Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பயமாக இருக்கிறது: டுவிட்டரில் இருந்து விலகிய சிம்பு அறிக்கை

Posted:


டிவிட்டரில் இருந்து விலகிய குறித்து, நடிகர் சிம்பு அறிக்கை , எதிர்மறை எண்ணங்கள் இருந்தாலும், நேர்மறை சிந்தைதான் எனது வலிமையே. ஆனால் இன்றைய சமூக ஊடகத்தில் எதிர்மறை எண்ணங்களே
ஆதிக்கம் செலுத்துகின்றன. எனவே டுவிட்டரில் இருக்க எனக்கு பயமாக இருக்கிறது.ஒரு நட்சத்திரத்துக்கு சமூக ஊடகம் அவசியம் தான். ஆனால் நான் என் மனம் சொல்வதை ...

முதலில் பார்த்த போதே காதல் - சமந்தா

Posted:

நடிகை சமந்தாவிற்கும், நடிகர் நாக சைதன்யாவிற்கும் அக்டோபர் மாதம் 6ம் தேதி கோவில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இந்து, கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற உள்ளது. நான்கு நாட்களுக்கு அந்த ரிசார்ட்டில் உள்ள அறைகள் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நாயகியாக தொடர்ந்து ...

மீண்டும் மலையாளத்தில் அஞ்சலி

Posted:

தனது சித்தியின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியே வந்தபின் தனது மார்க்கெட் ஓஹோவென உயரும் என எதிர்பார்த்தார் அஞ்சலி. ஆனால் அவருக்கு பப்ளிசிட்டி கிடைத்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒரே ஒரு குத்துப்பாடலுக்கு கூட ஆட்டும் நிலைக்கு இறங்கி வந்தார் அஞ்சலி. இடையில் நடிகருடனான காதல் பந்தம் வேறு அவரை கட்டிபோட்டுவிட்டது. இதோ நீண்ட ...

கமல் பட்டியல் : மம்முட்டிக்கு 2, மோகன்லாலுக்கு 1

Posted:

கமல் சமீபத்தில் தன்னை கவர்ந்த 7௦ இந்திய சினிமாக்களின் பட்டியலை குறிப்பிட்டிருந்தார் அல்லவா. அந்த பட்டியலில் ஏழு மலையாள படங்களும் இடம்பிடித்திருந்தன. அந்த ஏழு படங்களுமே கிட்டத்தட்ட தொண்ணூறுகளுக்கு முன்பு வெளியான படங்கள் தான். பிரேம் நசீர், ஷீலா நடித்த செம்மீன் உட்பட, அடூர் கோபாலகிருஷ்ணன், எம்.டி.வாசுதேவ நாயர், தகழி சிவசங்கரன் ...

என் வாய்ப்புகளை திலீப் தடுக்கவில்லை : பாமா

Posted:

தமிழில் எல்லாம் அவன் செயல், சேவற்கொடி ஆகிய படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பாமா. சமீபத்தில் மலையாள சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை பாமா, தனது வாய்ப்புகளை கடந்த இரண்டு வருடங்களாக யாரோ தடுக்கிறார்கள் போல தெரிகிறது என போகிறபோக்கில் ஒரு திரியை கொளுத்தி போட்டார். ஆனால் காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாக பாமாவின் ...

மோகன்லால் படத்தில் தொடர்ந்து இடம் பிடிக்கும் சரத்குமார்..!

Posted:

மலையாளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சினிமாவுக்கு முற்றிலும் புதுமுகங்கள் 84 பேர் நடித்திருந்த 'அங்கமாலி டைரீஸ்' என்கிற படம் வெளியானது. இந்தப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை அதிகம் கவர்ந்தவர்கள் இரண்டு பேர்.. ஒருவர் அந்தப்படத்தில் லிச்சி கேரக்டரில் செம க்யூட்டாக நடித்த அன்னா ரேஷ்மா ராஜன்.. மற்றவர் அப்பாணி ரவி ...

ஜூனியர் என்டிஆரின் ஜெய் லவகுசா ரிலீஸ் தாமதம்?

Posted:

ஜூனியர் என்டிஆர் முதன்முறையாக 3 வேடங்களில் நடித்து வரும் படம் ஜெய் லவகுசா. இந்த படத்திற்காக ஹீரோ, வில்லன், காமெடியன் என மூன்று மாறுபட்ட கோணங்களில் நடித்துள்ளார் ஜூனியர் என்டிஆர். இந்த படத்தின் போஸ்டர், டீசர்கள் வெளியாகும்போது அவரது ரசிகர்கள் பெரிய அளவில் டிரன்டிங் செய்தனர். அதோடு இந்த படத்தையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் ...

மீண்டும் நிதினுக்கு ஜோடியாகிறார் மேகா ஆகாஷ்

Posted:

தமிழில் ஜெயராமின் மகன் காளிதாஸ் அறிமுகமான ஒரு பக்க கதை படத்தில் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். விஜய்சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இந்த படத்தை இயக்கினார். ஆனால் பல ஆண்டுகளாகியும் அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை.

அதையடுத்து காளிதாஸ் நாயகனாக நடித்த மீன்குழம்பும் மண்பானையும் படம் ...

2 மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்த சாய் பல்லவி படம்

Posted:

பிரேமம் மலையாள படத்தில் நடித்து மலர் டீச்சராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சாய் பல்லவி. அதன்பிறகு மலையாளத்தில் நடித்த காளி அந்த அளவுக்கு பெரிதாக பெயர் வாங்கிக் கொடுக்கவில்லை என்றாலும் தெலுங்கில் அவர் நடித்து வெளியாகியுள்ள பிடா படம் பிரேமம் படத்தைப்போலவே சாய் பல்லவியை பேச வைத்துள்ளது.

பிடா படத்தில் அவர் நடித்த ...

நினைத்து நினைத்து பார்த்தேன்... நா.முத்துக்குமார் முதலாமாண்டு நினைவலைகள்

Posted:

எளிய படைப்புகளில், கவிதை நயத்துடன் அழகிய தமிழையும் சேர்த்து எண்ணிலடங்காத பாடல்களை கொடுத்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். வீர நடை படத்தில் தன்னுடைய முதல் பாடலை எழுதி திரையுலகத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். தொடர்ந்து பல சூப்பர் ஹிட்டான பாடல்களை பல இசையமைப்பாளர்களின் இசையில் கொடுத்தார்.

காதல் பாடலாகட்டும், சோக ...

வருமான வரித்துறை அதிகாரியாக அஜய் தேவ்கன்

Posted:

குப்தா இயக்கும் புதிய படத்தில் அஜய் தேவ்கன் நடிக்கலாம் என செய்தி வெளியான நிலையில், இப்போது அது உறுதியாகியிருக்கிறது. படத்திற்கு ரெய்டு என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அஜய், வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்கிறார். 1980களில் உபி.,யில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக உள்ளது.

இதுகுறித்து இயக்குநர் ...

டெம்பர் ரீ-மேக்கில் ரன்வீர்: கத்ரீனா நடிப்பாரா?

Posted:

ஜூனியர் என்டிஆர்., நடிப்பில் தெலுங்கில் வெற்றி பெற்ற படம் டெம்பர். இப்படம் இப்போது ஹிந்தியில் ரீ-மேக்காக உள்ளது. ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்க, ரோகித் ஷெட்டி இயக்குகிறார். இத்தகவலை இருவரும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், படத்தில் ஹீரோயினாக கத்ரீனா கைப்பே நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. கத்ரீனா இன்னும் உறுதி சொல்லாமல் ...

ஆகஸ்ட் 21-ல் ஜூட்வா-2 டிரைலர்

Posted:

ஜூட்வா படத்தின் இரண்டாம் பாகம், வருண் தவான் நடிப்பில் உருவாகி வருகிறது. வருண் இரண்டு வேடங்களில் நடிக்க, அவருடன் ஜாக்குலின் பெர்ணான்டஸ், டாப்சி ஹீரோயின்களாக நடிக்கின்றனர். டேவிட் தவான் இயக்க, சாஜித் தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிவுற்ற நிலையில் போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் ...

'2.0' தெலுங்கு உரிமை 80 கோடி ?

Posted:

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் '2.0' படத்தின் தெலுங்கு உரிமை சமீபத்தில் விற்கப்பட்டது. ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இரு தெலுங்கு பேசும் மாநிலங்களில் படத்தை வெளியிடும் உரிமையை சுமார் 80 கோடி வரை விற்றுள்ளார்கள் என்று தற்போது செய்திகள் ...

திலீப்பை நீக்கியதில் அவசரம் ஏன்..? ரசூல் பூக்குட்டி கேள்வி...!

Posted:

நடிகை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் மலையாள நடிகர் திலீப்பிற்கான ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள் இன்னும் அவ்வப்போது ஒலித்த வண்ணம் தான் இருக்கின்றன. இப்போது திலீப்பிற்கு ஆதரவாக குரல் எழுப்பியிருப்பது எப்போதுமே அமைதியாக காணப்படும் ஆஸ்கர் விருதுபெற்ற சவுண்ட் இன்ஜினியரான ரசூல் பூக்குட்டி தான். ...

தமிழுக்கு முன் தெலுங்கில் அறிமுகமான மேகா ஆகாஷ்

Posted:

தமிழில் முதன் முதலாக நடிக்க ஆரம்பித்தாலும், தெலுங்கில் முதலில் அறிமுகமான நடிகை என்ற பெயரைப் பெற்றுள்ளார் நடிகை மேகா ஆகாஷ். விஜய் சேதுபதி நடித்த 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இரண்டாவதாக இயக்க ஆரம்பித்த 'ஒரு பக்கக் கதை' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் மேகா ஆகாஷ்.

2014ம் ஆண்டு செப்டம்பார் மாதம் ...

2 கோடி டார்கெட், 'விவேகம்' டீசரா, பைரவா ஹிந்தி' படமா ?

Posted:

'விவேகம், மெர்சல்' படங்கள் வெளிவந்து தியேட்டர்களில் ஓடி முடிக்கும் வரை சமூக வலைத்தளங்களில் விஜய், அஜித் ரசிகர்கள் மோதல் நிற்கவே நிற்காது. அதற்குப் பிறகு கொஞ்சம் ஓய்வு எடுப்பார்கள், மீண்டும் அடுத்த படங்களின் அறிவிப்பு வரும் போது ஆரம்பித்து விடுவார்கள்.

தினமும் புதிது புதிதாக ஏதாவது ஒரு விஷயத்தை எங்கிருந்தோ தேடிப் பிடித்து ...

மகேஷ் பாபுவின் 25வது படம் ஆரம்பம்

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஸ்பைடர்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவின் 25வது படம் இன்று(ஆக., 14) பூஜையுடன் ஆரம்பமானது. இப்படத்தை நாகார்ஜுனா, கார்த்தி நடித்த 'தோழா' படத்தை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் ...

தமிழில் ஓம் நமோ வெங்கடேசாய

Posted:

கடந்த பிப்ரவரி மாதம் தெலுங்கில் வெளிவந்த படம் ஓம் நமோ வெங்கடேசாய. இதில் நாகார்ஜுனா, அனுஷ்கா, பிரயக்யா, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கே.ராகவேந்திரராவ் இயக்கி இருந்தார். மரகதமணி இசை அமைத்திருந்தார். கோபால் ரெட்டி ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்தப்படம் திருப்பதி பெருமாளின் மகிமையை கூறும் சமூக மற்றும் பேண்டசி படம். ...

6 கோடி செலவில் சென்னையில் உருவாகும் செயற்கை மதுரை

Posted:

விஷாலின் சூப்பர் ஹிட் படமான சண்டக்கோழியின் இரண்டாம் பாகம் தயாராகிறது. முதல் பாகத்தை இயக்கிய லிங்குசாமி இயக்குகிறார். விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரிக்கிறார். முந்தைய பாகத்தில் நடித்த ராஜ்கிரண் மீண்டும் நடிக்கிறார்.

படத்தின் கதை களம் மதுரை. ஆனால் ஒட்டுமொத்த யூனிட்டையும் மதுரைக்கு அழைத்துச் செல்வதிலும், மக்கள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™