Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மக்களின் குரல்

மக்களின் குரல்


சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு 90 ஆயிரம் ரூபா அபராதம்

Posted: 09 Jun 2012 03:05 AM PDT


மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்சை காட்டில் சட்விரோதமான முறையில் மரங்களை வெட்டி கடத்திச் சென்ற அறுவருக்கு 90 ஆயிரம் ரூபா அபராதம் மாவட்ட நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் வித்திதுள்ளார். 


நேற்று இத்தண்டனை விதிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட வன பாதுகாப்பு திணைக்கள உதவி பணிப்பாளர் எம்.ஏ.நபீஸ் தெரிவித்தார். 

இவர்கள் உன்னிச்சைக் காட்டிலிருந்து மரங்களை வெட்டி கடத்திவருகையில் வவுணதீவில் வைத்து மாவட்ட வன அதிகாரிகளினால் கைது செய்யப்படனர். 

கைது செய்யப்பட்ட அறுவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். 

நீதிமன்ற உத்தரவின்பேரில் மரங்கள் அழிக்கப்படதாகவும் அவர் தெரிவித்தார்.

களுதாவளையில் தொடரும் தற்கொலைகள் இன்று இருவர் தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம்

Posted: 09 Jun 2012 02:33 AM PDT




மட்டக்களப்பு களுதாவளையில் அண்மைக் காலமாக தற்கொலை செய்து மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இன்று இருவர் தற்கொலை செய்துள்ளதாக அறிய முடிகின்றது. ஒருவர் களுதாவளை வன்னியார் வீதியைச் சேர்ந்தவர் குடும்பஸ்தர். இவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

மற்றவர் களுதாவளை முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த திருமணமான இளம் பெண். இவரது மரணம் தற்கொலையா? கொலையா என்பதில் பல சந்தேகங்கள் நிலவுகின்றன. இப் பெண் ஒருவரை காதலித்து வந்தவர். அவர்களின் காதல் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்ததும் பெற்றோர். இவர்களின் காதலில் உடன்பாடு இல்லாததால். இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். இப்போது சிறு வயதில் ஆண் குழந்தை ஒன்றும் இருக்கின்றது. இவர்கள் அக்கரைப்பற்று பகுதியில் வசித்து வந்திருக்கின்றனர். 

கணவன் இப் பெண்ணை அடித்து அடிக்கடி சித்திரவதை செய்து வந்திருக்கின்றார். இன்று இப் பெண் நஞ்சருந்தி தற்கொலை செய்ததாக சொல்லப்பட்டாலும். கொலையாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. மருத்துவ அறிக்கை கிடைத்த பின்னரே உறுதிப்படுத்த முடியும்.

களுதாவளையில் மற்றுமொரு தற்கொலை மரணம்

Posted: 08 Jun 2012 10:39 PM PDT

மட்டக்களப்பு களுதாவளையில் அண்மைக் காலமாக தற்கொலை மரணங்கள் அதிகரித்து வருகின்றன. களுதாவளையில் இன்றும் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக அறிய முடிகி்றது. இவர் காதல் திருமணம் செய்து  வாழ்ந்து வந்தவர். தனது பெற்றோருக்கு இவரது காதலில் உடன்பாடு இல்லாததனால் பெற்றோருக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து. கணவருடன் வாழ்ந்து வந்தவர். இன்று தற்கொலை செய்துள்ளதாக அறிய முடிகின்றது. 

மட்/ புனித சிசிலியா பெண்கள் பாடசாலையின் பரிசளிப்பு விழா

Posted: 08 Jun 2012 01:15 PM PDT



புனித சிசிலியா பெண்கள் பாடசாலையின் பரிசளிப்பு விழா இன்று (08.06.2012) வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் தலைமையில் இடம் பெற்றது இவ் விழாவின் பிரதம விருந்தினராக மட்டு. திருமலை ஆயர் கலாநிதி கிங்ஸிலி சுவாம்பிள்ளை கலந்து கொண்டார் அத்துடன் விருந்தினர்களாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் வலயக்கல்விப் பனிப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்





தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி போட்ட பிச்சையை வைத்துக்கொண்டு பிதற்றும் யோகேஸ்வரன் மா.ச.உ.பூ.பிரசாந்தன்

Posted: 08 Jun 2012 12:39 PM PDT



2008ம் வருடம் மாகாண சபைத் தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடாததன் காரணமாகவே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மாகாண சபையில் 03 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது எனக் குறிப்பிடும் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தூரநோக்குடன் தனித்து போட்டியிட்டதன் காரணமாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மூவர் தெரிவு செய்யப்பட்டனர் என்பதை மறந்து விடக்கூடாது. மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு சார்பாக பிரச்சாரம் செய்த யோகேஸ்வரன் தான் கேட்ட இணைப்பாளர் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து கொண்டார் என்பதை மறந்திருக்க மாட்டார் என நினைக்கின்றேன். மட்டக்களப்பு மக்களின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றுள்ளேன் எனக் குறிப்பிடும் யோகேஸ்வரன் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 20 665 மாத்திரமே என்பதை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் தனித்து போட்டியிட்டு முதலமைச்சராக வரலாம் எனக் குறிப்பிடும் இவர் தனக்கு மக்கள் செல்வாக்கு இருக்கின்றதென்றால் எங்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுக் காட்டட்டும். தமிழரசுக் கட்சி தலைமையில் ஊறிய மக்கள் கட்சிக்கு அளித்த வாக்குகள் மூலமே இவர் வெற்றி பெற்றார். ஆனால் இன்றுவரை இந்து மதத்தையும், இந்து இளைஞர் மன்றத்தினையும் வைத்து அரசியல் செய்யும் இவர் தைரியமிருந்தால் இந்து இளைஞர் பேரவையின் பதவியை இராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்து பார்க்கட்டும்.

இந்து இளைஞர் பேரவை என்பது அரச சார்பற்ற நிறுவனம். ஆனால் தனது வங்குரோத்து அரசியலை காப்பாற்றுவதற்காக இந்து இளைஞர் பேரவை என்ற இந்து நாமத்தை வைத்துக்கொண்டு வெளிநாடுகளிலும், ஏனைய இடங்களிலும் நிதி பெற்று அரசியல் செய்யும் இவர் தைரியமிருந்தால் தனது பதவியைத் துறந்து காட்டட்டும். அதற்கு மாறாக இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற அனைத்து உதவிகளையும் தான் பெற்றுவிட்டு மக்களுக்கு எதுவும் செய்யாது, போலித்தனமாக அரசியல் செய்வதை விடுத்து மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வகையில் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என இவருக்கு அறிவுரை கூறும் நிலையில் நாம் உள்ளோம்.

அத்தோடு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் சேவை அதிகாரியாக இருந்த யோகேஸ்வரனுக்கு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்திற்கும், தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கும் வித்தியாசம் தெரியாதிருப்பது வியப்பிற்குரிய விடயமும், வேதனைக்குரிய விடயமுமாகும் என மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

அண்மையில், யோகேஸ்வரனால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு, விடுக்கப்பட்ட மறுப்பறிக்கையிலேயே அவரால் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட இளைஞர்களுக்கான இளைஞர் காங்கிரஸின் தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு

Posted: 08 Jun 2012 12:23 PM PDT


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள திருகோணமலை மாவட்ட இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மூதூர் தாருல் ஜன்னாஹ் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமாகி முழு நாள் நிகழ்வாக இடம்பெறவுள்ள இந்த செயலமர்வில் இளைஞர்கள் மத்தியில் தலைமைத்துவ ஆளுமைகளையும் சமூக பற்று மற்றும் இலட்சியங்களையும் வளர்க்கும் நோக்கில் அரசியல் தலைவர்களினாலும் புத்திஜீவிகளினாலும் முக்கிய பல தலைப்புகளில் சிறப்புரைகள் மற்றும் விரிவுரைகள் நிகழ்த்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் "முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்களும் இளைஞர்களின் பங்களிப்பும்" என்ற தொனிப்பொருளிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹசன் அலி "முஸ்லிம் காங்கிரசின் தோற்றமும் பயணமும்" என்ற தலைப்பிலும் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் ஏ.எல்.ஏ.மஜீத் "முஸ்லிம் காங்கிரஸின் உருவாக்கமும் அதன் பின்னணியும்"  என்ற தொனிப் பொருளிலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் "முஸ்லிம் சமூகப் புனரமைப்பில் இளைஞர்களின் பங்களிப்பும்" என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றவுள்ளனர்.   

இவர்களுடன் தென் கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபக உபவேந்தரும் அரசியல்துறை பேராசிரியருமான  எம்.எல்.ஏ.காதர் "முஸ்லிம் இளைஞர்களின் சமூகப் பொறுப்பு" எனும் தொனிப்பொருளிலும் தென் கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய துறை தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ஜெஸீல் "இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் இளைஞர்களும் அரசியல் தலைமைகளும்" என்ற தொனிப் பொருளிலும் விரிவுரையாற்றவுள்ளனர். 

அம்பாறையில் பல பகுதிகளிலும் மின்வெட்டு

Posted: 08 Jun 2012 12:22 PM PDT


சாய்ந்தமருது, கல்முனை, கல்முனை தமிழ்பிரிவு, நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களில் சனிக்கிழமை காலை 8.00மணி முதல் மாலை 5.00மணி வரை மின்வெட்டு அமுலாக்கப்பட உள்ளது.

அம்பாறை பிரதான மின் விநியோக இணைப்புக்களில் திருத்தப்பணி மேற்கொள்ள வேண்டி உள்ளதனால் நாளை இம்மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக கல்முனை பிராந்திய அலுவலக மின்பொறியியலாளர் தெரிவித்தார்.

கல்லடிப்பாலம் திருத்த வேலைகளுக்காக மூடப்படுகின்றது

Posted: 08 Jun 2012 12:41 PM PDT

மட்டக்களப்பு, கல்லடிப்பாலம் திருத்த வேலைகளுக்காக எதிர்வரும் 16ஆம் திகதி (சனிக்கிழமை) இரவு 10 மணியிலிருந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிவரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் பிணையில் விடுதலை

Posted: 08 Jun 2012 12:11 PM PDT


கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் ஆரியவதி கலப்பதி 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 2 லட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணையிலும் செல்வதற்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

நீதிமன்ற அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆரியவதி கலப்பதி கடந்த வாரம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இன்று அவர் பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம். இரு வாரங்களுக்கு ஒரு தடவை திருகோணமலை துறைமுக பொலிஸில் கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டது. 

பிரதித் தவிசாளரினால் அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் அதிகாரிகளுக்கு தீங்கிழைக்கப்பட்டால் இப்பிணை அனுமதி இரத்துச் செய்யப்படும் எனவும் நீதவான் கூறினார். 

மட்டு வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள்)

Posted: 08 Jun 2012 12:10 PM PDT


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் மற்றும் நிறைவுகான் வைத்திய உத்தியோகத்தர்கள் மற்றும் துணை மருத்தவ உத்தியோகத்தர்கள் ஆகியோர் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன் வைத்து இன்று வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இவர்கள் இன்று நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் கூடிய இவர்கள் 5,000 ரூபா கஸ்ட படி வழங்கப்பட வேண்டும், தொலைபேசி பாவனை கொடுப்பனவு 4,000 ரூபா வழங்கப்பட வேண்டம், மேலதிக சேவை நேர கொடுப்பனவு வழங்குவதை அடிப்படை சம்பளத்தை 90 சதவீதத்தால் பிரித்து வழங்க வேண்டும், தாதிய உத்தியோகஸ்தர் ஆட்சேர்ப்பு செய்வதற்கு மாகாண சபைகளுக்கு வழங்கும் அதிகாரத்தை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 





வடக்கில் முஸ்லிம்களை மீள்குடியேற்ற வேண்டும்! பிரேரணை நிறைவேற்றம்

Posted: 08 Jun 2012 12:06 PM PDT


வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்ற வேண்டுமென்ற பிரேரணையொன்று கிழக்கு மாகாண சபையில் இன்று வியாழக்கிழமை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற போது, மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைரினால் இப்பிரரேணை முன்வைக்கப்பட்டுள்ளது. 

வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்ற அரசாங்கம், அரச அதிகாரிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட அரசியல் கட்சிகள், மத தலைவர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் உட்பட அனைவரும் நடடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மாகாண அமைச்சர் சுபைர் தெரிவித்தார். 

கிழக்கு மாகாண சபையில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்ட இந்த பிரரேணை, அரசாங்கத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™