Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





விழியே பேசு...

விழியே பேசு...


அரசியலில் திடீர் திருப்பம்! பரிதி இளம்வழுதி மீண்டும் தீவிர அரசியலுக்கு வருகிறார்

Posted: 10 May 2012 10:58 PM PDT

தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த பரிதி இளம்வழுதி கட்சியிலும் முக்கிய இடத்தில் இருந்து வந்தார். சட்டசபை தேர்தலுக்குப் பிறகு உள்கட்சி பிரச்சினை காரணமாக தி.மு.க. மேலிடத்தை விமர்சனம் செய்தார். தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் மீதும் குற்றச்சாட்டு கூறினார். இதனால் ஏற்பட்ட மோதலையடுத்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தவிர்த்தார். அவர் வகித்து வந்த தி.மு.க. துணைப் பொது செயலாளர் பதவியையும் கடந்த அக்டோபர் மாதம் ராஜினாமா செய்தார். 

இதையடுத்து அவர் தீவிர அரசியலில் இருந்து விலகினார். நீண்ட நாட்களாக அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்த பரிதி இளம்வழுதி மீண்டும் தி.மு.க.வுக்கு திரும்ப முடிவு செய்துள்ளார். சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொண்டார். அங்கு அவரை பரிதி இளம்வழுதி சந்தித்து பேசினார். 

அதன்பிறகு கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்த பரிதி இளம்வழுதி தனது மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி கேட்டுக் கொண்டார். இதுபோல் மு.க.ஸ்டாலினையும் சந்தித்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்த போது தனது நடவடிக்கைகளுக்கு வருத்தம் தெரிவித்தார். 

மீண்டும் தி.மு.க.வில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார். இந்த வாரம் நடைபெற உள்ள பரிதி இளம்வழுதி இல்ல திருமண நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதைத் தொடர்ந்து பரிதி இளம்வழுதி மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.







நித்தியானந்தா ஓங்கி மிதித்து என்னை ...: -மதுரை ஆதீனம்

Posted: 10 May 2012 10:54 PM PDT


நேற்று கூட ஆதீன மடத்தில் நான் லிப்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பழுதாகிவிட்டது. உடனே எனது கையில் இருந்த செல்போன் மூலம் நித்தியானந்தாவிற்கு தகவல் தெரிவித்தேன். உடனே அவர் ஓடி வந்து லிப்டின் கதவில் ஓங்கி மிதித்து என்னை காப்பாற்றி விட்டார். லிப்ட் சாவியை எதிர்பார்க்காமல் என் உயிர் மீது அக்கறை கொண்டு செயல்பட்டவர்தான் நித்தியானந்தா என்றார் ஆதீனம் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் ஆதீனம் பேசுகையில்,

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நித்தியானந்தாவிற்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. நியாயமே வெல்லும் என்ற கருத்திற்கு வலிமை ஏற்பட்டுள்ளது. மதுரை ஆதீனம் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சித்த தருமபுரி ஆதீன மடத்தின் மதுரை நிர்வாகி குருசாமி தேசிகர், இந்து மக்கள் கட்சி தலைவர் சோலைக்கண்ணன் ஆகியோர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தாக்கல் செய்யப்படும்.

இதற்கான நடவடிக்கைகளில் நித்தியானந்தா ஈடுபடுவார். அடுத்த ஆதீனத்தை நியமிக்க எனக்கு உரிமை உண்டு. அதுபற்றி காஞ்சி ஜெயேந்திரர் பேசக்கூடாது. காஞ்சி பீடத்திற்கு நான் பல தடவை உதவியிருக்கிறேன். அதுபோல திருவாடுதுறை ஆதீனத்திற்கும் பல உதவிகளை செய்திருக்கிறேன். அதனால் அவர்கள் எனக்கு எதிரான கருத்துகளை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்.

34 வயதில் ஆட்பலம், பண பலம், ஆற்றல், நிர்வாகத்திறன் இருப்பதால் தான் நித்தியானந்தாவை மதுரை ஆதீனமாக்கியுள்ளேன். நித்தியானந்தா போல் திறமை கொண்ட ஒருவரை எதிர்ப்பாளர்கள் காட்டினால் அவரை நான் ஆதீனமாக்குகிறேன்.

எனது செய்தியை பரபரப்பாக்கி என்னை யாரும் மிரட்ட வேண்டாம். நான் எதையும் பதுக்கவும் இல்லை. நான் நானாகவே இருக்கிறேன். நான் சிங்கம் போன்றவன். என்னை தேவையில்லாமல் சீண்ட வேண்டாம்.

நேற்று கூட ஆதீன மடத்தில் நான் லிப்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பழுதாகிவிட்டது. உடனே எனது கையில் இருந்த செல்போன் மூலம் நித்யானந்தாவிற்கு தகவல் தெரிவித்தேன். உடனே அவர் ஓடி வந்து லிப்டின் கதவில் ஓங்கி மிதித்து என்னை காப்பாற்றி விட்டார். லிப்ட் சாவியை எதிர்பார்க்காமல் என் உயிர் மீது அக்கறை கொண்டு செயல்பட்டவர்தான் நித்தியானந்தா என்றார் ஆதீனம்.


புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தேமுதிக போட்டியிடும்: விஜயகாந்த் அறிவிப்பு

Posted: 10 May 2012 10:49 PM PDT


புதுக்கோட்டை தொகுதியில் ஜூன் மாதம் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனுத்தாக்கல் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. அ.தி.மு.க. சார்பில் கார்த்திக் தொண்டைமான் போட்டியிடுகிறார். அவர் தற்போது கிராமம், கிராமமாக சென்று ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
 
தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் புதுக்கோட்டை இடைத் தேர்தலை புறக்கணித்துள்ளன. இந்த நிலையில் தே.மு. தி.க. தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அந்த கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர்.
 
இது தொடர்பாக விஜயகாந்த் கடந்த 3 நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தி வந்தார். அப்போது தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளரை களம் இறக்க முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை இன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
 
இது தொடர்பாக சட்ட சபைக்கு வந்தபோது விஜயகாந்த் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில்,

 புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடும். வேட்பாளர் பெயர் விவரம் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்றார்.
 
விஜயகாந்த் அறிவிப்பைத் தொடர்ந்து புதுக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க.- தே.மு.தி.க. கட்சி களுக்கிடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரிக்கப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அறிவித்துள்ளது.
 
தி.மு.க., காங்கிரஸ், ம.தி. மு.க., பா.ம.க. ஆகிய முக்கிய கட்சிகள் போட்டியிடாததால் தே.மு.தி.க. வேட்பாளர் பொது வேட்பாளர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.
 
தே.மு.தி.க. வேட்பாளருக்கு தி.மு.க., காங்கிரசாரின் ஆதரவு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க. களம் இறங்கியுள்ளதால் புதுக்கோட்டை இடைத்தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.


சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு அதிமுகவைத் தவிர அனைத்துக் கட்சிகளும் டெபாசிட்டை இழந்தன. இந்நிலையில் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் டெபாசிட்டைப் பெற்றாவது தங்களது திராணியை நிரூபித்துவிடுவது என்று தேமுதிக முடிவு செய்துள்ளதாகவே தெரிகிறது.



66 சதவீதம் பேரால் செல்போன் இல்லாமல் வாழ முடியாது

Posted: 10 May 2012 10:46 PM PDT


முன்பெல்லாம், வீட்டிலிருந்து ஒருவர் வெளியே புறப்படும் போது, கண்ணாடி, பணம், பேனா என எப்போதும் தேவைப்படக் கூடிய பொருட்களை எடுத்து செல்வார்கள். எதுவும் மறந்து விடக் கூடாது என்பதற்காக பல முறை யோசித்து பார்த்து விட்டு போவார்கள். ஆனால், இன்றைய உலகில் இந்த பட்டியலில் செல்போன் முதலிடம் பிடித்துள்ளது.
 
இங்கிலாந்தின் 'செக்யூர் என்வாய்' அமைப்பு, செல்போன் பயன்படுத்துவோர் குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வு முடிவின்படி, 'செல்போன் இல்லாமல் ஒரு வினாடி கூட இருக்க முடியாது. செல்போன் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று 66 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர்.
 
நோமொபோபியா (கையில் செல்போன் இல்லையோ என்ற பயம்), செல்போன் தொலைந்து விடுமோ, யாராவது அதில் உள்ள தகவல்கள், படங்களை பார்த்து விடுவார்களோ என்ற கவலையும் 66 சதவீதம் பேருக்கு எந்நேரமும் உள்ளது. இந்த பயத்துக்கு 18 முதல் 24 வயதுடைய இளைஞர்கள் 77 சதவீதம் பேரும், 25 முதல் 34 வயதுடையோர் 68 சதவீதம் பேரும் ஆளாகியுள்ளனர்.
 
மேலும், 75 சதவீதம் பேர் பாத்ரூமிலும் செல்போன் பயன்படுத்துகின்றனர். 49 சதவீதம் பேர் தங்கள் வாழ்க்கைத்துணை கூட தனது செல்போனை பார்க்கக் கூடாது என நினைக்கின்றனர். 58 சதவீதம் பேர் அலுவலகத்திற்கு தனியாகவும், சொந்த பயனுக்கு தனியாகவும் ஒரு செல்போன் வைத்து கொள்கின்றனர். செல்போன் பத்திரமாக இருக்கிறதா என்ற சந்தேகம் ஒருவருக்கு தினமும் 34 முறை வருவதும் ஆய்வில் தெரியவந்தது.



நான் சிங்கம் (அசிங்கம்) என்னை சீண்ட வேண்டாம்: மதுரை ஆதீனம் எச்சரிக்கை

Posted: 10 May 2012 10:11 PM PDT

மதுரை ஆதீனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மதுரை ஐகோர்ட்டு கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் மதுரை ஆதீனம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- 

மதுரை ஐகோர்ட்டு கிளையில் நித்யானந்தாவிற்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. நியாயமே வெல்லும் என்ற கருத்திற்கு வலிமை ஏற்பட்டுள்ளது. மதுரை ஆதீனம் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சித்த தருமபுரி ஆதீன மடத்தின் மதுரை நிர்வாகி குருசாமி தேசிகர், இந்து மக்கள் கட்சி தலைவர் சோலைக்கண்ணன் ஆகியோர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தாக்கல் செய்யப்படும். 

இதற்கான நடவடிக்கைகளில் நித்யானந்தா ஈடுபடுவார். அடுத்த ஆதீனத்தை நியமிக்க எனக்கு உரிமை உண்டு. அதுபற்றி காஞ்சி ஜெயேந்திரர் பேசக்கூடாது. காஞ்சி பீடத்திற்கு நான் பல தடவை உதவியிருக்கிறேன். அதுபோல திருவாடுதுறை ஆதீனத்திற்கும் பல உதவிகளை செய்திருக்கிறேன். ஆனால் அவர்கள் எனக்கு எதிரான கருத்துகளை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். 

34 வயதில் ஆட்பலம், பண பலம், ஆற்றல், நிர்வாகத்திறன் இருப்பதால் தான் நித்யானந்தாவை மதுரை ஆதீனமாக்கிறேன். நித்யானந்தா போல் திறமை கொண்ட ஒருவரை எதிர்ப்பாளர்கள் காட்டினால் அவரை நான் ஆதீனமாக்குகிறேன். எனது செய்தியை பரபரப்பாக்கி என்னை யாரும் மிரட்ட வேண்டாம். நான் எதையும் பதுக்கவும் இல்லை. நான் நானாகவே இருக்கிறேன். நான் சிங்கம் போன்றவன். 

என்னை தேவையில்லாமல் சீண்ட வேண்டாம். நேற்று கூட ஆதீன மடத்தில் நான் லிப்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பழுதாகிவிட்டது. உடனே எனது கையில் இருந்த செல்போன் மூலம் நித்யானந்தாவிற்கு தகவல் தெரிவித்தேன். உடனே அவர் ஓடி வந்து லிப்டின் கதவில் ஓங்கி மிதித்து என்னை காப்பாற்றி விட்டார். லிப்ட் சாவியை எதிர்பார்க்காமல் என் உயிர் மீது அக்கறை கொண்டு செயல்பட்டவர்தான் நித்யானந்தா. 

இவ்வாறு அவர் கூறினார்.





ஜெயேந்திரர் மீது 'புனிதவதி' ரஞ்சிதா அவதூறு வழக்கு!

Posted: 10 May 2012 10:05 PM PDT


நித்யானந்தா எப்போதும் ரஞ்சிதா என்ற பெண்ணோடு சுற்றிக் கொண்டிருக்கிறார். அவரை மதுரை ஆதீனமாக நியமித்தது தவறு என்று ஸ்டேட்மென்ட் விட்ட காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மீது நடிகை ரஞ்சிதா அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார்.

நித்யானந்தாவை மதுரை ஆதீனமாக அறிவித்ததிலிருந்து ஆன்மீக உலகில் பெரும் புயல் அடித்து வருகிறது.

நித்யானந்தா நியமனத்தை பெரும்பான்மையான ஆதீனங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அதேநேரம், நித்யானந்தா நியமனத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடியாகிவிட்டன.

இந்த நிலையில், நித்யானந்தா நியமனம் குறித்து நேற்று கருத்து தெரிவித்த காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர், "எப்போதும் ரஞ்சிதா என்ற பெண்ணுடன் சுற்றிக் கொண்டிருக்கும் நித்யானந்தாவை மதுரை ஆதீனமாக அறிவித்தது தவறு. இதனை ஏற்பதற்கில்லை," என்று கண்டித்திருந்தார்.

உடனே இதற்கு ரியாக்ட் செய்த நித்யானந்தா, ரஞ்சிதா என்னுடன் இல்லை. 10 நாள்களுக்குள் ஜெயேந்திரர் தன் பேச்சை வாபஸ் பெற வேண்டும் என கெடு விதித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, ஜெயேந்திரர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகை ரஞ்சிதா.

இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்துக்கு தன் வழக்கறிஞர்களுடன் வந்த ரஞ்சிதா, காஞ்சி ஜெயேந்திரர் தன் மீது அவதூறு கிளப்பியதாக புகார் தெரிவித்து அவர் மீது அவதூறு வழக்கும் பதிவு செய்தார்.



விஜயின் எதிர்காலத்தை நிர்ணயிக்க வரும் 3 புதிய படங்கள்...!

Posted: 10 May 2012 09:55 PM PDT


விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'துப்பாக்கி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முதல் முறையாக காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கிறார். '7ஆம் அறிவு' படத்திற்குப் பிறகு முருகதாஸ் இயக்கும் படம் இது என்பதால் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படம் முடிந்ததும் கவுதம் மேனன் இயக்கும் 'யோகன் அத்தியாயம் ஒன்று' படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் முடிவடைந்த பிறகு 'மதராசபட்டினம்' விஜய் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்துக்கு 'தலைவன்' என்று பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர்.

யோகன் அத்தியாயம் ஒன்று படம் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் படமாக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



தனி ஈழம் கேட்கக் கூடாது-மதுரையில் சுஷ்மா சுவராஜ் கண்டிப்பு!

Posted: 10 May 2012 09:46 PM PDT


தமிழக அரசியல் கட்சியினரிடம் இப்போது ஒரு கேள்வி கேட்கிறேன். அங்குள்ள தமிழர்கள், தமிழ் கட்சியினர் அனைவரும் உரிமைகளுடன் கூடிய ஒன்றுபட்ட இலங்கையே தேவை என்று கூறும்போது நீங்கள் மட்டும் ஏன் தனி ஈழம் தேவை என்கிறீர்கள்? அதுதான் புரியவில்லை. தனி ஈழ கோரிக்கையை பாஜக ஆதரிக்கவில்லை என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

மதுரையில் நேற்று தொடங்கிய பாஜக மாநில மாநாட்டில் கலந்து கொண்டு சுஷ்மா சுவராஜ் பேசினார். அப்போது அவர் பேசுகையில்,

இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய எனது தலைமையில் அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள ஒரு குழுவை அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

இலங்கை சென்ற எங்கள் பயணம் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்ப்பதற்காக அல்ல. அது முழுக்க, முழுக்க தமிழர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ளத்தான்.

பல்வேறு பகுதிகளுக்கு சென்று இலங்கை தமிழர்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித்தலைவர்களை சந்தித்தோம். பின்னர் இலங்கை அதிபரிடம் இது தமிழர்களின் பிரச்சினை அல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களின் பிரச்சினை என்று கூறினோம்.

அங்குள்ள தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

இங்கிருக்கும் தமிழக அரசியல் கட்சியினரிடம் இப்போது ஒரு கேள்வி கேட்கவேண்டியது உள்ளது. அங்குள்ள தமிழர்கள், தமிழ் கட்சியினர் அனைவரும் உரிமைகளுடன் கூடிய ஒன்றுபட்ட இலங்கை தேவை என்று கூறும்போது நீங்கள் மட்டும் ஏன் தனி ஈழம் தேவை என்கிறீர்கள்? அதுதான் புரியவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனை நான் சந்தித்தபோது, ஐக்கிய இலங்கையில் இருக்கத்தான் தமிழர்கள் விரும்புகிறார்கள் என்பதைத் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், நேர்மையான அரசியல் தீர்வுதான் எங்களுக்குத் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

அனைத்துத் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கு இணையான சம உரிமைகள், கெளரவமான வாழ்க்கை வாழ்வது உறுதி செய்யப்பட வேண்டும். அதிகாரப்பகிர்வு அமலாக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையாக இருந்தது.

எனவே தமிழர்கள் மத்தியில் நல்ல ஆதரவும், மதிப்பும் பெற்றுள்ள ஒரு தலைவர் அப்படிக் கூறுகையில், இங்குள்ள கட்சிகள் மட்டும் ஏன் தமிழ் ஈழத்தை வலியுறுத்த வேண்டும்?.

இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை எப்படி மதிக்கப்படுகிறதோ அதேபோலத்தான் நாம் இலங்கையின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மையை மதிக்க வேண்டும்.

இலங்கைக்கு சென்ற எம்.பிக்கள் குழுவில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. இது எம்.பிக்கள் மேற்கொண்ட சுற்றுலாப் பயணம் அல்ல. நாங்கள் அங்கு சந்தித்த அத்தனை பேரும் தங்களது பிரச்சினைகளை எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் எங்களிடம் தெரிவித்தனர்.

நான் ராஜபக்சேவை சந்தித்தபோது இலங்கைத் தமிழர்கள் குறித்து தமிழ்நாடு மட்டும் கவலைப்படவில்லை, மாறாக ஒட்டுமொத்த இந்திய தேசமும் கவலையுடன் உள்ளதாக உறுதிபடத் தெரிவித்தேன்.

இலங்கை தமிழர்களுக்கு நான் ஒரு இந்திய சகோதரி என்ற முறையில் அரசியல் உரிமைகளை அவர்கள் பெறும் வகையில் விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என் கருத்தினை உறுதியாக பாராளுமன்றத்தில் தெரிவித்தேன்.

இலங்கை அதிபர் ராஜபக்சே எனக்குக் கொடுத்த பரிசுப் பொருளை பெரிய விவகாரமாக்கி ஒரு பத்திரிக்கை என்னை சிறுமைப்படுத்தி விட்டது. அந்தப் பரிசு இந்திய ஜனநாயகத்திற்கு வழங்கப்பட்ட சிறிய கெளரவம். அதை நான் சுஷ்மா சுவாராஜாக வாங்கவில்லை. மாறாக இந்தியாவின் பிரதிநிதியாகத்தான் வாங்கினேன். மேலும் அதனை நாடாளுமன்ற கருவூலத்திலும் சேர்த்து விட்டேன். அதை நான் எடுத்துக் கொள்ளவில்லை.

தேசிய அளவில் இலங்கை தமிழர்களுக்காக ஓங்கி சுஷ்மா குரல் கொடுத்தது 'எப்படியும் இலங்கை செல்வோம் அப்போது ராஜபக்சே கொடுக்கும் பரிசுப்பொருட்களின் மதிப்பை கூட்டுவதர்காகத்தானா'...?




திருடப்பட்ட ரஜினி படத்தின் பாட்டு! பாலிவுட் சர்ச்சை!

Posted: 10 May 2012 10:19 AM PDT


ரஜினிகாந்த் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய படம் 'தளபதி'. மெகா ஹிட்டான இந்த படத்தின் பாடல்களும் மெகா ஹிட் தான். இந்த படத்தில் வரும் 'ராக்கம்மா கையத் தட்டு' என்ற பாடல் இன்றும் இளைஞர்களின் மொபைலில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தளபதி படத்தின் பாடல் உரிமையை பெங்களூரைச் சேர்ந்த ஆடியோ நிறுவனம் ஒன்று 1991-களிலேயே ரூ75 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. இந்தியில் சாயிஃப் அலிகான் தயாரித்து நடிக்கும் படம் 'ஏஜண்ட் வினோத்'. இந்த படத்தின் குறிப்பிட்ட பகுதியில் தளபதி படத்தில் வரும் ராக்கம்மா கையத்தட்டு பாடலை பலமுறை உபயோகப்படுத்தியிருக்கிறார்களாம்.

அந்த பாடலின் உரிமையை வைத்துள்ள எங்களிடம் முறையான அனுமதி பெறாமல் பாடலை உபயோகப்படுத்தியதற்காக ஏஜண்ட் வினோத் படக்குழுவினர் மீது சட்ட ரீதியாக வழக்குத் தொடரப் போவதாக கூறியுள்ளனர். இதற்காக தங்களது வக்கீலுடன் ஆலோசித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

சினிமாவில் இது போன்ற பிரச்சனை வருவது புதியது இல்லை என்றாலும் அந்த பாடல் ரஜினி நடித்த படத்திலிருந்து எடுக்கப்பட்ட பாடல் என்பதால் ரசிகர்களிடையே இந்த பிரச்சனை பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.



நான்காவது முறையாக 'டாக்டரான' இசைப்புயல்!

Posted: 10 May 2012 07:33 AM PDT


தேசிய விருது வாங்குவதில் மட்டுமல்ல, டாக்டர் பட்டம் வாங்குவதிலும் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் சாதனைப் படைத்துள்ளார்.

அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் உள்ள மியாமி பல்கலைக் கழகம் அவருக்கு இந்த முறை டாக்டர் பட்டம் வழங்கு கவுரவித்துள்ளது. இது அவர் பெறும் நான்காவது டாக்டர் பட்டமாகும்.

இந்த விழாவில் நேரில் பங்கேற்ற ஏ ஆர் ரஹ்மான், "25 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க அதிபர் என்னை வெள்ளை மாளிகைக்கு அழைப்பார், கிறிஸ்துமஸுக்கு அவரிடமிருந்து வாழ்த்து அட்டை வரும் என்றெல்லாம் நான் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை.

அமெரிக்காவில் நான் பெறும் முதல் டாக்டர் பட்டம் இதுதான். மியாமி பல்கலைக்கழகத்துடன் நானும் என் இசையும் கடந்த 10 ஆண்டுகளாக மிகவும் நெருக்கமாகியுள்ளோம். மியாமி மாணவர்கள் எனது கேஎம் மியூசிக் கன்சர்வேடரியில் இணைந்து எனக்கு உதவி வருகிறார்கள். அவர்களுக்கு நன்றி," என்றார்.

தன்னை திரையுலகுக்கு முதல் முதலில் அறிமுகப்படுத்திய மணிரத்னத்துக்கு இந்த மேடையில் நன்றி சொல்லவும் ரஹ்மான் தவறவில்லை.



ஐபிஎல் போட்டி: வார்னர் அதிரடியால் டெல்லி அணி அபார வெற்றி

Posted: 10 May 2012 07:28 AM PDT


ஐபிஎல் போட்டித் தொடரின் 55-வது லீக் ஆட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் குமார் சங்ககாரா தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், ஷேவாக் தலைமையிலான டெல்லி டேர் டெவில்ஸ் அணியும் மோதின. 
 
டெக்கான் அணி தான் விளையாடிய 12 ஆட்டத்தில் 2 வெற்றி, 9 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. டெல்லி அணி இதுவரை 11 ஆட்டத்தில் விளையாடி 8 வெற்றிகள், 3 தோல்விகள் என்ற நிலையில் புள்ளிப் பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளது.
 
கடந்த ஆட்டத்தில் டெக்கான் அணியில் விளையாடிய ரஸ்டி தெரோன் நீக்கப்பட்டு ஜே.பி.டுமினி சேர்க்கப்பட்டுள்ளார். டெல்லி அணியில் கடந்த போட்டியில் விளையாடிய உமேஷ் யாதவ், ராஸ் டெய்லர் ஆகியோர் நீக்கப்பட்டு ஆந்த்ரே ரஸ்ஸல், வேணுகோபால் ராவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
டாஸ் வென்ற டெக்கான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி டெக்கான்  அணியின் துவக்க வீரர்களாக ஷீகர் தவானும் டேனியல் ஹாரிஸும் களமிறங்கினர்.
 
டேனியல் ஹாரிஸ் 19 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். இவரையடுத்து ஷீகர் தவானுடன் குமார் சங்ககாரா ஜோடி சேர்ந்தார். இவர் 4 ரன்கள் எடுத்த திருப்தியில் பெவிலியன் திரும்பினார். இவரையடுத்து தவானுடன் கேமரோன் ஒயிட் ஜோடி சேர்ந்தார்.
 
இந்த ஜோடி நிதானமாக ஆட்டத்தை துவக்கி அதிரடிக்கு மாறியது. இருவரின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணியின் ஸ்கோர் உயரத் தொடங்கியது.
அதிரடியாக ஆடிய ஷீகர் தவான் 37 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் நின்ற ஒயிட்டும் அரை சதம் அடித்து அசத்தினார்.
 
சிறப்பாக ஆடிய ஷீகர் தவான் 49 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் உள்பட 84 ரன்கள் குவித்து, ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து கேமரோன் ஒயிட்டுடன் ஜே.பி.டுமினி ஜோடி சேர்ந்தார். அதிரடி ஆட்டம் ஆடிய ஒயிட் 40 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் உள்பட 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
 
இவரையடுத்து டுமினியுடன் பார்த்திவ் படேல் ஜோடி சேர்ந்தார்.
 
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் டெக்கான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்துள்ளது.
 
டுமினி 13  ரன்களும் பார்த்திவ் படேல் ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 
இதனையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு டெல்லி அணி களமிறங்கியது.
 
அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக்கும் டேவிட் வார்னரும் களமிறங்கினர். முதல் பந்தில் பவுண்டரி அடித்த ஷேவாக், அடுத்த பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
 
இவரையடுத்து வார்னருடன் நமன் ஓஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் டெக்கான் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து அணியை வெற்றி பெற வைத்தனர்.
 
16.4 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 193 ரன்கள் எடுத்த டெல்லி அணி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெக்கானை வீழ்த்தியது.
 
ஆரம்பம் முதலே வாணவேடிக்கை காட்டிய டேவிட் வார்னர் 54 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் உள்பட 109 ரன்கள் எடுத்தும், நமன் ஓஜா 46 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 64 ரன்கள் எடுத்தும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 
சிறப்பாக ஆடி சதமடித்த டேவிட் வார்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.



இனி அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க மாட்டேன் - விஜய் மீண்டும் உறுதி

Posted: 10 May 2012 07:16 AM PDT


பசுமைத் தாயகம் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து இனி புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன், என மீண்டும் உறுதி கூறியுள்ளார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய் தனது அடுத்த படமான துப்பாக்கிக்காக சுருட்டுப் பிடிப்பது போல போஸ் கொடுத்தாலும் கொடுத்தார், அதுவே அந்தப் படத்துக்கு பெரிய பப்ளிசிட்டியாகிவிட்டது.

இந்த விளம்பரத்தைக் கண்டித்து பாமகவின் பசுமைத் தாயகம் களத்தில் இறங்க, துப்பாக்கியில் புகைப் பிடிக்கும் காட்சிகளே இருக்காது என்று அறிவித்துவிட்டார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.

அப்படியும் பாமக விடவில்லை. 2007-ம் ஆண்டு புகைப்பிடிக்க மாட்டேன் என்று வாக்குறுதி அளித்த விஜய், அதை மீறும் வகையில் நடந்து கொள்ளலாமா? என்று கேள்வி எழுப்பி அறிக்கைவிட்டது.

இப்போது, அதற்கும் பலன் கிடைத்துவிட்டது.

"இனி எந்தப் படத்திலும் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் நான் தோன்ற மாட்டேன். இந்த உறுதியைக் காப்பாற்றுவேன்," என கூறியுள்ளார் விஜய்.

அப்படியே பஞ்ச் டயலாக்குக்கும் ஒரு சத்தியம் வாங்கிட்டா தேவலை!!



நவீன ஒலிம்பிக் போட்டி: ஒலிம்பியாவில் ஜோதி ஏற்றப்பட்டது

Posted: 10 May 2012 07:07 AM PDT

ஒலிம்பிக் போட்டிகளின் பிறப்பிடமாக கருதப்படும் கிரேக்க நாட்டில் உள்ள ஒலிம்பியா நகரத்தில் இன்று ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது. 2600 ஆண்டுகள் பழமையான அப்பல்லோ கடவுளின் ஆலயத்தில் நடிகர்கள் பழங்கால கிரேக்கர்களைப் போல உடையணிந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர். 

அவர்கள் குவி லென்ஸ் கண்ணாடி மூலம் ஜோதியை ஏற்றினர். நவீன ஒலிம்பிக் போட்டி 1896-ம் ஆண்டு முதல் தொடங்கியது. இந்த ஆண்டு லண்டனில் நடைபெற இருக்கும் இந்த நவீன ஒலிம்பிக் போட்டி தொடங்குவதை உணர்த்தும் விதமாக ஒலிம்பியாவில் இந்த ஜோதி ஏற்றப்பட்டுள்ளது. 

இந்த ஜோதி பல நாடுகள் வழியாக 78 நாட்களில் லண்டன் சென்றடையும். இந்த நிகழ்ச்சியில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ஜேக்ஸ் ரோஜ், லண்டன் ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் செபாஸ்டின் கோ ஆகியோர் கலந்து கொண்டனர். ஜுலை மாதம் 27-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 12-ந் தேதி வரை, மொத்தம் 15 நாட்கள் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா உள்பட 150 நாடுகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.







விஸ்வரூபம் ஆடியோ?

Posted: 10 May 2012 06:58 AM PDT


கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்தின் சிறப்பு ஒலி மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

இவற்றில் பெரும்பகுதியை அமெரிக்காவில் வைத்து முடித்துவிட்டாராம் கமல். எப்போதும்போல இந்த முறையும் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார் விஎப்எக்ஸ் மது.

படத்தின் முதல் ஸ்டில் வெளியானதிலிருந்து, விஸ்வரூபம் குறித்த கமல் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு எக்கச்சக்கமாகிவிட்டது.

அதுபுரிந்து, பெரிய விலைக்கு வியாபாரம் பேசி வருகிறாராம் கமல்ஹாஸன்.

இந்தப் படத்தை வாங்கி ரிலீஸ் செய்யப் போகிறது ஜெயா டிவி என முதலில் செய்திகள் வந்தன. இப்போது அதில் குழப்பம். ஜெயா டிவி இல்லை... சன் டிவிதான் வாங்கப் போகிறது என யூக செய்திகள் வெளியாகிவருகின்றன.

விஸவரூபம் படத்துக்கு சங்கர் எசான் லாய் இசையமைத்துள்ளார்கள். ஏற்கெனவே ஆளவந்தானுக்கு இவர்கள்தான் இசை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடல்களை ஜூனில் வெளியிட கமல் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜூலை இறுதிக்குள் படத்தை வெளியிடப் போகிறார்களாம்!



ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பற்றாக்குறை 30 சதவீதம்: மத்திய அரசு

Posted: 10 May 2012 06:53 AM PDT

இந்தியாவில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ராஜ்ய சபாவில் கேள்வி நேரத்தின்போது அவர் பேசியதாவது,

இந்தியாவில் இதுவரை 6,154 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்வாகி உள்ளனர். ஆனால் 4,377 அதிகாரிகள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். பணிபுரியும் அதிகாரிகளில் 3,392 பேர் நேரடியாக தேர்வு மூலம் நியமிக்கப்பட்டவர்கள். மீதமுள்ளவர்கள் பதவி உயர்வு அளிக்கப்பட்டவர்கள். 

இந்தியாவில் மொத்தம் 1,777 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் உத்தர பிரதேசத்தில் 216 பணியிடங்களும், பீகாரில் 128 பணியிடங்களும், மத்திய பிரதேசத்தில் 118 பணியிடங்களும், ராஜஸ்தானில் 112 பணியிடங்களும், ஜார்க்கண்டில் 100 பணியிடங்களும் காலியாக உள்ளன. 

மத்திய அரசால் நடத்தப்படும் தேர்வு முறையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி நியமனம் செய்யப்பட்டாலும் மத்திய அரசின் பிரதிநிதிகளாக மாநில அரசுகளின் பணிமுறைக் குழுவையே சேர்ந்தவர்கள். இந்த பற்றாக்குறையை சரிசெய்ய பஸ்வான் கமிட்டி 13 பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்துள்ளது. இந்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. 

இந்த பரிந்துரையின்படி ஒவ்வொரு 5 ஆண்டுகளும் ஐ.ஏ.எஸ். பணிமுறைக்குழு மறு ஆய்வு செய்யப்படும். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு செய்யப்பட வேண்டியவர்களின் பெயர்களை மாநில அரசுகளும் பரிந்துரை செய்யலாம். 

மாநில அரசுகள் ஒத்துழைத்தால் இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பற்றாக்குறையை 15 சதவீதமாக குறைக்கலாம். மேலும் ஒவ்வொரு ஆண்டும் 180 பேரை பணி நியமனம் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என கூறினார்.





தண்ணீரில் பலே டெக்னிக்கைப் பிடித்த பவர் ஸ்டார்!!

Posted: 10 May 2012 06:43 AM PDT



சாம் ஆண்டர்சனுக்குப் பின் சினிமாவையும் இணையத்தையும் கலக்கிக் கொண்டிருக்கும் பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன், அடுத்து சீஸனுக்கேற்ற சேவை ஒன்றிலும் குதித்துள்ளார்.

அது, 1000 ரூபாய் தண்ணீர்ப் பந்தல் திறந்து லட்ச ரூபாய்க்கு பப்ளிசிட்டி பார்ப்பது!

இன்று காலை வெள்ளையும் சொள்ளையுமாக கூலர் அணிந்து தன் பாப்புலர் பல் வரிசை தெரிய சிரித்துக் கொண்டே வந்த பவர் ஸ்டார், கோயம்பேடு அருகே ஒரு சின்டெக்ஸ் டேங்க் குழாயைத் திறந்து வைப்பது போல விதவிதமாக போஸ் கொடுத்தார்.

அந்த டேங்கில் பெரிதாக பவர் ஸ்டார் என்று ஸ்டிக்கர் அடிக்கப்பட்டிருந்தது. தன்னைப் பார்க்க வந்தவர்களுக்கு ஒரு பெரிய கூஜா நிறைய ஜூஸ் வரவழைத்துக் கொடுத்தார் பவர் ஸ்டார்.

இந்த தண்ணீர் தொட்டி திறப்பு விழாவுக்கு பவர் ஸ்டார் அடுத்து நடிக்கும் மன்னவன் படத்தின் இயக்குநர் மற்றும் படக்குழுவினர் வந்திருந்து, ''பலம்' காட்டினர்.



இந்தியாவுக்கு வர முடியாமல் சீனாவில் தவிக்கும் கேரள எம்.பி.பி.எஸ். மாணவி

Posted: 10 May 2012 06:27 AM PDT


கேரள மாநிலம் அம்பல புழை மாவட்டம் பல்சிடாவை சேர்ந்தவர் சந்திரன். மீன்பிடி தொழிலாளி. இவருடைய மனைவி மகிளாமணி. இவர்களுடைய மகள் ரேஷ்மா (வயது 21). இவர் கடந்த 2010-ம் ஆண்டு அம்பல புழையில் உள்ள ஒரு வங்கியில் கடனுதவி பெற்று சீனாவுக்கு மருத்துவ படிப்பு படிக்க சென்றார்.
 
அங்குள்ள சிட்டிவின் மருத்துவ பல்கலைக் கழகத்தில் தற்போது 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். இந்த நிலையில் விடுதி கட்டணம், கல்லூரி கட்டணத்தை செலுத்தி வந்த ரேஷ்மாவின் தற்போதைய நிலை பரிதாபத்துக்குரியதாக மாறிவிட்டது. இதற்கு காரணம் ரேஷ்மாவின் தந்தை சந்திரன் கடந்த ஆண்டு இறந்துவிட்டார். இதனால் தாய் மகிளாமணி தனது நகைகளை விற்றும் பலரிடம் கடன் வாங்கியும் ரேஷ்மாவின் படிப்பு தடைபடாமல் தொடர்ந்திட பணம் அனுப்பி வைத்தார்.
 
இப்போது 2-ம் வருடம் படிக்கும் ரேஷ்மா இந்தியா வருவதற்கு தயாரான நிலையில் அவரிடம் செலவுக்கு கூட பணம் இல்லாத காரணத்தால் சீனாவிலேயே தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவருடைய தாய் மகிளாமணி மீண்டும் மகளுக்காக தெரிந்தவர்களிடம் கடன் கேட்க சென்றார். ஆனால் பலரும் கொடுத்த கடனை திருப்பி கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதனால் மகள் ரேஷ்மாவை கேரளாவுக்கு அழைத்து வருவதில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 
இதனால் ஏற்பட்ட ஏக்கம் காரணமாக தற்போது மகிளாமணி உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நாளை கேரள முதல்- மந்திரி உம்மன் சாண்டியை சந்தித்து ரேஷ்மாவின் தாய் மகிளா மணி மனு கொடுக்க முடிவு செய்து இருந்தார். ஆனால் அதற்கும் உறவினர்கள் உதவி செய்யாததால் அம்பல புழையில் இருந்து திருவனந்தபுரம் வர முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டு உள்ளது. 



ஸ்டாலினை தலைவராக ஏற்க யார் மறுப்பார்?!: துரைமுருகன்

Posted: 10 May 2012 03:45 AM PDT


திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினை கட்சித் தலைவராக ஏற்க யாரும் மறுப்பு தெரிவிக்கமாட்டார்கள் என்று அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு 'சூரியன் பெற்ற சுழல்பூமி' என்ற தலைப்பில் மாநில அளவிலான கவிதைப் போட்டியை திமுக இளைஞரணியினர் நடத்தினர். இதில் 1000க்கும் அதிகமானோர் கவிதைகள் எழுதியதால் அதில் சிறந்த 60 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து புத்தகம் தயாரிக்கப்பட்டது.

அந்த கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னை அன்பகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட திமுக துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் நூலை வெளியிட்டு பேசியதாவது,

தமிழர்கள் வரலாற்று செய்திகளை எல்லாம் மறந்துவி்ட்டனர். அதனால் தான் நாம் யார், நம்மை சுற்றி யார் இருக்கிறார்கள், என்ன நடக்கிறது என்று கூட தெரிவதில்லை. மேலும் நண்பனையும், எதிரியையும் கூட கண்டறிய முடியாமல் உள்ளது.

எனவே வரலாற்று நிகழ்வுகளை குறைத்து வைக்கும் பழக்கம் வேண்டும். அண்ணா காலத்து அரசியல் சூழல் வேறு, கலைஞர் கண்ட களக்காட்சி வேறு. நமது தளபதி இருக்கும் அரசியல் களம் அவற்றில் இருந்து மாறுபட்டதாகும். எந்த ஆயுதத்தால் எதிரியை வீழ்த்தலாம் என்பதை தெரிந்தவர் தளபதி.

கடந்த 1967ம் ஆண்டு நான் கலைஞர் வீட்டுக்கு சென்றபோது தளபதி பத்து வயது பாலகன். தற்போது அவர் தோளுக்கு மேல் வளர்ந்த தோழன், இளைஞர்களின் எழுச்சி நாயகன், தொண்டர்களின் தளபதி. எதிர்காலத்தில் அவர் தமிழகத்தை வழிநடத்தினால் அவரை தலைவராக ஏற்பதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது. அரசியல்வாதிக்கு தேவையான பணிவு தளபதியிடம் உள்ளது. அவரது வரலாற்றில் இந்த கவிதை நூல் ஒரு அத்தியாயமாக இருக்கும் என்றார்.

கவிதைப் போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த ஜீவாவுக்கு ரூ.25,000, இரண்டாவது இடத்தைப் பிடித்த கவிஞர் ஆதித்யாவுக்கு ரூ.15,000ம், மூன்றாவது இடத்தைப் பிடித்த வேங்கைகவிக்கு ரூ.10,000 வழங்கப்பட்டது. மேலும் சிறப்பாக கவிதை எழுதிய 60 பேர் கௌரவிக்கப்பட்டனர்.



ஜூன் மாதத்தின் பெயர் இனி 'கலைஞர் மாதமாம்'..

Posted: 10 May 2012 03:37 AM PDT


திமுக தலைவர் கருணாநிதி பிறந்த மாதமான ஜூன் மாதத்தை இனி கலைஞர் மாதம் என்று அழைக்க திமுக மாணவர் அணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தி.மு.க மாணவர் அணி ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் கடலூர் இள.புகழேந்தி தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் போன்ற மாதங்கள் கிரேக்க, ரோமானிய மன்னர்கள் மற்றும் கடவுளர்கள் பெயரில் அழைக்கப்படுகின்றன.

இனி தி.மு.க மாணவரணியினர், திமுக தலைவர் பிறந்த ஜூன் மாதத்தை கலைஞர் மாதம் என்றே அழைப்பார்கள். எங்கு எழுதினாலும் பேசினாலும் இனி மாணவரணி ஜூன் மாதம் என்பது கலைஞர் மாதம் என்றே குறிப்பிடப்படும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதாம். இது பலத்த கைத்தட்டல்களுக்கு மத்தியில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன் பின்னர் மேலும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஜூன் மாதம் என்பதற்குப் பதில் கலைஞர் மாதம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி,

- கலைஞர் மாதம் 3-ம் தேதி திராவிட இயக்க எழுச்சி நாள். பகைவர்கள் சூழ்ச்சிகளை வீழ்த்தி நம்மை அன்பால் ஆட்கொண்ட கருணாநிதியின் 89-வது பிறந்தநாள் விழாக்களை திராவிட இயக்க எழுச்சி நாளாக நாடு முழுவதும் கொண்டாட முடிவுசெய்யப்பட்டது.

- கலைஞர் மாதம் 3-ம் தேதியன்று அறிவாலய வளாகத்தில் ரத்ததான முகாம் மற்றும் 89 மாணவர்கள் கண்தானம் வழங்குதல் ஆகியவை திராவிட இயக்க எழுச்சி நாளின் முதல் தொடக்க நிகழ்வாக நடைபெறும்.

- அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை மூடி கிண்டியில் உள்ள ஒருமைப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைத்ததன் காரணமாக 5 இடங்களில் அண்ணாவின் பெயரை நீக்கியுள்ளதால் ஆராய்ச்சி மாணவர்களின் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளை முறையாக நடத்த வேண்டி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாணவர் அணியின் சார்பாக ஜெயலலிதாவின் மாணவர் விரோத செயல்களுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன் கல்வி வழங்குவதில் இடைஞ்சல் செய்து வந்தால் விரைவில் மிகப்பெரும் சரிவை சந்திக்க வேண்டி வரும் என இக்கூட்டம் எச்சரிக்கை செய்கிறது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதேபோல அண்ணா பிறந்த செப்டம்பர் மாதத்தை அண்ணா மாதம் என்று அழைப்பார்களா என்று தெரியவில்லை.





Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™