Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


100 நாட்களைக் கடக்குமா 'பாகுபலி 2' ?

Posted:

ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 'பாகுபலி 2' படம் வெளிவந்து இன்றுடன் 92 நாட்கள் ஆகிறது. ஏப்ரல் 28ம் தேதி வெளிவந்த இந்தப் படம் கோடை விடுமுறை காலத்தில் மக்களுக்கு மிகப் பெரும் பொழுது போக்குப் படமாக அமைந்தது.

உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்து 1700 கோடிகள் வரை வசூலித்தது வரை படம் பற்றிய தகவல்கள் ...

200 பேருக்கு விஜய் தங்கக்காசு அன்பளிப்பு..!

Posted:

பொதுவாக நடிகர் விஜய் தனது படங்களில் பணியாற்று படக்குழுவினர் அனைவருக்கும் எந்தவித பாகுபாடும் இன்றி வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருப்பவர். அவ்வபோது ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர்களுக்கு விருந்தெல்லாம் வைத்து அசத்துவார். படப்பிடிப்பு முடிந்ததுமோ, அல்லது படத்தின் வெற்றிக்குப் பின்னரோ தனது படக்குழுவினருக்கு ...

125 விவசாய குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கிய தனுஷ்

Posted:

தமிழகத்தில் விவசாய தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நடிகர் தனுஷ் 125 விவசாய குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கியுள்ளார்.

பருவமழை பொய்ததால் தமிழகத்தில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை செய்த சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறின. இதுதொடர்பாக ...

சக்திவேல் பழனிச்சாமி: விஷாலின் புது அவதாரம்..!

Posted:

மலையாளத்தில் உருவாகி வரும் 'வில்லன்' படம் கிட்டத்தட்ட இறுதி வடிவத்தை நெருங்கிக் கொண்டு இருக்கிறது. வரும் ஆக-31ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது. மோகன்லால்-விஷால் என்கிற புதிய கூட்டணியே இந்தப்படத்திற்கான எதிர்பார்ப்பை உச்சத்தில் வைத்திருக்கிறது.

மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் இயக்கியுள்ளார். மிக ...

மோகன்லால் மகனுக்கு முதல் படத்திலேயே ஜோடி இல்லை..!

Posted:

மோகன்லாலின் மகன் பிரணவ், தனது தந்தைபோல நடிப்பு பக்கம் போக விரும்பாமல், இயக்குனராக மாற விரும்பி தொழிலை கற்றுக்கொண்டாலும் கூட, அவரது ஜாதகத்தில் நடிகனாகத்தான் ஆக வேண்டும் என எழுதியுள்ளதை மாற்ற முடியுமா என்ன..? அந்தவகையில் பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் டைரக்சனில் 'ஆதி' என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் பிரணவ்.

ஆக்சன் ...

நடிகை விவகாரத்தில் காமெடி நடிகருக்கு நீடிக்கும் சிக்கல்..!

Posted:

கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை கடத்தப்பட்ட விவகாரத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கு இல்லாவிட்டாலும் கூட இதில் சம்பந்தப்படாத ஒரு சில பிரபலங்கள் கூட சிக்கலில் சிக்கி தவிக்கின்றனர். அதில் ஒருவர் தான் மலையாள சினிமாவின் காமெடி நடிகரான அஜூ வர்கீஸ்.

கடந்த ஜூன்-26ஆம் தேதி, நடிகர் திலீப்பிற்கு ஆதரவாக பேஸ்புக்கில் ஒரு பதிவை ...

மும்மொழி படத்திற்காக மோகன்லால்-சுதீப் கூட்டணி..!

Posted:

பிரபல கன்னட இயக்குனர் பிரேம் தற்போது நடிகர் சிவராஜ் குமாரை வைத்து கன்னடத்தில் 'தி வில்லன்' என்கிற பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் மிதுன் சக்கரவர்த்தி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தனது கனவுப்படமாக இதை உருவாக்கிவரும் பிரேமுக்கு தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ...

விவேகம் டிரைலர் வெளிவருமா.?

Posted:

ரசிகர்களை தியேட்டருக்கு கூட்டி வருவதில் அந்தப் படத்தின் டிரைலருக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. அதனால்தான் டிரைலரை தயார் பண்ணுவதில் அதிக அக்கறை காட்டுவார்கள். இந்த விஷயத்தில் சிறுத்தை சிவா நேர் எதிரானவர்.

அஜித்தை வைத்து அவர் இயக்கிய வேதாளம் படத்தின் டிரைலரை கடைசிவரை அவர் தயார் பண்ணவே இல்லை. தயாரிப்பாளர் தரப்பிலிருந்து பல ...

மீண்டும் புதுமுகங்களுடன் இயக்குநர் சுசீந்திரன்

Posted:

விக்ராந்த், தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் இணைந்து நடித்துள்ள 'அறம் செய்து பழகு' சுசீந்திரன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் பணிகளை முடித்த உடனேயே, அதாவது அறம் செய்து பழகு படம் வெளியாவதற்கு முன்பாகவே தனது அடுத்த படத்தின் வேலைகளைத் தொடங்கினார் சுசீந்திரன். தற்போது ஏறக்குறைய 60 சதவிகித படப்பிடிப்புகளை ...

விஜய் சேதுபதியின் அடுத்த படம்

Posted:

தற்போதைய நிலையில் கைவசம் அதிக படங்கள் வைத்திருக்கும் ஹீரோ விஜய் சேதுபதி தான். ஆனால் அவரது நடிப்பில் அடுத்து வெளிவரும் படம் எது என்பதில் உறுதியான தகவல் இல்லை.
சமீபத்தில் வெளியான 'விக்ரம் வேதா' படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் எந்த படம் அடுத்து வெளியாகிறது என்பதில் இன்னமும் உறுதியான தகவல் இல்லை. இந்நிலையில், விஜய் ...

வித்யூத் ஜம்வால் நடிக்கும் ஜங்கிலி

Posted:

பாலிவுட்டின் ரியல் ஆக்ஷ்ன் ஸ்டார் வித்யூத் ஜம்வால். அஜித்தின் பில்லா, விஜய்யின் துப்பாக்கி, சூர்யாவின் அஞ்சான் போன்ற படங்களில் நடித்தவர் பாலிவுட்டில் கமாண்டோ போன்ற படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். தற்போது பாத்சாகோ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர், அடுத்தப்படியாக ஜங்கிலி பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு ஆக்ஷ்ன் ...

மூன்றாவது முறையாக தள்ளிப்போன ஹசீனா பார்கர்

Posted:

நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனாவின் வாழ்க்கை பாலிவுட்டில் சினிமாவாக உருவாகி உள்ளது. இதில் ஹசீனா ரோலில் ஸ்ரத்தா கபூர் நடித்திருக்கிறார். அபூர்வா லக்கியா இயக்கியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு ரெடியாகிவிட்டது. இப்படம் முதலில் ஜூலை 14-ம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. பின்னர் ஆகஸ்ட் 18-ம் தேதி ...

ஆபாசமான காட்சிகள் இருக்காது : ஆனந்த் எல் ராய்

Posted:

தமிழில் பிரசன்னா - லேகா வாஷிங்டன் நடிப்பில் வெளியான படம் கல்யாண சமையல் சாதம். அறிமுக இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியிருந்தார். இப்படம் ஹிந்தியில் சுப மங்கல் சவுதான் என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.பிரசன்னாவே இயக்க, ஆயுஸ்மான் குரானா, பூமி பத்னேகர் ஹீரோ-ஹீரோயின்களாக நடித்திருக்கின்றனர். பிரபல இயக்குநர் ஆனந்த் ...

ராஸி ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted:

விக்கி கவுசல், ஆலியா பட் நடிப்பில் உருவாகி வரும் படம் ராஸி. மேக்னா குல்சார் இயக்கும் இப்படம், நாவலாசிரியர் ஹரிந்தர் சிகா எழுதிய "காலிங் செக்மேட்டை" மையமாக வைத்து உருவாகி வருகிறது. ஆலியா பட், காஷ்மீர் பெண்ணாகவும், விக்கி கவுசல் பாகிஸ்தானை சேர்ந்த ராணுவ அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமான ...

உருது, பஞ்சாபி மொழி கற்கும் இம்ரான் ஹாஸ்மி

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகரான இம்ரான் ஹாஸ்மி, தற்போது அஜய் தேவ்கன், வித்யூத் ஜம்வால் ஆகியோருடன் பாத்சாகோ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அடுத்து கேப்டன் நவாப் என்ற படத்தில் நடிக்கிறார். இதுகுறித்து இம்ரான் கூறியதாவது.... "என்னுடைய அடுத்தபடம் கேப்டன் நவாப். அருமையான கதை. இதில் நான் உளவாளியாக நடிக்கிறேன். இப்படத்திற்காக உருது ...

தெலுங்கில் டப்பாகிறது காளி

Posted:

மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சாய்பல்லவி. அந்த படத்தில் அவர் நடித்த மலர் டீச்சர் வேடம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதையடுத்து துல்கர் சல்மானுடன் காளி என்ற படத்திலும் நடித்தார். பின்னர் தெலுங்கிற்கு சென்று பிடா படத்தில் நடித்தார். அந்த படம் சமீபத்தில் வெளியாகி தெலுங்கு ரசிகர்கள் ...

நல்ல படமாக இருந்தால் ஓடும் : திலீப் பட இயக்குனர் விரக்தி..!

Posted:

பொதுவாக ஒரு நட்சத்திரத்தின் சொந்த வாழ்க்கையின் சங்கட நிகழ்வுகள் அவர்களது படங்களை எந்தவிதத்தில் பாதிக்கும் என்பதை துல்லியமாக கணிக்க முடியாது. சல்மான் கான் விஷயத்திலும், சஞ்சய் தத் விஷயத்திலும் இதுபோன்ற கணிப்புகள் தவறாக போயுள்ளன. அவர்கள் தவறு செய்தார்கள் என்கிற வழக்கிற்கு பின்னால் வெளியான அவர்களது படங்கள் பாக்ஸ் ஆபீஸில் ...

சினிமா பாணியில் மீடியாவிடம் இருந்து தப்பிய திலீப்பின் மேனேஜர்..!

Posted:

நடிகை விவகாரத்தில் திலீப் கைதுசெய்யப்பட்ட தினத்தில் இருந்தே அவரது மேனேஜர் அப்புண்ணி தலைமறைவாகி விட்டார். இந்த விஷயத்தில் நடிகர் திலீப்புக்கும் முதல் குற்றவாளியான பல்சர் சுனிலுக்கும் பாலமாக இருந்தவர் இந்த அப்புண்ணி தான் என போலீஸ் சந்தேகித்து வந்த நிலையில் அவரது தலைமறைவு அந்த சந்தேகத்தை அதிகப்படுத்தியது. இந்நிலையில் அவரது ...

ஆகஸ்ட் 11 படங்களுக்குள் கடும் போட்டி ?

Posted:

'விவேகம்' படம் முதலில் ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவரலாம் என்ற ஒரு பேச்சு இருந்தது. படத்திற்கு சென்சார் முடிந்த பிறகு 24ம் தேதிதான் வெளியாகும் என்று அறிவித்தார்கள். 'விவேகம்' படத்துடன் எதற்கு மோத வேண்டும் என்று வெளியீட்டிற்குத் தயாராக இருந்த சில படங்களின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்காமல் இருந்தார்கள்.

'தரமணி' படத்தின் ...

நக்ஷ்த்ரம் படத்தை எதிர்பார்க்கும் சந்தீப் கிஷன்

Posted:

யாருடா மகேஷ், மாநகரம் படங்களைத் தொடர்ந்து மாயவன், நரகாசுரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சந்தீப் கிஷன். இதேபோல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ள அவர், தற்போது நக்ஷ்த்ரம், ஷமந்தக்கமனி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் நக்ஷ்த்ரம் படத்தை ரம்யா கிருஷ்ணனின் கணவர் கிருஷ்ணவம்சி இயக்கியுள்ளார்.

இப்படம் பற்றி சந்தீப் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™