புதிய உலகம்.கொம் |
- பாகிஸ்தானில் ஆண்களுடன் நடனமாடிய பெண்களுக்கு மரண தண்டனை
- 7 வருடங்களாக என் மனதில் இருந்த கதை 'விஸ்வரூபம்': கமலஹாசன்
- தைரியமான பெண்களைத்தான் ஆண்கள் விரும்புகிறார்களாம்!
- ஆண்களே மார்பில் அதிக முடி இருக்கா? இதைப்படிங்க!
- காதலியின் வாய்க்குள் விசும் ஊற்றி கொல்ல முயன்ற காதலன்
- உயிருள்ள ஜந்துகளை வாயில் போட்டு சுவைக்கும் பெண்! (அதிர்ச்சி வீடியோ)
| பாகிஸ்தானில் ஆண்களுடன் நடனமாடிய பெண்களுக்கு மரண தண்டனை Posted: 08 Jun 2012 12:59 PM PDT பாகிஸ்தானில் பொது நிகழ்ச்சிகள், திருமணங்களில் ஆண்களுடன் சேர்ந்து நடனமாடவும், பாட்டுப்பாடவும் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறுவோர்களுக்கு மரண தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு திருமண விழாவில் ஆண்களுடன் சேர்ந்து நடனமாடிய பெண்களுக்கு உள்ளூர் பஞ்சாயத்து மரண தண்டனை விதித்தது. இதேபோல இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஆண்களுடன் சேர்ந்து நடனமாடி பாட்டுப் பாடியதாக பெண்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. ஆனால் இதுவரை அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் சமீபத்திய சம்பவத்தை கவனத்தில் எடுத்துக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இதுபோன்ற விவகாரத்தில் ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண்களில் சிலர் இன்னும் உயிரோடு இருக்கின்றனர். நலமுடன் சந்தோஷமாக வாழ்கின்றனர் என்று வேதனை தெரிவித்தது. |
| 7 வருடங்களாக என் மனதில் இருந்த கதை 'விஸ்வரூபம்': கமலஹாசன் Posted: 08 Jun 2012 12:57 PM PDT கமல் இயக்கி, நடிக்கும் படம் விஸ்வரூபம். நாயகியாக பூஜாகுமார் நடிக்கிறார். சென்னை, மும்பையிலும் அமெரிக்கா மற்றும் கனடாவிலும் படிப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த மாதம் (ஜூலை) 13-ந்தேதி படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. இந்த நிலையில் விஸ்வரூபம் படத்தின் டிரெய்லரை கமல் இன்று வெளியிட்டார். சிங்கப்பூரில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா நிகழ்ச்சியிலும் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. விஸ்வரூபம் படம் குறித்து கமல் கூறியதாவது:- விஸ்வரூபம் என் மனதிலும் என் கனவிலும் கடந்த ஏழு வருடங்களாக பதுங்கி இருந்த கதை. என் மனதில் இடம் பிடித்ததுபோல் ரசிகர்கள் மனதிலும் அது தங்கும் என்று நம்புகிறேன். அமெரிக்காவில் தனது மேற்படிப்பை முடிக்க நினைத்த ஒரு நடுத்தர வர்க்கத்து தமிழ்ப் பெண் நிருபமா, அங்குள்ள விஸ்வநாதனை திருமணம் செய்து கொள்கிறாள். 3 வருடம் காதல், ஊடல், கூடலின்றி இல்லறம் நடத்தி பி.எச்.டி. முடித்து வேலைக்கும் செல்கிறாள். தனது நடன பள்ளியை சம்சாரம் இடைஞ்சலின்றி நடத்தி வருகிறார் விஸ்வநாத். ஆசை யாரைவிட்டது. நிருபமா வேறு புதுக்கனவு காணுகிறாள். திருமணத்தை துறக்க விரும்புகிறாள். மன முறிவிற்கு என்ன காரணம் சொல்வது என குழம்புகிறான். விஸ்வநாத்திடம் ஏதாவது களங்கம் உள்ளதா என்பதை துப்பறிய ஒரு ஆளை அமர்த்துகிறாள். கிணறு வெட்ட பூதம் கிளம்புகிறது. இவ்வாறு கதை பயணிப்பதாக கமல் தெரிவித்துள்ளார். |
| தைரியமான பெண்களைத்தான் ஆண்கள் விரும்புகிறார்களாம்! Posted: 08 Jun 2012 12:55 PM PDT 'எந்தப்பெண்ணிலும் இல்லா ஒன்று அது ஏதோ உன்னிடம் இருக்கிறது !' மனதைக் கவர்ந்த பெண்ணைப் பார்த்து ஆண்கள் பாடும் பாடல் இது. பெண்ணின் உருவம் மட்டுமே ஆணை கவர்வதில்லை அதையும் தாண்டி சில விசயங்கள் இருந்தால்தான் ஆணை கவரமுடியும் என்கின்றனர் நிபுணர்கள். பெண்ணிடம் உள்ள எந்தமாதிரியான குணாதிசயங்கள் பிடிக்கும் என்று பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன். தனித்துவமான பெண் எதற்கெடுத்தாலும் கணவனை மட்டுமே சார்ந்திருக்கும் பெண்களை ஆண்கள் விரும்புவதில்லையாம். அதேசமயம் தனியாக எதையும் தைரியமாக சந்திக்கும் மனப்பான்மை கொண்ட தைரியலட்சுமிகளைத்தான் ஆண்கள் விரும்புகின்றனராம். அச்சமில்லாத பெண்கள்தான் இன்றைய உலகிற்கு தேவை என்கின்றனர் நிபுணர்கள். உண்மையும், நேர்மையும் நேர்மையாகவும் அதேசமயம் உண்மையாகவும் நடந்து கொள்ளும் ஆணைத்தான் பெண்ணுக்கு பிடிக்கிறதாம். எந்த ஒரு செயலையும் நேர்மையோடு செய்து முடிக்க வேண்டும். தனக்கும் தன்குடும்பத்திற்கு உண்மையானவளாக இருக்கவேண்டும் என்பது ஆண்களின் எதிர்பார்ப்பு. அதேபோல் எதிர்காலத்தை எண்ணி நிகழ்காலத்தை வீணாக்கிவிடும் பெண்களைக் கண்டாலே ஓடி விடுகின்றனராம் ஆண்கள். எனவே பெண்களே எப்பவுமே நிகழ்காலத்தில் சந்தோசமாக வாழுங்கள். அழகில் கொஞ்சம் கவனம் என்னதான் சுதந்திர உணர்வோடு இருந்தாலும், தனித்துவமாக இருந்தாலும் அழகிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டுமாம். சினிமா நடிகை போலவோ, மாடல் போலவே இருக்க வேண்டும் என்றில்லை. திருத்தமான அழகு, ஆர்பாட்டமில்லாத உடை அலங்காரம் போன்றவைதான் ஆண்களை மிகவும் கவர்கிறதாம். உங்கள் முகத்திற்கு ஏற்ப சிகை அலங்காரம் செய்து கொள்ளுங்கள், சின்னதாய் சில மேக்அப்களை செய்து கொள்ளுங்கள் அப்புறம் பாருங்கள் அழகு ராணி நீங்கள்தான். தன்னம்பிக்கை பெண்கள் எதற்கும் கவலைப்படாமல் எந்த பிரச்சினை வந்தாலும் தைரியமாக சந்திக்கும் மனப்பான்மை கொண்ட தன்னம்பிக்கை பெண்களை ஆண்களுக்கு ரொம்ப பிடிக்கிறதாம். பொய்யாக நடிக்கும் பெண்களை ஆண்கள் எளிதில் கண்டறிந்து விடுகின்றனராம். எனவே உங்கள் புன்னகை, உங்கள் கண்கள், உங்கள் பேச்சு அனைத்திலும் தன்னம்பிக்கை மிளிரட்டும். தெளிவான பேச்சு பிற ஆண்களை நேருக்கு நேராக பார்த்து பேசாமல் கதவிடுக்கில் ஒளிந்து கொண்டு பேசியதெல்லாம் அந்தக் காலம். இன்றைக்கு யாராக இருந்தாலும் தைரியமாக கண்களை நேராக பார்த்தும் பெண்களைத்தான் ஆண்கள் விரும்புகின்றனராம். அதுபோன்ற பெண்கள்தான் குடும்பத்திற்கு ஏற்றவர்கள் என்பது ஆண்களின் நம்பிக்கை. என்ன பெண்களே இந்த தகுதி எல்லாம் உங்களுக்கு இருக்கா செக் பண்ணிக்கங்க. |
| ஆண்களே மார்பில் அதிக முடி இருக்கா? இதைப்படிங்க! Posted: 08 Jun 2012 12:53 PM PDT ஆண்களின் மார்பு பகுதியில் அதிகம் முடி இருந்தால் அவர்களுக்கு பாலுணர்வு எண்ணம் அதிகம் இருக்கும் என்று சாமுத்திரிகா லட்சணம் தெரிவித்துள்ளது. பெண்களின் உடல் அமைப்பை பார்த்து சாமுத்திரிகா லட்சணம் தெரிந்து கொண்டவர்கள் ஆண்களைப்பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன். செல்வம் பெருகும் ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் அதிக செல்வம் இருக்குமாம். தலையின் நரம்புகள் புடைத்து இருப்பின் தரித்திரமாம். தலையின் பின் பகுதி புடைத்திருப்பின் அறிவாளியாக இருப்பாராம். அதேபோல் அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திருப்பின் ஞானமும் செல்வமும் உண்டு. நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதிர்ஷடம் உண்டாகும். நெற்றியில் ரேகை இல்லா திருப்பின் ஆயுள் குறையும். நெற்றியில் வியர்வை வருமாயின் அதிர்ஷடமாம். உலகை ஆளும் ஆண் ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால் உலகை ஆள்வான். கோழி முட்டைக்கண்ணும், மிகச்சிறிய கண்ணும் இருப்பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக்கும். அதேபோல் உயரமாய், நீண்டு, கூரிய முனையோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடையவர்கள் பணம், பதவி, புகழ் உடையவர்களாக இருப்பர். நுனிப் பகுதி தடித்தோ, நடுப்பகுதி உயர்ந்தோ, பெரிய அளவில் மூக்கு அமைந்திருப்பின் தரித்திரமாம். அழகான,சிறிய வாய் உடையவர்கள் புத்தி, சக்தி, கருணை உடையவர்களாக, அறிஞர்களாக, பெரும்பதவியில் இருப்பவர்களாக இருப்பர். அகன்றும், வெளியே பிதுங்கியும் உள்ள வாய் அதிகமாகப் பேசும். பிறர் செயலில் குற்றம் காணும். உதடு சிவந்திருப்பின் அந்தஸ்து, அதிகாரம் அதிர்ஷடம் நிலைத்திருக்கும். கருத்து, உலர்ந்து, தடித்து இருப்பின் கபடம் நிறைந்திருக்குமாம். தோள்கள் இரண்டும் உயர்ந்திருப்பின் செல்வம் உண்டு. தாழ்ந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. சமமாக இருப்பின் அறிவு உண்டு. தோள்கள் இரண்டிலும் மயிர் அதிகம் இருந்தால் நினைத்த காரியம் முடியாது. நாக்கில் மச்சம் நீளமான நாக்கு இருப்பின் சிறந்த பேச்சாளர்களாக இருப்பர். நாக்கு நுனியில் அழியாத கருப்புப் புள்ளிகள் இருப்பின் சொன்ன சொல் பலிக்கும். நாக்கு சிவந்திருப்பின் அதிர்ஷடமாம். கருத்தும், வெளுத்தும், உலர்ந்தும் இருப்பின் தரித்திரமாம். காது மேல் செவி அகலமானால் முன் கோபம் இருக்கும். காது குறுகியிருப்பின் அதிர்ஷடமாம். மேல் செவி உள்ளே மடங்கியிருப்பின் கபட தாரி. அரசாளும் ஆண் நீளமான, சீரான பருமன் உடைய கைளை உடையவர்கள் சிறப்பாக வாழ்வர். முழங்கால் வரை கை நீண்டிருப்பின் அரசன் ஆவான். தடித்த, குட்டையான கைகளை உடையவர்களை நம்புதல் கூடாது. கைப்பிணைப்புகளில் மூட்டுகளில் ஓசை எழுப்பினால் தரித்திரமாம். கைகள் ஒன்றுக் கொன்று வித்தியாசமாக இருப்பின் பாவிகளாக இருப்பர். கைகளில் நீண்ட ரோமங்கள் இருப்பின் செல்வந்தன் ஆவான். மணிக்கட்டில் சதையிலிருந்து கெட்டியாக இருப்பின் அரசு பதவி கிட்டும். மணிக்கட்டு உயரமாக இருப்பின் நீண்ட ஆயுள் உண்டு. மணிக்கட்டுகள் ஸ்திரமின்றி இருந்தாலும், மடக்கும் போது சப்தம் வந்தாலும் தரித்திரமாம். பாலுணர்வு அதிகம் உண்டு கைவிரல்கள் நீளமாக இருந்தால் கலை ஆர்வம் அதிகம் இருக்கும். காம இச்சை அதிகம் உண்டு. விரல்களுக்கு மத்தியில் இடைவெளி இருந்தால் தரித்திரமாம். உள்ளங்கை அதிகப் பள்ளமாக இருந்தால் அற்ப ஆயுளாம். உள்ளங்கை சிவந்திருந்தால் தனவான் ஆவான். உள்ளங் கையின் நான்கு மூலைகளும் சமமான உயரத்தோடு தட்டையாக இருப்பின் அரசனாவான். அதேபோல் ஆணின் மார்பு விசாலமாகவும், சதைப் பிடிப்போடும் எடுப்பாகவும் இருப்பின் அவன் புகழ் பெற்று விளங்குவான். கோணலாகவும், ஒன்றோடொன்று நெருங்கியும் இருப்பின் அற்பாயுளாம். ஆணின் மார்பகங்களில் உரோமம் இல்லாதிருப்பது ஆகாது. அதிகமான ரோமம் இருப்பின் பாலுணர்வு அதிகம் இருக்குமாம். புகழ் கிடைக்கும் கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க விருதுகள் பெறுவான். கால்கள் குட்டையாக இருப்பின் தரித்திரமாம். முழங்காலுக்கு மேலே உயரமாகவும், முழங்காலுக்குக் கீழே குட்டையாகவும் இருந்தால் நன்மைகள் பெருகும். கால் விரல்கள் ஒன்றோடொன்று நெருங்கி இருப்பின் புகழ் பெறுவான். பாதங்கள் சனதப் பிடிப்பின்றி அழகாக, அளவாக இருக்க வேண்டும். பாதங்களில் மேடு பள்ளம் இருந்தாலும், நகங்கள் கோணல்மாணலாக இருந்தாலும், விரல்கள் தனித்தனியே விலகியிருந்தாலும் வறுமை வாட்டும்.. |
| காதலியின் வாய்க்குள் விசும் ஊற்றி கொல்ல முயன்ற காதலன் Posted: 08 Jun 2012 12:03 PM PDT வேறு பெண்ணை திருமணம் செய்ததை தட்டிக் கேட்ட காதலியின் வாயில் விஷம் ஊற்றி கொல்ல முயன்ற காதலன், அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர். ஊத்துக்கோட்டை அருகே தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (எ) தமிழ்ச்செல்வன் (40). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆந்திர மாநில ஒருங்கிணைப்பாளர். இவரது அக்கா வீடு சென்னை எருக்கஞ்சேரியில் உள்ளது. ரமேஷ் அடிக்கடி அக்கா வீட்டுக்கு சென்று வருவார். அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வந்த மாரியம்மாள் (26) என்ற பட்டதாரி பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூனிப்பாளையத்தை சேர்ந்த நவநீதம் (28) என்ற பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் ரமேஷ் திருமணம் செய்துகொண்டார். இந்த விஷயம் மாரியம்மாளுக்கு தெரியாது. மனைவிக்கு தெரியாமல் மாரியம்மாளுடனான காதலையும் ரமேஷ் தொடர்ந்தார். இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர். இந்நிலையில், காதலனுக்கு திருமணமான விஷயம் மாரியம்மாளுக்கு தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர் கடந்த 5-ம் தேதி தண்டலத்துக்கு சென்று, ரமேஷிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ், அவரது தந்தை நாகன், தாய் மணியம்மாள், அக்கா அம்மு ஆகியோர் மாரியம்மாளை அடித்து உதைத்துள்ளனர். வாயில் விஷத்தை ஊற்றி கொல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவரை காரில் குண்டுகட்டாக தூக்கிச் சென்று எருக்கஞ்சேரியில் உள்ள வீட்டின் அருகே தள்ளிவிட்டு சென்றதாக தெரிகிறது. மயங்கிய நிலையில் ரோட்டில் கிடந்த மாரியம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பெரியபாளையம் போலீசில் மாரியம்மாள் புகார் கொடுத்தார். அதன்பேரில் பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் மோகன் (பொறுப்பு) வழக்கு பதிவு செய்து ரமேஷ், அவரது தந்தை நாகன் ஆகியோரை கைது செய்தார். இருவரையும் ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். தலைமறைவாக உள்ள ரமேஷின் அம்மா, அக்கா இருவரையும் போலீசார் தேடிவருகின்றனர். |
| உயிருள்ள ஜந்துகளை வாயில் போட்டு சுவைக்கும் பெண்! (அதிர்ச்சி வீடியோ) Posted: 08 Jun 2012 12:00 PM PDT சாப்பாட்டு பிரியர்களை பார்த்திருப்பீர்கள். ஏன் விதம் விதமாக சாப்பிட வேண்டும் என்று நாம் கூட நினைப்போம் இது யதார்த்தம். இங்கு ஒரு பெண்மணியின் ஆசையோ ரொம்பவே விபரீதமானதாக உள்ளது. தாய்லாந்தின் காட்டில் உள்ள பறக்கும் மற்றும் ஊர்ந்து திரியும் ஜந்துகளை உயிருடன் அப்படியே உண்ணுகிறார் பாருங்கள். நாம் பப்படம் ரசித்து சாப்பிடுவது போன்று இந்த பெண் இவைகளை உண்ணுகிறார். வினோதங்கள் தொடரும்... |
| You are subscribed to email updates from புதிய உலகம்.கொம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





