விழியே பேசு... |
| மெரினாவில் ராக்கெட் லாஞ்சர் கருவி சிக்கியது Posted: 25 Jun 2012 10:47 AM PDT உலகிலேயே மிகவும் நீளமான இரண்டாவது கடற்கரை எனப் புகழ் பெற்றது சென்னையிலுள்ள மெரினா கடற்கரை. தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றானதும் சென்னைவாசிகளின் பொழுதுபோக்கு தலங்களில் முக்கியமான இடங்களில் ஒன்றானதுமான மெரினா கடற்கரை பலரையும் வசீகரிக்கும் இடமாகும். மாலை வேளைகளில் காற்று வாங்கும் இடமாகவும், காதலர்களின் கூடாரமாகவும் திகழும் இந்த கடற்கரையில் இன்று மாலை இளைஞர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மணலில் ஏதே ஒன்று புதைந்திருந்ததை அந்த இளைஞர்கள் கண்டு பிடித்தனர். அது வித்தியாசமான பொருளாக இருக்கவே, மெரினா கடற்கரை போலீசாரிடம் தெரிவித்தனர். அவர்கள் வந்து ஆய்வு செய்ததில் அது ராக்கெட் லாஞ்சர் கருவி என்பது உறுதியானது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான மெரினா கடற்கரை போலீசார், இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், அபாயகரமான ராக்கெட் லாஞ்சர் கருவி மக்கள் நடமாட்டம் மிகுந்த மெரினா கடற்கரைக்கு எப்படி வந்தது என்பது குறித்து தீவிர விசாரணையில் போலீசார் இறங்கியுள்ளனர். |
| ஜூலை 13-முதல் 500 தியேட்டர்களில் பில்லா 2 - 10-ம் தேதி முதல் முன்பதிவு ஆரம்பம்! Posted: 25 Jun 2012 03:05 AM PDT அஜீத் நடித்துள்ள பில்லா 2 படம் வரும் ஜூலை 13-ம் தேதி வெளியாவதாக படத்தின் தயாரிப்பாளர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டும் 500 க்கும் மேற்பட்ட அரங்குகளில் படம் வெளியாகிறது. இந்தப் படத்தின் ரிலீஸ் கடந்த மே மாதத்திலிருந்தே இதோ அதோ என இழுத்தடித்துக் கொண்டிருந்தது. சில தினங்களுக்கு முன் படம் சென்சார் செய்யப்பட்டபோது, ஏ சான்று கொடுத்துவிட்டனர். ஏராளமான காட்சிகளை வெட்டியும் விட்டனர். இதனால் பட வெளியீடு திட்டமிட்டபடி ஜூன் 21-ம் தேதி நடக்கவில்லை. மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளிப்போய்விட்டது. இந்த நிலையில், படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: "ஆவலுடன் எதிர்ப்பார்த்த தல ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க வருகிறது பில்லா 2. அனைத்து வேலைகளும் முடிந்து பக்கா ஆக்ஷன் த்ரில்லராக வரும் ஜூலை 13-ம் தேதி பில்லா 2ஐ வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் 500க்கும் அதிகமான அரங்குகளில் பில்லா 2 திரையிடப்படும். உலகம் முழுவதும் வெளியாகவுள்ள திரையரங்குகள் விவரம் விரைவில் வெளியிடப்படும்," என்று கூறியுள்ளார். |
| You are subscribed to email updates from விழியே பேசு... To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

