மக்களின் குரல் |
- செல்வராஜா கூட்டத்திற்கு செருப்பால் அடிப்போம் - களுதாவளையில் துண்டுப் பிரசுரம்
- மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் நிமல்சிறிபாலடி சில்வா புணரமைக்கபட்டுவருகின்ற நீர்ப்பாசன பாதைகளையும் குளங்களையும் பார்வையிட்டார்
- கோராவெளி கண்ணகி அம்மன் ஆலயத்தின் திருகுளிர்த்தி
- த.ம.வி.பு கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் கிளைக் காரியாலயம் களுதாவளையில் திறந்து வைக்கபபட்டது.
- புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய அம்மனுக்கு அணிவித்திருந்த பெறுமதியான தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளன.
- வீரகேசரி பொய்யான செய்திளை வெளியிட்டு குழப்பங்களை ஏற்படுத்த நினைக்கின்றது - மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் ஒன்றிய தலைவர் பிரதீபன்
| செல்வராஜா கூட்டத்திற்கு செருப்பால் அடிப்போம் - களுதாவளையில் துண்டுப் பிரசுரம் Posted: 04 Jun 2012 07:53 PM PDT களுதாவளைக் கிராமத்தில் செல்வராஜாவிற்கு எதிராக துண்டுப் பிரசுரம் ஒன்று வெளியிடப் பட்டுள்ளது. அண்மையில் ஒரு அமைப்பினர் ஏற்பாடு செய்த நிகழ்வொன்றிற்கு பிரதம அதிதியாக செல்வராஜா அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். அதற்கு களுதாவளை மக்கள் பெரும் எதிர்ப்பை தெரிவித்ததுடன்.துண்டுப் பிரசுரம் ஒன்றையும் வெளியிட்டு இருந்தனர். இப்பொழுது மீண்டும் துண்டுப் பிரசுரம் ஒன்று வெளியிடப் பட்டிருக்கின்றது. நேற்று வெளியிடப் பட்டிருக்கும் துண்டுப் பிரசுரத்தின் விடயங்களை அப்படியே தருகின்றோம். களுதாவளை மக்களே சிந்தியுங்கள் சுயநலத்துக்காக எமது கிராமத்தை விற்ற துரோகிகளுக்கு செருப்பால் அடியுங்கள் களுதாவளை இலங்கேசன் இந்து மன்றத்தினர் கண்ணகி வரலாறு சதங்கை அணி விழாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா (நவம்) அவர்களை பிரதம அதிதியாக அழைத்திருந்தனர். இந்தச் செல்வராஜா பல வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து இருவரை எமது கிராமத்திற்கு எதுவும் செய்யவில்லை (பல துரோகங்களை செய்திருக்கின்றார்) ஆனாலும் ப.குணசேகரம் (குணம்) மற்றும் செல்வம் இருவரும் தமது தனிப்பட்ட அரசியல் நோக்கம் கருதி செல்வராஜா அவர்களை அழைத்திருக்கின்றனர். குணசேகரம் அவர்கள் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காகவும் செல்வம் அவர்கள்உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலும் (பிரதேசசபை) செல்வராஜாவிற்கு வால் பிடித்துத் திரிகின்றனர். 1. களுதாவளையில் வைத்தியசாலை ஒன்றினைக் கொண்டு வருவதற்கு முயற்சி எடு;கப்பட்டபோது அதனை தடுத்து நிறுத்துவதற்கு அயராது பாடுபட்டமை 2. 1997 ஆம் ஆண்டு மட்/களுதாவளை மகா வித்தியலயத்திற்கு விஞ்ஞான, கணிதப் பிரிவுகளை ஆரம்பி;க்க முயற்சி எடுக்கப் பட்டபோது அதனை தடுத்து நிறுத்த முழு மூச்சாக ஈடுபட்டமை 3. மட்களுதாவளை மகா வித்தியாலயத்திற்கு அதிபர் நியமி;கப்படாமல் 5,6 மாதங்கள் இழுத்தடிக்கப்பட்டமைக்கு முழுக் காரணமும் செல்வராஜாவே 4. 1000 பாடசாலைகள் திட்டத்தில் 70 மில்லியன் ருபா நிதி ஒதுக்கீட்டில் மட்களுதாவளை மகா வித்தியாலயம் அபிவிருத்தி செய்யப்பட தெரிவு செய்யப்பட்டபோது களுதாவளை மகா வித்தியாலயத்தை நீக்கி இல்லாமல் செய்து தனது கிராம பாடசாலையை இணைத்தவர் இத்தனைக்கும் காரணம் தனது கிராமத்தைவிட களுதாவளை முன்னேறக் கூடாது என்ற நோக்கமே யார் இந்தக் குணம் நல்ல குணம் படைத்தவர்போல் நடிக்கும் ஒரு குள்ள நரி. இவரின் கடந்தகால பக்கங்களைப் புரட்டினால் பல ஊழல்கள் அம்பலமாகும் (தேவை ஏற்படின் அம்பலப் படுத்துவோம்) கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அரசாங்கத்துடன் போட்டியிட்டு அரசாங்கம் வழங்கிய 30 இலட்சம் ரூபா பணத்தினை சுருட்டியதோடு தனது நெருங்கிய உறவினர்களுக்கு அரசாங்கத்தில் வேலை பெற்றுக் கொடுத்ததோடு தனக்கு தேர்தல் காலத்தில் அயராது பாடுபட்டவர்களை மறந்து வேறு கிராமத்தவர்களிடம் பணம் பெற்று வேலை வாய்ப்புக்களை அரசாங்கத்திடமிருந்து பெற்று வழங்கி வருகின்றார். பொது அமைப்புக்களில் பதவிகளைப் பெற்று கொள்ளையடிக்க முயற்சிக்கும் வருக்கு வண்ணக்கர் ஆசை வேறு. மறு புறத்தில் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு கொள்ளையடிக்க வேண்டும் என்ற ஆசையில் செல்வராஜாவிற்கு வால் பிடிக்கின்றார் இப்போது. மட்களுதாவளை மகா வித்தியாலயம் 1000 பாடசாலைகள் திட்டத்திலிருந்து நீ;க்கிய செல்வராஜாவுடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் குணத்திற்கு பாடசாலை அபிவிருத்தி சங்க கூட்டத்தில் கலந்து கொள்ள எந்த அருகதையும் இல்லை. யார் இந்த செல்வம் பெயருக்கு ஏற்றாற்போல் செல்வம் சேர்க்கத் துடிக்கும் துரோகி இலங்கை போக்குவரத்துச் சபையில் பல இலட்சம் ரூபாவை கொள்ளையடித்ததுடன் இப்போது திருஞானசம்பந்தர் குருகுலத்தில் பல ஊழல்களை புரிந்து வருவதுடன் ( குருகுல ஊழல்கள் விரைவில் வெளியிடப்படும்) குருகுல மாணவர்களையும், சொத்துக்களையும் தனிப்பட்ட தேவைகளுக்கும் அரசியல் தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றார். எதிர் காலத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு பிரதேச சபையை கொள்ளையடிக்கும் நோக்குடன் செல்வராஜாவிற்கு வால் பிடிக்கின்றார். தமது தனிப்பட்ட சுயலாபத்திற்காக எமது கிராமத்தின் அபிவிருத்தியை இல்லாமல் செய்யும் துரோகி செல்வராஜா அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து எமது கிராமத்தினை அபிவிருத்தியை இல்லாமல் செய்ய எத்தணிக்கும் கூட்டத்தை செருப்பால் அடித்து விரட்டுவோம். கல்விச் சமூகம் களுதாவளை |
| Posted: 04 Jun 2012 07:34 PM PDT நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா திங்கட்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார். இதன்போது, மட்டக்களப்பு பிராந்திய நீர்ப்பாசன அலுவலகத்தில் நடைபெற்ற, மட்டக்களப்பு நிர்ப்பாசன அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன். பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மற்றும் நீர்ப்பாசன பொறியிலாளர் எஸ்.மோகனராஜ்; உட்பட பலர் கலந்துகொண்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்ப்பாசன குளங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெரிய நீப்பாசன குளங்களான கித்துல் மற்றும் றூகம் ஆகிய இரண்டு குளங்களை ஒன்றாக இணைத்து புனரமைப்பு செய்வதற்கு அடுத்த ஆண்டு நிதி வழங்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். இதன் மூலம் 10,000 ஏக்கர் விவசாயம் செய்வதுடன் வெள்ள அனர்த்தத்திலிருந்தும் பாதுகாக்க முடியும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தரிவித்தார். இக் கூட்டத்தையடுத்து அமைச்சர் கித்துல் மற்றும் றூகம் ஆகிய குளங்களை ஒன்றாக இணைப்பது தொடர்பில் நேரடியாக குளங்களை பார்வையிட்டதுடன் பெண்டுகல் சேனைக்கும் விஜயம் செய்தார். |
| கோராவெளி கண்ணகி அம்மன் ஆலயத்தின் திருகுளிர்த்தி Posted: 04 Jun 2012 07:28 PM PDT கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பரிவிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க கண்ணகி அம்மன் ஆலயத்தின் திருகுளிர்த்தில் (04.06.2012) பெருந்திரளான பக்தர்கள் ஒன்று கூட இடம்பெற்றது. இத் திருகுளிர்தில் வழிபாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டார். மிகவும் புராதனம் மிக்க மேற்படி ஆலயமானது எந்தவொரு கட்டிடமுமின்றி கொத்துப் பந்தலமைத்து வருடார்ந்தம் வைகாசித் திங்கள் திருக்குளிர்த்தி பாடப்பட்டு நிறைவு பெறும். இதற்கு மட்டக்களப்பு மாவட்டடத்தின் கசல பாகங்களிலுமிருந்து பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு பொங்கல் பொங்கி தங்களது நோர்த்தி கடன்களைச் செலுத்தி மகிழ்வார்கள். தாய்ப்பந்தலாக கோரகல்லிமடு கிராமமும் மற்றும் சித்தாண்டி, கிரான், கிண்ணையடி, சந்திவெளி, முறக்கொட்டான் சேனை,மீராவோடை ஆகிய ஏழு கிராம மக்களும் தனித்தனி பந்தலமைத்து வழிபாட்டில் ஈடுபடுவார்கள். |
| த.ம.வி.பு கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் கிளைக் காரியாலயம் களுதாவளையில் திறந்து வைக்கபபட்டது. Posted: 04 Jun 2012 07:19 PM PDT தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் கிளைக்காரியாலயம் களுதாவளையில் (03.06.2012) மட்டக்களப்பு மாவட்டத்தின் அமைப்பாளர் எஸ்.ஆர்.மணிவண்ணன் அவர்களினால் திறந்து வைக்கபட்டது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், பொருளாளர் ஆ.தேவராஜா மற்றும் செயற்குழு உறுப்பினர் சந்திரகுமார் உட்பட கட்சியின் முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். |
| Posted: 04 Jun 2012 07:05 PM PDT மட்டக்களப்பு - வாழைச்சேனை - புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய அம்மனுக்கு அணிவித்திருந்த பெறுமதியான தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளன. இந்த நகைகள் (03) ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளையிடப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தின் உட்புற பூட்டுக்கள் உடைக்கப்பட்டு மூல விக்கிரகத்திலுள்ள அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகளே கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 108 நவரத்தினம் பதிக்கப்பட்ட 90 கிராம் தங்கக்கிரீடம், 64 கிராம் தங்கத் தாலிக்கொடி, சுமார் 37 கிராம் பென்ரன் போடப்பட்ட தங்கச் சங்கிலி, சுமார் 15 கிராம் ஓம் தங்கப்பதக்கச் சங்கிலி ஆகியவையே களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். |
| Posted: 04 Jun 2012 06:57 PM PDT தற்போது பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை நாளையிலிருந்து மூன்று நாட்கள் மட்டக்களப்பு கச்சேரியில் நடைபெறவுள்ளது. இந் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் ஒன்றியம் இன்று (04.06.2012) கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்து தங்களது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார்கள். அதாவது தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திலே 2400 மேற்பட்ட பட்டதாரிகள் இருக்கின்றார்கள் இவர்களில் பெரும்பாலானர்வர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் இவர்கள் அனைவருக்கும் நியமனம் வழங்குவது என்பதில் சந்தேகம் தங்களுக்கு இருப்பதாகவும். அவ்வாறு நியமனம் வழங்கும் போது ஆண்டை அடிப்படையாக கொண்டு குறித்த நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்தார்கள். அதாவது 2009 ஆண்டுக்கு முன்னர் உள்ள பட்தாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டிருந்தார்கள். இதற்கு பதியளித்த முதலமைச்சர் சந்திரகாந்தன் உண்மையில் குறித்த நியமனங்கள் தங்களது வேண்டுகோளுக்கமைய செயற்படும் வண்ணம் இடம் பெறும் அதிலும் குறிப்பாக ஆண்டை அடிப்படையாக கொண்டுதான் நியமனங்கள் மேற்கொள்ளப்படும். இது தொடர்பில் தாங்களுடன் எதிர்வரும் ஓரிரு தினங்களில் கலந்துரையாட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பட்டதாரிகள் ஒன்றியம் சார்பில் கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் பிரதீபன் குறிப்பிடுகையில், அண்மையில் பட்டதாரிகளுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் ஓர் முறுகல் நிலையயை தோற்றுவிக்கும் வகையில் செய்திகள் வெளியாகி இருந்தன. உண்மையில் பட்டதாரிகள் ஒன்றியம் என்ற அடிப்படையில் அவ்வாறான நாகரிகமற்ற வார்த்தைப் பிரயோகங்களை படித்த சமூகமாகிய நாங்கள் தங்களுக்கு பிரயோகித்ததே இல்லை, இதனை ஊடகங்கள்தான் திரிவுபடுத்தி இருக்கின்றன. கிழக்கின் முதல் மகன் என்ற வகையில் தங்களுக்குரிய கௌரவத்தையும் மரியாதையும் வழங்க வேண்டிய பொறுப்பு கல்வி சமூகமாகிய எங்களைச் சார்ந்தது. அவ்வாறிருக்கையில் மிகவும் கேவலமான சொற்பதங்கiளால் தங்களைச் தூற்றும் வகையில் வீரகேசரி பத்திரிகையில்(01.06.2012) பிரசுரமான செய்தி முற்றிலும் திரிவுபடுத்தப்பட்ட ஓர் செய்தியே ஆகும். அதற்காக இந்த தருணத்தில் பட்டதாரிகள் ஒன்றியம் ஆகிய நாங்கள் எங்களது மனக்கவலையை தெரிவித்து கொள்கின்றோம். அத்தோடு இனிவருகின்ற காலங்களில் இவ்வாறான நிலைமை ஏற்படாத வண்ணம் தாங்கள் நடந்து கொள்வோம் எனவும் அவர்கள் தெரிவித்தார்கள். ஒன்றியத்தின் செயலாளர் மகேந்திரன் , இணைப்பாளர் திவாகரன் மற்றும் பட்டதாரிகள் ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். |
| You are subscribed to email updates from மக்களின் குரல் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


.jpg)















.jpg)