Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


திலீப்பிற்கு உடல் நலம் பாதிப்பு: நிற்க கூட முடியவில்லை

Posted:

கேரளாவில், நடிகை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மலையாள நடிகர் திலீப்பிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரால் நிற்க கூட முடியவில்லை என்று கூறப்படுகிறது.

வெர்டைகோ பாதிப்பு

கேரளாவில் உள்ள ஆலுவா கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள திலீப்பிற்கு, வெர்டைகோ எனப்படும் காதுகளின் ...

திருமணத்தை பற்றி யோசிக்கவில்லை : பிரபாஸ்

Posted:

பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு இந்தியா முழுக்க பிரபலமாகி விட்ட நடிகர் பிரபாஸ், தற்போது 35 வயதை தாண்டிவிட்வார். நடிகர் பிரபாஸூம், அனுஷ்காவும் தீவிரமாக காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை பிரபாஸ் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது...

பொதுவாக ஒரு ...

ஓவியாவுடன் திருமணமா...? சிம்பு கொதிப்பு

Posted:

சமூக ஊடகங்களில் சினிமா நட்சத்திரங்களின் பெயரில் போலியான அக்கவுண்டுகள் நிறைய உலா வருகின்றன. அதன் மூலம் போலியான தகவல்களும் பரபரப்படுகின்றன. இதுதொடர்பாக அவ்வப்போது சம்பந்தப்பட்ட நட்சத்திரங்கள் சைபர் கிரைம் போலீஸை அணுகுவது உண்டு. இப்போது அப்படி ஒரு பிரச்னையை நடிகர் சிம்பு சந்தித்து இருக்கிறார்.

சமீபத்தில் நடிகர் சிம்பு, ...

ரஜினியுடன் பா.ஜ., தேசிய இளைஞரணி தலைவர் சந்திப்பு ஏன்?

Posted:

சமீபகாலமாக நடிகர் ரஜினிகாந்த் அரசியல் தொடர்பான விஷயங்களை முன் எடுத்து வருகிறார். விரைவில் அவர் அரசியல் கட்சி துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நடிகர் ரஜினியை பல்வேறு கட்சி தலைவர்களும், அரசியல் விமர்சகர்களும் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் பா.ஜ.,வின் தேசிய இளைஞரணி தலைவர் பூனம் மகாஜன், நடிகர் ரஜினியை சென்னையில் ...

தெலுங்கு பிக் பாஸ் வீட்டுக்குள் ராணா, இங்கு யார் வருவார் ?

Posted:

தலைப்பைப் பார்த்ததும் போட்டியாளர்களில் ஒருவராக தெலுங்கு பிக் பாஸ் வீட்டிற்குள் ராணா நுழைந்துவிட்டார் என்று நினைத்துவிட வேண்டாம். ராணா நடித்து வரும் 11ம் தேதி வெளிவர உள்ள 'நேனே ராஜு நேனே மந்திரி' படத்தின் பிரமோஷனுக்காகத்தான் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். புனேவை அடுத்த லோனாவாலாவில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான வீடு ...

தனித்து வரும் 'விவேகம்'

Posted:

ஒரு படத்திற்கு அதன் வெளியீட்டிற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பு இருந்தால் அந்தப் படத்தைப் பார்த்து மற்ற படங்கள் ஒதுங்கி விடுவது வழக்கம். எல்லா படத்திற்கும் அப்படி ஒரு 'ஹைப்' கிடைக்காது. ரஜினிகாந்த் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'கபாலி' படத்திற்கு அப்படி ஒரு வரவேற்பு வெளியீட்டிற்கு முன்பு கிடைத்தது. படம் வெளிவந்த ஓரிரு ...

இலங்கைப் பிரச்னை பற்றிய 'ஒக்கடு மிகிலாடு' செப்டம்பர் 8 ரிலீஸ்

Posted:

ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான நடிகர் மோகன் பாபுவின் இளைய மகன் மஞ்சு மனோஜ் நாயகனாக நடித்துள்ள 'ஒக்கடு மிகிலாடு' படம் செப்டம்பர் 8ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தமிழிலும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இந்தப் படம் இலங்கைப் பிரச்னை, எல்டிடிஇ அமைப்பின் போராட்டம் ஆகியவற்றை மையமாக வைத்து ...

இரட்டை எதிர்பார்ப்பில் காஜல் அகர்வால்

Posted:

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால். பெரிய நாயகர்களுடன் பெரிய படங்களில் மட்டுமே நடிப்பார். தமிழில் கடைசியாக, ஜீவாவுடன் காஜல் அகர்வால் நடித்த 'கவலை வேண்டாம்' படம் தோல்வியடைந்தது.

அந்தப் படத்தில் முதலில் கீர்த்தி சுரேஷ் தான் நடிக்க ஒப்பந்தமானார். ஜீவா குடும்பத்தினர் தயாரித்த 'ஜில்லா' ...

தென்னிந்தியர்களுக்கு சுயமரியாதை ஜாஸ்தி : கமல்

Posted:

தென்னிந்தியர்களுக்கு சுயமரியாதை எப்போதும் அதிகம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களை கடந்து ஓடி வருகிறது. நேற்றைய நிகழ்ச்சியில் ஜூலி போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதற்கு முன்பாக கமல், போட்டியாளர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கலந்துரையாடினார். அப்போது ...

ஜப் ஹாரி படம் மக்களிடத்தில் மெதுவாய் தான் போய் சேரும் : ஷாரூக்கான்

Posted:

இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஷாரூக்கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளிவந்த படம் ஜப் ஹாரி மெட் சாஜல். இப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் வசூலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. படம் வெளியான மூன்று நாட்களில் வெறும் ரூ.46 கோடி தான் வசூலத்திருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் ஷாரூக்கான் ...

மராத்தி இயக்குநரின் படத்தில் அமிதாப்

Posted:

மராத்தியில் பிரபலமான இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே. இவர் அடுத்தப்படியாக பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்க உள்ளார். அதுவும் பாலிவுட்டின் பிக் பி யான அமிதாப் பச்சனை வைத்து இப்படத்தை இயக்க உள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒரு கதையை நாகராஜ் தயார் செய்து வந்தார். பின்னர் அந்த கதையை அமிதாப்பிடம் கூறியிருக்கிறார். அவருக்கும் கதை பிடித்து போக ...

பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளித்தலை சொல்லும் சீக்ரெட் சூப்பர்ஸ்டார்

Posted:

தங்கல் படத்தை தொடர்ந்து நடிகர் அமீர்கான், அடுத்தப்படியாக சீக்ரெட் சூப்பர்ஸ்டார் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். அத்வைத் சந்தன் இப்படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமீர்கான், சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படம் பற்றி பேசும்போது...

தங்கல், சீக்ரெட் சூப்பர்ஸ்டார் ...

முகமலர்ச்சி, செல்பியுடன் ஓவியா, முகமூடியில் ஜூலி...!

Posted:

தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி 40 நாட்களை கடந்து விட்டது. நிகழ்ச்சி ஆரம்பமான முதலே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தாலும், அந்த சர்ச்சைகளே நிகழ்ச்சிக்கு பிளஸாக அமைய, இப்போது அதுவே தமிழகத்தில் பிக்பாஸ் பீவராக மாறிவிட்டது.

அதிலும் ஓவியா - ஜூலி பிரச்னையில் பரபரப்பான இந்த நிகழ்ச்சி, தொடர்ந்து ஓவியா - ஆரவ் ...

துப்பறிவாளன் படப்பிடிப்பில் விஷால் காயம்

Posted:

துப்பறிவாளன் படப்பிடிப்பில் நடிகர் விஷால் காயம் அடைந்தார். மிஷ்கின் இயக்கத்தில், விஷால் நடித்து வரும் படம் துப்பறிவாளன். இதன் படப்பிடிப்புகள் கடந்த ஒரு வாரமாக கடலூரில் உள்ள பிச்சாவரம், சிதம்பரம் உள்ளிட்ட பல இடங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில் சிதம்பரம் பகுதியில் இன்று படப்பிடிப்பு நடந்தது. சண்டைக்காட்சியில் விஷால் நடித்து ...

போலீஸாக ஆசைப்பட்டு டிடெக்டிவ் ஆன பிஜூமேனன்..!

Posted:

மலையாளத்தில் கமர்ஷியல் வித் காமெடி என்கிற பார்முலாவில் வெற்றிப்பாதையில் பயணிக்கும் இயக்குனர் தான் ஷபி. இவர் இதற்கு முன்பு திலீப்பை வைத்து இயக்கிய '2 கண்ட்ரீஸ்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, 100 நாட்கள் ஓடி வசூலையும் வாரிக்குவித்தது.

இந்த நிலையில் இயக்குனர் ஷபி தற்போது பிஜூமேனனை ஹீரோவாக வைத்து 'ஷெர்லக் டோம்ஸ்' என்கிற ...

குழந்தைகளின் முதல் வார்த்தை மலையாளமாக இருக்குமோ..? ; கரண் ஜோஹர் கவலை..!

Posted:

பிரபல பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், வாடகை தாய் மூலமாக கடந்த பிப்ரவரி மாதம், ஆண், பெண் என ஒரே சமயத்தில் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார். அவற்றிற்கு யாஷ் மற்றும் ரூஹி என பெயர் வைத்துள்ளார். ஒன்றுக்கு இரண்டாக குழந்தைகள் பிறந்ததில் இருந்து தனது உலகமே மாறிவிட்டது போல சந்தோஷத்தில் திளைக்கும் கரண் ஜோஹரின் மனதில் ...

திலீப்பின் உதவியால் வேலையை இழந்த இளைஞர்

Posted:

நடிகை விவகாரத்தில் கைதாகி தற்போது சிறையில் உள்ள மலையாள நடிகர் திலீப் பற்றி அவ்வப்போது புதுப்புது செய்திகள் வெளியாகி அவரது இமேஜை இன்னும் டேமேஜ் பண்ணிக்கொண்டு தான் இருக்கின்றன. அந்தவகையில் துபாயில் வேலைபார்க்கும் கேரளாவை சேர்ந்த இளைஞர் ஜாசிர் என்பவர் திலீப்பின் உதவியால் தனது கனவு எப்படி வீணாகிப்போனது என்பதை சோஷியல் மீடியாவில் ...

கேரளாவில் முகாமிட்ட பூனம் பாஜ்வா

Posted:

சேவல் படத்தில் தமிழுக்கு வந்தவர் மும்பை நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து, தெனாவெட்டு, கச்சரி ஆரம்பம், துரோகி என பல படங்களில் நாயகியாக நடித்தவருக்கு பின்னர் சரியான படவாய்ப்புகள் இல்லை. அதனால் சில ஆண்டு இடைவெளிக்குப்பிறகு கேரக்டர் நடிகையாக பிரவேசித்தார். ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை-2 என பல படங்களில் நடித்த பூனம் பாஜ்வா, தற்போது ...

அமீர்கான், அவர் மனைவிக்கு பன்றிக்காய்ச்சல்

Posted:

மும்பை : நடிகர் அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ் ஆகியோருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் மும்பையில் உள்ள தங்களின் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, நோய் பரவாமல் இருக்க வெளி இடங்களுக்கு செல்வதை இருவரும் ...

விவேகம் இசை வெளியீடு : அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

Posted:

வேதாளம் படத்தில் முதல் முறையாக இயக்குனர் சிவா, இசையமைப்பாளர் அனிருத், அஜித் கூட்டணி இணைந்தது. அந்தப் படத்தின் பாடல்கள் முழுக்க முழுக்க கமர்ஷியலாக அமைந்து இசை ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெற்றது. மற்ற பாடல்களைக் காட்டிலும் ஆலுமா டோலுமா.. சூப்பர் ஹிட்டாக அமைந்து யு டியூபிலும் 2 கோடியே 67 லட்சம் பார்வைகளுடன் அதிக வரவேற்பைப் பெற்றது. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™