Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


ஆகஸ்ட் 26ம் தேதி படப்பிடிப்புகள் ரத்து

Posted:

வருகிற ஆகஸ்ட் 26-ம் தேதி அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியிருப்பதாவது....

வருகிற ஆகஸ்ட் 26-ம் தேதி தென்னிந்திய திரைப்பட மற்றும் சின்னத்திரை சண்டை இயக்குநர்கள் மற்றும் சண்டை கலைஞர்கள் சங்கத்தின் 50வது ஆண்டு பொன்விழா, ...

அமெரிக்காவில் 'விவேகம்' 300 தியேட்டர்களில் வெளியீடு

Posted:

அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷ்ராஹாசன் மற்றும் பலர் நடித்துள்ள 'விவேகம்' படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 800 தியேட்டர்கள் வரை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையிலும் எந்த ஒரு தமிழ்ப் படமும் வெளியாகாத அளவிற்கு இந்தப் படத்தை 90 சதவீத தியேட்டர்களில் வெளியிடும் வேலைகள் நடந்து வருகின்றன.

இந்த 2017ம் ...

பிருத்விராஜ் பட டைட்டில் மாற்றம்...!

Posted:

பல படங்களில் இணைந்து நடித்த பிருத்விராஜ்-மம்தா மோகன்தாஸ் ஜோடி, நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்து நடிக்கும் படம் தான் 'டெட்ராய்ட் கிராஸிங்'. அமெரிக்காவின் மெக்ஸிகன் மாகாணத்தின், டெட்ராய்ட் நகரில் உள்ள ஸ்ட்ரீட் கேங்ஸ் பற்றிய கதை தான் இது.. அதனால் தான் படத்திற்கு 'டெட்ராய்ட் கிராஸிங்' என டைட்டில் வைத்தனர்.. ஆனால் இப்போது ...

நிவின்பாலியின் நாயகிகளுக்கு தேடிவரும் தெலுங்கு வாய்ப்பு

Posted:

முன்பெல்லாம் மலையாளத்தில் அறிமுகமான நடிகைகள் தமிழுக்கு வந்து பிரபலமானாலும் கூட தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளையும் சமமமாக நினைத்து நடித்து வந்தார்கள். ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் மலையாள சினிமாவில் அறிமுகமாகி பரபரப்பை ஏற்படுத்திய நடிகைகள் பலரும் இப்போது மலையாள சினிமாவை கண்டுகொள்வதேயில்லை என்பது வேறு விஷயம்.. இதில் பல பேர் ...

ஓணம் பண்டிகை ரேஸில் சமுத்திரக்கனியின் 'ஆகாச மிட்டாயி'

Posted:

தமிழில் வெற்றிபெற்ற, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் தான் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் உருவான 'அப்பா'.. இந்தப்படம் தான் இப்போது மலையாளத்தில் 'ஆகாச மிட்டாயி' என்கிற பெயரில் ரீமேக்காகியுள்ளது.. பொதுவாக தமிழில் இருந்து மலையாளத்தில் ஒரு படம் ரீமேக் ஆவது என்பது அபூர்வம்.. இதற்குமுன் சமுத்திரக்கனியின் 'நாடோடிகள் படம் ...

புரொடக்சன் மேனேஜரை காப்பற்றிய மோகன்லால்

Posted:

கடந்த வெள்ளி முதல் சின்னத்திரையில் மோகன்லால் பங்கெடுக்கும் 'லால் சலாம்' என்கிற நிகழ்ச்சி வாரத்தில் இரண்டு நாட்கள் ஒளிபரப்பாகின்றது.. இந்த நிகழ்ச்சியில் அடிமட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையும், அவர்களது நேர்மையும் கடின உழைப்பும் மோகன்லாலால் கௌரவப்படுத்தப்படுவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். அந்தவகையில் கடந்த சனிக்கிழமை ...

'விவேகத்தை விட அஜித்தே பெருசு' - சமாளிக்கும் பார்த்திபன்

Posted:

விஜய் நாயகனாக நடித்துள்ள 'மெர்சல்' படத்தின் இசை வெளியீடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனரும் நடிகருமான பார்த்திபனின் பேச்சு அவர் பேசி முடித்த சில நிமிடங்களிலேயே 'மீம்ஸ்கள்' ஆக உருவாக ஆரம்பித்தன. அவரைக் கிண்டலடித்து நேற்று காலை முதல் பல கிண்டலான வீடியோக்களும் வெளிவந்தன.

'மாஸ், சிஎம், ஆளப் ...

பாக்ஸ் ஆபிஸ் பற்றி சல்மான்-ஷாரூக் கவலைப்பட மாட்டார்கள் : கபீர்கான்

Posted:

சமீபத்தில் சல்மான் கான் நடித்த டியூப்லைட் படமும், ஷாரூக்கான் நடித்த ஜப் ஹாரி மெட் சஜல் படமும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவின. இதுப்பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் கபீர்கானிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது... சல்மான் கான் எப்போதும் ஷாரூக்கானின் படம் என்ன வசூலிக்கிறது என்று பார்க்க மாட்டார். இருவருமே சூப்பர் ஸ்டார்கள் ...

என் படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்க வேண்டும் : வருண் தவான்

Posted:

வருண் தவான் இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் ஜூட்வா 2. 20 ஆண்டுகளுக்கு முன்னர் சல்மான் நடிப்பில் வெளியான ஜூட்வா படத்தின் இரண்டாம் பாகமாக இப்போது உருவாகி இருக்கிறது. வருணின் தந்தை டேவிட் தவானே இயக்க, சாஜித் தயாரித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டு, ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. முன்னதாக ...

ஜூட்வா 2 படத்துடன் சஞ்சய் தத் பட டீசர் ரிலீஸாகவில்லை

Posted:

நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை சினிமாவாக உருவாகி வருகிறது. சஞ்சய் வேடத்தில் ரன்பீர் நடிக்க, ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சஞ்சய் தத் படத்தின் டீசரை, வருண் தவான் நடிப்பில் வெளியாக உள்ள ஜூட்வா படத்துடன் வெளியிட இருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து ஜூட்வா 2 படத்தின் டிரைலர் ...

பிரஸ்தானம் தெலுங்கு ரீ-மேக்கில் சஞ்சய் தத்

Posted:

பூமி படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் சஞ்சய் தத், அடுத்தப்படியாக நிறைய படங்களில் கமிட்டாகி வருகிறார். அதன் ஒரு பகுதியாக தெலுங்கில் தேவா கட்டா இயக்கத்தில், சர்வானந்த் நடிப்பில் வெளியான அரசியல் படம் பிரஸ்தானம். சர்வதே பட விழாக்களில் எல்லாம் பங்கேற்று ரசிகர்களை பாராட்டை பெற்ற இப்படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்ய ...

மோதல் எல்லாம் கிடையாது : அமீர்கான்

Posted:

தங்கல் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அமீர்கான், தயாரிப்பில் உருவாகி வரும் படம் சீக்ரெட் சூப்பர்ஸ்டார். அத்வைத் சந்தன் இயக்கும் இப்படத்தை தங்கல் படத்தில் சின்ன வயது கீதாவா நடித்த ஜய்ரா வாசிம் முதன்மை ரோலில் நடிக்கிறார். அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படத்தின் இசை வெளியீட்டு ...

90 சதவீத தியேட்டர்களில் விவேகம்

Posted:

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1000 தியேட்டர்களில் 90 சதவீத தியேட்டர்களில் விவேகம் திரைப்படம் வெளியாக உள்ளதாகத் தெரிகிறது. பல மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இருக்கும் அனைத்து தியேட்டர்களிலும் இப்படத்தையே திரையிட அந்தந்த தியேட்டர் நிர்வாகத்தினர் முடிவெடுத்துள்ளார்களாம். அது மட்டுமல்ல சிறிய சிறிய ஊர்களில் இருக்கும் சின்னத் ...

அகிலின் ஹலோ பட பர்ஸ்ட் லுக் வெளியானது

Posted:

தெலுங்கில் விக்ரம் குமார் இயக்கிய படம் மனம். அந்த படத்தில் மறைந்த நடிகர் நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகார்ஜூனா மற்றும் அவரது பேரன்கள் நாகசைதன்யா, அகில் ஆகியோரும் இணைந்து நடித்தனர். அந்த படத்தில் சிறிய வேடத்தில் நடித்து அறிமுகமானார் அகில். அதன்பிறகு அகில் என்ற படத்தில் அவர் கதாநாயகனாக நடித்தார்.

இந்தநிலையில், தற்போது மீண்டும் ...

சிரஞ்சீவி படத்தில் விஜய்சேதுபதி, ஏ.ஆர்.ரகுமான் உறுதியானது

Posted:

தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் 151வது படமான 'சைரா' படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். அதோடு ஒரு முக்கியமான ரோலில் விஜய் சேதுபதியும் நடிக்க இருக்கிறார்.

ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான உய்யலவாடா நரசிம்மரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் தயாராக உள்ளது. சுரேந்தர் ...

12 நாட்கள் அமானுஷ்ய வீட்டில் தங்கியிருந்த லொள்ளு சபா சாமிநாதன்

Posted:

லொள்ளு சபாவில் இருந்து சினிமாவுக்குள் வந்த பல நடிகர்களில் சாமிநாதனும் ஒருவர். பல படங்களில் காமெடியன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சந்தானத்துடன் ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.

இந்நிலையில், வேதாளம் படத்தைத் தொடர்ந்து தற்போது அஜீத்தின் ...

சிரஞ்சீவியின் 151வது படத்தின் மோஷன் போஸ்டரை வெளியீடு

Posted:

கைதி எண் 150 படத்தை அடுத்து சுதந்திர போராட்ட தியாகி உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்கிறார் சிரஞ்சீவி. இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், சுதீப் உள்பட பலர் ...

அஞ்சலியை லீடு ரோலில் நடிக்க வைப்பேன்: டைரக்டர் ராம்

Posted:

ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தில் அறிமுகமானவர் அஞ்சலி. முதல் படத்திலேயே சிறப்பாக நடித்திருந்த அஞ்சலி, அதன்பிறகு வசந்த பாலன் இயக்கிய அங்காடித்தெரு மூலம் பிரபலமானார். தற்போது ஜெய்யுடன் பலூன் படத்தில் நடித்திருப்பவர், ராம் இயக்கத்தில் மம்முட்டி நடித்து வரும் பேரன்பு படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், ராம் இயக்கத்தில் ...

சிம்புவின் கூலிங் கிளாஸை திருடிய பிரபல நடிகர்

Posted:

தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மஞ்சு மனோஜ்குமார். தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள இவர், தற்போது விடுதலைப்புலி பிரபாகரன் சம்பந்தப்பட்ட ஒக்கடு மிகிலாடு என்ற படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் தயாராகியுள்ள அந்த படத்தை நான் திரும்ப வருவேன் -என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். இலங்கையில் நடந்த இறுதிப்போரை ...

கௌரவ வேடத்தில் நடிக்கும் நிகிஷா பட்டேல்

Posted:

சித்திக் இயக்கத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த மலையாளப்படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்' , அரவிந்த்சாமி, அமலாபால் நடிக்க 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' என்ற பெயரில் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் சித்திக்.

மம்முடி நடித்த கேரக்டரில் இப்படத்தில் அரவிந்த்சாமியும், நயன்தாரா நடித்த கேரக்டரில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™