புதிய உலகம்.கொம் |
- உங்களை ப்ளூ பிலிம் எடுத்திருக்கேன் மனைவி, மாமியாரை மிரட்டும் நபர்!
- மதுரையில் 11 வயது மகளை கள்ளக்காதலன் சீரழிக்க அனுமதித்த தாய்
- பல ஆண்களுடன் தொடர்பு – மகளின் தலையை துண்டித்த தந்தை
| உங்களை ப்ளூ பிலிம் எடுத்திருக்கேன் மனைவி, மாமியாரை மிரட்டும் நபர்! Posted: 19 Jun 2012 04:50 AM PDT சிங்கப்பூரில் இருந்தபடி, மனைவியையும், மாமியாரையும் ஆபாசப் படம் எடுத்திருப்பதாக கூறி மிரட்டி வரும் நபரைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மன்னார்குடியைச் சேர்ந்தவர் ராஜப்பா. இவருக்கு வயது 35 ஆகிறது. இவருக்கும், மதுரை தெற்குவாசலைச் சேர்ந்த 25 வயதான இளவரசி என்பவருக்கும் 2007ம் ஆண்டு கல்யாணம் செய்து வைத்தனர். கல்யாணத்தின்போது சீர்வரிசையை சிறப்பாக செய்த இளவரசி குடும்பத்தால் கூடவே 43 பவுன் நகைகளையும் மகளுக்குப் போட்டு அனுப்பினர். கல்யாணமான ஒரே மாதத்தில் கர்ப்பமானார் இளவரசி. இந்த நிலையில் நான் சிங்கப்பூர் போகப் போகிறேன். அங்கு போய் வேலை பார்த்தால் நிறைய சம்பாதிக்கலாம். குழந்தையை நன்றாக வளர்க்கலாம் என்று மனைவியிடம் கூறியுள்ளார் ராஜப்பா. மேலும், போக வரச் செலவுக்காக 2 லட்சம் ரூபாயை உங்க வீட்டில் வாங்கி வா என்றும் இளவரசியை நச்சரித்துள்ளார். ஆனால் எப்படி பெற்றோரிடம் பணம் கேட்பது என்று தயங்கிய இளவரசி, தான் போட்டிருந்த நகைகளில் சிலவற்றை கழற்றி ராஜப்பா கையில் கொடுத்து பணமாகிக அதை வைத்து சிங்கப்பூர் போங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் நகைகளை விற்று வந்த ராஜப்பா, தான் கொண்டு வந்த பணத்தை யாரோ திருடி விட்டதாக மனைவியிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்தார் இளவரசி. அத்தோடு நில்லாத ராஜப்பா மீண்டும் பணம் கேட்டு இளவரசியை நச்சரித்தார். என்ன செய்வது என்று தெரியாமல் மீதமிருந்த நகைகளையும் ராஜப்பாவிடம் கொடுத்தார் இளவரசி. இதை வைத்துக் கொண்டு 2008ம் ஆண்டு சிங்கப்பூருக்குப் போனார் ராஜப்பா. ஆனால் போனவர், மனைவியை மறந்து விட்டு அங்கு தன்னுடன் வேலை பார்த்த ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவரும் சேர்ந்து இளவரசியையும், அவரது குடும்பத்தினரையும் போன் மூலமும், எஸ்.எம்.எஸ். மூலமும் தொடர்ந்து அவதூறாகப் பேசி திட்டி வந்துள்ளனர். இதில் உச்சமாக, உன்னையும், உனது தாயாரையும் ஆபாசமாக படம் எடுத்து வைத்துள்ளேன் என்று கூறி ராஜப்பா, இளவரசியை மிரட்டியதால் பெரும் வேதனை அடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து மதுரை தெற்குவாசல் போலீஸில் புகார் தரப்பட்டது. புகாரைப் பதிவு செய்த போலீஸார் தற்போது ராஜப்பாவை எப்படிக் கைது செய்வது என்பது குறித்து தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளனர். |
| மதுரையில் 11 வயது மகளை கள்ளக்காதலன் சீரழிக்க அனுமதித்த தாய் Posted: 19 Jun 2012 04:49 AM PDT தனது 11 வயது மகளை கற்பழிக்க தன்னுடயை கள்ளக்காதலனுக்கு அனுமதி கொடுத்த தாயை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் சக்கிமங்கலத்தைச் சேர்ந்தவர் குப்புமணி(35). அவருக்கு திருமணமாகி 11 வயதில் மகள் இருக்கிறார். இந்நிலையில் அவருக்கும் வண்டியூரைச் சேர்ந்த கான்டிராக்டர் ரவி(45) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 15ம் தேதி குப்புமணியைப் பார்க்க ரவி சக்கிமங்கலத்திற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த குப்புமணியின் மகளின் மீது அவரது கண்கள் பட்டுள்ளது. குப்புமணியும் தனது மகள் என்று கூடப் பார்க்காமல் அவரை ரவி சீரழிக்க அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து ரவி 11 வயது சிறுமியை சீரழித்துள்ளார். கடந்த 16ம் தேதி வலியால் துடித்த சிறுமியை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் தான் சிறுமி கற்பழிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குப்புமணியை கைது செய்தனர். கன்னியாகுமரிக்கு தப்பியோடிய ரவி நேற்று கைது செய்யப்பட்டார். பெற்ற தாயே தனது மகளின் வாழ்க்கை கெட்டுப் போக காரணமாக இருந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| பல ஆண்களுடன் தொடர்பு – மகளின் தலையை துண்டித்த தந்தை Posted: 19 Jun 2012 04:01 AM PDT ராஜஸ்தானில் கணவரைப் பிரிந்த மகள் பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததை பொறுக்க முடியாத தந்தை வாளை எடுத்து மகளின் தலையைத் துண்டித்துக் கொன்றார். ராஜஸ்தான் மாநிலம் ராஜாசமந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஒகாத். அவரது மகள் மஞ்சு(20). அவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் அவர் கணவருடன் வாழாமல் வந்துவிட்டார். அவர் தனது தந்தையுடன் துங்கர்ஜி கா குடா கிராமத்தில் ஒரு வீட்டில் வசித்து வந்தார். கணவரைப் பிரிந்த மஞ்சுவுக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. இதை தந்தை கண்டித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அவர் ஒரு ஆணுடன் இருக்கையில் சிக்கினார். இனியும் மகள் திருந்தவே மாட்டாள் என்ற முடிவுக்கு வந்த ஒகாத் நேற்று மாலை வீட்டில் இருந்த மஞ்சுவை வாளால் வெட்டிக் கொன்றார். இதில் மஞ்சுவின் தலையும், உடலும் தனித்தனியானது. பின்னர் மஞ்சுவின் தலையை ஒரு கையிலும், ரத்தம்படிந்த வாளை ஒரு கையிலும் எடுத்துக் தொண்டு கெல்வா காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஒகாதை கைது செய்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| You are subscribed to email updates from புதிய உலகம்.கொம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


