Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


மிசிசாகாவில் வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோம்

Posted: 09 Jun 2017 07:35 AM PDT

மிசிசாகாவின் கெனடி வீதி மற்றும் எக்ளிங்டன் அவனியூ பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், காவல்த்துறையினர் அது தொடர்பில் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்று மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அப்போது அந்த வீட்டினுள் இருவர் இருந்த போதிலும், அதிஸ்டவசமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவிலலை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் விசாரணைகளில் ஈடுபட்டுள்ள காவல்த்துறையினர், சம்பவம் இடம்பெற்ற அந்த பகுதியில் இருந்து வெற்றுத் தோட்டாக்களைக் […]

The post மிசிசாகாவில் வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோம் appeared first on TamilStar.com.

G7மாநாடு நடாத்தும் வாய்ப்பு கனடாவிற்கு சிறந்த சந்தர்ப்பம் – பிரதமர் ரூடோ

Posted: 09 Jun 2017 07:32 AM PDT

G7 மாநாட்டை அடுத்த ஆண்டு கனடாவில் நடாத்துவதற்கு வாய்ப்பு கிடைத்தமையை ஒரு சிறந்த சந்தர்ப்பம் என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டுக்கான G7 நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ள கியூபெக் மாநிலத்தின் "லா மல்பாயி" நருக்கு பிரதமர் ஜஸ்டின் ரூடோ வியாழக்கிழமை பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு மாநாடு நடாத்தப்பட உள்ள பகுதிகளைப் நேரில் பார்வையிட்ட அவர், பின்னர் பல்வேறு சந்திப்புக்களிலும் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே, G7 நாடுகளின் […]

The post G7மாநாடு நடாத்தும் வாய்ப்பு கனடாவிற்கு சிறந்த சந்தர்ப்பம் – பிரதமர் ரூடோ appeared first on TamilStar.com.

ஆலயத்திற்கான குடிநீரை வழங்குவதில் கரைதுறைப்பற்று பிரதேச சபை சிரமங்களை எதிர்கொண்டது

Posted: 09 Jun 2017 07:28 AM PDT

வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு தேவையான குடிநீரை வழங்குவதில் கரைதுறைப்பற்று பிரதேச சபை மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வந்துள்ளது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கான நீர்வழங்கும் திட்டத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் வைகாசி விசாக உற்சவத்தின் போது பொங்கல் நிகழ்வுகளுக்கும் அம்மனை தரிசிப்பதற்கும் சுமார் 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இவ்வாலயத்தில் ஒன்று கூடுவது நீங்கள் […]

The post ஆலயத்திற்கான குடிநீரை வழங்குவதில் கரைதுறைப்பற்று பிரதேச சபை சிரமங்களை எதிர்கொண்டது appeared first on TamilStar.com.

ரணிலுடன் தொலைபேசியில் பேசிய மஹிந்த!

Posted: 09 Jun 2017 07:25 AM PDT

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்கா சென்றுள்ள பிரதமரை, ஜப்பானில் இருக்கும் மஹிந்த அவசர தொலைபேசியில் அழைத்துப் பேசியுள்ளார். இதன்போது வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால் அவர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு மஹிந்த, ரணிலிடம் தெரிவித்துள்ளார். கட்டாரில் வாழும் இலங்கையர்கள் சிலர் இது தொடர்பில் தன்னிடம் கோரிக்கை முன்வைத்ததாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

The post ரணிலுடன் தொலைபேசியில் பேசிய மஹிந்த! appeared first on TamilStar.com.

வரட்சியினால் பாதிக்கப்பட்டோருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்!- சம்பந்தன் வலியுறுத்து

Posted: 09 Jun 2017 07:22 AM PDT

வடக்கு, கிழக்கில் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாகநிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்இரா. சம்பந்தன் இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் தொடர்பாக இன்று இடம்பெறும்சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர்மேற்கண்டவாறு வலியுறுத்தினார். வடக்கு, கிழக்கில் கடும் வரட்சி காணப்படுகிறது. அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில்கவனம் செலுத்தி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியான நிவாரணங்களை வழங்க வேண்டும்என சம்பந்தன் கூறியுள்ளார். […]

The post வரட்சியினால் பாதிக்கப்பட்டோருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்!- சம்பந்தன் வலியுறுத்து appeared first on TamilStar.com.

நாமல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் கம்பி எண்ண நேரிடும்!

Posted: 09 Jun 2017 07:18 AM PDT

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீது சுமத்தப்பட்டுள்ள பணச்சலவை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 30 மில்லியன் ரூபாய் பணத்தை தவறான முறையில் பெற்று கொண்டமை தொடர்பில் நாமலுக்கு எதிராக 11 குற்றச்சாட்டுகள் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் நாமல் ராஜபக்ஷ சிறை செல்வது உறுதி என கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நாமலுக்கு எதிரான குற்றச்சாட்டு தாக்கல் […]

The post நாமல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் கம்பி எண்ண நேரிடும்! appeared first on TamilStar.com.

பிரதமருக்கும் பொதுநலவாய நாடுகளின் செயலாளருக்கும் இடையில் பேச்சுவார்த்தை

Posted: 09 Jun 2017 07:16 AM PDT

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பெட்ரீஷியா ஸ்கொட்லேண்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியின் அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாக பிரதமரின் அலுவலகம் அறிவித்துள்ளது. பொதுநலவாய அமைப்பு மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவுகள் உட்பட முக்கிய விடயங்கள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் டியோடெட் மஹாராஜ், அமைப்பின் கடல் மற்றும் இயற்கை வள பிரிவின் […]

The post பிரதமருக்கும் பொதுநலவாய நாடுகளின் செயலாளருக்கும் இடையில் பேச்சுவார்த்தை appeared first on TamilStar.com.

உள்ளூராட்சித் தேர்தலை நடத்தக் கோரி போராட்டம்! – தினேஸ்

Posted: 09 Jun 2017 07:13 AM PDT

உள்ளூராட்சித் தேர்தலை துரித கதியில் நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கம் தொடர்ந்தும் தேர்தலை ஒத்தி வைத்து வருகின்றது, அரசாங்கத்தை தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தும் விரிவான போராட்டங்கள் நடத்தப்படும். இது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் எடுக்கப்படும். அண்மையில் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக, இந்தப் போராட்டம் தற்காலிக அடிப்படையில் ஒத்தி வைக்கப்பட்டது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் […]

The post உள்ளூராட்சித் தேர்தலை நடத்தக் கோரி போராட்டம்! – தினேஸ் appeared first on TamilStar.com.

முன்னாள் போராளிகளுக்கு வடமாகாண சபை உறுப்பினர்கள் நிதி வழங்க வேண்டும்

Posted: 09 Jun 2017 07:11 AM PDT

வடமாகாணசபை உறுப்பினர்கள் தமக்கு வாகன வரி விலக்கு மூலம் கிடைக்கும் பணத்தில் முன்னாள் போராளிகளுக்கான காப்பகம் ஒன்று உருவாக்குவதற்காக பயன்படுத்தவேண்டும் என அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராசா கூறியுள்ளார். இன்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து கூறுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இச் சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய போராளிகள் இன்று அநாதரவாக சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களாக காணப்படுகின்றார்கள். அவர்களது நல் […]

The post முன்னாள் போராளிகளுக்கு வடமாகாண சபை உறுப்பினர்கள் நிதி வழங்க வேண்டும் appeared first on TamilStar.com.

அம்பாந்தோட்டை துறைமுகம் விற்கப்படாது! – மஹிந்த சமரசிங்க

Posted: 09 Jun 2017 07:06 AM PDT

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு விற்பனை செய்யப் போவதில்லை என்று துறைமுக அபிவிருத்தி, கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அர்ஜுன ரணதுங்க துறைமுக அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு சீனநிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றிருந்தது. அதற்கான அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் புதிதாக துறைமுக அபிவிருத்திக்குப் பொறுப்பான அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் மஹிந்த சமரசிங்க, முன்னைய அமைச்சர் அர்ஜுனவின் தீர்மானத்தை கிடப்பில் போடும் […]

The post அம்பாந்தோட்டை துறைமுகம் விற்கப்படாது! – மஹிந்த சமரசிங்க appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™