Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மக்களின் குரல்

மக்களின் குரல்


19வயதுடைய இளம் பெண்ணை கொலை செய்து மரத்தில் தொங்கவிட்ட கணவன் தலைமறைவு!சித்தாண்டியில் சம்பவம்

Posted: 13 Jun 2012 11:49 AM PDT


மட்டக்களப்பு சித்தாண்டியில் 19வயதுடைய இளம் பெண்ணை அவரது கணவர் அடித்து கொலை செய்து விட்டு சடலத்தை வீட்டில் உள்ள முருங்கை மரத்தில் தொங்கவிட்ட கணவன் தலைமறைவாகி உள்ளார். இக்கொலைக்கு உடந்தையாக இருந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை இறந்த பெண்ணின் உறவினர்கள் வழங்கிய தகவலையடுத்து சித்தாண்டி, பழைய சந்தை வீதியை சேர்ந்த கணேசமூர்த்தி மலர்மதி (19வயது) என்ற இளம்பெண்ணின் சடலத்தை பொலிஸார் மீட்டனர்.
இந்த பெண்ணின் வீட்டு வளவில் இருந்த முருங்கை மரம் ஒன்றில் தூக்கில் இட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டது. இப்பெண்ணுக்கு ஒரு வயதில் கைக்குழந்தையொன்று உள்ளது.
இந்த பெண்ணின் கணவனே இக்கொலையை செய்திருக்கலாம் என்றும் அவர் தலைமறைவாகிவிட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாண சபையை கலைப்பதற்கு எதிராக வழக்கு

Posted: 13 Jun 2012 11:47 AM PDT


கிழக்கு மாகாண சபையை அதன் பதவிக்காலம் முடிவதற்கு முன் கலைப்பதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வாக்களார் ஒருவர் ஆணைகோரும் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
கே.கே.பி. ரங்கன அமரசிங்க என்பவரே சட்டத்தரணி மொஹான் பாலந்திராவுக்கு ஊடாக இம்மனுவை தாக்கல் செய்துள்ளார்.
கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரம, கிழக்கு மாகாண சபை அமைச்சர்களான எம்.எஸ்.சுபைர், ரி.நவரட்ணராஜா, எம்.எஸ்.உதுமாலெப்பை, விமலவீர திஸாநாயக்க ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
10.05.2013 ஆம் திகதி கலைக்கப்பட வேண்டிய கிழக்கு மாகாண சபையை முதலமைச்சரின் ஆலோசனைக்கு அமைய ஆளுநர் விரைவில் கலைக்கவுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
உரிய காலத்திற்குமுன் மாகாண சபையை கலைக்கக்கூடாதென கிழக்கு மாகாண சபையில் 23.04.2012 ஆம் திகதி தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டதையும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வழக்கின் முடிவு வரும்வரை மாகாண சபை ஆளுநர் கலைப்பதை தடை செய்வதற்கான இடைக்கால தடையுத்தரவொன்றையும் மனுதாரர் கோரியுள்ளார்.

கிழக்கு முதல்வர் தொடர்பில் பட்டதாரிகள் கங்கம் வெளியிட்ட செய்திக்கு மன்னிப்பு கோரினர்

Posted: 13 Jun 2012 11:40 AM PDT

கடந்த வாரம் கிழக்கு மாகாண முதலமைச்சர் தொட ர் பில் பட்டதாரிகள் சஙகம் வெயிட்ட அதாவது கிழக்கு மாகாண பட்டதாரிகள் ஒன்றியம் வெளிட்ட செய்தி தொடர்பில் தாம் அவ்வாறான ஓர் செய்தியை வெளியட வில்லை அதனை ஊடகங்ஙகள் தான்  தி ரிவுபடுத்தி இருக்கின்றன. இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் நாம் மன்னிப்பு கோருகின்றோம் என அவர்கள் விடுத்த மறுப்புச் செய்தியில் குறிப்பிடப்பட்டுளளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையானது அவரது மனதை புண்படுத்துவதாக இருந்தால் அது தொடர்பில் மன்னிப்புக்கோருவதாக தெரிவித்துள்ள கிழக்கு மாகாண பட்டதாரிகள் சங்கம் அந்த அறிக்கையை ஒருபோதும் முதலமைச்சரை தனிப்பட்ட முறையிலோ அல்லது அரசியல் ரீதியாகவோ தாக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அச்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 28.05.2012 அன்று தினகரன் பத்திரிகையில் 12 பக்கத்தில் வெளிவந்த கௌரவ முதலமைச்சரின் பட்டதாரிகள் தொடர்பான உரையின் அடிப்படையில் எமது சங்கத்தால் வெளியிடப்பட்ட கண்டன அறிக்கை தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்தன.
இதில் நாம் கௌரவ முதலமைச்சரை தனிப்பட்ட முறையிலோ அல்லது அரசியல் ரீதியாகவோ தாக்கி எமது கண்டனத்தை  தெரிவிக்கவில்லை மாறாக பட்டதாரிகள் தொடர்பாக கூறப்பட்ட செய்திகளுக்கமையவே கண்டனத்தை தெரிவித்திருந்தோம்.
இவ் செய்தியானது கௌரவ முதலமைச்சர் அவர்களின் தனிப்பட்ட விடயத்தை குறிப்பதாகவோ அல்லது மனதை புண்படுத்துவதாக அமைந்திருந்தால் கிழக்கு மாகாண பட்டதாரிகள் சங்கத்தின் சார்பாகவும் மட்டக்களப்பு பட்டதாரிகள் சங்கத்தின் சார்பாகவும் மன்னிப்புக்களை கேட்டுக்கொள்ளுகின்றோம். 


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™