Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


விஜய், அஜித் படங்களுக்கு சவால் விடும் மகேஷ் பாபு வியாபாரம்

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் ஒரு படத்தின் வியாபாரம் என்பது சில நடிகர்களுக்கு மட்டுமே வெளியீட்டிற்கு முன்பாக முழுவதுமாக நடந்து முடிந்து விடும். பலத்த போட்டிகளுக்கு இடையில்தான் சிலர் அந்த வியாபாரத்தை முடிப்பார்கள். ரஜினிகாந்த், விஜய், அஜித் என்ற வரிசையில்தான் அந்த வியாபாரம் இருந்து வருகிறது. மற்றவர்கள் இவர்கள் மூவருக்குப் பிறகே. ...

மீண்டும் ஸ்லிம்மான அனுஷ்கா

Posted:

பாகுபலி-2 படத்திற்கு முன்பு அனுஷ்கா நடித்த படம் இஞ்சி இடுப்பழகி. இந்த படத்திற்காக தனது உடல் எடையை அதிகப்படுத்தி நடித்தார். பின்னர் அவரால் பழைய உடல்கட்டுக்கு மாற முடியவில்லை. மாதக்கணக்கில் டயட்ஸ், உடற்பயிற்சி செய்தும் பலன் கிடைக்க வில்லை. இருப்பினும் பாகுபலி-2 படப்பிடிப்பை நடத்த வேண்டிய கட்டாயம் இருந்ததால் அனுஷ்காவின் குண்டான ...

2.0 விளம்பரம் : 1450 கி.மீ., பயணம் செய்யும் ஆர்யா

Posted:

பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்பதைப்போல், ரஜினி நடிக்கும் படத்துக்கு விளம்பரம் தேவையில்லை. தன்னுடைய படத்தைப் பற்றி ரஜினி பேசாமலே அவருக்கு விளம்பரம் கிடைத்து விடுகிறது. இன்னொரு பக்கம், ஒவ்வொரு முறை ரஜினி படம் ரிலீஸாகும்போது ஏதாவது ஒரு வித்தியாசமான விளம்பர யுக்தியை தயாரிப்பாளர்கள் கையாண்டு வருகின்றனர்.

'எந்திரன்' ...

வேலைக்காரன்-ல் பகத் பாசில் வில்லன்?

Posted:

சிவகாரர்த்திகேயனின் நடிப்பு மற்றும் அவரது நண்பர் ஆர்டி.ராஜா தயாரிப்பில், மோகன் ராஜா இயக்கும் 'வேலைக்காரன்' படத்தில் மலையாள நடிகர் பகத் பாசிலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

மலையாளத்தின் முன்னணி கதாநாயகனாக நடித்து வரும் பகத் பாசிலுக்கு என்ன வேடம் கொடுத்திருப்பார்கள்? என்ற கேள்விக்கு தற்போது விடை தெரிய ...

சர்வர் சுந்தரமா? சக்க போடு போடு ராஜாவா?

Posted:

சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' படம் ரெடியாகி பல மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது. இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கிய கே.ஆர்.பிலிம்ஸ் வாங்கியிருக்கிறது. நிதி சிக்கல் காரணமாக இப்படம் ரிலீஸில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படம் தவிர மணிகண்டன் இயக்கத்தில் 'ஓடி ஓடி உழைக்கணும்', ...

தயாரிப்பாளரின் மகனையே ஹீரோவாக்கிய பாலாஜி சக்திவேல்

Posted:

'காதல்', 'கல்லூரி', 'வழக்கு எண் 18/9' முதலான படங்களை இயக்கியவர் பாலாஜி சக்திவேல். இவர் இயக்கிய படங்கள் பாராட்டைப் பெற்றாலும் கமர்ஷியலாக பெரிய லாபத்தைக் கொடுக்கவில்லை.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய படம் இயக்கும் பாலாஜி சக்திவேல், தான் இயக்கும் படத்திற்கு 'யார் இவர்கள்' என்று பெயர் சூட்டியுள்ளார். இந்த ...

அசத்தும் துல்கரின் 'பறவ' பர்ஸ்ட்லுக்..!

Posted:

நேற்று துல்கர் சல்மானின் பிறந்தநாள் என்பதால் அதை முன்னிட்டு அவரையும், அவரது ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தும் விதமாக திரையுலகத்தில் சில நிகழ்வுகள் நடந்துள்ளன.. தற்போது அவர் தமிழ், தெலுங்கில் நடித்துவரும் 'மகாநதி' படத்தில் அவருடைய பர்ஸ்ட்லுக் போஸ்டர், மலையாளம், தமிழ் என இருமொழிகளில் நடித்துள்ள 'சோலோ' படத்தின் டீசர் மற்றும் ...

'ஒடியன்' படத்துக்காக 15 கிலோ எடை குறைக்கும் மோகன்லால்..!

Posted:

இன்று இளம் நடிகர்கள் உடல் எடையை கூட்டிக்குறைக்கும் வேலையை, 56 வயதான நடிகர் மோகன்லால் அசால்ட்டாக செய்துகொண்டிருப்பதுதான் மற்ற நடிகர்களையும் அவர்களது ரசிகர்களையும் கூட வாய்பிளக்க வைத்திருக்கிறது.. சமீபத்தில் அவர் நடித்துவந்த 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் அவரது தோற்றங்கள் வெளியாகின.

அதில் கல்லூரி துணை முதல்வராக சற்று ...

மலையாள சினிமாவின் யூத் ஐகான் யார் தெரியுமா..?

Posted:

கேரள அரசின் இளைஞர் கமிஷன் வருடந்தோறும் ஒவ்வொரு துறையிலும் சாதித்த ஒரு நபரை அந்த வருடத்தின் 'யூத் ஐகான்' ஆக அறிவித்து கௌரவப்படுத்தி வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் சம்பந்தப்பட்டவரின் துறை சார்ந்த நடவடிக்கைகள், பொதுமக்கள் முன் அவர் தோன்றும் விதம், சமூக விஷயங்களில் அவர்களது அக்கறை என இதுபோன்ற சில விஷயங்களை கணக்கில் எடுத்துக் ...

ரவிதேஜாவிடம் விசாரணை ; அதிரவைத்த அதிகாரிகள்..!

Posted:

கடந்த சில நாட்களாக ஆந்திராவில், குறிப்பாக தெலுங்கு திரையுலகில் சுழன்றடிக்கும் போதைப்பொருள் மாபியா குறித்து தெலுங்கு திரையுலக பிரபலங்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று நடிகர் ரவி தேஜாவிடமும் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் தனக்கும் போதை கும்பலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று கூறிய ரவி தேஜா, ...

ஜெமினி கணேசன் ஆக மாறிய துல்கர் சல்மான்

Posted:

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மகாநதி என தெலுங்கிலும், நடிகையர் திலகம் என தமிழிலும் தயாரித்து வருகிறார்கள். நாக் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், நடிகை சாவித்ரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமந்தா பத்திரிகையாளராக நடிக்கிறார். சாவித்ரியின் காதல் கணவர், நடிகர் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் மலையாள ...

தயாரிப்பாளர்களுடன் சண்டையிட தயாராக இல்லை : பெப்சி

Posted:

சம்பள பிரச்னை தொடர்பாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சி அமைப்பிற்கும் மோதல் வெடித்துள்ளது. இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகின்றனர். பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல் தயாரிப்பாளர்கள் தங்கள் படப்பிடிப்பை வேறு தொழிலாளர்கள் வைத்து நடத்தி கொள்ளலாம் என அறிவித்தது.

இதற்கு பெப்சி கடும் கண்டனம் ...

சாய் பல்லவிக்கு சமந்தா பாராட்டு

Posted:

திரையுலகத்தில் ஒரு நடிகையின் நடிப்பை மற்றொரு நடிகை பாராட்டுவது என்பதெல்லாம் அபூர்வமாக நடந்த விஷயங்களாக ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், இந்தக் காலத்தில் அனைவரும் பொறாமை எதுவும் இல்லாமல் ஒற்றுமையாகவே இருக்கிறார்கள். ஒருவர் நடிப்பு போல மற்றொருவர் நடிப்பும் வராது, ஒருவர் ஸ்டைல் போல மற்றொருவர் ஸ்டைலும் வராது.

தெலுங்குத் ...

அனிருத் - விக்னேஷ் சிவனின் அடுத்த ஹிட்

Posted:

வணக்கம் சென்னை படத்தில் எங்கடி பொறந்தே, என்னை அறிந்தால் படத்தில் அதாரு அதாரு, மாரியில் தப்பாதான் தெரியும், நானும் ரெளடிதான் படத்தில் தங்கமே உன்னைத்தான், என்னை மட்டும் காதலி, ரெமோவில் வாடி என் தமிழ்ச்செல்வி, செஞ்சிட்டாளே என பல பாடல்களை எழுதியவர் இயக்குனர் விக்னேஷ்சிவன். இதில் என்னை அறிந்தால் பாடல் தவிர மற்ற அனைத்து பாடல்களையும் ...

மணிரத்னம் படத்தின் ஹீரோ யார்?

Posted:

காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்தப்படியாக ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறார். அரவிந்த்சாமி, ராம்சரண் தேஜாவை இணைத்து ஒரு படம் இயக்கப்போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இதையடுத்து மாதவன் - மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக ஒரு செய்தி வெளியானது.

இந்நிலையில் தற்போது மணிரத்னத்தின் புதிய படத்தில் ...

உலகப்பட விழாக்களில் திரையிடப்பட்ட சிகை ரிலீசுக்கு ரெடி

Posted:

மதயானைக்கூட்டம், கிருமி உள்பட சில படங்களில் நடித்தவர் கதிர். இவர் சமீபத்தில் திரைக்கு வந்த விக்ரம் வேதா படத்தில் விஜய்சேதுபதியின் தம்பியாக நடித்திருந்தார். இந்த நிலையில், கதிர் நடிப்பில் பல மாதங்களுக்கு முன்பே தயாராகி விட்ட சிகை படமும் ஆகஸ்ட் மாதம் ரிலீசுக்கு தயாராகி விட்டது.

அவ்வை சண்முகி படத்தில் கமல், ரெமோ படத்தில் ...

நான் ரொம்ப லக்கி : துல்கர் சல்மான்

Posted:

விக்ரம் நடித்த டேவிட் படத்தை இயக்கியவர் பிஜாய் நம்பியார். இவர் தற்போது துல்கர் சல்மானை வைத்து சோலோ என்ற படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக டைரக்டர் மணிரத்னம் கலந்து கொண்டார்.

நேற்று துல்கர் சல்மானுக்கு பிறந்த நாள் ...

'விவேகம்' டீசரா, 'தெறி ஹிந்தி' படமா ? எது முன்னிலை ?

Posted:

தமிழ்ப் படங்களின் டீசர், டிரைலர், முதல் பார்வை, டிவீட், ரிடிவீட், லைக் ஆகியவற்றுக்குத்தான் அஜித், விஜய் ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்வது வழக்கம். தற்போது புதிதாக 'ஹிந்தி' டப்பிங் சாதனைகளுக்கௌல்லாம் சண்டையிட்டுக் கொண்டு அடுத்த சர்ச்சையை ஆரம்பித்து வைக்கிறார்கள். இந்த காரசார மோதல் இன்னும் எதில் எல்லாம் போய் முடியப் போகிறதோ ...

ஜுலி நடிக்க, நாடகத்தை இயக்கிய பிக் பாஸ்

Posted:

'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஆரம்பமான நாளிலிருந்தே இந்த நிகழ்ச்சி 'ஸ்கிரிப்டட்' என்ற பேச்சு இருந்து வருகிறது. பலருக்கும் அது புரிந்திருந்தாலும் அதையும் மீறிய சில இயல்பான நிகழ்வுகள், சுவாரசியமான விஷயங்கள், சின்னச் சின்ன சண்டைகள் ரசிக்க வைத்தன. ஆனால், கடந்த சில நாட்களாக எதுவுமே இயல்பாக நடக்காமல் யாரோ எழுதிக் கொடுத்ததை, பிக் பாஸ் ...

கருணாகரனை மாடர்னாக மாற்றிய அஜித்

Posted:

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் கருணாகரன். அதன்பிறகு பல படங்களில் நடித்தார் லிங்கா படத்தில் ரஜினியுடன் நடித்தார். நடுத்தர குடும்பத்து கதைகளில் வரும் ஹீரோக்களுக்கு நண்பனாக காமெடி வேடத்தில் நடித்து வருகிறார்.

கருணாகரன் இப்போது அடுத்த தளத்துக்கு சென்றிருக்கிறார். இதுவரை அவருக்கு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™