Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


கற்பனை கதையில் நடிக்கிறேன் : அனுஷ்கா சர்மா

Posted:

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை சினிமாவாக உருவாகி வருகிறது. சஞ்சய்யாக ரன்பீர் கபூர் நடிக்கிறார். சஞ்சய்யின் நண்பர் ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப்படத்தில் நடிகை அனுஷ்கா சர்மாவும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார்.

இதுப்பற்றி அவர் கூறியிருப்பதாவது... "சஞ்சய் ...

தங்கல் இயக்குநர் படத்திலிருந்து வெளியேறிய வருண் தவான்

Posted:

அமீர்கான் நடிப்பில் கடந்தாண்டு இறுதியில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த படம் தங்கல். இந்தியா மட்டுமின்றி சீனாவில் சுமார் ரூ.1000 கோடி வசூலித்து சரித்திரம் படைத்தது. இப்படத்தை இயக்கியவர் நிதேஷ் திவாரி. இவர் அடுத்தப்படியாக ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறார். இதில் ஹீரோவாக வருண் தவான் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது வருண் நடிக்க ...

'பாகுபலி' கற்றுக் கொடுத்தது அதிகம் - பிரபாஸ்

Posted:

இந்தியத் திரையுலக வரலாற்றில் ஒரு படத்திற்காக நான்கு வருட காலம் வேறு எந்தப் படத்திலும் நடிக்காமல் வேறு எந்த நடிகராவது இருந்திருப்பாரா என்பது சந்தேகம் தான். 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களுக்காகவும் மொத்தமாக நான்கு வருட காலத்தை தன் திரையுலக வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தவர் பிரபாஸ். தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ...

கேரள பாக்ஸ் ஆபீஸில் கலக்கும் 'விக்ரம் வேதா'..!

Posted:

கடந்த ஜூலை-21ஆம் தேதி விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் 'விக்ரம் வேதா' படம் ரிலீஸானது. புஷ்கர்-காயத்ரி என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கிய இந்தப்படம் கேரளாவிலும் ரிலீஸானது. கேரளாவில் ஏற்கனவே மாதவனுக்கு நிறைய ரசிகர்கள் இருப்பதாலும், விஜய்சேதுபதியின் படங்கள் ஓரளவு கவனிக்கப்பட்டு வருவதாலும் கணிசமான தியேட்டர்களில் 'விக்ரம் வேதா' ...

முகுந்த் சந்த் போத்ரா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Posted:

கந்து வட்டி தொழிலில் ஈடுபட்டு, சினிமா பிரபலங்கள் உட்பட பலரை ஆட்டிப்படைத்த பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

சென்னை, சவுகார்பேட்டையில், பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்த முகுந்த் சந்த் போத்ரா. இவரிடம், சினிமா தயாரிப்பாளர்கள் உட்பட பலர் கடன் பெற்று, கந்து வட்டியால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் ...

நடிகை விஷயத்தில் கேரள அமைச்சருக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சூடு..!.

Posted:

கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளான வழக்கு கடந்த ஒரு மாதமாக சூடு பிடித்திருக்கிறது. இது தொடர்பாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் வெளியில் உள்ள எல்லா முகங்களும் பாவனாவுக்கு ஆதரவாக இருந்துவிடுமா என்ன..? திலீப்பின் நட்புக்காக ஆளுங்கட்சியான ...

பிரணவ் மோகன்லாலின் 'ஆதி' ஷூட்டிங் தொடங்கியது

Posted:

பஹத் பாசில், துல்கர் சல்மான் என மலையாள திரையுலகில் நட்சத்திரங்களின் வாரிசு ஹீரோவாக களமிறங்கும் வரிசையில் அடுத்த நபராக கோதாவில் குதித்திருப்பவர் மோகன்லாலின் மகன் பிரணவ். தான் அறிமுகமாகும் முதல் படத்தின் முதலநாள் காட்சிக்காக இன்று கேமரா முன் நின்றார் பிரணவ். ஆம்.. அவர் கதாநாயகனாக அறிமுகமாகும் 'ஆதி படத்தின் படப்பிடிப்பு இன்று ...

சோலோவில் 4 கதாநாயகிகள்

Posted:

விக்ரம், ஜீவா நடித்த 'டேவிட்' என்ற படத்தை இயக்கியவர் பிஜாய் நம்பியார். கேரளாவைச் சேர்ந்த இவர் மணிரத்னத்திடம் ராவண் ஹிந்திப் படத்தில் உதவியாளராக பணியாற்றினார். அப்படத்தில் நடித்த அபிஷேக் பச்சன் மூலம் அமிதாப்பச்சனிடம் கதை சொல்லி ஒரு ஹிந்திப்படத்தை இயக்கினார்.

தற்போது இவர் இயக்கி வரும் படம் 'சோலோ'. தமிழ், மலையாளம் என இரண்டு ...

மெர்சல் - மதுரவீரன் படங்களுக்கு ஒரு ஒற்றுமை

Posted:

விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் 'சகாப்தம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சகாப்தம் படம் தோல்வியை தழுவியது. இப்படத்திற்கு பிறகு 'மதுரவீரன்' என்ற படத்தில் நடிக்கிறார்.

ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் படமாம் 'மதுரவீரன்'. எனவே பெரும்பாலான காட்சிகளை மதுரை பின்னணியிலேயே எடுத்திருக்கிறார்கள். ...

பாடல்கள், இடைவேளையின்றி சிம்பு படம்

Posted:

சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. இப்படத்திற்கு பிறகு வேறு படங்கள் எதிலும் கமிட்டாகாத சிம்பு, பல வருடங்களுக்கு முன்பு டிராப் பண்ணப்பட்ட கெட்டவன் படத்தை தூசு தட்டி வருகிறார்.

இதுகுறித்து சிம்பு தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது.... "கெட்டவன் கேட்டிடில் ...

விக்ரம் வேதா தெலுங்கு ரீ-மேக்கில் வெங்கடேஷ்-ராணா

Posted:

ஓரம்போ, வா ஆகிய படங்களை இயக்கிய தம்பதி இயக்குனர் புஷ்கர்-காயத்ரி. இவர்கள் இயக்கிய விக்ரம்-வேதா படம் சமீபத்தில் வெளியானது. மாதவன்-விஜய்சேதுபதி நடித்திருந்த அந்த படத்திற்கு நல்லதொரு ஓப்பனிங் கிடைத்தது. வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், கதிர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், தமிழில் வெற்றி பெற்ற ...

சிரஞ்சீவி படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்

Posted:

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகரான சிரஞ்சீவி, கைதி எண் -150 படத்தைத் தொடர்ந்து, சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி என்பவரின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்கிறார். இப்படத்திற்கு மகாவீரா என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தை ஆகஸ்டு 15-ந்தேதி தொடங்க திட்டமிட்டுள்ளனர். லிங்கா படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேசுடன் ...

விஜயகாந்த் மகனும் ஜல்லிக்கட்டு காளையை அடக்குகிறார்

Posted:

விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நாயகனாக அறிமுகமான படம் சகாப்தம். சுரேந்திரன் இயக்கிய அந்த படத்தில் தேவயானி, சிங்கம் புலி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். கார்த்திக் ராஜா இசையமைத்த அந்த படம் எதிர்பார்த்தபடி சண்முகப்பாண்டியனுக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

இந்தநிலையில், புதிய உற்சாகத்துடன் தற்போது மதுர வீரன் ...

அக்டோபரில் அரசியலுக்கு வருகிறார் பவன் கல்யாண்

Posted:

கட்டமராயுடு படத்தை அடுத்து திரி விக்ரம் இயக்கும் தனது 25வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் பவன் கல்யாண். இந்நிலையில், வருகிற அக்டோபர் மாதம் முதல் நான் அரசியலில் இறங்கி அதிக நேரத்தை மக்களுக்காக செலவிடப்போவதாக தெரிவித்துள்ளார் பவன் கல்யாண்.

அதுகுறித்து அவர் கூறியதாவது, எதிர்காலத்தில் நான் அரசியலில் கூடுதல் கவனம் செலுத்த ...

தமிழில் அன்னபேளே கிரியேஷன்

Posted:

2014ல் வெளிவந்த 'அன்னபேளே' திரைப்படம் உலகளவில் கிட்டத்தட்ட 257 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது. இப்போது வெளிவரவிருக்கும் அதன் இரண்டாம் பாகமான 'அன்னபேளே : கிரியேஷன்' திரைப்படத்தை 'தி கான்ஜுரிங்' படத்தை இணைந்து தயாரித்த பீட்டர் சப்ரான் மற்றும் ஜேம்ஸ் வான் தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தில், ஸ்டெப்னி சிக்மேன் ...

முட்டை ஊழல் அம்பலம் : கமல் புது டுவீட்...!

Posted:

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்திருந்தார். இதற்கு தமிழக அமைச்சர்கள், கமலை கடுமையாக விமர்சித்தனர். பா.ஜ., தலைவர்களும் கமல்ஹாசனை கமலை விமர்சித்தனர்.

ஊழல் புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு ஊழல் புகாரை தெரிவியுங்கள் என கமல் மக்கள் மற்றும் ரசிகர்களிடத்தில் ...

பிஸ்தாவில் மிருதுளா முரளி

Posted:

நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் மிருதுளா முரளி. அதற்கு முன் சில மலையாளப் படங்களில் நடித்துள்ளார். அயாள் நிங்களா படத்தில் பகத் பாசில் ஜோடியாக நடித்தார். அதற்கு பிறகு தமிழில் சிக்கிக்கு சிக்கிக்கிச்சு என்ற படத்தில் நடித்தார். அந்த படம் தோல்வி அடையவே கேரளாவிற்கே சென்று விட்டார். தற்போது மெட்ரோ சிரிஷ் ...

ஏ.ஆர்.ரஹ்மானின் ஒன்ஹார்ட் தமிழில் வெளிவருகிறது

Posted:

கான்சர்ட் வகை படங்கள் ஹாலிவுட்டில் பிரபலம். கான்சர்ட் ஜோனர் என்றால், ஒரு இசைகலைஞர் தன்னுடைய இசைக்குழுவுடன் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சியை எவ்விதம் வெற்றிக்கரமாக மேடையேற்றுகிறார் என்பதை விவரிக்கும் படம். ஹாலிவுட்டில் இதற்கு முன் ஏராளமான இசைக்கலைஞர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சியை முன் வைத்து இது போன்ற படங்கள் வெளியாகியிருக்கின்றன. ...

சினிமா படப்பிடிப்பு தடைக்கு பெப்சி காரணமில்லை : செல்வமணி

Posted:

'பில்லா பாண்டி' படப்பிடிப்பில் நடைபெற்ற பிரச்னையால் தமிழ்த் திரையுலகத்தில் தற்போது, தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்ஸி சங்கத்திற்கும் மோதல் ஏற்பட்டு அது தீவிரமடைந்து இன்று பெப்ஸி தரப்பில் வேலை நிறுத்தும் செய்யும் அளவிற்கு வந்துள்ளது. இதனால் படத் தயாரிப்பு பணிகளில் பெப்ஸி சங்கத்தினர் ஈடுபடுவது குறைந்துள்ளது. சம்பள ...

சினிமாவாகிறது ஜெயகாந்தன் நாவல்

Posted:

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும், சினிமாவுக்கும் நிறைய தொடர்பு உண்டு. அவருடைய பல கதைகள் சினிமாகியிருக்கிறது. காவல் தெய்வம், யாருக்காக அழுதாள், சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள். ஊருக்கு நூறுபேர் ஆகிய கதைகள் படமாகியிருக்கிறது. இதில் இரண்டு கதைகளை அவர் இயக்கவும் செய்திருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™