Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


கனேடிய பாதுகாப்பு கொள்கை மேம்பாட்டுத் திட்டத்தினை வெளியிட்டது லிபரல் அரசாங்கம்

Posted: 08 Jun 2017 05:29 AM PDT

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டுவந்த கனடாவின் பாதுகாப்பு கொள்கை தொடர்பான மேம்பாட்டுத் திட்டம் ஒட்டாவாவில் இன்று (புதன்கிழமை) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பெருமளவான இராணுவ பிரதானிகள் மத்தியில் பாதுகாப்பு கொள்கை மீளாய்வு அறிக்கையாக கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான் வெளியிட்டு வைத்துள்ளார். இந்த புதிய திட்டத்தில் இராணுவத்துக்கான பல்வேறு புதிய ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கனேடிய இராணுவத்துக்காக மேலும் 62 பில்லியன் டொலர்கள் செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 20 ஆண்டுகளுக்கு இந்தத் தொகை இராணுவத்துக்காக செலவிடப்படும் […]

The post கனேடிய பாதுகாப்பு கொள்கை மேம்பாட்டுத் திட்டத்தினை வெளியிட்டது லிபரல் அரசாங்கம் appeared first on TamilStar.com.

கத்திக்குத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள் சிறைத் தண்டனை

Posted: 08 Jun 2017 05:27 AM PDT

கத்திக் குத்து்ச சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு ஆண்களுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டில் ரொரன்ரோ நியூ மார்க்கட் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்துச் சம்பவத்தில் தொடர்புபட்ட ஜோன் ஜான்சன் மற்றும் மைஹர் சராம் ஆகிய இருவருக்குமே ஆயுள் சிறைத் தண்டனையும், அதற்கு மேலதிகமான மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 65 வயதான றொனிடி றோஸ்பொறோ என்பவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த கொலை தொடர்பில் குறித்த இரண்டு […]

The post கத்திக்குத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள் சிறைத் தண்டனை appeared first on TamilStar.com.

அனைத்து பேதங்களையும் கடந்து நீந்திக்கடந்த நெருப்பாறு புத்தக வெளியீட்டு நிகழ்விற்கு ஆதரவளிப்போம்

Posted: 08 Jun 2017 05:24 AM PDT

எமது மண்ணில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கொடூர இன அழிப்பின் சாட்சியங்களாக வெளிவரவிருக்கும் நீந்திக் கடந்த நெருப்பாறு என்னும் புத்தக வெளியீட்டு நிகழ்விற்கு அனைத்து பேதங்களையும் கடந்து ஆதரவளிப்பது எமது வரலாற்று கடமைகளில் ஒன்று என கிளிநொச்சி மாவட்ட கல்வி கலாச்சார அபிவிருத்தி அமையத்தின் தலைவர் ப.குமாரசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழர் தேசத்தின் மூத்த படைப்பாளி நா.யோகேந்திரநாதன் எழுதிய ‘பூநகரியில் இருந்து புதுமாத்தளன் வரை என்ற நீந்திக் கடந்த நெருப்பாறு’ எனும் ஆவணப்பதிவின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 10.06.2017 […]

The post அனைத்து பேதங்களையும் கடந்து நீந்திக்கடந்த நெருப்பாறு புத்தக வெளியீட்டு நிகழ்விற்கு ஆதரவளிப்போம் appeared first on TamilStar.com.

விசாரணை அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும்! – விக்கியிடம் சிவில் சமூகம் கோரிக்கை

Posted: 08 Jun 2017 05:16 AM PDT

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையைப் பகிரங்கமாக வெளியிடுமாறும், அது தொடர்பில்வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வடக்கு சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர். வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்த சுயாதீனக் குழு, தனது விசாரணை அறிக்கையை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கையளித்துள்ளது. அந்த விசாரணை அறிக்கையை சபையில் நேற்று முதலமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இந்த விசாரணை அறிக்கை பொது வெளியில் முழுமையாக முதலமைச்சரால் […]

The post விசாரணை அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும்! – விக்கியிடம் சிவில் சமூகம் கோரிக்கை appeared first on TamilStar.com.

ஞானசார தேரருடன் விக்கியை ஒப்பிடக் கூடாது! – ராஜித சேனாரத்ன

Posted: 08 Jun 2017 05:14 AM PDT

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஞானசார தேரரைப் போன்று செயற்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ‘இந்த சிறிய நாட்டில் ஞானசார தேரர் பொலிஸாரின் கண்களில் தென்படாமல் மறைந்திருப்பதாயின் அதுவும் ஒரு திறமை. இவ்வாறு மறைந்திருப்பதற்கு அமைச்சர்கள் யாருடையதாவது ஒத்துழைப்பு இல்லாதிருக்க முடியாது. பொது பலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதிராக […]

The post ஞானசார தேரருடன் விக்கியை ஒப்பிடக் கூடாது! – ராஜித சேனாரத்ன appeared first on TamilStar.com.

பருத்தித்துறையில் அமைக்கப்படவுள்ள இலங்கையின் மிக பெரிய துறைமுகம்!

Posted: 08 Jun 2017 05:07 AM PDT

இலங்கையின் மிக பெரிய மீன்பிடித் துறைமுகம் யாழ். பருத்தித்துறையில் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வடக்கின் மீன்பிடி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த துறைமுகம் அமைக்கப்படவுள்ளது. குறிப்பாக பேசாலை மற்றும் பருத்தித்துறை ஆகிய பகுதிகளில் இரண்டு மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த அபிவிருத்தி திட்டத்திற்கான நிதியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. தென் பகுதியுடன் ஒப்பிடும் […]

The post பருத்தித்துறையில் அமைக்கப்படவுள்ள இலங்கையின் மிக பெரிய துறைமுகம்! appeared first on TamilStar.com.

வடக்கில் இன்னமும் பழைய மீன்பிடிமுறைகளே நடைமுறையில்! – மஹிந்த அமரவீர

Posted: 08 Jun 2017 05:03 AM PDT

வடக்கில், 15, 20 வருடங்களுக்கு முந்திய மீன்பிடி முறைகளே, தற்போதும் பயன்படுத்தப்படுகின்றன. நவீன தொழில்நுட்பத்துடன் வடக்கின் மீன்பிடித் துறையை முன்னேற்றவே, இலங்கையின் பாரிய மீன்பிடித்துறைமுகத்தை, பருத்தித்துறையில் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என, மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். '1980ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கின் மீன்பிடி, நாட்டின் மீன்பிடி துறையில், 40 சதவீதமாக காணப்பட்டது. பின்னர், 2009ஆம் ஆண்டாகும் போது, 4 சதவீதமாக குறைவடைந்தது. தற்போது அதனை 12 சதவீதமாக நாங்கள் கட்டியெழுப்பியுள்ளோம். பழைய தொழில்நுடப முறையே […]

The post வடக்கில் இன்னமும் பழைய மீன்பிடிமுறைகளே நடைமுறையில்! – மஹிந்த அமரவீர appeared first on TamilStar.com.

மைத்திரியின் திடீர் நடவடிக்கை! கலக்கத்தில் இனவாதிகள்

Posted: 08 Jun 2017 04:59 AM PDT

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகள் சமகால அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலை நீடித்தால் அதனை கட்டுப்படுத்த மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். அரசாங்கத்திற்கும், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக நெருக்கடியை ஏற்படுத்த முனைவோர் இராணுவத்தினர் மூலம் அடக்கப்படுவர் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து திட்டமிட்ட வகையிலும் அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலும் முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்களுக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தாக்குதல்களை […]

The post மைத்திரியின் திடீர் நடவடிக்கை! கலக்கத்தில் இனவாதிகள் appeared first on TamilStar.com.

லண்டன் தாக்குதல் சம்பவத்தினை கண்டிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்: – பன்னாட்டு மாநாட்டுக்கு அழைப்பு

Posted: 08 Jun 2017 04:57 AM PDT

லண்டன் தொடர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பத்தினை கண்டித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அரசுகளும், அரசல்லாதோரும் அப்பாவிப் பொதுமக்கள் மீது நடாத்தி வரும் வன்செயல்கள் குறித்து, செஞ்சிலுவைச் சங்கத்தின் 1977ம் மாநாட்டினை மீள நடாத்து மாறு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : மானிட விழுமியங்களைக் கிஞ்சிற்றும் மதிக்காமல் இலண்டனில் அப்பாவி மக்களைப் படுகொலை செய்ததும் காயப்படுத்தியதுமான வெறிச்செயலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. கடைசியாக நடந்துள்ள […]

The post லண்டன் தாக்குதல் சம்பவத்தினை கண்டிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்: – பன்னாட்டு மாநாட்டுக்கு அழைப்பு appeared first on TamilStar.com.

நடுத்தெருவில் இருக்க காரணம் இதுதான் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted: 08 Jun 2017 04:53 AM PDT

தமிழர் மே 17 இயக்கமும் அதன் தலைவர் திருமுருகனும் ஈழத் தமிழர்களின் படுகொலைகளை அம்பலப்படுத்துவதற்காக கடந்த 2009 ஆம் ஆண்டு தொடக்கம் குரல் கொடுத்து வந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்களை நினைவு கூர்ந்தமைக்காக திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைதானமையைக் கண்டித்து யாழில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (08) காலை முன்னெடுக்கப்பட்டது. […]

The post நடுத்தெருவில் இருக்க காரணம் இதுதான் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™