புதிய உலகம்.கொம் |
- மன்னார் பாலாவி தீர்த்தக்கரையில் புத்தர் சிலை!
- இறந்த பூனையை ஹெலியாக மாற்றிய வினோத நபர்! (படங்கள் உள்ளே)
- எதிர்பையும் மீறி லண்டன் சென்றடைந்தார் மஹிந்த (படங்கள் இணைப்பு)
- காதலை எதிர்க்கும் பெற்றோருக்கு ஐந்தாண்டு கால சிறை.!
- மகிந்தரை விரட்ட ஒன்று கூடிய பிரித்தானியத் தமிழர்கள் (முழுமையான படங்கள்)
- செம்மறி ஆடு ஏப்பம் விட்டால் புவிவெப்படைதல் தடுக்கப்படும்.!
- கள்ளக்காதலியின் கிளுகிளு படங்களை வீதிவீதியாக ஒட்டிய பேராசிரியர்
- அழுதால் மரணித்துவிடும் அதிசய சிறுமி.! (படங்கள் இணைப்பு)
- நீலப்படம் பார்த்து மாணவியை வல்லுறவு புரிந்த 12 வயதுச் சிறுவன்
- நண்பரைக் கொன்று இதயத்தை சாப்பிட்ட மாணவர் (வீடியோ)
| மன்னார் பாலாவி தீர்த்தக்கரையில் புத்தர் சிலை! Posted: 04 Jun 2012 01:04 PM PDT திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்தின் பாலாவிக் கரையோரத்தில் புதிதாக புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் தேர்த்திருவிழாவும் நேற்றைய தினம் தீர்த்த உற்சவமும் மிகச் சிறப்பான முறையில் இடம் பெற்றிருந்தன.தீர்த்தத் திருவிழாவான நேற்று பாலாவியில் நீராடுவதற்குச் சென்றனர். அவர்களுக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாலாவித் தீர்த்தக் கரையில் இருந்து 50 மீற்றர் தொலைவில் பெரியளவிலான புத்தர் சிலை ஒன்று காவித் துணியொன்றினால் உருமறைப்புச் செய்யப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த வெளியிடங்களைச் சேர்ந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். கதிர்காமம் முருகன் ஆலயத்துக்கு ஏற்பட்ட கதிதான் திருக்கேதீஸ்வர ஆலயத்துக்கும் ஏற்படப் போகிறது என்று சிலர் வாய்விட்டுப் புலம்பினர். இன்னும் சிலர் புத்தர் சிலையைப் பார்த்தவாறு கண்ணீர் சிந்தி அழுதனர். இந்தக் காட்சியைப் பார்த்த பலரும் கண்கலங்கினர். புத்தர் சிலை அமைக்கப்பட்டடுள்ள காணிக்குள் தொல்பொருள் திணைக்களத்தின் அறிவித்தல் பலகையொன்று தொங்கவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீஸ்வரத்தில் புத்தர் சிலையை அமைத்துத் தமது எண்ணத்தை நிறைவேற்ற முனையும் பேரினவாதிகளின் செயலைத் தட்டிக் கேட்க முடியாத நிலையில் தாம் உள்ளமையை இட்டு கவலை வெளியிட்டுள்ளார்கள். |
| இறந்த பூனையை ஹெலியாக மாற்றிய வினோத நபர்! (படங்கள் உள்ளே) Posted: 04 Jun 2012 09:31 AM PDT நெதர்லாந்தைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் தனது வளர்ப்புப் பூனை இறந்தவுடன் அதன் உடலை பறக்கும் ஹெலிகொப்டராக மாற்றியுள்ளார். பார்ட் ஜேசன் எனும் இக்கலைஞர் வளர்த்த ஒலிவர் எனும் பூனை, காரொன்றில் அடிபட்டு இறந்தது. அதன்பின் பூனையின் உடலை புதைக்க விரும்பாத ஜேஸன், அதை பதப்படுத்தி, விசேட பறக்கும் இயந்திரங்களை பொருத்த, ஹெலிகொப்டராக மாற்றியுள்ளார். விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்களில் ஒருவரான, ஒலிவர் ரைட்டின் நினைவாக தனது பூனைக்கு 'ஒலிவர்' என ஜேஸன் பெயரிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்போது தான் வடிவமைத்த ஹெலிகொப்டருக்கு ஒலிவர் ஹெலிகொப்டர் என பெயரிட்டுள்ளார். 'ஒலிவர்' விரைவில் பறவைகளுடன் பறக்கும் எனக் கூறியுள்ள ஜேஸன், ஆம்ஸ்டர்டம் நகரில் நடைபெறவுள்ள கண்காட்சியொன்றிலும் அதை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளார். வினோதங்கள் தொடரும்.... |
| எதிர்பையும் மீறி லண்டன் சென்றடைந்தார் மஹிந்த (படங்கள் இணைப்பு) Posted: 04 Jun 2012 09:20 AM PDT ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவும் இன்று லண்டன் சென்றடைந்துள்ளார். எலிஸபெத் அரசியார் முடி சூடி 60 ஆண்டுகள் பூர்த்திவிழாவில் கலந்துகொள்வதற்காகவே இவர்கள் லண்டன் சென்றுள்ளார். லண்டன், கீத்ரு விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது பாரியாருக்கும் லண்டன் வாழ் இலங்கையர்களால் வரவேற்பளிக்கப்படுவதை படங்களில் காணலாம். பட உதவி:_ டெய்லி மிரர். |
| காதலை எதிர்க்கும் பெற்றோருக்கு ஐந்தாண்டு கால சிறை.! Posted: 04 Jun 2012 09:17 AM PDT பிரித்தானியாவில் காதலை எதிர்க்கும் பெற்றோருக்கு ஐந்தாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. பிரித்தானியாவில் வாழும் சில வகை இனச் சமூகங்களில் நிலவி வரும் மனிதாபிமானமற்ற மரபுகளை தடுக்கும் நோக்கில் புதிய சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. பிள்ளைகளின் விருப்பத்திற்கு மாறாக கட்டாயத் திருமணம் செய்து கொள்ளுமாறு பலவந்தப்படுத்தும் பெற்றோருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட உள்ளது. இந்த புதிய சட்டம் தொடர்பில் பிரதமர் டேவிட் கமருன் விரைவில் அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. பிள்ளைகளின் விருப்பத்திற்கு மாறாக கட்டாயத் திருமணம் செய்து வைக்கும் நடவடிக்கையானது குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றச் செயலாகக் கருதப்படுகின்றது. பிரித்தானியாவில் ஆண்டு தோறும் 5000 முதல் 8000 வரையிலான கட்டாயத் திருமணங்கள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஈராக், வட, கிழக்கு ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகளவில் பிள்ளைகளுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்கின்றனர். சில பெற்றோர் காதல் தொடர்புகளைப் பேணும் பிள்ளைகளை கௌரவக் கொலை செய்யும் சந்தர்ப்பங்களும் பதிவாகியுள்ளன |
| மகிந்தரை விரட்ட ஒன்று கூடிய பிரித்தானியத் தமிழர்கள் (முழுமையான படங்கள்) Posted: 04 Jun 2012 09:11 AM PDT போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ச லண்டன் வருகின்றார் என்ற தகவலையடுத்து கீத்துறூ விமான நிலையத்தில பெருந்திரளான தமிழ் மக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரித்தானிய காவற்துறையினர் மக்கள் கூடுவதை தடுப்பதற்காக எடுத்த முயற்சிகளையும் தாண்டி மக்கள் Terminal 4 இல் தேசியக்கொடிகளை கையில் ஏந்தியவாறு "Sri Lanka President War Criminal" என்ற கோசத்துடன் தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தினர். மகிந்த ராஜபக்ச இலண்டனுக்குள் வந்துவிட்டாரா என்பதை உறுதியாக அறிந்திருக்காத மக்கள் இனியும் அவரின் வருகை தெரியவரும் பட்சத்தில் தவறாது அங்கு வந்து அவர் நாடு திரும்பும் வரை அவர் செல்லுமிடமெல்லாம் சென்று எமது எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என்று உறுதியாகக்கூறி தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று எழுச்சியாக 3 தடவைகள் உரத்த குரலில் உறுதியெடுத்துக்கொண்டு விமான நிலையத்தை விட்டு கலைந்து சென்றனர். |
| செம்மறி ஆடு ஏப்பம் விட்டால் புவிவெப்படைதல் தடுக்கப்படும்.! Posted: 04 Jun 2012 07:54 AM PDT புவி வெப்பமடைதலை தடுக்க உலகெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மனிதனுக்கும், இயற்கைக்கும் நடக்கும் ரகசிய யுத்தம் இது. பல்வேறு வழிகளில் புவி வெப்பமாவதை தடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது. செம்மறி ஆடுகளின் ஏப்பம், புவி வெப்பமாவதை தடுப்பதாக தற்போது கண்டறியப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவின் செம்மறி ஆடுகள் கூட்டுறவு ஆராய்ச்சி மைய ஆய்வுக்குழு இதை கண்டுபிடித்துள்ளது. பசுமை இல்லா வாயுக்களின் உமிழ்வை கட்டுப்படுத்துவதில் சில விலங்கினங்கள் நமக்கு உதவுகின்றன. குறிப்பாக மீத்தேன் வாயுவை கட்டுப்படுத்துவதில் இவை பங்காற்றுகின்றன. மாடுகள் இந்தப் பணியில் உதவுவதாக ஏற்கனவே அறியப்பட்டு இருந்தது. தற்போது இந்தப் பட்டியலில் செம்மறி ஆடுகளும் சேர்ந்துள்ளன. செம்மறி ஆடுகளின் குடல் பகுதியில் வாழும் நுண்ணுயிரிகள், மீத்தேன் வாயுவை அதிகமாக குறைக்கின்றன. குறிப்பாக ஆடுகள் ஏப்பமிடும் சமயத்தில் அதிகப்படியான மீத்தேன் உள்ளிழுக்கப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட அளவில் காற்றில் மீத்தேன் அளவு உறிஞ்சப்படுவதால் புவி வெப்பமடைவது தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஆஸ்திரேலிய ஆய்வுக்குழு ஆடுகளில் பல்வேறு செயற்கை மாற்றங்களை ஏற்படுத்தி ஆய்வு செய்து வருகிறது. அங்குள்ள ஆடுமேய்க்கும் இடையர்களையும் ஊக்குவித்து வருகிறார்கள். ஏனெனில் ஆடுகள் அதிகம் ஏப்பமிட்டால் நமக்கு ஏற்படும் ஆபத்து குறையுமே! |
| கள்ளக்காதலியின் கிளுகிளு படங்களை வீதிவீதியாக ஒட்டிய பேராசிரியர் Posted: 04 Jun 2012 04:34 AM PDT கள்ளக்காதலியுடன் நெருக்கமாக இருந்த ஆபாச போட்டோக்களை ஊர் முழுக்க ஒட்டிய கல்லூரி உதவி பேராசிரியரும் அவரது தம்பியும் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த கெம்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்தி (29). பொறியியல் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியர். அதே பகுதியை சேர்ந்த திருமணமான ஏஞ்சல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் இவருக்கு கள்ளத்தொடர்பு இருந்தது. ஏஞ்சலுடன் நெருக்கமாக இருந்தபோது செல்போனில் கார்த்தி படம் பிடித்து வைத்துள்ளார். சில நாட்கள் முன்பு கள்ளக்காதல் முறிந்தது. கார்த்தியை சந்திப்பதை ஏஞ்சல் தவிர்த்தார். ஆத்திரமடைந்த கார்த்தி, தம்பி தங்கவேலுடன் சென்று, 'நீ என்னிடம் பேசாவிட்டால், என்னுடன் நீ நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவேன்' என மிரட்டியுள்ளார். ஏஞ்சல் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், ஏஞ்சலுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை கார்த்தியும் தங்கவேலும் கம்ப்யூட்டரில் பிரின்ட் எடுத்து, நேற்று முன்தினம் ஊர் முழுக்க ஒட்டியுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஏஞ்சல், பங்களாபுதூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து கார்த்தி, தங்கவேல் ஆகியோரை கைது செய்தனர். ஆபாச படங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. ஆபாச, படங்களை பிரின்ட் எடுக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர், பிரின்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். |
| அழுதால் மரணித்துவிடும் அதிசய சிறுமி.! (படங்கள் இணைப்பு) Posted: 04 Jun 2012 04:24 AM PDT அரைவாசி மண்டையோட்டுடன் பிறந்த 2 வயதுக் குழந்தை அழுதால் இறந்துவிடக்கூடும். அடம்ஸ்-ஒலிவர் அறிகுறி என்ற 130 பேரில் ஒருவருக்கு ஏற்படும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளாள் இச்சிறுமி. இவளது மண்டையோட்டில் 7 செ.மீ. இல் 6 செ.மீ. பகுதி இல்லை. இவளது மூளையானது திரவத்தினாலும் அதனைச் சுற்றிலும் மெல்லிய தோற்படையினாலும் மட்டுமே சுற்றப்பட்டுள்ளது. இதனால் அக்குழந்தையை அழவிடாது வைக்கும்படி வைத்தியர்கள் அதன் பெற்றோரிடம் கூறியுள்ளனர். அவள் எப்போதுமே ஒரு தலைக்கவசத்தினை அணிந்தபடியே இருக்கின்றாள். ஏனைய பிள்ளைகளுடன் அவளால் விளையாடவும்முடியாது. 13 வயதிற்குப் பின்னரே இவளது மண்டையோடு பலமாகும் என்பதால் அதன்பின்னரே இவளுக்குச் சத்திர சிகிச்சை செய்யமுடியுமென்றனர் லண்டனின் Great Ormond Street வைத்தியசாலையின் வைத்தியர்கள். இவளது மண்டையோடு பிறந்ததைவிடவும் சற்று நிரவியுள்ளதாகக் கூறினாலும் அதன்பின்னர் அது வளர்வதற்கு இடமில்லையென்றும் நிரந்தரமாகவே இந்த இடைவெளியுடனேயே காணப்படுமென்றும் தெரிவித்தனர. வினோதங்கள் தொடரும்..... |
| நீலப்படம் பார்த்து மாணவியை வல்லுறவு புரிந்த 12 வயதுச் சிறுவன் Posted: 04 Jun 2012 04:22 AM PDT இளந்தலைமுறையினர் இணையத்தளப் பாலியல் படங்களைப் பார்த்து பிழையான வழியில் செல்லும் நிலை அதிகரித்துவருகின்றது. இதன்விளைவாக 12வயதுச் சிறுவன் ஒருவன் இளம் மாணவியைப் பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய சம்பவமொன்று பிரித்தானியா எடின்பேர்க்கில் இடம்பெற்றுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் பல நாட்டில் இடம்பெற்று வரலாமென்றும் சட்டவாளர்கள் எச்சரித்துள்ளனர். எடின்பேர்க்கின் நீதிமன்றம் தற்போது 14 வயதாகிவிட்ட பையனை அவன் இரு வருடங்களிற்கு முன்பு செய்த பாலியல் குற்ற வழக்கை விசாரித்தது. பையனின் சட்டவாளர் குறிப்பிடுகையில் இணையத்தளத்தில் உலாவரும் பாலியல் வீடியோக்களால் இளந்தலைமுறையினர் குழப்பப்படுகின்றனரென்றும் அவற்றைக் கட்டுப்படுத்தவேண்டுமென்றும் தெரிவித்தார். நீதிபதி சிறுவனைத் தடுத்துவைக்கப் பணிக்கவில்லையெனினும் அவனை பாலியல்ரீதியாக செயற்படுவதெப்படி என்ற வழிகாட்டியாக நீலப்படங்களைப் நினைக்கக்கூடாதெனத் தீர்ப்பளித்தார். 'opt-in' முறையினை இணையத்தளப் பயனாளர்களுக்கு ஏற்படுத்துவதற்கு அரசு கட்டாயப்படுத்தவேண்டுமென்ற அரசியல் தர்க்கம் எழுந்துள்ள அதேவேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த முறைமூலம் பெற்றோர்கள் வீட்டுக் கணினிகளில் நீலப்படங்களைப் பார்ப்பதைத் தடைசெய்யமுடியும். இதன்மூலம் பிள்ளைகள் பெரியவர்களது விடயங்களைப் பார்ப்பதைத் தடைசெய்யமுடியும். ஏன் இவ்வாறு செய்தாயென அவனிடம் கேட்டபோது தான் பெரியவனாக உணர்வதற்காகவும் ஒரு தூண்டுதலின் காரணமாகவுமே செய்ததாகக் காவற்றுறையினருக்குப் பதிலளித்தான். இவ்வாறு எத்தனை பிள்ளைகள் அடையாளங் கண்டுகொள்ளப்படாமலும் வெளியில் தெரியாமலும் இருக்கலாமெனச் சட்டவாளர் தெரிவித்தார். இச்சிறுவன் டிசம்பர் 1, 2010 இற்கிடையில் இந்த முயற்சியைச் செய்திருந்தாரென்று ஏற்றுக்கொண்டிருந்தார். எனினும் இவனுக்குத் தண்டனையளிக்கையில் அவனைச் சிறுவர் சட்டத்தின்படி தடுப்பில் வைக்காமல் கண்காணிப்பில் வைக்கும்படி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவனுக்கு உறவு மற்றும் பாலியல் அபிவிருத்தி பற்றிய அறிவுரைகள் வழங்கப்படுமென்றும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு சிறுமியையோ பெண்ணையோ பாலியல்ரீதியாகத் தொந்தரவு செய்யக்கூடாதென்றும் கூறி விடுவிடுத்தனர். |
| நண்பரைக் கொன்று இதயத்தை சாப்பிட்ட மாணவர் (வீடியோ) Posted: 04 Jun 2012 04:14 AM PDT நைஜீரியா நாட்டைச் சேர்ந்த குஜோ பான்சாபோ(37) என்பவர் அமெரிக்காவில் மேரிலாண்டில் உள்ள ஜோப்பா என்ற இடத்தில் அலெக்சாண்டர் கின்யுவா என்பவருடைய வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் தலையும், கைகளும் துண்டித்து குஜோ கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேரிலாண்டை உலுக்கிய இந்தக் கொலையில் அமெரிக்க பொலிசார் துப்பு துலக்கியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. இந்தக் கொலையை செய்தது வேறு யாருமல்ல. அலெக்சாண்டர்தான். கத்தியால் குஜோவின் தலையையும், கைகளையும் துண்டித்து கொலை செய்ததோடு, குஜோவின் இதயத்தையும், மூளையையும் அகற்றி சாப்பிட்டு இருக்கிறார். கல்லூரி மாணவரான அலெக்சாண்டர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீப காலமாகவே அலெக்சாண்டரின் நடத்தையில் மாறுபாடு தெரிந்ததாக உடன் படிக்கிற மாணவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இப்போது அலெக்சாண்டரிடம் தீவிர விசாரணை நடக்கிறது. வினோதங்கள் தொடரும்.... |
| You are subscribed to email updates from புதிய உலகம்.கொம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)


















