Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


நடிகை பாவனா துன்புறுதல் வழக்கு: நடிகர் திலீப் கைது

Posted:

நடிகை பாவனா துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.
நடிகை பாவானா கடந்த பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கார் டிரைவர் மார்ட்டின், முன்னாள் கார் டிரைவர் பல்சர் சுனில், வினீஸ் உட்பட ஆறு பேரை கேரளா ...

டுவிட்டரில் 4 மில்லியனைத் தொட்ட சமந்தா

Posted:

சமந்தாவிற்கு இன்னும் சில மாதங்களில் நடிகர் நாக சைதன்யாவுடன் திருமணம் நடைபெற உள்ளது. இருந்தாலும் சமந்தாவை ரசிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறையவில்லை. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தாலும் தமிழிலும் தற்போது ஐந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமூக வலைத்தளமான டுவிட்டரில் அதிக செயல்பாட்டுடன் இருக்கும் நடிகைகளில் ...

அவர்களுக்குப் பூ, எனக்கு தேங்காய் - டாப்சி கோபம்

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் 'ஆடுகளம்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் டாப்சி. அதற்கடுத்து அவர் நடித்த படங்களில் 'காஞ்சனா 2' படம் மட்டுமே வெற்றி பெற்றது. தொடர்ந்து தமிழில் நடிப்பதைத் தவிர்த்த அவர் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார். அங்கு 'பேபி' படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்து, தொடர்ந்து தற்போது பல ஹிந்திப் படங்களில் ...

கடைசியில் ஹன்சிகாவும் வில்லி தானா..?

Posted:

கதாநாயகியாக அறிமுகமான கொஞ்ச காலம் வரை டூயட் பாடும் நடிகைகள் ஒருகட்டத்திற்கு பிறகு வில்லி வேடம் என்றால் கூட ஒகே சொல்லி விடுகிறார்கள். கொடி படத்தில் த்ரிஷா நடித்ததுகூட அப்படித்தான். அந்தவகையில் நடிகை ஹன்சிகாவும் தற்போது நெகடிவ் ரோலில் நடித்து வருகிறார். ஆனால் தமிழில் அல்ல, மலையாளத்தில் உருவாகிவரும் 'வில்லன்' என்கிற படத்தில். ...

“ஆப்பிள் மெழுகுவர்த்தி' : காளிதாஸ் ஜெயராமுக்கு ரசிகர் ஐடியா..!

Posted:

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் தற்போது மலையாளத்தில் 'பூமரம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் ஆப்பிள் பழம் பற்றிய தனது அனுபவத்தை ஒரு வீடியோவாக பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன் ஷூட்டிங் ஸ்பாட் அருகில் இருந்த பழக்கடைக்கு சென்ற ஜெயராம் சாப்பிடுவதற்காக ஆப்பிள் வாங்கியுள்ளார். அதன் ...

மதவாதம் பற்றி பாடிய காவ்யா மாதவன்

Posted:

மலையாள நடிகை காவ்யா மாதவன் கவிதை எழுதுவார் என்பது பலருக்கு தெரியாத விஷயம். அவ்வளவு ஏன் தனது கவிதைகளை எல்லாம் தொகுத்து 'காவ்யதாளங்கள்' என்ற பெயரில் இசை ஆல்பமாகவும் கூட வெளியிட்டார். அதற்கு இசையமைத்தவரும் கூட அவரே தான். இதுதவிர 'மேட்னி' என்கிற படத்தில் 'மௌனமாயி மனசில்' என்கிற பாடலையும் பாடியுள்ளார். பின் பாடுவதற்கு கொஞ்சநாள் ...

மேனகா சுரேஷ் பட டீசரை வெளியிட்ட மோகன்லால்..!

Posted:

மலையாளத்தில் ஒரு காலத்தில் பிரபல நடிகையாக கோலோச்சிய மேனகா சுரேஷ், தற்போது தனது இளையமகள் கீர்த்தி சுரேஷை முன்னணி ஹீரோயினாக்கி அவருக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். நடிகை கீர்த்தி சுரேஷின் அக்கா ரேவதி சுரேஷ், கடந்த வருடம் தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது.

வெளிநாட்டுக்கு சென்று வி.எப்.எக்ஸ் பற்றி ஐந்து வருடம் படித்துவிட்டு ...

த்ரிஷா, நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்த நிவின்பாலி

Posted:

'பிரேமம்' படப் புகழ் நிவின் பாலி தற்போது தமிழில் 'ரிச்சி' படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு அவர் நடிக்க உள்ள இரண்டு படங்களில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளான த்ரிஷா மற்றும் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

ஷியாம் பிரசாத் இயக்கும் 'ஹே ஜுட்' படத்தில் ...

விரைவில் புலிகேசி-2 : ஷங்கர் அறிவிப்பு

Posted:

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் முதல்வன், காதல், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, வெயில், கல்லூரி, அறை எண் 305ல் கடவுள், ஈரம், ரெட்டைச்சுழி, அனந்தபுரத்து வீடு ஆகிய படங்களை தயாரித்துள்ளார். இதில் சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், பல படங்கள் தோல்வியடைந்து அவருக்கு பெரும் நஷ்டத்தை கொடுத்தன. அதனால் பின்னர் படம் ...

அரசியல்வாதியாக ரம்யா கிருஷ்ணன்

Posted:

பாகுபலி படத்தில் இரண்டு பாகங்களிலும் ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி வேடம் பெரிய அளவில் பேசப்பட்டது. கதையின் முக்கிய ஆதாரமாக இருந்த அந்த கதாபாத்திரம் ரம்யாகிருஷ்ணனின் திறமைக்கு நல்லதொரு சான்றாக அமைந்தது. அதையடுத்து இப்போது தமிழில், கமலுடன் சபாஷ் நாயுடு, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த ...

தமன்னா திருமணம் எப்போது?

Posted:

நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா போன்ற நடிகைகள் திருமண வயதை கடந்து தொடர்ந்து சினிமாவில் நடித்து கொண்டிருக்கிறார்கள். இதில் நயன்தாரா இரண்டுமுறை காதலில் விழுந்தவர். பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளவும் தயாரானார். ஆனால் கடைசி நேரத்தில் பிரிந்து விட்டார்.

அதேப்போல் திரிஷாவும், தயாரிப்பாளர் வருண்மணியனை திருமணம் செய்து கொள்ள இருந்தார். ...

சாரா அலிகானின், "கேதர்நாத்" 2018, ஜூனில் ரிலீஸ்

Posted:

நடிகர் சைப் அலிகானின் வாரிசு சாரா அலிகான். அப்பாவை போல் இவரும் சினிமாவில் களமிறங்கி உள்ளார். தோனி பட புகழ் சுசாந்த் சிங் ராஜ்புட் நடிக்கும் கேதர்நாத் படத்தில் சாரா ஹீரோயினாக அறிமுகமாகிறார். அபிஷேக் கபூர் இயக்க, கிரிராஜ் என்டர்டெயின்ட்மென்ட் சார்பில் பாலாஜி தயாரிக்கிறார். தற்போது படப்பிடிப்பிற்கு முந்தைய பணிகள் நடந்து ...

ஐஸ்வர்யா - அனில் கபூர் படம் உறுதியானது

Posted:

"தால், ஹமாரா தில் ஆப்கே பாஸ் ஹே" படங்களில் இணைந்து நடித்தவர்கள் ஐஸ்வர்யா ராயும், அனில் கபூரும்.... இப்போது இவர்கள் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர். படத்திற்கு "பேனி கான்" என்று பெயர் வைத்துள்ளனர். அதுல் மஞ்ரேக்கர் இயக்க, கிங்கிஸ்டன் பிலிம்ஸ் மற்றும் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெக்ரா இணைந்து தயாரிக்கிறார்கள். இசையை மையமாக வைத்து ...

மகன் படத்தை தயாரிக்கும் அப்பா

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகர் அனில் கபூரின் வாரிசுகளில், மகள் சோனம் கபூர், முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மகன் ஹர்சவர்த்தன் கபூர், மிர்சியா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் இந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் ஹர்சவர்த்தன், அடுத்தப்படியாக ஒலிம்பிக்கில், துப்பாக்கி சுடும் பிரிவில் தங்கம் வென்ற ...

சஞ்சய் தத் ஜோடியாக அங்கிதா

Posted:

சின்னத்திரையிலிருந்து வெள்ளிதிரைக்கு வந்திருப்பவர் பாலிவுட்டை சேர்ந்த அங்கிதா லோக்காந்தே என்ற நடிகை. இவர் கங்கனா நடிக்கும் ஜான்சி ராணி படமான மணிகர்னிகா படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடிக்கிறார். அடுத்தப்படியாக, நடிகர் சஞ்சய் தத் ஜோடியாக தோர்பாஸ் என்ற படத்தில் நடிக்க உள்ளார் அங்கிதா. கிரிஷ் மாலிக் இயக்கும் ...

அனுஷ்காவின் பரி ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted:

நடிகையாக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் இருக்கும் அனுஷ்கா சர்மா, என்ஹெச் 10, பில்லாரி என்ற இரண்டு படங்களை தயாரித்தார். இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இப்போது மூன்றாவது படமாக பரி என்ற படத்தை நடித்து, தயாரிக்கிறார். அனுஷ்காவுடன் பரம்பிரதா சாட்டர்ஜி முக்கிய ரோலில் நடிக்க, புரொசித் ராய் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ...

நாக சைதன்யாவுக்கு சிபாரிசு செய்த வெங்கடேஷ்

Posted:

தெலுங்கில் ராரண்டாய் வேதுக சுதம் படத்தை அடுத்து நாக சைதன்யா நடித்து வரும் படம் யுத்தம் சரணம். இதுவரை ரொமான்டிக் கதைகளாக நடித்து வந்த அவர் முதன்முறையாக ஆக்சன் திரில்லர் கதையில் நடிக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் சண்டை காட்சிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி ...

'கோலி சோடா 2' ஆரம்பம்

Posted:

விஜய் மில்டன் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'கோலி சோடா'. பாண்டிராஜ் இயக்கிய 'பசங்க' படத்தில் நடித்த கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்தனர். மிகக் குறைந்த பொருட்செலவில் தயாரான இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமை மட்டுமே 3 கோடிக்கு விற்கப்பட்டது. படமும் அதற்கு மேல் வசூலை ...

3வது ஆண்டில் 'பாகுபலி'

Posted:

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா டகுபட்டி, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்த சரித்திரப் படமான 'பாகுபலி' படத்தின் முதல் பாகம் வந்து இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

2015ம் ஆண்டு ஜுலை மாதம் 10ம் நாளில் வெளியான 'பாகுபலி' படம் தென்னிந்தியத் திரையுலகத்தில் புதிய ...

பிளாஷ்பேக்: சரித்திரமா? சமூகமா?: தமிழ் சினிமாவில் நடந்த வித்தியாசமான போட்டி

Posted:

1954ம் ஆண்டு கருணாநிதி திரைக்கதை வசனத்தில் அம்மையப்பன் என்ற படம் தயாரானது. இதில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜி.சகுந்தலா, டி.வி.நாராயணசாமி, எஸ்.வரலட்சுமி நடித்தனர். பீம்சிங் இயக்கினார்.

அதேபோல ஜெமினி நிறுவனத்தின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் கே.ராம்நாத் இயக்கத்தில் சுகம் எங்கே என்ற படம் தயாரானது. இதில் கே.ஆர்.ராமசாமி, சாவித்ரி, பி.எஸ்வீரப்பா, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™