விழியே பேசு... |
- மேலும் தாமதமாகும் கமல், அஜீத், சூர்யாவின் படங்கள்!
- புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அ.தி.மு.க.வுக்கு எதிராக பொது வேட்பாளர்- தே.மு.தி.க.-கம்யூனிஸ்டு ஆலோசனை
- மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக வேண்டும்: இளைஞர் அணி கூட்டத்தில் வற்புறுத்தல்
- ராமநாதபுரத்தை சேர்ந்த ஏழை விவசாயியின் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வில் சாதனை: இந்திய அளவில் 5-வது இடம் பெற்றார்
- நயனதாராவிடம் சென்னை சுங்க அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை
- மதுரை ஆதீனம் மடத்திற்குள் வைஷ்ணவி மீது நித்தியானந்தா சீடர்கள் தாக்குதல்?
- ரிலீசுக்கு முந்தும் ‘மாற்றான்’
- நித்தியானந்தா மீதுள்ள 'கேஸ்' குறித்து யாரும் பேசக் கூடாது- மதுரை ஆதீனம்
- ஐ.பி.எல். கிரிக்கெட்: கடைசி பந்தில் சென்னையை வீழ்த்தியது மும்பை
- 'தல' கூட நடிக்க ஒரு பைசா கூட வேண்டாம்..பிந்து மாதவி
- துப்பாக்கி விவகாரம் ; செளமியா அன்புமணிக்கு முருகதாஸ் சவால்!
| மேலும் தாமதமாகும் கமல், அஜீத், சூர்யாவின் படங்கள்! Posted: 06 May 2012 10:36 PM PDT தமிழ் சினிமாவில் கோடை காலம் மிக முக்கிய சீஸன். நாட்டில் மழை பெய்கிறதோ இல்லையோ... திரையரங்கில் வசூல் மழை இருக்கும். எனவே இந்த கோடையைக் குறிவைத்து முன்னணி நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்கள் தயாராவது வழக்கம். இந்த ஆண்டு கோடை ரிலீஸில் முக்கியப் படமாக எதிர்ப்பார்க்கப்பட்டது கமல் ஹாஸனின் விஸ்வரூபம். ரூ 100 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. பாடல்கள் சேர்க்கப்படாத, படத்தின் ஒரு பிரதியை கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்பிவிட்டார் கமல்ஹாஸன் என்று தெரிகிறது. ஆனால் தியேட்டர் ரிலீஸ் இன்னும் தள்ளிப் போகிறது. படத்தின் விளம்பரம், வர்த்தகம் தொடர்பான வேலைகளை இனிமேல்தான் கமல் துவங்கவிருப்பதால், படம் வெளியாவது தாமதமாகிறது. இந்த கோடையில் இன்னொரு முக்கிய வெளியீடு அஜீத்தின் பில்லா 2. பெப்சி தொழிலாளர் பிரச்சினை காரணமாக, மே மாதம் வெளியாகவிருந்த இந்தப் படம், ஜூன் அல்லது ஜூலைக்கு தள்ளிப் போயுள்ளது. சூர்யாவின் மாற்றான் திரைப்படம் மே மாதம் வெளியாகவிருந்தது. ஆனால் இதையும் தாமதப்படுத்தியுள்ளது பெப்சி தொழிலாளர் பிரச்சினை. ரஷ்யா, சீனா என வித்தியாசமான லொகேஷன்களில் பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் நல்ல எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. கார்த்தி நடிக்கும் சகுனி ஏப்ரலில் வரவிருந்தது. இந்த மாதம் வெளியாகிவிடும் எனத் தெரிகிறது. பெரிய படங்கள் வராதது, வழக்கு எண் 18/9 போன்ற சிறிய, ஆனால் நல்ல படங்கள் பக்கம் ரசிகர்களை அதிகம் போக வைத்துள்ளது. அந்த வகையில் இந்த தாமதத்திலும் ஒரு நல்லது நடந்துள்ளது! |
| புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அ.தி.மு.க.வுக்கு எதிராக பொது வேட்பாளர்- தே.மு.தி.க.-கம்யூனிஸ்டு ஆலோசனை Posted: 06 May 2012 10:28 PM PDT புதுக்கோட்டை தொகுதிக்கு ஜூன் மாதம் 12-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. புதுக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக கார்த்திக் தொண்டைமானை முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அந்த கட்சி தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கடந்த தேர்தலில் அ.தி. மு.க. கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்டு இந்த முறை போட்டியிடவில்லை. சட்டசபை தேர்தலில் 3 ஆயிரத்து 101 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த தி.மு.க.வும் போட்டியிடாது என்று அந்த கட்சி தலைவர் கருணாநிதி அறிவித்து விட்டார் பா.ம.க., விடுதலை சிறுத்தை கட்சிகளும் போட்டியிடவில்லை. ம.தி. மு.க., தே.மு.தி.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் தங்கள் நிலைப்பாடு என்ன என்பதை இதுவரை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. புதுக்கோட்டை தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு போட்டியிட வேண்டும்Ó என்று பெரும்பாலான நிர்வாகிகள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. தங்கள் கட்சி வேட்பாளருக்கு மற்ற கட்சிகளின் ஆதரவை கேட்கலாம் என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளருக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆதரவு அளித்தது. எனவே புதுக்கோட்டை தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளருக்கு தே.மு.தி.க. ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தே.மு.தி.க. போட்டியிடுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஒருவேளை போட்டியிட விரும்பினால் மார்க்சிஸ்டு விட்டுக் கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது. யார் போட்டியிட்டாலும் அது பொது வேட்பாளராகத்தான் இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழுவில் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. தே.மு.தி.க. போட்டியிட்டால் தி.மு.க., பா.ம.க. ஆதரவை பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். ஆனால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளர் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டால் தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் பெற முடியும். எனவே மார்க்சிஸ்டு வேட்பாளர் பொது வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. அ.தி.மு.க.வுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவதில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உறுதியாக உள்ளது. எனவே அந்த கட்சி வேட்பாளரே பொது வேட்பாளராக நிற்க அதிக வாய்ப்பு உள்ளது என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. புதுக்கோட்டையில் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- ஆளும் கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று இணைந்து புதுக்கோட்டை இடைத்தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது. அப்படி பொது வேட்பாளரை நிறுத்தினால் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவளிக்கும். இவ்வாறு அவர் கூறினார். |
| மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக வேண்டும்: இளைஞர் அணி கூட்டத்தில் வற்புறுத்தல் Posted: 06 May 2012 10:12 PM PDT தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர்கள் ஒவ்வொருவராக தங்கள் கருத்தை தெரிவித்தனர். அனைவரும் தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள். கருணாநிதிக்கு பிறகு அவரால்தான் கட்சியை காப்பாற்ற முடியும். தமிழ்நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் செய்து இளைஞர்களை எழுச்சியுற செய்து வருகிறார். எனவே தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் அவர்தான் என்று குறிப்பிட்டார்கள். கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:- சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் தி.மு.க. டெபாசிட்டை இழந்தாலும் மிகுந்த எழுச்சியோடு இருக்கிறது. இளைஞர் அணியில் ஒன்றிய அளவில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த பணிகள் இன்னும் சில மாதங்களில் முடிந்து விடும். மாவட்ட அளவில் இளைஞர் அணியினருக்கு வயது வரம்பு 40 என்று நிர்ணயிக்கப்பட்டிருப்பதை 45 ஆக உயர்த்தும்படி கேட்டுக் கொண்டுள்ளார்கள். இதுதொடர்பாக தலைவர் கலைஞரிடம் ஆலோசிக்கப்படும். மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் தகுதியின் அடிப்படையில்தான் தேர்வு செய்யப்படுவார்கள். நிர்வாகிகளாக விரும்புபவர்கள் இணையதளம் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான இ-மெயில் முகவரி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். |
| Posted: 06 May 2012 10:06 PM PDT ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாயின.இதில் இந்தியா முழுவதும் 910 பேர் தேர்வாகியுள்ளனர். ராமநாதபுரத்தை சேர்ந்த எம்.எஸ்சி. பட்டதாரியான கோபால் சுந்தரராஜ்(வயது 25) இந்த தேர்வில் இந்திய அளவில் 5-வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். கோபால சுந்தரராஜின் சொந்த ஊர் கீழக்கரை அருகே உள்ள மாவிலாத்தோப்பு கிராமம். இவருடைய தந்தை பெயர் சண்முகவேலு. விவசாயி. தாயார் ராஜம்மாள். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு சண்முகவேலு காலமாகி விட்டார். ஏழை விவசாயியின் மகனான கோபால் சுந்தரராஜ், பள்ளிப்படிப்பு, பட்டப்படிப்புகளை முடித்து, தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். அங்கிருந்தபடியே ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். தன் தாய்மாமனான ஓய்வு பெற்ற அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாரியப்பன் ஆதரவில் படித்து இந்த சாதனையை எட்டியுள்ளார். இதுகுறித்து ராமநாதபுரம் கடம்பாநகரில் வசித்து வரும் அவருடைய மாமா மாரியப்பன் கூறியதாவது:- கோபால் சுந்தரராஜின் தந்தை ஏழை விவசாயி. தாயார் கூலி வேலை பார்த்து வந்தார். ஆனால் கோபால் சுந்தரராஜ் படித்து கலெக்டராக வேண்டும் என்று அவருடைய பெற்றோர் கனவு கண்டு வந்தனர். அவரை நான் படிக்க வைத்தேன். 3-ம் வகுப்பு வரை போகலூர் ஒன்றியம் சத்திரக்குடி அருகே உள்ள மென்னந்தி அரசு தொடக்கப்பள்ளியில் படித்தார். அதன் பின்னர் 8-ம் வகுப்பு வரை கீழக்கரை அருகே உள்ள மாவிலாத்தோப்பு நாடார் உயர்நிலைப் பள்ளியிலும், 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியிலும் கல்வி பயின்றார். சிறுவயது முதலே ஆர்வத்துடன் படித்து வந்த அவர் ஆங்கிலப் புலமை மிக்கவர். கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மை பட்டப்படிப்பு முடித்தார். அதன் பின்னர் டெல்லியில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. பயின்றார்.தொடர்ந்து பி.எச்.டி. படித்து வந்தார். இந்த நிலையில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்காக ஆயத்தமானார். முதல் முறை தேர்வு எழுதும் போது அவரது தந்தை சண்முகவேலு காலமாகி விட்டார். 2-வது முறை தேர்வு எழுதிய போது நேர்முகத்தேர்வில் தோல்வியடைந்தார். தற்போது 3-வது முறையாக தேர்வு எழுதி இந்திய அளவில் 5-வது இடத்தை பிடித்து தமிழகத்திற்கும், ராமநாதபுரம் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவரது பல ஆண்டு இடைவிடாத முயற்சியின் காரணமாக இந்த சாதனையை எட்டியுள்ளார். இவ்வாறு மாரியப்பன் கூறினார். |
| நயனதாராவிடம் சென்னை சுங்க அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை Posted: 06 May 2012 09:55 PM PDT பாங்காக் போய் விட்டு வந்த நடிகை நயனதாராவை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் நிறுத்தி வைத்து கிடுக்கிப் பிடி விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நயனதாரா இடையில் ஏற்பட்ட 2 காதல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சிக்கல்களிலிருந்து விடுபட்டு மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். தெலுங்கில் பிசியாக நடிக்க ஆரம்பித்துள்ள அவர் தமிழிலும் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் அவரும் அவரது மேனேஜர் ராஜேஷ் மற்றும் மேக்கப் மேனுடன் பாங்காக் போயிருந்தார்.அங்கு போன வேலையை முடித்து விட்டு மீண்டும் சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் நயனதாராவை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். மேலும் ராஜேஷை தனியாக கூட்டிச் சென்று இன்னொரு அறையில் வைத்து விசாரித்தனர். அவர்களின் சூட்கேஸ்களையும் முழுவதுமாக சோதனையிட்டனர். முக்கால் மணி நேரம் நயனதாராவிடம் விசாரணை நடந்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முக்கால் மணி நேர விசாரணைக்குப் பின்னர் வியர்க்க விறுவிறுக்க நயனதாரா வெளியே வந்தார். அவரது மேனேஜரையும் அதிகாரிகள் விடுவித்து விட்டனர். நயனதாராவின் பாங்காக் பயணம் குறித்துத்தான் விசாரணை நடந்துள்ளதாக தெரிகிறது. அவர் குறித்து யாரேனும் சுங்கத்துறையினருக்கு வேண்டும் என்றே தகவல் கொடுத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் பிரபுதேவாவை காதலித்த காலத்தில் தனது கையில் பிரபுதேவா என்று பச்சை குத்தி வைத்திருந்தார் நயனதாரா. தற்போது அதை அழிக்க முடியாமல் கடுமையாக சிரமப்படுகிறார். இதற்காகவே அவர் பாங்காக் போயிருந்ததாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. மொத்தத்தில் நயனதாராவுக்கு இந்த நாள் நிச்சயம் நல்ல நாளாக அமையாமல் கசப்பான நாளாக மாறி விட்டது உண்மை. |
| மதுரை ஆதீனம் மடத்திற்குள் வைஷ்ணவி மீது நித்தியானந்தா சீடர்கள் தாக்குதல்? Posted: 06 May 2012 09:18 PM PDT மதுரை ஆதீனத்தின் செயலாளராக கூறப்படும் வைஷ்ணவி மீது நித்தியானந்தாவின் ஆட்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தி சுடிதாரை கிழித்து விட்டதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து சென்றனர். பத்திரிக்கையாளர்களை நித்தியானந்தாவின் ஆட்கள் ஆதினத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதற்கு மதுரை ஆதீனத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களுக்குள் மோதல் மூண்டதாக கூறப்படுகிறது. மதுரை ஆதீன மடம் பெரும் மர்மக் கூடமாக மாறி வருகிறது. உள்ளே என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை, தெரியவில்லை. மதுரை ஆதீனத்தின் செயலாளராக இருப்பவர் இளம் பெண் வைஷ்ணவி. இவர் இடையில் காணாமல் போய் விட்டதாக கூறப்பட்ட நிலையில் தொடர்ந்து அவர் அங்கேதான் தங்கியிருக்கிறார் என்பது சமீபத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனை மூலம் தெரிய வந்தது. இந்த நிலையில் நேற்று மதுரை ஆதீன மடத்திற்குள் வைஷ்ணவியை நித்தியானந்தாவின் ஆட்கள் சரமாரியாகத் தாக்கி உதைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. மடத்திற்குள் ஒரு ஆதீனத்தின் தனி அறையின் சாவியை வைஷ்ணவிதான் வைத்திருக்கிறார். திருவண்ணாமலையில் நித்தியானந்தாவிற்கு பட்டாபிஷேகம் செய்வதற்காக போய் விட்டார் மதுரை ஆதீனம். மடத்தில் வைஷ்ணவி மட்டும்தான் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது பாதுகாப்புக்கு நித்தியானந்தாவின் ஆட்களை நிறுத்தி வைத்திருந்தனராம். இந்தநிலையில் தனி அறையின் சாவியை வைஷ்ணவியிடம் நித்தியானந்தாவின் ஆட்கள் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் தர மறுத்தாராம். இதனால் ஆத்திரமடைந்த நித்தியானந்தாவின் ஆட்கள் வைஷ்ணவியை பெண் என்றும் பாராமல் சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் அணிந்திருந்த சுடிதார் கிழிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து செல்போன் மூலம் மதுரை போலீஸாருக்கும், ஆதீனத்திடம் உதவியாளராக இருந்து பின்னர் வெளியேற்றப்பட்டவரான ராமராஜ் மற்றும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோருக்கு கதறியழுதபடி தகவல் கொடுத்துள்ளார் வைஷ்ணவி. இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்தனர். இந்து மக்கள் கட்சியினரும் மடத்திற்கு வெளியே திரண்டு வந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் உள்ளே சென்று விசாரணை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. தகவல் அறிந்து விரைந்து வந்த பத்திரிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்க நித்தியானந்தா ஆதரவாளர்கள் மறுத்தனர். இதற்கு ஆதீனத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்குள் மோதல் மூண்டது. இதனால் மதுரை ஆதீன மட வளாகத்திற்குள் என்ன நடந்தது என்பதை கண்டறிய பத்திரிக்கையாளர்களால் முடியவில்லை. இந்த நிலையில் தகவல் அறிந்து ஆதீனமும், நித்தியானந்தாவும் விரைந்து வந்தனர். அவர்கள் வைஷ்ணவியிடம் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்துள்ளனர். பின்னர் அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, நித்தியானந்தா ஆதரவாளர்களால் வைஷ்ணவிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக இந்து மக்கள் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். அவரை மீட்டுவெளியே கொண்டு வர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல நித்தியானந்தாவின் ஆதரவாளர்களை உடனடியாக மடத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| ரிலீசுக்கு முந்தும் ‘மாற்றான்’ Posted: 06 May 2012 08:50 PM PDT சூர்யா - காஜர் அகர்வால் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் படம் மாற்றான். இப்படம் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளின் கதையை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் ரஷியாவின் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது கடைசி கட்டத்தை நெருங்கியுள்ளது. கோடையில் ரிலீசாகியிருக்க வேண்டிய இப்படம் சினிமா தொழிலாளர்களின் பிரச்சினை காரணமாக தள்ளிப் போய் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஜோத்பூர் பாலைவனப்பகுதியில் சுமார் 500 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதுபோன்று இன்னும் சுவாரஸ்யமான, பிரம்மாண்டமான காட்சிகளும் இப்படத்தில் உள்ளது. இன்னும் சில தினங்களில் இப்படத்தை முடித்து, சீக்கிரமாக வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் விவேக், ஈஷா ஷர்வாணி ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். |
| நித்தியானந்தா மீதுள்ள 'கேஸ்' குறித்து யாரும் பேசக் கூடாது- மதுரை ஆதீனம் Posted: 06 May 2012 08:44 PM PDT ஆதீனமாக உள்ள நித்தியானந்தா இனிமேல் கோர்ட், போலீஸ் நிலையங்களுக்கு செல்லக்கூடாது. செல்லவும் மாட்டார். அவர்மீது உள்ள பாலியல் புகார் பற்றி யாரும் பேசக்கூடாது என்று பேசியுள்ளார் மதுரை ஆதீனம். திருவண்ணாமலையில் நேற்று ராத்திரி நித்தியானந்தாவுக்கு பட்டாபிஷேகம் நடத்தினார் மதுரை ஆதீனம். அதன் பின்னர் அவர் பேசுகையில், வாழ்நாளில் இந்த நாள் புதிய நாள். மன மகிழ்ச்சி, மன நிம்மதி தரும் நாள். சிவன்-பார்வதி நிறைந்த திருவண்ணாமலையில் ஆதீன தலைவராக நித்தியானந்தாவை அறிவித்து பட்டாபிஷேகம் செய்வது சிறப்பான ஒன்று. திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட தலம், அருணகிரிநாதர் அருளிய தலம், ரமணர் சேஷாத்திரி, விசிறி சாமியார் வாழ்ந்த தலம் திருவண்ணாமலை. ஆதீனமாக பதவி வகிக்க மேதை, ஞானி, பக்குவம், போர்க்குணம் ஆகியவை இருக்க வேண்டும். அது திருவண்ணாமலையில் பிறந்த நித்தியானந்தாவுக்கு இருக்கிறது. சிவன்-பார்வதி எனது மனதில் தோன்றி மதுரை ஆதீனத்தின் அடுத்த வாரிசாக நித்யானந்தாவை அறிவிக்க வேண்டும் என்று கூறினர். அதன்படி நித்தியானந்தா அறிவிக்கப்பட்டு உள்ளார். நாங்கள் செய்த புண்ணியத்தால் நித்தியானந்தா கிடைத்துள்ளார். முதலில் அவர் ஆதீனமாக பதவி ஏற்க மறுத்தார். பல பிரச்சனைகள் வரும் என்று கூறினார். ஆனால் நான்தான் அவரை வற்புறுத்தி ஆதீனமாக பதவியேற்க வைத்துள்ளேன். இளைய ஆதீனமாக யாரை அறிவிக்க வேண்டும் என்ற அதிகாரம் எனக்கு மட்டும்தான் உள்ளது. நித்தியானந்தா பரம்பரை தென்மண்டல சைவ வேளாளர் பிரிவில் இருந்து வந்தவர். அவர் ஆதீனமாவதற்கு முழு தகுதியும் உள்ளது. ஆதீனங்கள் கோர்ட், போலீஸ் நிலையத்துக்கு செல்லக்கூடாது. ஆதீனமாக உள்ள நித்தியானந்தா இனிமேல் கோர்ட், போலீஸ் நிலையங்களுக்கு செல்லக்கூடாது. செல்லவும் மாட்டார். அவர்மீது உள்ள பாலியல் புகார் பற்றி யாரும் பேசக்கூடாது. மதுரை ஆதீனத்துக்கு சிறந்த நிர்வாகியை உருவாக்கி செல்வதால் என் உயிர் மூச்சு மகிழ்ச்சியுடன் பிரியும் என்று பேசினார் மதுரை ஆதீனம். அவரது பேச்சை நித்தியானந்தா ஆதரவாளர்கள், சீடர்கள் கைகள் தட்டி வரவேற்றனர். |
| ஐ.பி.எல். கிரிக்கெட்: கடைசி பந்தில் சென்னையை வீழ்த்தியது மும்பை Posted: 06 May 2012 07:36 AM PDT ஐபிஎல் 5 தொடரில் இன்றைய முதல் போட்டியில் 174 ரன்களை சேஸ் செய்து வந்த மும்பை இந்தியன்ஸ் துவக்க வீரர் சச்சின், ரோஹித் சர்மா ஜோடியின் சிறப்பான ஆட்டம் மூலம் வெற்றிப் பாதையில் சென்றது. அதன்பிறகு அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததாலும், கடைசியில் ஸ்மித்தின் அதிரடி ஆட்டத்தால் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. ஐபிஎல் 5 தொடரில் இன்று மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் துவக்க வீரர் முரளி விஜய்யின் மூலம் அதிரடி துவக்கத்தை பெற்றது. வழக்கமாக வானவேடிக்கை காட்டும் துவக்க வீரர் டு பிளசிஸ் இன்று 9 ரன்களில் எதிர்பாராத வகையில் ரன் அவுட்டானார். துவக்கம் முதலே அதிரடியாக ஆடி முரளி விஜய், 4வது ஓவரில் 3 சிக்ஸ், 1 பவுண்டரிகள் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அதிரடியாக ரன்களை எடுத்து வந்த முரளிவிஜய் அரைசதத்தை நெருங்கிய நிலையில், ஆர்.பி.சிங்கின் பந்தில் போல்டானார். 29 பந்துகளில் 3 சிக்ஸ், 4 பவுண்டரிகள் அடித்து 41 ரன்களை எடுத்தார் முரளிவிஜய். அதன்பிறகு துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, பிராவோ ஜோடி அணியின் ஸ்கோரை பொறுமையாக உயர்த்தியது. அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தி வந்த சுரேஷ் ரெய்னா 21 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 36 ரன்களை எடுத்து ஆர்.பி.சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பொறுப்பாக ஆடி வந்த பிராவோ உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் டோணி அதிரடியை தொடர்ந்தார். ஆனால் 1 சிக்ஸ், 4 பவுண்டரிகள் அடித்து 40 ரன்களை குவித்த பிராவோ போல்டானார். அடுத்த ஓவரிலேயே கேப்டன் டோணியும் பவுண்டரி லைனில் கேட்சாகி ஆட்டமிழந்தார். 15 பந்துகளில் 1 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து 25 ரன்களை சேர்த்தார் டோணி. அடுத்து வந்த அல்பி மார்கல்(3), ஜடேஜா(9), அஸ்வின்(0) ஆகியோர் வரிசையாக அவுட்டாகினர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட்களை இழந்து 173 ரன்களை குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் தரப்பில் மலிங்கா, ஆர்.பி.சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். 174 ரன்களை எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் துவக்கத்திலேயே பிராங்க்ளினின்(1) விக்கெட்டை இழந்தது. அதன்பிறகு ஜோடி சேர்ந்த சச்சின், ரோஹித் சர்மா அணியின் ஸ்கோரை பொறுப்பாக உயர்த்தினர். துவக்கம் முதலே அதிரடியாக ஆடிய சச்சின் 44 பந்துகளில் 1 சிக்ஸ், 11 பவுண்டரிகள் அடித்து அரைசதம் கடந்தார். சச்சின் 74 ரன்கள் எடுத்த நிலையில், டு பிளசிஸிடம் கேட்சாகி வெளியேறினார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 11 ரன்களில் அவுட்டானார். அதே ஓவரில் ராயுடு டக் அவுட்டானார். ரோஹித் சர்மா 46 பந்துகளில் 2 சிக்ஸ், 6 பவுண்டரிகள் அடித்து 60 ரன்களை குவித்த நிலையில் ஜடேஜாவின் பந்தில் போல்டானார். அதன்பிறகு வந்த ராபின் பீட்டர்சன்(0), ஹர்பஜன் சிங்(0), மலிங்கா(0) ஆகியோர் வரிசையாக அவுட்டாகினர். மும்பை இந்தியன்ஸின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், களமிறங்கிய ஸ்மித் அதிரடியாக 1 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஸ்மித் 9 பந்துகளில் 2 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து 24 ரன்களை குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி வெற்றிப் பெற்றது. |
| 'தல' கூட நடிக்க ஒரு பைசா கூட வேண்டாம்..பிந்து மாதவி Posted: 06 May 2012 06:35 AM PDT அஜீத் குமாருடன் நடிப்பது என்றால் பைசா சம்பளம் வேண்டாம் என்கிறார் நடிகை பிந்து மாதவி. ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு ஹீரோவுடன் நடிப்பது வாழ்க்கையின் லட்சியமாக இருக்கும். அந்த வகையில் நடிகை பிந்து மாதவிக்கு அஜீத் குமாருடன் நடிப்பதே லட்சியமாம். ஒரு படத்திலாவது 'தல' கூட நடித்துவிட வேண்டும் என்று விரும்புகிறார். அது மட்டுமல்ல அஜீத் கூட நடிப்பது என்றால் பைசா சம்பளம் வேண்டாம் என்கிறார். இது மட்டுமல்ல பிந்து மாதவி பள்ளியில் படித்த காலத்தில் இருந்து அஜீத்தின் தீதீதீவிர ரசிகையாம். அஜீத்தின் எந்த படம் வந்தாலும் முதல் நாளே அடித்துபிடித்து போய் பார்த்துவிட்டு தான் மறு வேலையாம். இந்தியில் சக்கைப்போடு போட்ட தி டர்ட்டி பிக்சரை தமிழில் ரீமேக் செய்தால் சில்க் வேடத்தில் நடிக்கத் தயார் என்று அவர் அறிவித்திருந்தார். ஆனால் தற்போது ட்ர்ட்டியாக நடிக்கவிருப்பது உயர்ந்த மனுஷி அனுஷ்கா. ஆந்திராவில் பிறந்தவராக இருந்தாலும் பிந்து படித்தது எல்லாம் வேலூர் விஐடியில்தான். அப்போதுதான் மாடலிங்கில் நுழைந்தார், அப்படியே சினிமாவிலும் விழுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. |
| துப்பாக்கி விவகாரம் ; செளமியா அன்புமணிக்கு முருகதாஸ் சவால்! Posted: 06 May 2012 03:10 AM PDT துப்பாக்கி படத்தில் விஜய் சுருட்டு பிடிப்பது போல இடம் பெறும் காட்சிக்கு டாகட்ர் அன்புமணி ராமதாஸின் மனைவி செளமியா தலைமையிலான பசுமைத் தாயகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், சினிமாப் பட வசனத்தை குறிப்பிட்டு ஒரு படத்தைப் போடடு நேரடியாகவே சவால் விட்டுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருதகாஸ். துப்பாக்கி படத்தின் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டனர். அதில், அசல் படத்தில் அஜீத் சுருடடுடன் காட்சி அளித்ததைப் போன்று விஜய் சுருட்டு பிடித்தபடி இருக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. இதற்கு பசுமைத் தாயகம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக பசுமைத்தாயகத்தின் மாநில தலைவர் செளமியா அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், 'வீ கிரியேஷன்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் `துப்பாக்கி' எனும் திரைப்படத்தின் விளம்பரம் சுவரொட்டிகள் மூலம் கடந்த 1-ந் தேதி சென்னை நகரில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. `துப்பாக்கி' திரைப்படத்தின் இந்த விளம்பரத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி பெரிய அளவிலும், முதன்மையாகவும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு புகைப்பிடிக்கும் காட்சி விளம்பரங்களில் இடம்பெற்றுள்ளது இந்திய புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். மத்திய அரசு, தமிழக அரசு, மத்திய திரைப்பட தணிக்கைத்துறை, நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அதிகார அமைப்புகளும் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை கட்டுப்படுத்தும் மத்திய அரசாணையை செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், விளம்பரங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவது சட்டப்படி குற்றம் என்கிற உண்மையை அறிந்த பின்னரும், `துப்பாக்கி' திரைப்பட தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தரும், இயக்குனரும், நடிகரும், `துப்பாக்கி' திரைப்படத்தின் விளம்பரத்தில் புகைப்பிடிக்கும் காட்சியினை இடம் பெறச்செய்து சட்டத்தை அப்பட்டமாக மீறியுள்ளனர். எனவே இந்திய அரசின் புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தினை மீறி, குற்றமிழைத்துள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக அரசை பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று கோரியிருந்தார். பசுமைத் தாயகத்தின் இந்தக் கோரிக்கைக்கு தற்போது இயக்குநர் முருகதாஸின் டிவி்ட்டரில் விஜய் ரசிகர்களும் பிறரும் பகிரங்கமாகவே கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதில் உசசமாக முருகதாஸே, ஒரு படத்தைப் போட்டு இவன நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன் என்று அதிரடியாக கூறியுள்ளார். ஒரு இந்திப் படத்தில் இடம் பெற்ற, ஒருவன், இன்னொருவனை கீழே தள்ளி கொலை செய்வது போன்ற காட்சி அடங்கிய பட போஸ்டர் அது. அந்தப் படத்தைப் போட்டு, இதுவும் விளம்பரம்தான், இவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன் என்று கமென்ட் போட்டுளளார முருகதாஸ். எங்க போய் நிக்கப் போகுதோ இது...! |
| You are subscribed to email updates from விழியே பேசு... To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |










