படைத்தவனை வணங்குங்கள்… படைப்புக்களை அல்ல… |
| Facebook - தோற்றமும்! புள்ளிவிபரமும்! Posted: 07 Jun 2012 02:00 PM PDT இன்றைக்கு உலகில் முதலிடத்தில் இருக்கும் சமூக வலையமைப்புகளில் ஒன்று ஃபேஸ்புக் (Facebook). ஃபேஸ்புக் இங்க் எனும் நிறுவனத்தின் கீழ் இயங்கும் இந்த வலைத்தளம் 2004 - ஆம் ஆண்டு ஆரம்பமானது. மார்க் எலியட் ஜூகர்பெர்க் என்பவர் தனது நண்பர்கள் டஸ்டின் மாகேவிச் எடுராடோ சாவரின்,கிரிஸ்ஹியூக்ஸ் ஆகியோருடன் இணைந்து இந்தத் தளத்தை உருவாக்கினார். தான் படித்த ஹார்வேட் பல்கலைக் கழகத்தில் விளையாட்டாய் உருவாக்கிய இந்தத் தளம் இன்று உலகெங்கும் பரவி 900 மில்லியன் பயன்பாட்டாளர்களுடன் பிரமிப்பூட்டுகிறது. பேஸ்புக்கில் அனுதினமும் செயல்பாடுகள் ஒரு சிறப்புப் பார்வை: ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பயனரும் சராசரியாக 130 நண்பர்களைக் கொண்டிருக்கின்றனர் என்கிறது பேஸ்புக்கின் ஒரு ஆய்வு. 900 மில்லியனுக்கும் மேற்பட்ட பொருட்களில் மக்கள் இதின் வழியே ((pages, groups, events and community pages) பயனிக்கிறார்களாம். சராசரியாக ஒவ்வொரு பயனரும் 80 மேற்பட்ட ( community pages, groups and events) போன்றவைகளில் இணைக்கப்படுகிறார்கள். பேஸ்புக்கின் வழியாக ஒரு நாளைக்கு 250 மில்லியன் படங்கள் ஏற்றப்படுகிறது (image upload) 70 க்கும் அதிகமான மொழிகளில் பயன்படுத்தும் வகையில் இருப்பது இதன் சிறப்பு. 80 % சதவீததிற்கும் மேற்பட்ட பயனர்கள் United States அல்லாத வெளிநாட்டினரே! பேஸ்புக்கை தினமும் 300,000 மேற்பட்ட பயனர்கள், மொழிபெயர்ப்பு பயன்பாட்டைப்(translations application) பயன்படுத்தி பயன்படுத்துகிறார்கள். பேஸ்புக் பயனர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 20 மில்லியன் பயன்பாடுகளை (Apps) இதன் வழியே நிறுவிக்கொள்கின்றனர். பேஸ்புக்கிற்கான இயங்குதளத்தையோ அல்லது பயன்பாட்டையோ ஒவ்வொரு மாதமும் 500 மில்லியனுக்கும் மக்கள் மற்ற தளங்களில் பயன்படுத்துகின்றனர். மாதந்தோறும் 7 மில்லியனுக்கு மேற்பட்ட பயன்பாடுகளும்(Applications), வலைதளங்களும்(Websites) பேஸ்புக்குடன் ஒருங்கிணைப்படுகின்றன. 350 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் தங்களின் மொபைலின்(Mobile) மூலமே பேஸ்புக்கை அணுகுகின்றனர். 475 மேற்பட்ட மொபைல் தயாரிப்பாளர்கள் பேஸ்புக்கின் மொபைல் பயன்பாடுகளை பயன்படுத்துகின்றனர். தினமும் குறைந்த பட்சம் நான்கு இலட்சம் பேர் இதில் புதிதாக இணைகிறார்கள். ஃபேஸ்புக் இங்க் நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பலோ ஆல்டோ எனுமிடத்தில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டைய இலாபம் மட்டும் 800 மி. டாலர்கள்! இளைஞர்களின் இணைய உலகில் முக்கிய இடம் ஃபேஸ்புக்கிற்கு உண்டு. இந்த நிறுவனத்தின் கால்வாசி பங்குகளுக்குச் சொந்தக்காரராக இருக்கும் நிறுவனர் மார்க்கின் வயது என்ன தெரியுமா? இருப்பதாறு வயதுதான்.!! புதிய பல மாற்றங்களுடன் தன்னை மேம்படுத்தி வெற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது சமூக வலைதளமான பேஸ்புக். நன்றி: ஒருத்தநாடு கார்த்திக் |
| You are subscribed to email updates from படைத்தவனை வணங்குங்கள்…படைப்புக்களை அல்ல… To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
