Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


4-வது முறையாக இணைந்த விஜய்சேதுபதி - காயத்ரி

Posted:

இன்றைய தேதியில் கைவசம் அதிக படங்களை வைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருபவர் விஜய்சேதுபதி தான். ஏறக்குறைய ஒரு டஜன் படங்களில் நடிக்க ஒப்புக் காண்டிருக்கும் அவருடைய படப் பட்டியலில் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படமும் ஒன்று.

இந்தப் படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து கௌதம் கார்த்திக்கும் இன்னொரு ...

அடுத்த ஹிட்டுக்கு தயாராகும் ஆசிப்-அபர்ணா ஜோடி..!

Posted:

கடந்த ஒரு வாரத்திற்கு முன் மலையாளத்தில் வெளியான சண்டே ஹாலிடே படம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக மவுத் டாக் பப்ளிசிட்டி இந்தப்படத்திற்கு கூட்டத்தை வரவழைக்க ரொம்பவே உதவியுள்ளது. அதனால் தான் கடந்த ஆறு நாட்களில் மட்டும் சுமார் ஐந்து கோடி ரூபாயை இந்தப்படம் வசூலித்துள்ளது. இது இளம் நாயகர்களில் இரண்டாம் நிலை நாயகனாக ...

தயாரிப்பாளரின் மகனுக்கு ஜோடியாக நடிக்கிறார் மியா ஜார்ஜ்..!

Posted:

மியா ஜார்ஜ் நடித்துக் கொண்டுதான் இருக்கிறாரா..? படங்கள் ஒன்றையும் அவ்வளவாக காணவில்லையே என்பது போலத்தான் அவரது படங்கள் வருவதும் தெரியாமல் போவதும் தெரியாமல் வந்துபோய் விடுகின்றன. ஆனாலும் இந்த வருடத்தில் தமிழில் 'ரம்', 'எமன்' மற்றும் மலையாளத்தில் 'தி கிரேட் பாதர்' என மூன்று படங்கள் அவரது நடிப்பில் வெளியாகிவிட்டன.. இன்னும் ஆறு ...

பாங்காங் ட்ரிப் பற்றி விளக்கம் கொடுத்த பூரி ஜெகன்நாத்..!

Posted:

சமீப நாட்களாக தெலுங்கு திரையுலகை சுற்றி சுழன்றடித்து வருகிறது பிரபலங்கள் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம்.. திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளனர்.. குறிப்பாக இயக்குனர் பூரி ஜெகன்நாத்தும் போதைப்பொருள் பயன்படுத்துபவர் தான் என சிலர் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.. தவிர அவரது ...

முதல்நாளில் ரூ.6.65 கோடி வசூலித்த முன்னா மைக்கேல்

Posted:

டைகர் ஷெரப், நித்தி அகர்வால், நவாசுதீன் சித்திக் நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள படம் முன்னா மைக்கேல். ஹீரோபன்டி, பாகி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக டைகரை இயக்கியுள்ளார் சபீர் கான். சுமார் ரூ.45 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இந்தியா முழுக்க சுமார் 3000 தியேட்டர்களில் வெளியானது. இது கடந்தவாரம் வெளியான ரன்பீர் கபூரின் ஜகா ஜசூஸ் ...

டாய்லெட் படம் : ஆன்லைனில் லீக்கானது

Posted:

அக்ஷ்ய் குமார் நடிப்பில் அடுத்தப்படியாக வெளியாக இருக்கும் படம் "டாய்லெட் ஏக் பிரேம் கதா". பிரதமர் மோடியின் கனவு திட்டமான தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி ஒரு சமூக படமாக இப்படம் உருவாகியிருக்கிறது. ஸ்ரீ நாராயண் சிங் இயக்குகிறார். ஆகஸ்ட் மாதம் படம் வெளியாக உள்ள நிலையில் இப்படம் ஆன்லைன் லீக்காகி உள்ளது. ஆனால் இந்த விஷயம் ...

தீபிகாவின் மாபியா படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted:

பிக்கு படத்தை படத்தை இர்பான் கான், தீபிகா படுகோனே இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள். பிரபல இயக்குநர் விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் படத்தில் தான் இர்பான் கான், தீபிகா படுகோனே இருவரும் நடிக்கின்றனர். இப்படம் மாபியா தொடர்பான கதையில் உருவாகிறது. இர்பான்கான், தீபிகா இருவருமே மாபியா ரோலில் நடிக்க உள்ளனர். இன்னும் ...

கரண் ஜோகரிடமிருந்து அழைப்பு வரவில்லை - ஷாரூக்கான்

Posted:

நடிகர் ஷாரூக்கான் தற்போது இம்தியாஸ் அலியின் படம், அடுத்தப்படியாக ஆனந்த் எல் ராய் படம் என பிஸியாக உள்ளார். சமீபத்தில் அவர் கரண் ஜோகரின் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து ஜப் ஹேரி மெட் செஜல் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஷாரூக்கிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது...

கரண் ஜோகர் படத்தில் நடிக்க எனக்கு ...

யாரும் சிபாரிசு செய்யவில்லை : அனுஷ்கா

Posted:

அனுஷ்கா சர்மா நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ஜப் ஹேரி மெட் செஜல். ஷாரூக்கான் ஹீரோவாக நடித்திருக்கிறார், இம்தியாஸ் அலி இயக்கியிருக்கிறார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு மும்பையில் நேற்று நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அனுஷ்காவிடம், சினிமாவில் சிபாரி குறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது....

சினிமாவில் எனக்கு ...

நாச்சியார் படப்பிடிப்பை முடித்தார் ஜி.வி.பிரகாஷ்

Posted:

பாலா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ்குமார், ஜோதிகா மற்றும் பலர் நடிக்கும் 'நாச்சியார்' படத்தில் தன்னுடைய படப்பிடிப்பை முடித்துவிட்டார் ஜி.வி.பிரகாஷ். பாலா இயக்கத்தில் ஒரு படம் மிகவும் குறைவான நாட்களில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கும் படமாக 'நாச்சியார்' உருவாகியுள்ளது.

மார்ச் மாதம் 1ம் தேதி ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு 5 ...

யு சான்று பெற்ற நெருப்புடா

Posted:

நடிகராக இருந்த விக்ரம் பிரபு, 'ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்' என்ற சொந்த பட நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்புதான் 'நெருப்புடா'. இயக்குநர் லட்சுமணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அசோக் குமார் என்ற அறிமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இந்தப் படத்தில் ...

சமந்தா போட்ட கண்டிஷன்...

Posted:

சமந்தாவுக்கு நீண்டகாலமாகவே சருமநோய் பிரச்சனை உள்ளது. இதற்காக பல்வேறு சிகிச்சைகளை அவர் எடுத்துக் கொண்டாலும், சமந்தாவுக்கு சருமப்பிரச்சனை இன்னும் முழுமையாக தீரவில்லை. குறிப்பாக வெயில் காலங்களில் பெரிதும் அவதிப்படுகிறார். இந்த பிரச்சனை காரணமாகவே ஷங்கரின் ஐ, மணிரத்னத்தின் கடல் படங்களிலிருந்து விலகினார்.

தற்போது, பொன்ராம் ...

விஐபி-2 : தனுஷ் கோபம் ஏன்?

Posted:

தனுஷ் தயாரித்து நடித்து, சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது. யு டியூப்பில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்த்த டிரைலர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் நடிகர் தனுஷ்.

ரஜினி, விக்ரம், விஜய், அஜித், சூர்யா படங்களின் வரிசையில் தான் நடித்த விஐபி-2 படத்தின் ...

'குருதிப் புனல்' உல்டாவா 'விக்ரம் வேதா' ?

Posted:

பழைய படங்களை எடுத்து தூசி தட்டி, இந்தக் காலத்திற்கேற்பட சில பட்டி, டிங்கரிங் வேலைகளைப் பார்த்து புதிதாக யோசித்த கதை போல படைப்பதுதான் இந்தக் காலத்திய டிரென்ட். அந்த விதத்தில் பழைய படங்களைக் காப்பியடிப்பதில் அட்லீ சிறந்த இயக்குனராக இருந்தார். அவருக்குப் போட்டியாக இப்போது 'விக்ரம் வேதா' படத்தின் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி ...

போதை விவகாரம், சிக்கப் போகும் சிலர்...

Posted:

தெலுங்கத் திரையுலகில் சில நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் இடையே சமீப காலமாக போதைப் பொருளைப் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த விவகாரத்தில் சிக்கிய திரைப் பிரபலங்கள் சிலரை விசாரணைக்கு வருமாறு சிறப்பு விசாரணைக் குழுவினர் அழைத்தனர்.

இயக்குனர் பூரி ஜெகன்னாத், நடிகர் சுப்பராஜ், ...

பொற்கோவிலில் ஸ்ருதிஹாசன்

Posted:

என்னதான் கமல் நாத்திகவாதியாக இருந்தாலும் அவரது மகள் ஸ்ருதிஹாசன் கடவுள் மீது அதிக நம்பிக்கை உடையவராக இருக்கிறார். விளம்பரம் ஒன்றுக்காக சண்டிகர் சென்றிருக்கிறார் ஸ்ருதிஹாசன். தன் விளம்பர வேலைகள் முடிவடைந்ததும், அமிர்தசரஸிலுள்ள பொற்கோவிலுக்கு சென்று வழிபட்டார்.

நீண்டநாட்களாக அவருக்கு பொற்கோவிலுக்கு செல்ல ஆசை, கடந்தமுறை கூட ...

ஓவியாவுக்கு வாய்ப்பு தரும் மெட்ரோ ஹீரோ

Posted:

களவாணி படத்தில் நடித்ததால் களவாணி ஓவியா என்றழைக்கப்பட்டு வந்த ஓவியா, இப்போது பிக்பாஸ் ஓவியாவாகி விட்டார். பிக்பாஸில் கலந்து கொண்டவர்களில் அதிக வாக்குகள் பெற்றுள்ள, பெருவாரியான ரசிகர்களை கவர்ந்து விட்டார். முக்கியமாக சினிமா நடிகர் நடிகைகள்கூட அவருக்கு தங்களது டுவிட்டரில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மெட்ரோ ...

விஜய் ஆண்டனி படத்தில் சுனைனா

Posted:

பிச்சைக்காரன் ஹிட்டுக்குப்பிறகு எமன் படத்தில் நடித்தார் விஜய் ஆண்டனி. அதையடுத்து அண்ணாதுரை என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்திலும் ஒரு மாறுபட்ட கதையில் நடிக்கும் விஜய் ஆண்டனி, அதையடுத்து கிருத்திகா உதயநிதி இயக்கும், காளி படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் சுனைனாவும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் ...

தெலுங்கு மார்க்கெட்டை ஸ்டெடி பண்ணும் சுரபி

Posted:

இவன் வேற மாதிரி படத்தில் அறிமுகமானவர் டில்லி அழகி சுரபி. அதையடுத்து தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தவர், புகழ் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்தார். தற்போது ஜி.வி.பிரகாசுடன் அடங்காதே படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சுரபி.

இந்த நிலையில், ஏற்கனவே தெலுங்கில் எக்ஸ்பிரஸ் ராஜா, அட்டாக், ...

போதை வழக்கு விசாரணைக்கு பிக்பாஸிடம் அனுமதி பெற்றார் முமைத்கான்

Posted:

போதை பொருள் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் வழக்கில் தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த பல்வேறு நடிகர் நடிகைகள், இயக்குனர்களிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்தவகையில் நேற்று முன்தினம் இயக்குனர் பூரி ஜெகன்னாத்திடம் விசாரணை நடந்தது. அதையடுத்து நேற்று நடிகர் கிரில் சுப்பராஜூடம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™