Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


ஜிஎஸ்டி... திங்கள் முதல் திரையரங்குகள் மூடல் : அபிராமி ராமநாதன்

Posted:

ஜிஎஸ்டி குறித்து தமிழக அரசு தெளிவான முடிவு எடுக்காவிட்டால் திங்கள் கிழமை (ஜூலை 3) முதல் காலவரையின்றி தியேட்டர்கள் மூடப்படும் என அபிராமி ராமநாதன் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒரே வரி என்கிற அடிப்படையில் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலாகிறது. ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு ரூபாய் 100-க்கு கீழ் டிக்கெட் வசூலிக்கும் திரையரங்குகள் 18 சதவிகித ...

சல்மான் கான் 'டியூப்லைட்', புலம்பும் வினியோகஸ்தர்கள்

Posted:

சல்மான் கான் நடித்து வெளிவரும் படம் என்றாலே வசூலுக்கு உத்தரவாதம் தரும் படமாக இருக்கும் என்பதுதான் சமீப காலங்களில் நடந்த விஷயமாக இருந்தது. கொஞ்சம் தன்னுடைய பாணியை மாற்றி நடிக்கலாம் என 'டியூப்லைட்' படத்தில் நடித்த சல்மானுக்கு ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளனர். அவரை இது போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதை ரசிகர்கள் ...

தைவானில் வெளியானது 'பாகுபலி 2'

Posted:

உலகம் முழுவதும் பல நாடுகளில் ஏப்ரல் 28ம் தேதி வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் 60 நாட்களை கடந்தும் இந்தியாவில் பல தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. சுமார் 1700 கோடி ரூபாய் வரை உலக அளவில் வசூலித்துள்ள இந்தப் படம், தற்போது அடுத்த உலக வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. அந்த வரிசையில் இன்று தைவான் நாட்டில் சுமார் 15 இடங்களில் இப்படம் ...

தணிக்கை சான்று பெறுவதை எளிமையாக்குங்க : விஷால் கோரிக்கை

Posted:

சென்னை சாஸ்திரி பவனில் தணிக்கை குழு தலைவர் மதியழகனை, தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஷால்...

"இன்றைய சூழலில் தமிழ் திரைப்படங்களுக்கான தணிக்கை சான்றிதழ் பெறுவதை எளிமை படுத்த வேண்டும். திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு வாரம் முன்னர் தணிக்கை ...

மீண்டும் ஒரு ஹீரோவை வில்லனாக்கிய பாலகிருஷ்ணா..!

Posted:

தெலுங்கு சினிமாவின் பிரபல ஹீரோ, அதேசமயம் நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பது என சபதம் எடுத்து சதம் அடித்த ஹீரோ தான் பாலகிருஷ்ணா. தற்போது இவர் நடித்துவரும் 101வது படமான 'பைசா வசூல்' முடிந்து போஸ்ட் புரொடக்சனில் இருக்கிறது. இதை தொடர்ந்து இவரது 102வது படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார் என்பது ஏற்கனவே தெரிந்த ...

ஆண் குழந்தைக்கு தந்தையானார் வினீத் சீனிவாசன்..!

Posted:

மலையாள சினிமாவில் இளம் முன்னணி இயக்குனர் வினீத் சீனிவாசன்.. நடிகர் சீனிவாசனின் மகனான இவர் தனது தந்தையைப்போலவே நடிப்பு, டைரக்சன், கதாசிரியர் என எல்லா ஏரியாவிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். நடிகர் நிவின்பாலியை சினிமாவில் அறிமுகப்படுத்தியதிலும், தொடர்ந்து அவருக்கு பக்கபலமாக நின்று அவ்வப்போது அவரை வைத்து வெற்றிப்படங்களை ...

பஹத் பாசில் படத்தில் அல்போன்ஸ் புத்ரன்..!

Posted:

மலையாள சினிமாவில் மிகவும் கவனிக்கத்தக்க இயக்குனர் அன்வர் ரஷீத். ஒரு தயாரிப்பாளராகவும் மாறி 'பெங்களூர் டேய்ஸ்' மற்றும் 'பிரமேம்' என சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். அதேசமயம் 2012ல் துல்கரை வைத்து இயக்கிய 'உஸ்தாத் ஹோட்டல்' படத்திற்கு பிறகு அடுத்ததாக படம் இயக்குவதையே மறந்துவிட்டார் என்றே சொல்லலாம். தற்போது ஐந்து ...

கன்னட படத்தில் சிங்கம்-2 டேனி..!

Posted:

இயக்குனர் ஹரியால் சிங்கம்-2 படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் ஹாலிவுட் நடிகர் டேனி சபானி. அந்தப்படத்தில் ரகுமான், முகேஷ் ரிஷி என இரண்டு வில்லன்கள் இருந்தாலும் கூட அவர்கள் இருவரையும் தாண்டி டேனியின் கதாபாத்திரம் மிரட்டலாக உருவாக்கப்பட்டு இருந்தது. இந்தப்படத்தை தொடர்ந்து மீண்டும் இந்திய படங்களில் வாய்ப்பு எதுவும் ...

உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள்!

Posted:

உலக அளவில், அதிக சம்பளம் வாங்கும், 100 நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது, பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்று. அப்பட்டியலில், 66 சதவீதம் பேர் அமெரிக்கர்கள், 20 சதவீதம் ஐரோப்பியர், மற்றும் 12 சதவீதம் பேர் கனடாவை சேர்ந்தவர்கள். ஆசிய நாடுகளில், 5 சதவீதத்தினரே இடம் பெற்றுள்ளனர். அவ்வகையில், இந்திய நடிகர்களில் ஷாரூக்கான், 65வது இடத்தையும், ...

ரஜினியின், 'டாட்டூ' ரகசியம்!

Posted:

இயக்குனர், பா.ரஞ்சித் இயக்கத்தில், தற்போது, ரஜினி நடித்து வரும் படம், காலா. மும்பையில் வாழ்ந்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த, தாதா, திரவியம் நாடாரின் கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினி, இப்படத்துக்காக, தன் கையில், 'எஸ்' வடிவில், 'டாட்டூ' வரைந்துள்ளார். இந்த, 'டாட்டூ'வுக்கும், படத்தின் கதைக்கும் மிகப்பெரிய சம்பந்தம் உள்ளது. இது ...

அம்மா வேடங்களில் பிரபல கதாநாயகிகள்!

Posted:

அரவிந்த்சாமி கதாநாயகனாக நடித்து வரும் சதுரங்க வேட்டை - 2 படத்தில், அவருக்கு மனைவியாகவும், நான்கு வயது சிறுமிக்கு, அம்மாவாகவும் நடிக்கிறார், த்ரிஷா. அதேபோல், இமைக்கா நொடிகள் படத்தில், போலீசாக நடிக்கும் நயன்தாராவும், நான்கு வயது சிறுமிக்கு, அம்மாவாக நடிக்கிறார். இந்நிலையில், கமலுடன், விஸ்வரூபம் மற்றும் உத்தம வில்லன் படங்களில் ...

இந்திய படமெடுக்கும் ஈரானிய இயக்குனர் மஜித் மஜித்!

Posted:

உலகப்புகழ் பெற்ற, ஈரானிய இயக்குனர், மஜித் மஜித், தற்போது, இந்திய சினிமாவிற்குள் காலடியெடுத்து வைத்துள்ளார். அவர் இயக்கும், பியாண்ட் த க்ளவுட்ஸ் என்ற படம், இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் என, மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது. அண்ணன், தங்கை இடையேயான உறவை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில், இந்தி நடிகர், இஷான் கட்டார், மலையாள நடிகை ...

பஹத் பாசில் படத்திற்கு குவியும் பாராட்டு

Posted:

கடந்த வாரம் பஹத் பாசில் நடிப்பில் வெளியான 'ரோல்மாடல்ஸ்' படம் ரொம்பவே எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் சுமாரான, கதை, திரைக்கதையால் அந்தப்படத்திற்கான வரவேற்பு ரசிகர்களிடம் குறையவே செய்தது. இந்த நிலையில் ஒருவார இடைவெளியில் மீண்டும் பஹத் பாசில் நடித்துள்ள இன்னொரு படமான 'தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்' படம் வெளியாகியுள்ளது. ...

செர்பியாவில் மீண்டும் 'விவேகம்' படப்பிடிப்பு

Posted:

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷ்ராஹாசன் மற்றும் பலர் நடிக்கும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக பல்கேரியா நாட்டில் அதிகமாக நடைபெற்றது. தொடர்ந்து அங்கு நடந்து வந்த படப்பிடிப்பு நிறைவடைந்து ஓரிரு வாரங்களுக்கு முன்பு படக்குழுவினர் சென்னை திரும்பினர்.

தற்போது ...

'குண்டாகவில்லை, மேக்கப்தான்'... கீர்த்தி சுரேஷ் விளக்கம்

Posted:

சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு 'மகாநதி' என்ற பெயரில் தெலுங்கிலும், 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் தமிழிலும் படமாகி வருகிறது. இந்தப் படத்தில் நடிகை சாவித்ரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நடிகை சாவித்ரி இயல்பாகவே கொஞ்சம் குண்டாக இருப்பார். அதுதான் அவருக்கு இன்னும் அழகாக இருக்கும்.

அவரது கதாபாத்திரத்தில் ...

நான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு அஜய்யே காரணம் : தபு

Posted:

பாலிவுட்டில் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளிலும் பிரமான நடிகை தபு. தென்னிந்தியாவை விட பாலிவுட்டில் தான் அதிக படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் கோல்மால் அகைன் படத்தில் நடித்து வருகிறார். 45 வயதை கடந்துவிட்ட தபு, இன்னும் திருமணம் செய்யாமலே வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான் திருமணம் ...

"சல்யூட்" : அமீர் பட பெயர்

Posted:

விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் ராகேஷ் சர்மா. இவரது வாழ்க்கையை மையமாக வைத்து பாலிவுட்டில் படம் உருவாகிறது. இதில் ராகேஷ் வேடத்தில் அமீர்கான் நடிக்கிறார். மகேஷ் மாத்தாய் இயக்குகிறார். சித்தார்த் ராய் கபூர் தனது புதிய தயாரிப்பு நிறுவனமா ராய் கபூர் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்க, இவருடன் அமீர்கானும் இணைந்து தயாரிக்கிறார். ...

திருமண விழாக்களில் நடனமாடிய நவாசுதீன் சித்திக்

Posted:

பாலிவுட்டில் பிரபலமான நடிகர் நவாசுதீன் சித்திக். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர். இன்றைக்கு பெரிய சினிமா ஸ்டாராக இருப்பவர், ஆரம்பத்தில் திருமண நிகழ்ச்சிகளில் நண்பர்களுடன் சேர்ந்து நடனம் ஆடினாரம்.

இதுகுறித்து நவாசுதீன் கூறியிருப்பதாவது... "நான் சின்ன பையனாக இருக்கும் போது நண்பர்களுடன் இணைந்து திருமண ...

ரவீணா டாண்டன் படம் தள்ளி வைப்பு

Posted:

இன்று வெளியாக இருந்த ரவீணா டாண்டன் படம் ஜூலை 14-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனிர் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் சாப். ரவீணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் அர்பிதா சாட்டர்ஜி, அஸிஷ் பிஷித், கெளரவ் நந்தா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருக்கின்றனர். பேஷன் துறையில் நடக்கும் சம்பங்களை ...

ஜூலை முதல் கோல்டு படப்பிடிப்பில் அக்ஷ்ய்

Posted:

டாய்லெட் ஏக் பிரேம் கதா, பேடுமேன் படங்களை தொடர்ந்து நடிகர் அக்ஷ்ய் குமார், அடுத்தப்படியாக ரீமா காக்தி இயக்கும் "கோல்டு" படத்தில் நடிக்கிறார். சுதந்திர இந்தியாவிற்கு பிறகு 1948-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில், ஹாக்கியில் இந்தியா பெற்ற முதல் தங்க பதக்கத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக இருக்கிறது. கோல்டு படத்தின் ஷூட்டிங் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™