Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


செப்டம்பரில் 'ஸ்பைடர்' ரிலீஸ் உறுதி

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்கும் 'ஸ்பைடர்' படம் முதலில் ஜுன் 23ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின் பல வேலைகள் முடிவடையாததால் படத்தை செப்டம்பர் மாதம் வெளியிடுகிறோம் என்று அறிவித்தார்கள். படத்தின் வசனக் காட்சிகள் படப்பிடிப்பு பத்து நாட்களுக்கு முன்பாக ...

பிருத்விராஜுக்காக மீண்டும் வாய்ஸ் கொடுத்த மோகன்லால்..!

Posted:

கடந்த பிப்ரவரியில் வெளியான 'எஸ்றா' படத்தை தொடர்ந்து பிருத்விராஜ் நடிப்பில், வரும் ஜூன்-29ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் 'தியான்'. தனது சகோதரர் இந்திரஜித் மற்றும் நண்பர் முரளி கோபி ஆகியோருடன் இணைந்து அவர் நடித்துள்ள இந்தப்படத்தை ஜியேன் கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கியுள்ளார். வடமாநிலங்களில் வரலாற்று பின்னணி கொண்ட நகரங்களில் ...

துல்கர்-விக்ரம் பிரபு ரம்ஜான் கொண்டாட்டம்..!

Posted:

நடிகர் துல்கர் சல்மானுக்கு இந்த வருடம் ரம்ஜான் பண்டிகை ஸ்பெஷலாக அமைந்துவிட்டது.. காரணம் கடந்த மாதம் தான் அழகான பெண் குழந்தைக்கு அப்பாவாக ஆனார் துல்கர் சல்மான். அந்தவகையில் இந்த வருடம் ரம்ஜான் விருந்தை சிறப்பாக கொண்டாடியுள்ளார் துல்கர் சல்மான்.. குறிப்பாக அவரது நெருங்கிய நண்பரான 'மச்சான்' விக்ரம் பிரபு இந்த வருட ரம்ஜான் ...

தெலுங்கு படத்தின் படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய அர்ஜூன்..!

Posted:

தெலுங்கில் இளம் நடிகர் நிதின் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் 'லை'. கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்துள்ள இந்தப்படத்தை ஹனுராகவபுடி இயக்கியுள்ளார். 2012ல் வெளியான 'அந்தால ராட்சசி' என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய அதே ஹனுராகவபுடி தான். தவிர இந்தப்படத்தில் மிக முக்கியமான வேடங்களில் அர்ஜுனும், தெலுங்கு நடிகர் ஸ்ரீராமும் ...

துல்கர் படத்தின் 50வது நாளை கொண்டாட புது ஐடியா..!

Posted:

கடந்த மேமாதம் துல்கர் சல்மான் நடித்த 'காம்ரேட் இன் அமெரிக்கா (சி.ஐ.ஏ) படம் வெளியானது. அமல் நீரத் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் துல்கர் சல்மான் கம்யூனிஸ்ட் இளைஞனாக நடித்திருந்தார் என்றாலும், காதலும், காதலுக்கான ஆபத்தான வெளிநாட்டு பயணமும் தான் படத்தின் கதை.. அதை ரொமான்ஸ், காமெடி ஆக்சன் என கலந்து படமாக்கியிருந்தார் அமல் நீரத். ...

சலீம்குமார்-மோகன்லால் பிணக்கை சரிசெய்த லால் ஜோஸ்..!

Posted:

மலையாள சினிமாவின் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் தான் தேசியவிருதுபெற்ற நடிகர் சலீம்குமார். ஒருகாலத்தில் மோகன்லால், மம்முட்டி இருவரின் அன்புக்கு பாத்திரமாக இருந்த இவர் கடந்த சில வருடங்களாக மோகன்லாலுடன் சற்றே மனத்தாங்கல் கொண்டிருந்தார்.

குறிப்பாக கடந்தவருடம் நடந்த கேரள சட்டமன்ற தேர்தலில், தேர்தலில் போட்டியிட்ட ஒரு ...

ரூ.100 கோடியை தொடாத டியூப்லைட்

Posted:

பாலிவுட்டில், கான் படங்கள் ரிலீஸாகிறது என்றால் வெளியிடப்பட்ட முதல் மூன்று நாட்களுக்குள் ரூ.100 கோடி வசூலை எட்டி விடும். ஒரு சில படங்கள் தான் இதில் விதிவிலக்கு. அப்படி சல்மானின் சமீபத்திய படங்கள் ரூ.100 கோடி வசூலை மூன்று நாட்களுக்குள் எட்டிய நிலையில் இப்போது அவரது நடிப்பில் வெளியாகியுள்ள டியூப்லைட் படம் அந்த சாதனையை செய்ய ...

வக்கிலாகிறார் டாப்சி

Posted:

தென்னிந்திய படங்களில் நடித்து வந்த டாப்சி, இப்போது பாலிவுட்டே கதி என்று கிடக்கிறார். அவர் நடித்த பிங்க் படம் நல்ல வரவேற்பை பெற தொடர்ந்து பாலிவுட்டில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது, ஜூட்வா 2 படத்தில் நடித்து வரும் டாப்சி, அடுத்தப்படியாக ஒரு படத்தில் வக்கிலாக நடிக்க உள்ளார். இன்னும் பெரிடப்படாத இப்படத்தை போர்ஸ் 2 படத்தை ...

மிஸ்டர் இந்தியா-2 எப்போது? - ஸ்ரீதேவி

Posted:

1987-ம் ஆண்டு, ஸ்ரீதேவி - அனில் கபூர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பிளாக்பஸ்டர் படம் மிஸ்டர் இந்தியா. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்தார். மிஸ்டர் இந்தியா-2 உருவாக இருப்பதாக நீண்டகாலமாகவே செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இதுப்பற்றி சமீபத்தில் மாம் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ரீதேவியிடம் கேட்டபோது, அவர் ...

நடிகர் சங்க கட்டடம் கட்ட தடை நீட்டிப்பு

Posted:

நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் நடிகர் சங்கம் கட்டடம் கட்ட சென்னை ஐகோர்ட் இடைக்கால தடைவிதித்துள்ளது. இந்த தடை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சென்னை, அபிபுல்லா சாலையில் சொந்தமாக நிலம் உள்ளது. இங்கு நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம் கட்டப்பட இருக்கிறது. சமீபத்தில் பூமி ...

'டைம்ஸ் டாப் 50' பட்டியலில் தனுஷ் மட்டுமே...!

Posted:

2016ம் ஆண்டின் மிகவும் விரும்பப்படும் ஆண் பிரபலங்களின் பட்டியலை 'டைம்ஸ்' வெளிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தை மிஸ்டர் வேர்ல்டு 2016 பட்டத்தை வென்ற ரோகித் கன்டெல்வால் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி இடம் பிடித்துள்ளார். முதல் 50 இடங்களைப் பிடித்துள்ளவர்களின் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ...

ஜுன் 30 ரிலீஸ் படங்களுடன் 100ஐத் தாண்டும் 2017

Posted:

ஜுன் மாதத்தில் பொதுவாக அதிகமான படங்கள் வெளிவராது என்று சொல்வார்கள். கோடை விடுமுறையில் பல படங்களை வெளியிடுவதாலும், பள்ளிகள் திறக்கும் இந்த மாதத்தில் திரைப்படம் பார்க்க வருபவர்கள் எண்ணிக்கை குறையும் என்பதாலும் அதிகமான படங்கள் வெளிவராது. ஆனால், இந்த வருடம் ஜுன் மாதத்தில்தான் அதிகப் படங்கள் வெளியாகி இந்த மாதத்தை முடிக்கும் என்று ...

ஆக 11-ல் தரமணி ரிலீஸ்

Posted:

கற்றது தமிழ், தங்கமீன்கள் போன்ற படங்களை இயக்கிய ராம், தரமணி என்ற படத்தை இயக்கியுள்ளார். வசந்த் ரவி என்ற புதுமுகத்துடன் ஆன்ட்ரியா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரித்துள்ளார். இப்படம் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் ...

9 ஆண்டுகளுக்கு பிறகு நான் நடித்துள்ள படம் : ஸ்ரேயா ரெட்டி

Posted:

ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் மற்றும் லியோ விஷன் ராஜ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் அண்டாவ காணோம். ஸ்ரேயா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் வேல்மதி இயக்கியிருக்கிறார். இப்படத்தின் படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய ஸ்ரேயா....

9 ...

'வனமகன்'-ஐக் காப்பாற்றிய 'அஅஅ'

Posted:

ஜுன் 23ம் தேதியன்று வெளிவந்த படங்களில் 'வனமகன், அன்பானவன் அசராதவன் அடங்காதவன்', ஆகிய இரண்டு படங்களுக்கு இடையேதான் கடும் போட்டி இருக்கும் என்று அந்தப் படங்களின் வெளியீட்டிற்கு முன்பு பேசப்பட்டது. ஆனால், 'அஅஅ' படம் வெளிவந்த முதல் காட்சியிலேயே கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது அந்தப் படத்திற்கு எதிர்மறையாக அமைந்தது. படத்தைப் ...

2 நாளில் 1 கோடியைத் தொட்ட 'விஐபி 2' டிரைலர்

Posted:

'விவேகம், மெர்சல்' ஆகிய படங்களின் டீசர், முதல் பார்வை ஆகியவற்றைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் 'விஐபி 2' அதிகம் பேசப்பட்டு வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு மும்பையில் இப்படத்தின் இசை மட்டும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

'விஐபி 2' படத்தின் டிரைலர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தனை ...

பாகுபலிக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீதேவி

Posted:

ராஜமவுலி இயக்கத்தில் உருவான பிரமாண்ட படம் பாகுபலி. இந்த படத்தை இந்தியிலும் வெளியிட திட்டமிடப்பட்டிருந்ததால் ஸ்ரீதேவியை ராஜமாதா வேடத்தில் நடிப்பதற்கு அணுகினார் ராஜமவுலி. ஆனால், ஸ்ரீதேவி கேட்ட சம்பளத்தை பாகுபலி படக்குழு கொடுக்க முன்வராததால் அவர் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதன்பிறகுதான் அந்த வேடத்திற்கு ...

மீண்டும் சமூக பிரச்னை கதையில் விஜய்

Posted:

விஜய்யின் கேரியரில் துப்பாக்கி, கத்தி படங்கள் மிக முக்கியமானவை. இந்த இரண்டு படங்களையுமே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். 2012-ல் துப்பாக்கியை இயக்கிய நிலையில், இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் கத்தி படத்தை விஜய்யை வைத்து இயக்கினார். இந்தநிலையில், மூன்றாவது முறையாக விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தை கத்தியை ...

ரங்கஸ்தலம் படப்பிடிப்பில் சமந்தா!

Posted:

நடிகை சமந்தாவின் திருமணம் உறுதி செய்யப்பட்டு விட்டதால், கைவசமுள்ள படங்களை வேகமாக முடித்துக்கொடுக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில், விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடித்து முடித்து விட்டவர், அடுத்தபடியாக தமிழ், தெலுங்கில் உருவாகும் மகாநதி, பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் மற்றும் ராம்சரணுடன் ...

கோபிசந்த் - ஹன்சிகா படம் ஜூலை 7-ல் ரிலீஸ்

Posted:

தமிழில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக போகன் படத்தில் நடித்த ஹன்சிகா அதன்பிறகு கொடிவீரன், சங்கமித்ரா ஆகிய படங்களில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அவரது மார்க்கெட் சரிவடைந்துள்ளதால் அந்த வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. அதனால் தற்போது மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் வில்லன், தெலுங்கில் கோபிசந்த் நடிக்கும் கெளதம் நந்தா ஆகிய ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™