Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


மெர்சலில் ஜிவி பிரகாஷ்

Posted:

தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகி வரும் படம் மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸின் 100வது தயாரிப்பாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட மெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மெர்சல் படத்திற்காக ஏற்கனவே நான்கு பாடல்களை ...

அப்பா முடிவு சரியாக இருக்கும் - சவுந்தர்யா ரஜினி

Posted:

ரஜினி ரசிகர்களை சந்தித்ததிலிருந்து அவரைப்பற்றிய செய்திகள் அதிகம் வெளி வருகின்றன. அதிலும் அவர் அரசியல் குறித்து பேசியது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேசமயம் தான் அரசியலுக்கு வருவேன் என்று இன்னும் ஆணித்தரமாக ரஜினி கூறவில்லை. தற்போது ரஞ்சித் இயக்கத்தில் மும்பையில் நடந்து வரும் காலா படத்தில் பிஸியாக உள்ளார் ...

ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது : கவுதம் கார்த்திக்

Posted:

கவுதம் கார்த்திக் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ரங்கூன். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவரின் நடிப்பில் இவன் தந்திரன் படம் வெளியாக உள்ளது. இயக்குநர் கண்ணன் இயக்கி, தயாரித்திருக்கிறார். இப்படம் தொடர்பாக திருச்சி சென்றிருந்த கவுதம் கார்த்தி, கண்ணன் உள்ளிட்ட படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். ...

மூன்று நாளில் ரூ.64.77 கோடி வசூலித்த டியூப்லைட்

Posted:

சல்மான் கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் டியூப்லைட். பட்டாளத்தில் போருக்கு போன தன் சகோதரன் திரும்பி வராததால் அவரை மீட்டு கொண்டு வரும் அண்ணன் பாசக்கதை. இதில் அண்ணன் - தம்பியாக சல்மான் மற்றும் சோகைல் கான் நடித்தினர். சல்மான், சற்று மனம் வளர்ச்சி குன்றியவராக நடித்திருந்தார். டியூப்லைட் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. ...

மாம் படத்திற்கு யு/ஏ சான்று

Posted:

இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்திற்கு பிறகு நடிகை ஸ்ரீதேவி, கதையின் நாயகியாக நடித்து வரும் படம் "மாம்". ஸ்ரீதேவியுடன் நவாசுதீன் சித்திக், அக்ஷ்ய் கண்ணா ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்க, ரவி உதய்வார் இயக்க, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். தாய் - மகள் இடையேயான உறவையும், மகளுக்கு ஏற்பட்ட கொடுமையை பழிதீர்க்க துடிக்கும் அம்மாவாக ...

"இத்திபா" ரீ-மேக்கில் நடனமாடும் ஷாரூக்கான்

Posted:

ராஜேஷ் கண்ணா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் "இத்திபா". இப்படம் மீண்டும் இப்போது ரீ-மேக்காகி வருகிறது. சித்தார்த் மல்கோத்ரா, சோனாக்ஷி சின்ஹா, அக்ஷ்ய் கண்ணா முக்கிய ரோலில் நடிக்கின்றனர். அபய் சோப்ரா இயக்க, ரெட் சில்லிஸ் என்டர்டெயின்ட்மென்ட் சார்பில் ஷாரூக்கான் தயாரிக்கிறார். இத்திபா படத்தை ஷாரூக்கான் தயாரிப்பதோடு, ஒரு ...

பரத்-ல் சல்மான்கான்

Posted:

டியூப்லைட் படத்தை தொடர்ந்து சல்மான் கான் டைகர் ஜிந்தா ஹே என்ற படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவர், வான்ட்டட்-2, தபாங்-3 படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் அதுல் அக்னிகோத்ரியின் தயாரிப்பில் ஒரு படத்தில் சல்மான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அலி அப்பாஸ் ஜாபர் இயக்கும் ...

ஜோதிகா நடிக்கும் படத்துக்கு யு சான்று

Posted:

'36 வயதினிலே', 'பசங்க 2', '24' என சூர்யாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தயாரித்த படங்கள் எதுவுமே கமர்ஷியலாக பெரிய வெற்றியடையவில்லை. இந்நிலையில் இந்தப் படங்களைத் தொடர்ந்து சூர்யா தயாரித்துள்ள படம் 'மகளிர் மட்டும்'.

'குற்றம் கடிதல்' படத்தை இயக்கிய பிரம்மா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக ...

காக்கிச்சட்டை கார்த்திக்கு வெற்றி தருமா?

Posted:

கார்த்தி வெற்றிப்படத்தில் நடித்து நீண்ட காலமாகிறது. 'சதுரங்க வேட்டை' பட இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தற்போது கார்த்தி நடித்து வரும் 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் வெற்றி பெற்றால் தான் அவர் முன்னணி ஹீரோக்கள் வரிசையில் இருக்க முடியும். இல்லை என்றால் அவரது நட்சத்திர அந்தஸ்த்து ஆட்டம் கண்டுவிடும்.

இந்த நெருக்கடியை புரிந்து ...

நயன்தாராவின் சம்பளம் ரூ. 4 கோடி?

Posted:

தென்னிந்திய நடிகைகளில் நயன்தாரா, அனுஷ்கா இருவரும் அதிக ரசிகர்களை கொண்ட நடிகைகள். அதேபோல் அதிகமான சம்பளம் வாங்கும் நடிகைகளும் இவர்கள்தான். இதில் நயன்தாராவைப் பொறுத்தவரை தற்போது தமிழில் இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர்காலம், வேலைக்காரன் என பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இருந்தாலும், டோரா படம் கொடுத்த அதிர்ச்சி தோல்வி அவரை ...

சென்னையில் குடியேறிய நிக்கி கல்ராணி

Posted:

டார்லிங் படத்தில் தமிழுக்கு வந்தவர் நிக்கி கல்ராணி. முதல் படமே அவருக்கு ஹிட்டாக அமைந்தது. என்றாலும் அதன்பிறகு நடித்த யாகவராயினும் நா காக்க, கோ-2, கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா போன்ற படங்கள் தோல்வியடைந்து அவருக்கு ஏமாற்றத்தை கொடுத்தன. இந்தநிலையில், ஆதியுடன் அவர் நடித்து சமீபத்தில் வெளியான மரகத நாணயம் வெற்றி பெற்று ...

நானும் ரஜினி மாதிரி கொஞ்சம் நடிப்பேன், காலாவில் நடிக்க விரும்பும் தனுஷ்

Posted:

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் வேலையில்லா பட்டதாரி. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. தனுஷ், அமலாபால், சமுத்திரகனி உள்ளிட்டோர் தொடர, இவர்களுடன் ஹிந்தி நடிகை கஜால் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தனுஷ் மற்றும் தாணு ...

அர்ஜூனின் 150வது பட டீசர் ஐதராபாத்தில் வெளியீடு

Posted:

அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் அர்ஜூன் நடித்துள்ள படம் நிபுணன். அவருடன் பிரசன்னா, சுகாசினி, வரலட்சுமி, வைபவ், ஸ்ருதி ஹரிஹரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் அர்ஜூனின் 150வது படமாகும். இந்த படம் தெலுங்கில் குருக்சேத்ரம் என்ற பெயரில் வெளியாகிறது. இதன் டீசர் நேற்று ஐதராபாத்தில் வெளியிடப்பட்டது.

அப்போது அர்ஜூன் பேசுகையில், நான் ...

ஹீரோயிசம் முக்கியமல்ல, ஜெயிக்கிற கதைதான் முக்கியம்! -ஆதி

Posted:

ஈரம், மிருகம், அரவாண், யாகவராயினும் நாகாக்க, மரகதநாணயம் உள்பட பல படங்களில் நடித்தவர் ஆதி. தொடர்ந்து அவரது படங்கள் தோல்வியை சந்தித்ததால் சறுக்கலை சந்தித்து வந்த ஆதி, தனது தாய்மொழியான தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில், கடந்த வாரம் வெளியான மரகதநாணயம் படம் அவருக்கு வெற்றியை கொடுத்துள்ளது.

இதுகுறித்து மரகதநாணயம் ...

பிரபல தெலுங்கு நடிகரின் சகோதரர் விபத்தில் பலி

Posted:

பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் தம்பி பரத் (வயது 49) இவரும் நடிகர்தான். சமீபத்தில் சினிமாவுக்கு அறிமுகமாகி 5 படங்கள் வரை நடித்திருக்கிறார்.

நேற்று முன்தினம் இரவு பரத் தனது காரில் ஷாம்சாபாத் நகரிலிருந்து ஐதராபத்தில் உள்ள கச்சிபவ்லிபாத்துக்கு சென்றார். காரை அவரே ஓட்டிச் சென்றார். பைபாஸ் சாலையில் கார் வேகமாக சென்றபோது சாலையின் ...

மன்னர் வகையறாவை சுறுசுறுப்பாக்கிய விமல்

Posted:

மஞ்சப்பை படத்துக்கு பிறகு வெற்றியை ருசிக்கவில்லை விமல். அதற்கு பிறகு நேற்று இன்று, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, காவல், அஞ்சல, மாப்பிள்ளை சிங்கம் படங்களில் நடித்தார். எந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. அவர் நடித்து முடித்துள்ள ரெண்டாவது படம் வெளிவரவே இல்லை. இதனால் ஒரு கட்டாய வெற்றி தேவை என்கிற நிலையில் இருக்கிற விமல், தனது பாணி ...

பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆருக்கு சிபாரிசு செய்த கருணாநிதி

Posted:

மார்டன் தியேட்டர் சுந்தரம் தயாரித்த படம் மந்திரி குமாரி. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியை அடிப்படையாக வைத்து முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி எழுதிய நாடகம். அதையே திரைப்படமாக தயாரிக்க சுந்தரம் விரும்பினார். அப்போது மார்டன் தியேட்டர்சின் கதை இலாகாவில் இருந்த கருணாநிதி, சினிமாவுக்கான வசனத்தையும், திரைக்கதையையும் ...

2.ஓ புரமோசன்: உலகம் முழுவதும் 100 அடி உயர பலூனை பறக்க விட திட்டம்

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய்குமார் நடிக்கும் 2.ஓ படத்தை ஷங்கர் இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார், லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினியின் முந்தைய படமான கபாலி 80 கோடி செலவில் உருவானது. அதற்கே தயாரிப்பாளர் கலைப்புலி தாணு விமானத்தில் விளம்பரம் செய்தார்.

2.ஓ 350 கோடியில் தயாராகும் படம். இதனால் அதன் விளம்பரத்தை ...

"143" : மீண்டும் ஒரு நம்பர் படம்

Posted:

இப்போதெல்லாம் எண்களில் படத்திற்கு பெயர் வைக்கிற டிரண்ட். விஜய் சேதுபதி, திரிஷா நடிக்கும் படத்திற்கு 96 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 1818 என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. இந்த நிலையில் 143 என்ற எண்ணில் ஒரு படம் தயாராகி வருகிறது. ஐ டாக்கீஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் சதீஷ் சந்திரா தயாரிக்கிறார். ரிஷி என்ற புதுமுகம் இயக்கி ...

அண்டாவை தூசி தட்டி எடுத்த தயாரிப்பாளர்

Posted:

ஜே.எஸ்.கே பிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரித்துள்ள படம் அண்டாவ காணோம். இதனை சி.வேல்மதி என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். பி.வி.சங்கர் இசை அமைத்துள்ளார். அஸ்வமித்ரா ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷாலின் அண்ணி ஸ்ரேயா நடித்துள்ளார்.

தாய் வீட்டு சீதனமாக வந்த அண்டா மீது அதிக பிரியம் அந்த பெண்ணுக்கு. ஒரு நாள் அண்டாவை காணவில்லை. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™