Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


அடுத்த ஆண்டில் தான் அஜித்தின் அடுத்த படம்?

Posted:

விவேகம் படம் வெளிவந்து இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில் படத்தின் எதிர்பாராத தோல்வி அஜித்தின் ரசிகர்களுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்தது. அதைவிட மற்றுமொரு அதிர்ச்சியாக அஜித்துக்கு நடந்த ஆபரேஷன் அமைந்துவிட்டது.

விவேகம் படத்திற்காக உடம்பை கடுமையாக ஏற்றி சண்டைக் காட்சிகளில் நடித்து முடித்ததால் அஜித்தின் ...

மணிரத்னம் படத்தில் எத்தனை நட்சத்திரங்கள்?

Posted:

'காற்றுவெளியிடை' படத்தை தொடர்ந்து மணிரத்னம் தனது அடுத்த பட வேலைகளில் பிசியாகி விட்டார். இப்படத்திற்கான நடிகர், நடிகைகளின் தேர்வில் ஈடுபட்டுள்ளார் மணிரத்னம். அது பற்றி மணிரத்னம் அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை என்றாலும், அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன.

விஜய்சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ...

இயக்குனர் லால் ஜோஸுக்கு 'ஜிமிக்கி கம்மல்' தந்த உற்சாகம்

Posted:

கடந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக மோகன்லால் நடித்த 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படம் ரிலீஸானது. இந்தப்படத்தில் பிரபல மலையாள இயக்குனர் லால் ஜோஸ் இயக்கியிருந்தார். மோகன்லாலும் இவரும் பல வருடங்கள் கழித்து இணைந்து படம் பண்ணியதால் எதிர்பார்ப்பு அதிகமானது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை லால் ஜோஸ் ஈடுகட்ட தவறிவிட்டார் என்றே சொல்ல ...

முன்னணி நடிகர்கள் ஆப்சென்ட் : விருது விழாவில் முதல்வர் வருத்தம்

Posted:

கடந்த 2016ஆம் வருடத்திற்கான கேரளா அரசின் திரைப்பட விருதுகள் சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டன. நேற்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மோகன்லால், மம்முட்டி உட்பட இன்றைய இளம் முன்னணி நடிகர்கள் வரை எவரும் கலந்து கொள்ளாதது முதல்வருக்கு வருத்தத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. அது ...

பல்சர் சுனிலுக்கு உதவிய போலீஸ்காரர் சஸ்பென்ட்

Posted:

நடிகை கடத்தப்பட்டு சித்தரவதைக்கு ஆளான விவகாரத்தில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் தான் பல்சர் சுனில். இவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட பின் இவருக்கு உதவி செய்துள்ளார் சிறைக்காவல் பணியில் இருந்த போலீஸ்காரரான அனீஸ் என்பவர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து அவரை சஸ்பென்ட் ...

ரகுமானுக்கு வெள்ளி விழா ஆந்திர அரசு திட்டம்

Posted:

காக்கிநாடாவில், ஏ.ஆர்.ரகுமானுக்கு வெள்ளி விழா கொண்டாட, ஆந்திர அரசு முடிவு செய்துஉள்ளது. ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர், சந்திர பாபு நாயுடு முதல்வராக உள்ளார். இசைப்புயல், ஏ.ஆர்.ரகுமான் இசைத் துறையில் அடியெடுத்து வைத்து, 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை கொண்டாடும் வகையில், அவருக்கு, ஆந்திர அரசு சார்பில், காக்கிநாடாவில் வெள்ளி ...

பில்லா - 3 படத்தில் அஜித்தா, சிம்புவா?

Posted:

பில்லா படத்தில் ரஜினி நடித்தார். ஆனால், பில்லா -2வில் அஜித் நடித்தார். தற்போது, அஜித்திற்காக, பில்லா -3 படத்திற்கான கதையை தயார் செய்துள்ளார், இயக்குனர், விஷ்ணுவர்தன். அதேபோல், இயக்குனர் வெங்கட்பிரபுவும், பில்லா -3 என்றொரு கதையை சிம்புவுக்காக தயார் செய்து வைத்துள்ளார். அஜித் நடிக்கவில்லையென்றால், உடனடியாக, சிம்பு நடிக்கும், பில்லா -3 ...

கேத்ரின் தெரசாவுக்கு பாடி பிட்னஸ் பயிற்சி!

Posted:

மெட்ராஸ் மற்றும் கடம்பன் படங்களில் நடித்துள்ள, கேத்ரின் தெரசா, 'ஒருபோதும் கிளாமர் காட்ட மாட்டேன்...' என்று, தில்லாக கூறி வந்தார். அதனால், பட வாய்ப்புகள் படிப்படியாக குறைந்து விடவே, தற்போது, தெலுங்கில், கோபிசந்துடன் நடித்து வரும், கவுதம் நந்தா என்ற படத்தில் நீச்சல் உடையணிந்து நடித்துள்ளார். மேலும், நீச்சல் உடையில், தன் உடலமைப்பு ...

நிவேதா பெத்துராஜ்க்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த பிரபல நடிகர்கள்!

Posted:

ஒருநாள் கூத்து படத்தில் அறிமுகமானவர், நிவேதா பெத்துராஜ். அதையடுத்து, பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் நடித்தவர், தற்போது, ஜெயம் ரவியுடன், டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நான் நடித்து வரும் படங்களில், எனக்கு நல்ல பெயர் கிடைக்கும்... என்று கூறும் நிவேதா, அதற்கு காரணம், என்னுடன் நடித்த, பார்த்திபன் மற்றும் ...

அரசியல் கோதாவில் ரோஜா - வாணி விஸ்வநாத்!

Posted:

ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியில் இடம் பெற்று, நகரி தொகுதி, எம்.எல்.ஏ.,வாக இருக்கும் நடிகை ரோஜா, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். அதனால், ரோஜாவுக்கு எதிராக ஒரு நடிகையை கட்சியில் இறக்க, அஞ்சலியை அழைத்தார் சந்திரபாபு நாயுடு; சினிமாவில் பிசியாக இருப்பதால், அவர் தயங்கவே, தற்போது, வாணி ...

தேஜூ - குழந்தைகள் படம் : கங்கனா ரணாவத்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகையான கங்கனா ரணாவத், தற்போது சிம்ரன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் அடுத்தவாரம் ரிலீஸாக இருப்பதால் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அத்துடன் அடுத்தப்படியாக தான் நடிக்கும் ராணி லட்சுமிபாயின் வேடமாக மனிகர்னிகா படத்திலும் பிஸியாக உள்ளார். கங்கனா, தேஜூ என்ற படத்தின் மூலம் விரைவில் ...

அனில் கபூரின் "பேனி கான்" பர்ஸ்ட் லுக் வெளியீடு

Posted:

அதுல் மஞ்ச்ரேக்கர் இயக்கத்தில், அனில் கபூர், ஐஸ்வர்யா ராய், திவ்யா தத்தா நடிக்கும் படம் "பேனி கான்". இசையை மையப்படுத்தி இப்படம் உருவாக இருக்கிறது. "எவிரிபடி பேமஸ்" என்ற டச்சு படத்தை அடிப்படையாக கொண்டு பேனி கான் உருவாக உள்ளது. விரைவில் பேனி கான் படம் ஆரம்பமாக உள்ள நிலையில், அனில் கபூரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ...

ரேஸ் 3 : ஜானுக்கு பதிலாக சித்தார்த்தை சிபாரிசு செய்யும் சல்மான்

Posted:

ரேஸ் படங்களின் வரிசையில் மூன்றாவது பாகமாக ரேஸ் 3 உருவாக இருக்கிறது. சல்மான் ஹீரோவாகவும் நடிக்கிறார். கார் ரேஸை மையமாக வைத்து அதிரடி ஆக்ஷ்ன் படமாக இப்படம் உருவாக உள்ளது. ரெமோ டிசோசா இயக்குகிறார். சல்மான் ஜோடியாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிக்கிறார். முந்தைய பாகங்களில் ஜான் ஆபிரஹாமின் ரோல் மிகவும் பவர்புல்லான ரோலாக இருந்தது. ...

2018, ஜன.,யில் ஆரம்பமாகும் அபிஷேக்-சுசாந்த் படம்

Posted:

சம்பல் கொள்ளைக்காரர்களை மையமாக வைத்து இயக்குநர் அபிஷேக் சவுபே ஒரு படம் இயக்க உள்ளார். இதில் ஹீரோவாக சுசாந்த் சிங் ராஜ்புட்டும், ஹீரோயினாக பூமி பத்னேகரும் நடிக்க உள்ளனர். இன்னும் இப்படத்திற்கு பெயர் வைக்கவில்லை. ஷூட்டிங்கை அடுத்தாண்டு ஜனவரில் ஆரம்பிக்க உள்ளனர். சுசாந்த் சிங், தற்போது அடுத்தடுத்து சில படங்களில் பிஸியாக நடித்து ...

அஜய்யின் ரெய்டு ஆரம்பம்

Posted:

பாத்ஷாஹோ படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் நடிகர் அஜய், அதே உற்சாகத்துடன் தனது அடுத்தபடத்தை ஆரம்பித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் ராஜ் குமார் குப்தா என்பவர் "ரெய்டு" என்கிற படத்தை இயக்குகிறார். இதில் அஜய் தேவ்கன், இலியானா ஜோடி மீண்டும் இணைகிறார்கள். அஜய் வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தின் ...

நயன்தாராவை வாழ்த்திய ஜோதிகா

Posted:

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடனும் நடித்து ஒரு ரவுண்டு வந்தவர் ஜோதிகா. சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர், 8 ஆண்டுகளுக்குப்பிறகு 36 வயதினிலே என்ற படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது மகளிர் மட்டும், நாச்சியார் ஆகிய படங்களில் ...

எனக்கு நானே ரசிகன் : பாலகிருஷ்ணா

Posted:

கவுதமிபுத்ர சட்டகர்னி படத்தை அடுத்து பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பைசா வசூல் படத்தில் நடித்து வந்த பாலகிருஷ்ணா, தற்போது கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தனது தந்தையான என்.டி.ராமாராவின் வாழ்க்கை கதையில் உருவாகும் படத்தில் நடிக்கிறார் பாலகிருஷ்ணா. அந்த படத்தை சர்ச்சை இயக்குனர் ...

ஏஞ்சலினா சிகப்பு ரோஜாக்கள் பாணி படமா?

Posted:

மாவீரன் கிட்டு படத்தின் அதிர்ச்சி தோல்விக்குப்பிறகு அறம் செய்து பழகு மற்றும் புதுமுகங்கள் நடிக்கும் படம் என ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வந்தார் சுசீந்திரன். இதில், அறம் செய்து பழகு படத்தின் தலைப்பை நெஞ்சில் துணிவிருந்தால் என்று மாற்றிய சுசீந்திரன், தீபாவளிக்கு அந்த படம் வெளியாகயிருப்பதாகவும் ...

செப்., 15ல் இசையமைப்பாளர் தரன்குமார் - நடிகை தீக்ஷிதா திருமணம்

Posted:

கே.பாக்யராஜ் இயக்கிய பாரிஜாதம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தரன் குமார். சமீபத்தில் வெளியான காதல் கசக்குதய்யா படம் வரை இவர் 25 படங்களுக்கு இசையமைத்து விட்டார். தரன்குமாருக்கும், ஆகம், நகர்வலம் ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ள தீக்ஷிதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

வருகிற செப்டம்பர் 15-ம் தேதி இவர்களது ...

சரத்குமார் படம் தள்ளிவைப்பு

Posted:

மலையாள படமான டிராபிக் தமிழில் சென்னையில் ஒரு நாள் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதனை ராதிகா சரத்குமாரின் ராடன் நிறுவனம் தயாரித்தது. இப்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இதில் சரத்குமார் நடித்துள்ளார். அவருடன் அஜய், நெப்போலியன், சுஹாசினி, முனிஷ்காந்த், அஞ்சனா பிரேம் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார். ஜேபியார் என்ற ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™