Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


சினிமாவை விட்டே விலகுவேன் - கமல் பகீர் அறிவிப்பு

Posted:

சினிமா என்பது சூதாட்டம் கிடையாது, அது ஒரு கலை. சினிமா டிக்கெட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள 28 சதவீதம் ஜிஎஸ்டி.,யை மத்திய அரசு குறைக்க வேண்டும், இல்லாவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சினிமா டிக்கெட்டிற்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இதை குறைக்க வேண்டும் என திரைத்துறையினர் ...

பிறந்தநாளில் இளையராஜாவுடன் போட்டோ எடுத்த ரசிகர்கள்

Posted:

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று(ஜூன் 2-ம் தேதி) 73வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு காலை முதலே வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்தன. இந்நிலையில் இளையராஜா பிறந்தநாளையொட்டி சென்னை காமராஜர் அரங்கத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. ...

சீனாவில் 1 பில்லியன் யுவான் வசூலித்த தங்கல்

Posted:

ஒரு இந்தியத் திரைப்படம் சீனாவில் இவ்வளவு பெரிய வசூல் சாதனையைப் புரிவத இதுவே முதல் முறை. அப்படிப்பட்ட சாதனையை ஆமிர்கானின் தங்கல் படம் புரிந்திருக்கிறது. பொதுவாக அமெரிக்காவின் ஹாலிவுட்டில் தயாராகும் ஆங்கிலப் படங்கள்தான் அமெரிக்கா தவிர்த்து ஏனைய உலக நாடுகளில் அதிக வசூலைப் பெறும். உலக அளவில் ஹாலிவுட், சீனா, இந்தியத் திரைப்படத் ...

'இறுதிச் சுற்று' சுதா இயக்கத்தில் விஜய் சேதுபதி ?

Posted:

திறமையான இயக்குனர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தகுந்த வாய்ப்புகளை அளிப்பதில் தமிழ்த் திரையுலகத்தில் முதலிடத்தில் இருப்பவர் விஜய் சேதுபதி. அவருக்காகவே கதையை உருவாக்கும் அளவிற்கு பல இளம் இயக்குனர்கள் தமிழ்த் திரையுலகத்திற்குள் நுழைந்துள்ளனர். சினிமாவில் பணம் சம்பாதிக்க மட்டும் நினைக்காமல், நல்ல பெயரையும் சம்பாதிக்க ...

'சாவித்ரி' கதாபாத்திரம், குண்டாக மறுத்த கீர்த்தி சுரேஷ்

Posted:

'பாகுபலி 2' படத்திற்காக குண்டாக இருந்த அனுஷ்காவை ஒல்லியாகவும், அழகாகவும் மாற்ற மட்டும் சுமார் 2 கோடி ரூபாய் வரை செலவு செய்தார்கள். 'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக நிஜமாகவே குண்டான அனுஷ்காவால் அதன் பின் உடம்பை இளைக்க வைக்க முடியவேயில்லை. யோகா டீச்சராக இருந்தவருக்கே அந்த நிலைமை என்றால் கீர்த்தி சுரேஷ் நிலைமை ...

இந்தியாவில் முதல் முறையாக 8K கேமரா தொழில்நுட்பத்தில் உருவாகும் படம்

Posted:

கமலின் உன்னைப்போல் ஒருவன், அஜித்தின் பில்லா-2 படங்களை இயக்கியவர் சக்ரி டோலட்டி. இவரது இயக்கத்தில் நயன்தாரா தற்போது நடித்துவரும் படம் கொலையுதிர் காலம்'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப்படம் முழுக்க முழுக்க நாயகிக்கு மட்டுமே முக்கியத்துவம் உள்ள படம்.
ஹாலிவுட்டில் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த ராபி ...

சீமானின் கோபம் ஜி.வி.பிரகாஷ் உடன்

Posted:

அரசியலுக்கு போவதற்கு முன் சினிமா இயக்குநராக இருந்த சீமான், சில வருடங்களுக்கு முன் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கவிருந்தார். ஜிஜே சினிமா பேனரில் தயாராகவிருந்த அந்தப் படத்துக்கு திலீபன் என்று பெயர் வைத்திருந்தார். சர்ச்சைக்குரிய கதை என்பதால் பின்னர் அப்படம் கைவிடப்பட்டது.
அதன் பிறகு திலீபன் கதையை விஜய், அஜித், சூர்யா ...

ரஜினியின் காலாவில் அம்பேத்கராக நடிக்கும் மம்முட்டி.?

Posted:

பா.ரஞ்சித் டைரக்சனில் ரஜினி நடிக்கும் காலா படம் பற்றி தினம் ஒரு சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. ரஜினி கம்பீரமாக அமர்ந்திருக்கும் மஹிந்திரா ஜீப்பின் பதிவெண்ணில் இருக்கும் BR என்பது அம்பேத்கரை குறிப்பதாகவும் 1956 என்பது அவர் இறந்த வருடத்தை குறிக்கும் விதமாகவும் ஒரு காரணமாகத்தான் வைத்துள்ளாராம் ரஞ்சித். மேலும் ...

ஒரு ரூபாய் கூட போடாமல் 25 கோடி அள்ளிய கரண் ஜோஹர்

Posted:

இன்றைய தேதியில் படங்களை தயாரிக்கும் நிறுவனங்களை விட படங்களை வெளியிடும் நிறுவனம் தான் வியாபார சந்தையில் முதல் ஆளாக பார்க்கப்படுகிறது. தியேட்டர்களும் விநியோகஸ்தர்களும் மட்டுமல்ல, ரசிகர்களும் கூட படத்தை எந்த நிறுவனம் ரிலீஸ் செய்கிறது என பார்த்து தியேட்டருக்கு வர ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக ...

'நிவின்பாலிக்கு எதற்கு முன்னணி ஹீரோயின்..? ; கீது மோகன்தாஸ்..!

Posted:

கடந்த இரண்டு வருடங்களில் நிவின்பாலி நடித்த படங்களில் எல்லாம் புதுமுகங்கள் தான் ஹீரோயின்களாக நடித்து வருகிறார்கள். ஆனால் அந்த அடிப்படையில் தான் தற்போது நிவின்பாலியை கதாநாயகனாக வைத்து 'மூத்தோன்' என்கிற படத்தை இயக்கிவரும் கீது மோகன்தாஸும் தனது படத்தில் சோபியா துலிபியா என்கிற ஒரு வட இந்திய நடிகையை அறிமுகப்படுத்தி ...

மலையாளப்படத்தில் தமிழ்ப்பெண்ணாக நடிக்கும் இந்தி நடிகை..!

Posted:

சில வருடங்களுக்கு முன்பு தமிழில் விக்ரம்-ஜீவா நடித்த 'டேவிட்' என்கிற படத்தை இயக்கிய பிஜாய் நம்பியார் தற்போது மலையாளத்தில் 'சோலோ' என்கிற படத்தை இயக்கி வருகிறார். துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் ஐந்து கதாநாயகிகள் இடம்பெறுகின்றனர். அவர்களில் பாலிவுட் நடிகையான நேகா சர்மாவும் ஒருவர். தற்போது கடந்த சில ...

இந்தி டப்பிங்கில் அடுத்த சாதனை படைத்த 'வேதாளம்'

Posted:

அஜித் அடுத்து நேரடி இந்திப் படத்தில் நடித்தால் அங்கும் அதிகமான வரவேற்பைப் பெற்றால் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இதற்கு முன் இந்தியில் 'அசோகா' படத்தில் சிறு கதாபாத்திரம் ஒன்றிலும், 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் கேமியோ தோற்றத்திலும் அஜித் நடித்திருந்தார்.
2015ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற 'வேதாளம்' படம் இந்தியிலும் ...

காலா தீம் பாடல் என வைரலான போலி பாடல்

Posted:

கபாலியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் காலா. மே 28-ந்தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தமிழர்கள் அதிகமாக வாழும் தாராவி பகுதியில் நடைபெற்று வருகிறது. மேலும், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே படத்தின் டைட்டீல், பர்ஸ்ட் லுக்கை வெளியிட, ரஜினி ரசிகர்கள் அதை இணையதளங்களில் ...

போலி வெற்றிப்படங்களும்... பாகுபலி- 2 படமும்...!

Posted:

படம் வெளியான அன்றே... முதல்காட்சி ஓடி முடிவதற்குள்ளாகவே போலியான சக்சஸ் மீட் கொண்டாடப்பட்டு, அதை வெற்றிப்படம் போன்று விளம்பரம் செய்வது கோடம்பாக்கத்தில் வாடிக்கையாக இருக்கிறது. சமீபத்தில் கூட இரண்டு படங்களின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி நடந்தது. ஆனால், பல ஊர்களில் படம் வெளியான ஒரு சில நாட்களிலேயே அந்த படங்களை தூக்கிவிட்டனர் என்பதே ...

ஜூன் 15-ல் 'பீச்சாங்கை' ரிலீஸ்

Posted:

அறிமுக இயக்குனர் அசோக் இயக்கத்தில் 'பீச்சாங்கை' படத்தை கர்ஸா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் படத்தின் ஹீரோவான ஆர்.எஸ்.கார்த்திக்கே தயாரிக்கிறார். இந்த படத்தை இம்மாதம் 15 - ஆம் தேதி, வியாழக் கிழமை ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
பொதுவாக வெள்ளிக்கிழமைகளில்தான் படங்கள் ...

மகேஷ்பாபுவின் ஸ்பைடர் டீசரை பாராட்டிய ராஜமவுலி

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள படம் ஸ்பைடர். ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படத்தில் மகேஷ் பாபுவுடன் ராகுல்பிரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத் உள்பட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தின் டீசர், மகேஷ்பாபு ரசிகர்களால் சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை ...

மீண்டும் திருமண வதந்தியில் சிக்கிய பிரபாஸ்!

Posted:

பாகுபலி பட நாயகன் பிரபாசுக்கு தற்போது 37 வயதாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பே அவரது பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க தயாராகி விட்டனர். ஆனால், பாகுபலி படத்தில் நடித்து வந்த அவர், அந்த படத்திற்கு பிறகு திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னதால் 5 வருடங்களுக்கு திருமணத்தை தள்ளி வைத்திருந்தனர்.

இந்தநிலையில், ...

விஜய், அஜித்துக்கு சவால் விடும் மகேஷ் பாபு

Posted:

'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் தமிழ்நாட்டில் நேரடித் தமிழ்ப் படங்களையும் மிஞ்சும் அளவிற்கு அதிக வசூலைப் பெற்றன. இதனால், தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் படங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அவர்கள் நேரடியாகத் தமிழில் எடுக்கிறார்களோ இல்லையோ ஆனால், நேரடித் தமிழ்ப் படங்கள் என விளம்பரப்படுத்தி வருகிறார்கள். அந்த ...

விஜய் பிறந்தநாளை சூப்பர் ஹிட் படங்களுடன் கொண்டாடும் ரசிகர்கள்

Posted:

அஜித்-விஜய் நடிக்கும் படங்களின் பர்ஸ்ட் லுக், டீசர், ஆடியோ, படம்... என எது வெளியானாலும் அவர்களது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விடுகிறார்கள். அந்த வகையில், அஜித் நடித்து வரும் விவேகம் படத்தின் டீசர் வெளியானபோது அதை உலக அளவில் அவரது ரசிகர்கள் டிரண்டிங் செய்தனர். அதோடு அஜித்தின் நெல்லை ரசிகர்கள் அந்த டீசரையே ஒரு தியேட்டரில் ...

மக்களின் தனிப்பட்ட விருப்பத்தில் தலையிடாதீர்கள்: மத்திய அரசுக்கு சித்தார்த் வேண்டுகோள்

Posted:

மத்திய அரசின் மாட்டிறைச்சி அறிவிப்பு எதிரும், புதிருமான கருத்துக்களை விதைத்துள்ளது. பலர் இதனை ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். நடிகர் சித்தார்த் சமூக அக்கறை உள்ளவர். சென்னை மக்கள் வெள்ளத்தில் தவித்தபோது நேரடியாக களத்தில் இறங்கி உதவி செய்தவர். எந்த பிரச்சினையிலும் துணிச்சலாக கருத்து கூறுகிறவர். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™