Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





விழியே பேசு...

விழியே பேசு...


நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா

Posted: 23 Jun 2012 10:46 AM PDT

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி மனு தாக்கலுக்கு முன்பு தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் 26-ந் தேதி பதவியை ராஜினாமா செய்வார் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் பிரணாப் முகர்ஜி நாளையே தன் மந்திரி பதவியை ராஜினாமா செய்வார் என்று தெரிய வந்துள்ளது. 

இன்று காலை கொல்கத்தாவில் இருந்து தன் சொந்த ஊருக்குப் புறப்பட்ட பிரணாப் முகர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது இந்த தகவலை கூறினார். 

அவரது ராஜினாமா கடிதம் டெல்லியில் தயாராக உள்ளது. பிரணாப் முகர்ஜி நாளை டெல்லி திரும்பியதும் பிரதமரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுப்பார். 

இதையடுத்து அவர் 28-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார். இதற்காக 4 மனுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அந்த 4 மனுக்களிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் முன் மொழிந்தும், வழிமொழிந்தும் கையெழுத்திட்டுள்ளனர்.





'சகுனி' climax வீடியோ

Posted: 23 Jun 2012 06:40 AM PDT



இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: 6.6 ரிக்டர் அளவில் பதிவு

Posted: 23 Jun 2012 05:31 AM PDT

இந்தோனேஷியா நாட்டின் சுமத்ரா தீவில் உள்ள ஆசக் என்ற மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. 

நிலப்பகுதியில் மட்டுமே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை என இந்தோனேஷியாவின் வானிலை ஆராய்ச்சி மைய தகவல்கள் தெரிக்கின்றன.





தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: தினக் கூலி ரூ 113 - ஜெ அறிவிப்பு

Posted: 23 Jun 2012 05:30 AM PDT


தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி புரியும் தினக்கூலி ஊழியர்களுக்கு 13 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் தினக்கூலியாக இனி ரூ 132 ரூபாய் பெறுவார்கள் என அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரகப் பகுதிகளில் திறன்சாரா, உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள, வயது வந்தோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஆண்டில் 100 நாட்களுக்குக் குறையாமல் வேலை வாய்ப்பினை அளிப்பதாகும். மேலும், இத்திட்டத்தின் மூலம் நீர் ஆதாரங்களைப் பாதுகாத்தல், காடு வளர்ப்பு ,மரம் நடுதல், ஏரி மற்றும் குளங்களை தூர்வாரல் போன்ற பல்வேறு கிராம நலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சம்பள உயர்வு தொடர்பான விவரத்தில்; தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நாள் ஒன்றுக்கு ரூ. 119 பெற்று வருகின்றனர். இந்த சம்பளத்தில் கூடுதலாக ரூ. 13 அதிகரித்து 132 ஆக வழங்கப்படும். இந்த உயர்வு மூலம் 25 லட்சம் பேர் பயனடைவர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே முதல்வர் விடுத்துள்ள மற்றொரு அறிக்கையில் விவசாய பணிகளை கருத்தில் கொண்டு வரும் 25 ம் தேதி முதல் பெரியாறு அணையில் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். 120 நாள் வரை வரும் இந்த தண்ணீர் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலம் பயன்பெறும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல்: ராஜபக்சேவுக்கு தமிழக மத தலைவர்கள் கண்டனம்

Posted: 23 Jun 2012 05:28 AM PDT


இலங்கையில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் தாக்கப்படுவதற்கு தமிழக அனைத்து மத தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
இதுதொடர்பாக சென்னையில் ஆர்ச் பிஷப் ஏ.எம்.சின்னப்பா, பேராசிரியை சரஸ்வதி, இந்தியன் தவுகித் ஜமாத் தேசிய தலைவர் எஸ்.எம்.பாகர், தேசிய லீக் கட்சி தலைவர் பஷீர், தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஐதர்அலி, தமிழக இந்து துறவியர் பேரவை அமைப்பாளர் சுவாமி சதா சிவானந்தா உள்ளிட்ட அனைத்து மத தலைவர்கள் கூட்டாக பேட்டி அளித்தனர்.
 
அவர்கள் கூறியதாவது:-
 
இலங்கையில் போருக்கு முன்னும், பின்னும் போரின் போதும் ஈழத்தமிழர்களை கொன்று குவிப்பதோடு அவர்களின் பண்பாட்டு அடையாளங்களையும் முற்றிலும் அழிப்பதில் சிங்கள அரசு வெறிகொண்டு செயல்பட்டு வருகிறது.
 
இந்துக்களின் கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், முஸ்லிம் மசூதிகள் தொடர்ந்து தகர்க்கப்படுகின்றன. தேவாலயங்களை தகர்ப்பதோடு கத்தோலிக்க குருமார்களையும் கொலை செய்தும் கடத்தி சென்றும் விடுகின்றனர்.
 
மன்னார் மறைமாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப்புக்கு இலங்கை அரசால் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறது. இலங்கை அரசினர் அடக்கு முறைகளை, உரிமை மீறல்களை எதிர்த்து ஈழத் தமிழர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.
 
அவர்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்க வேண்டிய கடமை தமிழகத்தில் வாழும் தமிழர்களாகிய நமக்கு இருக் கிறது. தமிழர்கள் அங்கு வாழ இனி வாய்ப்பு இல்லை.
 
எல்லா மதத்தினரும் நம்பிக்கை இழக்கும் வகையில் அனைத்து கோவில்களும் தரைமட்டமாக்கப்படு கின்றன. மனித உரிமை அங்கு இல்லை. இது ஒரு பயங்கரவாத நிகழ்ச்சியாகும்.
 
மதத்திற்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும், கலாசாரத்திற்கு எதிராகவும் நடக்கின்றன. இந்த பயங்கரவாதத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். தமிழகத்தில் உள்ள தலைவர்கள் இதற்கு குரல் கொடுக்க, ஒன்று சேர வேண்டும்.
 
ரோமில் உள்ள போப் ஆண்டவருக்கு இதுபற்றி தகவல் தெரிவித்து இருக்கிறோம். பன்னாட்டு சபையும் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.
 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



பிரபல நடிகர் ராஜேஷ் கன்னா உடல்நிலை கவலைக்கிடம்!

Posted: 23 Jun 2012 05:25 AM PDT


பிரபல பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னா கவலைக்கிடமான நிலையில் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களாகவே அவர் உடல் நலம் குன்றியிருந்தார். அவரால் உணவு உட்கொள்ள முடியவில்லை.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று ராஜேஷ் கன்னா ஓரளவு உடல் நிலை தேறினார். ஆனால் மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் இன்று மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்த தகவல் பரவியதும்,ஏராளமான ரசிகர்கள் ராஜேஷ் கன்னா அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை முன்னர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜேஷ்கன்னா 1960கள் மற்றும் 70களின் பாலிவுட் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தவர். வெள்ளிவிழா நாயகன். அவருக்கு பல கோடி ரசிகர்கள் உலகெங்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.



சரத் பவாரின் ஐசிசி தலைவர் பதவி காலம் அடுத்த வாரம் முடிகிறது: ஆலன் ஐசக் அடுத்த தலைவர்

Posted: 23 Jun 2012 05:22 AM PDT

மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் சர்வதேச கிரிக்கெட் கழகத்தின் வருடாந்திர மாநாடு நாளை முதல் 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாடு தலைமை நிர்வாக குழு கூட்டத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து நிர்வாக அதிகாரிகளின் கூட்டம் நடைபெறுகின்றன. 

இந்த கழகத்தின் தலைவராக சரத் பவார் பதவி வகிக்கிறார். கடந்த 2 வருடங்களாக இப்பதவியில் நீடித்து வரும் அவரது பதவி காலம் அடுத்த வாரத்தில் முடிவடைகிறது. 

இதனைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் தனது பதவி பொறுப்பை நியூசிலாந்து நாட்டை சேர்ந்த ஆலன் ஐசக்கிடம் ஒப்படைக்கிறார் என கூறப்படுகிறது. 

மேலும் தற்போதைய நிர்வாக தலைமை அதிகாரி ஹரூன் லோர்காட்டை தொடர்ந்து டேவிட் ரிச்சார்ட்சன் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், துணை நிர்வாகிகள் 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





தமிழக மீனவர்கக்கு 20 ஆண்டு சிறை :ராஜபக்சேவின் பேச்சுக்கு நாராயணசாமி கண்டனம்

Posted: 23 Jun 2012 05:01 AM PDT


டெல்லியில் இருந்து சென்னை வந்த மத்திய மந்திரி நாராயணசாமி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 
பிரதமர் மன்மோகன்சிங் 2 நாள் பயணமாக புதுச்சேரிக்கு வருகிற 29-ந்தேதி வருகிறார். ஜிப்மர் மருத்துவமனை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்கிறார். இதற்காக பிரதமர் டெல்லியில் இருந்து சென்னை வந்து இங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி வருகிறார். 

இந்திய மீனவர்களின் நலனில் பிரதமர் அதிக அக்கறை கொண்டு உள்ளார். இலங்கை அதிபர் 20 ஆண்டு சிறை தண்டனை என கூறி உள்ளது பற்றி தமிழக முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளனர். 

இது பற்றி பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனன் இலங்கை அரசுடன் பேசுவார். எதிர் காலத்தில் இந்திய மீனவர்கள் எந்தவித பாதிப்பின்றி இருக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். தமிழக மீனவர்களுக்கு இலங்கை ராணுவம் மற்றும் கடற்படையால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். 

இலங்கை முள்ளிவாய்கால் போல் மேலும் பல முள்ளிவாய்கால் சம்பவம் நடக்கும் என இலங்கை மந்திரி பேசியது கண்டிக்கத்தக்கது. நாட்டின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் நிதானமாக பேச வேண்டும். 

இலங்கைக்கு இந்திய அரசின் சார்பில் வன்மையாக கண்டித்து உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி போட்டியிடுவதால் புதிய நிதியமைச்சர் யார் என்பதை பிரதமரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாவும் முடிவு செய்வார்கள். 

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் தேர்வு பற்றி முன்கூட்டி தங்களிடம் பேசவில்லை என பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் கூறுவது பொய்யான தகவல் ஆகும். வேட்பாளர் அறிவிப்பு செய்வதற்கு முன் பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி ஆகியோரிடம் பேசப்பட்டது. ஆனால் அவர்கள் அதை மறைத்து இரட்டை வேடம் போடுகின்றனர். நாங்கள் வேட்பாளர் தேர்வு செய்யும் முன் பேசவில்லை என கூறுகின்றனர். 

சங்மாவை அ.தி.மு.க.வும், பீஜூ ஜனதா தளமும் அறிவித்தது. அறிவிப்பு செய்யும் முன் பாரதீய ஜனதா கட்சியை கேட்டதா? சங்மாவை மட்டும் விழுந்து ஆதரிப்பது ஏன்? ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகாஜியின் வெற்றி உறுதியாகிவிட்டது. இதனால் சங்மா தேர்தலில் போட்டியிடாமல் விலகி கொள்வது நல்லது. 

சிறுவாணி தடுப்பு அணை பிரச்சினையில் இரு மாநில அரசுகளும் செய்துக் கொண்ட ஒப்பந்த சரத்துகள் படி செயல்பட வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நிலை. இதை இரு மாநில அரசுகளும் மீறக் கூடாது. 

இவ்வாறு அவர் கூறினார்.





Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™