விழியே பேசு... |
- அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தால் மட்டுமே போட்டி: அப்துல் கலாம் திட்டவட்டம்
- புதுக்கோட்டை இடைத்தேர்தல்: நாளை ஓட்டு எண்ணிக்கை
- ரஜினி கமலை கொச்சைப்படுத்துவதா? சகுனி சிக்கல்!
- 812 வருட தமிழ் சினிமா வரலாற்றில் மறுரிலீஸில் கர்ணன் சாதனை
- அஜித்துக்கான கதையில் சூர்யா நடிக்கிறார்!
- கலாம் அல்லது மன்மோகன் அல்லது சோம்நாத் தான் ஜனாதிபதியாக வேண்டும்
- பீர் விலை உயர்வு: தமிழக அரசு அதிரடி.. அடுத்து பிராந்தி, விஸ்கி, ரம், ஒயின்?
- செக்ஸ் டார்ச்சர் கொடுத்த காதல் மனைவியை கொன்று எரித்த கணவர்
- ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பது எப்படி?: போட்டியிட தகுதி என்ன?
- சிம்புவுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்யப் போறோம்-டி.ராஜேந்தர்
- குடிசைகளுக்கு தீ வைத்த வீரபாண்டி ஆறுமுகத்தின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
- நித்யானந்தா கர்நாடக நீதிமன்றத்தில் சரண்
- ஓடும் ரயிலில் இருந்து குதித்த அனுஷ்கா
- தமிழக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் துணை ஜனாதிபதி ஆகிறார்
- விரைவில் கோவையில் குடியேறுகிறார் ரஜினி?
- லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு 76 இந்தியர்கள் தகுதி
- புத்தகம் மூலம் புயல் கிளப்ப தயாராகும் சகாயம் ஐ.ஏ.எஸ்.
- ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க மம்தா பானர்ஜி தயக்கம்: சோனியாவுடன் இன்று ஆலோசனை
- காந்தி பேரனுக்கு ஜனாதிபதி பதவி தர காங்கிரஸுக்கு விருப்பமில்லை!
| அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தால் மட்டுமே போட்டி: அப்துல் கலாம் திட்டவட்டம் Posted: 13 Jun 2012 10:33 PM PDT ஜனாதிபதி பதவிக்கு டாக்டர் அப்துல் கலாமின் பெயரை பரிந்துரைக்கும் முன் அவருடன் சமாஜ்வாடிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவும், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் தொலைபேசியில் பேசி அவரது அனுமதியை வாங்கியதாகத் தெரிகிறது. ஆனால், இது குறித்து அப்துல் கலாமிடமிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வமான கருத்தும் வெளிவரவில்லை. பாஜக ஆட்சியில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தப்பட்டு அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு வென்றார் கலாம். ஆனால், அடுத்து காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தபோது சோனியா காந்தியை பிரதமராக கலாம் விடவில்லை. அவர் வெளிநாட்டுக்காரர் என்பதால் அதை கலாம் அனுமதிக்கவில்லை. அதிலிருந்தே காங்கிரஸ்-கலாம் இடையே நல்லுறவு இல்லை. இந் நிலையில், கலாமின் பதவிக் காலம் முடிந்தபோது மீண்டும் அவரையே நிறுத்தலாம் என பாஜக கூட்டணி கூறியது. ஆனால், கலாம் முதலில் அமைதி காத்தார். பின்னர் மீண்டும் போட்டியிடத் தயார் என்று அறிவித்தார். ஆனாலும், அவரது விருப்பத்தை நிராகரித்துவிட்ட காங்கிரஸ் பிரதீபா பாட்டீலை ஜனாதிபதியாக்கியது. இந் நிலையில் மீண்டும் கலாமின் பெயர் ஜனாதிபதி பதவிக்கு அடிபடுகிறது. 3 மாதங்களுக்கு முன்பே இவரது பெயரை முலாயம் சிங்கும், பிகார் முதல்வர் நிதிஷ் குமாரும் கூறி வந்தனர். பாஜக, அதிமுகவும் கூட கலாமையே மீண்டும் ஜனாதிபதியாக்கலாம் என்றன. திமுகவும் இதையே கூறியது. ஆனால், கலாமுக்கு காங்கிரசின் ஆதரவு இல்லை என்பது நிச்சயமானவுடன் திமுக அமைதி காக்கத் தொடங்கியது. ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்கும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் திடீரென முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ.சங்மா ஜனாதிபதியாக ஆதரவு தெரிவித்தனர். இந் நிலையில் தான் மீண்டும் கலாமின் பெயர் முன் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தன்னிடம் பேசிய முலாயம் மற்றும் மம்தாவிடம், எனக்கு அனைத்துக் கட்சிகளின் ஒருமனதான ஆதரவு இருந்தால் மட்டுமே போட்டியிடுவேன் என்று கலாம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், காங்கிரசின் ஆதரவு அவருக்கு அவ்வளவு எளிதில் கிடைக்காது என்ற நிலையில், கலாம் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவது மிக மிக அரிதே |
| புதுக்கோட்டை இடைத்தேர்தல்: நாளை ஓட்டு எண்ணிக்கை Posted: 13 Jun 2012 10:15 PM PDT புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தல் கடந்த 12-ந் தேதி நடந்தது. இதில் 73.48 சத வீதம் வாக்குகள் பதிவானது. அதாவது ஆண்கள் 69,259 பேரும், பெண்கள் 74,018 பேரும் சேர்த்து மொத்தம் 1 லட்சத்து 43 ஆயிரத்து 277 பேர் வாக்களித்துள்ளனர். யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை குறிக்கும் "49 ஓ" படிவத்தை 47 பேர் பயன்படுத்தி உள்ளனர். வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் "சீல்" வைக்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய எல்லைப்பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். நாளை (15-ந்தேதி) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. ஓட்டு எண்ணும் பணியில் 200 ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஓட்டு எண்ணும் மையத்தில் 10 மேஜைகள் போடப்படுகிறது. மொத்தம் 23 சுற்றுக்களாக ஓட்டுக்கள் எண்ணப்படுகிறது. புதுக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் கார்த்திக் தொண்டைமான், தே.மு.தி.க. சார்பில் ஜாகீர்உசேன், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சீனிவாசன் மற்றும் சுயேட்சைகள் உள்பட 20 பேர் போட்டியிடுகிறார்கள். இதில் வெற்றி யாருக்கு என்பது பிற்பகல் 1 மணிக்கு தெரிந்துவிடும். |
| ரஜினி கமலை கொச்சைப்படுத்துவதா? சகுனி சிக்கல்! Posted: 13 Jun 2012 09:21 AM PDT ஷங்கர் தயாள் இயக்கத்தில் கார்த்தி, ப்ரணிதா, சந்தானம், பிரகாஷ்ராஜ், ராதிகா, ரோஜா, கோட்டா சீனிவாசராவ் ஆகியோர் நடித்துள்ள படம் சகுனி. காமெடி கலாட்டாவுடன் சகுனி அனைத்து ரசிகர்களையும் கவரும் என்று படக்குழு அறிவித்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் சென்ஸார் குழுவிற்கு திரையிட்டு காட்டப்பட்ட சகுனி படத்திற்கு 'U' சான்றிதழ் அளித்துள்ளது சென்ஸார் போர்ட். சகுனி படத்தில் கார்த்தி கதாபாத்திரத்திற்கு 'கமலக்கண்ணன்' என்றும், சந்தானம் கதாபாத்திரத்திற்கு 'அப்பாராவ் ரஜினி' என்றும், ப்ரணிதா கதாபாத்திரத்திற்கு 'ஸ்ரீதேவி' என்றும் பெயரிட்டுள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளிவந்திருக்கும் சகுனி படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினி, கமல் ஆகியோரின் பெயர் வைத்ததற்கு எந்த பிரச்சினையும் வராது, அந்த பெயர்களை படத்தின் வசங்களில் கொச்சை படுத்தாதவரை. |
| 812 வருட தமிழ் சினிமா வரலாற்றில் மறுரிலீஸில் கர்ணன் சாதனை Posted: 13 Jun 2012 09:01 AM PDT சிவாஜியின் 'கர்ணன்' படம் 1964-ல் ரிலீசானது. 48 வருடத்துக்கு பிறகு இப்படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகூட்டி கடந்த மார்ச் 16-ந்தேதி மறு ரிலீஸ் செய்தனர். தமிழகம் முழுவதும் 72 தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. சென்னை சத்யம் தியேட்டரில் 'கர்ணன்' படம் வெற்றிகரமாக ஓடி 100-வது நாளை நெருங்குகிறது. வருகிற 23-ந்தேதி இங்கு 100-வது நாள் கொண்டாடப்படுகிறது. இன்னும் இந்த தியேட்டரில் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் இப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுகிறது. சென்னை சாந்தி தியேட்டரில் இப்படம் மறு ரிலீஸ் செய்து 50 நாட்கள் தாண்டி ஓடியது. திருச்சி, மதுரை, தஞ்சாவூர், நெல்லை, நாகர்கோவில் தியேட்டர்களிலும் 50 நாட்கள் ஓடியது. ஒவ்வொரு தியேட்டராக மாறி மொத்தம் 250 தியேட்டர்களில் இப்படம் ஓடி உள்ளது. இதுவரை கர்ணன் படம் ரூ. 5 கோடி வசூல் ஈட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 812 வருட தமிழ் சினிமா வரலாற்றில் மறுரிலீஸ் செய்த படம் 100 நாட்கள் ஓடியது இதுவே முதல் முறையாகும். தெலுங்கில் மாயாபஜார் என்ற கறுப்பு வெள்ளை படத்தை கலரில் மாற்றி மறுரிலீஸ் செய்து 100 நாட்கள் ஓட்டினர். கர்ணன் படத்தை தயாரித்தபோது அதன் மொத்த பட்ஜெட் 40 லட்சம் ஆகும். அப்போதும் 4 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது. இந்த படத்தில் சிவாஜி கர்ணனாகவும் அசோகன் துரியோதனனாகவும் முத்துராமன் அர்ஜுனனாகவும் நடித்துள்ளனர். பி.ஆர்.பந்துலு இயக்கியுள்ளார். சென்னையில் 100-வது நாள் விழாவை பிரமாண்டமாக கொண்டாட திவ்யா பிலிம்ஸ் ஏற்பாடு செய்து வருகிறது. நடிகர்-நடிகைகள் இதில் பங்கேற்கின்றனர். பழைய நடிகர்கள் விழாவில் கவுரவிக்கப்படுகிறார்கள். சிவாஜி ரசிகர்கள் சார்பில் 100-வது நாள் விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் சந்திரசேகரன் அறிவித்து உள்ளார். |
| அஜித்துக்கான கதையில் சூர்யா நடிக்கிறார்! Posted: 13 Jun 2012 08:14 AM PDT ஒரு நடிகரின் கையிலிருந்து நழுவும் படம் மற்றொரு நடிகருக்கு வெற்றிப்படமாக அமைவது திரைத்துரையில் சாதாரணமானது தான். 'நேருக்குநேர்' படத்தில் முதலில் அஜித்-விஜய்யை வைத்து படப்பிடிப்பு துவங்கப்பட்டது. பின்னர் சில காரணங்களால் அஜித்துக்கு பதிலாக சூர்யா நடித்தார். சூர்யாவிற்கு நல்ல அறிமுகத்தை நேருக்கு நேர் படம் கொடுத்தது. அதேபோல கௌதம் மேனன் இயக்கிய 'காக்க காக்க' படமும் முதலில் விஜய் நடிப்பதாக இருந்து பிறகு சூர்யாவிற்கு கைமாறியது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய கஜினி படத்தில் முதலில் அஜித் நடிப்பதாக பேசப்பட்டு பின்னர் சூர்யா நடித்தார். கஜினி படம் தான் சூர்யாவை தெலுங்கு, இந்தி திரையுலகிற்கு கொண்டு சென்றது. இப்படி மற்ற நடிகர்கள் தவறவிட்ட படவாய்ப்புகள், குறிப்பாக அஜித் தவறவிட்ட படவாய்ப்புகள் சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. அதுபோன்ற வாய்ப்புகளை சூர்யா நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார் என்றும் சொல்லலாம். இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக இருந்த 'துப்பறியும் ஆனந்த்' படத்தில் சூர்யா நடிப்பதாக தெரிகிறது. 'துப்பறியும் ஆனந்த்' படத்தின் கதை இரண்டு வருடங்களுக்கு முன்னரே கௌதம் மேனனால் எழுதப்பட்டது. சில காரணங்களால் தள்ளிக்கொண்டே சென்ற படம் இப்பொழுது கைமாறியுள்ளது. சூர்யா தற்போது மாற்றான், சிங்கம்-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கௌதம் மேனன் 'யோஹன்-அத்தியாயம் ஒன்று' படத்தை முடித்த பிறகு துப்பறியும் ஆனந்த் படம் துவங்கப்படுகிறதாம். துப்பறியும் ஆனந்த் படத்தின் ஷூட்டிங் 2013-ல் துவங்கும் என சொல்லப்படுகிறது. அஜித்துக்காக பல காலம் காத்திருந்தார் கௌதம் மேனன். இனியும் காத்திருக்க முடியாது என்று சொல்லி சூர்யாவை வைத்து துப்பறிய களத்தில் இறங்கப் போகிறார். |
| கலாம் அல்லது மன்மோகன் அல்லது சோம்நாத் தான் ஜனாதிபதியாக வேண்டும் Posted: 13 Jun 2012 08:07 AM PDT ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் அப்துல் கலாமை நிறுத்த வேண்டும் அல்லது பிரதமர் மன்மோகன் சிங்கை ஜனாதிபதியாக்க வேண்டும், அதுவும் இல்லாவிட்டால் மூத்த இடதுசாரித் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியை நிறுத்த வேண்டும் என்று சமாஜ்வாடிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவும், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார். அப்போது காங்கிரஸ் சார்பில் இரு பெயர்கள் முன் வைக்கப்பட்டன. முதல் சாய்சாக பிரணாப் முகர்ஜி பெயரையும், இரண்டாவது சாய்சாக துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் பெயரையும் சோனியா முன் வைத்தார். பிரணாபை ஏற்க விருப்பமில்லாவிட்டால், அன்சாரியை மம்தா ஏற்றுக் கொள்வார் என்று சோனியா நினைத்திருந்தார். ஆனால், அவருக்கு எந்த பதிலையும் தராத மம்தா பானர்ஜி அங்கிருந்து கிளம்பி சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவின் இல்லத்துக்கு வந்தார். அங்கு இருவரும் 15 நிமிடங்கள் சந்தித்துப் பேசினர். இதையடுத்து இருவரும் சேர்ந்து நிருபர்களை சந்தித்தனர். அவர்கள் கூறுகையில், நாடு நன்றாக இருக்க வேண்டுமானால் நாங்கள் சொல்லும் 3 பேரில் ஒருவர் தான் ஜனாதிபதியாக வேண்டும். எங்களது முதல் சாய்ஸ் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தான். அவரை காங்கிரசால் ஏற்க முடியாவிட்டால் பிரதமர் மன்மோகன் சிங்கையே ஜனாதிபதியாக்கலாம். அதுவும் முடியாவிட்டால் முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியை ஜனாதிபதியாக்கலாம். இவர்கள் தான் எங்களது சாய்ஸ். முதல் சாய்ஸ் அப்துல் கலாம் தான் என்றனர். இந்த நிருபர்கள் சந்திப்புக்குப் பின் மீண்டும் இருவரும் தொடர்ந்து சந்தித்துப் பேசினர். கூட்டணிக் கட்சித் தலைவரான மம்தா மற்றும் தங்களை வெளியில் இருந்து ஆதரிக்கும் முலாயம் சிங்கின் ஆதரவு இல்லாமல் காங்கிரஸ் கட்சியால் ஜனாதிபதி தேர்தலில் தனது வேட்பாளரை வெல்ல வைக்க முடியாது என்ற நிலையில், இந்த இருவரும் புதிதாக 3 பெயர்களைக் கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை திணற வைத்துள்ளனர். அதிலும் சோனியாவுக்கு ஆகாத அப்துல் கலாமை (சோனியா வெளிநாட்டவர் என்பதால் அவரை பிரதமராக கலாம் அனுமதிக்கவில்லை, இதனால் அவர் மீது சோனியாவுக்கு தனிப்பட்ட வெறுப்பு உண்டு) முதல் சாய்சாக அறிவித்திருப்பதன் மூலம் காங்கிரசை அதிர வைத்துள்ளனர். அவர்களது இரண்டாவது சாய்ஸ் தான் மிக வேடிக்கையானது. பிரதமராக உள்ள மன்மோகன் சிங்கை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று கூறியிருப்பதன் மூலம் அவர் இனியும் பிரதமராக நீடிப்பதை தாங்கள் விரும்பவில்லை என்பதை சுட்டிக் காட்டியுள்ளனர். மூன்றாவது சாய்ஸ் தான் இதில் காங்கிரசும் கொஞ்சமாவது ஏற்கக் கூடிய சோம்நாத் சாட்டர்ஜியாகும். மூத்த இடதுசாரித் தலைவரான இவர் மக்களவை சபாநாயகராக இருந்து அனைவரின் நன்மதிப்பையும் பெற்றார். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பிரகாஷ் காரத்துக்கும் சோம்நாத் சாட்டர்ஜிக்கும் ஏற்பட்ட மோதலையடுத்து சாட்டர்ஜியை கட்சியை விட்டே துரத்தினார் காரத். இதனால், அவர் இப்போது மார்க்சிஸ்ட் கட்சியில் இல்லை. இதனால் தான் அவரை மம்தா ஆதரிக்க முன் வந்துள்ளார். கலாமை திமுகவும் ஆதரிக்கும்?: இந் நிலையில் ஆரம்பத்தில் இருந்தே அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறி வருகிறார். இப்போது மம்தா, முலாயம் ஆகியோர் இணைந்து கலாமின் பெயரை முன் வைத்துள்ளதால், கருணாநிதியும் அவரை ஆதரிப்பார் என்று தெரிகிறது. ஆனால், 2ஜி விவகாரத்தில் சிக்கியுள்ளதால் காங்கிரசின் நெருக்குதலுக்குப் பணிந்து அந்தக் கட்சி சொல்லும் எந்த வேட்பாளரையும் ஆதரிக்க வேண்டிய நிலைக்கும் திமுக தள்ளப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இடதுசாரிகளைப் பொறுத்தவரை சோம்நாத் சாட்டர்ஜியை ஆதரிக்க மறுக்கலாம். அதே நேரத்தில் காங்கிரஸ், பாஜகவை சாராத நடுநிலையாக உள்ள அப்துல் கலாமை ஆதரிக்க முன் வரலாம். முலாயம் சிங் யாதவ் ஒருவர் தான் ஆரம்பத்தில் இருந்தே அப்துல் கலாம் பெயரை கூறி வந்தார். அப்துல் கலாமை ஆதரிக்க பாஜகவும் தயாராகவே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் ஜனாதிபதி தேர்தல் காங்கிரஸை மாபெரும் நெருக்கடியில் தள்ளிவிட்டுவிட்டது மட்டும் உண்மை. |
| பீர் விலை உயர்வு: தமிழக அரசு அதிரடி.. அடுத்து பிராந்தி, விஸ்கி, ரம், ஒயின்? Posted: 13 Jun 2012 06:24 AM PDT டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் பீர் விலை இன்று முதல் உயர்த்தப்படுகிறது என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் இலவச திட்டங்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூலம் வரும் வருவாய் கைகொடுத்து வருகிறது. தற்போது தமிழக அரசின் கூடுதல் இலவச திட்டங்களுக்காக டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால் அனைத்து கடைகளுக்கும் 20 சதவீதம் வரை விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரபல வெளிநாட்டு மதுபானங்களும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்தாணடு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. பட்ஜெட்டின் போது வெளிமாநில ஒயின் மற்றும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் பீரின் விலை இன்று முதல் உயர்த்தப்படுகிறது. ரூ.65, 75, 85க்கு விற்பனை செய்யப்பட்ட பீரின் விலை ரூ.70, 80,90க அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்களான பிராந்தி, விஸ்கி, ரம், வோட்கா, ஜின், ஒயின் போன்றவற்றின் விலையும் விரைவில் உயரலாம் என்று தெரிகிறது. |
| செக்ஸ் டார்ச்சர் கொடுத்த காதல் மனைவியை கொன்று எரித்த கணவர் Posted: 13 Jun 2012 06:14 AM PDT மனைவி செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் அவரை கழுத்தை நெறித்துக் கொன்று தீ வைத்து எரித்த கணவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா புதூர் அருகே உள்ள ஜமீன்செங்கல்படையைச் சேர்ந்த வீரபெருமாள் மகள் லதா (19). அதே பகுதியில் உள்ள சென்னமரெட்டிபட்டியைச் சேர்ந்த வேலு மகன் செந்தில்முருகன் (23). லதாவும், செந்திலும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் செய்தனர். இந்நிலையில் கடந்த 8ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற லதா வீடு திரும்பிவில்லை. இதற்கிடையே சென்னமரெட்டிபட்டியில் உள்ள வயலில் பெண் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த புதூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சடலம் லதாவுடையது என்றும், அவரை செந்தில் தான் கொன்றார் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் செந்திலை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். செந்தில் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, லதாவின் உறவினர் வீடு எங்கள் ஊரில் உள்ளது. அவர் அடிக்கடி உறவினர் வீட்டுக்கு வருவார். அப்போது நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டோம். போனிலும் பேசி வந்தோம். எங்களுக்குள் காதல் அரும்பியது. ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்தோம். இந்த காதல் விவகாரம் இருவரது வீட்டுக்கும் தெரியவந்தது. எதிர்ப்புகள் இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல், காதல் திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனமாக வசித்து வந்தோம். திருமணத்துக்கு முன்பு போனில் பேசிக் கொள்ளும் போது லதா என்னிடம் செக்ஸ் விஷயங்கள் குறித்தும் பேசுவாள். செல்போனில் ஆபாச படம் வைத்து இருக்கிறீர்களா? சி.டி.யில் ஆபாச படம் பார்த்தது உண்டா? என்றெல்லாம் கேட்டு இருக்கிறாள். அப்போது அதை நான் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. என்னிடம் ஒளிவு மறைவின்றி பழகுகிறாள் என்றுதான் நினைத்துக் கொண்டேன். திருமணத்துக்கு பின்பு எனது செல்போனை எடுத்து அதில் இருந்த ஆபாச காட்சிகளை பார்த்தாள். நான் தினமும் அருப்புக் கோட்டைக்கு பெயிண்டிங் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் தாமதமாகத்தான் வருவேன். ஆபாச படங்களில் வருவதைப் போன்று அதிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்றும், இரவில் நீண்ட நேரம் உறவு கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தினாள். அவளது செக்ஸ் ஈடுபாடு நாளடைவில் சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் பின்னாளில் அதுவே எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட காரணமானது. செல்போனில் புதிய புதிய ஆபாச படங்களை பதிவு செய்து வரச் சொன்னாள். இதனால் எங்களுக்குள் நாள்தோறும் இரவில் தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் உள்ளூர் உள்ள ஒரு வாலிபரிடம் அவள் போனில் பேச ஆரம்பித்தாள். சாதாரணமாகத்தான் பேசுகிறாள் என்று முதலில் நினைத்தேன். பின்னர் அவளது போக்கில் மாறுதல் ஏற்பட்டது. எங்களுக்குள் இருந்து வந்த தகராறை சாதகமாகப் பயன்படுத்தி வேறு யாருடனும் லதா ரகசிய தொடர்பு வைத்து இருப்பாளோ? என்ற சந்தேகமும் வந்தது. இதனால் அவள் மீதான காதல் மறந்து, வெறுப்பு ஏற்பட தொடங்கியது. சம்பவத்தன்று இரவில் வழக்கம்போல் தகராறு முற்றியது. நான் கோபத்தில் அவதூறாக திட்டினேன். என்னிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள். நான் தேடிச் சென்ற போது உள்ளூரில் உள்ள ஒரு கோவிலில் அவள் இருந்ததை அறிந்து கொண்டேன். முதலில் சமாதானமாக பேசிப் பார்த்தேன். அப்போது, அவள் என்னை செக்ஸ் விஷயத்தை காரணம் காட்டி திட்டினாள். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவளை கொலை செய்ய முடிவு செய்தேன். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வயல்காட்டு வழியாக அழைத்துச் சென்றேன். ஆள் அரவம் இல்லாத ஒரு இடத்தில் திடீர் என்று லதாவை கீழே தள்ளி கழுத்தை நெரித்தேன். சற்று நேரத்தில் உயிர் பிரிந்தது. உடனே வீட்டுக்கு ஓடிவந்து மண்எண்ணெய் கேனை எடுத்துச் சென்று, லதாவின் உடலில் ஊற்றி தீவைத்து எரித்தேன். அதன் பின்னர் எதுவும் நடக்காதது போன்று வீட்டில் நாடகமாடினேன். லதாவை காணாதது குறித்து போலீசுக்கும் தகவல் தெரிவித்தேன். வயல்காட்டில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தது லதாதான் என்பதை போலீசார் உறுதி செய்தால், குடும்பத் தகராறில் அவள் தற்கொலை செய்து கொண்டாள் என்று கூறி நாடகம் ஆடிவிடலாம் என்று திட்டம் போட்டேன். ஆனால் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி நடந்தது தற்கொலை அல்ல, கொலை என்பதை உறுதி செய்து என்னை கைது செய்துவிட்டார்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். |
| ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பது எப்படி?: போட்டியிட தகுதி என்ன? Posted: 13 Jun 2012 05:13 AM PDT உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமையை பெற்றது நமது இந்தியா. இதன் முதல் குடிமகன் ஜனாதிபதி. ஒரு சாதாரண குடிமகனும் ஜனாதிபதி ஆக முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு. பதவி காலம் 5 ஆண்டுகள். ஆனால் எத்தனை முறை வேண்டுமானாலும் ஒருவரை தேர்ந்து எடுக்கலாம். பெருமைமிக்க இந்திய ஜனாதிபதி பதவிக்கு வர இந்திய நாட்டில் பிறந்த எல்லோருக்கும் உரிமை உண்டு. 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி நமது நாட்டின் முதல் ஜனாதிபதி ஆனவர் ராஜேந்திரபிரசாத். அடுத்து வந்த டாக்டர் ராதாகிருஷ்ணனை தொடர்ந்து ஜனாதிபதியாக பலர் பதவி ஏற்றனர். இந்திய ஜனாதிபதி பதவிக்கு பெருமை சேர்ந்தவர்களில் அப்துல்கலாமை அடுத்து ஜனாதிபதி ஆனவர் பிரதீபா பாட்டீல். இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமை இவருக்கு உண்டு. இவரது 5 ஆண்டு பதவிகாலம் ஜூலை 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான முயற்சியில் அரசியல் கட்சிகள் இறங்கி உள்ளன. அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பது எப்படி என்பதை பார்ப்போம்... பெருமைமிக்க ஜனாதிபதி பதவிக்கு யாரும் வரலாம்... என்றாலும் அரசியல் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் அதுபற்றி கனவுகூட காண முடியாது. இந்த பதவிக்கு போட்டியிட சில தகுதிகள் வேண்டும் என்று நமது அரசியல் அமைப்பு சட்டம் கூறுகிறது. அதன்படி, ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுபவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 35 வயது நிரம்பி இருக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளவராக இருக்க வேண்டும் ரூ.15 ஆயிரம் டெபாசிட் செலுத்த வேண்டும் என்பது முக்கிய விதி முறைகளாகும். இந்த தகுதி உடைய ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றால், அவருக்கு 50 எம்.பி.க்கள் அல்லது எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிந்து கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஒரு எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. ஒரு வேட்பாளருக்குத்தான் முன்மொழிய முடியும். புதிய ஜனாதிபதிக்கான வேட்பு மனு வருகிற 16-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடக்கிறது. மனுக்கள் பரிசீலனை ஜூலை 2-ந்தேதியும், வாபஸ் பெறும் நாள் 4-ந்தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி இருந்தால் 19-ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கும். ஓட்டு எண்ணிக்கை தேதி ஜூலை 22. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் போடும் ஓட்டுகளில் அதிக ஓட்டு பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்படுவார். எம்.பி., எம்எ.ல்.ஏ.க்களின் ஓட்டுக்களுக்கு தனித்தனி மதிப்பீடு உள்ளது. தமிழ்நாட்டில் 1971-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 4 கோடியே 11 லட்சத்து 99 ஆயிரத்து 168. இதை 234 சட்டசபை தொகுதி எண்ணிக்கையால் வகுத்து வரும் விடையை ஆயிரத்தால் வகுத்தால் கிடைப்பது 176. எனவே தமிழ்நாட்டில் ஒரு எம்.எல்.ஏ.வின் ஓட்டின் மதிப்பு 176. இதுபோல புதுச்சேரியில் 1971-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 4 லட்சத்து 71 ஆயிரத்து 707. இங்கு எம்.எல்.ஏ. தொகுதி 30. இதன்படி கணக்கிட்டால் ஒரு எம்.எல்.ஏ.வின் ஓட்டு மதிப்பு 16. இதுபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு மாறும். பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் எம்.எல்.ஏ.க்களின் ஓட்டின் மதிப்பு அதிகமாக இருக்கும். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 4,120. இவர்களின் மொத்த ஓட்டுகளின் மதிப்பு 5,49,474. இதுபோல் எம்.பி.க்களின் ஓட்டுக்களுக்கும் தனிமதிப்பு உள்ளது. பாராளுமன்றத்தில் 543 எம்.பி.க்களும் டெல்லி மேல்சபையில் 233 எம்.பி.க்களும் உள்ளனர். இவர்களின் மொத்த எண்ணிக்கை 776. இதைக் கொண்டு எம்.எல்.க்களின் மொத்த ஓட்டுக்களை வகுத்தால் கிடைக்கும் எண் 708. இதுவே ஒரு எம்.பி. ஓட்டின் மதிப்பு ஆகும். எம்.பி.க்கள், மற்றும் எம்.எல்.ஏ.க்களின் மொத்த ஓட்டு மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 882. இதில் யார் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுக்களைப் பெறுகிறாரோ அவர் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்படுவார். எம்.பி.க்கள் டெல்லி பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் நாளில் ஓட்டுப் போட வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் மாநில தலைமை செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்வாவடிகளில் ஓட்டுப் போடவேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் எம்.பி.க்கள் 10 நாட்களுக்கு முன்பு முன் அனுமதி பெற்று மாநில தலைநகரங்களில் ஓட்டுப் போடலாம். எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போடும் போது 2 வேட்பாளர்களுக்கு ஓட்டுப்போடலாம். இதில் ஒருவருக்கு முதல் ஓட்டும், மற்றொருவருக்கு 2-வது ஓட்டும் போட வேண்டும். ஓட்டுச் சீட்டு முறையில் இது நடைபெறும். அதிக ஓட்டுக்கள் பெறுபவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். முதல் சுற்றில் 50 சதவீதத்துக்கு மேல் ஒரு வேட்பாளர் வாக்கு பெறாவிட்டால் 2-வது சுற்று ஓட்டுக்கள் எண்ணப்படும். முடிவில் அதிக ஓட்டுக்கள் பெறுபவர் ஜனாதிபதி ஆவார். மத்திய தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் ஜனாதிபதி தேர்தலுக்கான முறையான அறிவிப்பை நேற்று வெளியிட்டார். அதன்படி தேர்தல் நடத்தும் அதிகாரியாக டெல்லி மேல்-சபை செயலாளர் அக்னி கோத்ரி நியமிக்கபட்டுள்ளார். தமிழ் நாட்டில் சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீன் உதவி தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவின்குமார் மேற்பார்வையில் தமிழ்நாட்டில் ஓட்டுப்பதிவு நடைபெறும். புதுச்சேரியில் சட்டமன்ற செயலாளர் அன்பழகன் உதவி தேர்தல் அதிகாரியாக இருப்பார். இதுபோல் மற்ற மாநிலங்களிலும் உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. என்றாலும், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் தொடர்ந்து இழுபறியே நீடிக்கிறது. அடுத்த ஜனாதிபதி கீரிடம் யாருக்கு என்பதை நாடே... ஏன் உலகமே ஆவலோடு எதிர்பார்க்கிறது. முப்படைத் தளபதி இந்திய ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனைப்படியே செயல்பட முடியும். என்றாலும் அவருக்கு ஏராளமான அதிகாரங்கள் உள்ளன. ஜனாதிபதி இந்திய அரசின் தலைவர் என்று அழைக்கப்படுகிறார். மத்திய கூட்டாட்சி நிர்வாக குழுவின் தலைவரான இவர் இந்திய ராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் இருக்கிறார். * இந்திய பாராளு மன்றத்தின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்கும்படி அழைக்கும் உரிமை. * அவரை பிரதமராக நியமித்தல். * பிரதமரின் பரிந்துரையின்படி மத்திய மந்திரிகளை நியமித்தல். * நாட்டை மந்திரி சபை மூலம் நிர்வகித்தல். * பாராளுமன்றத்தை கூட்டுவது, தள்ளி வைப்பது, பாராளுமன்றத்தில் உரையாற்றுவது. * பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களில் கையெழுத்திட்டு சட்ட அங்கீகாரம் வழங்குதல். * மாநில கவர்னர், ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர், இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள், வெளிநாட்டு தூதுவர்கள் ஆகியோருக்கு பிரதமரின் அறிவுறுத்தலின்படி பதவி பிரமாணம் செய்து வைப்பது. * நெருக்கடி நிலை பிரகடனம் செய்ய 352-வது சட்டப்பிரிவை பயன்படுத்துவது. *பாராளுமன்றத்தை கலைப்பது. தேர்தல் நடத்துவது அவசர ஆணை பிறப்பிப்பது. * 356-வது சட்டப் பிரிவுகளின்படி மாநில அரசுகளை கலைக்கும் அதிகாரம். * சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை குறைக்கும் சிறப்பு அதிகாரம்... என்று ஜனாதிபதியிடம் இந்திய ஆட்சி முறையின் முக்கிய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன |
| சிம்புவுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்யப் போறோம்-டி.ராஜேந்தர் Posted: 13 Jun 2012 04:59 AM PDT எனது மகள் இலக்கியாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். அது முடிந்ததும் சிம்புவுக்கு திருமணம் செய்து வைப்போம் என்று இயக்குநர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார். விஜய டி.ராஜேந்தர்-உஷா தம்பதிக்கு சிலம்பரசன், குறளரசன் மற்றும் இலக்கியா என மூன்று பிள்ளைகள். இதில் மூத்தவரான சிமபு நடிகராகி விட்டார். குறளரசனும் விரைவில் நடிகராகப் போகிறார். மகள் இலக்கியா சினிமா பக்கமே திரும்பிப் பார்க்காமல் வளர்ந்தவர். இவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாம். இலக்கியா திருமணத்திற்குப் பின்னர் சிம்புவுக்குத் திருமணம் நடைபெறுமாம். ஆந்திர மாநிலம் காளஹஸ்திக்கு நேற்று தனது மனைவி, மகளுடன் வந்த ராஜேந்தர் அங்கு சாமி கும்பிட்டார். பின்னர் செய்தியாளர்கள் அவர்களை சுற்றிசத் சூழ்ந்தனர். அப்போது சிம்பு திருமணம் குறித்து கேட்டபோது, முதலில் இலக்கியா திருமணம் நடைபெறும்.அதன் பின்னர் சிம்பு திருமணம்தான்.சீக்கிரமே சிம்பு திருமணம் நடைபெறும் என்றார் ராஜேந்தர். உங்களது அடுத்த படம் என்ன என்ற கேள்விக்கு ஒரு தலை காதல் என்ற படத்தை இயக்கப் போகிறேன் என்றார். குறளரசன் எப்போது ஹீரோ ஆவார் என்ற கேள்விக்கு, இந்த ஆண்டு இறுதியில் குறளரசன் அறிமுகமாகும் படத்தை அறிவி்ப்போம் என்றார். |
| குடிசைகளுக்கு தீ வைத்த வீரபாண்டி ஆறுமுகத்தின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு Posted: 13 Jun 2012 04:40 AM PDT சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள குடிசைகளுக்கு தீ வைக்கபட்ட சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் வீரபாண்டி ஆறுமுகத்தை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்துள்ளனர். வேலூர் ஜெயிலில் உள்ள 'ஏ' கிளாஸ் அறையில் வீரபாண்டி ஆறுமுகம் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனக்கு இவ்வழக்கில் இருந்து ஜாமீன் வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வீரபாண்டி ஆறுமுகம் மனு அளித்திருந்தார். இம்மனு இன்று நீதிபதி சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மனு மீதான விசாரணையை வரும் 22-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். |
| நித்யானந்தா கர்நாடக நீதிமன்றத்தில் சரண் Posted: 13 Jun 2012 04:20 AM PDT பெங்களூரு அருகே உள்ள பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் உள்ளது. இங்கு கடந்த 7-ந்தேதி நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது கைகலப்பு-ரகளை ஏற்பட்டது. இதுதொடர்பாக நித்யானந்தா மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்கில் அவரை கைது செய்ய போலீசார் பிடிவாரண்டு பிறப்பித்திருந்தனர். இதை அறிந்ததும் அவர் தலைமறைவாகி விட்டார். இந்நிலையில், நித்யானந்தா மீதான வழக்கை ரத்து செய்யுமாறு நித்யானந்தா தரப்பில் கோரிக்கை மனு ஒன்று பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த பெங்களூர் உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையை மறுத்ததோடு இம்மனு மீதான விசாரணை நாளை மறுநாள் நடைபெறும் என உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருக்கும் நித்யானந்தா எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்த நிலையில், ராம்நகர அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கோமளா முன்னிலையில் நித்யானந்தா சரணடைந்துள்ளார். நித்யானந்தா சரணடைந்ததையடுத்து அவரை சிறையில் அடைக்க நீதிபதி கோமளா உத்தரவிட்டார். மேலும் நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறும் ஆணையிட்டார். இதையடுத்து ராமநகரம் கிளைச் சிறையில் நித்யானந்தா அடைக்கப்படுகிறார். முன்னதாக நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தை சோதனையிட்ட போலீசார் பல முக்கிய தகவல்களை கைப்பற்றியது மட்டுமின்றி, 4 அறைகளையும் சீல் வைத்துள்ளனர். |
| ஓடும் ரயிலில் இருந்து குதித்த அனுஷ்கா Posted: 13 Jun 2012 03:40 AM PDT அலெக்ஸ் பாண்டியன் படத்திற்காக அனுஷ்கா ஓடும் ரயிலி்ல் இருந்து குதித்துள்ளார். சுராஜ் இயக்கத்தில் கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் உள்ளிட்டோர் நடிக்கும் படம் அலெக்ஸ் பாண்டியன். இந்த படத்தின் சண்டை காட்சி ஒன்றை மைசூர் அருகே எடுத்துள்ளனர். அந்த காட்சியில் அனுஷ்கா டூப் போடாமல் ஓடும் ரயிலில் இருந்து குதித்துள்ளார். இது குறித்து சுராஜ் கூறுகையில், கதைப்படி ரயிலில் செல்லும் கார்த்தியையும், அனுஷ்காவையும் வில்லன்கள் ஹெலிகாப்டரில் துரத்துவார்கள். அந்த காட்சியில் ரயிலின் மேல் கார்த்தியும், அனுஷ்காவும் நடந்தனர். திடீர் என்று அவர்கள் இருவரும் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதிக்க வேண்டும். அப்போது அனுஷ்கா டூப் வேண்டாம் நானே குதிக்கிறேன் என்று கூறினார். அதன் பிறகு ரயிலை மெதுவாக இயக்கச் சொன்னோம். தொடர்ந்து அனுஷ்கா ரயிலில் இருந்து கீழே குதித்தார். இந்த ஒரு சோசிங் காட்சியை ரூ.2 கோடி செலவில் 15 நாட்களில் படமாக்கியுள்ளோம். படத்தில் இந்த காட்சி பேசப்படும் என்றார். |
| தமிழக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் துணை ஜனாதிபதி ஆகிறார் Posted: 13 Jun 2012 01:56 AM PDT டெல்லியில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு ஆலோசனையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் இந்த தேர்தலில் புதிய அணுகுமுறையை கையாண்டு வருகிறது. அதன்படி ஜனாதிபதி பதவி காங்கிரசுக்கும் துணை ஜனாதிபதி பதவியை கூட்டணி கட்சிகளின் விருப்பத்துக்கும்விட முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளரை காங்கிரஸ் தேர்வு செய்வதில் மும்முர மாக ஈடுபட்டுள்ள நிலையில் துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன. கடந்த முறை காங்கிரஸ் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வந்த கம்யூனிஸ்டு கட்சிகள் துணை ஜனாதிபதி பதவிக்கு ஹமீத் அன்சாரி பெயரை சிபாரிசு செய்தன. அதை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. அவர் துணை ஜனாதிபதி ஆனார். இப்போது ஜனாதிபதி தேர்தலில் முலாயம் சிங்கின் சாமஜ்வாடி கட்சியும், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் அங்கம் வகிக்கிறது. ஆனால் சமாஜ்வாடி கட்சி வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவு கொடுக்கிறது. சமாஜ்வாடி கட்சியில் கணிசமான எம்.பி.க்களும், சமீபத்தில் உ.பி.யில் ஆட்சியை பிடித்தால் எம்.எல்.ஏ.க்கள் பலமும் உள்ளது. இதனால் திரிணாமுல் காங்கிரசையும், சமாஜ்வாடி கட்சியையும் அரவணைத்து செல்லும் போக்கை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. மம்தா பானர்ஜி மேற்கு வங்காள மாநிலத்துக்கு மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி ஒதுக்கீடு நிபந்தனை விதித்துள்ளார். முலாயம் சிங் யாதவ் தனது நிபந்தனையாக துணை ஜனாதிபதி பதவிக்கு தான் சிபாரிசு செய்யும் நபரை தேர்வு செய்யவேண்டும் என்று விரும்புகிறார். இதையடுத்து அவர் பிரபல வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ். சுவாமிநாதன் பெயரை துணை ஜனாதிபதி பதவிக்கு சிபாரிசு செய்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்தவரான எம்.எஸ். சுவாமிநாதன் தற்போது டெல்லி மேல்சபை எம்.பி.யாக இருக்கிறார். தனது வேளாண் ஆராய்ச்சியின் மூலம் பல்வேறு நாடுகளில் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர். தொடர்ந்து இவர் வேளாண் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வேளாண்மையில் பல ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அரசியல் சார்பற்றவரான சுவாமிநாதன் நாட்டு நலன் கருதி தொடர்ந்து வேளாண்மை துறைக்கு ஆற்றி வரும் தொண்டு மகத்தானது என்பதால் அவர் துணை ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர் என முலாயம் சிங் யாதவ் கருதி அவரது பெயரை சிபாரிசு செய்துள்ளார். அவரது சிபாரிசை காங்கிரஸ் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. இதற்கு முன் அரசியல் சார்பற்றவரும் அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாமை ஜனாதிபதி பதவிக்கு முலாயம்சிங் யாதவ்தான் முதன் முதலில் சிபாரிசு செய்தார். அவரை அப்போது ஆட்சியில் இருந்த பாரதீய ஜனதாவும் ஏற்றுக்கொண்டது. இதற்கிடையே துணை ஜனாதிபதி பதவிக்கு பாரதீய ஜனதா தலைவர்களில் சிலரும் முயற்சித்து வருகிறார்கள். பாரதீய ஜனதாவில் ஒரு தரப்பினர் ஜனாதிபதியும், துணை ஜனாதிபதியும் பொதுவான வேட்பாளராக இருக்கவேண்டும் என்றும் ஜனாதிபதி வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்தால் துணை ஜனாதிபதி வேட்பாளரை பாரதீய ஜனதா அறிவிக்கவேண்டும். இதை இரு கட்சிகளும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று யோசனை கூறப்பட்டது. மேலும் துணை ஜனாதிபதி பதவிக்கு முரளி மனோகர் ஜோஷி பெயரை பாரதீய ஜனதா சிபாரிசு செய்தது. ஆனால் அதுபற்றி காங்கிரஸ் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. இந்த நிலையில் பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த்சிங் நேற்று டெல்லியில் சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவை சந்தித்துப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். முலாயம்சிங் யாதவிடம் நான் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறேன். எனக்கு ஆதரவு கொடுங்கள் என்று கேட்டார். ஆனால் அவருக்கு ஆதரவு அளிக்க முலாயம்சிங் யாதவ் மறுத்து விட்டார். தனது நிலையை அவர் ஜஸ்வந்த் சிங்கிடமே தெரிவித்து விட்டார். ஜஸ்வந்த்சிங் துணை ஜனாதிபதி பதவிக்கு ஆதரவு கேட்டது அவரது சொந்த முடிவு என்று பாரதீய ஜனதா தெரிவித்துள்ளது. |
| விரைவில் கோவையில் குடியேறுகிறார் ரஜினி? Posted: 13 Jun 2012 01:40 AM PDT விரைவில் கோவையில் குடியேறப் போகிறார் ரஜினி என்ற செய்தி, கோவை ரசிகர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி சமீபத்தில் அவரது குடும்ப நிகழ்வுகள் காரணமாக அமைதியின்றி தவிப்பதாகவும், இமய மலைக்கு ஓய்வெடுக்கச் செல்வதாகவும் பல்வேறு செய்திகள் வந்த வண்ணமிருந்தன. இதற்கிடையே, அவர் கோவையில் குடியேறப் போவதாக குமுதம் வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மகள்கள் பிரச்சினையால் மன நிம்மதி இழந்த ரஜினி, கோவை ஆனைகட்டியில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமம் அருகே, அமைதியான சூழலில் ஒரு இடம் பார்த்து தேர்வு செய்த ரஜினி, அங்கே ஒரு சிறிய அழகான பங்களாவை உருவாக்க உத்தரவிட்டுள்ளார். |
| லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு 76 இந்தியர்கள் தகுதி Posted: 13 Jun 2012 01:01 AM PDT உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2008-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்தது. இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஜூலை 27-ந்தேதி முதல் ஆகஸ்டு 12-ந்தேதி வரை நடக்கிறது. லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவில் இருந்து இதுவரை 13 விளையாட்டுகளில் இருந்து 76 பேர் தகுதி பெற்று உள்ளனர். இதில் 56 பேர் ஆண்கள், பெண்கள் 20 பேர் ஆவார்கள். 85 பேர் வரை ஒலிம்பிக் போட்டி தகுதி பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய விளையாட்டு மந்திரி அஜய் மக்கான் தெரிவித்தார். தடகளத்தில் இருந்து 13 பேரும், துப்பாக்கி சுடுதலில் இருந்து 11 பேரும், மல்யுத்தத்தில் இருந்து 5 பேரும், குத்துச்சண்டையில் இருந்து 8 பேரும் தகுதி பெற்று உள்ளனர். இந்திய ஆக்கி அணியும் (16 பேர்) தகுதி பெற்று இருந்தது. பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 56 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், 2 வெண்கலம் ஆக மொத்தம் 3 பதக்கம் பெற்றது. துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் தங்கம் வென்று பெருமை தேடி தந்தார். குத்துச்சண்டையில் விஜேந்தர் சிங்கும் (மிடில் வெயிட்) மல்யுத்தத்தில் சுசில் குமாரும் (66 கிலோ பிரிவு) வெண்கல பதக்கம் பெற்றனர். |
| புத்தகம் மூலம் புயல் கிளப்ப தயாராகும் சகாயம் ஐ.ஏ.எஸ். Posted: 13 Jun 2012 12:23 AM PDT முன்னாள் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் விரைவில் ஒரு புத்தகம் எழுதி வெளியிடப் போகின்றாராம். நேர்மையான, கண்டிப்பான அதிகாரி என பெயர் எடுத்த மதுரை கலெக்டர் சகாயம் திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருவண்ணாமலை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா மதுரை கலெக்டராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். இந்த மாறுதல் மதுரை மாவட்ட பொது மக்கள், அரசியல் கட்சி, சமூகநல அமைப்புகள் என பல்வேறு தரப்பினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதால், பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலெக்டர் சகாயத்திற்கு ஆதரவாக மதுரையில் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் ஐ.ஏ.எஸ்.அதிகாரியான சகாயம் விரைவில் ஒரு புத்தகம் எழுத உள்ளாராம். அதில் தான் மக்களுடன் இணைந்து பணியாற்றியது, மூத்த அதிகாரிகளின் ஒத்துழைப்பு, நாட்டின் பொருளாதார முன்னேற்றம், ஏழைகள் உடனே செய்ய வேண்டியது, கல்வியின் அவசியம் என பல்வேறு தலைப்புகளில் எழுத ஆசையாக உள்ளாராம். மேலும் அரசியல்வாதிகளின் பல்வேறு முகங்கள், ஐ.ஏ.எஸ். பணியில் தான் சந்தித்த சவால்கள் போன்றவற்றையும் எழுத உள்ளாராம். இதற்காக அரசிடம் அனுமதி பெற காத்துள்ளார் என்று கூறப்படுகிறது. பல உயர் அதிகாரிகள் ஓய்வு பெற்ற பின்பு தான் புத்தகம் எழுதி புயலை கிளப்புவார்கள். ஆனால் சகாயம் கொஞ்சம் வித்தியாசமானவர் என்பதால், பணியில் உள்ள போதே நாட்டில் உள்ள பிணிகள் பற்றி புட்டுபுட்டுவைக்கப் போகின்றாராம். பலரது உண்மை முகம் விரைவில் வெளிச்சத்திற்கு வர உள்ளது. |
| ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க மம்தா பானர்ஜி தயக்கம்: சோனியாவுடன் இன்று ஆலோசனை Posted: 13 Jun 2012 12:17 AM PDT புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற சனிக்கிழமை (16-ந்தேதி) தொடங்குகிறது. மனு செய்ய 30-ந்தேதி கடைசி நாளாகும். ஜனாதிபதி பதவிக்கு போட்டி ஏற்படும் பட்சத்தில் 19-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். 22-ந்தேதி ஓட்டுக்கள் எண்ணி முடிவு அறிவிக்கப்படும். தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டதால் ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக அறிவிக்க சோனியா முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியை ஜனாதிபதி பதவிக்கு தேர்வு செய்யலாம் என்று முதலில் சோனியா திட்டமிட்டார். ஆனால் அவருக்கு முலாயம்சிங் யாதவ், பல கட்சி தலைவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட செய்ய சோனியா தீர்மானித்தார். பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ், தி.மு.க., ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சிகளின் உறுதியான ஆதரவு உள்ளது. மேலும் காங்கிரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இடதுசாரிகள், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளும் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவாக உள்ளன. எனவே பிரணாப் முகர்ஜியே வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. பிரணாப் முகர்ஜியை எதிர்த்து களம் இறக்கும் அளவுக்கு பாரதீய ஜனதாவில் ஆளும் இல்லை. வாக்கு பலமும் இல்லை. எனவே கடைசி நேரத்தில் பிரணாப் முகர்ஜிக்கு பா.ஜ.க. தலைவர்கள் ஆதரவு தெரிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரசுக்கு அடுத்தப்படியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரணாப் முகர்ஜிக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தது. பிறகு அந்த கட்சி தொடர்ந்து மவுனம் சாதித்து வந்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் ஒதுக்கப்பட முடியாத அளவுக்கு உள்ளன. எனவே அந்த கட்சியையும் சமரசம் செய்ய, அந்த கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா அழைப்பு விடுத்தார். இதையடுத்து மம்தா பானர்ஜி நேற்று மாலை கொல்கத்தாவில் இருந்து டெல்லி சென்றார். நேற்றிரவு அவர் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவை சந்தித்து பேசினார். இன்று மாலை அவர் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்கிறார். இருவரும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் குறித்து விரிவான ஆலோசனை நடத்துவார்கள். பிரணாப் முகர்ஜியை வேட்பளராக ஏற்க மம்தாபானர்ஜி இன்னமும் தயக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. நிதி ஒதுக்கீடு பிரச்சினை, கடன் வட்டி தள்ளுபடி செய்யாதது மற்றும் கம்யூனிஸ்டுகளுடனான மோதல் காரணமாகவே பிரணாப் முகர்ஜி மீது மம்தா பானர்ஜி தொடர்ந்து அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி பதவிக்கு பிரணாப்முகர்ஜி, ஹமித் அன்சாரி தவிர முதுபெரும் கம்யூனிஸ்டு தலைவர் சோம்நாத் சட்டர்ஜி மற்றும் கவர்னர் சிவராஜ் பட்டீல் ஆகியோரது பெயர்களையும் சோனியா பரிசீலித்திருந்தார். அவர்களில் சோம்நாத் சட்டர்ஜிக்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சோம்நாத் சட்டர்ஜிக்கு மற்ற கட்சிகளின் ஒருமித்த ஆதரவு கிடைக்குமா? என்ற கேள்விக்குறி நிலவுகிறது. எனவே மம்தா பானர்ஜியை சோனியா சமரசம் செய்து பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவிக்க வைத்து விடுவார் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது. இன்று இரவுக்குள் பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக தேர்வு செய்ய காங்கிரஸ் கூட்டணியில் ஒருமித்த கருத்து முழுமையாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம் நிறுத்தியுள்ள சங்மா போட்டியிடுவது உறுதியாகி விட்டது. சங்மா தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார். எனவே தேர்தலில் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் பிரணாப் முகர்ஜியை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்பதில் சோனியா தீவிரமாக உள்ளார். இதற்காக அவர் தோழமை கட்சிகளின் தலைவர்களிடம் இருந்து உறுதிமொழி பெற்று வருகிறார். அதில் முழு திருப்தி கிடைத்த பிறகே சோனியா அதிகாரப்பூர்வமாக பிரணாப் முகர்ஜி பெயரை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு வருகிற 23-ந் தேதி நாடு திரும்புகிறார். அதன் பிறகு பிரணாப் முகர்ஜி பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது. |
| காந்தி பேரனுக்கு ஜனாதிபதி பதவி தர காங்கிரஸுக்கு விருப்பமில்லை! Posted: 13 Jun 2012 12:03 AM PDT குடியரசுத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியே இப்போதைக்கு சாலிடாக முன்னணியில் உள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் மேலும் சில பெயர்கள் உலா வர ஆரம்பித்துள்ளன. அவர்களில் முக்கியமானவர்களாக கரண்சிங், காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி, சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோர் உள்ளனர். இந்த நிமிடம் வரை பிரணாப் முகர்ஜியின் பெயரே காங்கிரஸ் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் வேறு சில பெயர்களையும் காங்கிரஸ் பரிசீலிப்பதாக ஒரு தகவல் கூறுகிறது. அவர்களில் முக்கியமானவர் கரண் சிங். இவர் மூத்த காங்கிரஸ் தலைவர் ஆவார். இவர் மீது தற்போது காங்கிரஸ் பார்வை தீவிரமாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் சிங்குக்கு இடதுசாரிகளும்,தேசியவாத காங்கிரஸும் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல காங்கிரஸ் மூத்த தலைவர் மோஷினா கித்வாய் பெயரும் வேட்பாளர் பெயர் பரிசீலனையில் இடம் பெற்றிருப்பதாக தெரிகிறது. அதேசமயம், துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியின் பெயரையும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பட்டியலில் காங்கிரஸ் சேர்த்துள்ளதாம். அன்சாரியை பேசாமல் குடியரசுத் தலைவராக்கி விடலாமே என்ற எண்ணத்தில் காங்கிரஸ் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அன்சாரியை முலாயம் சிங் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே,மமதா பானர்ஜியும் தன் பங்குக்கு ஒருவரை வேட்பாளராக பரிந்துரைத்துள்ளாராம்.அவர் கோபாலகிருஷ்ண காந்தி. இவர் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் ஆவார். ஆனால் காந்திக்கு காங்கிரஸ்,இடதுசாரிகளின் ஆதரவு கிடைக்காது என்கிறார்கள். இந்த காந்தி வேறு யாருமல்ல, மகாத்மா காந்தியின் பேரன்தான். ஆனால் அவருக்கே காங்கிரஸ் ஆதரவு கிடைக்கவி்ல்லையாம்... இந்தப் பட்டியல் போதாது என்று முன்னாள் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி பெயரையும் மமதா பரிந்துரைத்துள்ளாராம். இப்படி ஏகப்பட்ட புதுப் பெயர்கள் காங்கிரஸ் முன் குவிந்து கிடக்கிறது. சோனியாவும்,மமதாவும் இன்று சந்திக்கும்போது ஏதாவது ஒரு பெயர் இறுதி செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
| You are subscribed to email updates from விழியே பேசு... To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


















