மக்களின் குரல் |
- ஆசிய அபிவிருத்தி வங்கி திட்டப்பணிப்பாளர் திருமலை வைத்தியசாலைக்கு விஜயம்
- மியான்குள அபிவிருத்தி வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு
- பப்புவா நிவ்கினி நாட்டு அமைச்சர் மெக்கேரா மொராட்டா காத்தான்குடிக்கு விஜயம்
| ஆசிய அபிவிருத்தி வங்கி திட்டப்பணிப்பாளர் திருமலை வைத்தியசாலைக்கு விஜயம் Posted: 02 Jun 2012 11:09 AM PDT ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டப் பணிப்பாளர் கமல் தஹநாயக்கா, நிக்கோட் திட்டப்பணிப்பாளர் திருமதி ரஞ்சனி நடராஜப்பிள்ளை, பொறியியலாளர் நிரஞ்சன் ஆகியோர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிர்மாணப்பணிகளை நேற்று நேரில் பார்வையிட்டனர். பொது வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகளுக்கென ஆசிய அபிவிருத்தி வங்கி ரூபா 150 மில்லியனை வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது. |
| மியான்குள அபிவிருத்தி வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு Posted: 02 Jun 2012 10:58 AM PDT பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் 45.6மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம்; புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ள வாகரை பிரதேசத்திற்கு உட்பட்ட மியான் குளம் அபிவிருத்தி; வேலைத்திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு இன்று காலை காரைமுனைப்பிரதேசத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ சிவனேசத்துரை சந்திரகாந்தன், சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் , மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சர் அல்ஹாஜ் பசீர் சேகுதாவுத், கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.சுபைர், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை தலைவர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மாகாண சபை உறுப்பினர் ஏ.எஸ். ஜவாகிர் ஸாலிஉள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதன் போது தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை தலைவர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்ட சகல உறுப்பினர்களுக்கும் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டனர். |
| பப்புவா நிவ்கினி நாட்டு அமைச்சர் மெக்கேரா மொராட்டா காத்தான்குடிக்கு விஜயம் Posted: 02 Jun 2012 10:54 AM PDT பப்புவா நிவ்கினி நாட்டின் அரச கூட்டுத்தாபனங்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மெக்கேரா மொராட்டா நேற்று வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடிக்கு விஜயம் செய்தார். பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் அழைப்பின் பேரில் காத்தான்குடிக்கு விஜயம் செய்த இவர், ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற்ற கரையோர பாலர் பாடசாலைகளுக்கான உபகரணங்கள் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டார். இந்த வைபவத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்எம்.பரீட், பப்புவா நிவ்கினி நாட்டின் அமைச்சரின் பாரியார் திருமதி ரோஸ்லின் மொராட்டா உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். |
| You are subscribed to email updates from மக்களின் குரல் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |