லையாம். 'ஜிகாத்' படப்பிடிப்பு நடைபெறும்போது கமல் தேதிகள் ஒதுக்கினால், 'ஜிகாத்' படத்தினை ஓரங்கட்டி விட்டு, கமலை இயக்க திட்டம் இருக்கிறதாம். கமல் படத்தினை முடித்து விட்டு 'ஜிகாத்' படத்தினை திரும்பவும் துவங்குவாராம். இதற்காகத் தான் இந்த கதையில் தானே நாயகனாக நடிக்க முடிவு செய்தாராம் அமீர். |
| தயாரிப்பாளரை ஏமாற்றினாரா அஜித்? Posted: 07 Jun 2012 07:55 PM PDT நடிகர் அஜித்தின் ரசிகர்கள் அவரது நடிப்பிற்காக மட்டும் ரசிகர்களாக இல்லை அவரது சாதாரண மனித இயல்புகளுக்காகவும் தான். ரசிகர்கள் மட்டுமின்றி அஜித்துடன் இணைந்து நடிக்கும் நடிகர் நடிகைகள் உள்பட அனைவரும் அஜித்தை புகழ்ந்து பேசும் போது ஒரு தயாரிப்பாளர் மட்டும் அஜித் என்னை ஏமாற்றிவிட்டார் என அஜித் மீது குற்றம் சுமத்துகிறார். வித்தகன் படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தான் அவர். கே.எஸ்.ரவீந்திரன் தயாரிப்பில் அஜித் நடித்து 2003-ல் வெளியான படம் 'என்னை தாலாட்ட வருவாளா'. 1996-ல் துவங்கிய இந்த படம் தயாரிப்பாளரிடம் பணம் இல்லாததால் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, ஒருவழியாக 2003-ல் ரிலீஸானது. தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் 'என்னை தாலாட்ட வருவாளா' படத்திற்கு பண உதவி செய்ததாக கூறுகிறார். மேலும் அஜித்திடம் 6 லட்ச ரூபாயை தனது அடுத்த படத்தில் நடிக்க அட்வான்ஸ் பணமாக கொடுத்ததாகவும் கூறுகிறார் மாணிக்கம் நாராயணன். அந்த பணத்திற்கெல்லாம் வட்டி போட்டு கூட்டி கழித்து பார்த்தால் பில் ஒரு கோடியை தாண்டுகிறதாம். இந்த பணத்தை வாங்க எங்கு வேண்டுமானாலும் சென்று முறையிட தயாராகவிருக்கிறாராம். ஆனால் அஜித் தரப்போ இதை காதில் வாங்கிக்கொள்வதாக இல்லை. அஜித்தின் மேனேஜர் இதை பற்றிப் பேசி இந்த அவதூறு செய்தியை பெரிதாக்க விரும்பவில்லை எனக் கூறுகிறார் |
| மீண்டும் நுழைவுத்தேர்வு முறையை எதிர்த்து 12-ந் தேதி ஆர்ப்பாட்டம்a Posted: 07 Jun 2012 07:48 PM PDT திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியா முழுவதற்கும் ஒரே கல்விக் கொள்கை, ஒரே நுழைவுத் தேர்வு என்பது போன்ற கூட்டாட்சித் தத்துவத்திற்கே உலை வைக்கும் திட்டத்தை மத்திய மனித வள அமைச்சகம் செய்வது தவறான நிலைப்பாடாகும். மறைமுகமாக மாநிலப் பட்டியலை மத்தியப் பட்டியலுக்குக் கொண்டுவரும் மகாசூழ்ச்சியாகும். நுழைவுத் தேர்வை ரத்து செய்ததன் மூலமாகத்தான் தமிழ்நாட்டில் பெற்றோர்கள் நிம்மதி அடைந்தனர். கிராமப்புற மாணவர்களுக்கும், ஏழை, எளிய மாணவர்களுக்கும் ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. மீண்டும் இந்த ஏற்பாட்டின்மூலம் ஒருவகை பன்முக கலாசாரம், மொழி, கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றம் இவைகளுக்கு ஆப்பு அடிக்கப்படுகிறது. இதனை முழு மூச்சாக எதிர்த்து தடுத்து நிறுத்தவேண்டியது கட்சி வேறுபாடுகளைத் தாண்டிய முக்கிய கடமையாகும். முதல்-அமைச்சரும் இந்த நுழைவுத் தேர்வு ஏற்பாட்டை எதிர்த்துள்ளார். எனினும், இப்போதும் எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும். இதைக் கண்டித்து வருகிற 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் மாணவர்கள், இளைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார் |
| அஜீத்துடன் நடித்தது அதிர்ஷ்டம்: பார்வதி ஓமனகுட்டன் Posted: 07 Jun 2012 07:25 PM PDT கோவையில் இன்று தனியார் நிறுவன நிகழ்ச்சியில் பில்லா-2 பட கதாநாயகி பார்வதி ஒமனகுட்டன் கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நான் தமிழில் முதன் முதலாக நடித்துள்ள 'பில்லா-2' படம் சிறப்பாக வந்துள்ளது. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த படத்தில் நடிகர் அஜீத்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகும். நடிகர் அஜீத் ஜென்டில்மேன். மிகப்பெரிய நடிகரான அவர் எந்த தோரணையும் இல்லாமல் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் எளிமையாக காணப்பட்டார். எல்லோரிடமும் மிகவும் கலகலப்பாக பேசினார். அவருடைய நடவடிக்கை வியக்கும் வகையில் இருந்தது. இந்த படம் தமிழ்-தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. 'பில்லா-2' படம் வெளிவந்ததும் தமிழ் திலையுலகில் எனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேற்கண்டவாறு நடிகை ஓமனகுட்டன் கூறினார். |
| எம்.பி.ஏ., எம்.சி.ஏ.படிப்புக்கு விண்ணப்பம் 11-ந் தேதி முதல் வழங்கப்படுகிறது Posted: 07 Jun 2012 06:48 PM PDT அரசு, அரசு உதவிபெறும், தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் கல்லூரிகளில் 11-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை வழங்கப்பட உள்ளன. படிவங்களை சென்னை மாநில கல்லூரி, அரியலூர், கோவை,கடலூர், கரூர், மயிலாடுதுறை, நாமக்கல், பரமக்குடி, கும்பக்கோணம், ஊட்டி, திருவாரூர், திருத்தணி, திருப்பூர், விழுப்புரம்,திருவண்ணாமலை ஆகிய இடங்களில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை 30-ந் தேதிக்குள் செயலாளர், தமிழ்நாடு எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மாணவர் சேர்க்கை-2012, அரசினர் பொறியியல் கல்லூரி, கோவை என்ற முகவரிக்கு கிடைக்கும்படி அனுப்பி வைக்கவேண்டும். கலந்தாய்வு ஜூலை 2-வது வாரத்தில் கோவையில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் நடைபெறும். இதற்கான தபால் உரியவர்களுக்கு மட்டும் அனுப்பப்படும். இந்த தகவலை தொழில்நுட்ப கல்வி ஆணையகம் தெரிவித்துள்ளது. |
| காந்திக்குப் பின் மிகச் சிறந்த இந்தியர் 50 பேர் பட்டியலில் ரஜினி! Posted: 07 Jun 2012 09:06 AM PDT தேசப் பிதா என கொண்டாடப்படும் காந்தியடிகளுக்குப் பிறகு இந்தியாவின் மிகச் சிறந்த மனிதர் யார் (Greatest Indian after Mahatma Gandhi)? இந்தத் தலைப்பில் ஒரு வாக்கெடுப்பை நடத்தி வருகிறது ஹிஸ்டரி மற்றும் சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சிகள். அவுட்லுக் பத்திரிகை ஆதரவுடன் இந்த வாக்கெடுப்பு நடக்கிறது. தலைவர்களின் சர்வதேச புகழ், மக்கள் மீதான அவர்களின் தாக்கம், உதாரணத்தன்மை என பல விஷயங்களின் அடிப்படையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பிபிசியின் வாக்கெடுப்பு விதிகளின் அடிப்படையில் நடத்தப்படும் இதில் 50 இந்திய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அண்ணல் அம்பேத்கர், சர்தார் வல்லபாய் பட்டேல், ஜவஹர்லால் நேரு, அன்னை தெரசா, அன்னை இந்திரா காந்தி, என தலைவர்களும் மனித நேய மாந்தர்களும் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் நமது சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு நபரும் தனது பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தி 10 தலைவர்களை வரிசைப்படுத்தலாம். அதாவது 10 வாக்குகளை அளிக்கலாம். இதுவரை 215332 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதன் அடிப்படையில், இப்போது 12வது இடத்தில் உள்ளார் ரஜினி. முதலிடத்தில் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளார். வாக்குகளின் அடிப்படையில் இந்த நிலை மாறிக் கொண்டிருக்கும். |
| பில்லா 2, துப்பாக்கி, வாலு: என்ன சம்பந்தம்? Posted: 07 Jun 2012 06:51 AM PDT பில்லா 2 படம் ரிலீஸாகும் தேதியில் தான் துப்பாக்கி மற்றும் வாலு ஆகிய படங்களின் டீசர்களும் வெளியாகின்றன. சக்ரி டோலாட்டி இயக்கத்தில் அஜீத் குமார், பார்வதி ஓமனக்குட்டன், புரூனா அப்துல்லா நடித்துள்ள பில்லா 2 படம் வரும் 22ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வரும் 22ம் தேதி நடிகர் விஜய் தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய் நடித்துள்ள துப்பாக்கி மற்றும் சிம்புவின் வாலு ஆகிய படங்களின் டீசர்களையும் பில்லா 2 படம் ரிலீஸாகும் அதே தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனராம். துப்பாக்கி பட வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் வாலு படம் அண்மையில் தான் துவங்கப்பட்டது. அஜீத் ரசிகர்களுக்கு சர்பிரைஸாக வாலு பட டீசரை பில்லா 2 இடைவேளையில் விட சிம்பு திட்டமிட்டுள்ளார் என்று நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த ஆண்டில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் பில்லா 2 என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் பிறந்தநாள் அன்று ரிலீஸாவதால் பில்லா 2 அவரின் பிறந்தநாள் பரிசு என்று கூட சொல்லலாம். |
| தந்தையின் செக்ஸ் தொல்லை, கொலைகள் பற்றிய பார்கவியின் ஆவேச பேட்டி(வீடியோ) Posted: 07 Jun 2012 06:11 AM PDT |
| என்னது ஃபேஸ்புக் காணாமல் போய்விடுமா? Posted: 07 Jun 2012 05:41 AM PDT இன்றைய இளைஞர்கள் பலரும் உலவிக் கொண்டிருப்பது ஃபேஸ்புக்கில்தான்! சொந்தக் கதை, சோகக் கதையென சகட்டுமேனிக்கு ஸ்டேட்டஸ் போடுவதை ஸ்டேட்டஸாக வைத்திருப்பவர்கள் பலரும் உண்டு! யாகூ இணையதளம் பிரபலமாக இருந்தபோது பலரும் யாகூவில்தான் வலம் கிடந்தனர். அதேபோல் இப்போது பேசப்படக் கூடிய ஒன்றாக ஃபேஸ்புக் உருவெடுத்திருக்கிறது. ஆனால் இந்தப் பெருமை எத்தனை காலத்துக்குத்தான்? என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. யாகூ நிறுவனமானது இப்போது 13 ஆயிரம் பணியாளர்களைக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் லாபத்துலதான் போகிறது என்றாலும் எதிர்பார்த்த லாபம் கிடையாது. இந்த கதிதான் ஃபேஸ்புக்குக்கும் வந்துவிடும் என்கின்றனர். ஏன் ஃபேஸ்புக் மேல இந்த பொருளாதார வல்லுநர்களுக்கு கொலை வெறி என்கிறீர்களா? ஃபேஸ்புக் பங்குச் சந்தையில் கால் பதித்தபோது பெருமையாக சொன்னது 42 கோடிப் பேர் செல்போன் மூலம் ஃபேஸ்புக்கை பயன்படுத்தினார்கள் என்று.. சரி பயன்படுத்தினால் என்ன? ஃபேஸ்புக்குக்கு என்ன வருமானம் கிடைத்தது? அதுதான் இப்போது முன் உள்ள கேள்வி. செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவர்களிடமிருந்து எப்படி வருவாய் பெறுவது என்பதற்காக பல யுக்திகளை அந்நிறுவனம் கையாண்டு வருகிறது. ஆனாலும் என்னவோ ஒவ்வொரு நாளும் ஃபேஸ்புக்கின் சந்தை மதிப்புதான் தொடர்ந்தும் குறைந்து வருகிறது. இப்படியே காலந்தள்ளுமேயானால் நிச்சயம் ஃபேஸ்புக் என்ற தளமே இனி ஐந்து அல்லது 8 ஆண்டுகளில் காணாமலே போய்விடும் என்கின்றனர் வல்லுநர்கள். |
| ராணி எலிசபெத்-ன் வைர விழாவில் சிறைத்தண்டனை பெற்ற இந்தியர் பங்கேற்றதால் சர்ச்சை Posted: 07 Jun 2012 05:02 AM PDT இங்கிலாந்து ராணி எலிசபெத் முடிசூடி 60 ஆண்டுகள் நிறைவடைந்ததற்கான வைர விழா சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது. கடந்த ஞாயிறன்று நடந்த விழாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட வி.ஐ.பி.க்கள் மட்டுமே கலந்து கொண்டனர். விழாவில், செக்ஸ் புகாரில் சிக்கிய வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவரும் கலந்து கொண்டது தற்போது தெரிய வந்துள்ளது. ஹர்பிந்தர் சிங் ராணா (52) என்ற அவர், கடந்த 1980ம் ஆண்டுகளில் டாக்டர் போல் நடித்து பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார். இதற்காக அவர் சிறைத் தண்டனையும் பெற்றார். அவர், எலிசபெத் ராணியின் விழாவில் கலந்து கொண்டது, இங்கிலாந்தில் பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஹர்பிந்தர் சிங்கிடம் கேட்டபோது, இளவரசர் சார்லசின் அழைப்பின் பேரிலேயே இவ்விழாவில் கலந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார். |
| சிரஞ்சீவி மீது சரமாரியாக செருப்பு வீசிய காங்கிரஸார்! Posted: 07 Jun 2012 04:52 AM PDT நடிகர் சிரஞ்சீவி பிரசாரம் செய்த இடத்தில் தொண்டர்கள் தொடர்ந்து கோஷமிட்டதால் அதைக் கண்டித்தார் சிரஞ்சீவி. இதனால் ஆத்திரமடைந்த தொண்டர்கள், அவர் மீது சரமாரியாக செருப்புகளைக் கழற்றி வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவில் 18 சட்டசபைத் தொகுதிகளுக்கும், ஒரு லோக்சபா தொகுதிக்கும் ஜூன் 12ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற காங்கிரஸ் கடும் பிரயத்தனம் மேற்கொண்டுள்ளது. தற்போதைய நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸே முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று கர்னூல் மாவட்டம் எம்மிகலூரில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகர் சிரஞ்சீவி, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆகியோர் திறந்த வேனில் சென்று பிரச்சாரம் செய்தனர். சிரஞ்சீவி பேசிக் கொண்டிருந்தபோது மைக் வேலை பார்க்கவில்லை. இதனால் அவர் பேசுவது தொண்டர்களுக்குக் கேட்கவில்லை. இதனால் தொண்டர்கள் கோஷமிட்டனர். சத்தமாக பேசுமாறு கோரின். இதனால் டென்ஷன் ஆன சிரஞ்சீவி, யாரும் கோஷம் போடக் கூடாது, சத்தம் போடக் கூடாது. சத்தம் போட்டால் நான் பேச மாட்டேன், போய் விடுவேன் என்றார். பேசுவது கேட்கவில்லை என்று கூறினால் நம்மையே மிரட்டுகிறாரே என்று கோபமடைந்த தொண்டர்களும், பெண்களும் காலில் போட்டிருந்த செருப்புகளை கழற்றி சரமாரியாக சிரஞ்சீவி மீ்து வீசியடித்தனர். ஏவுகணை போல செருப்புகள் தன் மீது வந்து விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த சிரஞ்சீவி செருப்புகளைத் தடுக்கப் பார்த்தார். முடியவி்ல்லை. சில செருப்புகள் ஆந்திர முதல்வர் மீதும் வந்து விழுந்தன. இதையடுத்து பிரசாரம் நிறுத்தப்பட்டது. ஆந்திர முதல்வரும், சிரஞ்சீவியும் அங்கிருந்து தப்பி ஓடாத குறையாக கிளம்பிச் சென்றனர். |
| சிமா சிறந்த நடிகர் விருது அஜீத்துக்கா, தனுஷுக்கா? Posted: 07 Jun 2012 04:35 AM PDT துபாயில் நடக்கவிருக்கும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கு விழாவில் சிறந்த நடிகர் விருதைப் பெறப்போவது அஜீத் குமாரா, தனுஷா என்று தெரியவில்லை. தென்னிந்திய படங்களின் பெருமையை உலகிற்கு பரைசாற்றும் வகையில் இந்த ஆண்டு முதல் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் துபாயில் நடக்கிறது. நிகழ்ச்சியை நடிகர் மாதவன், நடிகை லக்ஷ்மி மஞ்சு தொகுத்து வழங்குகிறார்கள். இதில் சிறந்த தமிழ் படத்திற்கான விருதுக்கு தனுஷின் மயக்கம் என்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மயக்கம் என்ன படத்தில் நடித்த தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதுக்கும், ரிச்சா சிறந்த நடிகைக்கான விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். தனுஷுக்கு போட்டியாக யார் உள்ளார் என்று தெரியுமா? வேறு யார் அஜீத் குமார் தான். மங்காத்தா படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த வில்லன் ஆகிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் 'தல'. ஆக இறுதிப் போட்டியில் அஜீத்தும், தனுஷும் உள்ளனர். |
| கடற்படை ரகசியம் கசிந்த வழக்கு: தொழில் அதிபருக்கு சொந்தமான 10 இடங்களில் சி.பி.ஐ. சோதனை Posted: 07 Jun 2012 04:12 AM PDT கடற்படை தொடர்பான பல முக்கிய தகவல்கள் கடந்த 2006-ம் ஆண்டு கடத்தப்பட்டன. கடற்படையின் முக்கிய நடவடிக்ககைள் இதனால் வெளியில் கசிந்தன. இது ராணுவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. கடற்படை ரகசியங்களை வெளியிட்டதாக அமெரிக்க வாழ் தொழில் அதிபரும், ஆயுத ஏஜெண்டுமான அபிஷேக் வர்மா மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. அதன் பேரில் விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் தொழில் அதிபர் அசோக் வர்மாவின் டெல்லி குர்கானில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் சி.பி.ஐ. திடீர் சோதனை நடத்தியது. மொத்தம் 10 இடங்களில் இந்த சோதனை நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் இன்றைய சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. சுவிஸ் வங்கிகளில் பணம் முதலீடு செய்தது தொடர்பான ஆவணங்களும் கிடைத்தன. இந்த ஆவணங்களின் அடிப்படையில் அபிஷேக் வர்மா மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| தந்தையின் செக்ஸ் தொல்லை, ஏகப்பட்ட மன உளைச்சலிலும் 1014 மார்க் வாங்கிய பார்கவி! Posted: 07 Jun 2012 06:31 AM PDT ஜீ டிவியின் டாக் ஷோ மூலம் 3 கொலைகளைச் செய்த தனது தந்தையை அம்பலப்படுத்தி விழுப்புரம் பார்கவி, (பார்கவியின் ஆவேசபேட்டி(வீடியோ) தனது தந்தை தனக்குக் கொடுத்து வந்த செக்ஸ் தொல்லையிலிருந்து தப்ப உறவினர்கள் வீடுகளிலும், காதலர் சதீஷ் வீட்டிலும் மாறி மாறி தங்கிப் படித்து வந்த சோகக் கதை வெளியாகியுள்ளது. இப்படிப் படித்தாலும், ஏகப்பட்ட மன உளைச்சலில் சிக்கியபோதும் பிளஸ்டூவில் அவர் 1014 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தை சேர்ந்த சேகர், அவருடைய மகள் லாவண்யா, அவரது காதல் கணவர் சிலம்பரசன் ஆகிய 3 பேரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாயமாகி விட்டனர். அவர்கள் 3 பேரையும் பணத்திற்கு ஆசைப்பட்டு தனது தந்தை முருகன் கொலை செய்து வீட்டுக்கு அருகே புதைத்து விட்டதாக, எம்.குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த முருகனின் மகள் பார்கவி டாக் ஷோவின்போது தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது கொல்லப்பட்ட மூவரின் எலும்புகளும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. தந்தை குறித்து பார்கவி கூறுகையில், எனது தந்தை மோசமானவர். மகள் என்றும் பாராமல் எனக்கே செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தார். லாவண்யாவிடமும் தவறாக நடக்க முயன்றார் என்று கூறியிருந்தார். பார்கவி, விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். தற்போது தான் பிளஸ்-2 தேர்வை எழுதி முடித்திருந்தார். சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில், இவர் 1200-க்கு 1014 மதிப்பெண் பெற்று உள்ளார். தனது வீட்டில் இவர் பெரும்பாலும் தங்கியதில்லையாம். காரணம், முருகன் கொடுத்து வந்த செக்ஸ் தொல்லைதான். இதனால் வீட்டில் இருக்காமல் உறவினர்கள் வீடுகளில் மாறி மாறித் தங்கிப் படித்து வந்தாராம். அதேபோல காதலர் சதீஷ் வீட்டிலும் தங்கியுள்ளார். தந்தையை அம்பலப்படுத்திய பார்கவி நேற்று விழுப்புரத்திற்கு காதலர் சதீஷ், அவரது குடும்பத்தார் மற்றும் போலீஸார் பாதுகாப்புடன் வந்தார். தான் படித்த பள்ளிக்குச் சென்ற அவர் அங்கு மாற்றுச் சான்றிதழை வாங்கிச் சென்றார். காதலர் வீட்டில் இருந்தபடி மேல் படிப்பை படிக்கப் போவதாக அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், விழுப்புரம் டிஎஸ்பி சேகர் தலைமையிலான தனிப்படை போலீசார், கொலை செய்யப்பட்ட 3 பேருடைய சொந்த ஊரான நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொல்லப்பட்ட சேகரின் மனைவி ஜீவா மற்றும் அவருடைய உறவினர்கள், லாவண்யாவின் காதல் கணவர் சிலம்பரசனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது. |
| சிம்பு, தனுஷ் மீண்டும் மோதல்: வாலு பட வசனத்தால் பரபரப்பு Posted: 06 Jun 2012 11:48 PM PDT சிம்பு, தனுஷ் மோதல் மீண்டும் வெடித்துள்ளது. ஏற்கனவே இருவரும் சினிமாவில் ஒருவரையொருவர் தாக்கி வசனம் வைத்தும், ஒருத்தருடன் ஜோடி சேர்ந்த நாயகியை மற்றவர் தன்னுடன் ஜோடி சேர்த்தும் ஆத்திரத்தை கொட்டினர். சுள்ளான் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த சிந்து துலானியை 'மன்மதன்' படத்தில் சிம்பு துணை நடிகையாக்கி விலைமாது கேரக்டரில் நடிக்க வைத்தார். சிம்புவுடன் காதலை முறித்து பிரிந்த நயன்தாராவை 'யாரடி நீ மோகினி' படத்தில் தனுஷ் ஜோடியாக்கினார். 'லூசு பெண்ணே', 'எவன்டி உன்ன பெத்தான், கையில கிடைச்சா செத்தான்' என்பது போல் சிம்பு பாடல்கள் எழுதினார். தனுசும் போட்டியாக 'ஒய் திஸ் கொலை வெறிடி' பாடலை எழுதி பாடினார். இவ்வாறு அவர்களின் மோதல் நீடித்தது இருவரின் ரசிகர்களும் ஒருவரையொருவர் விமர்சித்து இணையதளங்களில் கருத்துக்கள் வெளியிட்டனர். கடந்த ஒரு மாதமாக இவர்களின் சண்டை சச்சரவு சற்று ஒய்ந்து இருந்தது. இருவரையும் சமரசப்படுத்த மத்தியஸ்தர்கள் முயற்சித்து வந்தனர். இந்த நிலையில் வாலு படத்தில் சிம்பு வைத்துள்ள வசனம் மூலம் மீண்டும் தகராறு தலைதூக்கியுள்ளது. இந்த படத்தில் சிம்புவை பார்த்து ஹன்சிகா ஒரு சில பசங்கள பாக்க பாக்கத்தான் பிடிக்கும். ஆனா உன்ன மாதிரி பசங்கள பாத்த உடனே பிடிச்சிடும் என்று பேசுவதுபோல் வசனம் உள்ளது. தனுஷ் 'படிக்காதவன்' படத்தில் தன்னை வெறுக்கும் தமன்னாவிடம் என்ன மாதிரி பசங்கள பார்த்த உடனே பிடிக்காது. பாக்கப் பாக்கத்தான் பிடிக்கும் என்று வசனம் பேசுவார். அந்த வசனத்தை வாலு படத்தில் சேர்த்து, அதோடு தன்னை பார்த்த உடனே பிடிச்சிடும் என்ற வார்த்தைகளை சேர்த்து உள்ளார். இது தனுசுக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. சிம்புவுடன் திரும்பவும் மல்லுக்கட்ட தயாராகிறார்கள். |
| You are subscribed to email updates from விழியே பேசு... To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |























