Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


ஜல்லிக்கட்டு காளை, முறுக்கு மீசை... விஜய் "மெர்சல்"

Posted:

விஜய் நடிக்கும் 61வது படத்திற்கு "மெர்சல்" என்று பெயர் வைத்திருக்கிறார்கள். தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய் - அட்லீ கூட்டணி இணைந்துள்ள படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இது இந்நிறுவனத்தின் 100வது படமாகும். படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் தலைப்பை அறிவிக்காமல் இருந்து வந்தனர். ...

கரண் ஜோஹர் படத்தில் ஸ்ரீதேவி மகள் அறிமுகம் ?

Posted:

நடிகை ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோரின் மூத்த மகள் ஜான்வி கபூர் சினிமாவில் நடிகையாக அறிமுகமாக உள்ளார் என கடந்த சில வருடங்களாகவே செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன. ஸ்ரீதேவி தன் மகள் ஜான்வியை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த உள்ளார் என்றும், தெலுங்கு சினிமாவில் அறிமுகப்படுத்த உள்ளார் என்றும் சொன்னார்கள். ஆனால், ...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரும் ஸ்ரேயா

Posted:

ரஜினிகாந்த் நடித்த 'சிவாஜி' படம் வந்த போது அந்தப் படத்தின் நாயகியான ஸ்ரேயாவும் பரபரப்பாகப் பேசப்பட்டார். அவருடைய பாந்தமான அழகும், அசத்தலான நடன அசைவுகளும் ரசிகர்களைக் கட்டிப் போட்டது. தமிழ் சினிமாவில் அடுத்த சிம்ரன், ஸ்ரேயாதான் என்று பலரும் ஆரூடம் சொன்னார்கள். ஆனால், ஸ்ரேயா செய்த ஒரே ஒரு தவறு அவரை தமிழ் சினிமாவை விட்டே ...

'வில்லன்'-க்கு மிகப்பெரிய விலைகொடுத்த ஜங்லீ மியூசிக்..!

Posted:

மோகன்லால் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் தான் வில்லன். பி.உன்னிகிருஷ்ணன் மோகன்லாலை வைத்து நான்காவது முறையாக இயக்கும் இந்தப்படத்தில் விஷால், ஹன்ஷிகா இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தும் இதில் இருக்கிறார். இதில் ரிட்டையர்டு போலீஸ் அதிகாரியாக நடிக்கும் மோகன்லாலுக்கு ஜோடியாக ...

'சோலோ'வில் பார்வையற்றவராக நடிக்கும் தன்ஷிகா..!

Posted:

'கபாலி'யில் ரஜினியின் மகளாக தன்ஷிகா நடித்தது அவர்மீது புகழ் வெளிச்சம் பாய்ச்சியது. அதை தொடர்ந்து இப்போது மலையாள திரையுலகில் இருந்தும் தன்ஷிகாவுக்கு அழைப்பு வர 'சோலோ' என்கிற படத்தில் துல்கர் சல்மானுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் துல்கரை வைத்து பிரதாப் போத்தன் இயக்க இருந்த படத்தில் தான் இவர் ...

பழிவாங்கும் பாம்பு கதையில் கௌதமி..!

Posted:

ஒருபக்கம் பேய் சீசன் தமிழ் சினிமாவை மட்டுமல்ல, மலையாள சினிமாவையும் விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து கொஞ்சம் விலகி பாம்பு சீசனை ஆரம்பித்து வைத்துள்ளது 'E'' மலையாள படம். குக்கு சுரேந்திரன் என்பவர் இயக்கத்தில் 'E' என்கிற ஒற்றை எழுத்தில் உருவாகிவரும் இந்தப்படத்தில் பாட்டு டீச்சராக நடிக்கிறார் கௌதமி. அதுமட்டுமல்ல ...

தனுஷ் பட மலையாள ஹீரோவுக்கு தமிழில் டப்பிங் பேசியது யார் தெரியுமா..?

Posted:

மலையாள நடிகர்களை பொறுத்தவரை தமிழுக்கு வருகிறார்கள் என்றால், அது நம்ம ஊர் இயக்குனர்கள் அவர்களின் திறமையை பார்த்து வியந்து தமிழ்ப்படங்களில் கதாநாயகர்களாகவோ அல்லது முக்கிய வேடங்களிலோ நடிக்க அழைப்பதால் தான். பிருத்விராஜ், நிவின்பாலி, துல்கர் சல்மான் இப்போது பஹத் பாசில் போன்றவர்கள் எல்லாம் அப்படி வந்தவர்கள் தான். மம்முட்டியின் ...

வனமகன் படம் ஜார்ஜ் இன் த ஜங்கிள் ஹாலிவுட் படத்தின் தழுவல்

Posted:

ஜெயம் ரவியை வைத்து ஏ.எல்.விஜய் இயக்கும் வனமகன் படம் இந்த வாரம் திரைக்கு வர இருக்கிறது. முழுக்க முழுக்க காட்டுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ள இப்படத்தில் சிறு வயதிலிருந்தே காட்டுக்குள்ளே மிருகங்களுடன் வாழ்ந்த டார்ஜான் டைப்பான இளைஞனாக நடிக்கிறார் ஜெயம்ரவி.
காட்டுக்குள் வசிக்கும் ஜெயம்ரவி நகரத்துக்குள் வரும்போது எதிர்கொள்ளும் ...

விஜய் பிறந்தநாளில் விஜய்சேதுபதி பட டிரைலர்

Posted:

ஓரம்போ, வ குவார்ட்டர் கட்டிங் போன்ற தோல்விப்படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி. கணவன் மனைவியான இவர்களது இயக்கத்தில் மாதவன், விஜய்சேதுபதி இருவரும் இணைந்து நடித்து வரும் படம் 'விக்ரம் வேதா'. இப்படத்தில் மாதவன் போலீஸ் அதிகாரியாக நடிக்க, விஜய்சேதுபதி கேங்ஸ்டராக நடிக்கிறார்.
கதாநாயகிகளாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், ...

'இவன் தந்திரன்' கையில்... 'இந்திரஜித்'

Posted:

தமிழில் வெளியான தோல்விப்படங்களில் ஒன்று சாந்தனு நடித்த சக்கரக்கட்டி. தாணுவின் மகன் கலாபிரபு இயக்கிய இந்தப் படத்திற்கு சூப்பர்ஹிட் பாடல்களை போட்டுக் கொடுத்தார் ஏ.ஆர்.ரகுமான். பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியும் படம் தேறவில்லை.
அதன்பிறகு காணாமல் போன கலாபிரபு, பல வருடங்களுக்குப் பிறகு கௌதம் கார்த்தியை வைத்து இந்திரஜித் என்ற படத்தை ...

ஷங்கரின் 'ஜீன்ஸ்' படத்தின் காப்பியா 'முபாரக்கன்' ?

Posted:

ஒரு படத்தின் தழுவலாகவோ, காப்பியடித்தோ வேறு மொழிகளில் படங்கள் உருவாவது அடிக்கடி நடக்கும் விஷயம்தான். சமீபகாலமாக இந்த தழுவல், காப்பி ஆகியவை பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன. சமூக வலைத்தளங்களில் எதிலிருந்து தழுவப்பட்டது, காப்பியடிக்கப்பட்டது என்பது உடனுக்குடன் பரவி விடுவதால் அப்படி படம் எடுப்பவர்கள் பாடு திண்டாட்டம் ...

யோகா என் வாழ்க்கையை மாற்றியது - அனுஷ்கா பெருமிதம்

Posted:

இன்று சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. நாட்டின் பெரும் தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை பலரும் யோகா செய்வதை தங்களது தினசரி உடற்பயிற்சியாக வைத்துள்ளனர். மனதுக்கும் உடலுக்கு யோகா மிகவும் நல்லது என்று ஆண்டாண்டு காலமாக மக்களிடம் பயிற்றுவிக்கப்படுகிறது.
ஒரு யோகா பயிற்சியாளராக இருந்து இன்று முன்னணி ...

நயன்தாராவின் மலையாள படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்படுகிறது

Posted:

மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக கடந்த ஆண்டு நயன்தாரா நடித்து வெளியான படம் புதிய நியமம். ஏ.கே.சஜன் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ஒரு வெயிட்டான வேடத்தில் நடித்திருந்தார் நயன்தாரா. இதில் சிறப்பாக நடித்தமைக்காக அவருக்கு பிலிம்பேர் விருது கிடைத்தது.
இந்த படத்தை நயன்தாராவை ...

எதிர்ப்பு எதிரொலி: அல்லு அர்ஜூன் பட பாடல் வரிகள் மாற்றம்!!

Posted:

தெலுங்கில் ஹரிஸ் சங்கர் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் - பூஜா ஹெக்டே நடித்துள்ள படம் துவ்வாத ஜெகன்னாதம். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு ரொமான்டிக் பாடலில் சிவபெருமானின் வேத மந்திரங்களை இணைத்திருந்தனர். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த பாடலில் இடம்பெற்றிருந்த வேத மந்திர வார்த்தைகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரிக்கையும் ...

தனுசுக்கு சங்கராபரணம் விருது: மெட்ரோவுக்கு மூன்று விருதுகள்

Posted:

தேசிய விருது, பத்மஸ்ரீ விருது என பல விருதுகளை பெற்றவர் பிரபல தெலுங்குப்பட இயக்குனர் கே.விஸ்வநாத். இவருக்கு சமீபத்தில் இந்திய அரசின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. இதுவரை 50 படங்களுக்கும் மேல் இயக்கியுள்ள கே.விஸ்வநாத், தமிழில் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து என சில படங்களை இயக்கியவர், ராஜபாட்டை, ...

மீண்டும் பிஸியான ஸ்ரேயா!

Posted:

எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தவர் ஸ்ரேயா. அதையடுத்து மழை, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ்மகன், சிவாஜி என பல படங்களில் நடித்து பிரபலமானார். ஒருகட்டத்தில் படவாய்ப்புகள் குறையவே தெலுங்கு, ஹிந்தி பக்கம் போனார். இருப்பினும் தற்போது மீண்டும் புதிய படங்களை கைப்பற்றி பிசியாகி விட்டார்.
தமிழை றுத்தவரை ...

பேஸ்புக்கில் ஆபாசம்... இளைஞரை காட்டிக்கொடுத்த நந்தினி சீரியல் நடிகை

Posted:

டைரக்டர் சுந்தர்.சி - நடிகை குஷ்பு இணைந்து தயாரித்து வரும் மெகா தொடர் நந்தினி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரை ராஜ்கபூர் இயக்கி வருகிறார். இதில் நித்யாராம், மாளவிகா வேல்ஸ், ராகுல் ரவி உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த நந்தினி தொடரில் கங்கா என்ற கேரக்டரில் நடித்து ...

ஜஸ்வந்த் சிங் கில் வேடத்தில் அஜய் தேவ்கன்

Posted:

பாலிவுட்டில் வாழ்க்கை வரலாற்று படங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், 1989-ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் ராணிகஞ்ச் என்ற இடத்தில் சுரங்கம் விபத்து ஏற்பட்டத்தில் 64 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கி தவித்தனர். இவர்களை தனது புத்தி கூர்மையால் காப்பாற்றினார் பொறியாளர் ஜஸ்வந்த் சிங் கில். இந்த ...

மீண்டும் வில்லனாகும் இயக்குநர்

Posted:

பிரபல பாலிவுட் இயக்குநர் நிஷிகாந்த் காமத். "மும்பை மேரி ஜான், போர்ஸ், திரிஷ்யம், ராக்கி ஹேண்ட்சம்..." உள்ளிட்ட பல ஹிந்தி படங்களை இயக்கியுள்ளார். தமிழில் வெளியான எவனோ ஒருவன் படமும் இவருடையது தான். இயக்குநராக மட்டுமல்லாது ராக்கி ஹேண்ட்சம் படத்தில் வில்லனாகவும் நடித்தார். இப்போது மீண்டும் "பவேஷ் ஜோஷி" என்ற படத்தில் வில்லனாக ...

அர்ஜூன் கபூருக்கு பிடித்த இரட்டை வேட படம்

Posted:

அர்ஜூன் கபூர் இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் முபாரக்கன். அனீஸ் பாஸ்மி இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜூன் கபூருடன் அனில் கபூர், இலியானா, அதியா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன், இப்படம் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™