Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





விழியே பேசு...

விழியே பேசு...


குவியல் குவியலாய் தமிழர் பிணங்கள் - புதிய வீடியோ ஆதாரங்கள்!

Posted: 08 Jun 2012 11:14 PM PDT



தமிழ் ஈழத்துக்கான இறுதிப் போரின் போது தமிழரை குவியல் குவியலாகக் கொன்றழித்த இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு மேலும் பல புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

பிரிட்டனின் தி இன்டிபென்டன்ட் பத்திரிகை இந்த ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. தங்களுக்கும் இந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசின் தகவல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "பிரிட்டனிலிருந்து வெளிவரும் 'த இன்டிபென்டன்ட்' பதச்திரிகையிடம் இந்த ஆதாரங்களை வழக்கறிஞர் வாசுகி முருகதாஸ் கொடுத்திருந்தார். அவைதான் இப்போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடம் கிடைத்துள்ளன.

கைதொலைபேசியின் வழியே பதிவு செய்யப்பட்ட, 25க்கும் மேற்பட்ட ஒளிப்படங்களுடன், 3நிமிட அளவிலான வீடியோவும் ஆதாரங்களாக உள்ளன," என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில், சுதந்திரமான அனைத்துலக விசாரணையின் அவசியத்தை மீண்டும் ஒருதடவை, இந்த ஆதாரங்கள் வலியுறுத்தி நிற்பதாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவல் துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தீவில் இயங்கி வரும் அந்நாட்டின் அரசியல், இராணுவக் கட்டமைப்பின் உயர் மட்டத் தலைவர்களுக்கு, இக் காட்டுமிராண்டித்தனமான குற்றங்களில் பெரும் பங்குண்டு என்பதுடன், அவர்களின் பங்களிப்புடனேயே, இக் கொடுமைகள் நிகழ்ந்துள்ளன என்பதை இந்த ஆதாரங்கள் தெளிவாக காட்டுகின்றன.

இதுவரை வெளிவந்துள்ள எல்லாவகை ஆதாரங்களின் அடிப்படையில், இன்றைய தேவை சுதந்திரமான அனைத்துலக விசாரணை ஒன்று மட்டுமே என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உள்பட சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.





ஐரோப்பிய கால்பந்து ரஷியா அபார வெற்றி

Posted: 08 Jun 2012 10:59 PM PDT


உலகின் 2-வது மிகப்பெரிய கால்பந்து திருவிழாவான யூரோ கோப்பை என்று அழைக்கப்படும் ஐரோப்பிய கால்பந்து போட்டி போலந்து நாட்டில் நேற்று தொடங்கியது.
 
14-வது ஐரோப்பிய கால்பந்து போட்டியை போலந்தும், உக்ரைனும் இணைந்து நடத்துகிறது. இந்த போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்று உள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
 
லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும்.
 
தொடக்க நாளில் 2 ஆட்டம் நடந்தது. 'ஏ' பிரிவில் நடந்த ஆட்டத்தில் ரஷியா- செக்குடியரசு அணிகள் மோதின. ரஷிய வீரர்களின் அபாரமான ஆட்டத்தால் செக்குடியரசு திணறியது. ஆட்டம் முழுவதும் தன்வசப்படுத்திக்கொண்ட ரஷியா 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
 
ரஷியா தரப்பில் ஆலன் டிஜாகோவ் 2 கோல் அடித்தார். அவர் 15-வது மற்றும் 79-வது நிமிடங்களில் கோல் அடித்தார். ஷிர்கோவ் (24-வது நிமிடம்), பயோலச் சென்கோவ் (82-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். செக்குடியரசு சார்பில் 52-வது நிமிடத்தில் வாக்லவ்பிளர் கோல் அடித்தார். ரஷியா 2-வது ஆட்டத்தில் போலந்தை வருகிற 12-ந்தேதி சந்திக்கிறது.
 
முன்னதாக ஏ பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் போலந்து- முன்னாள் சாம்பியன் கிரீஸ் அணிகள் மோதியது. இந்த ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது. கிரீஸ் 2-வது ஆட்டத்தில் செக்குடியரசுவை 12-ந்தேதி எதிர்கொள்கிறது.
 
3 முறை சாம்பியான ஜெர்மனி தொடக்க ஆட்டத்தில் இன்று போர்ச்சுக்கல் (பி பிரிவு) சந்திக்கிறது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.
 
இரவு 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நெதர்லாந்து- டென்மார்க் அணிகள் மோதுகின்றன.




கோர்ட்டில் வனிதாவுக்கும் 2வது கணவருக்கும் தகராறு

Posted: 08 Jun 2012 10:41 PM PDT


நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா. இவரது 2வது கணவர் ஆனந்த்ராஜ். விவகாரத்து கோரி, குடும்ப நல நீதிமன்றத்தில் வனிதாவும் ஆனந்தராஜும் கடந்த அக்டோபர் மாதம் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.வனிதாவும், ஆனந்தராஜும் வக்கீல்களுடன் ஆஜரா யினர். நீதிபதி முன் ஆஜராவதற்காக இருவரும் நீதிமன்ற அறை யில் காத்திருந்தனர். அப்போது, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால், கோபமடைந்த ஆனந்தராஜ் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தார். அவர் நீதிமன்றத்துக்கு வந்தால்தான் வழக்கு தீரும் என்பதால் அவரை சமாதானப்படுத்த வனிதா ஆனந்தராஜின் காலில் திடீரென்று விழுந்து மன்னிப்பு கேட்டார். இதனால், ஓரளவு சமாதானம் அடைந்த ஆனந்தராஜ் வனிதாவுடன் நீதிமன்றத்துக்குள் சென்றார்.

பின்னர் மாலை 4.30 மணிக்கு இருவரும் நீதிபதி முன் ஆஜராகினர். அப்போது, ஆனந்தராஜ், Ôகுழந்தை ஜெய்னிதாவை தன்னிடம் நிரந்தரமாக இருக்கும் வகையில் எழுதிக் கொடுத்தால்தான் கையெழுத்து போடுவேன்Õ என்று கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் உடன் பாடு ஏற்படாமல் நீதிபதி அறையிலிருந்து வெளியே வந்தனர்.

அப்போது, ஆனந்தராஜிடம் வனிதாவின் வக்கீல் சமாதானம் செய்து, Ôவிசா ரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்Õ என்றார். ஆனால், அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், வக்கீலுக்கும் ஆனந்தராஜிக்கும் வாக்குவாதம் ஏற்பட் டது. இதனால், வனிதா ஒரு வழியா கவும், ஆனந்தராஜ் ஒரு வழியாகவும் வெளியேறினர். விசாரணை வரும் 16ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது.



மீண்டும் இணையும் பாலா - விஷால்!

Posted: 08 Jun 2012 10:34 PM PDT


அவன் இவன் படத்துக்குப் பிறகு இயக்குநர் பாலாவும் விஷாலும் மீண்டும் இணைகிறார்கள்.

நடிகர் விஷாலை ஒரு நல்ல நடிகராக ரசிகர்கள் மனதில் பதிய வைத்த பெருமை பாலாவுக்கு உண்டு.

அவன் இவன் படத்தில் ஒன்றரைக் கண்ணுடன் பன்முக பரிமானத்தை அவர் காட்டியிருந்தார்.

இப்போது 'சமர்', 'மத கத ராஜா' என இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் விஷால், இப்படங்கள் முடிவடைந்த பிறகு பாலாவுடன் இணைகிறார்.

இயக்குனர் பாலா தற்போது அதர்வா முரளியை வைத்து 'பரதேசி' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்த பின் விஷாலுக்கான படத்தை இயக்குவார் எனத் தெரிகிறது.

இந்தப் புதிய படம், விஷாலுக்கு தேசிய விருதைப் பெற்றுத் தரும் அளவுக்கு அமையும் என பாலா கூறி வருகிறாராம்!



'கோச்சடையான்' படப்பிடிப்பு முடிந்தது - பின்னணி வேலைகள் ஆரம்பம்

Posted: 08 Jun 2012 10:18 PM PDT


எந்திரன்' படத்திற்குப் பிறகு ரஜினி நடிக்கவிருந்த அடுத்தப் படத்தில் பல சர்ச்சைகள் எழுந்தன. ஒரு வழியாக ரஜினியின் அடுத்தப் படம் 'கோச்சடையான்' என்று முடிவானது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படத்தின் பின்னணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ரஜினிக்கு ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோன் இப்படத்தில் நடித்திருக்கிறார். லண்டனில் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 20 நாட்கள் நடைபெற்றது. பிறகு இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இறுதிக்கட்ட படப்பிடிப்பை ஹாங்காங்கில் நடத்தி முடித்திருக்கிறார்கள்.

தற்போது படத்தின் பின்னணி வேலைகளான டப்பிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், மிக்சிங், ரீ-ரிக்கார்டிங் போன்ற பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன. லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஹாங்காங் ஸ்டூடியோக்களில் ஒரே நேரத்தில் இப்பணிகள் நடைபெற்று வருவதாக படத்தின் இணை தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் தெரிவித்திருக்கிறார்.

இந்த வருடம் இறுதிக்குள் 'கோச்சடையான்' படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம். தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளுடன் ஜப்பான், பிரெஞ்சு, ஸ்பானிஷ் ஆகிய மொழிகளிலும் படத்தை வெளியிட ஏற்பாடு நடக்கிறதாம்.



ஜனாதிபதி தேர்தல்: பிரணாப் முகர்ஜி போட்டி உறுதி- 15-ந்தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted: 08 Jun 2012 10:10 PM PDT


ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜூலை) 25-ந் தேதியுடன் முடிகிறது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை இரண்டாவது வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.
 
பாராளுமன்ற இரு சபை எம்.பி.க்கள், மாநில எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுபோட்டு ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. அடுத்த வாரம் தேர்தல் அட்டவணை வெளியிடப்படுகிறது.
 
இதனால் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சிகள் இது தொடர்பான ஆலோசனைகளைத் தீவிரப்படுத்தி உள்ளதால், அடுத்த ஜனாதிபதி யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
 
ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியே வெற்றி பெற வாய்ப்புள்ளதால், பாரதீய ஜனதா கட்சி இதில் அதிக ஆர்வம் காட்டாமல் உள்ளது. இதற்கிடையே அ.தி.மு.க., பிஜு ஜனதாதளம் கட்சிகள் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவை வேட்பாளராக நிறுத்தியுள்ளன. அவர் ஆதரவு திரட்டி வருகிறார்.
 
இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி காங்கிரஸ் செயற்குழு கூடி ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு குறித்து விவாதித்தது. அதில் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரம் சோனியாவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து சோனியா கடந்த 4 நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தி வந்தார்.
 
சோனியாவை நேற்று முன்தினம் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் வீட்டில் காங்கிரஸ் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.
 
இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட்டது. இதையொட்டி மளமளவென பல்வேறு சம்பவங்கள் நடந்தன.
 
உயர்நிலை கூட்டம் முடிந்தவுடன் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது படேல், நார்த் பிளாக்கில் உள்ள நிதி அமைச்சகத்துக்கு சென்று பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார். சுமார் 15 நிமிடங்கள் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
 
பிறகு அகமது படேல் 10, ஜன்பத் சாலையில் உள்ள சோனியா வீட்டுக்குச் சென்றார். பிரணாப்புடன் நடத்திய பேச்சு விவரங்களை அவர் சோனியாவிடம் கூறினார்.
 
இந்த சந்திப்புகள் முடிந்ததும் பிரணாப் முகர்ஜி நேற்றிரவு அவசரம், அவசரமாக கொல்கத்தா புறப்பட்டுச் சென்றார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் அடுத்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிதான் என்பதை சூசகமாக உணர்த்துவது போல் உள்ளது.
 
சோனியாவை கடந்த புதன்கிழமை சந்தித்த ராஷ்டீரிய லோக்தளம் கட்சி தலைவர் அஜீத்சிங், ஜனாதிபதி பதவிக்கு பிராணாப் முகர்ஜியே பொருத்தமானவர் என்றார். அதுபோல் மறுநாள் (வியாழக்கிழமை) சோனியாவை சந்தித்த தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பும் முன்பு பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார்.
 
பிரணாப் முகர்ஜிக்கு அவர் தங்க நிற சால்வை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். இது, காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜிதான் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்பதை வலுவாக உறுதிபடுத்துவதாக உள்ளது.
 
ஜனாதிபதி தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி 12 அல்லது 13-ந்தேதி வெளியிட்டு விடுவார். அதன் பிறகு சோனியா, காங்கிரஸ் வேட்பாளரை 15 அல்லது 16-ந்தேதி அறிவிப்பார்.
 
சோனியா அறிவிக்கும் வேட்பாளரை ஆதரிப்போம் என்று அதன் கூட்டணியில் உள்ள தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், ராஷ்டீரிய லோக்தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. காங்கிரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகளும் பிரணாப் முகர்ஜியை ஏற்க தயார் என்று கூறியுள்ளன.
 
மம்தாபானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் இதுவரை தன் முடிவை வெளியிடவில்லை என்றாலும் பிரணாப் முகர்ஜி வேட்பாளராக நிறுத்தப்படும் பட்சத்தில் மண்ணின் மைந்தர் என்ற நிலையில் அவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது.
 
பி.ஏ.சங்மாவை நிராகரித்துள்ள இடதுசாரி கட்சிகள், கடைசியில் பிரணாப் முகர்ஜியை ஏற்றுக் கொள்ளும் வாய்ப்புள்ளது. எனவே ஜனாதிபதி தேர்தலில் பிராணாப்முகர்ஜி மிக எளிதாக வெற்றி பெறுவார் என்பது உறுதியாகியுள்ளது.



போயஸ் கார்டனில்சசிகலாவின் இடத்தை பிடிக்க போட்டி போடும் இளவரசி, அனுராதா?

Posted: 08 Jun 2012 09:57 PM PDT


தமிழகத்தின் அதிகாரம் மிக்க பகுதியான போயஸ் கார்டனில் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழி சசிகலாவிற்கு இணையாக அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் அனுராதா ஆகியோர் வலிமை பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

போயஸ் கார்டனில் இருந்து முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழி சசிகலா வெளியேற்றப்பட்டு, தற்போது மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவருடைய இடத்திற்கு அடுத்து வலிமையான நபர் யார் வருவார் என்று அதிமுக வட்டரத்தில் ஒரு பட்டிமன்றமே நடைபெற்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சசிகலாவின் சகோதரர் தினகரன், கணவர் நடராஜன், அவரது தம்பி ராமசந்திரன், சசிகலா உறவினர் ராவணன் உள்ளிட்ட சுமார் 14 பேர்களை கட்டம் கட்டிய ஜெயலலிதா இளவரசி, அனுராதா ஆகிய இருவருக்கு மட்டும் கருணை காட்டினார்.

சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மனைவியான இளவரசி மீது ஜெயலலிதாவுக்கு எப்போதுமே தனிப்பட்ட பாசம் உண்டாம். ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சை தோட்டத்தில் பணியாற்றியபோது மின்சாரம் தாக்கி ஜெயராமன் இறந்து போனார். இதனால் இளவரசி மீது ஜெயலலிதாவிற்கு கருணை ஏறப்பட்டுள்ளது. அப்போது முதல் ஜெயலலிதாவிற்கு உதவிகரமாக இளவரசி போயஸ் கார்டனில் தங்கிவிட்டாராம். இதனால் அவரது குடும்ப செலவுகளையும் முதல்வர் ஜெயலலிதாவே ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகின்றது.

அதிமுக முன்னாள் எம்.பி. தினகரனின் மனைவி அனுராதா. ஜெயா டி.வி.யின் நிர்வாகப் பிரிவில் பணியாற்றும் அனுராதா டாக்டர் வெங்கடேஷின் சகோதரி. முன்னாள் எம்.பி. தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகிய இருவருமே ஜெயலலிதாவால் கட்டம் கட்டப்பட்ட நிலையில் அனுராதா மீது ஜெயலலிதா கருணை காட்டுவது அதிமுக வட்டாரத்தை திகைக்க வைத்துள்ளது.

சசிகலாவின் இடத்துக்கு அடுத்து வரப்போவது இளவரசி மற்றும் அனுராதா தான் என்கிற பேச்சு தற்போது பரபரப்பாக பேசப்படுகின்றது.



ஸ்டாலின் ஆதரவாளர் முத்துசாமி அம்மாவிடம் சரண்?

Posted: 08 Jun 2012 09:50 PM PDT


திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான ஈரோடு முத்துசாமி திமுகவில் இருந்து வெளியேறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு கட்சியில் ஆதரவாளர்கள் பட்டாளம் உண்டு. மு.க.ஸ்டாலினை நம்பி அரசியல் செய்தவர்கள் தமிழகத்தில் அதிகம். உதாரணத்திற்கு திருச்சி பரணி, திருவாரூர் அசோகன், திருவொற்றியூர் விஜயன், கும்மிடிப்பூண்டி வேணு, திருவள்ளூர் சிவாஜி, வாலாஜாபேட்டை அசேன், ஜெ.அன்பழகன், தா.மோ.அன்பரசன், எ.வ.வேலு, ஈரோடு என்.கே.கே.பி.ராஜா என ஒரு பட்டாளமே உண்டு.

அதே போல கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, புதுக்கோட்டை ரகுபதி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொன்முடி ஆகியோர் எல்லாம் ஸ்டாலின் ஆதரவாளர்கள் தான். இதில் திருவாரூர் அசோகன் அதிமுகவுக்கு மாறி டெல்லியில் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாகிவிட்டார். மு.க. ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராக இருந்த பரிதி இளம்வழுதி பிறகு முரசொலி மாறனிடம் தஞ்சமடைந்தார். இப்போது ஸ்டாலினின் எதிரணியில் உள்ளார். தேனி மூக்கையா முழு மூச்சாக ஸ்டாலின் ஆதரவாளராக இருந்து மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பக்கம் சென்றுவிட்டார்.

இந்த நிலையில் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு விரும்பி வந்தவர் ஈரோடு முத்துசாமி என்று சொல்வதை விட கட்டாயப்படுத்தி வரவழைக்கப்பட்டவர் என்றே திமுக வட்டாரத்தில் கூறப்படுகின்றது. அதிமுகவில் இருந்து முத்துசாமி வெளியேற வேண்டாம் என்று ஜெயலலிதாவே அறிக்கைவிடும் அளவு அவருக்கு அங்கு முக்கியத்துவம் இருந்தது. சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள முத்துசாமியின் வீட்டுக்கே மு.க. ஸ்டாலின் போய் பேச்சுவார்த்தை நடத்தி திமுகவில் இணைய வைத்தார். அன்று முதல் இன்று வரை அவர் மு.க.ஸ்டாலின் விசுவாசியாக உள்ளார்.

இந்த நிலையில் அப்படி அழைத்து வரப்பட்ட முத்துசாமிக்கும் ஈரோட்டு மாவட்டச் செயலாளர் என்.கே.கே.பி. ராஜாவுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுக்குழு கூட்டத்தில் திடீர் மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தை விரிவாக திமுக தலைமைக்கு இரு ஆதரவாளர்களுமே அனுப்பி வைத்துள்ளனர்.

ஈரோட்டில் நடந்த ஊழியர் கூட்டத்தில் முத்துசாமியை ஒருமையில் பேச பிரச்சனை பெரிதாகி தலைமைக்கு புகார் சென்றது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் மன்றாடியாருக்கு திமுக தலைமை உத்தரவிட, அவரும் விசாரித்து அறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்த அறிக்கையின் பேரில் மேல் நடவடிக்கை எடுக்க பேராசிரியர் மற்றும் துரைமுருகனுக்கு கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். ஆனால் என்.கே.கே.பி.ராஜா மீது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இதற்கு பின்னணியில் மு.க. ஸ்டாலின் இருப்பதாக நம்பப்படுகிறது. இதனால் முத்துசாமியும், அவரது ஆரவாளர்களும் மனம் உடைந்து போனதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து முத்துசாமியிடம் பேசிய அவரது ஆதரவாளர்கள் அண்ணே திமுகவில் நமக்கு உரிய மரியாதை இல்லை. இவுங்களை நம்பி இங்க இருந்தால் எந்த நன்மையும் இனி நடக்காது போல் இருக்கு. அதிமுக ஆட்சி முடிய இன்னும் 4 வருடம் இருக்கு. அத்தனை காலம் அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டி வரும். இது தேவையா. ஜெயலலிதா உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார். அதனால் அதிமுக பக்கம் போய்விடலாம் என தூபம் போடுகின்றார்களாம்.

இதனால் ஈரோடு முத்துசாமியை மீண்டும் அதிமுகவிற்கு அழைத்துச் செல்ல சிலர் முயன்று வருவதாக கூறப்படுகின்றது.



நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த மணிரத்னம்

Posted: 08 Jun 2012 09:45 PM PDT


மணிரத்னம் இயக்கி வரும் 'கடல்' படத்தில் நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் ஹீரோவாகவும், சமந்தா ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்கள். கடலோர காதல் கதையாக உருவாகும் இப்படத்தில் கெளதம் மீனவர் வேடத்தில் நடிக்கிறார்.

கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் காட்சிகளில் அவருடைய நடிப்பைப் பார்த்து யூனிட்டே பாராட்டுகிறதாம். கடலோரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரன் ஒன்றுக்கு மணிரத்னம், நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறாராம்.

அதற்காக நயன் தாராவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறாராம் மணிரத்னம். தற்போது அஜீத் படத்தில் நடித்து வரும் நயன்தாரா மணிரத்னத்தின் அழைப்பை ஏற்பாரா? இல்லையா? என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.



சச்சினை பத்தி தெரியனுமா?

Posted: 08 Jun 2012 09:39 PM PDT



இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை பயணத்தை விளக்கும் டெண்டுல்கர் டு சென்சூரிகர் என்ற புதிய புத்தகத்தை, பிசிசிஐ துணை தலைவர் சுதிர் டபிர் வெளியிட்டார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர்(39). கடந்த 1989ம் ஆண்டு 16 வயதில் இந்திய அணி்க்குள் நுழைந்த சச்சின், கடந்த 23 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள், அதிக போட்டிகளில் பங்கேற்ற வீரர், அதிக சதங்கள் என்று இவரது சாதனைகள் நீண்ட பட்டியலை கொண்டது.

வலது பேட்ஸ்மேனாக சச்சின் கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்களை அடித்த வீரர் என்ற அபூர்வ சாதனையை படைத்தவர். இதனால் இந்தியா மட்டுமின்றி பல உலக நாடுகளில் சச்சினுக்கு எண்ணற்ற ரசிகர்கள் உண்டு.

இந்த நிலையில் சச்சினின் வாழ்க்கை, சாதனைகள், கருத்துகளை கொண்ட புத்தகம் ஒன்றை உள்ளூர் கிரிக்கெட் வீரரான கிரண் மல்ஹேத்ரா என்பவர் எழுதியுள்ளார். இன்று நடைபெற்ற இப்புத்தகத்தின் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணை தலைவர் சுதிர் டபிர் புத்தகத்தை வெளியிட்டார்.

'டெண்டுல்கர் டு சென்சூரிகர்' என்ற இப்புத்தகத்தில் சச்சினின் ஒவ்வொரு சதங்கள் அடிக்கப்பட்ட இடங்கள், பந்துகளின் எண்ணிக்கை, எந்த அணிக்கு எதிராக அடிப்பட்டது உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் உள்ளன. மேலும் சச்சினை குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், மற்ற துறைகளை சேர்ந்தவர்கள் ஆகியோரின் விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளது.

இதில் சச்சினை குறித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சுனில் கவாஸ்கர், பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் ஆகியோரின் விமர்சனங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நூலின் ஆசிரியர் கிரண் மல்ஹோத்ரா கூறுகையில், இந்நூல் விற்பனைக்காக வெளியிடப்பட்டது அல்ல. அன்பளிப்பாக அளிக்கப்படுவதற்காக வெளியிடப்படுகிறது என்றார்.



என் பார்வையில் சமர் - ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன்!

Posted: 08 Jun 2012 09:05 PM PDT


கொஞ்சம் சீரியஸான அங்காடித்தெரு, ஜாலியான பாணா காத்தாடி, அதிரடியான ‌கோ... என இப்படி விதவிதமான படங்களுக்கு தன்னோட வித்தியாசமான ஒளிப்பதிவால அழகு சேர்த்த ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன். விஷால் நடிப்பு, விறுவிறுன்னு வளர்ந்துட்டு இருக்கற சமர் படப்பிடிப்புக்கு மத்தியில, நமது கேள்விகளுக்கு அசத்தலா பதில் கொடுத்தார் இதோ...

ஒளிப்பதிவாளர் ஆனதன் காரணம்...?

இயக்குநராகவோ, நடிகராகவோ ஆகணும்னா அதுக்கு கற்பனை வளமும் அதை அழகா வெளிப்படுத்த திறனும் இருந்தா போதும். ஆனா, ஒளிப்பதிவாளராக கற்பனைத்திறனோட, அறிவியல் அறிவும் அவசியம். இந்த கலவை என்னை கவர்ந்ததால ஒளிப்பதிவாளரா மாறிட்டேன்.

சமர் ஒளிப்பதிவில் சிறப்பு...?

முழுக்கு முழுக்க தாய்லாந்துல நடக்கற கதைங்கறதால இதுவரைக்கும் திரையில் பார்க்காத புதுப்புது லொகேஷன்களை தேடித்தேடி படம் பிடிச்சிருக்கோம். தீப்பெட்டி அளவு இருக்குற கோப்ரோ, புகைப்படம் எடுக்க பயன்படுற 7டின்னு காட்சிகளுக்கு ஏத்த மாதிரி பலவிதமான கேமராக்களை பயன்படுத்தி இருக்‌கிறேன்.

ஒளிப்பதிவு துறையில் தொழில்நுட்ப வளர்ச்சி...?

இன்னும் 5-6 வருஷத்துல பிலிம்ங்கற வார்த்தையே சினிமாவுல இருக்காதுன்னு நினைக்கிறேன். இதுவரைக்கும் ரொம்ப சிரமப்பட்டு செஞ்ச விஷயங்களை, கொஞ்சம் கூட கஷ்டப்படாம ஒரு பட்டனை தட்டி செய்ற அளவுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் பிரம்மாண்டமா வளர்ந்திருக்கு.

சமர் பற்றி...?

தீராத விளையாட்டு பிள்ளை இயக்குநர் திருவோட இயக்கத்துல... காதல், ஆக்ஷ்ன், சென்டிமென்ட்னு எல்லாவிதமான சுவைகளும் சரிவிகிதத்துல கலந்து... விஷால், த்ரிஷா நடிப்புல வித்தியாசமா உருவாகிட்டு இருக்கற த்ரில்லர் படம்.

தமிழ்ப்படங்களின் தரம் உலகத்தரத்துக்கு உயர...?

நம்மூர் ஷூட்டிங்ல, எல்‌லாரும் எல்லா வேலையும் செஞ்சாகணும். ஆனா, ஹாலிவுட்ல ஒருத்தர் ஒரு வேலைதான் செய்வாங்க. ஆனா, சரியா செய்வாங்க. அந்தமாதிரி, இவங்களுக்கு இந்த வேலைன்னு பிரிச்சு கொடுத்து அதை 100 சதவீதம் சிறப்பா செஞ்சா... தரம் தானா வரும்! என்றார்.



சீரஞ்சீவியின் இல்லத் திருமணத்தில் நடனமாடும் ஸ்ரேயா, தமன்னா

Posted: 08 Jun 2012 08:52 PM PDT


தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் மகன் ராம்சரனும் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கும் ராம்சரன், நடித்த 'மஹதீரா' என்ற படம் வசூலில் சாதனைப் படைத்தது.

'மஹதீரா', 'ரகளை' போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகியிருக்கும் ராம்சரனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியின் பேத்தி உபாசனா காமினேனிக்கும், ராம்சரனுக்கும் வருகிற ஜூன் 14ஆம் தேதி ஐதராபாத்தில் திருமணம் நடைபெற உள்ளது.

இந்த திருமணத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளான ஸ்ரேயா மற்றும் தமன்னா இருவரும் நடனம் ஆட இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ராம்சரன் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்கள். திருமண நிகழ்ச்சிகளின் போது ஒலிக்கும் தெலுங்கு பாடலுக்கு இந்த இரண்டு நடிகைகளும் நடனம் ஆட ஒப்புக்கொண்டார்களாம்.



தொல்.திருமாவளவனுக்கு 50 பவுன் பொற்காசுகள் வழங்கும் விழா

Posted: 08 Jun 2012 08:31 PM PDT

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித்தொடர்பாளர் வன்னிஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்தநாளான ஆகஸ்டு 17-ந் தேதி தமிழர் எழுச்சி நாளாக தமிழ்நாடெங்கும் ஒவ்வொரு ஆண்டும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தொல்.திருமாவளவனுக்கு 50-வது பிறந்தநாள், பொன்விழா என்பதால், தமிழ்நாடெங்கும் மிகப்பிரமாண்டமாகக் கொண்டாட விடுதலைச் சிறுத்தைகள் திட்டமிட்டுள்ளனர். 

தொல்.திருமாவளவன் அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் பாராட்டும்விதமாகவும், மேலும் மேலும் ஊக்கப்படுத்தும்விதமாகவும் 11-ந் தேதி சென்னை, தியாகராயநகர் சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில் 50 பவுன் பொற்காசுகள் வழங்கும் விழா விடுதலைச் சிறுத்தைகளின் தலைமை நிர்வாகிகளால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 

விழாவில், முகம்மது யூசுப் தலைமையில் கட்சி வளர்ச்சிக் கொடையாக தொல்.திருமாவளவனிடம், தலைமை நிலையப் பொறுப்பாளர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் 50 பவுன் பொற்காசுகள் வழங்கும் கொடையரங்கமும் இடம் பெறுகின்றன. நிறைவாக தொல்.திருமாவளவன் ஏற்புரையாற்றுகிறார். 

இவ்வாறு வன்னி அரசு கூறியுள்ளார்.





பாடகி ஸ்ரேயா கோஷலை நடிக்க வைத்த டி.இமான்(வீடியோ)

Posted: 08 Jun 2012 08:13 PM PDT


திரைப்பட பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலை பாட வைப்பது என்பது பெரிய விஷயம் அல்ல, அவரை ஒரு பாடல் காட்சிகளிலோ அல்லது வீடியோ ஆல்பத்திலோ நடிக்க வைப்பதுதான் பெரிய சிரமம். இதற்காக பலபேர் முயற்சி செய்து தோல்வி அடைந்திருக்கிறார்கள்.

இதை உடைத்து ஸ்ரேயா கோஷலை தமிழில் உருவான ஒரு வீடியோ ஆல்பத்தில் இசையமைப்பாளர் டி.இமான் இடம்பெற செய்திருக்கிறார்.

'மனம் கொத்திப் பறவை' படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதால் சந்தோஷமடைந்திருக்கும் இமான், தனது அடுத்த வெளியிடான 'சாட்டை' படத்தின் பாடல்களையும் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கொடுப்பதற்கு கடினமாக உழைத்துகொண்டிருக்கிறார்.

இதற்காக சமீபத்தில் 'சாட்டை' படத்திற்கான ஒரு பாடலை இணைய தளங்களில் வெளியிடப்பட்டது. இந்த ஒரு பாடல் அமோகமாக வெற்றி பெற்றிருக்கிறது. 'சகாயனே சகாயனே' என்று தொடங்கும் இந்த பாடலை பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலை பாடவைத்ததும் இன்றி, அவரை அந்த பாடலுக்கு ஆடவும் வைத்திருக்கிறார்.

இயக்குநர் பிரபுசாலமன், ஜான்மேக்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் 'சாட்டை' படத்தில் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். அன்பழகன் என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார்.





கார்த்திகாவின் சகோதரியும் நடிகையானார்!

Posted: 08 Jun 2012 07:52 PM PDT


பாசில், சித்திக் போன்ற இயக்குனர்களிடம் பல படங்களில் உதவியாளராக பணியாற்றி, இப்போது, "செம்பட்டை என்ற படத்தில் இயக்குனராகி இருக்கிறார் ஐ.கணேஷ். விமல், விதார்த் ஆகியோருடன் இணைந்து கூத்துப்பட்டறையில், எட்டு ஆண்டுகளாக பயிற்சி பெற்ற திலீபன் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், கவுரி நம்பியார் என்ற கேரள
புதுவரவு, நாயகியாக நடித்துள்ளார். இந்த கவுரி வேறு யாருமல்ல. "கோ பட நாயகி கார்த்திகாவின் பெரியப்பா மகள். அதாவது, கார்த்திகாவுக்கு அக்காள். "சினிமாவில் எனக்கு சீனியர் கார்த்திகா என்பதால், அவரிடமும், எனது சித்தியான, "அலைகள் ஓய்வதில்லை ராதாவிடமும் சினிமாவை கேட்டு தெரிந்து கொண்டே நடிக்க வந்துள்ளேன் என்கிறார் கவுரி. "இந்த, "செம்பட்டை படத்தில் உப்பு விற்கும் பெண்ணாக நடித்திருக்கிறேன். அண்ணன், தம்பி பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில், காதல்,
சென்டிமென்ட் இரண்டும் கலந்த கதாபாத்திரம் என்பதால், கதையோடு கலந்து நடித்துள்ளேன். அதனால், இந்த படம் திரைக்கு வரும் போது, எனது நடிப்பு பேசப்படும் என்று சொல்லும் கவுரி நம்பியார், "எனது சித்தி ராதா சொன்னது போல், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை மதித்து நல்ல நடிகை என்ற பெயருடன் சினிமாவில்
நீடித்திருப்பேன் என்கிறார்.



நானும் ஆ.ராசாவும் அண்ணன்-தம்பி போன்றவர்கள்: கருணாநிதி

Posted: 08 Jun 2012 07:42 PM PDT


2ஜி வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா கடந்த 15-ந் தேதி நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அதன்பின்னர் 8-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஆ.ராசா தமிழ்நாட்டுக்கு வந்து செல்ல டெல்லி சி.பி.ஐ சிறப்பு கோர்ட் நீதிபதி  அனுமதி வழங்கினார்.  
 
இதையடுத்து இன்று மாலை ஆ.ராசா சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த ஆ.ராசாவுக்கு, விமான நிலையத்தில் தி.மு.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து அண்ணா அறிவாலயம் வந்த ஆ.ராசா, அங்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் நிர்வாகிகளை சந்தித்தார்.
 
ராசாவுடனான சந்திப்புக்குப் பின்னர் பேசிய கருணாநிதி, 'ஒரு வருட இடைவெளிக்குப் பின்னர் அண்ணன் தனது தம்பியை சந்திப்பது போன்றது இந்த சந்திப்பு' என்றார். ராசா தற்போது அரசியலில் இருப்பதாகவும், அவர் பொதுக்கூட்டங்களில் பேசுவார் எனவும் கருணாநிதி மேலும் கூறியுள்ளார்.
 
கருணாநிதியுடனான சந்திப்பு குறித்து ராசா கூறும்போது, 'தலைவரின் கைகளில் எப்போதும் நான் ஒரு குழந்தையாக இருப்பேன்' என்றார்.




பாகிஸ்தானில் அமெரிக்கா குண்டு வீச்சு நீடிப்பது ஏன்?

Posted: 08 Jun 2012 07:31 PM PDT


பாகிஸ்தானில் உள்ள வசிரிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகளை வேட்டையாட அமெரிக்கா உளவு விமானம் மூலம் குண்டு வீசுகிறது. பாகிஸ்தான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தொடர்ந்து குண்டு வீச்சு நடைபெறுகிறது.
 
கடந்த சில நாட்களில் 8 தடவை குண்டுகளை வீசி அல்கொய்தாவின் 2-வது இடத்தில் இருக்கும் தலைவர் அல்-லிபி உள்பட 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
 
வசிரிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் மற்றும் வெடிகுண்டு தொழிற்சாலை செயல்படுவது குறித்து அமெரிக்கா தகவல் கொடுத்தும் பாகிஸ்தான் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
 
இதனால் பாகிஸ்தான் மீது அதிருப்தி அடைந்த அமெரிக்கா தானாகவே உளவு விமானம் மூலம் கண்காணித்து தாக்குதலை நடத்துகிறது என்று ராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் கூறுவதாக பாகிஸ்தான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன



மீண்டும் மீண்டும் தனுஷை சீண்டும் சிம்பு ! (வீடியோ)

Posted: 08 Jun 2012 07:16 PM PDT



சிம்பு நடிப்பில் நேற்று முதல் வாலு படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. ஹன்சிகா, சந்தானம், கணேஷ் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்திற்கு TEASER ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் முழுக்க முழுக்க மீண்டும் தனுஷை சீண்டி இருக்கிறார் சிம்பு.

ஹன்சிகா சிம்புவைப் பார்த்து பேசும் வசனம் ஒன்று இந்த டீசரில் வருகிறது. அதில் " ஒருசில பசங்களை பார்க்கப் பார்க்கதான் பிடிக்கும், உன்னை மாதிரி பசங்களை பார்த்த உடனே பிடிக்கும் " என்பார் ஹன்சிகா.

'படிக்காதவன்' படத்தில் தமன்னாவிடம் தனுஷ் " என்னை மாதிரி பசங்களை பார்த்த உடனே பிடிக்காது, பார்க்கப் பார்க்கதான் பிடிக்கும் " என்பார்.

அதை அப்படியே மாற்றி  உன்னையெல்லாம் பார்க்க பார்க்கதான் பிடிக்கும், என்னை பெண்ணுங்களுக்கு பார்த்த உடனே பிடிக்கும் என சீண்டியிருக்கிறார் சிம்பு என்கிறது கோலிவுட்.

இப்படத்தின்  படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் தான் நடைபெற இருக்கிறது. அதுமட்டுமல்லாது, சிம்பு நடிப்பில் உருவாகும் குறுகிய கால தயாரிப்பு படம் 'வாலு' தான். தீபாவளி தினத்தன்று 'வாலு' வெளிவரும் என்று தெரிவித்து இருக்கிறது படக்குழு.

TEASERல் லேசாக தனுஷ் சீண்டிருக்கும் சிம்பு, படத்தில் என்ன பண்ண போகிறாரோ... அவர் என்ன வாலுத்தனம் செய்தாலும் அது 'வாலு' படத்திற்கு விளம்பரம் தான்!









கடற்படை ரகசியங்களை வெளியிட்ட தொழிலதிபர் மனைவியுடன் கைது

Posted: 08 Jun 2012 06:31 PM PDT


இந்திய கடற்படையின் முக்கிய நடவடிக்ககைள் கடந்த 2006-ம் ஆண்டு வெளியில் கசிந்தன. கடற்படை ரகசியங்களை வெளியிட்டதாக அமெரிக்கவாழ் தொழில் அதிபரும், ஆயுத ஏஜெண்டுமான அபிஷேக் வர்மா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதன் பேரில் விசாரணை நடந்து வந்தது.
தொழிலதிபர் அசோக் வர்மாவின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 10 இடங்களில் நேற்று சிபிஐ திடீர் சோதனை நடத்தியது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. அபிஷேக் சுவிஸ் வங்கிகளில் பணம் முதலீடு செய்தது தொடர்பான ஆவணங்களும் கிடைத்தன. இந்த ஆவணங்களின் அடிப்படையில் அபிஷேக் வர்மா மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கடற்படை ரகசியங்களை வெளியிட்ட குற்றத்திற்காக தொழில் அதிபர் அபிஷேக் வர்மாவையும், அவரது மனைவி அன்கா நீஸ்குவையும் சிபிஐ போலீசார் ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் இன்று கைது செய்துள்ளனர்.
அபிஷேக்கின் மனைவியான அன்கா இத்தாலி நாட்டுப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.




பல கோடி பணம் செலுத்தியும் தமிழகத்துக்கு மின்சாரம் கிடைக்காதது ஏன்?: நீதிமன்றம் கேள்வி

Posted: 08 Jun 2012 07:23 PM PDT


பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு மின்சாரம் கொண்டு வருவதில் நிலவும் சிக்கல்கள் பற்றி விளக்கம் கேட்டு, ஸ்டாலின் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
அவரது மனுவை ஏற்று விசாரணை நடத்திய நீதிபதி, மின்சாரம் கொண்டு வருவதில் நிலவும் சிக்கல்கள் பற்றி விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், பல கோடி பணம் செலுத்தியும் தமிழகத்துக்கு மின்சாரம் கிடைக்காதது ஏன்? எனவும், மின்சாரம் பெறுவதற்காக பிற மாநிலங்களுக்கு தமிழகம் எவ்வளவு பணம் செலுத்தியுள்ளது? எனவும் தமிழக அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
குஜராத், ஜார்க்கண்ட் மாநிலங்கலிலிருந்து மின்சாரம் பெற தமிழகம் பல கோடி பணம் செலுத்தியுள்ளதாகவும், ஆனால் மின்சாரம் கொண்டு வரும் பாதையிலுள்ள இடர்பாடுகளால் தமிழகத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.




இலங்கை மீது இந்தியா கடும் சீற்றம்?

Posted: 08 Jun 2012 08:37 AM PDT


'கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு'வின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பான அமலாக்க யோசனையை அமெரிக்காவிடம், இலங்கை அரசு நேரடியாகக் கையளித்தது குறித்து இந்தியா கடும்  சீற்றமடைந்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

இது விஷயத்தில் இலங்கை மீதான தமது அதிருப்தியை டெல்லி, இராஜதந்திர  வழிமுறைகளில் தெரிவித்திருப்பதாகவும் தூதரக வட்டாரங்கள் மூலமாக  தெரியவ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்,அண்மையில் அமெரிக்கா  சென்றிருந்தார்.அப்போது அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனை  சந்தித்து,நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை ஜெனீவா மாநாட்டின்  தீர்மானங்களுக்கு இசைவாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான இலங்கை அரசின்  திட்டவரைவை,அவரிடம் கையளித்திருந்தார்.

ஐந்து அம்சங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த அமலாக்க யோசனைகள், படிப்படியாக  நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இலங்கை அரசாங்கம் அமெரிக்காவிடம்  உறுதியளித்திருந்தது.

இந்நிலையில் இந்தியாவைப் புறக்கணித்துவிட்டு அமெரிக்காவுடன் நேரடியாகவே  தொடர்புகொண்டு இவ்வாறான விஷயங்களை,இலங்கை அரசாங்கம் கையாள்வது குறித்து  இந்தியா கடும் சீற்றமடைந்துள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான  தீர்மானம் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட போது, அதனை மென்மைப்படுத்த  இந்தியா பெரிதும் உதவியது. ஆனால், இப்போது இந்தியாவைப் புறந்தள்ளிவிட்டு  அமெரிக்காவுடனான விஷயங்களை, நேரடியாகவே கையாள்வதற்குக் கொழும்பு  முற்பட்டிருப்பது டெல்லிக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இது குறித்த தமது அதிருப்தியை இராஜதந்திர வழிமுறைகளில் இலங்கை அரசாங்கத்துக்கு  இந்தியா தெரியப்படுத்தியுள்ளது.

இருந்த போதிலும் இலங்கை அரசிடமிருந்து இதற்கான பிரதிபலிப்புக்கள் எதுவும்  வெளிப்படுத்தப்படவில்லை.அண்மைக்காலமாக இந்தியாவைப் பறக்கணிக்கும் வகையில்  இதனைவிட மேலும் பல விஷயங்களில் இலங்கை செயற்பட்டுவருவது தொடர்பாகவும்  இந்தியா அதிகளவு கவலையடைந்திருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.



டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன

Posted: 08 Jun 2012 08:12 AM PDT


தமிழக அரசின் வெவ்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களும், அதிகாரிகளும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டு ஜுலை மாதம் 30-ம் தேதி டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வு நடத்தப்பட்டது.
 
இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 9 லட்சம் பட்டதாரிகள் எழுதினார்கள்.   பழைய தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், ஓராண்டுக்கு முன்பு நடத்தப்பட்ட குரூப்-2 தேர்வு முடிவு மட்டும் வெளியாகாமல் இருந்தது. தேர்வு எழுதியவர்கள் அனைவரும் தேர்வு முடிவுகளை  எதிர்பார்த்து வந்த நிலையில் குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் இன்று மாலை வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் அறிவித்திருந்தார்.
 
அதன்படி குரூப்-2 தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலக அறிவிப்பு பலகையிலும், டி.என்.பி.எஸ்.சி இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.



நித்யானந்தா சீடர்கள் 17 பேர் கைது

Posted: 08 Jun 2012 07:56 AM PDT


சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா தற்போது புதிய பிரச்சினையில் சிக்கிக் கொண்டுள்ளார். மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக சமீபத்தில் நியமிக்கப்பட்ட நித்யானந்தா தற்போது கர்நாடகாவில் உள்ளார். அங்குள்ள பிடதி ஆசிரமத்தில் நேற்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.  
 
அப்போது ஏற்பட்ட தகராறில் நித்யானந்தாவின் சீடர்கள் தங்களை தாக்கியதாக டி.வி நிருபர் ஒருவரும், நவநிர்மாண் சேனா தொண்டர்களும் தனித்தனியாக இரண்டு புகார்கள் அளித்துள்ளனர். அப்புகார்களின் அடிப்படையில் நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் மீது இரண்டு வழக்குகளை கர்நாடக போலீசார் பதிவு செய்துள்ளனர்.  
 
இவ்வழக்குகள் தொடர்பாக ராகசுதா, மோக்‌ஷயா என்னும் 2 பெண் சீடர்கள் உள்பட, நித்யானந்தாவின் 17 சீடர்கள் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  
 
நித்யானந்தா தன்னைக் கற்பழித்ததாக ஆர்த்திராவ் என்னும் அமெரிக்கவாழ் இந்தியப் பெண் கூறிய புகார் பற்றி நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது, நித்யானந்தாவிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது நித்யானந்தாவின் சீடர்களுக்கும், நிருபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இத்தகராறில் டி.வி நிருபர் ஒருவரை நித்யானந்தாவின் சீடர்கள் தாக்கியதாகக் கூறி, செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  
 
அதனைத் தொடர்ந்து அங்கு வந்த நவநிர்மாண் சேனா தொண்டர்களும், செய்தியாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது சீடர்கள் தங்களையும் தாக்கியதாக நவநிர்மாண் சேனா தொண்டர்களும் புகார் அளித்துள்ளனர்.  
 
நவநிர்மாண் சேனா தொண்டர்கள்மற்றும் டி.வி நிருபர்கள் தங்களைத் தாக்கியதாக நித்யானந்தாவின் சீடர்களும் இரண்டு புகார்களை அளித்தனர். இவ்விரு மனுக்கள் தொடர்பாகவும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.



சென்னை வந்த ஊழல் ராசாவை மாலை அணிவித்து வரவேற்ற கலைஞர்

Posted: 08 Jun 2012 07:51 AM PDT


ஸ்பெக்ட்ரம் வழக்கில் கடந்த 15 மாதத்திற்கும் மேலாக திகார் சிறையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவுக்கு சி.பி.ஐ., கோர்ட் ஜாமின் வழங்கியது. இருப்பினும் தமிழகத்திற்கு செல்ல அனுமதி கிடைக்க வில்லை.


இந்நி‌லையில் வரும் 30 ம் தேதி வரை தமிழகத்திற்கு சென்று வர சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட் அனுமதி வழங்கியது.  இதையடுத்து இன்று அவர் தமிழகத்திற்கு வந்துள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் அவருக்கு தி.மு.க., தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


இதையடுத்து திமுக தலைவர் கலைஞரை,  அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார் ஆ.ராசா.  அறிவால யத்தில் தம்மை சந்தித்த ராசாவுக்கு மாலை அணிவித்து கலைஞர் வாழ்த்து தெரிவித்தார். 



செக்ஸ் வெறியில் காதல் ஜோடியை கொன்றேன்:மகளை செக்ஸ்க்கு அழைத்த முருகன் பரபரப்பு வாக்குமூலம்

Posted: 08 Jun 2012 06:53 AM PDT


விழுப்புரம் மாவட்டம் குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது மகள் பார்கவி. கடந்த சில தினங்களுக்கு முன்பு டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பார்கவி தனது தந்தையின் மோசமான செயல்பாடுகள் குறித்தும், 3 பேரை கொலை செய்துள்ளது பற்றியும் பரபரப்பான தகவல்களை வெளியிட்டார்.
 
'வேட்டையாடு விளையாடு' சினிமா பாணியில் 3 பேரை கொலை செய்து புதைத்த கொலையாளி முருகன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
 
நான் சோபா செய்து விற்கும் தொழில் செய்து வருகிறேன். என்னிடம் நல்லான்பிள்ளை பெற்றால் கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவர் சோபாக்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். தொழில் முறையில் நாங்கள் 2 பேரும் நல்ல நண்பர்கள்.
 
நான் அவரது வீட்டிற்கு அடிக்கடி செல்வேன். அப்போது அவரது மகள் லாவண்யாவுடன் பழக்கம் ஏற்பட்டது. லாவண்யாவை செக்சியாக வர்ணிப்பேன். அவருக்கு அது ரொம்ப பிடிக்கும். எங்களுக்குள் நாளடைவில் கள்ளக்காதல் ஏற்பட்டது.
 
லாவண்யா வீட்டில் தனியாக இருக்கும்போது அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்தேன். ஒருநாள் எங்கள் விவகாரம் சேகருக்கு அரசல் புரசலாக தெரிந்துவிட்டது. இதனால் அவரது வீட்டிற்கு செல்வதை குறைத்துக் கொண்டேன்.
 
இந்த நிலையில் சேகரிடம் சோபா விற்கும் வேலை பார்த்த சிலம்பரசன் என்ற வாலிபர் லாவண்யாவை காதல் வலையில் வீழ்த்தினார். சிலம்பரசன் - லாவண்யா காதல் விவகாரம் வெளியே தெரிய ஆரம்பித்ததும் சேகர் ஆத்திரமடைந்தார்.
 
தன்னிடம் வேலை பார்ப்பவனுக்கு பெண்ணை கொடுப்பதா? என்று கோபப்பட்ட அவர் லாவண்யாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினார். இதற்கிடையே சிலம்பரசனும் - லாவண்யாவும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டனர். அடைக்கலம் தேடி எனது வீட்டில் தஞ்சம் அடைந்தனர்.
 
நீண்ட இடைவெளிக்கு பிறகு லாவண்யாவை பார்த்ததும் அவள் மீது ஆசை அதிகரித்தது. அடைக்கலம் கொடுப்பது போல் நாமும் அனுபவிக்கலாம் என்ற திட்டத்துடன் காதல் ஜோடிக்கு தஞ்சம் கொடுத்தேன். சிலம்பரசன் வெளியே செல்லும் நேரத்தில் லாவண்யாவுடன் உல்லாசம் அனுபவித்தேன். இது எனது மனைவி, மகளுக்கு தெரியவந்தது. காதல் ஜோடி 3 மாதம் என் வீட்டில் இருந்தனர்.
 
இந்த நிலையில் காதல் ஜோடியை தேடி சேகர் வந்தார். என்னிடம் எப்படி அடைக்கலம் கொடுக்கலாம் என்று கேட்டு தகராறு செய்தார். அன்று இரவு அவரை சமாதானப்படுத்தி மது விருந்து வைத்தேன். நான், சேகர், சிலம்பரசன் ஆகியோர் சேர்ந்து குடித்தோம்.
 
ஏற்கனவே திட்டமிட்டபடி சிலம்பரசன் வாங்கிவந்த விஷத்தை மதுவில் கலந்து சேகருக்கு கொடுத்து கொன்றோம். அவரது உடலை வீட்டில் உள்ள கிணற்றில் வீசி புதைத்து விட்டோம்.
 
இருதினங்கள் கழித்து சேகரை தீர்த்துக்கட்டிய விவகாரம் லாவண்யாவுக்கு தெரியவந்தது. என்னுடைய அப்பாவை அநியாயமாக கொன்றுவிட்டீர்களே, போலீசில் சொல்வேன் என்று மிரட்டினாள். அன்று இரவு மீண்டும் மது விருந்து நடந்தது.
 
நானும், சிலம்பரசனும், மது அருந்திவிட்டு லாவண்யாவுடன் இருந்தோம். அவருக்கு மது ஊற்றி கொடுத்தோம். அவர் போதை தலைக்கேறிய நிலையில் இருக்கும்போது ஷோபா கவர் கட்ட பயன்படும் கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கி கொன்றோம். பின்னர் அவர் உடலையும் கிணற்றுக்குள் புதைத்தோம். 2 கொலைகள் பற்றியும் போலீசில் சொல்லிவிடுவேன் என்று கூறி சிலம்பரசன் என்னிடம் பணம் பறிக்க தொடங்கினான்.
 
இதுபற்றி எனது மனைவியிடம் தெரிவித்தேன். சிலம்பரசன் உயிரோடு இருந்தால் நம்மை காட்டிகொடுத்து விடுவான். எனவே அவனை தீர்த்துகட்டுவது என்று முடிவு செய்தோம். அதன்படி நானும் எனது மனைவி ராஜேஸ்வரியும் சேர்ந்து சிலம்பரசனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றோம். சிலம்பரசனின் உடலை மட்டும் குடிநீர் குழாய் அருகில் தனியாக புதைத்தோம்.
 
இது எனது மகள் பார்கவிக்கு தெரிந்துவிட்டது. எனவே நான் அவளை கண்காணிக்க தொடங்கினேன். அப்போது பார்கவி எனது மகள் என்பதையும் மீறி செக்ஸ் ஆசை ஏற்பட்டது. பலமுறை அவளிடம் தவறாக நடக்க முயன்றேன். அவள் தப்பி விட்டார். இதற்கிடையே அவர் சதீஷ் என்ற வாலிபரை காதலிப்பது தெரியவந்தது. இதையடுத்து எப்படியாவது பார்கவியை செக்சுக்கு பணியவைக்க முயன்றேன், முடியவில்லை.
 
அவர் டி.வி. நிகழ்ச்சியில் எல்லா ரகசியத்தையும் புட்டு வைத்து விட்டார். செக்ஸ் வெறியால் நண்பரையும், காதல் ஜோடியையும் அடுத்தடுத்து கொலை செய்யும் நிலைக்கு ஆளானேன். காமம் கண்ணை மறைத்து மகளிடமே சில்மிஷத்தை தொடங்கியதால் அவர் மூலம் போலீசில் சிக்கிக் கொண்டேன்.
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
இதற்கிடையே அவரது மனைவி ராஜேஸ்வரி சற்று முரண்பாடாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
 
எனது கணவர் முருகனும், சேகரும் நண்பர்கள். கடந்த டிசம்பர் 2008ம் ஆண்டு சேகரின் மகள் லாவண்யா, சிலம்பரசன் என்ற வாலிபரை வீட்டை விட்டு ஓடி காதல் திருமணம் செய்து கொண்டார். அவர் வீட்டில் இருந்து ஏராளமான நகை பணத்தை எடுத்து வந்திருந்தார். அடைக்கலம் தேடி எங்கள் வீட்டிற்கு வந்தனர். இங்கு 3 மாதம் தங்கியிருந்தனர்.
 
அப்போது எனது கணவர் லாவண்யா, சிலம்பரசன் ஆகியோருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்தார். அதை சாப்பிட்ட அவர்கள் இருவரும் இறந்துவிட்டனர். அவர்கள் 2 பேரின் உடல்களையும் வீட்டிற்கு முன்பு உள்ள கிணற்றில் புதைத்தார்.
 
காதல் ஜோடி தங்கியிருந்த தகவல் அறிந்து லாவண்யாவின் தந்தை சேகர் எங்கள் வீட்டிற்கு வந்தார். அவரையும் மதுவில் விஷம் கலந்து கொடுத்து எனது கணவர் கொலை செய்தார். அவரது உடலை வீட்டில் உள்ள குடிநீர் குழாய் அருகில் புதைத்தார். இதுபற்றி வெளியில் சொன்னால் எங்களையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். இதனால் இந்த சம்பவம் குறித்து நாங்கள் வாய் திறக்கவில்லை.
 
 
மேலும் கொலை செய்யப்பட்டவர்களிடமிருந்து நகை மற்றும் பணத்தை எடுத்து உல்லாசமாக செலவழித்தார். சில தினங்கள் கழித்து லாவண்யா, சிலம்பரசன், சேகர் ஆகியோரை காணாமல் அவர்களது குடும்பத்தார் எங்கள் வீட்டிற்கு தேடி வந்தனர். அப்போது அவர்கள் உறவினர்களிடம் லாவண்யாவையும், சிலம்பரசனையும் அழைத்துக்கொண்டு சேகர் சென்றுவிட்டதாக கூறி நாடகம் ஆடினார். அதை அவர்கள் அப்படியே நம்பிவிட்டனர்.
 
இப்போது எனது மகள் பார்கவியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், அவளது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாலும் அவள் இந்த ரகசியத்தை டி.வி. நிகழ்ச்சியில் போட்டு உடைத்துவிட்டார்.
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
விழுப்புரம் தாலுகா போலீசார் கொலையாளிகள் முருகன், ராஜேஸ்வரி ஆகியோரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.





Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™