Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


4 வயது குழந்தைக்கு தாயாக சாய் பல்லவி

Posted:

ஒரே ஒரு படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் யார் என்றால் அது சாய் பல்லவி தான். 'பிரேமம்' மலையாள படத்தில் மலர் டீச்சர் என்ற வேடத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரும் புகழ்பெற்றார். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளப்படங்களில் சாய் பல்லவியை நடிக்க வைக்க பலரும் முயன்றனர்.

பிரேமம் படத்துக்குப் பிறகு ...

சசி இயக்கும் 'இரட்டைக் கொம்பு'

Posted:

விஜய் ஆண்டனியை வைத்து 'பிச்சைக்காரன்' படத்தை இயக்கிய சசி, அப்படம் வெற்றிப் படமாக அமைந்ததைத் தொடர்ந்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் குமார் என இரண்டு ஹீரோக்கள் நடிக்கின்றனர். இவர்களுக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகிகள் தேர்வு ...

ஒரே படமாகும் பாகுபலி இரண்டு பாகங்கள்?

Posted:

ராஜமவுலி இயக்கிய பாகுபலி, பாகுபலி-2 ஆகிய இரண்டு படங்களும் இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட படங்கள். சரித்திர கதையில் உருவான இந்த படங்கள் இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளிலும் வசூல் சாதனை புரிந்தன. இப்படத்தின் மூலம் இந்திய படங்களுக்கான சர்வதேச சந்தை மேலும் அதிகமாகியிருக்கிறது. இப்படத்தை ...

தாதா வேடத்தில் சாருஹாசன் - ஜனகராஜ்

Posted:

ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நிறைய படங்களில் காமெடியனாக நடித்தவர் ஜனகராஜ். இவர் ரஜினிகாந்தின் நெருக்கமான நண்பரும்கூட. நீண்டகாலமாக சினிமாவை விட்டு விலகியிருந்து வந்த இவர், தற்போது மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார். தற்போது தா தா 87 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதே படத்தில், நெஞ்சத்தை ...

கயல் ஆனந்தியை கவர்ந்த இரவில் வருகிறா பாடல்

Posted:

பிரபுசாலமனின் கயல் படத்தில் அறிமுகமானவர் ஆனந்தி. அதன்பிறகு சண்டிவீரன், திரிஷா இல்லேன்னா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, எனக்கு இன்னொரு பேரு இருக்கு, பண்டிகை என பல படங்களில் நடித்தவர், தற்போது மன்னார் வகையறா, பரியேறும் பெருமாள், என் ஆளோட செருப்ப காணோம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் என் ஆளோட செருப்ப காணோம் படத்தில் ...

விஜய் சேதுபதியுடன் மீண்டும் நடிப்பேன் : ரம்யா நம்பீசன்

Posted:

சேதுபதி படத்திற்கு பிறகு நட்புன்னா என்னான்னு தெரியுமா, சத்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ரம்யா நம்பீசன். இதுதவிர கன்னடத்தில் தர்ஷன் நாயகனாக நடிக்கும் குருஷேத்ரா என்ற சரித்திர படத்திலும் நடிக்கிறார். தொடர்ந்து தமிழில் புதிய படங்களுக்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருப்பதாக சொல்லும் ரம்யா நம்பீசனிடத்தில் விஜய் சேதுபதியுடன் ...

விஜய்யின் நடனத்தை காப்பி அடித்தேன் : ஜூனியர் என்டிஆர்

Posted:

தமிழ் சினிமாவில் கமல்ஹாசனுக்குப்பிறகு நடனத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் விஜய். சின்னச்சின்ன அசைவுகளைகூட அவர் அற்புதமாக வெளிப்படுத்துவதால், அவரது நடனத்திற்கான ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள். அதோடு, சினிமாத்துறையிலும் விஜய்யின் நடனத்திற்கு ரசிகர்கள் அதிகம். தமிழ் சினிமாவையும் கடந்து தெலுங்கு சினிமா ...

மெர்சல் பெயருக்கு தடை : சிக்கலில் விஜய் படம்

Posted:

பைரவா படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள படம் மெர்சல். தெறியை தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர். தேனாண்டாள் பிலிம்ஸ் தனது 100வது படமாக ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளனர். நேற்று(செப்.,21) தான் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டு உலகளவில் டிரண்ட்டாகி, அதிக பார்வையாளர்கள், லைக்ஸ்... என ...

ஆஸ்கர் விருது : இந்தியா சார்பில் நியூட்டன் படம் பரிந்துரை

Posted:

ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் ஹிந்தி படமான நியூட்டன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

உலகளவில் சினிமாவில் மிக உயர்ந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கர். இதில் ஹாலிவுட் படங்கள் தவிர்த்து பிற நாட்டு படங்களும் பங்கேற்கும். அந்த வகையில் இந்தாண்டு, இந்தியா சார்பில் ஹிந்தி படமான நியூட்டன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நக்சல் ...

என் படம் இன்னும் உறுதியாகவில்லை : மாரியப்பன்

Posted:

பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்க பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் தமிழகத்தை சேர்ந்த தங்கமகன் மாரியப்பன். இவரது வாழ்க்கை "மாரியப்பன்" என்ற பெயரில் சினிமாவாக உருவாக உள்ளது. ஐஸ்வர்யா தனுஷ் இயக்க, தனுஷ் தனது சொந்த பேனரில் தயாரிக்க உள்ளார்.

மாரியப்பன், திரு.வி.க., பூங்கா படத்தின் அறிமுக ...

போக்கிரி சைமன் வெற்றிபெற எஸ்.ஏ.சி வாழ்த்து

Posted:

மலையாளத்தில் இன்று வெளியாகி இருக்கும் 'போக்கிரி சைமன்' என்கிற படத்துக்கு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கேரளாவில் விஜய்க்கென ரசிகர்கள் அதிகம் இருப்பதால், அதை பின்னணியாக கொண்டு தற்போது விஜய்யின் கேரக்டரையும் அவரது தீவிர ரசிகர்கள் மூவரையும் மையப்படுத்தி 'போக்கிரி சைமன்' என்கிற பெயரில் ஒரு ...

ஆயுதபூஜை ரிலீசாக கேரளாவில் தனுஷ் படம்

Posted:

பொதுவாக மலையாள திரையுலகம் ஆயுதபூஜை விழாவை படங்களை ரிலீஸ் செய்யும் கொண்டாட்டமாக எடுத்துக் கொள்வதில்லை. அதை தொடர்ந்து வரும் தீபாவளியையும் அப்படித்தான் தமிழ்ப்படங்களின் ரிலீஸுக்காக தாரை வார்த்து விடுகின்றன. ஆனால் இந்தமுறை திலீப்பின் 'ராம்லீலா' மற்றும் அவரது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் நடித்துள்ள உதாகரணம் சுஜாதா என இரண்டு ...

திலீப்பை சிறையில் சென்று சந்தித்த சீனியர் நடிகை..!

Posted:

நடிகை விவகாரத்தில் சிக்கி சிறைவாசம் அனுபவித்துவரும் மலையாள நடிகர் திலீப்பை திரையுலகை சேர்ந்த சில இயக்குனர்களும் நடிகர்களும் சென்று சந்தித்துவிட்டு வந்தனர்.. இந்தநிலையில் சீனியர் நடிகையான கே.பி.ஏ.சி லலிதாவும் இரு தினங்களுக்கு முன் திலீப்பை சந்தித்து பேசிவிட்டு வந்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழில் நடிகர், திலகம் ...

மவுன படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்

Posted:

பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய வெற்றிப்படங்களை, இறைவி என்ற தோல்விப் படத்தையும் இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தற்போது உருவாகி வரும் படம் 'மெர்குரி'. பிரபுதேவா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் சனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன் உட்பட பலர் நடிக்கின்றனர். திரு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் ...

முதல்முறையாக விக்ரமுடன் நடிக்கும் சூரி

Posted:

சுமார் எட்டு வருடங்களுக்கும் மேலாக முன்னணி காமெடியனாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் சூரி. ஆனால் இதுவரை விக்ரம் உடன் இணைந்து நடித்ததில்லை. முதல்முறையாக விக்ரமுடன் இணைந்து ஹரி இயக்கத்தில் உருவாகும் 'சாமி 2' படத்தில் நடிக்க இருக்கிறார்.

அதேபோல், 2010-ல் வெளிவந்த 'ராவணன்' படத்தில் விக்ரம் உடன் இணைந்து நடித்த பிரபு, தற்போது ...

பாகுபலியைப்போல் குருஷேத்ரா

Posted:

தமிழில் காணாமல் போன பல நடிகைகள் கன்னடத்தில் பிசியாக இருக்கிறார்கள். சினேகா, ரெஜினா, ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோரும் இதில் அடக்கம். இவர்களில் சினேகா, ரெஜினா, ரம்யா நம்பீசன் ஆகிய மூவரும் ஒரு கன்னடப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

கன்னடத்தில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் தர்ஷன். 'சேலஞ்சிங் ஸ்டார்' என கன்னட ...

பெண் இயக்குநர் படத்தில் வரலட்சுமி

Posted:

இயக்குநர் மிஷ்கினிடம் அசோசியேட் டைரக்டராக பணிபுரிந்து வந்தவர் பிரியதர்ஷினி. இவர் தற்போது இயக்குநராகி இருக்கிறார். பிரியதர்ஷினி இயக்கும் படத்தில் வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். ஆக்ஷ்ன் மற்றும் த்ரில்லர் கலந்த டிராவல் ஸ்டோரியான இந்தப் படத்தில் வரலட்சுமிக்கு மாறுபட்ட கேரடக்டராம்.

சென்னையில் துவங்கி ...

சண்டக்கோழி-2 படப்பிடிப்பில் 25 பிரபலமான நடிகர்கள்

Posted:

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீராஜாஸ்மின், ராஜ்கிரண் நடிப்பில் சுமார் 12 வருடங்களுக்கு முன் அதாவது 2005-ஆம் வருடத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற படம் 'சண்டக்கோழி'. இந்த படத்தின் ரிலீஸுக்கு முன்பே விஷால் தரப்புக்கும் லிங்குசாமிக்கும் தகராறு ஏற்பட்டது.

சுமார் 5 வருடங்களுக்கு மேலாக முறைத்துக் கொண்டு திரிந்த இருவரும் சில ...

மம்முட்டியை தாடி வளர்க்க சொன்ன இயக்குனர் ராம்

Posted:

இயக்குனர் ராம் டைரக்சனில் மம்முட்டி நடித்துள்ள படம் பேரன்பு.'. நீண்டநாள் இடைவெளிக்கு பிறகு மம்முட்டி, தமிழில் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ள இந்தப்படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப்படத்தில் மம்முட்டி நாற்பது வயதுக்காரர் ஆக நடித்திருக்கிறார். இந்த கேரக்டருக்காக படத்தில் தாடி வைத்து நடித்துள்ளாராம். அதற்கான ...

சத்யன் அந்திக்காடுவின் தீவிர ரசிகன் நான் : விஜய்சேதுபதி

Posted:

மலையாள சினிமாவை பொறுத்தவரை உணர்வுப்பூர்வமான படங்களை இயக்குவதில் நம்பர் ஒன் யார் என கேட்டால் அனைவரின் விரல்களும் ஒருமித்து சுட்டிக்காட்டுவது இயக்குனர் சத்யன் அந்திக்காடு பக்கமாகத்தான் இருக்கும். அன்றும் இன்றும் மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் பிரபலமாக வலம் வந்த பல நடிகைகள் இவரது கண்டுபிடிப்பு தான். அப்படிப்பட்ட ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™