Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு கிடைக்குமென பிரதமர் மோடி நம்பிக்கை! பார்லி., கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த வலியுறுத்தல்

Posted: 17 Jul 2017 09:03 AM PDT

புதுடில்லி: ''ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறைக்கு, அனைத்து எதிர்க்கட்சிகளும் அளித்த ஆதரவு, நடப்பு பார்லி., மழைக்கால கூட்டத்தொடரிலும் தொடரும்,'' என, பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

பார்லி., மழைக்கால கூட்டத்தொடர், நேற்று துவங்கியது. முன்னதாக, கூட்டத்தொடர் குறித்து, பிரதமர் மோடி கூறியதாவது:இந்த கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது. புதிய ஜனாதிபதி, துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க உள்ளோம்.
சுதந்திர தினம்
நாட்டின், 70வது சுதந்திர தினத்தையும், 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின், 75வது ஆண்டையும் கொண்டாட ...

நடிகர் திலீப்பின் ஜாமின் மனுவை அவசரமாக விசாரிக்க கோர்ட் மறுப்பு

Posted: 17 Jul 2017 09:08 AM PDT

நடிகை பாவனா பாலியல் தொந்தரவு தொடர்பான வழக்கில், நடிகர் திலீப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க, கேரள ஐகோர்ட் மறுத்து விட்டது. 'ஜூலை 20ல் இம்மனு எடுத்துக்கொள்ளப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த பாவனா, 31, கேரளாவில் கடத்தப்பட்டு, பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த வழக்கில், பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.
'சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது' என கூறி, அங்கமாலி நீதிமன்றம் திலீப்புக்கு ஜாமின் மறுத்தது.
மீண்டும் மனு : ...

லாலு பிரசாத்துடன் மோதல் எதிரொலி; சோனியாவிடம் நிதிஷ் ஆலோசனை

Posted: 17 Jul 2017 10:13 AM PDT

பாட்னா: பீஹாரில், ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த, துணை முதல்வர் தேஜஸ்விக்கு எதிராக, ஊழல் புகார் கூறப்பட்டதை அடுத்து, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளத்துடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்., தலைவர் சோனியாவிடம், நிதிஷ் ஆலோசனை கேட்டுள்ளார். பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. துணை முதல்வராக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரும், முன்னாள் முதல்வருமான, லாலு ...

தொலைநோக்கு திட்டம் - 2023 அ.தி.மு.க., தொலைத்து விட்டது ஸ்டாலின் குற்றச்சாட்டு

Posted: 17 Jul 2017 10:16 AM PDT

சென்னை : 'தொலைநோக்கு திட்டம் - 2023ஐ, அ.தி.மு.க., தொலைத்து விட்டது; கைவிட்டு விட்டது' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டிஉள்ளார்.

அவரது அறிக்கை:
தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, அ.தி.மு.க., ஆட்சியில், மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு வந்து விட்டது. தொழில் வர்த்தக சபைகளும், உலக வங்கி அறிக்கைகளும், தமிழக தொழில் வளர்ச்சியின் வீழ்ச்சியை படம் பிடித்துக் காட்டினாலும், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, கவலைப்படுவதாகவே தெரியவில்லை.
ஞானோதயம் பிறக்கவில்லை.
நிடி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி, 'தொழில் துவங்குவதற்கு ...

பா.ஜ., கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையா!

Posted: 17 Jul 2017 10:30 AM PDT

ராஜ்யசபாவை பிரச்னை இல்லாமல் முடங்காமல் நடத்த வேண்டும்; எதிர்க்கட்சிகளை சமாளிக்க வேண்டும். 2019 லோக்சபா தேர்தலில் தென் மாநிலங்களில் கட்சிக்கு அதிகமான ஓட்டுகள் கிடைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு அம்சங்களை மனதில் வைத்து ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கும் வகையில் துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக வெங்கையா நாயுடுவை 68, மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு நிறுத்தி உள்ளது. இதனால் காந்தி பேரனுக்கும், இவருக்கும் இடையே போட்டி நிலவுவது உறுதியாகி உள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நேற்று ...

விதிகளின்படி செயல்பட்ட ஜனாதிபதி

Posted: 17 Jul 2017 10:39 AM PDT

வரும், 25ம் தேதி, நாட்டின், 14வது ஜனாதிபதி பதவியேற்க உள்ள நிலையில், பிரணாப் முகர்ஜி, 81, ஜனாதிபதி பதவியில் இருந்து விலக உள்ளார். வரும், 23ம் தேதி அவருக்கு மத்திய அரசு சார்பிலும், எம்.பி.,க்கள் சார்பிலும் பிரிவுபசார விழா நடக்க உள்ளது; அதற்கு முன்னதாகவே, புதிய ஜனாதிபதி யார் என்பது தெரிந்துவிடும்.மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த, பிரணாப் முகர்ஜி, தன், 60 ஆண்டுகால பொது வாழ்க்கையில், பல ஏற்றங்களை பார்த்தவர்.

நீண்ட அரசியல் அனுபவம்
முன்னாள் பிரதமர் இந்திராவின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாகவும், நிதி, ராணுவம், வெளியுறவு என, பல்வேறு துறைகளின் மத்திய ...

பழனிசாமி - தினகரன் மோதல் அதிகரிப்பு; கட்சி நாளிதழில் முதல்வர் படம், செய்திக்கு தடை

Posted: 17 Jul 2017 10:57 AM PDT

முதல்வர் பழனிசாமிக்கும், தினகரனுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. அதனால், அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழில், முதல்வர் படம் மற்றும் செய்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆளும் கட்சியான, அ.தி.மு.க.,வின், அதிகாரப்பூர்வ நாளிதழ், 'நமது எம்.ஜி.ஆர்.,' இதன் நிறுவனரான ஜெயலலிதா மறைவுக்குப்பின், நாளிதழ் சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்ட போது, பன்னீர் அணிக்கு எதிரான செய்திகள், அதிகம் வெளியாகின. துணை பொதுச் செயலராக, சசிகலாவின் அக்கா மகன் தினகரன் உள்ளதால், அவர் தொடர்பான செய்திகளும், முதல்வர் ...

சசியை அம்பலப்படுத்திய ரூபா தூக்கியடிப்பு; குற்றச்சாட்டுக்கு ஆளான டி.ஜி.பி.,க்கு காத்திருப்போர் பட்டியல்

Posted: 17 Jul 2017 11:35 AM PDT

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள, அ.தி.மு.க., சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்ததை கண்டுபிடித்த, கர்நாடக சிறைத் துறை, டி.ஐ.ஜி., ரூபா, இடமாற்றம் செய்யப்பட்டு, 'டம்மி' பதவிக்கு துாக்கியடிக்கப்பட்டார்.

புகாருக்கு ஆளான சிறைத் துறை, டி.ஜி.பி., சத்யநாராயண ராவ், சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
சிறைக்கு வரலாம்
சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட, அ.தி.மு.க., சசிகலா, பெங்களூரு பரப்பன ...

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் வெங்கையா

Posted: 17 Jul 2017 11:43 AM PDT

புதுடில்லி: பா.ஜ., கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட வெங்கையா நாயுடு, தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இன்று(ஜூலை 18) காலை 11 மணிக்கு அவர் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
துணை ஜனாதிபதி வேட்பாளர்:
ராஜ்யசபா தலைவராக உள்ள துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் ஆக., 10ல் முடிவுக்கு வருகிறது. புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆக., 5ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் காங்., உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகளின் சார்பில் காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி (72) ...

ஜனாதிபதி தேர்தலில் 99 சதவீதம் ஓட்டுப்பதிவு

Posted: 17 Jul 2017 11:48 AM PDT

நாட்டின் 14வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தலில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி சார்பில் பீஹார் முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்தும், காங்., தலைமையிலான 18 எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீரா குமாரும் போட்டியிட்டனர்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த தேர்தலின் ஓட்டுப் பதிவு தலைநகர் டில்லியிலும், அனைத்து மாநில தலைநகரங்களிலும் நேற்று நடந்தது. தேர்தலுக்காக பார்லிமென்ட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி முதல் தளத்தில் உள்ள 62ம் எண் அறை ஓட்டுச்சாவடியாக ...

'ஐ.எஸ்., தலைவன் சாகவில்லை'

Posted: 17 Jul 2017 01:11 PM PDT

சுலைமானியா: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவன், அபு பக்கர் அல்பாக்தாதி உயிருடன் இருப்பதாக, ஈராக்கில் இயங்கி வரும், குர்து இன மக்களின் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு இயங்கி வருகிறது. ஈராக்கில், அந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை, ஈராக் ராணுவமும், குர்து இன மக்கள் படையும் மீட்டு வருகின்றன. ஈராக்கின் முக்கிய பகுதியான மொசூல் நகரம் சமீபத்தில் மீட்கப்பட்டது. அப்போது நடந்த சண்டையில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் ...

'மனித பிரமிடு அமைப்பது சாகச விளையாட்டா?'

Posted: 17 Jul 2017 01:56 PM PDT

மும்பை: மனித பிரமிடு அமைக்கும், 'தஹி ஹண்டி' எனப்படும், உறியடி விழாவை, சாகச விளையாட்டு என, வகைப்படுத்தியதற்கான காரணங்களை கூறும்படி, மஹாராஷ்டிர அரசுக்கு, மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், மனித பிரமிடு அமைக்கும், தஹி ஹண்டி விழா, ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படும். அதில், சிறுவர்கள் பங்கேற்கக் கூடாது என்றும், 20 அடி உயரத்துக்கு மேல், மனித பிரமிடு அமைக்கக் கூடாது என்றும், 2015ல், மும்பை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™