மக்களின் குரல் |
- இந்துப் பண்பாட்டை அதிகம் பேணுபவர்கள் ஆண்களா பெண்களா பட்டிமன்றம் -நேரலை
- களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் இந்துப் பண்பாட்டை அதிகம் பேணுபவர்கள் ஆண்களா பெண்களா பட்டிமன்றம் -நேரலை
- மட்டு.முறக்கொட்டாஞ்சேனையில் 21 வயதுடய இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்பு
- குழந்தைக்குத் தாயானார் 15 வயது சிறுமி !மட்டு.வாழைச்சேனையில் சம்பவம் -மூத்த சகோதரியின் கணவர் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
- அமெரிக்க தூதுவர் மட்டு. மாவட்டத்திற்கு விஜயம்
- கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் சார்பாக ஆஜராகிய நாமல் ராஜபக்ஷ
- மட்டு. ஜயங்கேணி பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு
| இந்துப் பண்பாட்டை அதிகம் பேணுபவர்கள் ஆண்களா பெண்களா பட்டிமன்றம் -நேரலை Posted: 20 Jun 2012 08:39 AM PDT மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அல்கார உற்சவ நிகழ்வுகளின் 4 ம் நாளாகிய இன்று இந்துப் பண்பாட்டை அதிகம் பேணுபவர்கள் ஆண்களா பெண்களா எனும் தலைப்பில் பட்டிமன்றம் இடம்பெற இருக்கின்றது. இப்பட்டிமன்றத்தை அகில இலங்கை சைவப்புலவர் சங்கச் செயலாளர் சைவப்புலவர் சக்தி சக்தியநாதன் தலைமையில் மாவை சிவநாதன் குழுவினர் இப்போது பேசிக்கொண்டிருக்கின்றனர் Watch live streaming video from pillayar at livestream.com |
| களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் இந்துப் பண்பாட்டை அதிகம் பேணுபவர்கள் ஆண்களா பெண்களா பட்டிமன்றம் -நேரலை Posted: 20 Jun 2012 06:28 AM PDT மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அல்கார உற்சவ நிகழ்வுகளின் 4 ம் நாளாகிய இன்று இந்துப் பண்பாட்டை அதிகம் பேணுபவர்கள் ஆண்களா பெண்களா எனும் தலைப்பில் பட்டிமன்றம் இடம்பெற இருக்கின்றது. இப்பட்டிமன்றத்தை அகில இலங்கை சைவப்புலவர் சங்கச் செயலாளர் சைவப்புலவர் சக்தி சக்தியநாதன் தலைமையில் மாவை சிவநாதன் குழுவினர் நடாத்த இருக்கின்றனர். இப் பட்டிமண்றம் எமது இணையத்தளத்தில் 8.30 மணியளவில் நேரடியாக ஒளிபரப்பாகும் pillayar on livestream.com. Broadcast Live Free |
| மட்டு.முறக்கொட்டாஞ்சேனையில் 21 வயதுடய இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்பு Posted: 20 Jun 2012 06:17 AM PDT மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பிரதேச வீடொன்றில் இருந்து இளம் தாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முறக்கொட்டாஞ்சேனை பாடசாலை வீதியைச் சேர்ந்தமட்டு. 21 வயதுடய ரசீகரன் வினோதினி என்ற இளம் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று (20) புதன்கிழமை காலை கணவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சென்ற பொலிஸார் குறித்த பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர். சடலம் மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த ஏறாவூர் நீதிவான் நீதிபதி சடலத்தினைப் பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்கும் உத்தரவிட்டுள்ளார். இம் மரணத்தில் சந்தேகம் நிலவுவதனால் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். |
| Posted: 20 Jun 2012 06:15 AM PDT மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் வாகனேரி, கலத்தமடு பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்திய நபரொருவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சிறுமி கடந்த முதலாம் திகதி மட்டக்களப்பு வைத்தியசாலையில் குழந்தையொன்றைப் பிரவசித்துள்ளார். திருமணமாகாதா சிறுமி குழந்தையை பிரசவித்தமை குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதன்போது சிறுமி தனது மூத்த சகோதரியுடன் அவரது வீட்டில் வசித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது. மூத்த சகோதரி இரண்டு வருடங்களுக்கு முன்னர் தொழில்வாய்பொன்றின் மூலம் வெளிநாடு சென்றுள்ளார். இந்த நிலையில், மூத்த சகோதரியின் வீட்டில் சிறுமியின் பெற்றோர், சகோதரியின் கணவர் இவர்களோடு குறித்த சிறுமியும் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், மூத்த சகோதரியின் கணவர் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. 2011ஆம் ஆண்டு முதல் குறித்த நபர் சிறுமியை தொடர்ந்தும் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனால் சிறுமி கர்ப்பம் தரித்து குழந்தையை பிரசவித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிறுமியும் அவரது குழந்தையும் மட்டக்களப்பு சிநேக தீபம் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து வாழைச்சேனை பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை நடாத்தி வருகின்றார். |
| அமெரிக்க தூதுவர் மட்டு. மாவட்டத்திற்கு விஜயம் Posted: 20 Jun 2012 06:13 AM PDT பதவி காலம் நிறைவடைந்து நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்ரீசியா ஏ. புட்டேன் இன்று இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்புக்கு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது, மட்டு - திருமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளையை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் மாவட்டத்தின் தற்போதய நிலைமைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார். இதேவேளை, வாகரை பிரதேசத்திற்கும் அமெரிக்க தூதுவர் இன்று காலை நேரடி விஜயமொன்றினை மேற்கொண்டார். இதன்போது, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாகவும் யூ.எஸ்.எயிட். நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வெதுப்பகத்தை அமெரிக்க தூதுவர் திறந்துவைத்தார். வாகரை பிரதேசத்தில் நீண்ட நாளாக காணப்பட்ட வெதுப்பக குறைபாட்டை நிவர்த்தி செய்யவும் பிரதேச பென்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவம் சுமார் 90 இலட்;சம் ருபா செலவில் யூ.எஸ்.எயிட் நிறுவனத்தினால் குறித்த வெதுப்பகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. குறித்த வெதுப்பகமானது பால்சேனை மாதர் சங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெதுப்பக உணவு பொருட்க்களை தயாரிப்பதற்க்கான பெறுமதி வாய்ந்த நவீன இயந்திர சானங்களும் இதன்போது வழங்கப்பட்டன. இதேவேளை, யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ் மட்டக்களப்பு, பாலமீன்மடு வெளிச்ச வீட்டு பகுதியில் நிர்மானிக்கப்பட்ட சிறுவர் பூங்காவினை அமெரிக்க தூதுவர் இன்று மாலை திறந்துவைத்தார். சுமார் ஐந்து மில்லியன் ரூபா செலவில் நவீன முறையில் இந்த சிறுவர் பூங்கா நிர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது |
| கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் சார்பாக ஆஜராகிய நாமல் ராஜபக்ஷ Posted: 20 Jun 2012 06:04 AM PDT கிழக்கு மாகாண சபையின் புதவி காலம் முடிவடைவதற்கு முன்னர் கலைக்கப்படுவதற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் சார்பாக சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் ஆஜராகியிருந்தனர். |
| மட்டு. ஜயங்கேணி பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு Posted: 20 Jun 2012 06:01 AM PDT மட்டக்களப்பு, ஏறாவூ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயங்கேணி பிரதேசத்தில் இன்று பிற்பகல் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். ஏறாவூர், ஜின்னா குறுக்கு வீதியை சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தையான அபூபக்கர் அன்ஸார் (26வயது) என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்துக்கு வருகைதந்த திடீர் மரண விசாரணை அதிகாரியான எம்.எஸ். நஸீர் மற்றும் ஏறாவூர் பொலிசாரும் இதுதொடர்பிலான விசாரணையை மேற்கொண்டனர். சடலம் ஏறாவூர் தளவைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பிரேத பரிசோதனையை வைத்தியசாலையின் அத்தியட்சர் எஸ்.ஏ.சி.பளீல் மேற்கொண்டார். கயிறினால் கழுத்து இறுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தற்கொலை மரணம் என திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நஸீர் தனது தீர்ப்பில் தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். |
| You are subscribed to email updates from மக்களின் குரல் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





