Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பயங்கரவாத முறியடிப்பு குறித்து கனடா, ரஷ்யா பேச்சு

Posted: 17 Jun 2017 08:52 AM PDT

உலகளாவிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள பயங்கரவாதத்தினை முறியடிப்பது தொடர்பில கனடா ரஷ்யாவுடன் பேச்சுக்களை நடாத்தியுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு பதற்றமான நிலைமை காணப்படும் நிலையில், கடந்த வியாழக்கிமை ஒட்டாவாவில் இந்த பேச்சு இடம்பெற்றுள்ளது. உக்ரெய்னில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அடுத்து, ரஷ்ய அரசுடனான பெரும்பாலான உறவுகளை கனடா துண்டித்துள்ள நிலையில், பல ஆண்டுகளின் பின்னர் கனடா ரஷ்யாவுடன் நடாத்தியுள்ள முதல் சந்திப்பு இது என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த சந்திப்புத் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள கனேடிய […]

The post பயங்கரவாத முறியடிப்பு குறித்து கனடா, ரஷ்யா பேச்சு appeared first on TamilStar.com.

வாகனம் மோதி 10வயது சிறுவன் படுகாயம்

Posted: 17 Jun 2017 08:50 AM PDT

எற்ரோபிக்கோ பகுதியில் வாகனம் ஒன்று மோதியதில் 10வயது சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மார்ட்டின் க்ரோவ் வீதி மற்றும் சில்வர்ஸ்ரோன் டிரைவ் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. குறித்த சிறுவன் வீதியில் ஒடிய வேளையில், மார்ட்டின் க்ரோவ் வீதியில் தெற்கு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த காரால் அவர் மோதப்படடதாக போக்குவரத்துக் காவல்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், எனினும் அவர் உயிராபத்தான நிலையிலேயே இருப்பதாகவும் அவசர மருத்துவப் பிரிவினர் […]

The post வாகனம் மோதி 10வயது சிறுவன் படுகாயம் appeared first on TamilStar.com.

நம்பிக்கையில்லா பிரேரணை மீளப் பெறப்பட்டால் தான் கொந்தளிப்பு நிலை அடங்கும்! – விக்னேஸ்வரன்

Posted: 17 Jun 2017 08:45 AM PDT

தமக்கு எதிராக ஆளுநரிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீளப் பெறப்பட்டால் தான், வட மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று சமயத் தலைவர்களிடம் தாம் கூறியதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் இல்லத்தில் நேற்றுமாலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வட மாகாண நிலவரம் குறித்து சமயத் தலைவர்களுக்கு விளக்கமளித்ததாக முதலமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். வட மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர என்ன செய்ய வேண்டும் என ஆதினம் […]

The post நம்பிக்கையில்லா பிரேரணை மீளப் பெறப்பட்டால் தான் கொந்தளிப்பு நிலை அடங்கும்! – விக்னேஸ்வரன் appeared first on TamilStar.com.

ஆபத்தான நிலைக்கு சென்று கொண்டிருக்கும் வடமாகாணம்

Posted: 17 Jun 2017 08:41 AM PDT

நாட்டில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துவரும் நிலையில் வடமாகணம் ஆபத்தான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாங்குளத்தில் இன்று இடம்பெற்ற புதிய நீதிமன்றம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடந்தும் தெரிவிக்கையில், இன்று சிறைச்சாலைகளில் காணப்படும் 50 வீதத்திற்கு அதிகமான குற்றவாளிகள் மதுபாவனை மற்றும் போதைப்பொருள் பாவனை காரணமாகவே விளக்கமறியளில் இருக்கின்றனர். இதன் அடிப்படையில் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கின்றது. மேலும், […]

The post ஆபத்தான நிலைக்கு சென்று கொண்டிருக்கும் வடமாகாணம் appeared first on TamilStar.com.

நட்சத்திர ஹோட்டலில் மஹிந்தவின் நெருங்கிய சகாவின் நடவடிக்கை

Posted: 17 Jun 2017 08:37 AM PDT

சமகால அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதிநிதி இரகசிய சந்திப்பு நடத்தியதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்த இரகசிய சந்திப்பு அண்மையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் மஹிந்தவுக்கு நெருக்கமான விசுவாசிகள் பலர் கலந்து கொண்டனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நெருக்கமாக செயற்படும் அமைச்சர் ஒருவரும் கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளார். அந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட அதிகாரி, மஹிந்த அரசாங்கத்தின் பிரபல விடயங்களை […]

The post நட்சத்திர ஹோட்டலில் மஹிந்தவின் நெருங்கிய சகாவின் நடவடிக்கை appeared first on TamilStar.com.

அவசரமாக கொழும்புக்குப் பறந்தார் வடக்கு ஆளுநர்!

Posted: 17 Jun 2017 08:34 AM PDT

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் மாகாணசபை உறுப்பினர்களிடையே எழுந்திருக்கும் குழப்ப நிலைக்கு மத்தியில், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நேற்று அவசரமாக விமானம் மூலம் கொழும்புக்குப் பயணமானார். மாகாணசபை உறுப்பினர்களால் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டிருக்கும் இருவேறு தீர்மானங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து சட்ட ஆலோசனைகளை பெறும் நோக்கிலேயே அவர் நேற்று அவசரமாக கொழும்பு பயணமானதாக தெரியவருகிறது. வடமாகாண சபையில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் வார இறுதி நாட்களில் ஆளுநர் கொழும்பிலுள்ள அரச தரப்பு […]

The post அவசரமாக கொழும்புக்குப் பறந்தார் வடக்கு ஆளுநர்! appeared first on TamilStar.com.

மகிந்த ராஜபக்ச உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்

Posted: 17 Jun 2017 08:32 AM PDT

மகிந்த ராஜபக்சவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும், உதயங்க வீரதுங்க என்பவர் முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்சவின் உறவினர். ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவராக இருந்தவர். அவர் ஊழல் திருட்டுகளில் ஈடுபட்ட ஓர் குற்றவாளி. சர்வதேச பொலிஸாருக்கும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இவ்வாறான ஒருவருக்கு இலங்கை அரசு […]

The post மகிந்த ராஜபக்ச உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் appeared first on TamilStar.com.

சில ஊடகங்கள் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கின்றன

Posted: 17 Jun 2017 08:28 AM PDT

இணையத்தளங்களும் சில ஊடகங்களும் இனவாதத்தை தூண்டி, இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை சீர்குலைத்து நாட்டை பதற்ற நிலைக்கு தள்ள பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டி அஸ்கிரிய ஸ்ரீ சந்திரானந்த பௌத்த கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நவீன தொழில்நுட்பத்துடன் சமூகம் பற்றிக்கொண்டுள்ள இணையத்தளங்கள் மற்றும் முகநூல் என்பன தற்போது பிள்ளைகளின் திறமைகளையும் நற்பண்புகளையும் அழித்து வருகின்றன. இதனால், கல்வியுடன் பிள்ளைகளின் அறிவை […]

The post சில ஊடகங்கள் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கின்றன appeared first on TamilStar.com.

மாகாணசபை உறுப்பினர்களிடம் பேரம்! – டெனீஸ்வரன் தகவல்

Posted: 17 Jun 2017 08:25 AM PDT

இந்தியா மற்றும் தென் பகுதி அரசியலில் உள்ளது போன்று என்னிடம் பேரம் பேசப்படுகின்றது என வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாண அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பாக, அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு குறிப்பிடடுள்ளார். வடமாகாண சபையில் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் 15 பேரும், முதலமைச்சர் தலைமையில் 15 பேரும் தற்போது இருக்கின்றனர். சி.வி.கே.சிவஞானம் தலைமையில் எங்களுடைய தரப்பில் எதிர்க்கட்சியையும் சேர்த்து 21 பேர் இருக்கின்றோம். இந்த நிலையில் சிலர் தொடர்பு கொண்டு […]

The post மாகாணசபை உறுப்பினர்களிடம் பேரம்! – டெனீஸ்வரன் தகவல் appeared first on TamilStar.com.

தென்னிலங்கையில் திடீர் திருப்பம் : அடுத்த ஜனாதிபதி போட்டிக்களத்தில் ஞானசாரர்!

Posted: 17 Jun 2017 08:22 AM PDT

நாட்டுக்கு பாரிய ஆபத்தாக வர்ணிக்கப்பட்டு வரும் ஞானசார தேரர் விடயத்தில் அரசு சற்று இழுபறியான நடவடிக்கைகளையே கையாண்டு வருவதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் அவரைப் பிடிப்பதற்காக விஷேட பொலிஸ் குழுக்களை நியமிக்கப்பட்டுள்ளதோடு, பொதுமக்களின் உதவியையும் பொலிஸார் நாடி உள்ளனர். இது இவ்வாறு இருக்க பொதுபலசேனா அமைப்பினர் ஞானசாரர் ஒளிந்து கொள்ளவும் இல்லை தக்க சமயம் வெளிவருவார் என்று தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்லாது அரசுக்கோ, அல்லது மகிந்த ராஜபக்சவிற்கோ ஞானசாரர் விடயத்தில் தொடர்பு இல்லை என்றும் கூறியுள்ள அவர்கள்., […]

The post தென்னிலங்கையில் திடீர் திருப்பம் : அடுத்த ஜனாதிபதி போட்டிக்களத்தில் ஞானசாரர்! appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™