புதிய உலகம்.கொம் |
- சிம்புவுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்யப் போறோம்-டி.ராஜேந்தர்
- நெஞ்சை பதறவைக்கும் ஒட்டிய மனிதப்பிறவிகள்! (அதிர்ச்சி படங்கள்)
- ஆழ்கடலுக்குள் ஊடுருவும் 7கால் அதிசய ஜந்து.! (படங்கள் இணைப்பு)
- இரண்டே கால்களுடன் தன்னம்பிக்கை தளராத பூனைக்குட்டி! (வீடியோ இணைப்பு)
- ஆபிரிக்கர்களின் செல்லப்பிராணிகள் எவை தெரியுமா? (படங்கள் இணைப்பு)
- தனது சிறுநீரை விரும்பி குடிக்கும் விசித்திர பெண்மணி (காணொளி இணைப்பு)
- கிரிக்கெட் வீரர்களுடன் நடிகை உல்லாசம் : நூபுர் மேத்தாவிடம் விசாரணை
| சிம்புவுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்யப் போறோம்-டி.ராஜேந்தர் Posted: 12 Jun 2012 11:31 PM PDT எனது மகள் இலக்கியாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். அது முடிந்ததும் சிம்புவுக்கு திருமணம் செய்து வைப்போம் என்று இயக்குநர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார். விஜய டி.ராஜேந்தர்-உஷா தம்பதிக்கு சிலம்பரசன், குறளரசன் மற்றும் இலக்கியா என மூன்று பிள்ளைகள். இதில் மூத்தவரான சிமபு நடிகராகி விட்டார். குறளரசனும் விரைவில் நடிகராகப் போகிறார். மகள் இலக்கியா சினிமா பக்கமே திரும்பிப் பார்க்காமல் வளர்ந்தவர். இவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாம். இலக்கியா திருமணத்திற்குப் பின்னர் சிம்புவுக்குத் திருமணம் நடைபெறுமாம். ஆந்திர மாநிலம் காளஹஸ்திக்கு நேற்று தனது மனைவி, மகளுடன் வந்த ராஜேந்தர் அங்கு சாமி கும்பிட்டார். பின்னர் செய்தியாளர்கள் அவர்களை சுற்றிசத் சூழ்ந்தனர். அப்போது சிம்பு திருமணம் குறித்து கேட்டபோது, முதலில் இலக்கியா திருமணம் நடைபெறும்.அதன் பின்னர் சிம்பு திருமணம்தான்.சீக்கிரமே சிம்பு திருமணம் நடைபெறும் என்றார் ராஜேந்தர். உங்களது அடுத்த படம் என்ன என்ற கேள்விக்கு ஒரு தலை காதல் என்ற படத்தை இயக்கப் போகிறேன் என்றார். குறளரசன் எப்போது ஹீரோ ஆவார் என்ற கேள்விக்கு, இந்த ஆண்டு இறுதியில் குறளரசன் அறிமுகமாகும் படத்தை அறிவி்ப்போம் என்றார். |
| நெஞ்சை பதறவைக்கும் ஒட்டிய மனிதப்பிறவிகள்! (அதிர்ச்சி படங்கள்) Posted: 12 Jun 2012 11:09 PM PDT ஒட்டிப்பிறக்கும் எத்தனையோ விதமாக விசித்திர மனிதர்களை நாம் உங்களுக்கு ஆரம்பகாலம் முதல் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். தற்போதைய நவீன மருத்துவ முறைகளை பயன்படுத்தி இவ்வாறு ஒட்டிப்பிறக்கும் மனிதர்களை ஆபத்து இன்றி பெரும்பாலும் பிரித்துவிட முடிகிறது. ஆனால் ஆரம்பகாலத்தில் வசதிகளற்ற நிலையில் ஒட்டிப்பிறந்த எத்தனையோ மனிதர்கள் தாம் வாழ்நாள் முழுவதும் ஒட்டிய நிலையில்தான் தம் வாழ்வை நகர்த்தியிருக்கிறார்கள். இன்று நாம் உலகில் ஒட்டிப்பிறந்த விசித்திரபிறப்புகள் பற்றியவர்களின் புகைப்படங்களை தருகிறோம். இவற்றுள் இருக்கும் படங்களுக்குரிய செய்திகள் பெரும்பாலும் எமது தளத்தினூடாக ஏற்கனவே வெளியிட்டுள்ளோம். எனினும் புதிய எமது வாசகர்களுக்காக ஒட்டிப்பிறந்த பிறப்புகளின் புகைப்படங்களை ஒட்டுமொத்தமாக தருகிறோம். வினோதங்கள் தொடரும்..... |
| ஆழ்கடலுக்குள் ஊடுருவும் 7கால் அதிசய ஜந்து.! (படங்கள் இணைப்பு) Posted: 12 Jun 2012 11:04 PM PDT கியூபா நாட்டுக்கு அருகாமையில் பஹமாஸ் ஏனும் நாடு உள்ளது. சிறியதும் பெரியதுமாக சுமார் 3,000 தீவுகளை உள்ளடக்கிய நாடே பஹமாஸ் ஆகும். அத்தீவுகளின் கடலில் சில விஞ்ஞானிகள் ஆராட்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் கமரா பொருத்தப்பட்ட இயந்திரம் ஒன்றை கடலுக்கு அடியில் செலுத்தி ஆராட்சிகளை மேற்கொண்டனர். கடலுக்கு அடியில் என்றதும் சுமார் 300 அல்லது 400 மீட்டர் என்று நினைக்கவேண்டாம். கடல் மேல்மட்டத்தில் இருந்து சுமார் 8,500 அடி ஆழ்ப்பத்தில் இப்பரிசோதனைகள் நடைபெற்றது. திடீரென ஒரு நாள் கடலுக்கு அடியில் இருந்த இயந்திரத்தில் இருந்து காட்சிகள் கிடைக்கப்பெறவில்லை. இதனை அடுத்து இந்த இயந்திரத்தை வெளியே எடுத்துப் பார்த்தால் விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள். காரணம் கமராவின் வயர்கள் கடிக்கப்பட்டு துண்டாடப்பட்டிருந்தன. அக்கடலில் அவ்வளவு ஆளத்தில் சுறா மீன்கள் வசிக்க முடியாத நிலை உள்ளது. அப்படி என்றால் எந்தவகையான மீன்கள் இவற்றைக் கடிக்கும் தன்மை கொண்டவை என்று அவர்கள் குழம்பிப்போனார்கள். இறுதியில் இயந்திரத்தைச் சரிசெய்து திரும்பவும் அதே இடத்தில் இறக்கினார்கள். ஆனால் இம் முறை, அந்த மர்ம ஜந்து மாட்டிக்கொண்டது. காரணம் அது மீண்டும் இந்த இயந்திரத்தை கடிக்க வந்தபோது, அதன் உருவம் கமராவில் பதிவாகியது. அது மட்டுமல்லாது சுமார் ஒன்றரை அடி நீளமான இந்தப் புதுவகையான ஜந்துவையும் அவர்கள் சாமர்த்தியமாகப் பிடித்துவிட்டார்கள். அதன் கால்களும் மற்றும் வாய்ப் பகுதிகளிலும் காணப்படும் கூரிய நகங்கள், வாள்போன்றவை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 7 கால்களைக் கொண்ட இந்த ஜந்து இதுவரை பூமியில் கண்டுபிடிக்கப்படாத ஒரு இனம் ஆகும். பாத்திநோமஸ் ஜயன்டியஸ் என்று அழைக்கப்படும் இனத்தில் இதனை இணைத்துள்ளார்கள். விஞ்ஞானிகள். கடலுக்கு அடியில் சுமார் 8,500 அடி ஆழத்தில் வாழும் இந்த உயிரினம், தனது குடியிருப்புக்கு அருகாமையில் வித்தியாசமான ஒரு பொருள் இருப்பதை உணர்ந்து அதனை தாக்கியுள்ளது. இது வசிக்கும் பிரதேசத்தில் எப்போதும் வெளிச்சம் இருப்பதே இல்லை. காலம் முழுவதும் இருட்டில் வாழும் இனங்களில் இதுவும் ஒன்று ஆகும். வினோதங்கள் தொடரும்..... |
| இரண்டே கால்களுடன் தன்னம்பிக்கை தளராத பூனைக்குட்டி! (வீடியோ இணைப்பு) Posted: 12 Jun 2012 10:00 AM PDT |
| ஆபிரிக்கர்களின் செல்லப்பிராணிகள் எவை தெரியுமா? (படங்கள் இணைப்பு) Posted: 12 Jun 2012 09:10 AM PDT |
| தனது சிறுநீரை விரும்பி குடிக்கும் விசித்திர பெண்மணி (காணொளி இணைப்பு) Posted: 12 Jun 2012 08:52 AM PDT உலகின் வாழும் மனிதர்களில் எத்தனையோ பேர் இன்னும் விசித்திர பிறப்புக்களாகவும் விசித்திர நடத்தை உடையவர்களாகவும் வாழந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான வினோத சம்பவங்களை நாம் அவ்வப்போது உங்களுக்காக தந்து கொண்டிருக்கிறோம்.இன்று நாம் பார்க்கப்போகும் விசித்திர மனிதர் ஒரு பெண். இவர் தன்னிடம் ஒரு வித்தியாசமாக பழக்கவழக்கம் இருப்பதாக சொல்கிறார். இதை தான் செய்தும் காட்டுகிறார் அப்படி என்னதான் விபரீதமான பழக்கம்.. கேட்டால் உங்களுக்கு சத்தி வரும்... இருந்தாலும் சொல்லித்தான் ஆகவேண்டும். காரீ எனும் குறித்த பெண்மணி தனது சொந்த சிறுநீரையே (அதுதானுங்க மூத்திரம்..அடச்சீ)கடந்த 4 வருடங்களாக அருந்து வருகிறார். தனக்கு இது ரொம்ப பிடித்திருப்பதாகவும் குறிப்பிடுவதுடன் கண்முண்ணே தனது சிறுநீரை அருந்தியும் காட்டுகிறார். குறிப்பாக ஒரு நாளைக்கு இவர் ஐந்து குவளைகள் சிறுநீர் அருந்துவதாக குறிப்பிடுகின்றார். தனக்கு இது லெமன் பாணமாக இருப்பதாக வேறு சொல்கிறார் இந்த மூதேவி... அதுதானுங்க மூத்திர தேவி... மூத்திரம் குடிக்கும் மூதேவி வினோதங்கள் தொடரும்...... |
| கிரிக்கெட் வீரர்களுடன் நடிகை உல்லாசம் : நூபுர் மேத்தாவிடம் விசாரணை Posted: 12 Jun 2012 08:33 AM PDT கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக நடிகை நூபுர் மேத்தாவிடம் ஐசிசி அதிகாரி விசாரணை நடத்தினார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்தது. அப்போது சூதாட்டம் நடந்ததாகவும், இதில் வீரர்களை ஈடுபடுத்த நடிகைகளை பயன்படுத்தியதாகவும், பிரபல இந்தி நடிகை நூபுர் மேத்தா வீரர்களுடன் உல்லாசமாக இருந்து அவர்களை சூதாட்டத்தில் ஈடுபடுத்தியதாகவும் லண்டன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டை நூபுர் மறுத்தார். மேலும் லண்டன் பத்திரிகை மீது வழக்கு தொடர போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரி ஆலன் பீக்காக் திடீரென நேற்று மும்பை வந்தார். அவர் அதிரடியாக நடிகை நூபுரிடம் சூதாட்டம் தொடர்பாக விசாரணை நடத்தினார். மும்பை புறநகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இந்த விசாரணை நடந்தது. சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த விசாரணையில் அவரிடம் பல்வேறு கேள்விகளை ஆலன் பீக்காக் எழுப்பினார். அதன்பின் நூபுர் விடுவிக்கப்பட்டார். விசாரணை குறித்து நூபுர் கூறியதாவது: சந்தேகத்தின் அடிப்படையில் ஐசிசி அதிகாரி என்னிடம் விசாரணை நடத்தினார். நான் அளித்த பதிலால் அவர் திருப்தி அடைந்துள்ளார். நான் சூதாட்டத்தில் ஈடுபடவில்லை என அவரே கடைசியில் கூறினார். என்னுடன் நெருங்கி பழகும் நண்பர்கள் யார் யார் என்றும் விசாரித்தார். யுவராஜ்சிங், பார்த்திவ் படேல், இஷாந்த் சர்மா ஆகியோரை நன்கு தெரியும் என்றேன். தில்ஷானுடன் நான் டேட்டிங் சென்றது குறித்து விசாரணை நடத்தினார். சூதாட்ட தரகர்கள் யாரையும் எனக்கு தெரியாது. அவர்களுடன் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது என தெரிவித்தேன். கிரிக்கெட் வீரர்கள் எனது நண்பர்கள். சமூக சேவை பணியில் அவர்கள் என்னோடு இணைந்து பணிபுரிவார்கள். அப்போது அவர்களுடன் பழகநேரிட்டது என தெரிவித்தேன். இவ்வாறு நூபுர் கூறினார். 'நூபுர் தப்பே செய்யவில்லை என்று யாரும் நற்சான்றிதழ் அளிக்க வில்லை. அவரிடம் பீக்காக் விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாரணையின் தகவல்களை இப்போது தெரிவிக்க முடியாது' என்று ஐசிசி தெரிவித்துள்ளது. |
| You are subscribed to email updates from புதிய உலகம்.கொம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


































