மக்களின் குரல் |
- ஸ்ரீலங்கா ரெலிகொம் (SLT) தொலைபேசி இணைப்புக்களுக்கு விண்ணப்பித்து ஒரு வருடமாகியும் இணைப்புக்கள் வழங்கப்படவில்லை என மக்கள் விசனம்
- காட்டு யானைகளின் அட்காசத்தினால் உகந்த மலை ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் சிரமத்தில்
- ஏறாவூரில் இளம் தாயின் சடலம் மீட்பு
- போராட்டம் தொடரும்! கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் உறுதி
- சர்வதேச தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள்
- வடக்கு, கிழக்கு வைத்தியர்களின் பணி பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது
- புனரமைக்கப்பட்ட புதிய பாதை திறப்பு விழாவும்
- கொக்கட்டிச்சோலையில் இன்று மின்சாரம் தாக்கியதில் 9 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது
- அரசியல் நோக்கத்திற்காக பட்டதாரிகளை பகடைக்காய்களாக அரியநேந்திரன் பயன்படுத்துறார் - பட்டதாரிகள் ஒன்றிய செயலாளர்
- கிழக்கு மாகாணத்திலிருந்து அழைத்து வரப்பட்ட பல பெண்கள் விபசார அடிமைகளாகக் கொழும்பில் விற்பனை!
| Posted: 12 Jun 2012 01:52 PM PDT ஸ்ரீலங்கா ரெலிகொம் (SLT) தொலைபேசி இணைப்புக்களைப் பெறுவதற்காக களுவாஞ்சிகுடிப் பிரதேசத்தில் பலர் விண்ணப்பித்து ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையிலும் இன்னும் இணைப்புக்கள் வழங்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். இதில் பலர் தொலைபேசி இணைப்புக்களுடன் இணைய இணைப்பினையும் பெறுவதற்கு விண்ணப்பித்திருக்கின்றனர். விண்ணப்பித்த உடன் இணைப்புக்கள் வழங்கப்படும் என ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்டாலும் ஒரு வருடமாகியும் இணைப்புக்கள் வழங்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். |
| காட்டு யானைகளின் அட்காசத்தினால் உகந்த மலை ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் சிரமத்தில் Posted: 12 Jun 2012 12:02 PM PDT பொத்துவில் உகந்த மலை ஆலயத்தில் அண்மை காலமாக காட்டு யானைகளின் அட்காசத்தினால் ஆலய பகுதியிலுள்ள கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன் கோவிலுக்கு பக்தர்கள் செல்லமுடியாமல் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இலங்கையில் உள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்த பக்த அடியார்கள் சென்று தங்கி வழிபட்டு வரும் இந்த ஆலயமாகும் இருந்த போதும் அண்மைக் காலமாக காட்டு யானைகள் ஆலயத்தின் பகுதிக்குள் ஊடுருவி பக்தகர்களின் உணவு மற்றும் உடமைகளை சேதமாக்கி வருகின்றதுடன் ஆலயத்தின் பகுதியில் உள்ள தங்குமிடம் போன்ற கட்டிடங்களை தாக்கி சேதமாக்கியுள்ளது. இதனால் பக்தர்கள் தங்கி நின்று வழிபட முடியாமல் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றதால் பக்த அடியார்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து ஏதிர்வரும் யூலை மாதம் கதிர்காமத்துக்கு பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள் கடைசியாக இவ்ஆலயத்தில் தங்கிநின்று வழிபட்டு காடுகளின் ஊடாக கதிர்காமம் செல்வார்கள். இந்நிலையில் யானைகளின் அட்டகாசத்தினால் யாத்திரைகள் ஆலயத்தில் தங்கி நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவே இவ் ஆலய பிரதேசத்தில் யானைகளை ஊடுருவலை தடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| ஏறாவூரில் இளம் தாயின் சடலம் மீட்பு Posted: 12 Jun 2012 12:01 PM PDT மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் தாய் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். சித்தாண்டி, பழைய சந்தை வீதியை சேர்ந்த கணேசமூர்த்தி மலர்மதி (19 வயது) என்ற இளந்தாயே இன்று செவ்வாய்க்கிழமை 4 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். பெண்ணின் வீட்டு வளவில் இருந்த முருங்கை மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே இவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் குறித்த பெண்ணுக்கு ஒரு வயதில் கைக்குழந்தையொன்று உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை கைதுசெய்துள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை தேடிவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். |
| போராட்டம் தொடரும்! கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் உறுதி Posted: 12 Jun 2012 11:57 AM PDT கிழக்குப் பல்கலைக்கழக பேரவையில் புதிதாக நியமிக்கப்பட்டவரை மாற்றுவதுடன், மீண்டும் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ஒரவர் நியமிக்கப்படும் வரையில் ஒருவார காலமாக நடைபெற்றுவரும் தமது விரிவுரைப் பகிஸ்கரிப்பு போராட்டம் தொடரும் என கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அருட்தந்தை சிறிதரன் சில்வஸ்ரரின் மரணமானதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டவரது நியமனம் உபவேந்தரின் பரிந்துரை எதுவும் இன்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை இரத்துச் செய்து மீண்டும் ஒர சமூக அக்கறையும் செயற்பாட்டுத்திறனும் மிக்க பாதிரியார் சமூகத்தில் இருந்து ஒருவரை நியமிக்க வேண்டும். எம்முடைய போராட்டத்தில் மட்டக்களப்பு நகரிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடம், கல்லடியிலுள்ள விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவன மாணவர்களும் இணைந்துள்ளதுடன், அம்பாறை மாவட்ட மாணவர் ஒன்றியமும் இணைந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக மாணவர்களின் ஒன்றுகூடலில், கலந்துரையாடப்பட்ட பல்வேறு விடயங்களுக்கமைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டு விரிவுரைப் பகிஷ்கரிப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது என மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கிருஷ்ணகாந்த தெரிவித்தார். இந்த விரிவுரைப் பகிஸ்கரிப்பு காரணமாக, வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்கள், கல்லடியிலுள்ள விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம், சௌக்கிய பராமரிப்பு பீடம் ஆகியவற்றின் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த நிலையில், போராட்டம் காரணமாக கிழக்குப் பல்கலைக்கழக பேரவையின் இம் மாதத்துக்கான அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கிழக்கு மாகாணத்தின் முக்கியத்துவம் மிக்க ஒரு கல்வி நிறுவனத்தில் நடைபெற்றுவருகின்ற சிக்கல் தொடர்பில் தமிழ் சமூகம் அக்கறை இன்றி இருப்பது குறித்து கவலை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 30 வருட பாரம்பரியம் கொண்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்போது நடைபெற்று வரும் இவ்வாறான பிரச்சினைகள் எதிர்காலத்திலும் சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்றும் சமூக அக்கறையாளர்கள் தெரிவிக்கின்றனர். |
| சர்வதேச தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் Posted: 12 Jun 2012 11:53 AM PDT சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்றன. ´மனித உரிமை மற்றும் சமூக நீதி, சிறுவர்களை வேலைக்கமர்த்துவதை நிறுத்துவோம்´ என்ற கருப்பொருளில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனன. இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையும் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டது. இன்று காலை பாடசாலை மாணவர்களின் பங்களிப்புடன் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் இருந்து ஆரம்பமானது. சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளை தாங்கிய வண்ணம் இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாணவர்கள் கலந்துகொண்டனர். அத்துடன் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதால் ஏற்படும் பாதிப்புக்கள் வேலைக்கு அமர்த்துவோருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தடுக்கும் வழிமுறைகள் கொண்ட துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. இந்த ஊர்வலத்தில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஊழியர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள் கலந்துகொண்டனர். |
| வடக்கு, கிழக்கு வைத்தியர்களின் பணி பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது Posted: 12 Jun 2012 11:50 AM PDT வடக்கு மற்றும் கிழக்கு வைத்தியர்களினால் முன்னெடுக்கவிருந்த பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கை காலவரையறையின்றி கைவிடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு வைத்தியசாலைகளில் காணப்படும் வெற்றிடங்கள் தொடர்பில் அரசு இதுவரை எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட அரச வைத்தியர்கள் திட்டமிட்டிருந்தனர். வடக்கு, கிழக்கு வைத்தியசாலைகளில் நிலவும் வெற்றிட பிரச்சினை தொடர்பில் சுகாதார அமைச்சை சேர்ந்த அதிகாரிகளுடன் நேற்றைய தினம் கலந்திரையாடல் ஒன்று இடம்பெற்றதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்க செயலாளர் தெரிவித்தார். இதற்கு பின்னதாக வடக்கு கிழக்கு வைத்தியர்கள் முன்னெடுக்கவிருந்த பணி பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டதாக அவர் தெரிவித்தார். எனினும் நாளைய தினம் சுகாதார அமைச்சுடன் இடம்பெறவிருக்கும் கலந்துரையாடலின் போது சாதகமாக தீர்வு கிட்டாவிடில் எதிர்வரும் 20ஆம் திகதி தொடக்கம் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. |
| புனரமைக்கப்பட்ட புதிய பாதை திறப்பு விழாவும் Posted: 12 Jun 2012 11:40 AM PDT போரதீவு பற்று பிரதேசத்திற்கான சுமார் 1600m நீளமான புதிய புனரமைக்கப்ட்ட பாதை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால திறந்து வைக்கப்பட்டது இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளருமான பூ.பிரசாந்தன் தமிழ் மக்கள் விடுதலைப்புலகள் கட்சியின் பொருளாளர் தேவராஜா, வெல்லாவெளி பிரதேச சபை தவிசாளர் சிறிதரன், வவுணைதீவு பிரதேச சபை உப தவிசாளர் ஜெயராஜ் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர். |
| கொக்கட்டிச்சோலையில் இன்று மின்சாரம் தாக்கியதில் 9 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது Posted: 12 Jun 2012 11:34 AM PDT மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலையில் இன்று மின்சாரம் தாக்கியதில் 9 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இன்று பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கொக்கட்டிச்சோலை பிரதான வீதியை சேர்ந்த ஜீவேந்திரன் டிலக்ஸ்னி என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது. வீட்டில் மின்சாரத்தில் இயங்கும் பேக்கரி உள்ளதாகவும் பேக்கரியில் மின் விநியோகம் செய்வதற்காக கீழே வைத்திருந்த மின் செருகியில் குழந்தை கையை வைத்தபோது மின்சாரம் தாக்கியுள்ளது. உடனடியாக மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. பெற்றோரின் கவனயீனமாக கீழே வைத்திருந்த மின்செருகியை தவன்றுசென்ற குழந்தை அதனை எடுத்து விளையாட முனைந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பிலான விசாரணையை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். |
| Posted: 12 Jun 2012 11:16 AM PDT ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஒன்றுகூடலின் போது ஒன்றியத்தின் விதிகளுக்கு அமைவாக அங்கத்தவர்களின் சந்தா பணமாவே 100 ரூபா அறிவிடப்பட்டது எனவும் வேறு எவரிடமும் பணம் அறவிடப்படவில்லை எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் ஒன்றியத்தின் கல்குடா தொகுதி செயலாளர் ரி.தயாபரன் தெரிவித்துள்ளார். பட்டதாரிகளுக்கான தொழில் நியமனம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் அண்மையில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவே தயாபரன் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பட்டதாரிகள் ஒன்றியத்தின் கல்குடா தொகுதி செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 09.06.2012 அன்றைய தினம் ஒன்று கூடல் ஒன்று ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் ஒன்றியத்தினால் (கல்குடா தொகுதி) ஏற்பாடு செய்யப்பட்டது. எங்கள் அழைப்பின் பெயரில் வருகை தந்த ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் ஒன்றிய அகில இலங்கை செயலாளர் மனுல சமல பெரேரா மற்றும் கல்குடா வலய ஸ்ரீ.சு.க.அமைப்பாளர் டி.எம்.சந்திரபால ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரைகள் ஆற்றினர். மனுல சமலபெரரா பேசுகையில் ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் ஒன்றியம் என்றால் என்ன? அதன் அசியம் என்ன?, அதனை எவ்வாறு செயற்படுத்துவதன் மூலம் நன்மைகளை பெறமுடியும் என்பதனையும் விளக்கமளித்தார். பின்னர் கிழக்கு மாகாண அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்க தம்மால் இயன்ற உதவிகளை செய்வது மட்டுமல்லாமல் எமது ஒன்றிய பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வளங்கப்படும் எனவும் உறுதி அளித்தார். இதனை சகோதர மொழியில் இருந்து மொழிபெயர்த்தவர் எமது அமைப்பாளராவார். எமது அமைப்பளரும் அதனை உறுதிப்படுத்தினார். இது எங்களுக்கு மிகவும் திருப்திகரமாக இருந்தது. பின்னர் அகில இலங்கை ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் ஒன்றியத்தின் விதிகளுக்கு அமைய வருடாந்த சந்தாபணமாக 100 ரூபாவை எங்கள் அமைப்பின் பட்டதாரிகளிடம் இருந்து மட்டும் பொருளாளர் பெற்றுக்கொண்டார். இதுவே அன்றைய நிகழ்வின் சாராம்சம், அதனைவிடுத்து எவரும் எவரிடமும் பணம் அறவிடவில்லை எனவும், எமது அமைப்பில் சேருமாறு எவரையும் எவரும் வற்புறுத்தவில்லை எனவும் அதிகாரபூர்வமாக அறியத் தருகின்றேன். அன்றைய செய்திக்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனின் கூற்று முற்றிலும் தவறானது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் இதுபோன்ற செய்திகளை வெளியிடும் போது சம்பந்தப்பட்ட அமைப்பையும் கருத்திற்கொண்டு அவர்கள் கருத்துகளை பெற்று உண்மைகளை கூறவேண்டும். அதனை விடுத்து சுய அரசியல் இலாபத்திற்காக கல்குடா தொகுதி பட்டதாரிகளை பகடக்காய்களாக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினருக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன். மேலும் சந்திரபால விருந்தினராக கலந்து கொண்டாரே தவிர, அவர் பணம் பெற்றார் என்ற கூற்றும் முற்றிலும் தவறு என்பதை ஆழமாக பதிவு செய்கிறோம். மேலும் உங்களுக்கு இன்னும் ஒரு விடயத்தை நினைவுபடுத்த ஆசைப்படுகின்றேன். கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பட்டதாரிகள் சம்பந்தமான எந்த நியமனமும் கிழக்கு மாகாணத்தில் அரசியல் தலையீடு இன்றி நடைபெற்றுள்ளதா? மேலும் உங்களை இதுவரை நம்பிக்கொண்டிருந்த எங்களை போன்றோருக்கு என்ன செய்தீர்கள்? ஏதும் மாற்றுதீர்வுகள் செய்தீர்களா? என்றால் எல்லாம் கேள்விக்குறிகளே. இதற்கான விடை காணலாகவே எமது அமைப்பின் அங்குரார்பணமும், இது போன்ற ஒன்று கூடங்களும். இதன் மூலமாவது தீர்வு பெறமுடியுமா என முயற்சிக்கும் எங்களை குட்டி குனியவைக்காமல் தட்டி கொடுத்து உயர்த்துங்கள். இதுவரை காலமும் நீங்கள் செய்ய தவறிவிட்டீர்கள். விடியலை எதிர்பார்க்கும் எங்கள் முயற்சிக்கு வழிவிடுங்கள். அதை விடுத்து எம்மை வேதனைப்படுத்தி எமது வேதனையின் உஸ்ணத்தில் சுய அரசியல் இலாபத்திற்காக குளிர்காயாதீர்கள். என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| கிழக்கு மாகாணத்திலிருந்து அழைத்து வரப்பட்ட பல பெண்கள் விபசார அடிமைகளாகக் கொழும்பில் விற்பனை! Posted: 12 Jun 2012 10:55 AM PDT கிழக்கு மாகாணத்திலிருந்து அழைத்து வரப்பட்ட பல பெண்கள் கொழும்பில் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் அடிமைத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வரும் அதிர்ச்சித் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. கிராமப் புறங்களைச் சேர்ந்த இளம் பெண்களுக்குக் கொழும்பிலும் பிற பிரதேசங்களிலும் தொழில் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து வரும் ஒரு கும்பலே இவர்களைக் கொழும்பில் சிறைவைத்து பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அதன் மூலம் வருமானம் பெற்று வருகின்றனர் எனத் தெரிய வந்துள்ளது. கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த வறுமைப்பட்ட குடுங்களிலுள்ள இளம் யுவதிகளே இவ்வாறு ஏமாற்றப்பட்டு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு பின்னர் பலாத்கார பாலியல் வியாபாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். தொழில் வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு அங்கு பலாத்கார பாலியல் வியாபாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட நுவரெலிய மாவட்டத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவரே இந்தத் தகவல்களைப் பொலிஸாரிடம் அம்பலப்படுத்தியுள்ளார். தாம் அடைத்து வைக்கப்பட்ட இடத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல பெண்கள் பலாத்காரப் பாலியலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையைத் நேரடியாகக் கண்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பதுளையில் வான் ஒன்றை திடீர் சோதனைக்குட்படுத்திய பொலிஸார், அதிலிருந்த 13 பேரைக் கைது செய்துள்ளனர். இவர்களில் 11 பேர் பெண்களாவர். கிளிநொச்சி, கிண்ணியா, தோப்பூர், மஸ்கெலியா, கினகத்தேன, பசறை, துட்டுவெவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இவர்கள் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகிறது. |
| You are subscribed to email updates from மக்களின் குரல் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
